Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சாமானியர்கள் முதல் கால்நடைகள் வரை கடும் சிரமம் - என்ன நடக்கிறது?

 

45 ஆண்டுகளில் இல்லாத அளவு யமுனாவில் வெள்ளம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தத்தளிக்கும் தலைநகர்: வரலாறு காணாத மழையால் யமுனையில் வெள்ளம் - பரிதவிக்கும் மக்கள்

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம்,ANI

6 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லியில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி யமுனா ஆற்றின் நீர்மட்டம் 208.48 மீட்டரை எட்டியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் அதிகப்படியான நீர் பெருக்கெடுத்து ஓடுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

யமுனா ஆற்றின் கரையைத் தாண்டி முக்கிய சாலைகளிலும் நீர் புகுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

டெல்லியின் மயூர் விஹார் யமுனை நதிக்கரையில் நீரில் மூழ்கிய பசுவைக் குழந்தைகள் காப்பாற்றினர்.

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

யமுனா நதிக்கரையில் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர்.

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

மயூர் விஹார் அருகே ஒரு ட்ராக்டர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

கரையோரம் வசித்த மக்களின் வீடுகளின் நீரில் மூழ்கியுள்ளன.

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

யமுனா கரையில் வசித்த மக்கள் தங்கள் உடைமைகளுடன் தற்போது வீதிகளில் வசிக்கின்றனர்.

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

தண்ணீர் அளவு அதிகரித்ததால் டெல்லியின் பழைய இரும்பு பாலம் மூடப்பட்டது.

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

நொய்டா செக்டார் 168ல் வெள்ள நீரில் சிக்கிய 120 பசுக்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

வெள்ளம் புகுந்ததால் வீட்டின் தரைத் தளத்தில் இருந்து மேற்பகுதிக்கு மக்கள் மாறுகின்றனர்.

டெல்லி வெள்ளம்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

கரையோர பகுதிகளில் வசித்த மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c1vkpdverl6o

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நகருக்குள் புகுந்த யமுனை வெள்ளம்: டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை

13 JUL, 2023 | 04:00 PM
image
 

யமுனையின் வெள்ள நீர் நகருக்குள் புகுந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர, டெல்லிக்குள் இதர கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

delhi_flood_1.jpg

16892411503065.jfif

இது குறித்த டெல்லி போக்குவரத்துத் துறை உத்தரவினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் கைலாஷ் காலட் , "யமுனை நதியின் நீர் மட்டம் அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளதால், டெல்லியின் சிங்கு, பதர்பூர், லோனி, சில்லா ஆகிய நான்கு எல்லைகள் வழியாக கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள் ஐஎஸ்பிடி காஷ்மீரி கேட் பகுதிக்கு செல்வதற்கு பதிலாக சிங்கு எல்லையில் நிறுத்தப்படும். உணவு மற்றும் பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இந்தத் தடையில்லை" என்று தெரிவித்துள்ளார்.

நகருக்குள் புகுந்த வெள்ள நீர்: கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதன்கிழமை (ஜூலை 12) யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி யமுனை ஆற்றில் 208.51 மீட்டர் அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தது. இது மாலை 5 மணிக்குள் 208.75 மீட்டர் என்ற அளவை எட்டும் என்று மத்திய நீர் வள ஆணையம் கணித்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "யமுனையில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது வெள்ளம் யமுனையைச் சுற்றியுள்ள சாலைகளில் புகுந்துள்ளது. அதனால் வெள்ள அபாயம் இருக்கும் பாதைகளை மக்கள் தவிர்க்க வேண்டும். வெள்ளம் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்களைக் காப்பதே இப்போதைய தலையாய கடமை. இந்த அவசர காலத்தில் மக்கள் ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்குமாறு வேண்டுகிறேன். அதேபோல் வாசிர்பாத், சந்தர்வால், ஓக்லா நீரேற்று நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் டெல்லியின் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இயற்கைச் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/159929

