Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

 

  • Replies 96
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nedukkalapoovan

உக்ரைனில் மனிதப் புதைகிழியாம் என்றால்.. முன் பக்கத்தில்.. பிரேக்கிங் நியூஸ் போடும் உலக முன்னணி ஊடகங்களுக்கு இது தெரியாமல் இல்லை. கண்டுகொள்ளாமை அல்லது புறக்கணிப்புத் தன்மை. என்ன தான் இவர்களை நோக்க

Kapithan

உக்ரேனுக்காக சாரை சாரையாகக் கண்ணீர் விடத் தெரிந்த யாழ் கள சனநாயகக் காவலர்களில் எத்தனை பேர் இந்தத் துயரத்திற்கு கருத்துத் தெரிவித்தார்கள் ?   

தமிழ் சிறி

நிச்சயம் இதனை… வெளி உலகத்துக்கு, துரித கதியில் தெரிவிக்க எமது அமைப்புகள் முன் வரவேண்டும். எமது போராளிகளை கொடூரமாக கொன்ற சிங்கள இராணுவத்தை  உலகின் முன் அம்பலப் படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி 6 ஆம் நாள் அகழ்வாய்வு : இதுவரை 6 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி, ரஷ்யத் தயாரிப்பு நீர்சுத்திகரிப்புக் கருவியொன்று மீட்பு

12 SEP, 2023 | 08:00 PM
image
 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஆறாம் நாள் அகழ்வாய்வு செப்ரெம்பர் (12)இன்று முன்னெடுக்கப்பட்டநிலையில், கழிவு நீரினைச் சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி ஒன்றும், துப்பாக்கி ரவை ஒன்றும் தடையப் பொருட்களாகப் பெறப்பட்டுள்ளன.

இதுவரை கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஆறு நாட்கள் இடம்பெற்றுள்ளநிலையில், 06மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) புதனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் ஆறாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (12) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆறாம்நாள் அகழ்வாய்வுகள் தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் ஆறாவதுநாள் அகழ்வாய்வில் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி முற்றுமுழுதாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்ததுடன், செப்ரெம்பர் (11) திங்களன்று பகுதியளவில்அகழந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதியின் மிகுதிப் பாகங்களும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.

அத்தோடு குறித்த ஆறாம் நாள் அகழ்வாய்வில் துப்பாக்கி ரவை ஒன்றும், கழிவு நீரினைச் சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி ஒன்றும் தடையப் பொருட்களாக பெறப்பட்டுள்ளன.

அதேவேளை இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயோ, கைகள் கட்டப்பட்ட நிலையிலேயோ மீட்கப்படவில்லை.

இந்த அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெறும்போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில், இரண்டு சட்டத்தரணிகள் அகழ்வாய்வுகள் ஆரம்பமாகி முடிவடையும்வரை நேரடியாக நின்று பார்வையிடுகின்றனர்.

இதனைவி தடையவியல் போலிசார் அகழ்வுப்பணிகளின்போது புகைப்படங்களை எடுத்து ஆவணப்படுத்துகின்றனர்.

இவ்வாறான சூழலில் இங்கு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும்நிலையில் கைகள் கட்டப்பட்டநிலையில் எலும்புக்கூட்டுத் தொகுதிகளோ, கண்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட துணிகளோ இதுவரை இனங்காணப்படவில்லை என்றார்.

_________________02.jpg

_________________01.jpg

________________05.jpg

_________________04.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக சமத்துவ யாழ்வாதிகள்.. புதுமாத்தளனை.. உக்ரைனோடு ஒப்பிட்டு குய்யோ முறையோ என்றவை..... உக்ரைனில் நடந்த சிறிய சம்பவங்களை எல்லாம் தூக்கிப் பிடிச்ச மேற்குலக மற்றும் அமெரிக்க ஊடகங்கள் இந்த புதைகுழி குறித்து இத்தனை மாதங்கள் கடத்தும் ஒரு ஊடக சம்பிரதாயத்துக்கு கூட.. மூச்சும் விடாதது குறித்து என்ன சொல்லுவினம்..??!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 8 ஆம் நாள் அகழ்வாய்வில் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு ; ஆடையில் (இ1124) இலக்கம்

