Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

விதியின் சதியை பார்த்தீர்களா?  உக்ரேன் எனும் சிறிய கோடு அழிவினை  பலஸ்தீனம் எனும் பெரிய கோட்டு அழிவிற்குள் மேற்குலகை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. 😎

இது இப்படி நடக்கும் என @வாலி 600 நாட்களுக்கு முன் சொன்னபோது, அதை நான் ஆமோதித்த போது -பைபிள் கதையை நம்புகிறோம் என்று சிலர் எழுதினார்கள்🤣

  • Replies 565
  • Views 53.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எல்லாரும் தான் வரி கட்டுகிறார்கள், இதையெல்லாம் சாதனையாகச் சொல்பவர்கள் எங்கள் ஆசியக் குடிகளாக மட்டும் தான் இருப்பரென நினைக்கிறேன்😂. கட்டின வரிக்கேற்ப விழுந்தால் அம்புலன்ஸ், வேலை போனால் சாப்பிடக் க

  • "ஒரு வாரத்தில் கியேவ் விழுந்து விடும்!"  என்று சொன்னது பலித்தது போலவே, "ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும்" என்பதும் பலிக்க இன்னும் ஒரு நாள் தான் மிச்சமிருக்குது😎!  இப்படி ஊர் உலக நிலவர

  • இதையும் இராசதந்திரம் என்று யாழ் களத்தினர் கூறுவார்களோ,...🤣 "ஒலிம்பிக்" கும் அரசியலும் 😁 👇 Lavrov calls IOC out for hypocrisy in context of Palestinian-Israeli conflict "Once again

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Justin said:

இதில் விதி எங்கே இருக்கிறதெனத் தெரியவில்லை. இரண்டு பிரதேச அழிவுகளும் முதிர்ச்சியற்ற மனிதர்கள் தலைமையேற்றமையால் வந்த  அவலங்கள். உக்ரைனில் அவலத்திற்கு 100% காரணம் ரஷ்யாவின் தலைமை, பலஸ்தீனத்தின் அழிவுக்கு இரு தரப்பும் சமபங்காளிகள்!

டொனால்ட் ரம்ப் ஓகேயா? அவரின் நாலு வரிச ஆட்சியிலை இந்த உலகமே அமைதி பூங்காவாக இருந்தது. மேற்குலக வியாபாரிகள் கதறியதை தவிர.....

அண்மைய மூன்று வருடமாக எந்த முதிர்சியற்ற மனிதர்களின் ஆட்சி நடக்கின்றது? ஒரே கலவர பூமிகளாகத்தான் தெரிகின்றது.

அனைவரும் நலமோடிருக்க வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, goshan_che said:

நான் அவதானித்தவரை  உக்ரேன் அழிவில் கவலை கொண்டவர்கள் கஸா அழிவிலும் கவலை கொள்வதாகவே தெரிகிறது.

பலர் ரஸ்யா போலவே இஸ்ரேலும் போர் குற்றம் செய்கிறது. ஹமாசை அடிக்க, மக்களை மானாவரியாக தாக்குவது போர் குற்றம், காசாவில் இருந்து வெளியேற்ற நினைப்பது இனசுத்தீகரிப்பு என்பது வரை எழுதியுள்ளார்கள். 

ரஷ்யா போர்க்குற்றம் செய்தது, ஆனால் அதற்கு மேற்குலகு ஆயுத உதவி செய்யவில்லை.மாறாக பொருளாதார தடைகளையும் இன்னும் மேலதிக தடைகளை விதித்தது. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என  நியாயம்  வழங்கி விட்டு ரஷ்ய நாட்டவரை எங்கும் விளையாட மேற்குலகு அனுமதிக்கவில்லை என்பது
 வேறு விடயம்.
ஆனால் இஸ்ரேல் போர்க்குற்றம் செய்து விட்டது என கூறிக்கொண்டு... அந்த நாட்டுக்கு துக்கம் விசாரித்து ஆயுத உதவிகளையும்  பொருள் பண உதவிகளையும் செய்கின்றது இந்த மேற்குலகம்.

