Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, விசுகு said:

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதயத்தை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால் இந்த இடைவெளியை பயன்படுத்தி ஆட்டத்தை அதிகம் ஆடியது ரசியா. ரசியாவின் இந்த கபடத்தை கடந்தும் அமெரிக்க ஐரோப்பிய உறவு நிலைப்பது தான் உலக அமைதியை விரும்புபவர்களின் சாதனை.

ஐரோப்பியர்களுக்கும் ரஸ்யாவுக்கும்மான பரஸ்பர அவநம்பிக்கையும் மோதல் போக்கும் குறைந்தத்கு ஆயிரம் ஆண்டு வயசு.

இதை போல இருந்த பல பிணக்குகளை (பிரிட்டன்-பிரான்ஸ்-ஜேர்மன்) முடிவுக்கு கொண்டு வந்ததே ஈயூவின் சாதனை. இதன் மூலம் குறைந்தது மேற்கு ஐரோப்பாவிலாவது யுத்தத்தை தவிர்க முடிகிறது(வரலாற்றில் முதல் முறையாக).

இதே ஒழுங்கில் ரஸ்யா வரும் வாய்பு இருந்தது. ஆனால் புட்டினின் சாம்ராட் கனவு அதை கெடுத்து விட்டது.

  • Thanks 1
  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே மீள மீள சொல்லப்படும் இன்னொரு மொக்கு கதை பற்றியும் சொல்லியாக வேண்டும்.

முன்னரும் இதை பற்றி எழுதி இருந்தேன்.

மேற்கில் இருக்கும் ஜனநாயக ஒழுங்கும், வட கொரியா, ஆப்கானிஸ்தானின், இலங்கயின் (உதாரணம்) ஒழுங்கும் ஒன்றுதான் என ஒரு பொய்யான சமன்பாடு போடப்படும்.

ஆங்கிலத்தில் இதை false equivalence என்பர். 

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ஒழுங்கு இருப்பது உண்மை ஆனால் இலங்கையின் ஒழுங்கும், ஜேர்மனியின் ஒழுங்கும் சமனல்ல.

அவை சமன் என்றால் தமிழர் நாம் கூட்டமாக இலங்கையை விட்டு ஜெர்மனிக்கு வந்திருக்க வேண்டி வராது.

ஆகவே ஜேர்மனியின், ஈயுவின் ஒழுங்கு மேம்பட்டதே. அதை தமது கண்டங்களில்லாவது தக்க வைக்க இந்த நாடுகள் முயல்வதை தவறு என சொல்ல முடியாது.

ஆப்கானிஸ்தானுக்கு அல்லது ஈராக்குக்கு இந்த ஒழுங்கை ஏற்றுமதி செய்ய அமேரிக்க முனைவது மொக்குத்தனம்தான், ஆனால் ஐரோப்பாவில் இந்த ஒழுங்கை பரப்பி, கண்டத்தை யுத்தமற்ற கண்டமாக மாற்ற ஐரோப்பிய நாடுகள் முனைவது நியாயமான அணுகுமுறையே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சனநாயகம் என்பது எப்படி ஒரு சிந்தனையோ அதேபோல பல்வேறு வகையான சிந்தனைமுறைகள் உலகெங்கிலும் காலத்திற்குக் காலம் தோன்றுகிறது, மறைகிறது, மீண்டும் புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. 

எனது சிந்தனைதான் சரியென்று கூறுவது சனநாயக முறைப்படியே பிழையானது. 

மக்கள் குழுக்கள், நாடுகள் தமது நாகரீக முறைமைக்கேற்ப த்ங்களுக்கு எது தேவையோ, பொருத்தமானதோ அதைத் தெரிந்தெடுக்கிறார்கள். 

உந்த வியாதிக்கு எனது டிஸ்பன்சரியில, நான்  குடுக்கிற மருந்துதான் நல்லது என்பதுபோல இருக்கிறது சனநாயகம்தான் சிறந்தது என்று கூறுவது. 

