Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனைச் சுடுமாறு தீக்‌ஷித் உத்தரவிட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகமான வுறண்ட்லைனில்(Frontline), ஈழத்தில் இருந்த இந்திய அமைதிப்படைத் தளபதிகளில் ஒருவரான கர்கிரட் சிங் அவர்களினால் புத்தகம் பற்றிய விமர்சனம் இம்மாதம் வெளிவந்துள்ளது. அதில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இரட்டை வேடத்தில் நடந்து கொண்டது பற்றி சொல்லி இருக்கிறார்.

' செப்டம்பர் 14/15 இரவுகளில் டிக்ஸிட் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை விடுதலைப்புலிகளின் தலைவரை கைது செய்ய அல்லது சுட்டுக் கொல்லச் சொல்லி இருந்தார்.' என்ற தகவலை கர்கிரட் சிங் தனது புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அதாவது திலிபன் உண்ணா நோன்பு இருக்கும் முன்பு டிக்ஸிட் சொல்லி இருக்கிறார்.

மேலும் ஆங்கிலத்தில் வாசிக்க

http://www.hinduonnet.com/fline/stories/20...21505807900.htm

பிரபாகரனைச் சுடுமாறு தீக்‌ஷித் உத்தரவிட்டார்'

[16 - September - 2007] [Font Size - A - A - A]

இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளை செல்வாக்கிழக்க வைக்கவேண்டும் என்பதை இந்திய சமாதானப் படையின் இறுதியான இலக்காக இருக்கவேண்டும் என்பது இந்திய முன்னாள் உயர்ஸ்தானிகர் என்.தீக்ஷித்தின் நோக்கமாக இருந்தது என்பது உட்பட பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை இலங்கையில் இந்திய அமைதிப்படை பிரசன்னமாகியிருந்த காலத்தில் 54 ஆவது பிரிவின் தளபதியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஹர் கிரத்சிங் தெரிவித்துள்ளார்.

தான் பணி புரிந்த போர் ஆவணங்களை மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் மீளப் பிரசுரித்துள்ளார். அவரின் நினைவுக் குறிப்புகளிலிருந்து வெளியிடப்பட்டவற்றின் சாராம்சத்தை `புரொன்ட்லைன்' சஞ்சிகை பிந்திய வெளியீட்டில் பிரசுரித்திருக்கிறது.

அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தவற்றில் சில குறிப்புகள் இங்கு தரப்படுகிறது.

இலங்கையிலிருந்து என்னை இடம்மாற்றுவதற்கு இராணுவத் தளபதி சுந்தர்ஜியை தூண்டிய காரணி என்ன என்பது எனக்கு நிச்சயமற்றதொன்றாக இருந்தது. ஆனால், செப்ரெம்பர் 1987 இல் இந்திய உயர்ஸ்தானிகர் கே.என்.தீக்ஷித் (முன்னாள் தூதுவர்) சுந்தர்ஜிக்கு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட கடிதம் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

விடுதலைப் புலிகளின் தலைவரைச் சுடுமாறு அல்லது கைது செய்யுமாறு அவர் விடுத்த பணிப்புரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய அரசாங்கத்திடமிருந்து வரும் பணிப்புரையையே இந்திய சமாதானப் படை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் வேறு எவரதும் கட்டளையை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை எனவும் ஊடகங்களுக்கு நான் தெரிவித்ததை இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்திலிருந்த சிலர் குற்றமாக எடுத்துக்கொண்டனர்.

தமிழ் மக்கள் தமது அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திருப்திப்படும்வரை இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேறக்கூடாது என்றும் நான் கூறியிருந்தேன். இதுவே இலங்கையிலிருந்து எனக்கு இடமாற்றம் வருவதற்கான திருப்புமுனையாக அமைந்தது.

இது எமக்கு மூன்று முக்கியமான விடயங்களை வெளிப்படுத்தியது.

முதலாவதாக 1987 ஆகஸ்ட்டில் விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைவை மேற்கொண்ட தருணத்தில் கூட ஏனைய தமிழ்க் குழுக்களுக்கு 'ரோ' (இந்திய உளவுப் பிரிவு) மீண்டும் ஆயுதங்களை வழங்க ஆரம்பித்தது. (புலிகள் தம்மிடம் கொடுத்த ஒளிநாடாக்களை தீக்‌ஷித்திடம் கொடுத்ததாக ஒரு ஹர்திரத்சிங் குறிப்பிட்டுள்ளார்.)