நீதி நேர்மை நியாயம் மனிதாபிமானம் மனிதவுரிமை பற்றி உரக்க பேசுபவர்கள் தான் மூன்றாம் உலக நாடுகளில் அதை மீறுகின்றார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதைத்தான் சர்வதேச உறவுகள் வெறும் காட்டாச்சி தத்துவத்திலேயே நகர்கிறன என்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2023 at 09:29, goshan_che said:

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு.

இரஸ்சிய - உக்கிரேன் போர் ஆரம்பித்து இதுவரை 75 பில்லியன் உதவி மட்டும் அமெரிக்க செய்துள்ளது(உத்தியோக பூர்வ அறிக்கையின் படி என கருதுகிறேன்) ஆனால் இஸ்ரேலிற்கு உடனடியாக 100 பில்லியனை ஒதுக்கியுள்ளது.

இரஸ்சியாவினை அமெரிக்கா அழிப்பதுதான் நோக்கம் என்றால் இரஸ்சிய பாதுகாப்பிற்கு அண்ணளவாக 112 டொலரினை 2024 பாதீட்டில் இரஸ்சியா ஒதுக்க உள்ளதாம், ஏன் அமெரிக்கா ஒரு 200 பில்லியனை உக்கிரேனிற்கு வழங்கி இராணுவ மேலாதிக்கத்தினை உக்கிரேனிற்கு ஏற்படுத்தகூடாது?

இது எனது சந்தேகம், உங்களது கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

தத்துபிள்ளைக்கும் சொந்த பிள்ளைக்கும் வித்தியாசம் இருக்குத்தானே.

அமெரிக்க அரசியலில் யூதர் காட்டும் ஆதிக்கத்தை உக்ரேனியர் காட்டமுடியாது அதன் வெளிப்பாடுதான் இது.

ஆனால் இரெண்டு பேருக்கும் உதவ கூடிய கனம் மேற்குக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

உ.ப.ப.செ

கெசோன் நகரின் மறுகரையில் தரையிறங்கிய உக்ரேனிய அதிரடி துருப்புகள் இரு சிறிய கிராமங்களில் முன்னரங்கை அமைத்துள்ளனர் என்கிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

உ.ப.ப.செ

கெசோன் நகரின் மறுகரையில் தரையிறங்கிய உக்ரேனிய அதிரடி துருப்புகள் இரு சிறிய கிராமங்களில் முன்னரங்கை அமைத்துள்ளனர் என்கிறனர்.

வாழ்த்துக்கள் உக்ரேனுக்கு… மேற்கின் அரசியல் ஆதாயத்துக்கு தம்மை பலிக்கடா ஆக்காமல் ரஷ்யாவிற்கு எதிராக போராடி இருந்தால் ஒட்டுமொத்த உலகின் ஆதரவும் உக்ரேனுக்காக மட்டுமே இருந்திருக்கும்.. இப்பவும் ஒண்டும் லேட் இல்லை.. மேற்கு மட்டும் இல்லை உலகின் உதவிகளை பெற்றுக்கொண்டு ஆனால் மேற்கின் சூழ்ச்சிக்குள் விழுந்து தமது சுயத்தை இழந்துவிடாமல் தனித்து போராடி வெற்றிபெற வாழ்த்துக்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாழ்த்துக்கள் உக்ரேனுக்கு… மேற்கின் அரசியல் ஆதாயத்துக்கு தம்மை பலிக்கடா ஆக்காமல் ரஷ்யாவிற்கு எதிராக போராடி இருந்தால் ஒட்டுமொத்த உலகின் ஆதரவும் உக்ரேனுக்காக மட்டுமே இருந்திருக்கும்.. இப்பவும் ஒண்டும் லேட் இல்லை.. மேற்கு மட்டும் இல்லை உலகின் உதவிகளை பெற்றுக்கொண்டு ஆனால் மேற்கின் சூழ்ச்சிக்குள் விழுந்து தமது சுயத்தை இழந்துவிடாமல் தனித்து போராடி வெற்றிபெற வாழ்த்துக்கள்..

