Jump to content

யூடியூப்பில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க! "மொத்தமா தூக்கிடுவாங்க!" பெரிய முடிவை எடுக்கும் யூடியூப்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யூடியூப்பில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க! "மொத்தமா தூக்கிடுவாங்க!" பெரிய முடிவை எடுக்கும் யூடியூப்

yt_1200.png

வாஷிங்டன்: யூடியூப் அதன் தளத்தில் விளம்பரத்தில் விளம்பரத்தைத் தடுக்கும் வகையில் ad blockingஐ பயன்படுத்துவோரைத் தடுக்க முக்கிய அதிரடி நடவடிக்கையை எடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் மிகப் பெரிய வீடியோ ஷேரிங் நிறுவனமாக இருக்கும் யூடியூப் தளத்தில் இரண்டு வகை இருக்கிறது. இலவசமாக யூடியூப்பை பயன்படுத்த வேண்டும் என்றால் அனைவரும் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும்.

இப்போது வீடியோவின் தொடக்கத்தில் சில விளம்பரங்களும் இடையில் சில விளம்பரங்களும் வருகிறது. யூடியூப் தளத்தில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டே செல்கிறது.

ஒரு வீடியோவை பார்க்கக் குறைந்தது 4, 5 விளம்பரங்களை இப்போது பார்க்க வேண்டி இருக்கிறது. உங்களுக்கு விளம்பரங்களைப் பார்க்க வேண்டாம் என்றால் அதற்கு நீங்கள் பிரீமியம் சந்தா செலுத்த வேண்டும். இதற்குத் தனியாக மாதம் 130 ரூபாயைச் செலுத்த வேண்டும். இருப்பினும், சிலர் முறைகேடாக வீடியோ செலுத்தாமல் பார்க்க ad blocking சாப்ட்வேர்களை பயன்படுத்துகிறார்கள்.

யூடியூப் விளம்பரங்களைத் தடுக்கவே தனியாகச் செயலிகளும் லேப்டாப்பில் எக்ஸ்டென்ஷன்களும் இருக்கவே செய்கிறது. இவை ஊறரிந்த ரகசியம் போலவே இருந்து வந்துள்ளது. இதற்கிடையே ஒரு வழியாக இப்போது இதுபோல முறைகேடுகளைச் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக யூடியூப் தளம் அறிவித்துள்ளது.

இது எதோ வெறும் எச்சரிக்கை செய்யும் செயல் மட்டும் இல்லை. யூடியூப்பை பயன்படுத்தும் ஒருவர் ad blocking சாப்ட்வேர்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மெசேஞ் வரும். அதாவது உங்களுக்கு, "நீங்கள் ad blockerஐ பயன்படுத்துகிறீர்கள்.. இதை ரிமூவ் செய்யவில்லை என்றால் வீடியோ பிளே ஆகாது" என மெசேஞ் வரும். இப்போதே நீங்கள் ad blockerஐ உடனடியாக தூக்கிவிட வேண்டும்.

இல்லையென்றால் மூன்று வீடியோக்கள் வரை பார்ப்பார்கள். அதன் பின்னரும் ad blocker இருப்பது உறுதியானால், உங்களை யூடியூப் தளத்தில் இருந்தே பிளாக் செய்துவிடுவார்கள். அதன் பிறகு யூடியூபில் வீடியோவை பார்க்கவே முடியாது எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இது நிரந்தர தடையாக இருக்குமா அல்லது ad blockerஐ தூக்கியவுடன் மீண்டும் பார்க்கும் வகையில் இருக்குமா என்பது குறித்துத் தெளிவாகத் தகவல்கள் இல்லை.

அதேநேரம் இப்போது வரை இதை யூடியூப் டெஸ்ட் செய்து வருவதாகவே தெரிகிறது. இதை இன்னும் முழுமையாக அமல்படுத்தவில்லை. நெட்டிசன்கள் பலரும் தாங்கள் ad blockerஐ பயன்படுத்துவதாகவும் இருப்பினும் தங்களது கணக்குகள் எதுவும் பிளாக் ஆகவில்லை என்றே கூறி வருகின்றனர். மேலும், எந்த மாதிரியான ad blockerகள் பிளாக் செய்யப்படும் என்பது பற்றிய தகவல்களும் துல்லியமாக இல்லை.

யூடியூப் நிறுவனத்திற்கு அதன் முக்கிய வருவாயாக விளம்பரங்கள் தான் இருக்கிறது. கொஞ்ச காலத்திற்கு முன்பு அவர்களும் ஓடிடி போல மாற சந்தா முறையைக் கொண்டு வரப் பார்த்தார்கள். இருப்பினும், யாருமே அதில் ஆர்வம் காட்டவில்லை. பல ஆண்டுகளாக யூடியூப் தளத்தை இலவசமாகப் பார்த்துப் பழகிய மக்கள் இப்போது அதற்குச் சந்தா செலுத்த மறுக்கிறார்கள்.