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, பெருமாள் said:

உலக வல்லரசு யமுனையில் நீந்துகின்றது .😀

வருடா வருடம்… தவறாமல், இதே இடத்தில் நடக்கும் வெள்ளப் பெருக்கும், அதன் பாதிப்புகளையும் பார்த்து…. அதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல்… 
கற்பனை உலகத்தில் வாழும் நாடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பெருமாள் said:

உலக வல்லரசு யமுனையில் நீந்துகின்றது .😀

கண்ணணின் குடை பழுதடைந்துவிட்டதா?😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/7/2023 at 13:18, உடையார் said:

கண்ணணின் குடை பழுதடைந்துவிட்டதா?😁

நாசா நிபுணர்கள் பழுதுபார்த்துக்கொண்டிருப்பதாக டெல்லிவட்டார ரகசியத்தகவற்குறிப்பேடு சொல்கிறது. 

On 14/7/2023 at 02:30, பெருமாள் said:

உலக வல்லரசு யமுனையில் நீந்துகின்றது .😀

நீந்துவது தப்பா? உடற்சூடு தணிய வேண்டாமோ?

On 14/7/2023 at 03:22, தமிழ் சிறி said:

கற்பனை உலகத்தில் வாழும் நாடு.

நாம் ஏவுகணைவரை முன்னேறியவர்கள் என்று மோடியி எச்சரிக்கை. சீனாவே வெருண்டுபோக்கிடக்குது. நினைச்சா ஒரு விரலாலையே வெள்ளத்தை வற்றப்பண்ணிவிடுவார்கள்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, nochchi said:

நாசா நிபுணர்கள் பழுதுபார்த்துக்கொண்டிருப்பதாக டெல்லிவட்டார ரகசியத்தகவற்குறிப்பேடு சொல்கிறது.

நாசாவா? இஸ்ரோவா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஏராளன் said:

நாசாவா? இஸ்ரோவா?

[72+] Nasa Logo Wallpaper - WallpaperSafari

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெல்லியில் யமுனை ஆற்று வெள்ளத்தை கட்டுப்படுத்த இராணுவம், கடற்படை தீவிரம்

16 JUL, 2023 | 12:03 PM
image
 

டெல்லியில் பாயும் யமுனை ஆற்று வெள்ளத்தை கட்டுப்படுத்த இராணுவமும் கடற்படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் ஓடும் யமுனை உள்ளிட்ட ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரப் பகுதிகளில் உள்ள ஊர்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இது தவிர மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியைப் பொறுத்தவரை ஓரிரு நாட்களில் மழை குறைந்துவிட்டது. ஆனாலும் யமுனை ஆற்றுக்கு அருகே கட்டப்பட்டுள்ள ஐடிஓ தடுப்பணையின் மதகுகளின் கதவுகள் திறக்க முடியாமல் ஜாம் ஆகி உள்ளதால் டெல்லிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதுதவிர யமுனை கரையோரப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பெரும்பாலான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், டெல்லிக்குள் பாயும் வெள்ளத்தை கட்டுப்படுத்த உதவுமாறு ராணுவம் மற்றும் கடற்படையினருக்கு டெல்லி நிர்வாகம் கடந்த 13-ம் தேதி இரவு கோரிக்கை வைத்தது. இதையடுத்து, ராணுவம் மற்றும் கடற்படை பொறியாளர்கள் குழுவினர் ஐடிஓ தடுப்பணையில் ஜாம் ஆகியுள்ள மதகு கதவுகளை திறக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவுபகலாக மேற்கொண்ட முயற்சியால் ஒரு கதவு மட்டும் திறக்கப்பட்டுள்ளது. மற்ற கதவுகளையும் திறக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் அதே பகுதியில் உலக சுகாதார அமைப்பின் கட்டிடம் அருகே தண்ணீர் கட்டுப்பாட்டு கதவு சேதமடைந்ததால் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தை தடுப்புகள் அமைத்து திருப்பிவிடும் பணியில் மற்றொரு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வசிராபாத் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. அந்த நிலையத்தில் இருந்து வெள்ளத்தை வடித்துவிட்டு, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் பணியிலும் ராணுவத்தின் ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் கூறும்போது, “ஐடிஓ தடுப்பணையில் உள்ள 32 கதவுகளில் 5 ஜாம் ஆகி உள்ளது. இதில் ஒரு கதவு மட்டும் 20 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. ராணுவமும் கடற்படையும் இரவு பகலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

