Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாப்பரசரின் பிரதிநிதி தலைமையில் மடு திருத்தல ஆவணி திருவிழா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
03 AUG, 2023 | 04:56 PM
image
 
பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் மேதகு பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள மடு திருத்தல ஆவணி திருவிழாவில் ஏழு லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

மடு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை (28)  மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன் போது அவர் திருவிழா தொடர்பில் குறிப்பிட்ட விடயங்களாவன:

மடு திருத்தல ஆவணி திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 

14ஆம் திகதி வரை நவநாள் ஆயத்த வழிபாடுகள், திருப்பலிகள் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் இடம்பெறும்.

14ஆம் திகதி மாலை நற்கருணை ஆராதனையும் திருச்சொரூப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெறும். 

15ஆம் திகதி காலை 6.15 மணிக்கு பரிசுத்த பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் மேதகு பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் மரியன்னையின் விண்ணேற்பு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

மடு திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள சகல வீடுகளும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதனால், ஏனைய பக்தர்களுக்கு வீடுகளை வழங்க முடியாதுள்ளது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்து திருவிழாவில் கலந்துகொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மடு திருவிழாவை பொழுதுபோக்காக கருதாமல் பயபக்தியுடன் பங்குகொண்டு அனைவரும் விழாவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாப்பரசரின் பிரதிநிதி கடந்த ஜூலை 25ஆம் திகதி யாழ். புனித யாகப்பர் தேவாலய திருவிழாவிலும், கடந்த 26ஆம் திகதி  இளவாலை புனித அன்னம்மாள் தேவாலய திருவிழாவிலும் கலந்துகொண்டு திருப்பலி ஒப்புக்கொடுத்து சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/161557

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விழாவில் கத்தோலிக்க சிங்கள  கர்தினால் மல்கம் ரஞ்சித் பங்குபற்றுவாரா எனபது கேள்விக்குறியே?

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் வருகையும் செயற்பாடுகளும் அவருக்கு உவப்பானது இல்லை. இருந்தாலும் அதையும் தமக்கு சாதகமாக பயன்படுத்துபவர்கள் சிங்களவர். அதுதான்..... ஜெர்மனியில் சாதித்தவரை வரவேற்ற விதம், பிரான்ஸ் ஜனாதிபதியை  கவரும் நோக்கம், அடித்து விரட்டி விட்டு மாலை போட்டு வரவேற்கிறார்களாம், அவரும் இலங்கையர் என்றவகையில் பெருமை என சாற்றியிருந்தாரே. விசுகர் தொடர்வார், அவருக்கே விட்டுவிடுகிறேன் மிகுதியை,......

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Cruso said:

இந்த விழாவில் கத்தோலிக்க சிங்கள  கர்தினால் மல்கம் ரஞ்சித் பங்குபற்றுவாரா எனபது கேள்விக்குறியே?

மடு திருவிழா தமிழர்கள் நடத்துவதனால் சிங்கலவரான மல்கம் ரஞ்சித் வருவது கேள்வி குறியாக உள்ளது. வெளிநாடுகளில் பவுத்த சிங்கலவராக இருந்து மதம்மாறியவர்களும் இந்துவாக இருந்து மதம் மாறியவர்களும் ஒற்றுமையாக தேவனை கும்பிடுகின்றனராம்.அவர்களில் தமிழர் வட்சப்பில் ஏதாவது படம் சிங்கலவருக்கு அனுப்பினால் அவர் தமிழில் அழகு என்று எழுதி பதில் அனுப்புவாராம்.பதிலுக்கு இவரும் சிங்கலத்தில் அழகு என்று எழுதி அனுப்புவாராம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

மடுத்தல திருவிழா, சிங்கள தமிழ் கத்தோலிக்க மக்களால் நடத்தப்படும் திருவிழா. அங்கு சிங்கள, தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்படுவதுண்டு. கடந்தகாலங்களில் பிரச்சனையின் போது சிங்களவர் வருகை தடைப்பட்டிருந்தது.சைவரும் பங்குபற்றியிருக்கிறார்கள் நானறிந்து. அது ஒரு கத்தோலிக்கரின் யாத்திரை ஸ்தலம்.  சைவருக்க்கு கதிர்காமம் போல. இதில் அரசியல் சேராமல் இருந்தால் வழமைபோல் நடைபெறும். என்ன கோஷான்..... நான் சொல்வது சரித்தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மடு திருத்தல ஆவணி மாத திருவிழா தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயரின் அறிவிப்பு 

09 AUG, 2023 | 06:49 PM
image
 
மன்னார், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் 2ஆவது கூட்டம் இன்றைய தினம் (9) காலை 11 மணியளவில் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றது.