செலென்ஸ்கி பற்றி பல மேற்கின் தலைவர்களுக்கு கடுப்பு. காரணம் ஏதோ கொடுத்து வைத்த காசை கேட்பது போல் கேட்கிறார். சொல்வழி கேட்டு நடக்கிறார் இல்லை என்பதால்.

அந்த வகையில் உக்ரேன் இதுவரை ஒரேயடியாக மேற்கின் நலனை அன்றி தன் நலனையும் முன்னிறுத்தியே நடக்கிறது.

இது ஒரு பெரும் எடுப்பிலான நகர்வாக தெரியவில்லை. Probing operations அப்படி ஒரு “குத்தி பார்க்கும்” நடவைடிக்கை என்றே நினைக்கிரேன். சேறு, குளிர் காலம் - இனி இருதரப்பு நகர்வும் அடுத்த இளவேனிலில் வரைக்கும் இல்லை என்பதே நான் வாசிக்கும் விடயம் தெரிந்தோரின் நோக்கு.

 2024 நவம்பருக்கு முன் போதியளவு நிலத்தை மீட்டபின் உக்ரேன் ரஸ்யாவிடன் பேசி ஒரு ஒப்பந்ததை போட்டால் நல்லம். அது எஞ்சும் உக்ரேனுக்கு நேட்டோ உறுப்புரிமையாய் இருக்க வேண்டும்.

டிரெம்ப் வெண்டால் உக்ரேனுக்கு கேம் ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் - ரஸ்ய யுத்தம் என்பது மேற்கின் நலன்கள் VS  ரஸ்ய நலன்களுக்குமான யுத்தம் என்பதை யாழ் களத்தினர் பலர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர்.

இதைப் பலர் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகின்ற போதும் அவர்களைப் பலர் ஏளனம் செய்தனர் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

டொனால்ட் ரம்ப் ஓகேயா? அவரின் நாலு வரிச ஆட்சியிலை இந்த உலகமே அமைதி பூங்காவாக இருந்தது. மேற்குலக வியாபாரிகள் கதறியதை தவிர.....

அண்மைய மூன்று வருடமாக எந்த முதிர்சியற்ற மனிதர்களின் ஆட்சி நடக்கின்றது? ஒரே கலவர பூமிகளாகத்தான் தெரிகின்றது.

அனைவரும் நலமோடிருக்க வேண்டுகின்றேன்.

அப்ப இலங்கைக்கு கோத்தா, மகிந்தா, மைத்திரி ரீம் ஓகேயா உங்களைப் பொறுத்த வரை? அவர்களும் "அமைதி" யான சிறிலங்காவைத் தந்தார்கள் என்பீர்களா😂?

அமைதி என்பது "யுத்தமில்லா நிலைமை" என்பது மிகவும் எளிமையான, நுனிப்புல் மேயும் பார்வை. ட்ரம்ப் இருந்திருந்தால், இப்ப புரின் கியேவில் நின்று ஜேர்மனிக்கு எரிவாயுவை வெட்டுவதா இல்லையா என்று திட்டம் போட்டிருப்பார்! இது யுத்தமில்லாமல் நடந்திருக்கும் என்பது உண்மை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Justin said:

உங்கள் கருத்து வெற்றிக்காக ஆட்டுக்குள் மாட்டை ஓட்டி திசை திருப்பவதே வழக்கமாக கொண்டுள்ளீர்கள். நான் சொல்ல வந்தது வேறு......

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

உங்கள் கருத்து வெற்றிக்காக ஆட்டுக்குள் மாட்டை ஓட்டி திசை திருப்பவதே வழக்கமாக கொண்டுள்ளீர்கள். நான் சொல்ல வந்தது வேறு......