உனது மருந்துதான் சிறந்தது என்றால் அதைக் கூவிக் கூவி விற்கவேண்டுமே தவிர,  வீதியால் போவோர் வருவோரைப் பிடித்து வாயில் திணிக்கக் கூடாது. அதுதான் சனநாயகமும்கூட,.....

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உ.ப.ப.செ

மரியுபோல் அருகில் வெடிப்பாம்.

Sedovo எனும் ஊரில் உள்ள ரஸ்ய தளமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

ஈயூ-ரஸ்யா சுமூக உறவின் அடித்தளமே இரெண்டு பகுதியும் தேர்தல் ஜனநாயகத்தில், சட்டத்தின் ஆளுமையில் நம்பிக்கை வைத்த ஜனநாயக அமைப்புகள் என்ற அடிப்படைதான்.

ரஸ்யா - ஈயு  உறவு புட்டினின் முதலாவது ஜனாதிபதி காலம் முடியும் வரை சுமூகம். அதன் பின்னர் தான் கெடுகிறது.

ஏன்? ஏன் எனில் அதன்பின்புதான் புட்டின் ரஸ்யாவை ஒரு பெயரளவு ஜனநாயம் உள்ள நடைமுறை சர்வாதிகார நாடு ஆக்குகிறார்.

இது ஏன் ஈயுவுக்கு பிரச்சனை?

ஏன் எனில் சில ஜனநாயக அடிப்படைகளை அனைவரும் ஏற்று நடந்து அதன் மூலம் ஐரோப்பாவை சர்வாதிகாரம் அற்ற, ஜனநாயக கண்டம் ஆக்கி, ஐரோப்பிய கண்டத்தில் யுத்தம் வராமல் தடுப்பதுதான் ஈயுவின் founding principle உருவாக்கல் தத்துவம். 

ஆகவே புட்டினின் பதவியாசை, ராஸ்யாவுள் எதிர் கட்சிகள் முடக்க்கம், தானே ஒரு போதும் மாற்ற மாட்டேன் என்ற அரசியலமைப்பை மாற்றி (கிட்டத்தட்ட) ஆயுட்கால ஜனாதியாகிமை இவைதான் நல்லுறவை கெடுத்தன.

அயர்ச்சியாக இருந்தால் பதில் எழுத வேண்டாம்.

சரி புட்டின் சர்வாதிகார போக்குடன் போக முனைகின்றார் என்றால்......
ரஷ்யா சோவியத் ஒன்றியமாக இருக்கும் போதே ஐரோப்பிய நாடுகள் அதனுடன் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்தன. எரிபொருள் தேவையிலும் ரஷ்யாவையே பெரிதாக நம்பியிருந்தன.அப்போது உக்ரேன் ஊடாகவே எரிவாயு விநியோகம் நடை பெற்றது.( அந்த எரிவாயு குழாய்களில் ஓட்டை போட்டு உக்ரேன் எரிவாயுவை களவெடுத்தது வேறை விசயம்) அப்போது இருந்த சர்வாதிகார ஆட்சி இன்று ரஷ்யாவில் இல்லை.மேலைத்தேய வர்த்தக நிறுவனங்கள் தாராளமாகவே அனுமதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட மேலைத்தேய மக்கள் மாதிரியே ரஷ்ய மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இன்றைய ரஷ்யாவில் சர்வாதிகார ஆட்சி அங்கு ஜனநாயகம் அறவே இல்லை என்பதால் தான் இவ்வளவு களேபரம் என்றால்.....? மேற்குலகு இன்றைய கால கட்டத்தில் யாருடன் அதிக தொடர்பு வைத்து வர்த்தகம் செய்கின்றார்கள்?
சீனா,சவூதிஅரேபியா,கட்டார்,துபாய்,வெனிசுவெலா இவையெல்லாம் ஜனநாயக நாடுகளா?