DSC_1428.JPG

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸார், இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது எதிர்வரும் ஆவணி மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள மடு திருவிழா தொடர்பாகவும் முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அங்கு மேற்கண்டவாறு கருத்து தெரிவித்த ஆயர் மேலும் கூறுகையில், 

மன்னார், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக  எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உரிய திணைக்களங்களின் உதவியோடு, மடு திருத்தலத்துக்கு வரும் மக்களின் தேவைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக நீர், சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற தேவைகளை உரிய திணைக்களங்களுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று வருகின்றது. 

DSC_1400.JPG

எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனையை தொடர்ந்து, 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

இம்முறை திருவிழா திருப்பலி திருத்தந்தையின் பிரதிநிதி தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

ஏற்கனவே மடு திருத்தலத்தில் உள்ள விடுதிகள் எல்லாம் மக்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், தற்போது 500க்கும் மேற்பட்ட தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு மக்கள் வருகை தந்துள்ளனர்.

மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பில் இருந்து மடு சந்திக்கான விசேட புகையிரத சேவைகளும், மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

DSC_1412.JPG

DSC_1414.JPG

DSC_1426.JPG

DSC_1436.JPG

DSC_1463.JPG

https://www.virakesari.lk/article/161995

  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2023 at 02:39, satan said:

மடுத்தல திருவிழா, சிங்கள தமிழ் கத்தோலிக்க மக்களால் நடத்தப்படும் திருவிழா. அங்கு சிங்கள, தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்படுவதுண்டு. கடந்தகாலங்களில் பிரச்சனையின் போது சிங்களவர் வருகை தடைப்பட்டிருந்தது.சைவரும் பங்குபற்றியிருக்கிறார்கள் நானறிந்து. அது ஒரு கத்தோலிக்கரின் யாத்திரை ஸ்தலம்.  சைவருக்க்கு கதிர்காமம் போல. இதில் அரசியல் சேராமல் இருந்தால் வழமைபோல் நடைபெறும். என்ன கோஷான்..... நான் சொல்வது சரித்தானே?

எண்ட யேசுவே,

இதென்ன இந்தாள் எல்லாத்துக்கும் என்னை இழுத்து கேள்வி கேட்குது…ஏதோ நான் போப்பாண்டவரின் விசேட பிரதிநிதி மாரி….🤣

மடு தமிழர்களின் தலம்தான். ஏனென்றால் அது இருப்பது தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடத்துள்.

நானும் போய் தரிசித்துள்ளேன். இலங்கையில் வேறு எந்த தேவாலயத்தையும் போலன்றி பாரிய விஸ்தீரணத்தில் அமைந்த தலம். கட்டிட கலையும் ஆவோ மரியா என்ற முகப்பு வாசகமும், முகப்பும் ஏதோ ஐரோப்பாவில் இருப்பதை போல உணர்த்தும்.

மத வேறுபாடின்றி போரின் போது எம்மக்களை காத்து நின்ற இடம். எமக்காக ஓங்கி ஒலித்து அதனாலேயே நஞ்சூட்டப்பட்டர் என சந்தேகிக்கும் ராயப்பு ஜோசேப் ஐயா வாழ்ந்த இடம்.

இதற்கு எப்போதும் பெருவாரியாக சிங்களவர் வந்தே போயினர். ஆராதனைகளும் இரு மொழியிலும் நடந்தே வந்தன.

சமாதான காலத்தில் மகிந்த பிரதமராக இருக்கும் போது மடுவுக்கு வர கோரினார். ஆயுத படை இல்லாமல் வரலாம் என புலிகள் சொல்ல, வராமல் விட்டு விட்டார்.

ஆகவே இது எதை உணர்துகிறது?

மடு தமிழ் கத்தோலிக்கரின் தலம். ஆனால்  அதை ஆயுதம் ஏந்தா சிங்களவர் தரிசிப்பதையோ, பலிபூசை செய்வதையோ தமிழரின் நடை முறை அரசு உட்பட யாரும் தடுக்கவில்லை.

நிற்க.

கதிர்காமத்துடனா ஒப்பீடு மிக தவறானது. அது தமிழர் நிலத்தின் எல்லையில் இருந்த தமிழர் கோவில். 1948 வரை அப்படித்தான் இருந்தது. அருகே ஒரு தர்காவும், பெளத்த ஆலயமும் இருந்தன. அதை புனித பூமி சட்டம் போட்டு முழு பெளத்த சிங்களமயமாக்கியது இலங்கை அரசு.

மத விடயத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் எப்படி இரு வேறு பட்ட நிலையை எடுக்கிறார்கள் என்பதற்கு மடுவும், கதிர்காமமும் நல்ல உதாரணங்கள்.