"ஒருவர் ஆட்சியில் இருக்கும் போது போரே இல்லையென்றால், அது உத்தம ஆட்சி தான்" என்பதை ஏன் இலங்கையிலும் பிரயோகிக்க முடியாது எனக் கேட்டேன்! இதன் பதில் உங்களுக்குத் தெரியுமென்பதால் பேசாமல் இருக்கிறீர்கள்!

இது ஒன்றும் தேவையில்லாத புகுத்தல் அல்ல: ட்ரம்ப் ஆட்சியின்  உலக அமைதி, அமெரிக்கா முழுவதும் தன் கவனத்தை உள்நோக்கித் திருப்பிக் கொண்டதால் உலகைக் கைகழுவி விட்ட அமைதி! இது ஏற்கனவே முன்னர் ஒரு தடவை நடந்திருக்கிறது 30 களில் - அதன் விளைவு என்னவென்பதை ஏற்கனவே ஒரு தொடரில் எழுதியாகி விட்டது. அப்படித் தான் இன்றும் விளைவு விபரீதமாக (குறிப்பாக ஐரோப்பாவிற்கு) இருந்திருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

உலக அமைதியின்மைக்கு அமெரிக்காவின்  ஏகாதிபத்தியக் கொள்கை மிகவும் முக்கியமான காரணம் என்பது மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

😀

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் இப்போதே பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாவது நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

தத்துபிள்ளைக்கும் சொந்த பிள்ளைக்கும் வித்தியாசம் இருக்குத்தானே.

அமெரிக்க அரசியலில் யூதர் காட்டும் ஆதிக்கத்தை உக்ரேனியர் காட்டமுடியாது அதன் வெளிப்பாடுதான் இது.

ஆனால் இரெண்டு பேருக்கும் உதவ கூடிய கனம் மேற்குக்கு உண்டு.

நீங்கள் நான் கூறவந்தை தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் என கருதுகிறேன், 

எனது சந்தேகம் நீங்கள் கூறுவது போல அமெரிக்காவிற்கு காசு ஒரு பிரச்சினை இல்லை என்பதற்காகவே இஸ்ரேலிற்கு உடனடியாக 100 பில்லியன் கொடுத்தது, அப்படியாயின் இதே தொகையினை உக்கிரேனிற்கு வழங்கியிருந்தால் இரஸ்சியா 87 பில்லியன் ஒதுக்கியிருந்த காலத்தில் 175 பில்லியனை கொண்டு ஒரு இரானுவ மேலாதிக்கதினை உக்கிரேன் ஏற்படுத்தி இரஸ்சியாவினை தொற்கடித்திஉர்க்க முடியுமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, vasee said:

அதுதான் சொல்கிறேன். சொந்த பிள்ளைக்கு யோசிக்காமல் அள்ளி கொடுப்பார்கள். தத்து பிள்ளைக்கு கிள்ளி கொடுப்பார்கள்.

உக்ரேன் போகும் பணத்தை ரிப்பளிகன்ஸ் எதிர்ப்பார்கள் ஆனால் இஸ்ரேலுக்கு அநேகம் bi partisan ஆக போகும்.

இப்படி பல அரசியல் காரணங்கள் உளன.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vasee said:

நீங்கள் நான் கூறவந்தை தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் என கருதுகிறேன், 

எனது சந்தேகம் நீங்கள் கூறுவது போல அமெரிக்காவிற்கு காசு ஒரு பிரச்சினை இல்லை என்பதற்காகவே இஸ்ரேலிற்கு உடனடியாக 100 பில்லியன் கொடுத்தது, அப்படியாயின் இதே தொகையினை உக்கிரேனிற்கு வழங்கியிருந்தால் இரஸ்சியா 87 பில்லியன் ஒதுக்கியிருந்த காலத்தில் 175 பில்லியனை கொண்டு ஒரு இரானுவ மேலாதிக்கதினை உக்கிரேன் ஏற்படுத்தி இரஸ்சியாவினை தொற்கடித்திஉர்க்க முடியுமல்லவா?

அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, எந்த நாட்டுக்குமே காசை சேமிக்கத் தான் விருப்பம் இருக்கும். ஆனால், காசை மட்டும் சேமித்து வைத்து, நாட்டின் நலன்களை  ஜனநாயக மறுப்பாளர்களிடம் கையளித்து விட்டால் (புரின், ஹமாஸ்), சித்திரத்தை போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு சுவரை இடித்து விடுவது போலாகும்!

பல உரையாடல்களில் உங்களுக்கு நான் விளக்க முயல்வது இதைத் தான்: அமெரிக்கா என்பது பணக்கையிருப்பு என்ற ஒற்றைக் கூடைக்குள் மட்டும் தன் எல்லா முட்டைகளையும் வைத்து விட்டுக் காத்திருக்கும் தூர நோக்கற்ற தேசமல்ல! கடன் இருக்கும்/வளரும், உள்நாட்டில் புறுபுறுப்பு இருக்கும், சாதாரண அமெரிக்கர்களின் வருமானம் குறையும்/கூடும், ஆனால் அமெரிக்காவும் பல நூறு ஆண்டுகளுக்கு இருக்கும்! ஏனெனில் you can chew gum and walk!

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2023 at 00:21, Justin said:

நான் கூறவந்த விடயம் அமெரிக்கா போரை முடித்துவிட விரும்பவில்லையோ என்பதைத்தான்.

அதற்கு காரணம் ஐரோப்பாவின் விளிம்பில் போரை தொடர்வதன் மூலம் பொருளாதார உறுதித்தன்மையினை சிதைப்பதற்காக இருக்கலாம், ஏனெனில் புவியியல், பொருளாதார, வரலாற்று ரீதியாக ஐரோப்பா ஒரு முதலாவது அதிகாரப்போட்டியாளர்.

மற்றது நீங்கள் கூறுவது போல அமெரிக்கா இருக்கும், ஆனால் தற்போதய நிலை போலில்லாமல் இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இருக்கும் பிரித்தானியா போல் என கருதுகிறேன் (இலக்கங்கள் அவ்வாறுதான் கூறுகின்றன). 

அமெரிக்கா உள்நாட்டில் சமூக சேவை, மருத்துவ, கல்வி செலவீட்டினை மட்டுபடுத்துவதாக கேள்விப்பட்டேன், அதாவது உயர் வருமானத்தில் உள்ளவர்களின் நிலை பரவாயில்லை ஆனால் குறைந்த வருமானம் பெறும் மக்கள் நிலை கடினம், கல்வி ஒரு நாட்டிற்கு எவ்வளவு அவசியம் மாணவ கடனை தளர்வு செய்யும் வழக்குகள் மில்லியன் கணக்கான டொலரிற்காக தள்ளுபடி செய்யப்படுகின்ற நிலையினை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? என்னை பொறுத்தவரை ஒரு அழிவின் ஆரம்பமாக பார்க்கிறேன்.

தற்போதிருக்கும் உலக மேலாதிக்கம் அமெரிக்காவினை விட்டு தானாக போய்விடும், அதனால் அமெரிக்காவிற்கு பெரிதாக இழப்பு இருக்கும் என நான் நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

நான் கூறவந்த விடயம் அமெரிக்கா போரை முடித்துவிட விரும்பவில்லையோ என்பதைத்தான்.

போரை முடித்து விட்டிருந்தால் - இப்போ ரஸ்யா - ஈரானின் சப்போர்ட்டுக்கு வர வாய்ப்பு அதிகம் இல்லையா?

இந்த போரில் அமரிக்கா பங்கு பெறுவதில் பல எமக்கு புரிகின்ற இலக்குகள் (பின்லாந்து நேட்டோவில் சேரல்) சில புரியாத இலக்குகளும் இருக்கும்.

