Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உச்சமடையும் போர்க்களம்: இலங்கை இராணுவ வீரர்கள் உக்ரைனால் அதிகாரிகளால் கைது

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கை முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைன் (Ukraine) அதிகாரிகளால் போர்க் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

போரில் எல்லை தாண்டிய குற்றத்தின் பேரில் ஐந்து இலங்கையர்கள் போர்க் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உக்ரேனியப் படைகளுடன் போரிட்ட மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் இலங்கை தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர்

முன்னதாக, ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்காக இலங்கையில் இருந்து அமைச்சர்கள் குழு மொஸ்கோவிற்கு விஜயம் செய்தது.

உச்சமடையும் போர்க்களம்: இலங்கை இராணுவ வீரர்கள் உக்ரைனால் அதிகாரிகளால் கைது | Sri Lankan Ex Army Arrested In Ukraine Russia War

பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர், ரஷ்ய குடியுரிமை, அதிக சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதியளித்து ரஷ்யாவிற்கு பயணமாக ஏமாற்றப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர்கள் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதனால் அவர்களை விடுவிக்க கடினமாக உள்ளதுடன் சிலர் ரஷ்ய குடியுரிமை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/8/2024 at 22:09, ஏராளன் said:

அதிரப்போகும் போர்க்களம் : உக்ரைனுக்கு வந்து சேர்ந்த நவீன விமானங்கள்

உக்ரைன்(ukraine) தனது முதல் அமெரிக்கத் தயாரிப்பான F-16 போர் விமானங்களைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் வெலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

"உக்ரைனில் F-16 விமானங்கள். நாங்கள் அதைச் செய்தோம்," ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பெயரிடப்படாத விமானப்படை தளத்தில் இரண்டு விமானங்களால் சூழப்பட்ட ஒரு நிகழ்வில் கூறினார்.

இன்னும் பல தேவை

உக்ரைன் தலைவர் ஒரு காலத்தில் இந்த விமானங்களை வழங்கத் தயங்கியதற்கு நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார் - இருப்பினும் இன்னும் பல தேவை என்று அவர் கூறினார்.

அதிரப்போகும் போர்க்களம் : உக்ரைனுக்கு வந்து சேர்ந்த நவீன விமானங்கள் | Ukraine Receives First F 16 Fighter Jets

ஜெட் விமானங்களின் வருகை உக்ரைனின் விமானப்படையின் திறன்களை அதிகரிப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. உக்ரைன் தற்போது பழைய சோவியத் கால ஜெட் விமானங்களையே நம்பியுள்ளது. இன்னும் சில எஃப்-16 விமானங்கள் வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றன.

எங்கிருந்து வந்தன..!

இருப்பினும் உக்ரைனில் இன்னும் போதுமான பயிற்சி பெற்ற விமானிகள் இல்லை என்பதை ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டார். உக்ரைனுக்கு எத்தனை விமானங்கள் வந்தன என்பதை அவர் குறிப்பிடவில்லை.அவை அனைத்தும் டென்மார்க்(denmark), நெதர்லாந்து (netherland)மற்றும் அமெரிக்காவால்(us) அனுப்பப்பட்டதா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.

அதிரப்போகும் போர்க்களம் : உக்ரைனுக்கு வந்து சேர்ந்த நவீன விமானங்கள் | Ukraine Receives First F 16 Fighter Jets

இதேவேளை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனுக்குள் பறக்கும் மேற்கத்திய தயாரிப்பான F-16 விமானங்கள் "சுட்டு வீழ்த்தப்படும்" என்று முன்னர் தெரிவித்திருந்தார். "ஆனால் இந்த விமானங்கள் முன்னணி களமுனையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது," என்று அவர் மேலும் கூறினார்.

https://ibctamil.com/article/ukraine-receives-first-f-16-fighter-jets-1722845093

அமெரிக்காவின் எஃப்-16 போர் விமானங்கள் ரஷ்யாவை தோற்கடிக்க யுக்ரேனுக்கு உதவுமா?

ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எஃப் - 16 போர் விமானம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெரேமி ஹோவெல்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்ட எஃப் - 16 போர் விமானங்களை யுக்ரேன் பயன்படுத்த உள்ளது. 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 65 போர் விமானங்களை யுக்ரேன் பெறுகிறது.

மேற்கத்திய நாடுகளிடம் போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று யுக்ரேன் தலைவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர்.

சில எஃப்.16 போர் விமானங்கள் யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட சூழலில், ரஷ்யாவுக்கு எதிரான யுக்ரேனின் படையெடுப்பில் பெரிய மாற்றங்களை இது ஏற்படுத்தலாம் என்றும் சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

யுக்ரேன் எஃப் - 16 போர் விமானங்களை பெற தாமதம் ஏன்?

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, யுக்ரேன் மீது போர் தொடுத்த நிலையில், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, எஃப் - 16 போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளிடம் கோரிக்கை வைத்தார்.