இதேவேளை, 1987 செப்ரெம்பர் 11 இல் ஹர்கிரத்சிங் தீக்‌ஷித்தை சந்தித்துள்ளார். தீக்ஷித்தின் நிலைப்பாடு உள்ளூர் தமிழ் மக்களின் பார்வையில் புலிகளை செல்வாக்கிழக்க வைப்பதே இந்திய சமாதனப் படையின் இறுதி இலக்காக இருக்கவேண்டுமென்று காணப்பபட்டது. அதாவது இந்திய சமாதானப்படை இரட்டை வேடம் போடவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த தந்திரோபாயங்கள் பலனளிக்காது என்பதை நான் ஏற்கனவே புரிந்து கொண்டிருந்தேன். நமது அபிலாஷைகள் ஈழம்தான் என்பதை தமிழர்கள் ஏற்கனவே விளங்கிக்கொண்டிருந்தனர்.

அது புலிகளால் மட்டுமே முடியுமென்பதையும் அவர்கள் புரிந்துகொண்டிருந்தனர். (ஹர்கிரத்சிங் கூறுகிறார்)

எனது பக்கம் திரும்பிய தீக்‌ஷித் 11 ஜெனரல்! இந்திய சமாதானப் படையின் செயற்பாடுகள் டில்லியில் நான் பிரதமருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் இருப்பதை தயவுசெய்து உறுதிப்படுத்துங்கள். பேச்சுவார்த்தையை படிப்படியாக மட்டுப்படுத்தும் நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்ளவேண்டும். தமிழர்கள் தொடர்பாக கனிஷ்ட தளபதிகள் இந்த கண்ணோட்டத்திலேயே தமது தொடர்புகளை அணுகுமுறைகளை கைக்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும் என்றார்.

இறுதியாக வந்த பணிப்புரை அதிர்ச்சியூட்டுவதாகும். 1987 செப்ரெம்பர் 14/15 இரவில் தீக்ஷித்திடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

சந்திப்பு வரும்போது பிரபாகரன் கைது செய்யப்படவேண்டும் அல்லது சுடப்படவேண்டும் என்பதே அந்தக் கட்டளையாகும். திரும்ப அவரிடம் கதைப்பதாக நான் கூறிவிட்டேன். தொலைபேசியை ஓ.எவ்.சி.க்கு மாற்றினேன். நாங்கள் மரபுரீதியான இராணுவம் வெள்ளைக்கொடியுடன் சந்திப்புக்கு வருபவர்களை நாங்கள் முதுகில் சுடுவதில்லையென்று தீக்ஷித்துக்கு கூறுமாறு லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் எனக்குப் பணித்தார்.

பின்னர் கொழும்புக்கு தீக்‌ஷித்துடன் கதைத்து செய்தியை தெரிவித்தேன். அவருடைய பணிப்புரையை ஏற்கமுடியாதென அழுத்தியுரைத்தேன். உடன்படிக்கையில் கூறப்பட்ட விடயங்களை அமுலாக்குவதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி ஆராயவே இந்திய சமாதானப் படையினரால் பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்ததாக கூறினேன்.

அவர் (ராஜீவ் காந்தி) எனக்கு இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இராணுவம் அதன் காலை வாரிவிடக்கூடாது. பிரிவுத் தளபதி என்ற ரீதியில் உங்களுக்கு இந்தப் பொறுப்பு உண்டு என்று தீக்‌ஷித் தெரிவித்தார் என்றும் ஹர்ஜிரசிங் தெரிவித்திருக்கிறார்.

சரியானது எதுஎன்பதில் நேர்மையாக நின்றதற்காக ஹர்கிரத் சிங் செலுத்திய விலை' என்று புரொன்ட்லைன் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

http://www.thinakkural.com/news/2007/9/16/...s_page36183.htm

நன்றி நாரதர் அங்கிள் இணைப்பிற்கு பல விசயத்தை அறிய கூடியதாக இருந்தது.. :mellow:

Edited by Jamuna

என்ன தான் இவ்வாறான செய்திகளை (யாழ் களத்தின் பிறிதொரு தலைப்பில் இது போன்ற வேறும் சில செவ்விகள் இணைக்கப்பட்டிருக்கின்றன) அவர்கள் தமது இராணுவத் தளபதிகளிற்கும், செயல் நெறியாளர்களிற்கும், மற்றும் இதர தரப்பினரிற்குமிடையேயான புடுங்குப் பாடுகளாக் காட்டினாலும், ஒருவரை ஒருவர் பிளந்து கட்டுவது போல் சித்தரித்தாலும், உண்மையில் இந்தச் செவ்விகளின் அடிநாதமாக, அவர்களால் திட்டமிட்டு வெளிப்படுத்தப் படுகின்ற செய்திகள் பின்வருவனவாகவே இருக்கமுடியும் என்பது எனது கருத்து:

