Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவீடனில் நேற்று குர் ஆன் எரித்து ஆர்ப்பாட்டம்; ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்தவரின் செயற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: SETHU

29 JUN, 2023 | 01:31 PM
image
 
சுவீடனில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது, புனித குர் ஆன் நூல் எரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஸ்டொக்ஹோமிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரால் புனித குர் ஆன் தீக்கிரையாக்கப்பட்டது.

சல்வான் மோமிக்கா எனும் 37 வயதான நபரே இவ்வாறு  குர் ஆன் நூலின் சில பக்கங்களை எரித்தார். இவர் சில வருடங்களுக்கு முன்னர் ஈராக்கிலிருந்து சுவீடனுக்கு வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சல்வான் மோமிக்கா அனுமதி கோரியிருந்தார். சுவீடன் பொலிஸார் அதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.

எனினும் ஓர் இனக்குழுமத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்தமை தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதிக வெப்பம் காரணமாக, தீமூட்டுவதற்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டடுள்ள தடையை மீறியமை தொடர்பிலும் அவர் விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குர் ஆன் எரிப்பு ஆர்ப்பாட்டம் உட்பட இரு ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கும் பொலிஸாரின் தீர்மானத்தை சுவீடன் மேன் முறையீட்டு நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன் நிராகரித்திருந்தது. 

மேற்படி சம்பவத்துக்கு துருக்கி, ஈராக் உட்பட பல நாடுகள்  கண்டனம் தெரிவித்துள்ளன. 

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு துருக்கி அங்கீகாரம் வழங்க மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் சுவீடனில்  குர் ஆன் எரிக்கப்பட்ட சம்பவமும் துருக்கியின் எதிர்ப்புக்கு காரணமாகும்.

https://www.virakesari.lk/article/158833

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு துருக்கி அங்கீகாரம் வழங்க மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் சுவீடனில்  குர் ஆன் எரிக்கப்பட்ட சம்பவமும் துருக்கியின் எதிர்ப்புக்கு காரணமாகும்.

இந்த துருக்கி ஏன் இப்போது மட்டும் இஸ்லாம் சம்பந்தமாக துள்ளுகின்றது.
நேட்டோ எனும் போர்வையில் மேற்குலகம் ஈராக்,லிபியா,சிரியா போன்ற நாடுகளில் அப்பாவி மக்களை கொன்று ஒழிக்க துணை போன நாடுதானே இந்த கேடுகெட்ட துருக்கி.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இந்த துருக்கி ஏன் இப்போது மட்டும் இஸ்லாம் சம்பந்தமாக துள்ளுகின்றது.
நேட்டோ எனும் போர்வையில் மேற்குலகம் ஈராக்,லிபியா,சிரியா போன்ற நாடுகளில் அப்பாவி மக்களை கொன்று ஒழிக்க துணை போன நாடுதானே இந்த கேடுகெட்ட துருக்கி.

குர் ஆனை எரிப்பதிலும், கேலிச் சித்திரம் வரைந்து….
துருக்கி போன்ற நாடுகளை, நுனிக் கதிரையில் குந்தி இருக்க செய்வதில்…
ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற நாடுகளை அடிக்க ஆளில்லை. 😁

அமெரிக்கன் எல்லாம்… ஜுஜூபி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் இப்ப கருத்துக்கு பதிலாக வைகோ மாரி அரசியல் ஆவேசப்பேச்சுகள்தான் அதிகம் பதிவாகிறன…🤣

நான் துருக்கியை பார்த்து கேட்கிறேன்…ஏ துருக்கியே….

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடனின் நேட்டோ கனவு  தகர்க்கப்பட்டு விட்டதா?
இல்லை யப்பானை போல் நேட்டோவின் விருந்தாளியா?

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடனை எப்படி நேட்டோவிற்குள் எடுப்பது என்பதைப் பற்றி பிளான் பி முதல் Z வரை இப்பவே போட்டிருப்பார்கள்.

ஒரு வரலாற்றுத் துணுக்கு: இரண்டாம் உலகப் போர் முடிந்த கையோடு சோவியத் ஒன்றியம் ஆட்டையைப் போட முயன்ற நாடுகளில் துருக்கியும், வடக்கு ஈரானும் அடங்கியிருந்தன. துருக்கியிடம் "பொஸ்போரஸ் நீரிணையை சோவியத்திடம் ஒப்படையுங்கள்!" என்று ஸ்ராலின் மெமோ அனுப்பிய போது தான் அமெரிக்கா, மேற்கு நோக்கி துருக்கி சாய ஆரம்பித்தது. பின்னர் நேட்டோவிலும் சேர்ந்து கொண்டது.