இதன் காரணமாகவே மீண்டும் யூடியூப் இப்போது மீண்டும் விளம்பரங்களை முன்னிறுத்த ஆரம்பித்துள்ளது. வீடியோவுக்கு முன்பு இப்போது 2 விளம்பரங்கள் வரும் நிலையில், 4 விளம்பரங்களைக் கொண்டு வருவது குறித்தெல்லாம் டெஸ்டிங் நடந்தது. இந்தச் சூழலில் தான் விளம்பரங்களில் இருந்து தப்பிக்கும் சாப்ட்வேரை கிடுக்கு பிடியாகத் தடுக்கும் நடவடிக்கையில் யூடியூப் இறங்கியுள்ளது.

https://tamil.oneindia.com/news/washington/what-is-the-youtube-plan-of-three-strikes-policy-for-stopping-ad-blocking-software-519115.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு  நன்றி புரட்சியர் :thumbs_up:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

தகவலுக்கு  நன்றி புரட்சியர் :thumbs_up:

என்ன இண்டைக்கு, வேளைக்கு எழும்பீட்டியள். 😂

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாங்கள்… விளம்பரத்தையும், ரசித்து பார்ப்போம்.
ஆனால் அந்த சாமானை மட்டும் வாங்க மாட்டோம். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

என்ன இண்டைக்கு, வேளைக்கு எழும்பீட்டியள். 😂

கட்டிலாலை உருண்டு விழுந்து போனன்.....அதுக்குப்பிறகு நித்திரை வரேல்லை.அதுதான் இஞ்சை வந்து ஆருக்கும் அலுப்பு குடுப்பம் எண்டுட்டு....... :rolling_on_the_floor_laughing:

கந்தையர் நிக்கிறாரே???? :face_with_tears_of_joy:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கட்டிலாலை உருண்டு விழுந்து போனன்.....அதுக்குப்பிறகு நித்திரை வரேல்லை.அதுதான் இஞ்சை வந்து ஆருக்கும் அலுப்பு குடுப்பம் எண்டுட்டு....... :rolling_on_the_floor_laughing:

கந்தையர் நிக்கிறாரே???? :face_with_tears_of_joy:

@Kandiah57 அண்ணை நிற்கிறார். 😁
அவர் சனிக்கிழமை கடைக்கு… சாமான் வாங்கப் போற நேரம். 😂
டக்கெண்டு தூண்டிலை போட்டு இழுத்து வைத்து, அலுப்பை குடுத்து அனுப்பி விடுங்கோ. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

@Kandiah57 அண்ணை நிற்கிறார். 😁
அவர் சனிக்கிழமை கடைக்கு… சாமான் வாங்கப் போற நேரம். 😂
டக்கெண்டு தூண்டிலை போட்டு இழுத்து வைத்து, அலுப்பை குடுத்து அனுப்பி விடுங்கோ. 🤣

எதுக்கும் ரெலிபோன் அடிச்சு ஆளை இஞ்சாலை இழுப்பம்...:face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

கட்டிலாலை உருண்டு விழுந்து போனன்.....அதுக்குப்பிறகு நித்திரை வரேல்லை.அதுதான் இஞ்சை வந்து ஆருக்கும் அலுப்பு குடுப்பம் எண்டுட்டு....... :rolling_on_the_floor_laughing:

கந்தையர் நிக்கிறாரே???? :face_with_tears_of_joy:

 ஓம்  நிற்கிறேன்     ....உடம்பில் நோ  காயங்கள் ஒன்றுமில்லையா ?.  இனிமேல்  கவனமாக இருங்கள்     நிலத்தில் ஓலை பாய்யில்.  படுத்தால்.   உறுண் டு.  விழுவதை தவிர்க்க முடியும்    🤣   இனிய சனிக்கிழமை காலை வணக்கம்  🙏

14 minutes ago, தமிழ் சிறி said:

@Kandiah57 அண்ணை நிற்கிறார். 😁
அவர் சனிக்கிழமை கடைக்கு… சாமான் வாங்கப் போற நேரம். 😂
டக்கெண்டு தூண்டிலை போட்டு இழுத்து வைத்து, அலுப்பை குடுத்து அனுப்பி விடுங்கோ. 🤣

கடைக்கு வெளிக்கிடுகுறேன்.     நாங்கள் இருவரும்   உலக நடப்புகள்   பற்றி உரையாடுங்கள்    பின்னேரம்.  வருவேன்”   😂.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கந்தையர் எப்ப பார்த்தாலும் அடிக்கடி கடைக்கு போகிறார்.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

என்ன கந்தையர் எப்ப பார்த்தாலும் அடிக்கடி கடைக்கு போகிறார்.......!  😂

திங்கள் - சுடச் சுட பாண்,
செவ்வாய் - ஜேர்மன் மரக்கறி,
புதன் - விஸ்கி போத்தில், பியர் கேஸ்,
வியாழன் - மீன்,
வெள்ளி - தமிழ்க்கடை மரக்கறி,
சனி - பங்கு ஆட்டிறைச்சி… எல்லாம்  வாங்கி, பதமாக சாப்பிட வேணும் என்றால்,
அடிக்கடி கடைக்குப் போகத்தான் வேணும்.
அதுகும்… பென்சன்காரன் என்றால், வீட்டில்… இருக்க விடாமல் திரத்தி விட்டு விடுவினம். 😂🤣
 @Kandiah57 🖐

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.