1) புலிகள் எமக்கெதிராய்ப்போராடுவர் என்று எமது புலனாய்வுத்துறையோ இதர தரப்பினரோ நம்பவே இல்லை. அத்தகைய ஒரு போராட்டத்திற்குரிய ஆயுதங்களையோ, இதர தேவையான விடயங்களையோ நாம் எடுத்துக் கூடச் செல்லவில்லை. எனவே, உலகின் நான்காவது பெரிய இராணுவம் ஈழத்தில் பின்னடைவைச் சந்தித்தது

என்றால், ஒரு குழந்தை தனது தாயின் கன்னத்தில் அடிப்பதை எப்படி அக்குழந்தையின் தாய் கையாள்வாளோ அது போலத் தான் நாங்கள் இது எங்கட பெடியள் என்ற பாசத்தோடு சற்றும் போராடத் தயாரின்றி நடந்து கொண்டமை மட்டுமே அதற்குக் காரணம் என்பதை உலகு புரிந்து கொள்ள வேண்டும்.

2) தமிழீழத் தேசியத் தலைவரைக் கொல்லக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்த போதும், அவ்வாறு அவரைக் கொல்லுமாறு சில இந்தியப் பிரிவினர் உத்தரவிட்டபோதும், ஒரு வெள்ளைக் கொடியின் கீழ் அமைதிப்படையாக நாம் சிந்தித்துப் பொறுப்போடு செயற்பட்டமையால் தான் அது எமக்கு முடியாமல் போனது. ஆனால் புலிகள் அமைதிப்படையை, அது தயாரற்று அமைதிகாக்குப் படையாக இருந்த போதே அடித்து வென்று விட்டார்கள்.

3) இந்தியப் படையோ அமைதிப் படை. ஆனால் புலிகள் ஒரு புறமும் பிறேமதாசா மறு புறமும் கூட்டாக அமைதிப் புறாவைக் கொன்று போட்டுக் கொக்கரிக்கின்றார்கள். புலிகள் என்ன முழு இலங்கையையே எம்மால் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் நாங்கள் சட்டதிட்டங்களின் பிரகாரம் நீதியாக பொறுப்போடு நடந்தமையால் தான் தோல்வியோடு திரும்பினோம்.

4) இன்னும் ஆறு மாதம் இருந்திருப்போமேயானால் புலிகள் இன்று சரித்திரம் மட்டுமே ஆகியிருப்பர்.

போன்ற செய்திகள் தான் திட்டமிட்டு இங்கு முன்வைக்கப்படுகின்றன. அதாவது, இன்னமும் தமது பின்னடைவை ஜீரணித்துக் கொள்ளமுடியாத, அன்றைய காலகட்டத்து ஆட்சி இயந்திரத்திதும் அதனது இன்றைய தொடர்ச்சியான சில அங்கங்களினதும் திட்டமிடப்பட்ட முகம் காப்புப் பிரச்சாரம் மட்டுமே இது.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் வாழ்ந்த தமிழர் நாம் அறிவோம், எத்தனை ஆயத்தமாக அவர்கள் வந்திறங்கினர் என்று. ஏற்கனவே பள்ளமும் திட்டியுமாகக் கிடந்த எமது தெருக்களை அவர்களது ராங்கிகள் பிளந்து மண்ணாக்கியதும், அவர்களது அதி நவீன போர் விமானங்களும், முதலை என மக்களால் விளி;க்கப்பட்ட கெலிகொப்பரர்களும் என்று, அவர்கள் அங்கு உலகின் நான்காவது பெரிய இராணுவமாககத் தான் வந்திருந்தார்கள். அவர்களது விமானப்படை எமது நகரங்களையும் வீடுகளையும் தகர்த்துத் தான் சிரித்தது, சாவகச்சேரி நகர மத்தி உருத்தெரியாது உதிர்ந்து போனது. விமானப்படை என்ன, எழுபது வயதுத் தமிழ் ஆச்சி ஒருத்தி கூட வன்புணர்விற்குட்படுத்தப்பட