புட்டின் சர்வாதிகாரி என்றால் மேற்குலகின் வெளிநாட்டு அரசியலும் சர்வாதிகார போக்குதான்.

மீண்டுமொருமுறை எழுதுகின்றேன் அயர்ச்சி,அலுப்பு,அளர்ச்சி என்றால் பதில் எழுத வேண்டாம்.ஏனென்றால் உக்ரேன் சம்பந்தப்பட்ட திரிகளில் உங்கள் அலுப்பை காவிக்கொண்டே திரிவீர்கள் என்பதற்காக மட்டும். 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

அயர்சி ஏற்படுவது 3 மாதம் கழித்து அதே கேள்வியை திருப்பி கேட்கும் போதுதான். இப்போ நீங்கள் கேட்டது புதிதாக உள்ளது. ஆகவே போன்வீட்டா குடித்த புத்துணர்சியோடு பதில் சொல்கிறேன்.

ஆம், மட்டுபட்ட்ட அளவில் சோவியத்துடன் வியாபார தொடர்புகள் இருந்தன. அதே போல் சவுதி போன்ற மேற்கின் ஒழுங்கை கை கொள்ளாத நாடுகளுடன் இன்றும் உள்ளது.

ஆனால் சோவியத்துடன் சரி நிகரான எதிரி, நான் மேலே சொன்ன ஐரோப்பிய ஒழுங்கை குலைக்கும் சக்தி என்ற அளவிலேயே டீல் பண்ணினார்கள். அப்போதும் செக், போலந்து, லத்வியா போல இரும்பு திரைக்கு அப்பால் இருந்த நாடுகளை ஒரு நாள் ஐரோப்பிய ஜனநாயக குடும்பத்தில், இணைக்கும் எண்ணம் வேலைப்பாடுகள் நடந்தன.

பெர்லின் சுவரின் வீழ்ச்சி, அதன் பின் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளை அவர்கள் பெரு விருப்பில்  இந்த ஒழுங்கில் சேர்த்தது.

ரஸ்யா பொருளாதாரத்தில் தள்ளாடினாலும், வரலாற்றில் முதல் முறையாக ஜெர்மனியை, பிரான்சை, பிரிட்டனை போல் பழைய மோதல் போக்கை தவிர்த்து, சூப்பர் பவர் கனவை விடுத்து அதுவும் இந்த ஐரோப்பிய ஒழுங்கில் நாலில் ஒரு பங்காளியாக காலப்போக்கில் வரும் நிலை உருவானது.

இதன் வழியேதான் ஐரோப்பாவின் சந்தை ரஸ்யாவிற்கு திறக்கப்பட்டதும். புட்டின் டவுனிங் ஸ்டீடில் வந்து பியர் அடித்தத்தும், ஜேர்மனி எரிவாயுவை மலிவாய் பெற்றதும்.

இரண்டு முறைக்கு மேல் மெட்வேட்டவை பொம்மை அதிபர் ஆக்கும் போதுதான் விரிசல் முதலில் வருகிறது.

இந்த விரிசல் சோவியத்திடமோ, சவுதியிடமோ வராது. ஏன் என்றால் அவர்கள் அப்படித்தான் என்பதை ஏற்றே அவர்களுடன் டீல் பண்ணுகிறார்கள்.

ஆனால் கோர்பசேவுக்கு பின்னான ராஸ்யா ஐரோப்பிய ஜனநாயக ஒழுங்கை ஏற்கும், அதன் ஒரு தூணாக இருக்கும் என கருத தலைப்பட்ட வேளையில்,  புட்டின் தன் ஒரு மனிதனின் நீடித்த பதவியாசைக்காக இந்த உறவை குழப்புகிறார்.

அவரின் பதவியாசை மட்டும் அல்லாமல், பிரிட்டன், ஜேர்மன், பிரான்ஸை போல தானும் ஒரு முன்னாள் சூப்பர் பவர் ஆனால் இப்போ ஒரு முக்கியமான ஐரோபிய நாடு என்ற அந்தஸ்து குறைப்பையும் புட்டின் சகிக்கவில்லை.

