Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு – யாழ். ரயில் சேவைக்கான ஆசன முன்பதிவுகள் ஆரம்பம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
colombo-jaffna-train.jpg

அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.

இந்திய கடனுதவியின் கீழ் 62 கிலோமீட்டர் நீளமான இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைகளுக்கான ஆசன முன்பதிவுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/262744

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சனம் வரும் தானே ஊருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கோட்டையில் இருந்து தொடங்குகிறார்கள் கட்டுநாயக்காவில் இருந்து யாழ் என்றால் நிறை சனம் வருமே ?

கோட்டைக்கு போக வர  நேரம் போகுமே என்று  ஊருக்கு அடிகடி போகும் சீவனின் ஆதங்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

ஏன் கோட்டையில் இருந்து தொடங்குகிறார்கள் கட்டுநாயக்காவில் இருந்து யாழ் என்றால் நிறை சனம் வருமே ?

கோட்டைக்கு போக வர  நேரம் போகுமே என்று  ஊருக்கு அடிகடி போகும் சீவனின் ஆதங்கம் .

கோடடையில் இருந்து என்று போட்டிருந்தாலும்,  அநேகமான கடுகதி ரயில்கள் கல்கிசையில்  இருந்துதான் ஆரம்பமாகின்றது. வெள்ளவத்தையில் நிறைய பிரயாணிகள் ஏறுவதால் அந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் வரும் காலங்களில் நேராகவே பலாலியில் போய் இறங்கலாம். விரைவில் அந்த வசதியும் செய்யப்போகிறார்கள். கட்டுநாயக்கா போக வேண்டிய அவசியம் இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

A330 விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் பலாலி சர்வதேச விமான நிலைய ஓடுபாதை விஸ்தரிக்கப் போகின்றார்களாம், இந்தியாவின் கடன் உதவி பெற்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

ஏன் கோட்டையில் இருந்து தொடங்குகிறார்கள் கட்டுநாயக்காவில் இருந்து யாழ் என்றால் நிறை சனம் வருமே ?

கோட்டைக்கு போக வர  நேரம் போகுமே என்று  ஊருக்கு அடிகடி போகும் சீவனின் ஆதங்கம் .

railway-network-updated20141128.jpg

கட்டுநாயக்கா யாழுக்கு நேரடி புகையிரத சேவை இல்லை அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2023 at 11:09, பெருமாள் said:

ஏன் கோட்டையில் இருந்து தொடங்குகிறார்கள் கட்டுநாயக்காவில் இருந்து யாழ் என்றால் நிறை சனம் வருமே ?

கோட்டைக்கு போக வர  நேரம் போகுமே என்று  ஊருக்கு அடிகடி போகும் சீவனின் ஆதங்கம் .

என்ன பெருமாள் இதென்ன சரக்கு தொடரூந்தா?

அமெரிக்க கண்டங்களிலிருந்து 2 பெரிய பெட்டி 1 சின்ன பெட்டி கணனிக்கு முதுகில்.

யோசித்து பாருங்க.

On 12/7/2023 at 23:19, ஏராளன் said:

A330 விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் பலாலி சர்வதேச விமான நிலைய ஓடுபாதை விஸ்தரிக்கப் போகின்றார்களாம், இந்தியாவின் கடன் உதவி பெற்று.

பலாலிக்கு நேரடியாக விமான பதிவு போட்டால்த் தான் வெளிநாட்டவர் பதிவு செய்வர்.

இல்லாவிட்டால் ஒரு விமானம் தாமதமானால் கதை கந்தல்.

அது அவர்கள் பொறுப்பல்ல என்று புதிய பதிவுகள் செய்ய வேண்டியும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன பெருமாள் இதென்ன சரக்கு தொடரூந்தா?

அமெரிக்க கண்டங்களிலிருந்து 2 பெரிய பெட்டி 1 சின்ன பெட்டி கணனிக்கு முதுகில்.