பிகு

கதிர்காமத்துக்கு நேர்ந்த கதி விரைவில் மடுவுக்கும் வரும். அந்த பெரிய இடத்தில் ஒரு அரச மரம் இருக்காதா என்ன.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எண்ட யேசுவே,

இதென்ன இந்தாள் எல்லாத்துக்கும் என்னை இழுத்து கேள்வி கேட்குது…ஏதோ நான் போப்பாண்டவரின் விசேட பிரதிநிதி மாரி….🤣

நல்ல அறிவுரை சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கை தான்

32.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மடு தமிழர்களின் தலம்தான். ஏனென்றால் அது இருப்பது தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடத்துள்.

மடு தமிழர்களின் வாழ்விடத்தில் அமைந்திருக்கலாம். ஆனால் தமிழர்களின் இஸ்தலம் என்று  கூற  முடியாது . அப்படி என்றால் மக்கா அரேபியர்களின் இஸ்தலம் என்றும், எருசலேம் (இப்போது ஜூதரின் கட்டுப்பாட்டில்) இஸ்ரவேலரின் இஸ்தலம் என்றும் கருதப்படும். மத இஸ்தலம் எனும்போது அது அந்த மதத்தை சார்ந்த எல்லோருக்கும் பொதுவானது என்பது எனது கருத்து. முன்னேஸ்வரம் சிலாபத்தில் இருப்பதால் அது சிங்களவர்களின் ஸ்தலமாக முடியாது.

மத வேறுபாடின்றி போரின் போது எம்மக்களை காத்து நின்ற இடம். எமக்காக ஓங்கி ஒலித்து அதனாலேயே நஞ்சூட்டப்பட்டர் என சந்தேகிக்கும் ராயப்பு ஜோசேப் ஐயா வாழ்ந்த இடம்.

எனக்கு தெரிந்த வரைக்கும் நஞ்சு ஊட்டப்பட்டதாக அறியவில்லை.

ஆனால்  அதை ஆயுதம் ஏந்தா சிங்களவர் தரிசிப்பதையோ, பலிபூசை செய்வதையோ தமிழரின் நடை முறை அரசு உட்பட யாரும் தடுக்கவில்லை.

அப்படி யாரும் மொழி வாரியாக தடுக்க முடியாது என நினைக்கிறேன்.

பிகு

கதிர்காமத்துக்கு நேர்ந்த கதி விரைவில் மடுவுக்கும் வரும். அந்த பெரிய இடத்தில் ஒரு அரச மரம் இருக்காதா என்ன.

எனக்கு தெரிந்த வரைக்கும் அந்த சுற்றாடலில் அரச மரம் இல்லை. இருந்து இல்லாமலாக்கினார்களோ தெரியவில்லை. ஆனால், பிரதான பாதையிலிருந்து மடு ஆலயத்துக்கு போகும் இடத்தில பெரிய அரச மரம் வைத்து பெரிய பவுத்த விகாரை கடடப்பட்டு வெகு நாட்களாகி விட்ட்து. அதை பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தவர் நீங்கள் கூறும் ராயப்பு ஜோசேப்பு அவர்கள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Cruso said:

மடு தமிழர்களின் வாழ்விடத்தில் அமைந்திருக்கலாம். ஆனால் தமிழர்களின் இஸ்தலம் என்று  கூற  முடியாது . அப்படி என்றால் மக்கா அரேபியர்களின் இஸ்தலம் என்றும்,

மக்காவுக்கு எல்லோரையும் சேர்த்து அனுப்பி  தரிசிக்க வைப்பதற்கு  அமைதிமார்க்கத்தினர் ஆசை படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இன மக்களும் எவ்வித பேதமும் இன்றி வழிபட்டு சென்ற திருத்தலம் மடு.........இனிமேலும் அப்படியே  விழாக்கள் அங்கு நடைபெற வேண்டும்.........!  😁

நன்றி ஏராளன் ......!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

மடு தமிழர்களின் வாழ்விடத்தில் அமைந்திருக்கலாம். ஆனால் தமிழர்களின் இஸ்தலம் என்று  கூற  முடியாது . அப்படி என்றால் மக்கா அரேபியர்களின் இஸ்தலம் என்றும், எருசலேம் (இப்போது ஜூதரின் கட்டுப்பாட்டில்) இஸ்ரவேலரின் இஸ்தலம் என்றும் கருதப்படும். மத இஸ்தலம் எனும்போது அது அந்த மதத்தை சார்ந்த எல்லோருக்கும் பொதுவானது என்பது எனது கருத்து. முன்னேஸ்வரம் சிலாபத்தில் இருப்பதால் அது சிங்களவர்களின் ஸ்தலமாக முடியாது.

