Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதம் இல்லாத பொலிஸ் அதிகாரம்; ரணிலுக்கு சி.வி. ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதம் வழங்காத பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை போன்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தலாம் என,  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று(24) சந்தித்து பேசிய போது இதனை வலியுறுத்தியதாக கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கூறினார்.

மாகாண அரசிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்த முன்மொழிவொன்றை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அது குறித்து ஆய்வுக்குட்படுத்த ஐவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்து ஐந்து பேரின் பெயர்களையும் பரிந்துரைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

“இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதங்கள் இல்லாத பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆயுதங்களுக்கு பதிலாக தடிகளை மாத்திரமே கையில் வைத்திருப்பார்கள்.

ஆயுதங்கள் இல்லாது பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தேன். இந்த நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அக்கறையுடன் செல்படுவதை அவதானிக்க முடிகிறது” என்றார்.

Tamilmirror Online || ஆயுதம் இல்லாத பொலிஸ் அதிகாரம்; ரணிலுக்கு சி.வி. ஆலோசனை

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லுடன் பொலிஸ் அதிகாரம். யோசித்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் தீர்வு சம்பந்தமாக ஒரு திரியில் இதை பற்றி கொஞ்சம் விரிவாக அலசி இருந்தோம்.

நல்ல ஆலோசனைதான். இங்கிலாந்தில் 90% (என் கணிப்பில்) நேரம் பொலிசார் கடமையில் ஆயுதம் வைத்திருப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் இருந்து…

3. உள்ளூர் பொலிஸ் படைகள் - அவர்களின் அலகுகளினுள் குறித்த வகையான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் முழு அதிகாரம் உடையவராய் இருப்பர். உதாரணமாக - முழு நாட்டிற்கும் பொதுவான வீதி கோவை, போக்குவரத்து விதிகளை, அந்தந்த அலகுகளில் அவர்களின் உள்ளூர் படையே 100% அமல் படுத்தும். இதே போல் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், குற்றங்களை விசாரித்தல் போன்றவற்றையும் இந்த பொலிஸ் படையே செய்யும். அதாவது உள்ளூர் மக்களோடு முகத்துக்கு-முகம் கொடுக்கும், நாளாந்த பொலிஸ் சேவையின் 90% ஆனவை (day to day policing) இந்த உள்ளூர் அலகினாலேயே நடத்தப்படும். ஒவ்வொரு ஊரிலும் இந்த சேவைக்கு ஒரு நிலையம் இருக்கும். இவர்கள் ஆயுதம் ஏந்தாத பொலிசாராக இருப்பர் (தமிழீழ காவல்துறையும், லண்டன் மெட் பொலிசும் 90% நேரம் அளவில் ஆயுதம் ஏந்துவதில்லை, ஏந்தியதில்லை).

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வாள்வெட்டுக்குழுவுக்கு கிராக்கி!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

பொல்லுடன் பொலிஸ் அதிகாரம். யோசித்து பார்க்கலாம்.

ஆமாம் நிச்சியமாக  நல்ல  யோசனைகள்  ..வரவேற்கப்படுகின்றன…  அதிகாரம்  தான் தேவை   ஆயுதம் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

அப்போ வாள்வெட்டுக்குழுவுக்கு கிராக்கி!

மேலே உள்ள திரியில் வன்முறை கும்பல்கள், போதை வர்தகத்தை கையாளும் முறை பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

6 minutes ago, Kandiah57 said:

அதிகாரம்  தான் தேவை   ஆயுதம் இல்லை 

👌

“A rose by any other name would smell as sweet" -William Shakespeare-

வேறு எந்த பெயரில் அழைத்தாலும் ரோசாப்பூ அதே சுகந்தத்தையே கொடுக்கும்

- சேக்ஸ்பியர்-

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம் ஆயுதத்திலேயே தங்கியுள்ளது! 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

அதிகாரம் ஆயுதத்திலேயே தங்கியுள்ளது! 

அதிக பெரும்பான்மையான பொலிஸ் அதிகாரத்துக்கு ஆயுதம் தேவையில்லை.

உலகில் ஆயுதம் ஏந்தா பொலிஸ் உள்ள நாடுகள் பட்டியல் கீழே

https://worldpopulationreview.com/country-rankings/countries-where-police-dont-carry-guns

தமிழீழ நடைமுறை அரசின் காவல்துறையும் ஆயுதம் ஏந்தவில்லை.

https://time.com/5854986/police-reform-defund-unarmed-guns/?amp=true

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

அதிகாரம் ஆயுதத்திலேயே தங்கியுள்ளது! 