ரஷ்யாவின் போர் விமானங்களை யுக்ரேனின் எல்லைக்குள் நுழைய விடாமல் கட்டுப்படுத்தவும், யுக்ரேன் படைகளுக்கு வான்வழி மேலாதிக்கத்தை வழங்கவும் இத்தகைய போர் விமானங்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய சில எஃப் 16 ரக போர் விமானங்களை பெல்ஜியம், டென்மார்க, நெதர்லாந்து மற்றும் நார்வே என நான்கு ஐரோப்பிய நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கியுள்ளன.

ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி

இருப்பினும் யுக்ரேனுக்கு இத்தகைய நவீன, பலம் பொருந்திய போர் விமானங்களை வழங்குவது ரஷ்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்று யோசித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான், இந்த போர் விமானங்களை யுக்ரேனுக்கு வழங்க ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் அனுமதி வழங்கினார்.

ஏற்கனவே இருந்த எஃப் - 16 ரக போர் விமானங்களை யுக்ரேனுக்கு வழங்கியிருக்கும் நான்கு நாடுகளும் தற்போது தங்களின் விமானப்படையில் அதிக திறன் வாய்ந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானமான எஃப் 35-ஐ பெற்றுள்ளன.

முதல் தடவையாக 10 எஃப் - 16 ரக போர் விமானங்கள் ஜூலை மாத இறுதியில் யுக்ரேனுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மொத்தமாக 65 போர் விமானங்களை யுக்ரேனுக்கு தருவதாக மேற்கத்திய நாடுகள் உறுதியளித்துள்ளன. அவற்றில் சில இந்த வருட இறுதிக்குள்ளும், மீதமுள்ள விமானங்கள் 2025-ம் ஆண்டு இறுதிக்குள்ளும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுக்ரேனுக்கு போர் விமானங்களை வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது எஃப் 16 ரக விமானங்களின் பற்றாக்குறையால் அல்ல. போதுமான பயிற்சி பெற்ற விமானிகள் இல்லாமல் இருந்ததே காரணம் என்று கூறுகிறார் பேராசிரியர் ஜஸ்டின் ப்ரோன்க். ராயல் யுனைட்டட் சர்வீஸ் இன்ஸ்டியூட்டில் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் ராணுவ சிந்தனைக்குழுவில் இவர் பணியாற்றுகிறார்.

ஒரு விமானி இந்த போர் விமானத்தை இயக்க குறைந்தது நான்கு முதல் ஐந்து மாதங்கள் பயிற்சி பெற வேண்டும். அந்த போர் விமானத்தில் உள்ள அனைத்து தொழில் நுட்பங்களையும் அறிந்து கொள்ள பல வருடங்கள் கூட ஆகலாம் என்கிறார் ஜஸ்டின்.

"யுக்ரேனின் நூற்றுக்கணக்கான விமானிகளுக்கு மேற்கத்திய நாடுகள் இத்தகைய பயிற்சிகளை ஒரே நேரத்தில் வழங்கும் என்று அந்த நாடு எதிர்பார்த்தது. ஆனால் அவர்களிடம் அத்தகைய வசதிகள் இல்லை," என்றும் அவர் கூறினார்.

 
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பெல்ஜியம், டென்மார்க, நெதர்லாந்து, நார்வே என நான்கு நாடுகள் யுக்ரேனுக்கு எஃப் 16 ரக போர் விமானங்களை வழங்கியுள்ளன

எஃப் - 16 ரக போர் விமானத்தை யுக்ரேன் எப்படி பயன்படுத்தும்?

எஃப் - 16 ரக போர் விமானங்கள் 1978ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தன. ஏவுகணைகளை ஏவவும், எதிரி நாட்டு விமானங்களை தாக்கவும் இந்த போர் விமானங்கள் வடிவமைக்கப்பட்டன.

எதிரிகளின் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி, தரையில் முன்னேறிச் செல்லும் படையினருக்கு இந்த போர் விமானங்கள் உதவுகின்றன.

இருப்பினும், யுக்ரேன் தன்னுடைய பாதுகாப்புக்காக தான் இந்த போர் விமானங்களை பயன்படுத்தும் என்று தெரிவிக்கிறார் பிலிப்ஸ் ஓ பிரையான். இவர் ஸ்காட்லாந்தின் புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் போர் வியூக படிப்பு துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விண்ணிலேயே ஏவுகணைகளை அழிக்கும் வகையிலும் பதில் தாக்குதல் நடத்தும் வகையிலும் எஃப் 16 போர் விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. யுக்ரேனிய படைகள் மற்றும் பொதுமக்கள் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த விமானங்களை யுக்ரேன் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கிறார் அவர்.

இந்த விமானங்கள் ஏற்கனவே யுக்ரேனில் உள்ள, நிலத்தில் இருந்து வான்வெளியில் வரும் ஏவுகணைகளை தாக்கும் பாதுகாப்பு அமைப்புடன் சேர்த்து உபயோகிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா யுக்ரேனுக்கு வழங்க இருக்கும் எஃப் 16 ரக போர் விமானங்கள் அதி நவீனமானவை என்று கூறுகிறார் ப்ரோன்க். "அமெரிக்காவில் உள்ள அதி நவீன போர் விமானங்கள் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியில் சிறப்பானவை இல்லையென்றாலும் கூட ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் வலிமை கொண்டவை இவை," என்றும் அவர் தெரிவித்தார்.