யோசித்து பாருங்க.

lhrல் அநேக நாட்கள் வாய்பார்க்கும் தொழில்தான் கார்கோ கிளியரன்ஸ் கிடையாமல் மணித்தியால கணக்கில் இருக்கணும் அப்போது கவனித்ததில் நம்ம சனம் படித்த கூட்டம் என்று பெருமைபடுபவர்களின் அலட்டல் சொல்லி மாளாது பாரிய பொதிகளை கொண்டுவந்து விட்டு போர்டிங் கார்ட் எடுக்கபோகையில் பத்து கிலோ கூடி விட்டது என்று பணியாளர் சொல்ல அதைகேட்டு வந்த அனைவரும் ஏதோ நியாயம் கதைகிரம் என்று அந்த பணியாளருடன் ஆங்கிலத்தில் பிளந்து கட்ட கடைசியில் 27௦ பவுன் அழுது கட்டி முடிப்பார்கள் .

அங்கால அதே இடத்தில் 15கிலோ கூடி விட்டது என்று சொல்ல நம்ம சிங்காரம் தனது குழந்தை யை காட்டி மனைவியுடன் வாக்கு வாத பட பணியாளர் சைகை மொழியில் புரிந்துகொண்டு எந்த ஒரு மேலதிக பணமும் இன்றி அனுமதிக்கிறார் . விளங்கியவர்களுக்கு ............................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

எடுக்கபோகையில் பத்து கிலோ கூடி விட்டது என்று பணியாளர் சொல்ல அதைகேட்டு வந்த அனைவரும் ஏதோ நியாயம் கதைகிரம் என்று அந்த பணியாளருடன் ஆங்கிலத்தில் பிளந்து கட்ட கடைசியில் 27௦ பவுன் அழுது கட்டி முடிப்பார்கள் .

நான் எப்போதும் அளந்து அளவுடன் கொண்டுபோவேன்.எங்கு போனாலும் டியிற்றல் அளவு சாதனம் பெட்டியில் இருக்கும்.

நீங்கள் சொன்னதையும் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2023 at 20:36, ஏராளன் said:

இந்திய கடனுதவியின் கீழ் 62 கிலோமீட்டர் நீளமான இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது.

 ரயிலும் இந்தியாவின் கடன் திட்டத்தில் வழங்கப்பட்டதே. இரவல் புடைவையில் இது நல்ல கொய்யகமாம். யாழ்ப்பாணத்தானுக்காகவே கடன் பெற்றோம், அதை அவர்கள் இறுத்துவிடுவார்கள் அதில் பயணம் செய்து. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 ரயிலும் இந்தியாவின் கடன் திட்டத்தில் வழங்கப்பட்டதே. இரவல் புடைவையில் இது நல்ல கொய்யகமாம். யாழ்ப்பாணத்தானுக்காகவே கடன் பெற்றோம், அதை அவர்கள் இறுத்துவிடுவார்கள் அதில் பயணம் செய்து. 

வந்து இறங்கினால் போதும் அவர்களுக்கு பணம் கிடைக்கும் என்ற நப்பாசைதான்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஆரம்பிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவை மீண்டும் முடங்குகின்றது ?

நேற்று ஆரம்பிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவை மீண்டும் முடங்குகின்றது ?

மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான பாதையை புனரமைக்கும் பணியை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க அதிகாரிகள் தீர்மானித்தால், வடக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்தும் தடைபடலாம் .

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் புனரமைக்கப்பட்ட ரயில் பாதை கடந்த வியாழக்கிழமை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் ரயில் சேவைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதையின் புனரமைப்பு நடவடிக்கைகள் இந்திய நிதியுதவியுடன் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் புனரமைப்பு காரணமாக, வடக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் அனுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் அநுராதபுரத்திலிருந்து ஓமந்தைக்கும் இடையில் நேற்று வெள்ளோட்டத்திற்காக 100 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் வண்டி பயன்படுத்தப்பட்டது.