இப்போது இந்த பொஸ்பரஸ் நீரிணை சட்ட ரீதியாக துருக்கியின் கட்டுப் பாட்டில் இருக்கிறது.

 #வரலாற்றில் ஓர் ஏடு😎

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, nunavilan said:

இல்லை யப்பானை போல் நேட்டோவின் விருந்தாளியா?

 North Atlantic Treaty Organization = NATO

27 minutes ago, Justin said:

சுவீடனை எப்படி நேட்டோவிற்குள் எடுப்பது என்பதைப் பற்றி பிளான் பி முதல் Z வரை இப்பவே போட்டிருப்பார்கள்.

ஒரு வரலாற்றுத் துணுக்கு: இரண்டாம் உலகப் போர் முடிந்த கையோடு சோவியத் ஒன்றியம் ஆட்டையைப் போட முயன்ற நாடுகளில் துருக்கியும், வடக்கு ஈரானும் அடங்கியிருந்தன. துருக்கியிடம் "பொஸ்போரஸ் நீரிணையை சோவியத்திடம் ஒப்படையுங்கள்!" என்று ஸ்ராலின் மெமோ அனுப்பிய போது தான் அமெரிக்கா, மேற்கு நோக்கி துருக்கி சாய ஆரம்பித்தது. பின்னர் நேட்டோவிலும் சேர்ந்து கொண்டது.

இப்போது இந்த பொஸ்பரஸ் நீரிணை சட்ட ரீதியாக துருக்கியின் கட்டுப் பாட்டில் இருக்கிறது.

 #வரலாற்றில் ஓர் ஏடு😎

ஐரோப்பவில் சிறியதும், பெரியதுமான தேசிய இன வழி நாடுகள் (nation states) எல்லாம் - துருக்கி போன்ற இஸ்லாமிய நாடு கூட ஏன் அருகில் இருக்கும் ரஸ்யாவை விட்டு, ஏழு கடல், ஏழு மலை தாண்டி உள்ள அமெரிக்க இளவரசனில் காதல் கொள்கிறன என்பதை விளக்கி நிற்கும் இன்னொரு உதாரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, யூகே உட்பட பெரும்பாலான நாடுகள் விரும்பியும் நேட்டோவில் சுபீடனை சேர்க்க முடியவில்லை.

ஒரே ஒரு நாடு - துருக்கி எதிர்ப்பதால்.

ஆனால் ரஸ்யா கசகஸ்தான், ஜோர்ஜியாவை செவிழில் போட்டு வழிக்கு கொண்டு வருவதை போல், அமெரிக்கா துருக்கியை நெருக்கவில்லை.

இத்தனைக்கும் துருக்கி அதிபருக்கும் அமெரிக்காவும் வெளிப்படையாகவே முறுகல்.

அமெரிக்காவின் கூட்டாளியாய் இருப்பதற்கும், ரஸ்யாவின் கூட்டாளியாய் இருப்பதற்குமான வேறுபாடு இதுதான்.

இதனால்தான் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் உள்ளூர் தாதா ரஸ்யாவை விட்டு உலக தாதா அமெரிக்காவை நாடுகிறன.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆகக் குறைந்த சமநிலை என்பது பேசலாம் வாங்க என்பது. 

அது கூட அற்ற ஒருவர் அல்லது நாட்டுடன்......???

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

 North Atlantic Treaty Organization = NATO

ஐரோப்பவில் சிறியதும், பெரியதுமான தேசிய இன வழி நாடுகள் (nation states) எல்லாம் - துருக்கி போன்ற இஸ்லாமிய நாடு கூட ஏன் அருகில் இருக்கும் ரஸ்யாவை விட்டு, ஏழு கடல், ஏழு மலை தாண்டி உள்ள அமெரிக்க இளவரசனில் காதல் கொள்கிறன என்பதை விளக்கி நிற்கும் இன்னொரு உதாரணம். 

விருந்தாளியா?

நேட்டோவின்  ஒன்று கூடல்களில் யப்பானும் கலந்து கொள்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

விருந்தாளியா?

நேட்டோவின்  ஒன்று கூடல்களில் யப்பானும் கலந்து கொள்கிறது.

ஓம்…ஏன் என்றால் ஜப்பானின் அமைவிடம் காரணமாக அது உறுப்பினராக முடியாது.

ஆனால் சுவீடனுக்கு இந்த பிரச்சனை இல்லை. 

ஆகவே சுவீடன், ஜப்பான் போல விருந்தாளியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. துருக்கியை சமாதானப்படுதினால் போதும்.