"எதிர் வரும் குளிர்காலத்தின் தீவிர தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இதர வெப்பமூட்டும் மையங்களை குறிவைத்து நடத்தப்படும் ரஷ்யாவின் தாக்குதல்கள் முறியடிக்கப்படும் பட்சத்தில் யுக்ரேனிய மக்கள் இந்த போர் விமானங்களை வரவேற்பார்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.

எஃப் 16 ரக விமானங்கள் விண்ணில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் சக்தி கொண்டவை. இவை ரஷ்யாவின் ராணுவ மையங்கள், ஆயுத விநியோக மையங்கள் போன்றவற்றை மிக தொலைவில் இருந்து தாக்க இயலும் என்றும் பேராசிரியர் ப்ரோன்க் கூறுகிறார்.

இருப்பினும்,"போர்க்களத்தில் யுக்ரேன் ராணுவத்திற்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் இந்த போர் விமானங்கள் பயன்படுத்த இயலாமல் போகலாம். ஏன் என்றால் ரஷ்யாவின் விமானப்படை மிகவும் வலிமையானது. யுக்ரேனியர்களால் அதனை நெருங்குவது கடினம்," என்றும் எச்சரிக்கிறார் அவர்.

யுக்ரேனிய துருப்புகள் மற்றும் நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் க்ளைட் (Glide) ரக வெடிகுண்டுகளை தடுப்பது எஃப் 16 ரக விமானங்களுக்கு சவாலான காரியம் என்று பேராசிரியர் ஓபிரையான் தெரிவிக்கிறார்.

 
ரஷ்யா vs யுக்ரேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யாவின் ஏவுகணைகளை தாக்க எஃப் 16 விமானங்கள் உதவக்கூடும்

யுக்ரேன் ரஷ்யாவை தோற்கடிக்க எஃப்-16 போர் விமானங்கள் உதவுமா?

அமெரிக்காவில் அமைந்திருக்கும் சிந்தனை குழுவான தி சென்டர் ஃபார் ஸ்ட்ராடெஜிக் அண்ட் இண்டெர்நேஷனல் ஸ்டடீஸ் (CSIS) வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் கவனிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த 65 போர் விமானங்களை விட அதிகமான ஆயுதங்கள் யுக்ரேனுக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமின்றி எஃப் 16 ரக விமானங்கள் யுக்ரேனின் எல்லையில் இருக்கும் ரஷ்யாவின் விமானப்படைகளையும் தாக்க பயன்படுத்தப்பட வேண்டும்.

போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை எல்லையில் இருந்து வெளியேற்றவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 
எஃப் ரக விமானங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தும் யுக்ரேனியர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எஃப் 16 ரக விமானங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு 2022ம் ஆண்டில் இருந்து யுக்ரேனிய மக்கள் அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்

12 விமானப்படைப் பிரிவுகள் இருந்தால் மட்டுமே ரஷ்யாவுக்கு எதிரான போரில் தேவையான உதவிகளை யுக்ரேன் விமானப்படை வழங்க இயலும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு பிரிவுக்கு 18 போர் விமானங்கள் என மொத்தமாக யுக்ரேனுக்கு 216 எஃப் 16 போர் விமானங்கள் தேவைப்படும்," என்று குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை.

இருப்பினும் பேராசிரியர் ப்ரோன்க், மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே தங்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட எஃப்16 ரக போர் விமானங்களையே யுக்ரேனுக்கு வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், "இது வெறும் ஆரம்பம் தான். யுக்ரேனின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் எஃப் 16 ரக விமானங்களை அதன் விமானப்படையில் இணைப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும்," என குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, ஏராளன் said:

முதல் தடவையாக 10 எஃப் - 16 ரக போர் விமானங்கள் ஜூலை மாத இறுதியில் யுக்ரேனுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மொத்தமாக 65 போர் விமானங்களை யுக்ரேனுக்கு தருவதாக மேற்கத்திய நாடுகள் உறுதியளித்துள்ளன. அவற்றில் சில இந்த வருட இறுதிக்குள்ளும், மீதமுள்ள விமானங்கள் 2025-ம் ஆண்டு இறுதிக்குள்ளும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

65ம் குடுத்து முடிக்கிறதுக்கிடையிலை உக்ரேன் குளோஸ்...😎

எஃப் ரக விமானங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தும் யுக்ரேனியர்கள்

ஏதோ அரிசி பருப்பு கேக்கிறமாதிரி எழுதிவைச்சுக்கொண்டு நிக்கினம்....முடியல 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

65ம் குடுத்து முடிக்கிறதுக்கிடையிலை உக்ரேன் குளோஸ்...😎

 

35 minutes ago, ஏராளன் said:

12 விமானப்படைப் பிரிவுகள் இருந்தால் மட்டுமே ரஷ்யாவுக்கு எதிரான போரில் தேவையான உதவிகளை யுக்ரேன் விமானப்படை வழங்க இயலும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு பிரிவுக்கு 18 போர் விமானங்கள் என மொத்தமாக யுக்ரேனுக்கு 216 எஃப் 16 போர் விமானங்கள் தேவைப்படும்," என்று குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை.

