Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேரர்களின் நடத்தை இந்நாடு மதசார்பற்ற நாடாக வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது - மனோ கணேசன் எம்பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

08 JUL, 2023 | 12:56 PM
image
 
பாலியல் சம்பவங்களில் ஜப்பானில் அகப்பட்ட மாகல் கந்தே சுதந்த தேரர் மற்றும் இலங்கையில் அகப்பட்ட பல்லேகம சுமன தேரர், மட்டக்களப்பில் பொலிஸாரை தாக்கிய அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகிய மூவரும் அரசியல் தேரர்கள். இந்த சம்பவங்களை செய்த சமீபகால தேரர்களின் நடத்தை, இந்நாடு மதசார்பற்ற நாடாக வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

இந்த  அரசியல் தேரர்கள், சமகாலத்தில் இந்நாட்டில் அரசியல் சீர்திருத்தம் நடைபெறுவதை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதை, எப்போதும் எதிர்க்கும் அணியில்  இருந்துள்ளனர். இனவாதத்தை கிளப்பும் அணியில் இருந்துள்ளனர். அதனாலேயே விசேட சலுகை அதிகாரம் பெற்று எவற்றையும் செய்து தப்பலாம் என்றும், குறிப்பாக தமிழ், முஸ்லிம் மற்றும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக எல்லையற்ற அதிகாரத்தை கொண்டு இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் அகப்பட்ட சுமன தேரர் சம்பவத்தில் தொடர்புற்ற அந்த பெண்களை படமெடுத்து, தாக்கியமை குற்றமாகும். பாலியல் சுதந்திரம் என்பது பலாத்காரம் இல்லாத சுயவிருப்ப தனிப்பட்ட விவகாரம். ஆகவே பெண்கள் மீதான தாக்குதல் பிழையானதாகும். அதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால், இதை முன்னிலை படுத்தி  இந்த தேரர் தப்பி விடக்கூடாது. இலங்கையில் இருப்பது தேரவாத பெளத்தம். உலகில் தேரவாத பெளத்தத்தின் தலைமையகம் இலங்கைதான். தேரவாத துறவிகளுக்கு, மதரீதியாக பாலியல் உறவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் மஹாயான பெளத்த துறவிகளுக்கு இத்தகைய தடை கிடையாது.

ஆகவே, இது இலங்கை பெளத்தத்துக்கு உள்ளே பெரும் சிந்தனை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையை, பெளத்த துறவிகளின் நடத்தை பற்றிய சீர்திருத்தங்களை, இலங்கையின் சிங்கள பெளத்த சகோதரர்களும், அவர்களது மத தலைவர்களும் பார்த்து கொள்ளட்டும். இதில் நாம் தலையிட தேவையில்லை.  

ஆனால், நாட்டின் தேசிய நடத்தை மற்றும் அரசியல் சமூக சீர்த்திருத்தம் பற்றிய விவகாரங்கள் எமது பிரச்சினையுமாகும். இதில் நமது அக்கறை இந்நாட்டின், அரசியல் மறுசீரமைப்பில் , "இது செய்யலாம்" "இதை செய்ய கூடாது" என இந்த தேரர்கள் இனியும்  கூற வரக்கூடாது, என்பதாகும்.

நான் எப்போதுமே, எந்த மதமும் அரசியலில் நேரடியாக தொடர்பு படக்கூடாது என கூறிவருகிறேன். இந்நாடு "மதசார்பற்ற" நாடாக வேண்டும் எனவும் ரொம்ப நாளாகவே கூறி வருகிறேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இந்நாட்டின் சிங்கள முற்போக்காளர்களுடன் இணைந்து அரசியலில் மத சார்பற்ற கொள்கையை நாம் முன்னெடுக்க வேண்டும். அமைதி காக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதில் கரங்கோர்க்க வேண்டும். மதசார்பின்மை என்பதற்குள்ளே இந்நாட்டில் புரையோடி போயுள்ள பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள்  ஒளிந்திருக்கின்றன என நான் நம்புகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/159512

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

உண்மை தான்    முதல் உங்கள் நண்பன் ரணிலிருந்து தொடங்குவது நல்லது......😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தகுருமார்கள் குறித்த வீடியோக்கள் - குற்றச்சாட்டுகள் - மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரின் கருத்து என்ன?

Published By: RAJEEBAN

08 JUL, 2023 | 01:21 PM
image
 
பௌத்தகுருமார்களின் செயற்பாடுகள் குறித்து வெளியாகும்  வீடியோக்கள் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது கருத்தினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது

கடந்தகாலங்களில் பௌத்தமதகுருமார்கள் பொதுமக்களிற்கு எதிராக அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக  ஏன் பொலிஸாருக்கு  வன்முறைகளில் ஈடுபட்ட சம்பவங்கள் வீடியோக்களில் பதிவாகியுள்ளன, அவர்களிற்கு எதிராக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளும் வெளியாகியுள்ளன.