போர் முடிந்து 10/15  வருடங்களின் பின் தான் முழு திட்டமும் தெரியவரும்.

5 hours ago, vasee said:

என்னை பொறுத்தவரை ஒரு அழிவின் ஆரம்பமாக பார்க்கிறேன்.

ஒரு குழந்தை பிறந்து, வளர்சியின் முதல் நாளிலேயே அதன் இறப்பின் முதல் நாளும் ஆரம்பிக்கிறது. உலகில் எல்லாமுமே இப்படித்தான். சாம்ராஜ்யங்களும், வல்லரசுகளும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

போரை முடித்து விட்டிருந்தால் - இப்போ ரஸ்யா - ஈரானின் சப்போர்ட்டுக்கு வர வாய்ப்பு அதிகம் இல்லையா?

இந்த போரில் அமரிக்கா பங்கு பெறுவதில் பல எமக்கு புரிகின்ற இலக்குகள் (பின்லாந்து நேட்டோவில் சேரல்) சில புரியாத இலக்குகளும் இருக்கும்.

போர் முடிந்து 10/15  வருடங்களின் பின் தான் முழு திட்டமும் தெரியவரும்.

ஒரு குழந்தை பிறந்து, வளர்சியின் முதல் நாளிலேயே அதன் இறப்பின் முதல் நாளும் ஆரம்பிக்கிறது. உலகில் எல்லாமுமே இப்படித்தான். சாம்ராஜ்யங்களும், வல்லரசுகளும் கூட.

மன்னிக்கவும் கோசான், நான் உங்கள் பதிவிற்கு பதிலளிக்காமைக்கு.

எனது சந்தேகத்தினை நீங்கள் உண்மையாக உணர்ந்திருக்கவில்லை என்பதனை தற்போது உணருகிறேன், ஆனால் நீங்கள் வேணுமென்றே கருத்தினை திசை திருப்புவதாக நானாக ஒரு முடிவுக்கு வந்து கருத்தாடலை முடித்துவிடலாம் என்று விட்டு விட்டேன், பின்னர் ஜஸ்ரினது கருத்தினை பார்த்த பின்னர்தான் உண்மையில் பூடகமாக கூறியது தவறோ எனும் சந்தேகத்தினை உருவாகியது.

அமெரிக்க தற்போதய கடன் 122% மொத்த உள்நாட்டு வருமானத்தில் உள்ளது.

https://www.presidency.ucsb.edu/statistics/data/federal-budget-receipts-and-outlays

https://www.macrotrends.net/countries/USA/united-states/gdp-gross-domestic-product#:~:text=U.S. gdp for 2022 was,a 4.13% increase from 2018.

https://www.investopedia.com/us-national-debt-by-year-7499291

மேலே உள்ள இணைய தளங்கள் உள்ளடங்கலாக இணையதளங்களில் இருந்து பெறப்பட்ட தகவலினடிப்படையில் எதிர்பார்ப்பு கடன் தொகையான 240% (GDP) அடைவதற்கு 16 ஆண்டுகள் எடுக்கும் (2039).

இதற்கு பயன்படுத்திய தரவு

தற்போதய கடன் 122$ (GDP) 

பாதீட்டில் துண்டுவிழும் தொகை அதிகரிப்பு 23% (கடந்த ஆண்டு செப்டெம்பரில் இருந்து இந்த ஆண்டு ஒக்டோபர் வரையான காலம்)

பொருளாதார வளர்ச்சி விகிதம் 3%.

முக்கிய பிரச்சினை பாதீட்டில் துண்டுவிழும் தொகையின் விகிதம் ஆகும், அண்மையில் பைடன் 2 ரில்லியன் வருமான அதிகரிப்பினை மேற்கொள்வதற்காக உயர்வருமானம் பெறுவோர்களின் மீதான அதிக வருமான வரிவிதிப்பு, மற்றும் நிறுவனங்களின் மீதான வரிவிதிப்பு (மொத்த வரிவருமானத்தில் 49% தனிநபர் வரியில் இருந்து வருமானம் பெறும் அமெரிக்க அரசு, நிறுவனங்களின் வரி விதிப்பின் மூலம் வெறும்10% க்கும் சற்று குறைவான அளவிலேயே வரிவருமானம் பெறுகிறது).