அப்படி இல்லை என்பது என் கருத்து.  ஒவ்வொரு மத தலமும் அந்த மதத்தின் எல்லாருக்குமானதே ஆனால் அதன் அமைவிடத்தை பொறுத்து அதன் கட்டுப்பாடு குறித்த ஒரு இனத்தின் கையில்த்தான் இருக்கும்.

உதாரணமாக என்னதான் முஸ்லீம் என்றாலும் சவுதி இராஜகுடும்பத்தை விமர்சிப்பவர் அல்லது ஒரு யேமனிய கிளர்ச்சி குழு தலைவர், ஹஜ்/உம்ரா போக அனுமதி கிடையாது. போனால் மீள முடியாது.

அதே போல் இஸ்ரேலின் மீது தாக்குதலை திட்டமிட்டுவிட்டு ஒருவர் பிறப்பிட தேவாலயத்தையோ அல்லது - அல் அக்சா மஸ்ஜித்தையோ தரிசித்து மீள முடியாது.

ஆகவே யார் அந்த நிலத்தை கட்டுபடுத்துகிறார்கள் என்பதை வைத்து - அது அவர்கள் தலம் என்பது பொருத்தமானதே என்பது என் நிலைப்பாடு.

7 hours ago, Cruso said:

எனக்கு தெரிந்த வரைக்கும் நஞ்சு ஊட்டப்பட்டதாக அறியவில்லை.

நானும் இதை முன்னர் அறிந்திருக்கவில்லை. ஆனால் யாழில்தான் ஒரு உறவு இப்படி ஒரு சந்தேகம் உள்ளது என முன்னர் ஒரு கருத்து பரிமாற்றத்தில் கூறி இருந்தார்.

7 hours ago, Cruso said:

அப்படி யாரும் மொழி வாரியாக தடுக்க முடியாது என நினைக்கிறேன்.

யாழில் இருந்த விகாரை, சிங்கள மகாவித்தியாலயம். மட்டகளப்பில் சிங்கள மகாவித்தியாலயம்…..இப்படி சில மொழிவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டன.

ஆகவே முடியாது என்று இல்லை.

செய்ய வேண்டிய தேவை இல்லை.  செய்ய விரும்பவில்லை.

ஆகவே செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

எனக்கு தெரிந்த வரைக்கும் அந்த சுற்றாடலில் அரச மரம் இல்லை. இருந்து இல்லாமலாக்கினார்களோ தெரியவில்லை. ஆனால், பிரதான பாதையிலிருந்து மடு ஆலயத்துக்கு போகும் இடத்தில பெரிய அரச மரம் வைத்து பெரிய பவுத்த விகாரை கடடப்பட்டு வெகு நாட்களாகி விட்ட்து. அதை பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தவர் நீங்கள் கூறும் ராயப்பு ஜோசேப்பு அவர்கள்தான். 

ஓம் போனமுறை போனபோது இதை கண்ட நினைவு வருகிறது. ராயப்பு ஜோசேப் திறந்து வைத்தார் என்பது எனக்கு புது செய்தி. அறிய தந்தமைக்கு நன்றி.

ஒரு மத தலைவர், விகாரை திறப்பு விழாவுக்கு வாருங்கள் என கேட்பின், முடியாது என மறுத்தால் சர்சை ஆகும்.  ஏற்கனவே “ஆவோ மரியா, ராயப்பு நரியா” என பகிரங்கமாக அவரை இனவாதிகள் திட்டிகொண்டிருந்தார்கள்.  கூடவே பாம்புக்கு வாலை மீனுக்கு தலையை காட்டும் வத்திக்கான், போகும் படியும் பணித்திருக்கலாம்.

அவர் போயிருக்ககூடாது என்பதே என் நிலைப்பாடு எனிலும், போனதன் பின் உள்ள அளுத்தங்களை நான் புரிந்து கொள்கிறேன்.

யோசித்து பார்த்தால் மடுவிற்குள் பெளத்த தலம் கொண்டு வர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்றே படுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக அதன் சுற்றாடலை சிங்கள மயப்படுத்தி, அதன் பின் குருமார்கள் நியமனத்தை தக்க முறையில் மல்கம் ரஞ்சித் கையாண்டால் “மடு சிங்கள கத்தோலிக்கர் கோவில், அங்கு தமிழிலும் திருப்பலி பூசை நடக்கும்” என்ற நிலையை உருவாக்கி விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

இதென்ன இந்தாள் எல்லாத்துக்கும் என்னை இழுத்து கேள்வி கேட்குது…ஏதோ நான் போப்பாண்டவரின் விசேட பிரதிநிதி மாரி….🤣

எப்போ கேட்ட கேள்விக்கு, இப்போ வந்து புலம்பல் வேற. நான் நினைச்சேன், ஆள் மடுத்திருவிழாவில்நிக்கிறார் என்று.