வடக்கு மார்க்க ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததன் மூலம் காங்கேசன்துறைக்கும் கொழும்புக்கும் இடையிலான பயண நேரம் சுமார் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் குறையும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1339561

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்டவாளங்கள் திருட்டு – விசாரணைகள் ஆரம்பம்

Anuradhapura-Omanthai-Railway-Line.jpg

புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் – ஓமந்தை ரயில் பாதையில் தண்டவாளங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் பாதை புனரமைப்பு பணிகளின் போது நீக்கப்பட்ட தண்டவாளங்களை நேற்றிரவு கொண்டு சென்ற நபர்கள், யாழ் ராணி ரயிலில் மோதியதையடுத்து இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்ததாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ரயில் தண்டவாளங்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட கேஸ் கட்டர்(Gas Cutter), ஒக்சிஜன் தாங்கி மற்றும் 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://thinakkural.lk/article/263409

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஏராளன் said:

நேற்றைய செய்தியில்… புதிதாக கட்டிய Golden Gate Kalyani பாலத்தின்  செப்பு கம்பிகள் ஆணிகள் என்று 28 கோடி ரூபாவுக்கு மேல் களவெடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்.
போதாக் முறைக்கு… கட்டுநாயக்கா - கொழும்பு பிரதான வீதியில் உள்ள மின்சார கேபிள்களை அறுத்துக் கொண்டு போயுள்ளார்கள்.
இன்று… ரயில்வே தண்டவாளத்தையே களவெடுக்கும் நிலைக்கு நாடு வந்துள்ளது.
முன்பெல்லாம்…. இப்படியான செய்திகளை கேள்விப் படுவதே இல்லை.
இன்று தினமும்… கொள்ளையடிப்பு செய்திகளையே கேட்கும் அளவிற்கு அரசியல்வாதிகள் கொண்டு வந்து விட்டுள்ளார்கள்.
இனி… ரயில் புரண்டு, எத்தினை சனம் சாகப் போகுதோ… ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அண்ணை பழைய தண்டவாளத்தை அவர்கள் திருட முதல் இவர்கள் திருடுகிறார்கள்.
ஆனால் நாடு போறபோக்கில் எதுவும் நடக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கங்கள் எவ்வழி குடிகள் அவ்வழி! நாட்டை கொள்ளை அடித்தவர்களை கைது செய்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக அரச செலவில் சொகுசு வாழ்க்கை, பதவி, பாதுகாப்பு, தனிச்சலுகை. மக்களுக்கு கொடுக்கும் செய்தியென்ன? ஆனால் மக்களின் வறுமைக்கு காரணமானவர்களால் திருடும் மக்களை மட்டும் தண்டிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2023 at 19:09, பெருமாள் said:

ஏன் கோட்டையில் இருந்து தொடங்குகிறார்கள் கட்டுநாயக்காவில் இருந்து யாழ் என்றால் நிறை சனம் வருமே ?

கோட்டைக்கு போக வர  நேரம் போகுமே என்று  ஊருக்கு அடிகடி போகும் சீவனின் ஆதங்கம் .

கட்டுநாயக்கவில் இருந்து  - இராகம அல்லது வியாங்கொட போனால், கல்கிஸ்ஸ-காங்கேசன்துறை ரயிலை அங்கே பிடிக்கலாம்.

30 நிமிட ஏர்போர்ட் டக்ஸி ஓட்டம்.

என்ன @Cruso சரிதானே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கட்டுநாயக்கவில் இருந்து  - இராகம அல்லது வியாங்கொட போனால், கல்கிஸ்ஸ-காங்கேசன்துறை ரயிலை அங்கே பிடிக்கலாம்.

30 நிமிட ஏர்போர்ட் டக்ஸி ஓட்டம்.

என்ன @Cruso சரிதானே?

இங்கு தொடரூந்தைப் பிடிப்பது பிரச்சனை இல்லை.

பொதிகள் தான் பிரச்சனை.

உண்மைதான். ஆனால் உங்களுக்கு இருக்கை கிடைக்குமோ தெரியவில்லை. நீண்ட தூரம் பிரயாணம் என்பதால் இன்னும் ஒரு 20 அல்லது 30 நிமிடங்கள் ஓடினால் றாகாமவிலிருந்து கொழும்பு வந்து விடலாம். வெளி நாடுகளில் இருந்து வந்து றாகம, வேயன்கோட போன்ற இடங்களில் இருந்து ஏறுவது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

வெளி நாடுகளில் இருந்து வந்து றாகம, வேயன்கோட போன்ற இடங்களில் இருந்து ஏறுவது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. 