அமெரிக்க அரசு எதிம்கொள்ளும் பிரச்சினையினை உணர்ந்துள்ளதாலேயே 4.44 ரில்லியன் வருமானத்தினை 6.44 ரில்லியனுக்கு உயர்த்த முனைகிறது, இதன் மூலம் அமெரிக்க அரச தரப்பு தாம் எதிகொள்ளும் ஆபாயத்தினை உணர்ந்துள்ளது.

முன்பு (கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன்பு இரஸ்சிய உக்கிரேன் போர் திரிகளில் ஒன்று நாம் விவாதித்து கொண்ட)  கீன்ஸின் தத்துவார்த்ததின் அடிப்படையில் 1930 களில் தோன்றிய புதிய திட்டம் அமெரிக்க சாம்ராஜ்ஜித்தினை உருவாக்க உதவியது போல மீண்டும் செயல்படுத்தப்படவேண்டும்.

கல்வி கடன் விவகாரத்தில் 300 பில்லியன் வருமான இழப்பு ஏற்படவில்லை என நோக்குவது ஒரு குறுகியகால தீர்வாகும், நீண்ட காலத்தில் இது ஒரு எதிர்வினையாற்றும் என கருதுகிறேன் (தவறாக இருக்கலாம்).

வரி விகித அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சியினை பாதிக்கும், அரசின்நிதிக்கொள்கையினை(Fiscal policy) பாதிக்கும்.

இத்தகைய சமூக, பொருளாதார பிரச்சினையினை அமெரிக்க அரசு எவ்வாறு எதிர்கொள்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடனை நேட்டோவில் இணைக்கும் தீர்மானத்தை துருக்கி பாராளுமன்றுக்கு முன் மொழிந்தார், துருக்கி ஜனாதிபது எர்டோகன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

சுவீடனை நேட்டோவில் இணைக்கும் தீர்மானத்தை துருக்கி பாராளுமன்றுக்கு முன் மொழிந்தார், துருக்கி ஜனாதிபது எர்டோகன்.

உந்த நேட்டொ செய்த நற்செயல்கள் என்னவென்று சொல்லமுடியுமா சார்? 🤣
ரஷ்யா எண்ட கறள் புடிச்ச தகர டப்பாவை இங்கும் காவிக்கொண்டு வர வேண்டாம் என வேண்டப்படுகின்றீர்கள்.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உந்த நேட்டொ செய்த நற்செயல்கள் என்னவென்று சொல்லமுடியுமா சார்? 🤣
ரஷ்யா எண்ட கறள் புடிச்ச தகர டப்பாவை இங்கும் காவிக்கொண்டு வர வேண்டாம் என வேண்டப்படுகின்றீர்கள்.😁

நல்லது செய்ய அது என்ன charity யா🤣.

அது ஒரு இராணுவ கூட்டமைப்பு.

அதில் உறுப்பினராக உள்ள சிறிய நாடுகள் பலதை கறள் பிடிச்ச தகர டப்பா குத்தாமல் காப்பாற்றி இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

நல்லது செய்ய அது என்ன charity யா🤣.

அது ஒரு இராணுவ கூட்டமைப்பு.

அதில் உறுப்பினராக உள்ள சிறிய நாடுகள் பலதை கறள் பிடிச்ச தகர டப்பா குத்தாமல் காப்பாற்றி இருக்கிறது.

ஒரு காலமும் இல்லாத அச்சுறுத்தல்/குத்தல் எல்லாம் எங்கையிருந்து இப்ப எதுக்காக வந்ததாம்? 😎

இவ்வளவு காலமும் நல்லாய்த்தானே போய்க்கொண்டிருந்தது? 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.