216 தேவையாம் அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஏராளன் said:

216 தேவையாம் அண்ணை!

போனமாசம் குடுத்த 10  கப்பல்ல இப்ப எத்தினை நிக்கிது எண்டொருக்கால் செக் பண்ணச்சொல்லுங்கோ...🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்ட எஃப் - 16 போர் விமானங்களை யுக்ரேன் பயன்படுத்த உள்ளது. 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 65 போர் விமானங்களை யுக்ரேன் பெறுகிறது.

இது இன்னமும் பாவனைக்கு விடவில்லை.பக்கத்து நாடுகளில் ஒளித்து வைத்திருப்பதாகவே சொல்கிறார்கள்.இறக்கிவிட்டால்த் தான் நன்மை தீமை தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்ய ராணுவ முகாமில் ஏவுகணை தாக்குதல் - கேரள இளைஞர் உயிரிழப்பு

20 AUG, 2024 | 10:10 AM
image

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சந்தீப் (36) என்பவர் ஏவுகணை தாக்குதலில் இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இவர், கேரளாவின் திருச்சூர் மாவட்டம், திருக்கூர் அருகே உள்ள நாயரங்காடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். எலெக்ட்ரீஷியனான இவர், ரஷ்யாவில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் சென்றார்.

இந்நிலையில் சந்தீப்பின் உறவினரான சரண் என்பவர் நேற்று கூறியதாவது: ரஷ்ய மலையாளிகள் சங்கத்தில் இருந்து 2 நாட்களுக்கு முன் எங்களுக்கு தகவல் வந்தது. ரஷ்ய ராணுவ கேன்டீனில் பணியாற்றி வந்த திருச்சூரை சேர்ந்த ஒருவர் ஏவுகணை தாக்குதலில் இறந்துவிட்டதாக கூறினர். இறந்தவரை அவர்கள் அடையாளம் கண்டறிய விரும்பினர். அவர்கள் அளித்த தகவல்களை சரிபார்த்ததில் உயிரிழந்தது சந்தீப் எனத் தெரியவந்துள்ளது.

தொடக்கத்தில் மாஸ்கோவில் பணியாற்றுவதாக சந்தீப் கூறினார். ஒரு மாத சம்பள பணத்தை அவர் வீட்டுக்கு அனுப்பினார். பிறகு அவர் மிக அரிதாகவே குடும்பத்தினருடன் தொடர்புகொண்டார். அவர் மாஸ்கோவுக்கு வெளியே ராணுவ கேன்டீன் ஒன்றில் பணியாற்றி வருவதாக பிறகு எங்களுக்கு தெரியவந்தது. இவ்வாறு உறவினர் சரண் கூறினார்.

https://www.virakesari.lk/article/191498

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ரஷ்ய எண்ணெய் கிடங்கில் தீ

ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்து விட்டு எரிவதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. அப்போதுமுதல் இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது கடந்த 26ம் திகதி அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் சரடோவ் நகரில் 38 மாடிகள் கொண்ட ‘வோல்கா ஸ்கை’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 28-வது மாடியில், வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் பயங்கர வேகத்தில் மோதி வெடித்து சிதறியது. அப்போது, அந்த தளம் மட்டுமின்றி, அதற்கு கீழே, மேலே இருந்த (27, 29-வது மாடிகள்) தளங்களும் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கின. இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 3 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது:

“ரஷியாவின் கிரோவ் பிராந்தியம், கோட்டல்நிச் பகுதியில்அமைந்துள்ள எண்ணெய்க் கிடங்கில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து 1,500 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது”

இவ்வாறு அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/308644

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1500 km வரை ரசியா நித்திரை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

1500 km வரை ரசியா நித்திரை?

இது ஒரு பலவீனம்தான்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, vasee said:

இது ஒரு பலவீனம்தான்.

இது சாதாரண பலவீனம் அல்ல கிட்டத்தட்ட முழு ரசியாவும் தாக்குதல் மையத்துள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

இது சாதாரண பலவீனம் அல்ல கிட்டத்தட்ட முழு ரசியாவும் தாக்குதல் மையத்துள்...

பெரும்பாலும் இரு நாட்டின் எல்லைப்பகுதிகளில் ஜாமர்கள் இருந்திருக்கலாம், எதிர்பாராத வேறு எல்லைகளினூடாக ஊடுருவல் செய்திருக்கவும் வாய்ப்பு இருக்கலாம்.

தற்போது இரஸ்சியா தனது நாட்டினை சுற்றி எதிரிகளை உருவாக்கிவிட்டுள்ளது, போலந்து படையினர் (தன்னார்வலர் எனும் போர்வையில்) பெருமளவில் இந்த போரில் ஈடுபடுகிறார்கள் என கூறுகிறார்கள்.