14 SEP, 2023 | 10:26 PM
image
 

 

 

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் எட்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14)இடம்பெற்றநிலையில், ஐந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், தடையப் பொருளாக துப்பாக்கி ரவை ஒன்றும் ஆடைகளும் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில், நீளக்காட்சட்டையில் (இ1124) இலக்கம் இடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எட்டுநாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 14மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் ஏழாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14) நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான இரட்ணவேல், கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா, தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் இந்த அகழ்வாய்வு இடம்பெறும் இடத்திற்கு தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20230914-WA0065.jpg

 

IMG-20230914-WA0051.jpg

https://www.virakesari.lk/article/164606

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : இதுவரை 14 எலும்புக்கூடுகள் மீட்பு

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2.jpg


முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 9 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது 5 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அத்துடன், துப்பாக்கி ரவை ஒன்றும் ஆடைகள் சிலவும் அங்கிருந்து மீட்கப்பட்டன.

கடந்த 6 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 14 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

அவை, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியாசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

எலும்புக்கூடுகள் தொடர்பாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு சட்டவைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்கான அகழ்வினை மேற்கொண்ட போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/273297

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஆகழ்வு தற்காலிக இடைநிறுத்தம் : 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டெடுப்பு

15 SEP, 2023 | 09:22 PM
image
 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் அகழ்வாய்வுப்பணிகளை ஒக்டோபர் மாத மூன்றாவது வாரத்தில் மீளவும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் ஈடுபட்டுவந்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட வேறு பணிகளுக்கு செல்லவிருப்பதால், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

இந் நிலையில் இதுவரை ஒன்பது நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் தாம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் குறித்த அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு

முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கினால் தாம் தொடர்ந்தும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அகழ்வாய்வுகளில் ஈடுபட்ட தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (15) இன்று முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் கெங்காதரன் முன்னிலையில், சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்ன. 

குறித்த ஒன்பதாம்நாள் அகழ்வாய்வுகளில் மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், தடையப் பொருளாக விடுதலைப்புலிகள் அமைப்பின் இலக்கத் தகடொன்றும், ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் இதுவரை ஒன்பது நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் மொத்தமாக 17மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு குறித்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகளின் நிறைவில், குறித்த மனிதப் புதைகுழி ட்ரோன் கருவியைப் பயன்படுத்தி காணொளி எடுக்கப்பட்ஞதுடன், (பிளாஸ்டிக்) விரிப்புக் கொண்டு மூடப்பட்டது. குறித்த விரிப்பின் விளிம்புப் பகுதிகளில் மண்இடப்பட்டுள்ளன.

மேலும் குறித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க முல்லைத்தீவு இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி ஆகியோர் குறித்த மனிதப்புதைகுழி வளாகத்திற்கு வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20230915-WA0038.jpg

IMG-20230915-WA0060.jpg

IMG-20230915-WA0089.jpg

IMG-20230915-WA0068.jpg

IMG-20230915-WA0102.jpg

IMG-20230915-WA0103.jpg

IMG-20230914-WA0051.jpg

InShot_20230915_180850164__1_.jpg

IMG-20230914-WA0065.jpg

IMG-20230913-WA0037.jpg

https://www.virakesari.lk/article/164680

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதைச்செய்தவர்களும் நிம்மதியாக உறங்குகிறார்கள்தானே! முன்பெல்லாம் எமக்காக குரல் கொடுக்கும் தமிழகம் இப்போ மிகுந்த அமைதி காக்கிறது. எங்களுக்காக நாங்களே போராட வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நிறுத்தப்படும் சூழலே காணப்படுகிறது - சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ

05 OCT, 2023 | 02:05 PM
image

பாலநாதன் சதீஸ்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

மீண்டும் அகழ்வுப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? ஏற்கனவே எடுக்கப்பட்ட 17 உடற்கூற்றுக்கான பரிசோதனை முடிவுகள் எப்போது கிடைக்கும் என முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியை இன்று (05) தொடர்புகொண்டு வினவியபோது இவ்வாறு கூறினார். 

