Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3

03 AUG, 2023 | 05:15 PM
image
 
திருமணத்திற்கு பெண் பார்க்கச் சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

கிளிநொச்சி பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பெண் பார்க்க சென்றுள்ளார். 

இளைஞன் பெண் பார்த்து சென்ற சில நாட்களில், இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய நபர் ஒருவர், தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும், தன்னை இப்பெண்ணின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது தங்கை வெளிநாட்டு மாப்பிள்ளையை எதிர்பார்ப்பதாகவும், அதனால் உங்களை நான் வெளிநாட்டுக்கு எடுத்து விட முயற்சிப்பதாகவும் கூறி, அதற்காக 18 இலட்ச ரூபாய் பணத்தினை இந்த கணக்கு இலக்கத்திற்கு வங்கியில் வைப்பிலிடுங்கள் என ஒரு கணக்கிலக்கத்தை வழங்கியுள்ளார். 

இளைஞனும் அவரின் பேச்சை நம்பி பணத்தினை வைப்பிலிட்டு உள்ளார். சில மாதங்கள் கடந்த நிலையிலும் தனது வெளிநாட்டு அலுவல்கள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் சுதாகரித்துக்கொண்ட இளைஞன், அவுஸ்திரேலிய நபருடன் தொடர்பு கொண்டு, முரண்பட்ட போது, அவர் தொடர்பை துண்டித்துக்கொண்டார். அதன் பின்னர் அந்த தொலைபேசி இலக்கமும் செயலிழந்தது. 

அதனால் இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகராம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இளைஞன் காசை வைப்பிலிட்ட கணக்கிலக்க உரிமையாளரான கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணை கைது செய்தனர். 

குறித்த கணக்கு இலக்கத்திற்கு பல தடவைகள் இலட்ச ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது, இவ்வாறாக வடமராட்சி பகுதியில் உள்ள இளைஞனையும் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது. 

அதேவேளை, மானிப்பாயில் இளைஞன் பெண் பார்க்க சென்ற பெண், வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, பளை இளைஞன் தன்னை பெண் பார்த்து சென்ற உடனேயே இளைஞனை பிடிக்கவில்லை என கூறி விட்டதாகவும், அதன் பின்னர் தனது சகோதரன் அவரை ஏமாற்றிய விடயம் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார். 

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/161567

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ஏராளன் said:

கிளிநொச்சி பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பெண் பார்க்க சென்றுள்ளார். 

-----குறித்த கணக்கு இலக்கத்திற்கு பல தடவைகள் இலட்ச ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது, இவ்வாறாக வடமராட்சி பகுதியில் உள்ள இளைஞனையும் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது. 

கிளிநொச்சி இளைஞர்.... 18 லட்சம் கொடுத்த பின், தான் ஏமாந்தது தெரிந்து காவல் துறையிடம் முறைப்பாடு செய்து  சுதாகரித்து கொண்டார்.
பாவம்... வடமாரராட்சி, தான் ஏமாந்தது தெரியாமல்... காசை தொடர்ந்து குடுத்துக் கொண்டே இருந்திருக்கிறாரா.. அல்லது வெட்கத்தில், காவல் துறையிடம் முறைப்பாடு செய்யாமல் உள்ளாரா என்று தெரியவில்லையே...  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, தமிழ் சிறி said:

கிளிநொச்சி இளைஞர்.... 18 லட்சம் கொடுத்த பின், தான் ஏமாந்தது தெரிந்து காவல் துறையிடம் முறைப்பாடு செய்து  சுதாகரித்து கொண்டார்.
பாவம்... வடமாரராட்சி, தான் ஏமாந்தது தெரியாமல்... காசை தொடர்ந்து குடுத்துக் கொண்டே இருந்திருக்கிறாரா.. அல்லது வெட்கத்தில், காவல் துறையிடம் முறைப்பாடு செய்யாமல் உள்ளாரா என்று தெரியவில்லையே...  

இருக்கலாமண்ணை.
இரண்டு நாளாக காணவில்லையே அண்ணை?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஏராளன் said:

இரண்டு நாளாக காணவில்லையே அண்ணை?!

சில முக்கிய  அலுவல்கள் பார்ப்பதற்காக, இரண்டு நாள் லீவு எடுத்தனான், ஏராளன்.  😂
அந்த அலுவல்கள் இன்னும் முடியாததால்... வரும் நாட்களிலும் லீவு எடுக்க வேண்டி வரலாம். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

இருக்கலாமண்ணை.
இரண்டு நாளாக காணவில்லையே அண்ணை?!

ஏராளன்

நான் இளைஞன் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செய்தது என்னவோ பிழை தான். ஆனால் plan சூப்பர் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kavi arunasalam said:

ஏராளன்

நான் இளைஞன் இல்லை

கவிஞர் ஐயா, தமிழ்சிறி அண்ணையைத் தான் இரண்டு நாட்களாக காணவில்லையே எனக் கேட்டேன்?!
அப்போ இருவரும் ஒருவரா?!!!

நான் வயதில் மூத்தோரை அண்ணை என அழைக்கும் வழக்கம் உடையவன். இனி 60+ வயதுடையோரை ஐயா/அம்மணி எனவும் 60- வயதுடையோரை அண்ணா/அக்கா எனவும் விழிக்கிறேன். 40- எல்லாம் தம்பி/தங்கைகள் சரி தானே ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, ஏராளன் said:

ஊரில உந்த அய்யா தொல்லை தாங்கேலாது.🤣

Posted
7 hours ago, சுவைப்பிரியன் said:

ஊரில உந்த அய்யா தொல்லை தாங்கேலாது.🤣

யாரோ சுவைப்பிரியனைப் பார்த்து "ஐயா" என அழைத்து வெறுப்பேத்தி இருக்கின்றா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, சுவைப்பிரியன் said:

ஊரில உந்த அய்யா தொல்லை தாங்கேலாது.🤣

2 hours ago, நிழலி said:

யாரோ சுவைப்பிரியனைப் பார்த்து "ஐயா" என அழைத்து வெறுப்பேத்தி இருக்கின்றா

ஸ்ராலினிடம் கேட்டா நல்ல விக் கடையை காட்டியிருப்பாரு. போட்டுக்கொண்டு ஜம் எண்டு போய் இறங்கியிருந்தா, கதையே வேற 😜

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.