உக்கிரேனிய படைகளின் தற்காப்பு நிலைகளுக்கிடையேயான தொடர்பாடல் பிரச்சினை நிலவுவதாக கூறுகிறார்கள், இது ஒருங்கிணைந்த தாக்குதலை பாதிப்பதாக கூறுகிறார்கள், இது ஒரு எதிர்மறையான தாக்கமாக உக்கிரேனுக்கு இருந்தாலும் வெறு நேச நாட்டு எல்லைகள் இந்த யுத்தத்திற்கு பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் அது உக்கிரேனுக்கு சாதகமான அம்சமாக இருக்கும், அவை மோசமான அத்துமீறலாக இல்லாதவரை பிரச்சினை வராது என கருதுகிறேன்.

ஆனால் இந்த போரை தொடர்வதால் உக்கிரேனிற்கும், இரஸ்சியாவிற்கும் பெரிதாக நன்மைகள் கிடைக்காது; ஆனால் பெருமளவில் இழப்புகள் தொடர்கதையாகும், ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம், பாதிக்கப்படுவது இரண்டு நாடுகளும்தான், ஒரு காலத்தில் இணைந்து பயணித்தவர்கள் இலகுவாக சமசரமாக முடியும், ஆனால் அதனை மற்றவர்கள் விரும்பமாட்டார்கள் ஏனென்றால் இந்த போரினால் அவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, vasee said:

பெரும்பாலும் இரு நாட்டின் எல்லைப்பகுதிகளில் ஜாமர்கள் இருந்திருக்கலாம், எதிர்பாராத வேறு எல்லைகளினூடாக ஊடுருவல் செய்திருக்கவும் வாய்ப்பு இருக்கலாம்.

தற்போது இரஸ்சியா தனது நாட்டினை சுற்றி எதிரிகளை உருவாக்கிவிட்டுள்ளது, போலந்து படையினர் (தன்னார்வலர் எனும் போர்வையில்) பெருமளவில் இந்த போரில் ஈடுபடுகிறார்கள் என கூறுகிறார்கள்.

உக்கிரேனிய படைகளின் தற்காப்பு நிலைகளுக்கிடையேயான தொடர்பாடல் பிரச்சினை நிலவுவதாக கூறுகிறார்கள், இது ஒருங்கிணைந்த தாக்குதலை பாதிப்பதாக கூறுகிறார்கள், இது ஒரு எதிர்மறையான தாக்கமாக உக்கிரேனுக்கு இருந்தாலும் வெறு நேச நாட்டு எல்லைகள் இந்த யுத்தத்திற்கு பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் அது உக்கிரேனுக்கு சாதகமான அம்சமாக இருக்கும், அவை மோசமான அத்துமீறலாக இல்லாதவரை பிரச்சினை வராது என கருதுகிறேன்.

ஆனால் இந்த போரை தொடர்வதால் உக்கிரேனிற்கும், இரஸ்சியாவிற்கும் பெரிதாக நன்மைகள் கிடைக்காது; ஆனால் பெருமளவில் இழப்புகள் தொடர்கதையாகும், ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம், பாதிக்கப்படுவது இரண்டு நாடுகளும்தான், ஒரு காலத்தில் இணைந்து பயணித்தவர்கள் இலகுவாக சமசரமாக முடியும், ஆனால் அதனை மற்றவர்கள் விரும்பமாட்டார்கள் ஏனென்றால் இந்த போரினால் அவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள்.

உக்ரேனை முற்றுமுழுதாக அழிக்காமல் விடமாட்டார்கள் போலுள்ளது. 

கடைசியாக உக்ரேனியர்களுக்கு கோவணமும் மிஞ்சாது என்பதை உறுதியாக நம்பலாம். 

🥺

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kapithan said:

உக்ரேனை முற்றுமுழுதாக அழிக்காமல் விடமாட்டார்கள் போலுள்ளது. 

கடைசியாக உக்ரேனியர்களுக்கு கோவணமும் மிஞ்சாது என்பதை உறுதியாக நம்பலாம். 

🥺

செம்ரெம்பரில் செலன்ஸ்கி அமெரிக்கா செல்கிறார், திரும்பி உக்கிரேன் போக மாட்டார் என கூறுமளவிற்கு தற்போதய நிலமை மோசமாக உள்ளது என்பது உண்மை, உக்கிரேனிற்கு ஆயுத பிரச்சினை இல்லை ஆளணிப்பற்றாக்குறை, கோட கால முடிவிற்குள் 60000 உக்கிரேனியர்களூக்கு உக்கிரேனில் ஐரோப்பிய ஒன்றியம் உக்கிரேனிற்குள் வைத்து பயிற்சி வளங்கப்படவுள்ளதாக கூறுகிறார்கள், அதில் வெளிநாட்டு இராட்ணுவத்தினரைஅழைத்து வந்து பயிற்சி வளங்கப்பட்ட பின்னர் உக்கிரேனிற்காக போரிட வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தப்படலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

செம்ரெம்பரில் செலன்ஸ்கி அமெரிக்கா செல்கிறார், திரும்பி உக்கிரேன் போக மாட்டார் என கூறுமளவிற்கு தற்போதய நிலமை மோசமாக உள்ளது என்பது உண்மை, உக்கிரேனிற்கு ஆயுத பிரச்சினை இல்லை ஆளணிப்பற்றாக்குறை, கோட கால முடிவிற்குள் 60000 உக்கிரேனியர்களூக்கு உக்கிரேனில் ஐரோப்பிய ஒன்றியம் உக்கிரேனிற்குள் வைத்து பயிற்சி வளங்கப்படவுள்ளதாக கூறுகிறார்கள், அதில் வெளிநாட்டு இராட்ணுவத்தினரைஅழைத்து வந்து பயிற்சி வளங்கப்பட்ட பின்னர் உக்கிரேனிற்காக போரிட வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தப்படலாம். 