இதன்போது அவர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர் நிதி இல்லை என நேற்றைய தினம் (04) கூறியுள்ளதாகவும், அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த மாதம் செப்டெம்பர் (06) ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இந்த அகழ்வுப் பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_20231005_09114339.jpg

IMG_20231005_09113425.jpg

IMG_20231005_09120053.jpg

https://www.virakesari.lk/article/166163

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்விற்கு நிதிக் கையிருப்பு உள்ளது ; சட்டவைத்திய அதிகாரியின் கூற்றை மறுக்கும் முல்லைத்தீவு மாவட்டசெயலகம்

Published By: VISHNU

05 OCT, 2023 | 07:25 PM
image
 

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிக்குரிய நிதி இல்லை என முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் கடந்த ஒக்டோபர் (04)ஆம் திகதி தன்னிடம் தெரிவித்ததாகவும், ஏற்கனவே அகழ்வுப்பணிகள் மேற்கொண்டமைக்கான கொடுப்பனவுகளன வழங்கப்படவில்லை எனவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார்.

20221007053652_IMG_0299.JPG

இந் நிலையில் சட்டவைத்திய அதிகாரியின் இத்தகைய கூற்றுக்கு, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், அகழ்வாய்வுப் பணிக்கென முதற்கட்டமாக பெறப்பட்ட 5.6மில்லியன்ரூபா பணத்தில், இன்னும் ஒருவாரகாலம் அகழ்வாய்வுப்பணிகளைச் செய்வதற்குரிய நிதி கையிருப்பில் உள்ளதாகவும், மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றபோது தம்மால் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

20221013052918_IMG_0592.JPG

அத்தோடு நீதிமன்றத் தீர்மானத்திற்கு அமைவாக தொடர்ந்தும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளை மேற்கொள்ளமுடியும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மேலதிகமான அகழ்வுப்பணி தொடர்பிலும், ஏற்கனவே அகழ்வின்போது எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் பரிசோதனை முடிவுகள் தொடர்பிலும் சட்ட வத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவிடம் வினவியபோது, முல்லைத்தீவு மாவட்டசெயலக பிரதம கணக்காளர் நிதி இல்லையென கடந்த ஒக்டோபர் (04) புதன்கிழமையன்று கூறியுள்ளதாகவும், அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இது தொடர்பில் முல்லைத்தீவுமாவட்டசெயலக பிரதம கணக்காளர் எம்.செல்வரட்ணத்திடம் தொடர்புகொண்டுவினவியபோது,

தாம் நிதியில்லை என சட்டவைத்திய அதிகாரியிடம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்ததுடன், தாம் மாவட்டசெயலரின் அனுமதியின்றி இது தொடர்பில் மேலதிக தகவல் எதனையும் வழங்கமுடியாது எனவும் தெரிவித்தார்.

எனவே இது தொடர்பில் முல்லைத்தீவு மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரிடம் தொடர்புகொண்டு வினவியபோது,

இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளுக்கென முதற்கட்டமாக 5.6மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில்,  மனிதப் புதைகுழிக்கு பந்தல் இடுகிற செயற்பாடுகள், மலசலகூடம் அமைக்கும் செயற்பாடு உள்ளிட்டவற்றிற்கு இரண்டு மில்லியனுக்கு அதிகமாக நிதி செலவிடப்பட்டுள்ளது.

அத்தோடு அகழ்வாய்வுப் பணிகளில் ஈடுபட்ட ராஜ் சோமதேவ தலைமையிலான தொல்லியல் துறையைச் சார்ந்த குழுவினருக்குரிய பணக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவிட்டன.

தற்போது சட்டவைத்திய அதிகாரிகளுடை பணக்கொடுப்பனவுகளே வழங்கவேண்டியுள்ளது.

கடந்த ஒக்டோபர்(04) புதன்கிழமையன்றே அகழ்வாய்வுப்பணிகளில் ஈடுபட்ட தொல்லியல் துறையினரதும், வைத்தியர்களுடையதும் நிதியைப் பெறுவதற்கான பற்றுச்சீட்டுகள் அவர்களுடைய கையொப்பத்துடன், முத்திரை ஒட்டப்பட்டு உரிய முறையில் எமக்கு கிடைத்தன.