16 hours ago, goshan_che said:

கதிர்காமத்துடனா ஒப்பீடு மிக தவறானது. அது தமிழர் நிலத்தின் எல்லையில் இருந்த தமிழர் கோவில். 1948 வரை அப்படித்தான் இருந்தது. அருகே ஒரு தர்காவும், பெளத்த ஆலயமும் இருந்தன. அதை புனித பூமி சட்டம் போட்டு முழு பெளத்த சிங்களமயமாக்கியது இலங்கை அரசு.

இடம் கொடுத்தால் மடம் கட்டும் சிங்களம் என்பதற்கு இது இன்னுமோர் எடுத்துக்காட்டு. கதிர்காமத்தில் தொடங்கி இப்போ சுழிபுரம் பறாளாயில் வந்து விகாரை கட்ட அடாத்துபண்ணுது. கச்சத்தீவில் புத்தர் ஒளிச்சிருந்ததோடேயே கத்தோலிக்கம் விழித்துக்கொண்டனர் போலும், பாப்பாண்டவரின் பிரதிநிதியை அழைத்து தமிழர் பிரதேங்கள், அங்குள்ள தேவாலயங்களை சுற்றிக்காட்டுவதோடு அவரைக்கொண்டே திருப்பலி நிறைவேற்றுவித்து வரகலாற்று பதிவை ஏற்படுத்துகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது. அவர்கள் வேறெங்கே தங்கள் பிரச்சனையை முறையிட முடியும்?

9 hours ago, Cruso said:

எனக்கு தெரிந்த வரைக்கும் நஞ்சு ஊட்டப்பட்டதாக அறியவில்லை.

மறைந்த மன்னார் ஆயர், தமிழ் இன அழிப்புக்கான ஆதாரங்களை குறிப்பிட்ட நபரிடமோ, நிறுவனத்திடமோ கையளிப்பதற்காக பயணம் மேற்கொண்டிருந்தார், மிகவும் பதட்டமாக இருந்தார் அதை கையளித்துவிட வேண்டுமென, ஆனால் இடைவெளியில் உடல்நிலை குன்றி நடமாட முடியாத நிலையில் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு சிகிச்சை பலனின்றி ஓய்வு நிலையிலேயே இறைவனடி சேர்ந்தார். சிங்களத்துக்கு ஒரு தலையிடி தீர்ந்தது. அப்போ பத்திரிகைகளில் வந்த செய்தி, ஆயரின் கொழும்பு பயணத்தின் போது இராணுவ சோதனை நிலையத்தில் ஆயருக்கு இராணுவத்தினரால் தேநீர் வழங்கப்பட்டதாகவும், அதை அருந்திய பின்னரே அவர் நோய்வரய்ப்பட்டதாக. ஆனால் அந்தச்செய்தியை ஆயர் இல்லம் மறுத்திருந்தது.

16 hours ago, goshan_che said:

சமாதான காலத்தில் மகிந்த பிரதமராக இருக்கும் போது மடுவுக்கு வர கோரினார். ஆயுத படை இல்லாமல் வரலாம் என புலிகள் சொல்ல, வராமல் விட்டு விட்டார்.

சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் என நினைக்கிறன், யாழ்ப்பாணத்தை  விட்டு  இடம்பெயர்ந்து மடுத்தேவாலயத்தில் அநேக மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். அங்கே புலிகள் முகாமிட்டு இருப்பதாக கூறி தேவாலயத்தை குண்டுபோட்டு தாக்க அத்துலத் முதலி திட்டம் போட்டு, தாக்குதலுக்கு முதல் மக்களை அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட காலக்கெடு அறிவித்து அதற்குள் வெளியேறாவிட்டால் தாக்குதல் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் குறித்த நாளில் அத்துலத் முதலி  வேறொரு பிரதேசத்தில் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானார். தஞ்சமடைந்த்திருந்த மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதாவது மடுத்தேவாலயத்தின்மீது தாக்குதலேதும் நடத்தப்படவில்லை. அந்த சமயத்தில் மாதாவின் திருச்சுரூபத்தை ஆயர் பாதுகாப்பாக இன்னோர் ஆலயத்தில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.  தமிழரின் பிரதேசங்களில் கரையோரப்பகுதியெங்கும் விகாரைகளை அமைத்து சிங்களவரை குடியேற்றி தமிழரை சுற்றி வளைத்து உள்ளே வைத்து நசுக்கி அழிக்கும் திட்டம் தீவிரமாக நகருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

எப்போ கேட்ட கேள்விக்கு, இப்போ வந்து புலம்பல் வேற. நான் நினைச்சேன், ஆள் மடுத்திருவிழாவில்நிக்கிறார் என்று.