ஆனால் இது குறித்து சிறிதளவு சீற்றமும் வெளியாகவில்லை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இது பௌத்தகுருமாருக்கு ஒரு விடுபாட்டுரிமை குறித்த நம்பிக்கையை வழங்கியுள்ளது.

வீடியோக்களில் காணப்படும் நடவடிக்கைகள் சிறுவர்களிற்கு எதிரானவையாக காணப்பட்டால்  விருப்பத்துடன் இடம்பெறாவிட்டால் அவை சட்டவிரோதமானவை.

அப்படியில்லாவிட்டால் - அது மதவழக்காறுகள் மரபுகளிற்கு முரணாணது- ஆனால் குற்றமில்லை.

இந்த சம்பவங்களை பொதுமக்கள் கையாளும் விதம் நாங்கள் விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சமூகமாக செயற்படவில்லை  வன்முறைகளே எங்கள் முதல் வெளிப்பாடுகள் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

இது சில நபர்களுக்கு எதிரான சில வகையான வன்முறைகள் நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ள சமூகம்.

தாங்கள் போதிப்பதற்கு எதிரான விதத்தில் மதகுருமார்கள் நடந்து கொள்ளும் பாசாங்குத்தனம் வேறு விடயம்.

மதம் அல்லது மததலைவர்களை தனியாக வைத்திருக்கவேண்டும், அவர்கள் அரசாங்கத்தின் கொள்கை அல்லது செயற்பாடுகள் மீது தாக்கம் செலுத்த அனுமதிக்ககூடாது.

https://www.virakesari.lk/article/159519

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4216.jpg

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புலவர் said:

புலவர் இது பழைய வீடியோ. 😎
புது வீடியோ  இரண்டு வந்திருக்காம்.
அதில் உள்ள பிக்கு, பொது ஜன பெரமுனவை சேர்ந்த முக்கிய புள்ளியாம்.
தாயும், மகளுடன்….  ஒரு அறையில் அம்மணமாக நின்ற போது, ஊர் மக்களால் பிடிபட்டு இருக்கின்றார்.
@Nathamuni இஞ்சை    ஒருக்கால், அந்த வீடியோவுடன்   வாங்கோ…. 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

புலவர் இது பழைய வீடியோ. 😎
புது வீடியோ  இரண்டு வந்திருக்காம்.
அதில் உள்ள பிக்கு பொது ஜன பெரமுனவை சேர்ந்த முக்கிய புள்ளியாம்.
@Nathamuni இஞ்சை    ஒருக்கால், அந்த வீடியோவுடன்   வாங்கோ…. 🤣

வீடியோ எடுத்தவரை தேடுகினமாம். வீடியோ பரப்பினாலும் கைது செய்யப்போறம் என்று பொலீஸார் அறிவிக்கினம் அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

வீடியோ எடுத்தவரை தேடுகினமாம். வீடியோ பரப்பினாலும் கைது செய்யப்போறம் என்று பொலீஸார் அறிவிக்கினம் அண்ணை!

நேற்று  அந்த வீடியோ…. உலகம் முழுக்க ஒரு ரவுண்டு சுத்தி வந்திட்டுது.😂
யாழ்.கள உறுப்பினர்கள் பலரும் பார்த்ததாக…  ஊர்க்கிழவி சொல்லுது. 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஹாரை அறையில் தேரருடன் காணப்பட்ட தாயையும் மகளையும் தாக்கிய எண்மருக்கு விளக்கமறியல்!

09 JUL, 2023 | 10:46 AM
image
 
நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் காணப்பட்டதாகக் கூறப்படும் யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதிவான் ஹேமந்த வெத்தசிங்க நேற்று சனிக்கிழமை (08) உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் 8 பேரையும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், முறைப்பாடு செய்தவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய தமது தரப்பு விரும்புவதாக நீதிவானிடம் கேட்டனர்.

குறித்த முறைப்பாடுகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்தில் வீடு ஒன்றின் அறையில்  பௌத்த தேரருடன்  இளம் பெண்ணும் தாயும் இருந்தபோது பலவந்தமாக அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்கள், தாய், மகள் இருவரையும் தாக்கிய குற்றச்சாட்டில்  நவகமுவ பொலிஸார் கைது செய்திருந்தனர்.

https://www.virakesari.lk/article/159558

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

தேரருக்கு ஒரு தண்டனையும் இல்லையா….?
குருக்கள்…. “குசு” விட்டால்….. 
இது தான்…. சொறி லங்கா. 😎