அவ்வாறு பணத்தினைப் பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு எம்மிடம் கிடைத்தவுடனேயே, எம்மால் பணத்தினை வழங்கமுடியாது. ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள நிதியைப் பெறுவதற்கு சில நிதிநடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளைப் பின்பற்றியே எம்மால் அவர்களுடைய கொடுப்பனவுகளை வழங்கமுடியும்.

இருந்தும் எம்மிடமிருந்த வேறு வைப்புப் பணத்தினைப் பயன்படுத்தி தொல்லியல் துறையினருக்குரிய பணக்கொடுப்பனவை வழங்கியுள்ளோம்.

இனி சட்ட வைத்திய அதிகாரிகளுடைய நிதியே வழங்கப்படவேண்டியுள்ளது.

குறித்த அகழ்வாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரிகளுக்கான பணக்கொடுப்பனவுகளை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.

இன்னும் ஓரிருநாட்களில் உரிய கட்டுநிதி எமக்கு கிடைக்கப்பெற்றவுடன், உரிய சட்டவைத்திய அதிகாரிகளுக்கான கசோலைகள் வழங்கப்படும்.

அத்தோடு முதற்கட்டமாக ஒதுக்கீடுசெய்யப்பட்ட 5.6மில்லியன்ரூபா நிதியில், 2.6மில்லியன் ரூபா நீதியே செவிடப்பட்டிருக்கின்றது.

இந் நிலையில் மிகுதிப்பணத்தைப் பயன்படுத்தி குறித்த கொக்குத்தொடு மனிதப் புதைகுழி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகரப் பந்தலை மேலும் விஸ்தரித்து வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

அத்தோடு குறித்த மனிதப்புதைகுழி வளாகத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு கமரா பொருத்தும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறாக வேலைத்திட்டங்கள் அனைத்தும் கிரமமாக இடம்பெற்று வருகின்றன. நீதிமன்றத்தின் தீர்மானங்களுக்கேற்ப அதற்குரிய மதிப்பீடுகளைச்செய்து தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவோம்.

நீதிமன்றத் தீர்மானத்திற்கு அமைவாக நிதி அமைச்சு நிதி தருவதற்கு தயாராக இருக்கின்றது. அதற்கமைய முதற்கட்டமாக பெறப்பட்ட 5.6மில்லியன்ரூபா பணத்தில், இன்னும் ஒருவாரகாலம் அகழ்வாய்வுப்பணிகளைச் செய்வதற்குரிய நிதி கையிருப்பில் உள்ளது.

மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றபோது எம்மால் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும். எனவே நீதிமன்றத் தீர்மானத்துற்கு அமைவாக தொடர்ந்தும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளமுடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/166212

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் நிதி போதாத நிலமையை சுட்டிக்காட்டி காலதாமதம் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எங்களுக்கு இதில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது என்னவென்றால் காலதாமதங்கள், நிதி இல்லை என்று கூறுவதும், ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதும், குறித்த காலப்பகுதி மழை காலமாக இருப்பதாலும் இப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : பற்களை வைத்து எலும்புக்கூடுகளின் வயதை கண்டறிய தீர்மானம் - சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ

Published By: VISHNU    31 OCT, 2023 | 07:42 PM

image

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சடலங்களை அகழ்ந்து எடுப்பதற்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட பற்களின் அடிப்படையில் வயது நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.

"தற்போது மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மாவட்ட வைத்தியசாலையின் உடற்கூறாய்வு நிலையத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன.  முதற்கட்டமாக நாங்கள் அவற்றின் பற்களை எக்ஸ்ரே எடுத்து அவர்களின் வயதை அனுமானிக்க உத்தேசித்துள்ளோம்.

மேலும் இந்த பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பல் சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் ஒருவரின் உதவியை நாடியுள்ளோம். இனிவரும் காலங்களில் எக்ஸ்ரே எடுத்து முடிந்த பின்னர் அவர்கள் வந்து நேரடியாக இந்த எலும்புக்கூட்டுத் தொகுதியை பரிசோதிக்கும்போது நாங்களும் கூடவே இருந்து எங்களுடன் தொடர்புடைய விடயங்களை கையாள்வோம்."