இல்லை  தப்பு ..தப்பு     அண்மையில்  பரிஸ். மாநகரில்  போக்குவரத்து விதிமுறைகளை மீறிய  ஒருவரை   ஆயுதம் பாவித்து   சுட்டார். ...இன்று அவர்  பதவியை இழந்தது மட்டுமல்ல சிறையினுள்ளே வாழ்கிறார் .....வடுகிறார் ...அவர் செய்த பிழை  என்ன?? ஆயுதம் பாவித்தது       

ஆயுதம் இல்லாமல் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தப்படுகின்றது...படுத்தலாம். உதாரணமாக   நான் இரண்டு மாதத்துக்கு முன் பார்க்  பண்ண கூடாதா இடத்தில் எனது காரை  பார்க் பண்ணினேன்     15. யூரோ    தண்டம்   மீண்டும் இரண்டு கிழமையில். அதேபோல செய்தேன்   தண்டம் 50 யூரோ    இது தான் அதிகாரம்       ....ஒரு குற்றவாளிகளுக்கு சிறையில் அடைப்பதற்க்கும்.   தண்டம் அல்லது அபாரதம் விதிப்பதற்கும்.  ஆயுதம் தேவையா?? இல்லையே  ??

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறும் ஆயுதம் இல்லா அதிகாரம் இலங்கைக்கு பொருந்துமா என்பதே எனது கேள்வி. அஹிம்சையை காலால் மிதித்தது, ஆயுதத்தை கூடி அழித்தது, ஆயுதம் முறியடிக்கப்பட்டபின் நமது இன்றைய நிலை என்ன? நீங்கள் கூறுவதெல்லாம் சட்டத்தை மதிக்கும், அதிகாரத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் நாடுகளுக்கே பொருந்தும்.. இன்று நமது ஜனநாயக உரிமைகள் எதனால் அடக்கப்படுகின்றது? ஏன் நாம் பேச தயங்குகிறோம்? சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஆயுதம் என்ன பரிசளித்தது? ஏன் நம் இளைஞர் ஆயுதம் தூக்கினர்? எனும் கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிப்போமாயின் ஆயுதத்தின் அதிகாரம் எவ்வளவு முக்கியம் என புரியும். அவர்கள் ஆயுதத்தோடும் நாம் பொல்லோடும் போராடி முடியுமா? அதிகாரமே தர மறுக்கிறது அதில பொல்லு, ஆயுதம்! எங்கே முடிந்தால் பொல்லோடு கூடிய பொலிஸ் அதிகாரத்தை தரட்டும் பாப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதில் உடன்பாடில்லை - சுதந்திரக் கட்சி அறிவிப்பு

28 JUL, 2023 | 03:01 PM
image
 

(எம்.மனோசித்ரா)

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அது தென்னிலங்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தினால், மக்கள் மத்தியில் மீண்டும் மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்தோடு, அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளதாகவும், அரசாங்கம் இது தொடர்பில் தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்  வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதாகும். எனினும், இந்தியாவுடன் தற்போது காணப்படும் இராஜதந்திர தொடர்புகள் காரணமாக எம்மால் அதனை உதாசீனப்படுத்த முடியாது. 

எனவே, அபிவிருத்திக்கான அதிகாரபகிர்வுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளோம். பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அது தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும். எனவே இது மக்கள் மத்தியில் மீண்டும் இன மோதல்கள் ஏற்பட வழிவகுக்கும்.

பொலிஸ் அதிகாரம் தொடர்பில் அரசாங்கமும் எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. நாமும் அது குறித்து பேசவில்லை. இது தொடர்பில் முதலில் அரசாங்கத்தின் முன்மொழிவே அவசியமாகும்.

சர்வகட்சி மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனால் மாகாண சபைகளில் ஆயுதங்கள் அற்ற பிரஜா பொலிஸ் சேவையை வழங்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

எனவே, இதனைப் போன்ற யோசனைகளை அரசாங்கமே முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தினால் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டால், அதற்கு எந்தளவுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முடியும் என்று நாம் கட்சி ரீதியாக கலந்தாலோசித்து தீர்மானம் எடுப்போம்.

எவ்வாறிருப்பினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் ரீதியாக பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை வரலாற்று சம்பவங்கள் ஊடாக நன்கு அறிந்திருக்கின்றோம்.

எனவே, மாகாண முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எனவே, அரசாங்கம் இது குறித்த முன்மொழிவுகளை முன்வைக்கும் போது, முறையான திட்டமிடல்களை வழங்க வேண்டும். மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது.

எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தனது ஸ்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை நாம் சர்வகட்சி மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம். அரசாங்கம் யோசனையொன்றை முன்வைத்தால் , கட்சி ரீதியில் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/161141

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கு என்பது மட்டும் புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் சிங்கங்கள் - எங்களுக்கு கையில் ஏகே, பிக்கப்பில் 50 கலிபர் உடன் கூடிய பொலீஸ்த்தான் வேணும். 

கெட்டிக்கார சிங்கள அரசியல்வாதி: பார்த்தீர்களா, இவர்கள் தம்மை நிர்வகிக்க அதிகாரம் கேட்கவில்லை, நாட்டை பிரிக்க ஆயுதம் கேட்கிறார்கள்.

ஆகவே இவர்களுக்கு எதுவும் கொடுக்க கூடாது

சர்வதேசம் (மேற்கு + கிழக்கு ) : ஆமா, ஆமா…

அப்பாவித் தமிழன் :நே…..

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தமிழர் சிங்கங்கள் - எங்களுக்கு கையில் ஏகே, பிக்கப்பில் 50 கலிபர் உடன் கூடிய பொலீஸ்த்தான் வேணும்

இது அதிகத்தனமான விமர்சனம். சிங்கள போலீஸ் இதையெல்லாம் கொண்டா திரிகிறது? அப்படியென்றால் அவர்களும் எம்மை அடக்கியாளுகிறார்கள். சிங்கள போலீசுக்கு இவைகள் தேவையென்றால்; ஏன் அவைகள் தமிழ் பொலிஸாருக்கு தேவைப்படாது என விளக்குங்கள். அங்கேயும் தமிழ்ப்பொலிஸுக்கு ஒரு அதிகாரம், சிங்களபொலிஸுக்கு வேறொரு அதிகாரமா? அவர்களும் பொல்லை பாவிக்கட்டும் அப்போ நான் விமர்சகப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

இது அதிகத்தனமான விமர்சனம். சிங்கள போலீஸ் இதையெல்லாம் கொண்டா திரிகிறது? அப்படியென்றால் அவர்களும் எம்மை அடக்கியாளுகிறார்கள். சிங்கள போலீசுக்கு இவைகள் தேவையென்றால்; ஏன் அவைகள் தமிழ் பொலிஸாருக்கு தேவைப்படாது என விளக்குங்கள். அங்கேயும் தமிழ்ப்பொலிஸுக்கு ஒரு அதிகாரம், சிங்களபொலிஸுக்கு வேறொரு அதிகாரமா? அவர்களும் பொல்லை பாவிக்கட்டும் அப்போ நான் விமர்சகப்போவதில்லை.

சாத்ஸ்,

1. 50 கலிபர் இல்லை ஆனால் இலங்கை பொலிஸ் ஏகே வைத்திருப்பார்கள்.

2. சிங்கள பொலிஸுக்கும் தேவையில்லை. எந்த பொலிசுமே ஆயுதப்படை என்று ஒன்றை வைத்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான பொலிஸ் பணியை ஆயுதம் இல்லாமலே செய்யலாம். லண்டனில் இல்லாத போதை, கள்ள கும்பலா இலங்கையில் இருக்கிறது.

3. நான் மேலே இணைத்த திரியை முழுவதுமாக வாசித்தீர்களா? நமக்கு தேவை ஏகே யா? பொலிஸ் அதிகாரமா?

ஏகே - எமது position 

பொலிஸ் அதிகாரம் - எமது interest 

சிங்களவனை பார்த்து நாங்களும் அதே போல் குறி சுட்டு கொள்ள வேண்டிய தேவை இல்லை.

அவர்கள் வேணும் எண்டால் பொலிசும் ஆயுதம், கள்ளனும் ஆயுதம் ஏந்தும் வன்முறை கலாச்சாரத்தில் உழலட்டும்.

நாம் ஏன் அப்படி இருக்க வேண்டும். நாம் ஆயுதம் இல்லாத ஆனால் ஏனைய முறையில் தண்டிக்க வல்ல ஒரு பொலிஸ் அதிகாரத்தை கொண்டு எமது பகுதியில் ஆயுதமற்ற கலாச்சாரத்தை ஏன் ஏற்படுத்த முடியாது?

முடியும். கொஞ்சம் பெட்டிக்கு வெளியால் யோசிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/m4q96-0Z3L/
 

ரணில் சுமந்திரன் விக்கினேஸ்வரன் வாக்குவாதம்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நாம் ஏன் அப்படி இருக்க வேண்டும். நாம் ஆயுதம் இல்லாத ஆனால் ஏனைய முறையில் தண்டிக்க வல்ல ஒரு பொலிஸ் அதிகாரத்தை கொண்டு எமது பகுதியில் ஆயுதமற்ற கலாச்சாரத்தை ஏன் ஏற்படுத்த முடியாது?