 

நீங்களும் இராணுவ ஆய்வாளராக கலாய்க்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

நீங்களும் இராணுவ ஆய்வாளராக கலாய்க்கிறீர்கள்.

நாங்கள் முன்பு செலன்ஸ்கி  வேறு நாட்டில் தஞ்சம் கோருவார் என விவாதித்திருந்தோம், அதனை நீங்கள் மறுத்திருந்தீர்கள், ஆனால் தற்போது நான் கூறவில்லை இணையத்தில்தான் கலாய்க்கிறார்கள் செலன்ஸ்கி one way ticket இல்தான் அமெரிக்கா செல்வதாக😁,

செலண்சிகியின் பதவிக்காலம் முடிந்தும் பதவியினை விட்டு விலகாமல் இருப்பவர் எதற்காக ஓட வேண்டும்? அண்மையில் கூட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் 50 பில்லியன் இரஸ்சியாவின் பணத்தினை (வாக்குறுதி கொடுக்கப்பட்ட) தருமாறு வேன்டுகோள் விடுத்திருந்தார், நாட்டை விட்டு ஓடுபவராக இருந்தால் எதற்காக இதெல்லாம் செய்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைனின் பொல்டவா நகரின் மீது ரஸ்யா தாக்குதல் - 40 பேர் பலி

03 SEP, 2024 | 05:37 PM
image
 

உக்ரைனிய நகரமான பொல்டவா மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் 180 பேர் காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு கல்வி நிலையங்களும் மருத்துவமனையொன்றும் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192773

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்ரேலிய தொலைக்காட்சிக்குழுவினர் கேர்க்ஸ் பிராந்தியத்தின் நிலவரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கபூர் தொலைக்காட்சி மனதை உலுக்கிம் உக்கிரேன் உண்மை நிலவரங்களை காட்சிப்படுத்தியுள்ளது, வழமையான மேற்கின் பிரச்சாரம் போலல்லாமல் உண்மையான சமூக நலனுடன் சமூக பிரச்சினைகளை கூறுகிறது.

வல்லரசுகளின் ஆதிக்க போட்டிக்கு பலிக்கடாவாகிய இன்னொரு தேசத்தின் உண்மை கதை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கு நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஏறத்தாழ 5.5 மில்லியன் உக்கிரேன் அகதிகளில் போரிடக்கூடிய 1.6 மில்லியன் சனத்தொகையினை குறிவைத்து மேற்கு நாடுகளில் தன்னார்வலராக வருபவர்களுக்கு அந்தந்த நாடுகளில் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது, முதல் கட்டமாக போலந்தினால் பயிற்றுவிக்கப்பட்ட படை பிரிவு (பிரிகேட்) உக்கிரேனின் 160 ஆவது மெக்கனைஸ் பிரிகேட் ஆக இந்த ஆண்டு இறுதியில் களமிறக்கப்பட உள்ளது.

பிரான்ஸ் அரசும் இன்னொரு பிரிகேட்டினை தயார் செய்வதாக கூறப்படுகிறது (அது ஏற்கனவே உக்கிரேன் இராணுவத்தில் உள்ளவர்களா அல்லது அகதிகளாக வந்தவர்களில் இருந்தா என தெளிவாக தெரியவில்லை).

உக்கிரேன் போரினை தொடர்வதற்கு மேற்கு முன்முனைப்புடன் உள்ளது தெளிவாகிறது.

மறுவளமாக போருக்கு போவதை தவிர்ப்பதற்காக செலுத்தப்படும் இலஞ்சம் தற்போதய புதிய கட்டுப்பாடுகளால் அதன் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனாலும் அதனை தவிர்த்து மக்கள் வெளியேற்றம் நிகழ்கிறது, மேற்கின் மென் அழுத்தம் அகதிகளின் மேல் அதிகரித்தால் உக்கிரேன் அகதிகள் இரஸ்சியாவிற்கு போவதை தவிர வேறு வழியில்லை என நினைக்கிறேன், அது மேற்கின் இந்த போர் தொடர்பான விம்பத்தினை பாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2025 ஆம் ஆண்டுக்குள் போரை எதிர்நோக்கி, உக்ரைன் புதிய இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுகளை உருவாக்குகிறது

இந்த படைப்பிரிவுகளுக்கு ஆயிரக்கணக்கான துருப்புக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேவைப்படும்.