நிலமை இப்படி போகும் போது ரஸ்யாவை பழைய படி சோவியத்தை டீல் பண்ணியது போல டீல் பண்ணுவதை தவிர ஈயுவுக்கு வேறு வழியில்லை.

இதன் வழியே இவங்கள் ரஸ்யாவை ஓரம்கட்ட, புட்டின் முடிந்தளவு ஈயுவை குழப்பியடிக்க - முடிவு இரெண்டாவது இரும்பு திரையில் வந்து நிற்கிறது.

இந்த இரெண்டாம் இரும்பு திரை எங்கே விழுவது, உக்ரேன் போலந்து போர்டரிலா அல்லது உக்ரேனுக்குள்ளாகவா என்பதே இப்போ நடக்கும் யுத்தத்தின் முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
38 minutes ago, குமாரசாமி said:

புட்டின் சர்வாதிகாரி என்றால் மேற்குலகின் வெளிநாட்டு அரசியலும் சர்வாதிகார போக்குதான்.

நிச்சயமாக. அதுதான் ஐரோப்பிய ஒழுங்கு என குறிப்பிட்டேன்.

சர்வதேச உறவில் எல்லாரும் சர்வாதிகாரம்தான். ஆனால் அமேரிக்க, கனடா, அவுஸ் நாட்டுக்குள், ஈயுவை பொறுத்தவரை கண்டத்தில் ஜனநாயகம் பேணப்படும்.

அதுவும் மட்டற்ற ஜனநாயம் அல்ல. தேர்தல் ஜனநாயகம் பால்பட்ட ஒழுங்கு.

நாளைக்கே, மக்ரோன் பிரான்ஸிஸ் அரசியலமைப்பை மாற்றி. புட்டின் போல நடந்தால் - ஈயூ பிரான்சை தூக்கி வெளியே போட அதன் நடைமுறைகளில் இடம் உண்டு. போலத்தை இப்படி செய்வோம் என கூறினார்கள்.

நாஜிகளும் தேர்தலில் வென்றார்கள்தான். ஆனால் ஈயூ என்பது ஒரு நாடுகளின் ஜனநாயக கூட்டு, ஆகவே அதன் குமுகாய விதிகளை, உள்நாட்டில் தேர்தலை வெல்வதன் மூலம் மீற முடியாது (இந்த கட்டுப்பாடும் சில படித்தவர்கள் பிரக்சிற்க்கு போட காரணம்.)

புட்டின் இரு முறைக்கு மேல் அரசியலில் இருந்து விலகி இருந்தால் - இப்போ சிலவேளை ஈயூ உறுப்பினர் இல்லாவிடினும், சுவிற்சலாந்து போல ஒரு EEA உறுபினராகவோ அல்லது துருக்கி போல் ஒரு customs union இலோ, ஈயுவிடன் ரஸ்யா இணைந்திருக்கலாம்.

ஒரு வகையில் புட்டின் அமெரிக்காவுக்கு செய்தது மிக பெரும் நன்மை.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த வீடியோவை பாருங்கள். முதல் சில கிளிப்ஸ் இளமையான புட்டின் தான் எப்படி அரசியலமைப்பை மாற்ற மாட்டேன், அப்படி செய்வது தேச துரோகம் என்கிறார்.

கடைசி கிளிப் ஒரு ரஸ்ய அரசியல்வாதி இப்போதைய நிலையினை விபரிக்கிறார். அவர் முடிவில் சொல்கிறார் மாவோ போல, ஷி போல புட்டின் சாகும் வரை பதவியில் இருப்பார்….

நாம் இப்போ ஆசியா. ஆசியா ஆகி விட்டோம்.