நிச்சியமாக எற்ப்படுத்தலாம்.   ஆனால் அந்த அதிகாரம் அதாவது ஆயுதம் அற்ற பொலிஸ் அதிகாரம்   தரமாட்டார்கள்.   ஏனெனில்   யாழ்ப்பாணம் வரும் போது  ரணிலையும் கைது செய்விர்கள்....மகிந்த ..கோத்தாவை  கூட கைது செய்யலாம்   இவர்கள் குற்றவாளிகள்   தங்களை கைது செய்யும் படியான அல்லது தண்டனை” வழங்க கூடிய அதிகாரத்தை   ஒருபோதும் எமக்கு வழங்கப்போவதில்லை.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நிச்சியமாக எற்ப்படுத்தலாம்.   ஆனால் அந்த அதிகாரம் அதாவது ஆயுதம் அற்ற பொலிஸ் அதிகாரம்   தரமாட்டார்கள்.  

எமது வீட்டில் ஒரு குமர் இருக்குது பாருங்கோ… 35 வயசு…செவ்வாய் குற்றம்…

கல்யாணம் பேச எண்டு தொடங்கினாலே….ஒண்டும் சரி வராது… எண்டு ஒரு பக்கத்தால் இழுத்தால்…எப்படி சரி வரும்…..

அல்லது…மாப்பிள்ளை எஞ்னியர்…டாக்டர்….பார்க்க ஹிந்தி நடிகர் மாரி இருக்கோணும் எண்டு அடம் பிடிச்சால்…

முடியும் எண்டால் எதையும் தராமல் முழு தமிழரையும் நாடு கடத்தவே சிங்கள இனவாதம் விரும்பும்….ஆனால் அவர்களை தீர்வை தர நிர்பந்திந்து…தீர்வை அடைய வேண்டியோர் நாமே.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஏனெனில்   யாழ்ப்பாணம் வரும் போது  ரணிலையும் கைது செய்விர்கள்....மகிந்த ..கோத்தாவை  கூட கைது செய்யலாம்   இவர்கள் குற்றவாளிகள்   தங்களை கைது செய்யும் படியான அல்லது தண்டனை” வழங்க கூடிய அதிகாரத்தை   ஒருபோதும் எமக்கு வழங்கப்போவதில்லை

விடை மிக இலகுவானது.

1. மாகாண பொலிஸ் படைக்கு அது ஸ்தாபிக்க பட முன்னர் நடந்த எதையும் விசாரிக்கும் (retrospective) அதிகாரம் இல்லை.

2. தனது ஆட்புலத்தில் நடந்த குற்றங்களை மட்டுமே அது விசாரிக்கலாம். 

3. பாரிய குற்றங்களான, பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல், தேச பாதுகாப்பு, இனப்படுகொலை, யுத்த குற்றம் போன்றவற்றை விசாரிக்கும் அதிகாரம் இந்த படைக்கு இல்லை.

3. மத்திய அரசில், இன்னொரு மாகாணத்தில் குறித்த படி, பதவி நிலைக்கு மேலே உள்ளோர் மீது வழக்கு தொடர, மாவட்ட நீதிபதியின் பிடிவாரண்ட் அவசியம்.

பிகு

 மோடி சென்னை வரும் போது குஜராத் கலவரத்துக்கு கைது செய்தால் எப்படி இருக்கும்? அதே போலத்தான்.

எமக்கு எம்மை நாமே நிர்வகிக்கும் பொலிஸ் அதிகாரம் வேணுமா? அல்லது பதவியில் உள்ள ஜனாதிபதியை கைது செய்யும், முள்ளிவாய்க்காலுக்கு வழக்கு போடும் அதிகாரம் உள்ள பொலிஸ் வேணுமா?

2வது எண்டால் புலம்பெயர் சமூகத்தில் இருக்கும் தமிழ் பிள்ளைகளை அனுப்பி ஆயுத போரை தொடங்கி தனிநாடு காண்பதே ஒரே வழி🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

எமது வீட்டில் ஒரு குமர் இருக்குது பாருங்கோ… 35 வயசு…செவ்வாய் குற்றம்…

கல்யாணம் பேச எண்டு தொடங்கினாலே….ஒண்டும் சரி வராது… எண்டு ஒரு பக்கத்தால் இழுத்தால்…எப்படி சரி வரும்…..