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை நவம்பர் 20ஆம் திகதியிலிருந்து மீள ஆரம்பிக்க ஒக்டோபர் 30ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்கால அகழ்வு பணிகளுக்காக சுமார் 25 இலட்சம் ரூபாய் நிதி எஞ்சியுள்ளதாக  சட்ட வைத்திய அதிகாரி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் தொடர்பில் எவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என,  முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, அனைத்து எலும்புக்கூடுகளையும் அகழ்ந்து எடுத்ததன் பின்னர் அதுத் தொடர்பில் ஆராய்ந்து, இது தொடர்பிலான தீர்மானத்தை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டார்.

"இதுத் தொடர்பிலான முடிவுகளை பொறுத்தவரையில் இவ்வாறான சிறு சிறு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மீட்கப்பட்ட எலும்புபக்கூடுகளின் எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டுவிட்டன. நாங்கள் கிடங்கில் உள்ள எலும்புக்கூடுகளை முழுமையாக எடுப்போம், அதன் பின்னர் ஆராய்ந்து முடிவுகளை சொல்வதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்தில் சொன்னால் சில சிக்கல் எழலாம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அவர்களின் சட்டத்தரணிகள் கிடங்கில் உள்ள அனைத்து எலும்புக்கூடுகளையும் எடுப்போம் எடுத்த பின்னர் எஞ்சிய பணிகளை மேற்கொள்வோம் என கூறியிருக்கின்றார்கள்."

செப்டெம்பர் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக முடிவடைந்ததோடு, கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக புதைகுழியை அகழ்ந்தெடுக்கும் விசாரணையில் முன்னோடியாக செயற்படும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டிருந்தார்.

"கிடைத்த ஆதாரங்களை முறையாக ஆய்வு செய்வதற்காக இந்த 2 மாத காலத்திற்கு இது நிறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஏனைய பொருட்களை ஆராய்ந்து உண்மைகளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், இந்த அகழ்வு மற்றும் விசாரணையை தொடரலாமா வேண்டாமா என நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை வரை காத்திருக்கிறோம். என்ன தீர்மானம் எடுக்கப்படும் என்பதுதான் விடயம்."

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் புதைகுழியை அகழ்ந்தெடுக்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது நாட்களின் பின்னர் 17  எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைத்துள்ளன.  

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாயை பதிக்க நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக மனித உடல் பாகங்களும் ஆடைகளின் பாகங்களும் இந்த வருடம் ஜூன் 29ஆம் திகதி மாலை கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/168189

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க வேண்டி ஏற்படும் - சுமந்திரன்

Published By: VISHNU     20 NOV, 2023 | 05:06 PM

image

கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (20) கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீளவும் திங்கட்கிழமை (20) காலை ஆரம்பமாகி இருக்கின்றது.

தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்ற நிதியினை வைத்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வை மேற்கொள்ள முடியும் என கூறியிருக்கிறார்கள்.

இது பல்வேறு தளங்களிலே உடல்கள் காணப்படுகின்ற காரணத்தினாலே நீண்ட காலமாக இதனை செய்வதற்கான தேவை ஏற்பட்டிருப்பதனை தற்போது உணர்ந்திருக்கின்றார்கள்.

அது ஒரு பக்கம் இருக்க வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்க கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது.

ஆகையினாலே இதனை வருகின்ற நாட்களிலே பரிசீலித்து நீண்ட நாட்களாக செய்யப்பட வேண்டிய செயன்முறை என்ற அடிப்படையிலே அதற்கான நிதியை ஜனாதிபதி செயலகத்திலே இருந்து, அரசாங்க அதிபருக்கு அதனை விடுவிப்பதற்கான முயற்சிகள் இன்றிலிருந்து ஆரம்பமாக இருப்பதாகவும் அந்த நிதி விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது. 

ஆகையினாலே இந்த செயற்பாடுகள் தற்போது சரியான முறையிலே நடைபெறுகின்றன. 