டேவிட் கோடாரி
ஃபோர்ப்ஸ் ஊழியர்கள்
டேவிட் ஆக்ஸ் கப்பல்கள், விமானங்கள், டாங்கிகள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றி எழுதுகிறார்.
பின்பற்றவும்
 
62
ஆகஸ்ட் 26, 2024,மாலை 05:40 EDT
ஆகஸ்ட் 26, 2024, 05:52pm EDT இல் புதுப்பிக்கப்பட்டது
  •  
  •  
  •  
பயிற்சியில் உக்ரேனிய பராட்ரூப்பர்.

பயிற்சியில் உக்ரேனிய பராட்ரூப்பர்.

82வது வான் தாக்குதல் படையின் புகைப்படம்

உக்ரேனிய இராணுவம் புதிய இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுகளை எழுப்புகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் பரந்த போர் எந்த நேரத்திலும் முடிவடையும் என்று உக்ரைனின் தலைவர்கள் எதிர்பார்க்காத அறிகுறி இது. புதிய 2,000 பேர் கொண்ட படைப்பிரிவுகளில் முதல் படை அதன் அனைத்து பில்லெட்டுகளையும் நிரப்புவதற்கு சில மாதங்கள் ஆகலாம் - மேலும் படைகள் போருக்குத் தயாராக இன்னும் மாதங்கள் ஆகலாம்.

 
 
 

உக்ரேனிய இராணுவப் படையின் கட்டமைப்பை நெருக்கமாகக் கண்காணிக்கும் மிலிட்டரிலேண்ட், புதிய 160வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்களை சித்தரிக்கும் புகைப்படங்களைப் பெற்றது . மிலிட்டரிலேண்டின் கூற்றுப்படி, புதிய இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுகள்-அவை அனைத்தும் 160 களில் பதவிகளைக் கொண்டவை-வெளிநாடுகளில் பயிற்சி பெறும் மற்றும் அதே நாடுகளில் வாழும் உக்ரேனியர்களிடமிருந்து பல பணியாளர்களை ஈர்க்கும்.

 

160வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவு போலந்தில் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

புதிய படைப்பிரிவுகளை உருவாக்குவது இரண்டு விஷயங்களில் தொடர்கிறது: ஒருவேளை 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட புதிய ஆட்களை வெற்றிகரமாக அணிதிரட்டுதல் மற்றும் உக்ரேனின் போர் முயற்சிக்கு வெளிநாட்டு ஆதரவு. அணிதிரட்டல் என்பது புதிய படைப்பிரிவுகளின் மனிதவளத்தின் ஆதாரம்; வெளிநாட்டு கூட்டாளிகள் தங்கள் கனரக ஆயுதங்களில் பெரும்பகுதியை வழங்குவார்கள்.

 

முந்தைய இராணுவ விரிவாக்கம் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு 160-களின் தொடர் படைப்பிரிவுகளின் உருவாக்கம் வருகிறது. கடந்த இலையுதிர்காலத்தில் தொடங்கி, உக்ரேனிய இராணுவம் 10 புதிய படைப்பிரிவுகளை உருவாக்கியது: நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுகள் , ஐந்து காலாட்படை படைப்பிரிவுகள் மற்றும் ஒரு ஜெகர் படைப்பிரிவு.

காலாட்படை படைப்பிரிவுகள் மிகவும் இலகுவானவை-அவை பெரும்பாலும் டிரக்குகளில் சவாரி செய்கின்றன. ஜெகர் பிரிகேட் என்பது டிரக்குகள் மற்றும் இலகுரக கவச வாகனங்களின் கலவையுடன் கூடிய மிடில்வெயிட் படையாகும். இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுகள் மிகவும் கனமானவை: அவை கண்காணிக்கப்பட்ட மற்றும் சக்கர கவச வாகனங்களில் சவாரி செய்கின்றன மற்றும் வழக்கமாக குறைந்தது ஒரு டஜன் தொட்டிகளைக் கொண்ட நிறுவனத்துடன் பயணிக்கின்றன.

 

இராணுவம் தற்போது எத்தனை 160-சீரிஸ் படைப்பிரிவுகளை உருவாக்குகிறது மற்றும் அவை என்ன வகையான படைப்பிரிவுகளாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இராணுவ விரிவாக்கத்தின் முந்தைய சுற்று ஏதேனும் அறிகுறியாக இருந்தால், 10 இருக்கலாம்.

 

காகிதத்தில், 10 படைப்பிரிவுகளுக்கு 20,000 துருப்புக்கள் தேவை. மே மாதம் அமலுக்கு வந்த உக்ரைனின் சர்ச்சைக்குரிய அணிதிரட்டல் சட்டம், வரைவு வயதை 27ல் இருந்து 25 ஆக குறைப்பதன் மூலமும், வரைவு ஏய்ப்பிற்கான அபராதங்களைச் சேர்ப்பதன் மூலமும், தன்னார்வத் தொண்டர்களுக்கு அதிக ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலமும் மேலும் அரை மில்லியன் மக்களை மில்லியன் நபர்களைக் கொண்ட ஆயுதப் படைகளுக்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல்வேறு தரைப்படைகள்-இராணுவம், மரைன் கார்ப்ஸ் , பிராந்தியங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை சேவையின் சிறப்புப் பிரிவுகள்-சுமார் 100 போர்ப் படைப்பிரிவுகளை மேற்பார்வையிடுகின்றன மற்றும் பெரும்பான்மையான இராணுவ வீரர்களுக்கு கணக்கு கொடுக்கின்றன. வாஷிங்டன் போஸ்டின் அறிக்கை துல்லியமாக இருந்தால் , வசந்த காலத்தில் 60,000 இறப்புகள் உட்பட, உக்ரைனின் பெரும்பாலான போர் இழப்புகளை தரைப்படைகளும் சந்தித்துள்ளன.