https://www.virakesari.lk/article/160130

  • கருத்துக்கள உறவுகள்
Posted

45ஆண்டுகளுக்கு பின் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை சூழ்ந்த வெள்ளம்..!!

18 JUL, 2023 | 04:11 PM
image
 

யமுனை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் 45 ஆண்டுகளுக்கு பின்னர் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. அதேபோல இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்கள், சாலைகள், பாலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஏற்கனவே யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடும் மழையின் காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளப் பெருக்கினால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ் மகாலின் சுற்றுச் சுவரை தொட்டுள்ளது. ஏற்கனவே 45 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்ற மழை வெள்ளத்தினால் தாஜ் மகாலின் சுற்றுச் சுவரை தண்ணீர் சூழ்ந்தது.

யமுனை நதியின் நீர்மட்டம் 497.9 அடி உயர்ந்துள்ளது. குறைந்த அபாய அளவான 495 அடியை இது கடந்து தற்போது 497.9 அடி உயர்ந்துள்ளது. இதிமாத்-உத்- தௌலா கல்லறையின் வெளிப்புறச் சுற்றுச் சுவரை தற்போது தண்ணீர் தொட்டுள்ளது. மேலும் ராம்பக், மெஹ்தாப் பக், சொகராபக், காலா கும்பட் ஆகிய பகுதிகள் அபாயத்தில் உள்ளதாகவும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தற்போது வரை எந்த சேதமும் இல்லை எனவும் இன்னும் தாஜ்மகாலின் அடிப்பாகத்தை தண்ணீர் தொடவில்லை எனவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தாஜ்மகாலின் தொல்லியல்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாவது “ தாஜ்மகாலின் கட்டுமானம் எவ்வளவு பெரிய வெள்ளம்  ஏற்பட்டாலும் பாதிக்காத வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக தாஜ்மகாலின் பின்பக்க சுவரை வெள்ளம் தொட்டது 1978ல் தான்.

  1978 ஆம் ஆண்டில், யமுனை ஆற்றின்  நீர்மட்டம் 508 அடியாக அதிகரித்தது. இதுதான் அதிகபட்ச அளவாக பார்க்கப்பட்டது.  தாஜ்மஹாலின் பாசாய் காட் புர்ஜின் வடக்குச் சுவரை நீர் தொட்டது. அந்த நேரத்தில் கிட்டத்தட்ட 22 அறைகளுக்குள் தண்ணீர் புகுந்து, சேறும் சகதியுமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/160324

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மோடி அரசாங்கத்தின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு வந்த சாபக்கேடு. இன்னும் என்னென்ன நடக்கபோகுதோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Cruso said:

மோடி அரசாங்கத்தின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு வந்த சாபக்கேடு. இன்னும் என்னென்ன நடக்கபோகுதோ.

குருசோ அப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்?

இவ்வளவு வெள்ளமும் கடைசியில் கடலில்த் தான் போய்ச் சேரும்.

இதை சேமித்து வைப்பதற்கு எந்த திட்டமும் இல்லை.