ஆனால் சுவீடனுக்கு, கலினின்கிராட் எனும் சின்ன ரஸ்ய குறுநிலத்துடனான (enclave) 15 கிமி எல்லையை தவிர ரஸ்யாவுடன் வேறு நில எல்லை இல்லை - ரஸ்யா படை எடுத்து வருவதாகின் நேட்டோ நாடுகளை தாண்டித்தான் வர வேண்டும்.

இப்ப ரஸ்யா கிடக்கிற கிடைக்கு, நடக்கிற காரியமா இது 🤣.

ஆகவே சுவீடனும், ஏனைய நாடுகளும் are happy to play the long game with Turkey.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

என்னது  நேட்டோ வெண்டிட்டாங்களா?🙃

பிரான்ஸ் பிறிக்ஸில் இணைய கேட்டு மறுத்தது தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

என்னது  நேட்டோ வெண்டிட்டாங்களா?🙃

பிரான்ஸ் பிறிக்ஸில் இணைய கேட்டு மறுத்தது தெரியுமோ?

BRICS இல் பிரான்ஸ் இணையக் கேட்டதும் மறுத்ததும் எனக்குத் தெரியாது, இங்கே பலருக்கும் தெரிந்திருக்காது (செய்தி போலி என்பதால்!😂).

ஆனால், தென்னாபிரிக்காவில் நடக்கவிருக்கும் BRICS உச்சி மாநாட்டில் பங்கு பற்ற மாக்ரோன் கேட்டார், ரஷ்யா அனுமதி மறுத்திருக்கிறது. நாடுகளின் தலைவர்கள்/பிரதிநிதிகள் தாங்கள் உறுப்பினரல்லாத அமைப்புகளின் மாநாடுகளில் பங்கு கொள்வது வழமை. அமெரிக்கா, ஏசியான் மாநாடுகளில் பங்கு கொள்வதுண்டு, ஆனால் உறுப்பினராக அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

சுவீடனை எப்படி நேட்டோவிற்குள் எடுப்பது என்பதைப் பற்றி பிளான் பி முதல் Z வரை இப்பவே போட்டிருப்பார்கள்.

என்ன  பிளான் பி முதல் Z   ? 
F 16 ஐ துருக்கிக்கு கொடுப்பதா??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

என்னது  நேட்டோ வெண்டிட்டாங்களா?🙃

நேட்டோ கோதாவிலேயே இறங்கவில்லை எப்படி வெல்ல முடியும்.

ரஸ்யா ஒரு ஆம்பிளை எண்டால் சுண்டங்காய் லத்வியாவில் கை வச்சு பார்க்கட்டும் 🤣.

நான் ரஸ்யா கிடக்கிற கிடை என சொன்னது - பிரிகோசினின் 4000 கூலிகளையே தடுக்க முடியாமல் ரோட்டில பள்ளம் கிண்டி குப்பை லொரிய விட்ட ஒத்த-டாங்கி-ரஸ்யா, நேட்டோ நாடுகளை தாண்டி சுவீடனை தொடத்தானும் முடியுமா? என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nunavilan said:

என்ன  பிளான் பி முதல் Z   ? 
F 16 ஐ துருக்கிக்கு கொடுப்பதா??

உக்ரேனுக்கே விரைவில் F 16, ACTMS missiles (300 கிமி ரேஞ்ச்) கொடுக்கப்போறார்களாம் -  நீண்ட நாள் கூட்டு துருக்கி - பாவப்பட்ட சுவீடன் உள்ள வர அதுதான் விலை எண்டால் கொடுக்கலாம்.

பிறகு அதன் உதிரிபாகம், சேர்வீஸ் எண்டு நல்ல காசும் பார்க்கலாம்.

#அமெரிக்க அணுகுமுறை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

நேட்டோ கோதாவிலேயே இறங்கவில்லை எப்படி வெல்ல முடியும்.

அமெரிக்கா,ஜேர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரேனுக்கு ஆயுத உதவி,ஆள் உதவி,பண உதவி,தொழில்நுட்ப உதவி குடுக்கிறதுக்கும் நேட்டோ கோதாரியிலை இறங்கிறதுக்கும் என்ன வித்தியாசம் சார்?  :upside_down_face: :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நேட்டோ கோதாவிலேயே இறங்கவில்லை எப்படி வெல்ல முடியும்.