ஒவ்வொரு உடல்களும் கை, கால், உடம்பு, தலை அனைத்தும் பொருந்தக்கூடிய வண்ணமாக எடுக்கப்படுகின்ற காரணத்தினால்தான் நீண்ட நேரம் இதற்கு செல்வாகின்றது. உடையாமல் கவனமாக எடுக்கப்பட வேண்டிய தேவையும் இருக்கின்றது.

ஆகையினால் ஒவ்வொரு கட்டமாக அகழ்ந்து தற்போது 17 உடலங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை விட கூடுதலான எண்ணிக்கை இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. அவர்களுடைய சீருடைகள் மற்றும் வேறு பல பொருட்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

ஆகையினாலே எந்த காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்பதனையும் சில பரிசோதனைகளின் பின்னர் அறியக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு சில நாட்கள் எடுக்கும் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/169801

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வன்னியில் உள்ள பாரிய புதைகுழிகள் தொடர்பான அகழ்வுக்காக ரேடார் இயந்திரங்களை கொண்டுவர ஆயத்தம்

Published By: DIGITAL DESK 3    21 NOV, 2023 | 03:01 PM

image

இலங்கையில் போரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

17 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதை அடுத்து செப்டம்பர் 15ஆம் திகதி தற்காலிகமாக நிறைவடைந்த கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இரண்டு மாதங்களுக்கு பின்னர், முல்லைத்தீவு நீதிவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையில் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

105.jpg

ரேடார் கருவிகளைப் பயன்படுத்தி புதைகுழி எவ்வளவு தூரம் வியாபித்துள்ளது என்பதை தீர்மானிக்க உள்ளதாக நேற்று அகழ்வு பணிகள் நிறைவடைந்ததையடுத்து,  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அகழ்புப் பணிகளுக்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ குறிப்பிட்டார்.  

''புதைகுழி துப்புரவு செய்யப்பட்டு, போடப்பட்டிருந்த மண் மற்றும் பொலிதீன் அகற்றப்பட்டு, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த புதைகுழியானது ரேடார் கருவிகள் மூலம் இந்த புதைகுழி எவ்வளவு தூரத்திற்கு வியாபித்துள்ளது என்பதை கண்டறிவதற்கு ரேடார் கருவிகள் ஊடாக பரீட்சித்துப்பார்க்கப்படவுள்ளது. இது எதிர்வரும் 23, 24, 25 ஆகிய திகதிகளில் இடம்பெறும் ."

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம் அருகே தற்செயலாக எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக ஜூன் மாத இறுதியில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கு ஒக்டோபர் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு அருகில் வேறு உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் உள்ளனவா? என்பதை கண்டறிய ரேடார் கருவியை பயன்படுத்துவது தொடர்பில் தொல்பொருள் தடயவியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அகழ்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில், புதைகுழிக்கு அருகில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மேலும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வு பணிகளை மேற்கொள்ள பணம் எஞ்சியிருப்பதாக  ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

103.jpg

“தற்போது விடுவித்துள்ள நிதியை வைத்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வை செய்ய முடியுமென தெரிவித்துள்ளனர். வீதிக்கு குறுக்காகவும் வீதிக்கு அடியிலும் கூட சிலவேளை மனித எச்சங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை வரும் நாட்களில் சரியாக பரிசீலித்து நீண்ட நாட்களாக செய்ய வேண்டிய ஒரு செயற்பாடு என்ற அடிப்படையில் அதற்கான நிதியை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அரசாங்க அதிபருக்கு விடுவிக்கும் முயற்சிகள் இன்றிலிருந்து ஆரம்பமாகும் என சொல்லப்பட்டுள்ளது. அந்த நிதி விடுவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.”

செப்டெம்பர் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக முடிவடைந்ததோடு, கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சடலங்களை மீட்கும் விசாரணையில் முன்னோடியாக இருந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டிருந்தார்.