உந்த லொல்லுத்தானே வேணாம் எண்டுறது🤣. பத்தியின் ஒரு அங்கமாக கேட்காமல் ஒரு @ போட்டு கேட்டிருந்தால் பதில் பட்டென்று வந்திருக்கும்.

18 minutes ago, satan said:

பாப்பாண்டவரின் பிரதிநிதியை அழைத்து தமிழர் பிரதேங்கள், அங்குள்ள தேவாலயங்களை சுற்றிக்காட்டுவதோடு அவரைக்கொண்டே திருப்பலி நிறைவேற்றுவித்து வரகலாற்று பதிவை ஏற்படுத்துகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது.

இதுதான் நடக்கிறது எண்டால் மிகவும் நல்ல நகர்வு👍.

19 minutes ago, satan said:

அவர்கள் வேறெங்கே தங்கள் பிரச்சனையை முறையிட முடியும்

அவர்களுக்கு காலம் தாழ்த்தியேனும் வத்திக்கான் செவி சமைப்பதாக போக்கு காட்டவாவது செய்யும்.

நம்ம சைவர்கள் நிலைதான் பரிதாபம் கெளரம் படத்தில் சிவாஜி சொல்வது போல “நான் எங்க போவேன்? நேக்கு யாரத்தெரியும்”. 

21 minutes ago, satan said:

மறைந்த மன்னார் ஆயர், தமிழ் இன அழிப்புக்கான ஆதாரங்களை குறிப்பிட்ட நபரிடமோ, நிறுவனத்திடமோ கையளிப்பதற்காக பயணம் மேற்கொண்டிருந்தார், மிகவும் பதட்டமாக இருந்தார் அதை கையளித்துவிட வேண்டுமென, ஆனால் இடைவெளியில் உடல்நிலை குன்றி நடமாட முடியாத நிலையில் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு சிகிச்சை பலனின்றி ஓய்வு நிலையிலேயே இறைவனடி சேர்ந்தார். சிங்களத்துக்கு ஒரு தலையிடி தீர்ந்தது. அப்போ பத்திரிகைகளில் வந்த செய்தி, ஆயரின் கொழும்பு பயணத்தின் போது இராணுவ சோதனை நிலையத்தில் ஆயருக்கு இராணுவத்தினரால் தேநீர் வழங்கப்பட்டதாகவும், அதை அருந்திய பின்னரே அவர் நோய்வரய்ப்பட்டதாக. ஆனால் அந்தச்செய்தியை ஆயர் இல்லம் மறுத்திருந்தது.

இதைத்தான் அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது என கூறினேன். இதை நெடுக்ஸ் @nedukkalapoovan முதலில் யாழில் எழுதிய நினவு. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் என நினைக்கிறன், யாழ்ப்பாணத்தை  விட்டு  இடம்பெயர்ந்து மடுத்தேவாலயத்தில் அநேக மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். அங்கே புலிகள் முகாமிட்டு இருப்பதாக கூறி தேவாலயத்தை குண்டுபோட்டு தாக்க அத்துலத் முதலி திட்டம் போட்டு, தாக்குதலுக்கு முதல் மக்களை அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட காலக்கெடு அறிவித்து அதற்குள் வெளியேறாவிட்டால் தாக்குதல் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் குறித்த நாளில் அத்துலத் முதலி  வேறொரு பிரதேசத்தில் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானார். தஞ்சமடைந்த்திருந்த மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதாவது மடுத்தேவாலயத்தின்மீது தாக்குதலேதும் நடத்தப்படவில்லை. அந்த சமயத்தில் மாதாவின் திருச்சுரூபத்தை ஆயர் பாதுகாப்பாக இன்னோர் ஆலயத்தில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.  தமிழரின் பிரதேசங்களில் கரையோரப்பகுதியெங்கும் விகாரைகளை அமைத்து சிங்களவரை குடியேற்றி தமிழரை சுற்றி வளைத்து உள்ளே வைத்து நசுக்கி அழிக்கும் திட்டம் தீவிரமாக நகருகிறது. 

இந்த கதை நம்பும்படியாக இல்லை.

அத்துலத்முதலி செத்தது ஆகஸ்ட்/செம்டம்பர் 1992. சந்திரிகா மீண்டும் அரசியலுக்கு வந்தது 1993 மேதினத்தில் பிரேமதாச இறந்த பின். 