இதை எண்ணியே எனது பதிவு இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Cruso said:

உண்மைதான். ஆனால் உங்களுக்கு இருக்கை கிடைக்குமோ தெரியவில்லை. நீண்ட தூரம் பிரயாணம் என்பதால் இன்னும் ஒரு 20 அல்லது 30 நிமிடங்கள் ஓடினால் றாகாமவிலிருந்து கொழும்பு வந்து விடலாம். வெளி நாடுகளில் இருந்து வந்து றாகம, வேயன்கோட போன்ற இடங்களில் இருந்து ஏறுவது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. 

ஓம்…டிக்கெட் கஸ்டம்தான்.

நீங்கள் சொன்னது போல் - வெளிநாட்டு தமிழர் என வெளிப்படையாக தெரிவோருக்கு பாதுகாப்பும் யோசிக்க வேண்டிய விடயம்தாம்.

29 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு தொடரூந்தைப் பிடிப்பது பிரச்சனை இல்லை.

பொதிகள் தான் பிரச்சனை.

அதுக்கு வான் தான் சரி வரும்.

என்ன டிரைவர் இளம் பொடியன் என்டால் வானின் அகத்தில் இருந்து வானகம் நேரடியாக போகும் படியும் ஆகி விடலாம்.

🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாயாகவும் 2 ஆம் வகுப்பு – 2500 ரூபாயாகவும் 3 ஆம் வகுப்பு – 1800 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாழ் தேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 2800 ரூபாய் என்றும் 2 ஆம் வகுப்பு – 1900 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இரவு நேர தபால் ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாய் என்றும் 2 ஆம் வகுப்பு – 2200 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகர்சேர்கடுகதி ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்கியதும் அதற்கான கட்டணம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு யாழ்ப்பாணம் ஓடிசி என்ற சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. அதற்கான கட்டணம் 4000 ஆக இருக்கும்.

https://athavannews.com/2023/1339656

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

ஒரு காலத்தில் இலங்கை புகையிரதசேவையின் ஒரே லாபமீட்டும் வழித்தடமாக யாழ் வழித்தடமே இருந்ததாம். அந்த நிலை மீள்கிறது என நினைக்கிறேன்.

அது சரி ஆதவன் ஏன் ரயில், ரயில் என எழுதுகிறது. தொடரூந்து என்ற நல்ல சொல்லிருக்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒரு காலத்தில் இலங்கை புகையிரதசேவையின் ஒரே லாபமீட்டும் வழித்தடமாக யாழ் வழித்தடமே இருந்ததாம். அந்த நிலை மீள்கிறது என நினைக்கிறேன்.

அது சரி ஆதவன் ஏன் ரயில், ரயில் என எழுதுகிறது. தொடரூந்து என்ற நல்ல சொல்லிருக்க.

அப்படி லாபமீட்டியது உண்மைதான். இப்போது கடடணங்களின் அதிகரிப்பால் மக்கள் அரை சொகுசு , சொகுசு பஸ் வண்டிகளை நாடுகிறார்கள்.

ஏன் என்றால் இங்கு பஸ் வண்டியில் ஏறினால் வீடிட்கோ அல்லது அந்த ஊருக்கோ போய் சேர்ந்து விடலாம். இல்லாவிட்ட்தால் கொடிகமத்திலோ, யாழ்பாணத்திலோ இறங்கி இன்னொரு பேரூந்துக்கு காத்திருக்க வேண்டும்  அல்லது முச்சக்கர வண்டிக்கு அதிக பணம் கொடுக்க வேண்டும்.

எனவே இப்போதும்கூட இந்த சொகுசு பேரூந்துகளையே மக்கள் நாடுகிறார்கள். எனவே தொடரூந்தில் செல்வதால் செலவு குறைவு என்று சொல்வதட்கில்லை.

இருந்தாலும் தொடரூந்தில் யாழ்மக்களைவிட அனுராதபுரம் செல்லும் மக்களே அதிகம். அரச அலுவலகங்களில் வர்றன்ட் எழுதும் வேலைகள் மும்முரமாக நடப்பதாகவும் கேள்வி.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.