8 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்கா,ஜேர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரேனுக்கு ஆயுத உதவி,ஆள் உதவி,பண உதவி,தொழில்நுட்ப உதவி குடுக்கிறதுக்கும் நேட்டோ கோதாரியிலை இறங்கிறதுக்கும் என்ன வித்தியாசம் சார்?  :upside_down_face: :beaming_face_with_smiling_eyes:

பூவை…. பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம். 😂
கோசான் சேக்கு, குமாரசாமி அண்ணை சொன்ன மாதிரியும் சொல்ல்லலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்கா,ஜேர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரேனுக்கு ஆயுத உதவி,ஆள் உதவி,பண உதவி,தொழில்நுட்ப உதவி குடுக்கிறதுக்கும் நேட்டோ கோதாரியிலை இறங்கிறதுக்கும் என்ன வித்தியாசம் சார்?  :upside_down_face: :beaming_face_with_smiling_eyes:

நோஞ்சான் கோஷான் பாக்ஸ்ஸிங் மேட்சில் கு சா அண்ணையுடன் சண்டை பிடிக்கிறார்.

கோஷானுக்கு முகமட் அலியின் கிளவுசை கொடுப்பதற்கும்,

கோசானுக்கு பதிலாக முகமட் அலியியே பாக்ஸிங் ரிங்கில் இறங்கி கு சா அண்ணையை போட்டு கும்முவதற்கும் வித்தியாசம் இருக்கெல்லோ🤣

1 hour ago, தமிழ் சிறி said:

பூவை…. பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம். 😂
கோசான் சேக்கு, குமாரசாமி அண்ணை சொன்ன மாதிரியும் சொல்ல்லலாம். 🤣

2 hours ago, goshan_che said:

நோஞ்சான் கோஷான் பாக்ஸ்ஸிங் மேட்சில் கு சா அண்ணையுடன் சண்டை பிடிக்கிறார்.

கோஷானுக்கு முகமட் அலியின் கிளவுசை கொடுப்பதற்கும்,

கோசானுக்கு பதிலாக முகமட் அலியியே பாக்ஸிங் ரிங்கில் இறங்கி கு சா அண்ணையை போட்டு கும்முவதற்கும் வித்தியாசம் இருக்கெல்லோ🤣

ஒரு உலக அரசியல் அறிவாளியின் பதிலா இது ? நேட்டோவின் 5 ஆம் சரத்தைக் கூட அறியாமலா நேட்டோ பற்றி இவ்வளவு நாளும் எழுதுகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

ஒரு உலக அரசியல் அறிவாளியின் பதிலா இது ? நேட்டோவின் 5 ஆம் சரத்தைக் கூட அறியாமலா நேட்டோ பற்றி இவ்வளவு நாளும் எழுதுகிறீர்கள் ?

5ம் சரத்தை பாவிக்காமல் கூட நேட்டோ நாடுகள் கூட்டிணைந்து ஆயுத நடவைக்கையில் ஈடு படலாம். உதாரணம் சேர்பியா மீதான கொசோவா விடுதலை கால விமானக் குண்டுவீச்சு தாக்குதல்.

ஆகவே ஒரு நேட்டோ நாட்டின் மீது தாக்குதல் நடத்திய பின், சரத்து 5க்கு அமைய கூட்டு தற்காப்பு நோக்கில் மட்டும்தான் நேட்டோ களத்தில் இறங்கும் என்பதில்லை.

அடுத்து, சரத்து 5க்கு அமைய கூட, நேட்டோ நாடு ஒன்றின் மீது ஆயுதம் கொண்டு எதிரி நாடு தாக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. எதிர் நோக்கிய தற்காப்பு (உதாரணம் pre emotive nuclear attack) அல்லது திட்டமிட்டு 3ம் நாடு ஒன்றில் தாக்கி, அதன் தீய விளைவை நேட்டோ நோக்கி திருப்பினாலும் தாக்கலாம்.

உதாரணமாக - உக்ரேன் அணு உலை ஒன்றில் கசிவை திட்டமிட்டு ஏற்படுத்தி, அல்லது பெலரூசில் வைத்து வாக்னர் மூலம் - நேட்டோ நாடு ஒன்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுத்தால் - அது சரத்து 5 ஐ நடைமுறை செய்ய போதுமானது.

இதன் அர்த்தம் நேட்டோ இறங்கும் என்பதல்ல - இறங்கவே முடியாது என்பதும் அல்ல.

ஆனால் நேட்டோ இறங்கி மட்டுப்பட்ட அளவில் உக்ரேனில், ரஸ்ய எல்லைக்கு போகாமல் நடவடிக்கை எடுத்தால், மரபு வழி போரில் ரஸ்யா ஒரு கிழமை கூட தாக்கு பிடிக்காது என்பதே கள யதார்த்தம்.

ஆனால் அணு யுத்தம் அப்படி அல்ல. ஆகவேதான் நேட்டோவும், ரஸ்யாவும் நேரடி மோதலை தவிர்க்கிறன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.