1995 யாழிடப்பெயர்வின் போது சந்திரிகா பாதுகாப்பு அமைச்சர், ரத்வத்த பிரதி பாதுகாப்பு அமைச்சர். ரத்வத்தை 2011 இல் இறந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

மறைந்த மன்னார் ஆயர், தமிழ் இன அழிப்புக்கான ஆதாரங்களை குறிப்பிட்ட நபரிடமோ, நிறுவனத்திடமோ கையளிப்பதற்காக பயணம் மேற்கொண்டிருந்தார், மிகவும் பதட்டமாக இருந்தார் அதை கையளித்துவிட வேண்டுமென, ஆனால் இடைவெளியில் உடல்நிலை குன்றி நடமாட முடியாத நிலையில் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு சிகிச்சை பலனின்றி ஓய்வு நிலையிலேயே இறைவனடி சேர்ந்தார். சிங்களத்துக்கு ஒரு தலையிடி தீர்ந்தது. அப்போ பத்திரிகைகளில் வந்த செய்தி, ஆயரின் கொழும்பு பயணத்தின் போது இராணுவ சோதனை நிலையத்தில் ஆயருக்கு இராணுவத்தினரால் தேநீர் வழங்கப்பட்டதாகவும், அதை அருந்திய பின்னரே அவர் நோய்வரய்ப்பட்டதாக. ஆனால் அந்தச்செய்தியை ஆயர் இல்லம் மறுத்திருந்தது.

பேராசிரியர் துரைராஜாவும் கொழும்பு வைத்தியசாலையில் நஞ்சூட்டப் பட்டார் என்று ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டோம். உண்மையில், நிலத்தடி அமைப்புகளின் பொறியியலில் தன்  ஆய்வுப் பணிகளை ஆற்றிய பேராசிரியருக்கு, ஏனையோரை விட புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும், அப்படியே புற்று நோயும் ஏற்பட்டு மரணமானார்.

பின்னர், அதே டிசைனில் ஒரு  வதந்தியை ஆயர் விடயத்திலும் கிளப்பி விட்டார்கள். தொடர்ந்து, முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி என்றும் ஒரு கதை உலவியது. இப்படியான வதந்திகள் காலத்திற்குக் காலம் வரும், உண்மையாக இருக்க வாய்ப்புகள் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

கொஞ்சம் கொஞ்சமாக அதன் சுற்றாடலை சிங்கள மயப்படுத்தி, அதன் பின் குருமார்கள் நியமனத்தை தக்க முறையில் மல்கம் ரஞ்சித் கையாண்டால் “மடு சிங்கள கத்தோலிக்கர் கோவில், அங்கு தமிழிலும் திருப்பலி பூசை நடக்கும்” என்ற நிலையை உருவாக்கி விடலாம்.

கொஞ்சம் கொஞ்சம் என்ன , அங்கு சிங்கள குடியிருப்புகள் உருவாக்கி எத்தனையோ வருடங்கள். சில வருடங்களுக்கு முன்பு அரச வங்கியின் அனுசரணையில் வீடுகள் கட்டி 90 % அவர்களுக்கும் , 10 % இவர்களுக்கும் கண் துடைப்புக்காக கொடுத்தார்கள். மற்றப்படி குடியேற்றம் எல்லாம் சீராக நடக்கின்றது. சிவா பூமியையே ஆக்கிரமிப்பவர்களுக்கு இதெல்லாம் ஒன்றுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

பேராசிரியர் துரைராஜாவும் கொழும்பு வைத்தியசாலையில் நஞ்சூட்டப் பட்டார் என்று ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டோம். உண்மையில், நிலத்தடி அமைப்புகளின் பொறியியலில் தன்  ஆய்வுப் பணிகளை ஆற்றிய பேராசிரியருக்கு, ஏனையோரை விட புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும், அப்படியே புற்று நோயும் ஏற்பட்டு மரணமானார்.

பின்னர், அதே டிசைனில் ஒரு  வதந்தியை ஆயர் விடயத்திலும் கிளப்பி விட்டார்கள். தொடர்ந்து, முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி என்றும் ஒரு கதை உலவியது. இப்படியான வதந்திகள் காலத்திற்குக் காலம் வரும், உண்மையாக இருக்க வாய்ப்புகள் குறைவு.

சில புற்று நோயை குணப்படுத்தலாம், சிலவற்றை தாமதப்படுத்தலாம், சிலவற்றை குணப்படுத்தமுடியாது. பேராசிரியர் துரைராஜாவை பொறுத்த வரைக்கும் அவருக்கு குறித்த காலத்துக்குள் மரணத்தை உட்படுத்தும் புற்று நோயே. எனக்கு தெரிந்த வரைக்கும் சிங்கள வைத்தியர்கள்/ பொறியியலாளாளர்கள்  முடியுமான வரைக்கும் தங்கள் முயட்சியை மனப்பூர்வமாக மேட்கொண்டார்கள். அவரைப்பற்றி சில எதிர்மறையான கருத்துக்கள் இருந்தாலும் அவரது மாணவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. மற்றப்படி இந்த வதந்திகள் எல்லாம் வைத்திய / விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கும் வரைக்கும் வதந்திகளே.