இதுதான் உண்மை. ஐரோப்பிய ஜனநாயக ஒழுங்கில் இருந்து புட்டின், ரஸ்யாவை ஆசிய ஒழுங்குக்கு கொண்டு போய்யுள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_che

நிறைய எழுதி விட்டீர்கள்.அதுவும் புட்டினை வசைபாடி. இருந்தாலும் எனக்கு புட்டின் முன்னோடியான அரசியல்வாதியல்ல.. எனது நிலைப்பாடு ரஷ்ய பூளோக அரசியல் மட்டுமே. அதை புட்டின் சரிவர செய்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன்.

நீங்கள் இவ்வளவு பந்தி பந்தியாக எழுதினாலும் அமெரிக்க,மேற்குலகின் ரஷ்யா மீதான நரிக்குணத்தையும்/கள்ளத்தனத்தையும் மென்று விழுங்காமல் மிண்டி விழுங்கியதை நான் கொடுப்புக்குள் சிரித்த வண்ணம் ரசித்தேன்.😂

உங்களிடம் ஒரு சிறிய கேள்வி? நீங்கள் ஏன் சி என் என் பிபிசி போன்ற ஊடகங்களுக்கு வேலை செய்யக்கூடாது? 😎

Volodymyr Zelensky has said freezing the war is the same as losing it but some Ukrainian commanders are reportedly refusing to advance against Vladimir Putin's forces.

Ukraine's top commanders refuse orders to advance against Putin in major blow to Zelensky | World | News | Express.co.uk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, குமாரசாமி said:

🤣 எவ்வளவு எழுதினாலும் பழைய அம்புலி மாமா கதை போல

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதா விக்ரமாதித்தன் ………

என்றுதான் முடியும் என்று தெரிந்தே எழுதினேன்.

ஆனால் இந்த கதை உங்களுக்கு மட்டுமானதல்ல….இதே கேள்வியோடிருந்த அனைவருக்குமானது.

உங்களை போல நான் புட்டினுக்கு வாழ்க்கை பட்ட பத்தினி அல்ல.  ஆகவே மேற்கின் எந்த குணத்தையும் மறைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.

நரிக்குணம் என்பது மனிதரின் அடிப்படைக்குணம். நாடுகளுக்கு மட்டும் அல்ல, தனி மனிதருக்கும் என்பதை அறிந்தே எழுதுகிறேன் (மேலே உங்கள் பதிலில் கூட அதை வெளிக்காட்டியே உள்ளீர்கள், காட்டுவீர்கள் என்பதும் எதிர்பாத்ததே. சில அடிப்படை இயல்புகள் என்றும் மாறாது🙏). 

பிபிசி, சி என் என் - அங்கே வேலை செய்வதை விட கூடிய ஊதியத்தை எனக்கு மேற்கின் உளவு அமைப்புகள், யாழில் எழுதுவதற்கு தருகிறன என வைத்துக்கொள்ளுங்கள். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, goshan_che said:

🤣 எவ்வளவு எழுதினாலும் பழைய அம்புலி மாமா கதை போல

உங்கள் பெரியண்ணனும் காலாகாலமாக் இதையேதான் செய்கின்றார். 🤣

F886yMsXkAEuEBF?format=jpg&name=small

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, goshan_che said:

இதே கேள்வியோடிருந்த அனைவருக்குமானது.

👍

உண்மையை தெரிந்து கொள்ள விரும்புபர்களுக்கு, தன்னை எதிர்க்கும் ரஷ்யர்களை  ஜன்னல்களில் இருந்து விழுந்தியோ  உணவில் விஷம் வைத்தோ தேனீரில்  விஷம் வைத்தோ கொல்லும்  புதின் சர்வாதிகாரி பற்றி தெரிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍

உண்மையை தெரிந்து கொள்ள விரும்புபர்களுக்கு, தன்னை எதிர்க்கும் ரஷ்யர்களை  ஜன்னல்களில் இருந்து விழுந்தியோ  உணவில் விஷம் வைத்தோ தேனீரில்  விஷம் வைத்தோ கொல்லும்  புதின் சர்வாதிகாரி பற்றி தெரிய வேண்டும்.