முல்லைத்தீவு மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்டும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது நாட்களின் பின்னர் பதினேழு பேரின் எலும்புகள் மீட்கப்பட்டதோடு, விடுதலைப் புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றன.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/169862

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி : களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் ஆய்வு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றையதினம் அகழ்வாய்வு நிறைவடையும் போது இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது குறித்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ”எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால்  விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது?உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து  ஆய்வு நடத்தப்படவுள்ளதாக” முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார்.

https://thinakkural.lk/article/282026

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

IMG-20231121-WA0482.jpg?resize=750,375&s

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி: 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றையதினம் அகழ்வாய்வு நிறைவடையும் போது இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது குறித்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ”எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால்  விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது?உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து  ஆய்வு நடத்தப்படவுள்ளதாக” முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார்.

https://athavannews.com/2023/1360117

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி: 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு!

இது ஏதோ இன்னொரு நாட்டில் நடக்கும் நிகழ்வாகவே அரசியல்வாதிகள் பார்க்கிறார்களோ?

சுமந்திரன் மட்டுமே அங்கால இங்கால எல்லாம் கிடக்கு போல இருக்கு என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் நேற்று 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு : இன்று ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை

24 NOV, 2023 | 09:54 AM
image

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை (23) நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது.

நேற்று மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் இரண்டு எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.

d6.gif

இதனுடன் துப்பாக்கி குண்டு சன்னங்கள் மற்றும் குண்டு சிதறல்கள் இலக்கத் தகடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதுவரையில் மொத்தமாக 26 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

d4.gif

நான்காவது நாளான நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

d7.gif

24 அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்ற சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

d5.gif

https://www.virakesari.lk/article/170109

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாக செல்லும் சாத்தியக்கூறுகள் : முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி

25 NOV, 2023 | 09:44 AM
image

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐந்தாவது நாளாக தொடரும் கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பேனா மாக்கர் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கானர் மூலம் இந்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என பரிசோதனை செய்யப்பட்டது இதன் முடிவுகள் நாளையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும்.

இவ் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் மற்றைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

எனினும் நாளைய பரிசோதனையின் பின்னரே இறுதி முடிவுகள் என்னால் உறுதியாக கூறமுடியும் என மேலும் தெரிவித்தார்.

IMG_20231124_19323288__1_.jpg

IMG_20231124_19321339__1_.jpg

IMG_20231124_19322525.jpg

IMG_20231124_19331157.jpg

IMG_20231124_19330935.jpg

IMG_20231124_19325474.jpg

IMG_20231124_19324594.jpg

https://www.virakesari.lk/article/170195

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐந்து மனித எலும்பு கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் ஆறாம் நாள் அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றன. இதன்போது, ஐந்து மனித எலும்பு கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இதுவரையில் 35 மனித உடற்கூற்று தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படாது எனவும் அந்த பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பணிகள் முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, தடயவியல் துறையினர், கிராம உத்தியோகத்தர் மற்றும் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://thinakkural.lk/article/282416

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு வீதியின் மையப்புள்ளி வரை மனித புதைகுழி இருக்கிறது - சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ

Published By: DIGITAL DESK 3    28 NOV, 2023 | 02:28 PM

image

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு  மையப்புள்ளி வரை    விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று  நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார். 

ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.

இன்று செவ்வாய்க்கிழமை (28) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/170457

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ; எலும்புக்கூடுகளின் பாலினத்தை கண்டறிய ஆய்வு

Published By: DIGITAL DESK 3    15 DEC, 2023 | 10:09 AM

image
 

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத இறுதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று வியாழக்கிழமை (14) அழைக்கப்பட்டு, அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாக சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ள திகதிகள் குறித்து சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக குறிப்பிட்டார்.

"ஏற்கனவே எடுக்கப்பட்ட 40 மனித எலும்புக் கூடுகளில் இருந்து அதனுடைய ஆய்வுகளை, அதன் வயது, அது ஆணா பெண்ணா போன்ற ஆய்வுகளை டிசம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் வாசுதேவ நேற்று  நீதிமன்றில் தெரிவித்தார்.”

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் பாரிய புதைகுழியில் இருந்து எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன.