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காணொளியை பகிர்பவர்களையும் அதற்கு கருத்து வெளியிடும் தமிழரை  தமிழ் பௌத்த பிக்கு ஒருவர் கண்டித்திருக்கிறார். பல வெளிவேச மத தலைவர்களின் போலி வேஷம் அவ்வப்போது வெளிவருகுது. ஒரு மனித தர்மம் நாகரிகம் தெரியாத ஒருவரை பிக்குவாக ஏற்றுக்கொண்டது யார் தப்பு? அவர் செய்த தவறுகளை கண்டும் காணாமல் விட்டது யார் தவறு? மத கட்டுப்பாடுகளை செயற்பாடுகளை சரியான விதத்தில் நடைபெறுகிறதா என ஆராயாமல் பெண்களை தனிப்பட்ட பிக்குவின் அறைவரை செல்ல அனுமதித்தது யார் தவறு? அதை காணொளி எடுத்து வெளியிட்டது யார் தவறு? இவ்வளவு தவறும் அவர்கள் பக்கம் இருக்க, இவர் கோபம் தமிழர் மேல் திரும்ப காரணம் என்ன? எங்கள் பெண்களை, ஆண் போராளிகளை நிர்வாணமாக்கி அருவருப்பான செயல்களை செய்து வெளியிடும்போது கருத்து தெரிவிக்காமல் கண்டிக்காமல் எங்கே போயிருந்தார் இவர்? எங்கள் மத குருக்கள் காணாமல் ஆக்கப்படும்போது, கொலை செய்யப்படும்போது கண்டிக்காமல் எங்கே போனார் இவர்? ஆக, தமிழர்மேல் கோபத்தை கக்கி, பிக்குவையும் பௌத்தத்தையும் போத்து மூட வந்துவிட்டார். போதனை எப்போதும் ஒரே மாதிரியாக எல்லோருக்கும் ஒத்ததாக இருந்திருந்தால் மதிப்பளிக்கலாம். அதை விட்டு சந்தர்பத்திற்கேற்ற மாதிரி குரல் கொடுத்தால் கேள்வியும் கேலியும் சந்தேகமுமே ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தேரருக்கு ஒரு தண்டனையும் இல்லையா….?
குருக்கள்…. “குசு” விட்டால்….. 
இது தான்…. சொறி லங்கா. 😎

பெண்களின் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியவர்கள் பிக்குவை தாக்கியதோடு நிறுத்திவிட்டார்கள் போலுள்ளது. அவர் சிகிச்சை முடிந்து விகாரைக்கு திரும்பிவிட்டார். சம்பந்தப்பட்ட விகாரை நிர்வாகம், அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தங்கள் விகாரையில் நடைபெறவில்லையென அறிவித்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒழுக்கம் இல்லாத பிக்குவை மீண்டும் சங்கத்தில் சேர்க்கிறார்கள் என்றால் பாத்துக்கொள்ளுங்களேன் பௌத்தத்தின் ஒழுங்கை! இவரால் அந்தப்பெண்கள் மானத்தை இழந்ததுதான் மிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

அதுகும்.. தாயையும், மகளையும் ஒரே அறையில் வைத்து, 
பாலியல் தொடர்பு வைத்திருந்த கபோதி பிக்கு. 
இவர்... மகிந்தவுக்கு, கையில் நூல் கட்டும் படங்களும், 
தமிழ்நாட்டில்... தொல். திருமாவளவனுடன் நிற்கும் படங்களும் உள்ளது.

இந்த 🐕‍🦺 பிக்கு, அரசியல் செல்வாக்கை வைத்து தப்பி விட்டான்.  

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of one or more people, temple and text

May be pop art

May be an image of one or more people, slow loris, phone and text that says '@real raffy'

காவிக்குள் ஒரு கயவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்த துறவிகளும் மனிதர்களே... :rolling_on_the_floor_laughing:

2 hours ago, தமிழ் சிறி said:

இந்த 🐕‍🦺 பிக்கு, அரசியல் செல்வாக்கை வைத்து தப்பி விட்டான்.  

அரசியலால் ஆசீர்வதிக்கப்பட்ட துறவி :beaming_face_with_smiling_eyes:

Bild

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குகிழக்கு எங்கும் கட்டப்படும் விகாரைகள் இந்த பிக்குகளின் காம களியாட்ட  விடுதிகளாக மாறப் போகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புலவர் said:

வடக்குகிழக்கு எங்கும் கட்டப்படும் விகாரைகள் இந்த பிக்குகளின் காம களியாட்ட  விடுதிகளாக மாறப் போகின்றன.

Image

இந்தப் பிக்கு தமிழ்நாட்டுக்குப் போய்... அங்கும் திருமாவளவனுடன் சேர்ந்து 
விகாரை கட்ட அடிக்கல் பதித்திருக்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

spacer.png

நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேரர்  ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேரர்  ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின்  ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.

உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். R
 
https://www.tamilmirror.lk

  • கருத்துக்கள உறவுகள்

Image

விடாது துரத்தும்... பிக்குகளின், காம சேட்டைகள். 
16, 18 வயதான சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்.... 
ரிதிகம பகுதியில் பிக்கு ஒருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பௌத்த பிக்குகளின், காம லீலைகளைப் பரப்ப... 
உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? தமிழ் பேசும் பிக்கு கதறல். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1.அமபிட்டிய சுமண தேரர் பொலிசாரை தாக்குகிறார்

2.பெண்களுடன் உல்லாசமாக இருந்த தேரர் பிடிபடடார்

3.அம்பிட்டிய சுமண தேரர் ஒரு கிறிஸ்தவ சிங்களவரை தாக்குகிறார்

4.ஐப்பானில் சிறுவனை ஓரினச்சேர்கை செய்த சிங்கள பிக்கு இவர்களால் தான் பௌத்தம் அவமானப்படுத்தபடுகிறது. ஐயா உங்கள் பணி தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

spacer.png

நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேரர்  ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேரர்  ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின்  ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.

உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். R
 
https://www.tamilmirror.lk

அப்ப பிக்குவும் அந்த 2 பெண்களிலும் தப்பில்லை .வீடியோ எடுத்த ஆட்களிலதான் தப்பு அப்படித்தானே!

On 8/7/2023 at 13:42, ஏராளன் said:

நான் எப்போதுமே, எந்த மதமும் அரசியலில் நேரடியாக தொடர்பு படக்கூடாது என கூறிவருகிறேன். இந்நாடு "மதசார்பற்ற" நாடாக வேண்டும் எனவும் ரொம்ப நாளாகவே கூறி வருகிறேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இந்நாட்டின் சிங்கள முற்போக்காளர்களுடன் இணைந்து அரசியலில் மத சார்பற்ற கொள்கையை நாம் முன்னெடுக்க வேண்டும். அமைதி காக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதில் கரங்கோர்க்க வேண்டும். மதசார்பின்மை என்பதற்குள்ளே இந்நாட்டில் புரையோடி போயுள்ள பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள்  ஒளிந்திருக்கின்றன என நான் நம்புகிறேன் என்றார்.

மனோ கணேசனின் கருத்துச் சரியானது. அரசியலில் மத ஆதிக்கமே இலங்கைப் பிரச்சனையில் மூல காரணி. பௌத்த மேலாதிக்கத்தை விமர்சிக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தத் தவற விடக்கூடாது. வேறு தமிழ் அரசியல்வாதிகள் வாய் திறந்தமாதிரித் தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

மனோ கணேசனின் கருத்துச் சரியானது. அரசியலில் மத ஆதிக்கமே இலங்கைப் பிரச்சனையில் மூல காரணி. பௌத்த மேலாதிக்கத்தை விமர்சிக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தத் தவற விடக்கூடாது. வேறு தமிழ் அரசியல்வாதிகள் வாய் திறந்தமாதிரித் தெரியவில்லை. 

இருந்தாலும் இலங்கையில் மத ஆதிக்கத்தை தவிர்ப்பது முடியாத காரியம். அவர்களுக்கு சிறு வயதிலேயே அதட்குரிய விஷம் ஊடடபடுகின்றது. மதராஸாக்களில் எப்படி முஸ்லிம்களை மூளை சலவை செய்கிறார்களோ அதேபோல இங்கும் நடக்கிறது. மற்றைய இனத்தவரை பற்றி அங்கு கீழ்த்தரமாக போதிக்கப்டுகின்றது.

எனக்கு தெரிந்த ஒரு தமிழ் பெண் சிங்கள பவுத்தரை மணம் முடித்திருக்கிறார். அவருடைய பிள்ளைகள் பவுத்த தஹம் (ஞாயிறு பாடசாலை) பாடசாலைக்கு செல்கிறார். அங்கு அவர்களது  போதனையின் நிமித்தம் தன்னை மதிப்பது இல்லை என்றும், தகப்பனை பற்றி அவர் பாவம் என்றும், கீழ்த்தரமான தமிழ் பெண்ணை மணம் முடித்திருப்பதாகவும் கூறுவார்களாம்.

எனவே காவி எதை கூறுகின்றதோ அதுதான் கடடளை. அரசன் முதல் ஆண்டி வரை காவிகளை வணங்கியே ஆக வேண்டும்.

இருந்தாலும் மனோ அவர்கள் சொல்ல வேண்டியதை சொல்லுகிறார். அது பாராட்டப்பட வேண்டியதே. 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'M MADAWALA wE பன்சலைகளில் நடக்கும் அசம்பாவிதங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக கடும் தண்டனை; புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன எச்சரிக்கை.'

ஆசியாவின் அதிசயம்....  ஸ்ரீலங்கா. 😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.