Edited by Innumoruvan

1) புலிகள் எமக்கெதிராய்ப்போராடுவர் என்று எமது புலனாய்வுத்துறையோ இதர தரப்பினரோ நம்பவே இல்லை. அத்தகைய ஒரு போராட்டத்திற்குரிய ஆயுதங்களையோ, இதர தேவையான விடயங்களையோ நாம் எடுத்துக் கூடச் செல்லவில்லை. எனவே, உலகின் நான்காவது பெரிய இராணுவம் ஈழத்தில் பின்னடைவைச் சந்தித்தது

என்றால், ஒரு குழந்தை தனது தாயின் கன்னத்தில் அடிப்பதை எப்படி அக்குழந்தையின் தாய் கையாள்வாளோ அது போலத் தான் நாங்கள் இது எங்கட பெடியள் என்ற பாசத்தோடு சற்றும் போராடத் தயாரின்றி நடந்து கொண்டமை மட்டுமே அதற்குக் காரணம் என்பதை உலகு புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் இந்திய இராணுவம் தோல்வியுற்றதுக்கு காரணம் எமது போராளிகளின் மனவுறுதியும் தலைவரின் தன்னம்பிக்கையும் அவர் வழியில் எதற்க்கும் துணிந்த அவருக்கு தோள்கொடுத்த தளபதிகளும்

பொதுமக்களும் தான்.

கொரிலா தாக்குதல்; என்றால் எப்படி இருக்கும் என்று இந்தியா உண்மையில் அறிந்த கொண்ட் இடம் தமிழீழம் தான்.

இலங்கைக்கு இந்தியா வரும் போது என்ன என்ன ஆயுதம் கொண்டு வந்தார்கள்????????

மேலே நான் எழுதிய கருத்து நீக்கப்பட்டுள்ளது அது இன்னுமொருவன் எனபவர் எழுதியதை தவறாக புரிந்து கொண்டு அவசரமாக எழுதிய கருத்து ..

தவறுக்கு வருந்துகிறேன்.....

Edited by I.V.Sasi

இந்தக் கருத்திற்கான தேவை திருத்தப்பட்டுவிட்டதால், கருத்து நீக்கப்படுகின்றது.

Edited by Innumoruvan

இதன் மூலம் இந்தியா எந்தநிலையில் தமிழர்களை வைத்து உள்ளது என்பது நன்றாக புரிகின்றது. இந்தியாவிற்கு அதன் தனிப்பட்ட நலன்கள் தவிர வேறு ஒன்றிலும் அக்கறை இல்லை. நேற்று, இன்று, நாளை இதே நிலமையே தொடரப்போகின்றது. இந்தியாவின் பின்னால் ஈழத்தமிழர்கள் (அரசியல் வாதிகள்) வால்பிடிப்பதை எப்போது நிறுத்துகின்றார்களோ அப்போதுதான் தாயகத்தில் நம்மவர்கள் நிம்மதியாக வாழமுடியும்.

இதன் மூலம் இந்தியா எந்தநிலையில் தமிழர்களை வைத்து உள்ளது என்பது நன்றாக புரிகின்றது. இந்தியாவிற்கு அதன் தனிப்பட்ட நலன்கள் தவிர வேறு ஒன்றிலும் அக்கறை இல்லை. நேற்றுஇ இன்றுஇ நாளை இதே நிலமையே தொடரப்போகின்றது. இந்தியாவின் பின்னால் ஈழத்தமிழர்கள் (அரசியல் வாதிகள்) வால்பிடிப்பதை எப்போது நிறுத்துகின்றார்களோ அப்போதுதான் தாயகத்தில் நம்மவர்கள் நிம்மதியாக வாழமுடியும்.- ஞானி

----------------------------------------------------------------------------------------

இந்தியாவின் தனிப்பட்ட நலன்கள் என்பது எவ்வாறானது? அது அதன் நலன்களுக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்றது என்பதை அவர்களே புரிந்து கொள்கின்றார்களே.