கொக்கிளாய், முல்லைத்தீவு பிரதான வீதியூடாக பாரிய புதைகுழி வியாபித்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, அதனை முழுமையாக தோண்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஜூன் 29ஆம் திகதி, அகழ்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான செலவுகள் குறித்தும் இன்று நீதிமன்றில் கலந்துரையாடப்பட்டதாக சட்டத்தரணி வீ.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.

"மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள அகழ்வுப் பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதற்கான செலவுகள், குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் வீதி உடைக்கப்பட்டு மீண்டும் திருத்துவதற்கு எவ்வளவு தொகை செலவாகும் போன்ற விடயங்கள் பேசப்பட்டன."

நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் கணக்காளர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

நவம்பர் 29ஆம் திகதி புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், அடுத்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

அது தொடர்பான மேலதிகத் தீர்மானத்திற்காக இந்த வழக்கை பெப்ரவரி 22ஆம் திகதி மீண்டும் அழைக்க முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தீர்மானித்ததாக சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு, நண்பகல் வேளையில் நிறுத்தப்பட்ட போது, கொக்குத்தொடுவாய் வெகுஜன புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கங் மீட்கப்பட்டன.  அந்த சடலங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படுவதற்கும் சில சான்றுகளும் காணப்படுகின்றன.

அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்திருந்தார்.

இதுவரை அகழ்வு செய்யப்பட்டுள்ள நிலத்தின் அளவு மற்றும் எதிர்காலத்தில் தோண்டப்பட உள்ள நிலத்தின் அளவு குறித்தும் சிரேஷ்ட பேராசிரியர் விளக்கியிருந்தார்.

“தற்போது 3 மீற்றர் அகலத்திலும் 14 மீற்றர் நீளத்திலும் தோண்டியுள்ளோம். நாங்கள் இங்கு வந்தபோதும் கனரக இயந்திரங்களைக் கொண்டு தோண்டியிருந்ததால் அது நீளமாகவும் அகலமாகவும் இருந்தது. எனவே இந்த 40 எலும்புக்கூடுகளை அகற்றிய பின்னர், குறைந்தது இரண்டு மீற்றர் தூரத்திற்கு தோண்ட வேண்டும். 3 மீற்றர் மற்றும் 2 மீட்டர் சதுர மீட்டர்கள் என எடுத்துக் கொண்டால், நீளம் 2, அகலம் 3, ஆழம் சுமார் ஒன்றரை மீட்டர். எஞ்சிய எலும்புக்கூடுகளை வெளிக்கொண்டுவர 6.63 கனமீட்டர் மண் அகற்றப்பட வேண்டும் என்பது எங்கள் கணிப்பு.”

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டன.

https://www.virakesari.lk/article/171743

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை; வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Published By: DIGITAL DESK 3   04 MAR, 2024 | 12:09 PM

image

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு  தொடர்பான  வழக்கானது இன்று திங்கட்கிழமை (04) முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்  முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி  கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வீ.எஸ். நிரஞ்சன், கணேஸ்வரன், தனஞ்சயன், ருஜிக்கா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.  

குறித்த வழக்கின்  அகழ்வு பணியினை திட்டமிட்டபடி   நடாத்த நிதி கிடைக்கபெறவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த வழக்கு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று  40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு,  அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது.

அதனையடுத்து குறித்த அகழ்வுப்பணியின் மூன்றாவது கட்டம் இவ்வருடம்  மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதையும்  குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177857

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஏராளன் said:

குறித்த வழக்கின்  அகழ்வு பணியினை திட்டமிட்டபடி   நடாத்த நிதி கிடைக்கபெறவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில்,

உண்மையை கண்டறியும் அமைப்பு,மாதம் ஒரு முறை மனித உரிமைக்காக அறிக்கை விடும் ஐ/நா சபை போன்ற‌வற்றிடமும் பணம் இல்லையா..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன கொக்குத்தொடுவாய் உக்ரைனில் இருக்காமல்.. போய்விட்டது. இருந்திருந்தால்.. பிபிசி.. சி என் என்.. என்று பிளாஸ் நியூஸ் எகிறி இருக்கும். 

இதில் இருந்து விளங்கனும்.. நாம் எப்படிப்பட்ட மனித டிசைன்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை. 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.