Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நான்கு மாதங்களாக எந்தவொரு வைத்தியசாலைகளிலும் இன்சுலின் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இன்சுலின் இல்லாத பட்சத்தில் நீரிழிவு நோயளர் ஒருவருக்கு வழங்கக்கூடிய சிகிச்சை என்ன என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது எனவும்  இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என்றும் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். (a)

Tamilmirror Online || இன்சுலின் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த இல்லாமை ஆரம்பம்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, பிழம்பு said:

நான்கு மாதங்களாக எந்தவொரு வைத்தியசாலைகளிலும் இன்சுலின் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இன்சுலின் இல்லாத பட்சத்தில் நீரிழிவு நோயளர் ஒருவருக்கு வழங்கக்கூடிய சிகிச்சை என்ன என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது எனவும்  இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என்றும் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். (a)

Tamilmirror Online || இன்சுலின் இல்லை

நாடு படிப்படியாக இலவச மருத்துவ சேவையினை இல்லாமல் செய்கிறது.

இன்சுலின் மட்டுமல்ல, சகல மருந்துகளும் தாராளமாக இருக்கிறது. மருத்துக்கடைகளில், காசு கொடுத்து வாங்கவேண்டும். காசு இல்லாவிடில், கதை காலி. இலங்கையில் இன்னொரு விடயம், காசு இருப்பவர்கள் தரமான மேலை நாட்டு மருந்துகளையும், இல்லாதவர்கள், இந்திய மருந்துகளையும் வாங்கி கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது உண்மையா ஏராளன்?  உலக சுகாதார ஸ்தாபனத்தின் அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் 70 களிலிருந்து இடம்பெறும் ஒரு மருந்து இன்சுலின் ஊசி. இது போன்ற மருந்து 4 மாதங்களாக வைத்தியசாலைகளில் இல்லையென்றால், ஏன் GMOA கூட ஒரு அறிக்கை விடவில்லை?

95% ஆன நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் பற்றாக்குறையில்லாத இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள். இந்த T2D வகை நீரிழிவிலும் ~30% ஆனோருக்கு ஒரு கட்டத்தில் இன்சுலின் ஊசி தேவைப்படுகிறது. மிகுதிப் பேருக்கு வேறு மருந்துகள் போதுமானவை. 

Edited by Justin
Posted

மருத்துவ விநியோகப் பிரிவில் ஏற்கனவே இன்சுலின் தீர்ந்துவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://english.newsfirst.lk/2023/8/4/sri-lanka-running-low-on-insulin

முற்றாகத் தீர்ந்திராது என்று நினைக்கிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, இணையவன் said:

மருத்துவ விநியோகப் பிரிவில் ஏற்கனவே இன்சுலின் தீர்ந்துவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://english.newsfirst.lk/2023/8/4/sri-lanka-running-low-on-insulin

முற்றாகத் தீர்ந்திராது என்று நினைக்கிறேன்.

இலங்கையில், பல நாட்களாகவே, மருந்து நாளைக்கு வரும், வந்து கம்பவுண்டரிடம் கேளுங்கோ எண்டு சொல்லுறதும், அடுத்தநாளும் இதே கதை என்பதால், ஆட்கள் அலைய விரும்பாமல், டாக்குத்தர் துண்டு எழுதி கொடுப்பதும், வெளியில போய், ஊசி வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து, போடுவிப்பதும், குளுசை வாங்கிக்கொண்டு போவதும் வழமை. 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

இது உண்மையா ஏராளன்?  உலக சுகாதார ஸ்தாபனத்தின் அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் 70 களிலிருந்து இடம்பெறும் ஒரு மருந்து இன்சுலின் ஊசி. இது போன்ற மருந்து 4 மாதங்களாக வைத்தியசாலைகளில் இல்லையென்றால், ஏன் GMOA கூட ஒரு அறிக்கை விடவில்லை?

95% ஆன நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் பற்றாக்குறையில்லாத இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள். இந்த T2D வகை நீரிழிவிலும் ~30% ஆனோருக்கு ஒரு கட்டத்தில் இன்சுலின் ஊசி தேவைப்படுகிறது. மிகுதிப் பேருக்கு வேறு மருந்துகள் போதுமானவை. 

மருத்துவமனைகளுடன் சம்பந்தப்படுவோரிடம் விசாரித்து பதில் போடுகிறேன் அண்ணை.

கடந்தாண்டு நெருக்கடியின் போது தைரோயிட் மருந்து(3மாத காலம் மட்டுமே அதனுடைய பாவனைக் காலம்) தட்டுப்பாடு ஏற்பட்டது.

தனியார் மருந்துக் கடைகளில் இன்சுலின் மருந்து வாங்கக் கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு தேவையான இன்சுலின் கையிருப்பு!

Published By: DIGITAL DESK 3

08 AUG, 2023 | 12:25 PM
image
 

லேடி ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு தேவையான இன்சுலின் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், வைத்தியசாலைகளில் இன்சுலின் இல்லை என  வெளியான தகவல் பொய்யானது எனவும் அவர் கூறினார்.

மேலும்  தெரிவித்துள்ள  அவர், எங்கள்  வைத்தியசாலையில்  தேவையானயளவு  இன்சுலின் உள்ளது.  கிளினிக்குகளுக்கு வரும் சிறுவர்களுக்கும் போதுமான இன்சுலின் வழங்கும் திறன் உள்ளது. 

நாட்டில் உள்ள எந்த ஒரு வைத்தியசாலைக்கும் இன்சுலின் தேவை இருந்தால், அதை வழங்கும் திறன் எங்களிடம் உள்ளது. எனவே, உங்கள் குழந்தைக்கு இன்சுலின் கொடுக்க விரும்பினால் தயக்கமின்றி வைத்தியசாலைக்கு செல்லுங்கள்  என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/161868

Justin  அண்ணை, நான் தெல்லிப்பளை வைத்தியசாலையில் பணிபுரிந்தவரிடம் வினவியபோது கடந்தாண்டு நெருக்கடியில் இருந்து உள்நோயாளர்களுக்கு மட்டும்(வார்ட்டில் தங்கியிருப்போருக்கு) இன்சுலின் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

275,000 இன்சுலின் மருந்து பொதிகள் இறக்குமதி

insulin.jpg

நாட்டில் தட்டுப்பாட்டு நிலவிய 275,000 இன்சுலின்(Insulin) மருந்து பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் மருந்து பொதிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மருந்து விநியோகத்துறையில் தட்டுப்பாடு நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 231 ஆக குறைவடைந்துள்ளது. தட்டுப்பாடு நிலவும் 38 வகையான மருந்துகள் அடுத்த இரு வாரங்களுக்குள் நாட்டிற்கு கிடைக்கும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் தற்போது 78 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

https://thinakkural.lk/article/269807

@Justin 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல வைத்தியரை பார்ப்பது எமக்கு நன்று.  மிகவும் முற்றிவிட்டது. யாழ் களம் தொடர்ந்து இப்படியான பழிவாங்கல்களுக்கு அனுமதிப்பது துரதிருஷ்டவசமானது. 
    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.