கீழே தினமணியின் ஆசிரியர் தலையங்கத்தின் கருத்தை பாருங்கள்

-------------------------------------------------------------------------

இலங்கை அரசு நமக்கு நட்பு அரசு என்றும், நாம் இலங்கை அரசைப் பகைத்துக் கொண்டால் இன்னோர் அண்டை நாடு நமக்கு எதிராளியாகிவிடும் என்றும் நமது வெளியுறவுத் துறையினர், கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. பண்டாரநாயக்கா காலத்திலிருந்தே இலங்கை அரசு எந்தவொரு விடயத்திலும் இந்தியாவுக்கு அதரவு நாடகா இருந்ததில்லை. உலக சந்தையில் இரப்பர் மற்றும் தேயிலையில் இந்தியாவுக்கு வாத்தக ரீதியாகவும் போட்டி நாடாக மட்டுமே இலங்கை தொடர்ந்திருக்கிறது. அதனால்இ இலங்கையின் நட்புத் தேவை என்பதற்காக எல்லா விடயங்களிலும் நாம் மௌனம் காக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தென்னாசியாவின் மக்கள் தொகை அடிப்படையிலும், பொருளாதார ரீதியாகவும், இராணுவ பலத்தின் படியும் இந்தியாதான் வல்லரசு என்கிற ஞானோதயம் நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்குமே இல்லை எனும் போது நமது வெளிவிவகாரக் கொள்கை எப்படித் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும்? இந்திராகாந்தியிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும், தைரியமும் அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களிடம் காணாமற் போனதன் விளைவுதான் இப்போது உதவிப் பொருள்களைப் பாதிக்கப்பட்ட வட இலங்கை மக்களுக்கு அனுப்ப முடியாத அவலநிலைக்குக் காரணம்.------------------------------------------------------------------------------------------

நெஞ்சு பொறுக்குதில்லையே என்று ஏற்கனவே யாழில் இணைக்கப்பட்ட இந்த கட்டுரையில் இருந்து சிலதை உங்கள் கருத்துக்கேற்ப இணைத்திருக்கின்றேன்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘கிணறு வெட்ட பூதம் கிளம்பிய’ கதை நமக் கெல்லாம் தெரியும். அதேபோல், டெல்லியில் ‘புத்தகம் எழுத பூதம் கிளம்புவதும்’ அடிக்கடி நடக்கும். அமைச்சர் முதல், ஆண்டி வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களைச் சொல்லிப் புத்தக பூகம்பம் கிளப்புவார்கள். லேட்டஸ்டாக கிளப்பியிருப்பவர்& ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி!

p8auu9.jpg

இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றவர் ஹர்கிரத் சிங். இன்று பாகிஸ்தான் லாகூரில் அடங்கிவிட்ட பஞ்சாப் பகுதியில் பிறந்த ஹர்கிரத், எத்தனையோ லட்சம் பேரைப் போல சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவுக்கு வந்துவிட்டவர். 1956&ல் இந்திய ராணுவத்தில் பணியைத் தொடங்கினார். இந்திய&-சீனப் போர், இந்திய-&பாகிஸ்தான் போர்களில் பங்கெடுத்தவர். முப்பத்தைந்து வருட அனுபவங்களுக்கு பின்னர் 1991&ல் ஓய்வு பெற்றார்.

சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானத்தை நிலைநாட்ட இந்தியாவால் இலங்கைக்கு 1987&ம் ஆண்டு அனுப்பப்பட்ட ‘இந்திய அமைதிப் படை’க்கு (ஐ.பி.கே.எஃப்.) முதன்முதலில் தலைமை ஏற்றுச் சென்றவர் ஹர்கிரத் சிங்தான்.

இப்போது தன் புத்தகத்தில், ‘விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொல்லவேண்டும் அல்லது கைது செய்யவேண்டும்...’ என்று அப்போது இலங்கையின் இந்திய ஹை கமிஷனராக இருந்த ஜே.என்.தீட்சித் தனக்குக் கட்டளையிட்டதாகவும், 'இதெல்லாம் பிரதமரின் (அன்று& ராஜீவ் காந்தி) உத்தரவுப்படிதான் சொல்லப்படுகிறது’ என்று தன்னிடம் கூறியதாகவும், தீட்சித்தின் அந்த உத்தரவுக்குத் தான் கீழ்ப்படிய மறுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார் ஹர்கிரத் சிங்!

‘Intervention in Srilanka: The IPKF Experience Retold’என்ற தலைப்பில் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில்,

‘‘நான் இந்திய ராணுவத்தில் 54-&வது தரைப்படை டிவிஷனின் [infantry] ஜெனரல் கமாண்டிங் ஆபீஸராக இருந்தேன். ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உடன்படிக்கை ஏற்பட்டதையட்டி எங்களுடைய டிவிஷனை யாழ்ப் பாணத்துக்குப் போகும்படி அப்போதைய ராணுவ தளபதி சுந்தர்ஜியிடமிருந்து உத்தரவு வந்தது. 1987 ஜூலை 29-, 30 தேதிகளில் நாங்கள் புறப்பட்டோம். இலங்கை சென்று ஐந்து மாதங்கள் பணியாற்றிய என்னை, 1988 ஜனவரி மாதம் அங்கிருந்து டிரான்ஸ்ஃபர் செய்து விட்டனர். இலங்கையில் நான் இருந்தபோது நடந்த மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை...’’ என்று முன்வரலாறு சொல்லி, பின்வரும் சில அதிர்ச்சிகளை அள்ளிப் போடுகிறார் இவர்