அப்புறமா தண்ணீர் இல்லை என்று ஐய்யோ குய்யோ முறையோ என்று அழுது புலம்ப வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யமுனை வெள்ளத்தில் சிக்கி அல்லலுறும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இருப்பினும் ஜமுனை நதி பற்றி நானறிந்த சிறிய தகவல் ஒன்றையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

இமயமலையில் இருந்து புறப்படும் யமுனைஆற்றில் ஓடும் நீர் அலகாபாத் என்ற இடத்தில் கங்கை நதியில் கலக்கிறது. இந்த நதியின் நீர் இறுதியில் கடலில் சென்று கலந்தாலும் யமுனை கடலில் சென்று முடிவதில்லை. (இதுபோலவே  கங்கை நதியும் கடலைச் சென்றடைவதில்லை. அதாவது கங்கை நதி வங்கதேசத்தின் எல்லையை கடக்கும்போது பத்மா நதி என்ற பெயருடன்தான் கடலைச் சென்றடைகிறது! ).

யமுனை புது டில்லியின் மையப்பகுதியை சுமார் 5 கி.மீ தொலைவில் கடந்து செல்கிறது. எனவே யமுனைதான் இப்பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நீரை கடலுக்குக் கொண்டுசெல்லும் முக்கிய வடிகால்வாயாகவும் செயல்படுகிறது.

இந்த நதிக்கு பல கிளை நதிகள் இடையில் வந்து இணைந்து கொள்வதும்,  இதன் ஓடுபாதை பாம்புபோல் வளைந்து வளைந்து செல்வதும்,  பல இடங்களில் நதியின் அகலம் குறுகலாக இருப்பதும் நீரோட்டத்தின் வேகத்தை கணிசமான அளவு குறைக்கும் காரணிகளாகும்.

இவை அனைத்துக்கும் மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணி எது என்று பார்த்தால் நதியின் புவியியல் சாய்வு விகிதம் பல இடங்களில் மிக மிக குறைவான அளவில் இருப்பதுதான். உதாரணமாக புது டில்லியில் (கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாள 215 மீ) இருந்து அலகாபாத் (கடல் மட்டத்தில் இருந்து 98 மீ) வரை நதியின் பாதை சுமார் 1100 கி.மீ. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையில் உள்ள உயர வித்தியாசம் வெறும் 117 மீட்டர்கள்.

வேறுவிதமாக சொல்வதாயின் புது டில்லிக்கும்(New Delhi) அலகாபாத்துக்கும் (Allahabad) இடையில் யமுனை நதியின் சாய்வு விகிதம் (slope ratio) சராசரியாக 1 கிலோ மீட்டருக்கு 10 செண்டி மீட்டர்கள். எண் குறியீட்டில் காட்டுவதாயின் 1:10000 என்ற இந்த சாய்வு விகிதம்  ஒரு நதியில் குறிப்பிடத்தக்க நீரோட்ட வேகத்தை ஏற்படுத்தப் போதுமானதல்ல.

இதன் காரணமாக  அடிமழை காலங்களில் மழை நீர் பல நாட்களுக்கு நதியில்  தேங்குவதால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அதன் கரையையும் மேவிச்செல்லும் அபாயம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

குருசோ அப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்?

இவ்வளவு வெள்ளமும் கடைசியில் கடலில்த் தான் போய்ச் சேரும்.

இதை சேமித்து வைப்பதற்கு எந்த திட்டமும் இல்லை.

அப்புறமா தண்ணீர் இல்லை என்று ஐய்யோ குய்யோ முறையோ என்று அழுது புலம்ப வேண்டியது தான்.

இலங்கையைப்போல, இனவாதத்தையும் , மதவாதத்தையும் தூண்டி கலவரத்தை உண்டு பண்ணினார். இதைவிட அவரால் வேறு என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.

அவரால் அந்த தண்ணீரை தேக்கி வைக்க முடியாது. அவை எல்லாம் சாபத்தினால் வந்த தண்ணீர். தேக்கி வைத்தால் இதைவிட அழிவு மோசமாக இருக்கும்.