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து நாடுகளை ஆக்கிரமித்து கண்டங்களையே அழித்து மொழிகளையே தடை செய்து அவரவர் விழிபட்ட மதங்களையே தடை செய்து உடை நடைபாரம்பரியங்களை மறைத்து அடிமைத்தனம் செய்த மேற்குலகை விட தம் நாட்டு ரகசியங்களை வெளிவிடும் துரோகிகளுக்கு தேனீர் விருந்து பரவாயில்லை.

எதிரிகளின் குகைகள் தொடக்கம் ஜனநாயக நாடுகள் வரைக்கும் காட்டிக்கொடுப்போருக்கு எங்கும் மன்னிப்பில்லை. இது உலகின் பொது நடவடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உ.ப.ப. செ

மார்ச் 31 செலென்ஸ்கி உக்ரேன் ஜனாதிபதி தேர்தலை நடத்தப்போகிறாராம்.

டிஸ்கி

கிட்டதட்ட அசோகா ஹோட்டலில் தலைவருக்கு கொடுத்த அளுத்தம் போல, செலன்ஸிக்கு மேற்கு அளுத்தம் கொடுக்கிறது என நினைக்கிறேன்.

இப்போ இருக்கும் கட்டுப்பாட்டு எல்லை வழி ஒரு போர் தவிர்ப்பு உடன்படிக்கையை மேற்கொள்ள மேற்கு அளுத்துகிறது.

இதை தவிர்க்க - ஜனாதிபதி தேர்தலை மக்கள் இதற்கான ஆணையை வழங்கவில்லை என காட்ட பயன்படுத்த போகிறார்?

அல்லது இதற்கு உடன்பட்டு - இதற்கு மக்கள் ஆதரவும் இருக்கிறது எனக் காட்ட பயன்படுத்த போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

spacer.png

உக்ரைனில் ரஸ்யா நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு.

உக்ரைனின் சபோரிஜியா மகாணத்தில் ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளனர்.

உக்ரேன் இராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று இடம்பெற்ற போது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

4 ஆளில்லா விமானங்களின் மூலம் இந்த தாக்கதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் உக்ரைன் இராணுவத்தினால் 2 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதேவேளை உக்ரைன் மீது தொடர்ந்தும் ரஸ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது ஆனால் இஸ்ரேல் மற்றும் காஸா மோதல் அதிகரித்துள்ள நிலையில் சர்வதேசத்தின் கவனம் உக்ரேன் மீது திரும்பவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக உக்ரைன்; போர் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக உயர்மட்ட இராணுவ ஜெனரல் ஒருவர் தெரிவித்த கருத்தை தான் நிராகரிப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார். 