ஒன்று: ‘‘விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கக் கோரியும் அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிக்கும் முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டோம். 1987, ஆகஸ்ட் மாதம் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதேநேரம், நமது உளவு அமைப்பான ‘ரா’, மற்ற தமிழ்ப் பேராளிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்துக்கொண்டு இருந்தது. இதைப் புலிகள் வீடியோ எடுத்து என்னிடம் காட்டி முறையிட்டனர். இதை நான் நம்முடைய ஹைகமிஷனுக்குக் கொண்டு சென்றேன்.''

இரண்டு: ''ஜே.என்.தீட்சித், ‘இந்திய அமைதிப்படை மூலம் புலிகளைப் பற்றிய அவதூறுகளை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் பரப்பச் சொன்னார். அதை நாங்கள் ஏற்க மறுத்தோம். நாங்கள் சொல்வதை நம்ப அங்கு யாரும் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். அங்குள்ள தமிழ்மக்கள் தனி ஈழத்தை விடுதலைப்புலிகள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். இதையெல்லாம் தீட்சித்திடம் நான் சொன்னபோது,

‘ஜெனரல், நான் உங்களுக்குப் போடும் கட்டளைகள் எல்லாம் பிரதமரிடம் கலந்து கொண்டுதான் சொல்கிறேன். இதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்வது நல்லது’ என்று அழுத்தமாகச் சொன்னார் தீட்சித்''

மூன்று: ''1987&ல் செப்டம்பர் 14, 15 தேதிகளில் எனக்கு தீட்சித்திடமிருந்து போன் வந்தது. 'இந்திய அமைதிப்படையிடம் பேச்சுவார்த்தை நடத்த பிரபாகரன் வரும்போது, அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுங்கள்... இல்லையென்றால் அவரை நீங்கள் கைது செய்தாவது இந்திய அரசிடம் ஒப்படை யுங்கள்’ என்றார் தீட்சித். அதிர்ந்துபோன நான், ‘ஓவர் ஆல் ஃபோர்ஸ் கமாண்டரான லெப்டினென்ட் ஜெனரல் டிபேந்தர் சிங்கிடம் பேசிவிட்டு, என் கருத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்’ என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். டிபேந்தர் சிங்கிடம் பேசியபோது, அவரும் ஆவேசமடைந்து, ‘தீட்சித்திடம் சொல்லுங்கள்... நம்முடைய ராணுவம் ஒருபோதும் முதுகில் சுடுகிற கோழையல்ல. அதிலும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அதன்படி வெள்ளைக் கொடியின்கீழ் வரும் ஒருவரை சுட்டுக்கொல்வது நமக்கு எந்த வகையிலும் அழகல்ல’ என்றார்.

இதை நான் சொன்னதும், ‘நான் உங்களுக்கு இடுகிற கட்டளை என்னுடையதல்ல. அவருடைய (ராஜீவ் காந்தி) உத்தரவின்படிதான். நீங்கள்தான் இந்திய அமைதிப்படைக்கு கமாண்டிங் ஆபீஸர். உங்களுக்கு தான் இதை நிறைவேற்றும் பொறுப்பு இருக்கிறது’ என்றார் தீட்சித் கோபமாக.

மறுநாள் காலையில் டெல்லியிலுள்ள தலைமையகத்தில் இருந்த ராணுவ ஆபரேஷன்களுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்.ஜெனரல் பி.சி. ஜோஷியைத் தொடர்பு கொண்டேன். அவர் என்னுடைய நிலைப்பாட்டுக்கே ஆதரவு தெரிவித்தார். ராணுவத் தளபதி சுந்தர்ஜியும் தீட்சித்மீது கோபத்தை வெளிப்படுத்தினார்.’’ &இவைதான் ஹர்கிரத் சிங் புத்தகத்தில் சர்ச் சைக்குரிய பகுதிகள்.

p8ys6.jpg

தற்போது சிங் டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வசிப்பதை அறிந்து, அவரிடம் இந்தப்புத்தகம் தொடர்பாக சில கேள்விகள் கேட்டோம். முதலில் தயங்கினாலும், பிறகு சரளமாகப் பேசத் தொடங்கினார்&

‘‘பிரபாகரனைக் கொலை செய்யும்படி ராஜீவ் காந்திதான் உத்தரவிட்டார் என்று ஜே.என்.தீட்சித் உங்களிடம் கூறியதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் குறிப் பிடும் அதிகாரிகளில் சிலர் மட்டுமே இப்போது உள்ளனர். ராஜீவோ, தீட்சித்தோ இல்லை..! அவர்கள் இருந்தபோது இப்படி எந்த தகவலும் எங்கும் வெளியாக வில்லையே..?''