அல்லது…மாப்பிள்ளை எஞ்னியர்…டாக்டர்….பார்க்க ஹிந்தி நடிகர் மாரி இருக்கோணும் எண்டு அடம் பிடிச்சால்…

முடியும் எண்டால் எதையும் தராமல் முழு தமிழரையும் நாடு கடத்தவே சிங்கள இனவாதம் விரும்பும்….ஆனால் அவர்களை தீர்வை தர நிர்பந்திந்து…தீர்வை அடைய வேண்டியோர் நாமே.

 

சரி ஒகே    நான் தடுக்கவில்லை   என்னால் தடுக்கவும்  முடியாது 

36 minutes ago, goshan_che said:

1. மாகாண பொலிஸ் படைக்கு அது ஸ்தாபிக்க பட முன்னர் நடந்த எதையும் விசாரிக்கும் (retrospective) அதிகாரம் இல்லை.

2. தனது ஆட்புலத்தில் நடந்த குற்றங்களை மட்டுமே அது விசாரிக்கலாம். 

3. பாரிய குற்றங்களான, பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல், தேச பாதுகாப்பு, இனப்படுகொலை, யுத்த குற்றம் போன்றவற்றை விசாரிக்கும் அதிகாரம் இந்த படைக்கு இல்லை.

3. மத்திய அரசில், இன்னொரு மாகாணத்தில் குறித்த படி, பதவி நிலைக்கு மேலே உள்ளோர் மீது வழக்கு தொடர, மாவட்ட நீ

நல்ல யோசனைகள்  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

https://fb.watch/m4q96-0Z3L/
 

ரணில் சுமந்திரன் விக்கினேஸ்வரன் வாக்குவாதம்

இந்த நரிக்குத்தான் வெள்ளையடிச்சவர் சுமந்திரன்! இவரை அவமானப்படுத்துவதிலேயே நரியார் முனைப்பு காட்டுவதோடு அவர்களை குற்றம் சுமத்தி வெறுங்கையாய் அனுப்புவதற்கு அவசரப்படுகிறார். நல்லாட்சிக்காலத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வு வரையப்பட்டுவிட்டது, நடைமுறைப்படுத்துவதே பாக்கி என்று அடித்துச்சொன்னவர் சுமந்திரன், ஏன்.... ரணிலார் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னும் ஒருதடவை அதை நினைவுபடுத்தியவர், இப்போ, மஹிந்தா சம்மதித்ததாக கூறுகிறார். அன்று நீங்கள்தானே அப்படிச்சொன்னீர்கள் என்று கேள்வி கேட்க முடியாமல் போனது இவருக்கு? தமிழில் ஒன்று சொல்வார்கள், அடிக்கமுதல் கத்திவிட்டால் அடியிலிருந்து தப்பிவிடலாம், கத்தமுதல் அடித்துவிட்டால் அடித்ததற்கான காரணத்தை மாற்றிவிடலாம். அது நம் வாழ்வில் எவ்வளவு உண்மை. அன்று காலங்காலமாக சிங்களம் எங்களை கொலை செய்து அழித்தபோது நம் தலைவர்கள் இதை வெளியுலகுக்கு கொண்டு செல்லவில்லை. சென்றிருந்தால்; இவ்வளவு இழப்புகளை சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்காது. நாங்கள் கத்தும்போது நமது இழப்புகள்  மறைக்கப்பட்டு, பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு சர்வதேசமும் சேர்ந்து எங்களை அழித்தது. சர்வதேசம் சொல்லும், பாதிக்கப்பட்டவர்கள் முறையிடாமல் நாங்கள் விசாரிக்க முடியாது என்று. பாதிக்கப்பட்டவர்கள் சொல்வார்கள், நாங்கள் எங்கள் பிரச்சனையை உள்ளுக்குள் பேசித்தீர்க்கிறோம் என்று. ஆனால் உக்ரேனுக்கு அது கேக்காமலே செய்கிறார்கள். ஆனால் நாம் நமது கடமையை இதய சுத்தியுடன் செய்திருக்க வேண்டும். இப்போ சர்வதேசமும் நம் மட்டில் குற்றவாளியே. அதனாலேயே அதுவும் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்துகிறது, சிங்களமும் ஏய்க்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

சரி ஒகே    நான் தடுக்கவில்லை   என்னால் தடுக்கவும்  முடியாது 

தனியே உங்களை சொல்லவில்லை. நிலைப்பாட்டையே விமர்சித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4307.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says "துப்பாக்கி இல்லாத லத்தியுடன் கூடிய பொலிஸ் அதிகாரத்திற்கு பச்சைக்கொடி"

May be an image of 5 people

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.