17 hours ago, விளங்க நினைப்பவன் said:

மக்காவுக்கு எல்லோரையும் சேர்த்து அனுப்பி  தரிசிக்க வைப்பதற்கு  அமைதிமார்க்கத்தினர் ஆசை படுகிறார்கள்.

அமைதி மார்க்கத்தினர்????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Cruso said:

கொஞ்சம் கொஞ்சம் என்ன , அங்கு சிங்கள குடியிருப்புகள் உருவாக்கி எத்தனையோ வருடங்கள். சில வருடங்களுக்கு முன்பு அரச வங்கியின் அனுசரணையில் வீடுகள் கட்டி 90 % அவர்களுக்கும் , 10 % இவர்களுக்கும் கண் துடைப்புக்காக கொடுத்தார்கள். மற்றப்படி குடியேற்றம் எல்லாம் சீராக நடக்கின்றது. சிவா பூமியையே ஆக்கிரமிப்பவர்களுக்கு இதெல்லாம் ஒன்றுமில்லை. 

இப்போ பாதுகாக்கப்பட்ட வனங்களையும் விடுவிக்க போகிறார்களாம்.

போன தடவை போன போது, புத்தளம்-வில்பற்று (வில்பத்துவ) காட்டுப்பாதையில் வெள்ளம் என்பதால் நொச்சி காமம் (நொச்சியகம), தாந்திரி மலை வழியாக சிலாவத்துறை போய் பின் மடுவுக்கு போனேன்.

வழியில் அடர் காடுகளை கண்ட போது - இப்படியாவது எம் மண் தப்புகிறதே என நினைத்துக்கொண்டேன். இனிமேல் அதற்கும் ஆப்பு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

அத்துலத்முதலி செத்தது ஆகஸ்ட்/செம்டம்பர் 1992. சந்திரிகா மீண்டும் அரசியலுக்கு வந்தது 1993 மேதினத்தில்

13 hours ago, satan said:

சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் என நினைக்கிறன்,

பிரேமதாச இறந்த பின். 

ஆட்கள், பெயர்கள் மாறலாம் காரணம்; நினைவாற்றல் பாதிப்பு. சம்பவம் உண்மை. புலிகள் மடுத்தேவாலயத்தில் இருப்பதாக தாக்குதல் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டு தேவாலயம் பகுதியளவில் சேதப்பட்டது, மாதா திருச்சுரூபம் பாதுகாப்புக்கருதி வேறு தேவாலயத்துக்கு மாற்றப்பட்டது  ஆனால் பாரிய அளவிலான திட்டமிடப்பட்டு காலக் கெடு கொடுக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்படவில்லை. காரணம் அப்போதைய புலிகளின் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் பாதிக்கப்பட்டதால்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

இப்படியான வதந்திகள் காலத்திற்குக் காலம் வரும், உண்மையாக இருக்க வாய்ப்புகள் குறைவு.

ஹஹ்ஹா...... எங்கள் பெரியவர்கள் சொல்வார்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வநாயகம்இறந்த காலகட்டத்தில், அவரை தொடர்ந்து இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இறந்தனராம். (அதில் ஒருவர் தர்மலிங்கமாக இருக்கலாம். பெயர் மறந்துபோச்சு, பிறகு கோஷான் கேள்வியோடு வரக்கூடாது). அவர்களது இறப்பு நிகழ்வதற்கு முன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அப்போதைய சிங்கள பிரதமரால்  சந்திப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு தேனீர் விருந்து அளிக்கப்பட்டதாம், அதன் பின்னரே அவர்கள் இறப்பு நிகழ்ந்ததாகவும். நான் எங்கோ வாசித்த ஞாபகம், செல்வநாயகம் அவர்கள் ஏதோ ஒரு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக. நோய் மறந்து போச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

அமைதி மார்க்கத்தினர்????????????????????????

 🤣

தமிழ் அரசியல்வாதிகள் சந்தர்பவாதிகள் வாக்குகள் பெறுவதற்காக நேர் எதிராக  அப்படி அமைதிமார்க்கம்  என்று அழைத்து கொள்வார்கள். அவர்களும் தங்களை தாங்களே  அப்படி சொல்வதுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/8/2023 at 09:35, suvy said:

எல்லா இன மக்களும் எவ்வித பேதமும் இன்றி வழிபட்டு சென்ற திருத்தலம் மடு.........இனிமேலும் அப்படியே  விழாக்கள் அங்கு நடைபெற வேண்டும்.........!  😁

நன்றி ஏராளன் ......!

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சிங்கள இனவாத அரசின் உள்நோக்கம் வேறாகவே உள்ளது.பௌத்த கிறிஸ்தவ இந்து மதம் மூலம் சிங்கள இன விரிவாக்கலை கச்சிதமாக செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அதென்றால் உண்மைதான்.......!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.