‘‘இந்தப் புத்தகம் எனது இருபது வருட முயற்சியில் வெளியாகியுள்ளது. என் நினைவில் என் மனதில் உள்ளதை அப்படியே ரொம்பவும் விவரமாக எழுதியிருக்கிறேன். புத்தகத்தில் நான் குறிப்பிட்டதைப் போன்ற உத்தரவுகளை தீட்சித் எங்களுக்குப் பிறப்பித்தார் என்பது முற்றிலும் உண்மை. ராணுவம் அந்த உத்தரவுகளுக்கு அடிபணியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

பிரபாகரனைச் சுடச் சொன்ன தீட்சித்திடம், ‘உங்களை என் வீட்டுக்கு வரவழைத்து நான் உங்களைத் துப்பாக்கியால் சுட்டால் எப்படியிருக்கும்?’ என்றுகூட நான் திருப்பிக் கேட்டேன். அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார் என்பது எனக்கு நினைவிக்கிறது.

தீட்சித் அடிக்கடி, ‘நான் பிரதமருக்காகப் பேசுகிறேன். இதுவெல்லாம் பிரதமர் போட்ட உத்தரவு’ என்பார். அவர் சொல்வதை எங்கள் பிரிகேடியர்கள், காமாண்டர்கள் டேப்பில் ரிக்கார்டு செய்துகொள்வார்கள். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல ஆசைப்படுகிறேன். புலிகள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை பிரபாகரனிடமிருந்து நாங்கள் பெற்றோம். ‘1987&ம் ஆண்டு ஆகஸ்ட் 5&ம் தேதி, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுப் பொதுக்கூட்டத்திலும் பேசுவதாக’ அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் பிரபாகரன். கடிதத்தைப் பார்த்த தீட்சித், அந்த சந்தர்ப்பத்தில்கூட, ‘நான் பிரதமர் சார்பாக இதைப் பாராட்டுகிறேன்’ என்று கூறினார்.’’

‘‘பொறுப்போடு பணியாற்றிய உங்களைப் போன்ற வர்களை மாற்றம் செய்தார்கள் என்றும் புத்த-கத்தில் சொல்லியிருக்கிறீர்கள்... உங்கள் மாற்றத்துக்குக் காரணம், ‘பிரபாகரனை சுட்டுக்கொல்ல சம்மதிக்கவில்லை’ என்பதுதானா? மாற்றம் வந்ததுமே நீங்கள் பிரதமர் கவனத்துக்கு ஏன் கொண்டு போக வில்லை?’’

‘‘ராஜீவ் காந்தி ஓரிரு முறை பொதுக்கூட்டங்களில் என்னுடைய பெயரை குறிப்பிட்டுப் பேசியிருக் கிறார். ‘ஜெனரல் ஹர்கிரத் சிங் என்னிடமிருந்து உத்தரவுகளைப் பெற்றுத்தான் செயல்படுகிறார், யாருடைய கட்டளையின் பேரிலும் அவர் செயல்பட மாட்டார்’ என்று சொல்லியிருக்கிறார். ஜெயவர்த்தனா ஒரு கூட்டத்தில், ‘நான்தான் இலங்கையின் சுப்ரீம் கமாண்டர். ஆனால், ஜெனரல் என்னுடைய உத்தரவுபடி நடந்துகொள்ள மறுக்கிறார்’ என்றார். இதற்கு பதில் சொல்வதற்காகத்தான் ராஜீவ் காந்தி அப்படிப் பேசினார். மற்றபடி, ராணுவத்தில் பிரதமரையெல்லாம் தலைமைத் தளபதிதான் சந்திக்கமுடியும்.’’

p10mo1.jpg

‘‘புலிகளுக்கு எதிரான ஆபரேஷனில் இந்திய அமைதிப்படை பெரும் சேதமும் தோல்வியும் சந்தித்தது என்ற கருத்து அழுத்தமாக இன்றும் நிலவுகிறதே..?’’