https://athavannews.com/2023/1357364

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யேர்மனியில் AFD என்று ஒரு கட்சி சர்வாதிகாரி புதின் ஆதரவு வெளிநாட்டவர்கள் எதிர்ப்பு கொண்ட காட்டிக்கொடுக்கும் கட்சி ஒன்று அரசை எதிர்த்து கொண்டு  இருப்பதாக தெரியவருகின்றது. ஆனால்  ரஷ்யாவில் என்றால் புதினை எதிர்க்கும் ஜனநாய தலைவர்களே உணவில்  தேனீரில் விஷம் வைத்தோ யன்னலால் தள்ளி விழுத்தியோ கொல்லபடுகிறார்கள்  கொல்லபடுவார்கள். மேற்குலக சுதந்திர நாடுகளுக்கும் சர்வாதிகாரி புதின் ஆட்சி செய்கின்ற ரஷ்யாவுக்குமான வேறுபாடுகளில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஓ.. அப்படியா.. அப்போ.. ஈராக்கில் சதாம் குசைனிடம்.. இரசாயன ஆயுதங்கள் இல்லை என்று அறிக்கை தந்த.. பிரித்தானிய பேராசிரியரை போட்டு தள்ளினதும்.. சர்வாதிகாரத்துக்க வரும் என்றால்... சரி. மேற்குலகின் சுதந்திரத்தை நன்கு விளங்கிக் கொள்ள வசதியாக இருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்குலக நாடுகளின்  சுதந்திரத்தை நன்றாக விளங்கிக் கொண்டபடியால் தான் நம்மவர்கள் அங்கே நிரந்தரமாக செட்டிலாகி உள்ளார்கள்.இலங்கையில் இருந்து வருவதற்கு முயற்சித்து கொண்டும் விண்ணபித்துவிட்டு காத்து கொண்டும் இருக்கிறார்கள் 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யேர்மனியில் AFD என்று ஒரு கட்சி சர்வாதிகாரி புதின் ஆதரவு வெளிநாட்டவர்கள் எதிர்ப்பு கொண்ட காட்டிக்கொடுக்கும் கட்சி ஒன்று அரசை எதிர்த்து கொண்டு  இருப்பதாக தெரியவருகின்றது. ஆனால்  ரஷ்யாவில் என்றால் புதினை எதிர்க்கும் ஜனநாய தலைவர்களே உணவில்  தேனீரில் விஷம் வைத்தோ யன்னலால் தள்ளி விழுத்தியோ கொல்லபடுகிறார்கள்  கொல்லபடுவார்கள். மேற்குலக சுதந்திர நாடுகளுக்கும் சர்வாதிகாரி புதின் ஆட்சி செய்கின்ற ரஷ்யாவுக்குமான வேறுபாடுகளில் ஒன்று.

ஆ....அப்படியா?
அப்ப ஏன் இந்த இருவரையும் அமெரிக்கா தன்னிடம் தரச்சொல்லி கேட்கின்றது? கொஞ்சி விளையாடவா?

Assange-Snowden.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மேற்குலக நாடுகளின்  சுதந்திரத்தை நன்றாக விளங்கிக் கொண்டபடியால் தான் நம்மவர்கள் அங்கே நிரந்தரமாக செட்டிலாகி உள்ளார்கள்.இலங்கையில் இருந்து வருவதற்கு முயற்சித்து கொண்டும் விண்ணபித்துவிட்டு காத்து கொண்டும் இருக்கிறார்கள் 😎

சுதந்திரத்தை தேடி வரவில்லை.. பொருளாதாரத்தை தேடி வருகிறார்கள். மேற்குலக வெள்ளைகளுக்கு.. கூலிகள் தேவை என்பதால்... வரவேற்கிறார்கள். முன்னர் அடிமைகளாக் கொண்டு வந்தார்கள்.. இப்போ நவீன அடிமைக் கூலிகளாக வரவேற்கிறார்கள். 

ரஷ்சியாவில்.. துருக்கியர்கள்.. வடகொரியர்கள்.. ஹிந்தியர்கள்.. ஏன் சிங்களவர்கள் என்று வேலை செய்து உழைத்து விட்டு தாயகம் திருப்புவோர் பலர் உளர். தமிழர்களுக்கு.. நான் வெளிநாட்டுக்காரன்.. என்று வெட்டிப் பெருமை பேச  வேண்டும் என்பதால்.. இது சரிப்பட்டு வருவதில்லை. 

ரஷ்சியா.. வேலைக்கு ஊதியம் கொடுக்கிறது.. மேற்குலகு செட்டில்மென்ட் என்ற பெயரில்.. நிரந்தக் கூலி அடிமைகளை தனக்கு வரி செலுத்தும் அடிமைகளை வரவழைத்து தக்க வைத்துக் கொள்கிறது. 

அண்மையில்.. பிரித்தானிய பிரதமர் சொன்னாரே.. கூடிய அளவு வெளிநாட்டுக் கூலிகளை வரவேற்போம்.. அப்போ தான் வரியும்.. விசாப் பணமும் குவியும் என்று. இதுதான் வரவேற்பின்.. சுதந்திரத்தின் தார்ப்பரியம். 