  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் சிரித்தது …..ஒரு வடக்கு-கிழக்கு அமைச்சர் கூட இல்லை என்பதற்கு. மக்கள் மாற்றம் விரும்பி முதல் முறையாக ஒரு சிங்கள கட்சிக்கு வடக்கின் இரு தேர்தல் மாவட்டங்களையும் அள்ளி கொடுத்தமைக்கு  ஒரு சமிஞ்ஞை கூடவா காட்ட முடியாது? கீழே உள்ள செய்தித்திரியில் அனுர ஆதரவு தமிழர், முஸ்லிம்களின் கதறலை - கொமெண்ட்ஸ்சில் போய் வாசியுங்கள். அவர்களின் கதறலை -woke, political correctness என சொல்லி அடித்து மூடுகிறார்கள் இனவாதிகள். https://www.dailymirror.lk/top-story/President-retains-Defence-Finance-and-Digital-Economy-Ministries/155-296203#  
    • அரசியல் என்பது ஒரு சூது , சுத்துமாத்து, அதற்கு நேர்மையாக வளர்க்கப்பட்ட போராளிகள் ஒருபோதும் சரிப்பட்டு வரமாட்டார்கள். அரசியல் ஒரு புரியாத புதிர், தமிழர் பகுதியில் 80%க்கு மேல்  புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தாலும் தேர்தல் என்று வரும்போது புலிகளால் நிராகரிக்கப்பட்ட , புளொட்டையும், ஈபிஆர் எல் எவ்வையும், ஈபிடிபியையும், ரெலோவையும் சேர்ந்தவர்களையே அதே புலிகளின் ஆதரவாளர்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்கிறார்கள், அதற்கு காரணம்  குள்ளநரித்தனம், அரசியல் வியூகம் எனும் பேரில் சூழ்ச்சி, வலுவான கட்சி கட்டமைப்பு எல்லாம் அவசியம். ஏற்கனவே முன்னாள் திருமலைமாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் தலைமையில் ஒரு பிரிவு தேர்தலை முயற்சித்தது நினைவிலுண்டு , ஜனநாயக போராளிகள் என்றொரு அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டதாய் ஞாபகம் அவர்கள் யாருமே தேர்தலில் சோபிக்கவில்லை இப்போ என்ன ஆனார்கள் என்றும்  தெரியவில்லை. தேர்தலில் போட்டியிட்டு தோத்தவர்கள் மட்டுமே தேசியபட்டியல் உறுப்பினரில் உள்வாங்கப்படலாம் என்ற நிலமையில் தமிழரசுகட்சி நினைத்தால் இனத்தின் இருப்பு கருதி இவர்போன்றவர்களை தமது கட்சிக்குள் உள்வாங்கி எம்பி ஆக்கலாம்,  அது வாய்ப்பில்லையென்றால் கடந்த தேர்தலில் இவர்போன்ற போராளீகளை கட்சிக்குள் உள்வாங்கியிருக்கலாம். வன்னி மைந்தன்மேல் ஏன் பாய்கிறீர்கள், அவ்வளவு பெரிய ஆளூமையா அவர்? அல்லது  எமது போராட்ட தலைமை ஆயுதங்களை மெளனித்தபோது  இனிமே எல்லாமே வன்னி மைந்தன் பொறுப்பு என்றா சொல்லிவிட்டு போனது? அவர் சும்மா அடுத்த புதுவை ரத்தினதுரை நான்தான் என்ற நினைப்பில ஊருக்க சுத்திக்கிட்டிருக்கார்.
    • சந்துரு பேட்டி கண்டதை நான் கேட்டிருந்தேன். கால் கை இழந்த போராளிகளை கண்டும் காணாமல் போகும் எமது மக்கள்( பயம் ஒரு காரணம்) வாக்களிபார்கள் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் கஸ்டப்பட்டு முன்னுக்கு வந்த பெண் எனைய பெண்களுக்கும் உதவி வந்தார். அவரின் மொத்த வாக்குகள் எவ்வளவு என தெரியவில்லை.
    • இந்தியாவின் ஊதுகுழலாக பிபிசி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வேலை செய்கிறது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.