‘‘போரிட்டால்தானே வெற்றி& தோல்வி என்ற பேச்சு வரும்? நாங்கள் அமைதியை நிலைநாட்டவே சென் றோம். இதற்காக பல்வேறு சமாதான முயற்சிகளை மேற்கொண்டோம். யாழ்ப்பாணத்தில் இருந்த இலங்கை ராணுவத்தினரை பத்திரமாகக் கொழும்புக்கு கொண்டு போனோம். யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டு இருந்த பெட்ரோல் பம்புகளை திறந்தோம். முடக்கி வைக்கப்பட்டிருந்த ரயில்களை ஓடச் செய்தோம்...’’

''ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்துக்கும் அமைதிப்படை இலங்கை சென்றதற்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா? குறிப்பாக நமது ராணுவத் தினர் மீது பாலியல் வல்லுறவு புகார்கள் வந்ததே..?''

‘‘ராஜீவ் கொலை சம்பவம் பற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது. இலங்கையில் நான் இருந்தபோது ஒரே ஒரு பாலியல் வல்லுறவு புகார் வந்தது. அந்த நபருக்கும் கடுமையான தண்டணையைக் கொடுத்து வெளியேற்றினோம். சென்னை ராணுவக் கோர்ட்டில் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு, பணியிலிருந்தும் நீக்கப்பட்டார். நான் 1987&ம் வருடம் இலங்கை சென்றேன். 88&ம் வருடம் அங்கிருந்து இந்தியா திரும்பிவிட்டேன். ஆனால் இந்திய ராணுவம் 90-ம் வருடம்தான் திரும்பியது!’’

--டெல்லியிலிருந்து சரோஜ்கண்பத்

படம்: எஸ்.ஜி.ஆர்.ஆர்.

http://www.vikatan.com/

Edited by pepsi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடரூந்து ஒடாமல் இருப்பதும், எரிபொருள் நிலையம் இயங்காமல் இருப்பதும் மட்டும் தான் ஈழத்தமிழர்களின் பிரச்சனையா?.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டார் தீக்சித் - ராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவல்

சனிக்கிழமை, டிசம்பர் 8, 2007

டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டுமாறு, இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஜே.என். தீக்சித் உத்தரவிட்டதாக, இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் தலைவர் ஹர்கிரத் சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இப்படையின் தலைவராக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங். இவர் தற்போது பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'Intervention in Sri Lanka' என்ற நூலை சிங் எழுதியுள்ளார். இதில், இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதி காக்கும் படையின் தளபதியாக இருந்தபோது சந்தித்த அனுபவங்களை அவர் எழுதியுள்ளார்.

அதில் முக்கிய விஷயமாக, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டி விடுமாறு தன்னிடம் அப்போதைய இந்தியத் தூதர் ஜே.என்.தீக்சித் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் ஹர்கிரத் சிங் கூறியுள்ளார்.

தீக்சித் குறித்து தான் வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல் குறித்து ஹர்கிரத் சிங் கூறுகையில், அமைதி காக்கும் படையின் தலைவராக நான் இருந்தபோது, 1987ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி என்னை தீக்சித் போன் மூலம் தொடர்பு கொண்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன், இந்திய அரசு பேச்சுவார்த்தைளை மேற்கொண்டிருந்த நேரம் அது. என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தீக்சித், நீங்கள் பிரபாகரனை நாளை சந்தித்துப் பேசச் செல்லும்போது, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுங்கள் என்று உத்தரவிட்டார் தீக்சித்.

ஆனால் அதை நான் உடனடியாக மறுத்து விட்டேன். இது கோழைத்தனமான, முதுகில் குத்தும் செயல் என்பதாலும், இந்திய ராணுவத்தின் பெயர் உலகளவில் கெட்டு விடும் என்பதாலும் இதை ஏற்க நான் மறுத்து விட்டேன்.

பின்னர் ராணுவ உயர் அதிகாரிகளுடன் நான் இதுகுறித்து ஆலோசித்தபோது, அவர்களும் எனது கருத்தையே பிரதிபலித்தனர் என்றார் சிங்.

தன்னைக் கொல்ல இந்தியத் தூதர் உத்தரவிட்டது குறித்து பிரபாகரனுக்குத் தெரியுமா என்று கேட்டபோது, ஒரு வேளை பின்னர் அவருக்குத் தெரிய வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் சிங்.

பிரபாகரனைக் கொல்ல இந்தியத் தூதர் உத்தரவிட்டதை அறிந்துதான், பழிக்குப் பழியாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்கலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார் சிங்.

இந்தியத் தூதராக இருந்த தீக்சித், பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டதாக, முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி வெளியிட்டுள்ள இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.என். தீக்சித் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2007/12...rabhakaran.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.