Edited by nedukkalapoovan
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மேற்குலக நாடுகளின்  சுதந்திரத்தை நன்றாக விளங்கிக் கொண்டபடியால் தான் நம்மவர்கள் அங்கே நிரந்தரமாக செட்டிலாகி உள்ளார்கள்.இலங்கையில் இருந்து வருவதற்கு முயற்சித்து கொண்டும் விண்ணபித்துவிட்டு காத்து கொண்டும் இருக்கிறார்கள் 😎

இந்த ஆட்டுக்குள் மாட்டை திணிக்கும் கருத்தையே எல்லா திரிகளிலும் சொல்கின்றீர்கள். வேறு புதிதாக இருந்தால் ஏதாவது சொல்லுங்கள். 
மேற்குலக நாடுகளில் அமெரிக்கா உட்பட ரஸ்ய சார்பு மக்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அது விளங்கினால் சரி...🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மேற்குலக நாடுகளின்  சுதந்திரத்தை நன்றாக விளங்கிக் கொண்டபடியால் தான் நம்மவர்கள் அங்கே நிரந்தரமாக செட்டிலாகி உள்ளார்கள்.இலங்கையில் இருந்து வருவதற்கு முயற்சித்து கொண்டும் விண்ணபித்துவிட்டு காத்து கொண்டும் இருக்கிறார்கள் 😎

இலங்கையர்கள் டொலறின் பெறுமதி குறைந்தால் மேற்கில் தொடர்ந்து  குடியிருப்பார்களா ? 

😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மேற்குலக நாடுகளின்  சுதந்திரத்தை நன்றாக விளங்கிக் கொண்டபடியால் தான் நம்மவர்கள் அங்கே நிரந்தரமாக செட்டிலாகி உள்ளார்கள்.இலங்கையில் இருந்து வருவதற்கு முயற்சித்து கொண்டும் விண்ணபித்துவிட்டு காத்து கொண்டும் இருக்கிறார்கள் 😎

மேற்கு நாடுகள் ஒண்டும் உங்கள் மீதான அனுதாபத்தில் உள்ளே விடவில்லை.

வயதானவர்களை பராமரிப்பதற்கு, வரி வருமானம் இல்லை. அவர்களை பராமரிக்கவும், அந்த சம்பளத்தில் கட்டப்படும் வரிக்காகவும் தான் உள்ள விடுறார்கள்.

பிரெக்சிற்றுக்கு முக்கியகாரணம் வெள்ளைத் தோல் கிழக்கைரோப்பியர். கலந்தால் பிடிக்கேலாது.

எங்கடையாக்கள், எம்மளவு வந்தாலும், எவ்வளவு காலமானாலும், தூரத்திலேயே தெரியும், வாறார் பாக்கித் துரையர் எண்டு. அதால அவனுக்கு நீண்டகால பிரச்சணை இல்லை.

விளங்க நிணைப்பியள் எண்டு நிணைக்கிறன். 🤩

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
27 minutes ago, Nathamuni said:

விளங்க நிணைப்பியள் எண்டு நிணைக்கிறன். 🤩

ஓம் நீங்கள் சொன்னதையும் விளங்கி கொண்டேன்.ஈழதமிழ் புதின் விசுவாசிகளின் மேற்குலக அனுபவிப்புகளையும் நன்றாக விளங்கி கொண்டேன் 😂

27 minutes ago, Nathamuni said:

வயதானவர்களை பராமரிப்பதற்கு, வரி வருமானம் இல்லை. அவர்களை பராமரிக்கவும், அந்த சம்பளத்தில் கட்டப்படும் வரிக்காகவும் தான் உள்ள விடுறார்கள்.

அப்படியிருந்தும்  தீண்ட தகுதியில்லாத நாடுகளாகிவிட்டன  ரஷ்யா, ஈரான், வடகொரியா உண்மையை மறைக்க முடியாது.

Edited by விளங்க நினைப்பவன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.