உக்ரைன் ஆயுதப் படைகள் முழுவதும் நல்ல இழப்புகளைச் செய்ய போதுமான துருப்புக்களை அணிதிரட்ட வேண்டும், அதே நேரத்தில் புதிய படைப்பிரிவுகளுக்கு துருப்புக்கள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் ஆதரவுப் பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் . ஒரு மில்லியன் மக்கள் இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் வெறும் 38 மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டில் செய்வதை விட இது எளிதானது.

உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் வெளிநாட்டில் வசிக்கும் உக்ரேனியர்களின் பெரிய குழுவிலிருந்து ஆட்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அசோசியேட்டட் பிரஸ் மூலம் பெறப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 18 மற்றும் 64 வயதுக்குட்பட்ட சுமார் 768,000 உக்ரேனிய ஆண்களுக்கு தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது .

கவச வாகனங்களை வழங்குவது சமமாக கடினமாக இருக்கலாம் - வெளிநாட்டு ஆதரவைத் தாங்காமல் உக்ரைன் அதைச் செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுக்கு டாங்கிகள், சண்டை வாகனங்கள், ஹோவிட்சர்கள், ராக்கெட் லாஞ்சர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், பொறியியல் வாகனங்கள் மற்றும் டிரக்குகள் உட்பட பல நூறு வாகனங்கள் தேவை.

பத்து படைப்பிரிவுகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேவைப்படும் . அதை முன்னோக்கி வைக்க, உக்ரைன் மீதான ரஷ்யாவின் பரந்த போரின் முதல் 29 மாதங்களில், உக்ரேனின் கூட்டாளிகள் சுமார் 12,000 வாகனங்களை போர் முயற்சிக்கு உறுதியளித்துள்ளனர் . அந்த வாகனங்கள் அனைத்தும் புதிய யூனிட்டுகளுக்குக் கிடைக்கவில்லை: அந்த 29 மாதங்களில் உக்ரைன் இழந்த சுமார் 6,400 வாகனங்களை அவை மாற்றுகின்றன.

 

150-சீரிஸ் படைப்பிரிவுகளின் உருவாக்கம் ஏதேனும் அறிகுறியாக இருந்தால், 160-சீரிஸ் படைப்பிரிவுகள் நடவடிக்கைக்கு தயாராகும் வரை ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இவை 2025 படைப்பிரிவுகள் - பரந்த போரின் நான்காவது ஆண்டில் போராடக்கூடிய பிரிவுகள்.

ட்விட்டரில் என்னைப் பின்தொடரவும்   எனது  வலைத்தளம்  அல்லது எனது வேறு சில வேலைகளை  இங்கே பார்க்கவும்  .  எனக்கு ஒரு பாதுகாப்பான உதவிக்குறிப்பு அனுப்பவும்  

போர்ப்ஸ் சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்,  கூகிள் மொழி பெயர்ப்பின் உதவியினூடாக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொஸ்கோ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யாவில் குடியிருப்புகள் மீதுடிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்சேதம் பொருள் சேதங்கள் ஏற்படுள்ளன. உலக நாடுகள் பலவும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அதிகாலையில், மாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் பிற எட்டு பகுதிகளின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

மாஸ்கோ நகரில் உள்ள குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலில், 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், 12 பேர் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆளில்லா விமானங்கள் உட்பட 124 ட்ரோன்கள் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் காரணமாக இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாக்குதலை தொடர்ந்து குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள் அவசர, அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக மாஸ்கோ ஆளுநர் ஆண்டிரி வோரோப்யோவ் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் ரஷ்யப் பகுதிகளில் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்றாகும்.

உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலால் மாஸ்கோ நகரில் விமானசேவைகள் பாதிக்கப்பட்டன. மூன்று விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாஸ்கோ நகர் வான்வெளியில் குறைந்த அளவிலான விமானங்களே காணப்பட்டது செயலிமூலம் தெரியவந்துள்ளது. உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/309216

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிர் பார்த்தது தான். (பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரானவன் நான். ஆனால் எதிரி தரும் வலியை புரியவைக்க வேறு தெரிவுகளை அவர்கள் விட்டு வைப்பதில்லை) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

ரஷ்யாவில் குடியிருப்புகள் மீதுடிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

ரஷ்யா உக்ரேனில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது என அலறிய மேற்குலகம் அதே செயலை இன்று ரஷ்ய பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நடத்துகின்றது. 😎

செம காமடி விடுவதில் மேற்குலகினர் நல்லவர்கள் வல்லவர்கள் 😋




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.