Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதான குடும்பஸ்தர் அடித்துக்கொலை : 6 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nochchi said:

திரியில் பல கருத்துகள், தங்களின் கருத்துட்படக் குமுகாய அக்கறையோடு முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் படித்தாலே நன்று. என்றாலும் எனது மனதிற்பட்டதை எழுதியுள்ளேன். குமுகாய ஆய்வுநிலை நோக்கிலும், முப்பது ஆண்டுகள் பெரும் இனஅழிப்புப் போரை எதிர்கொண்ட இனமென்ற வகையிலும், மிகவும் பலவீனமாக்கப்பட்டவர்கள் என்ற வகையிலுமாக எமது மக்கட் கூட்டத்தை நோக்கியே சிந்திக்க வேண்டியுள்ளது. தாய்நிலத்திலும் புலத்திலும் சரிவடைந்து செல்லும் பிறப்புவீதம், காதல் மற்றும் குடும்ப வாழ்வில் ஈடுபாடின்மையென்பன ஒரு நோய் போன்று எம்மினத்தை அரித்துவருகிறது. அப்படியானதொரு சூழலில் இதுபோன்ற குமுகாயப் பிறள்வுகள் சூழலை மேலும் பாதகமான நிலை நோக்கித் தள்ளிவிடும் அபாயத்தையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.  

இந்த அக்கறை மிக நியாயமானது. இதற்கு இளையோர் மத்தியில் போதை பாவனையை குறைத்தல் உட்பட செய்ய கூடிய பல விடயங்கள் உள்ளன. 

அதை விடுத்து மில்லியனில் ஒன்றாக இருக்கும் ஒரு முரண் காதலில் தலையிட்டு, அவர்கள் தனிமனித உரிமையில் கைவைத்துத்தான் சமூகத்தை காக்க வேண்டும் என்பதில்லை.

இந்த பெண்ணை பார்த்து இனி எல்லா 19/20 வயது பெண்களும் அங்கிள்கள் மீது காதல் வசப்பட போவதில்லை. ஆனால் கூட்டம் கூட்டமாக எமது இளையோர் குடி, போதைக்கு உள்ளாகுகிறார்கள்.

சமூகத்தை திருத்த அதில் அக்கறை செலுத்துவதே வினை திறனாக அமையும்.

இனப்பரம்பல் பிரச்சனைதான் ஆனால் அதை காட்டி தனிமனிதர் வாழ்வில் தலையிட முடியாது - அப்படி என்றால் குழந்தை பேறு அடைய முடியாத இளம் ஜோடிகளும் திருமணம் முடிக்க கூடாது என்றாகி விடும்.

திருமணம் என்பது பலதுக்காக செய்வது. அதில் பாலியல் தேவை, இனவிருத்தி, பாதுகாப்பு, ஒரு நட்பு என பல விடயங்கள் இருக்கும்.

இதில் எந்த ஒன்றுக்காக குறித்த இருவர் இணைகிறனர் என்பது அவர்களை பொறுத்தது. அதில் சமூகம் தலையிட்டு -சொல்ல எதுவும் இல்லை.

Edited by goshan_che

  • Replies 102
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

இதில் பெரும்பாலன திருமணங்கள் சம வயதுக்கு உரியோரின் திருமணங்கள் அல்லவா?

அப்போ பாலியல் திருப்தியின்மை எல்லா வயதிலும் வருகிறது. 

அப்போ இனிமேல் கலியாணம் கட்ட முதல் - ஆணும் பெண்ணும் ஒரு trial run ஓடி பர்த்துது திருப்தி என்றால் தொடரலாம் என்று மாற்ற வேண்டும் ( பல இடங்களில் அதுதான் வழமை).

போகிற போக்கில் உங்கள் முன்றாவது நிலையை எமது மக்கள் எடுத்தாலும் ஆச்சரியப்படமுடியாது. ஆனால், கலியாணம் கட்ட முதல் இருந்த நிலை கட்டினபிறகு மாறினால் என்னவாம் செய்யிறது. 

பாலியல் திருப்தியின்மை என்பது எல்லா வயதில் உள்ளோரிடமும் ஏற்படுவதை ஆய்வுகள் சுட்டுகின்றன. அது ஒரு கூட்டுமுயற்சியென்பதை நான்சொல்லியா..... 

சம வயதுத் திருமணங்களில் எல்லாம் சரியாக இருப்பதுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nochchi said:

பிரபலங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இதுபோனால் இன்னொன்று எனக் கடந்துவிடுவர். ஆனால், சாதாரணர்களின் வாழ்வு அப்படியா? 

என்ன டிவோர்ஸ் பண்ணினால் மொட்டை அடித்து பெண்ணை மூலையில் வைப்பார்களா?

வாழ்க்கையில் எல்லாமும் இருக்கு. சம வயதில் உருகி உருகி காதலித்து விட்டு டிவோர்ஸ் ஆவதில்லையா?

இப்போ இதுவும், ஊரிலும் வாழ்வின் ஒரு அங்கம் என ஆகிவிட்டது. அதுதான் சரியும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இளையோர் மத்தியில் போதை பாவனையை குறைத்தல் உட்பட செய்ய கூடிய பல விடயங்கள் உள்ளன. 

அதை விடுத்து மில்லியனில் ஒன்றாக இருக்கும் ஒரு முரண் காதலில் தலையிட்டு, அவர்கள் தனிமனித உரிமையில் கைவைத்துத்தான் சமூகத்தை காக்க வேண்டும் என்பதில்லை.

இந்த பெண்ணை பார்த்து இனி எல்லா 19/20 வயது பெண்களும் அங்கிள்கள் மீது காதல் வசப்பட போவதில்லை. ஆனால் கூட்டம் கூட்டமாக எமது இளையோர் குடி, போதைக்கு உள்ளாகுகிறார்கள்.

சமூகத்தை திருத்த அதில் அக்கறை செலுத்துவதே வினை திறனாக அமையும்.

இனப்பரம்பல் பிரச்சனைதான் ஆனால் அதை காட்டி தனிமனிதர் வாழ்வில் தலையிட முடியாது - அப்படி என்றால் குழந்தை பேறு அடைய முடியாத இளம் ஜோடிகளும் திருமணம் முடிக்க கூடாது என்றாகி விடும்.

திருமணம் என்பது பலதுக்காக செய்வது. அதில் பாலியல் தேவை, இனவிருத்தி, பாதுகாப்பு, ஒரு நட்பு என பல விடயங்கள் இருக்கும்.

இதில் எந்த ஒன்றுக்காக குறித்த இருவர் இணைகிறனர் என்பது அவர்களை பொறுத்தது. அதில் சமூகம் தலையிட்டு -சொல்ல எதுவும் இல்லை.

உண்மை, ஆனால் யார் பூனைக்கு மணிகட்டுவது என்பதிலும், இனப்பிரச்சினை என்று திரிவதிலும் குமுகாயத்தின் மீதான அக்கறை வீழ்ந்து செல்வதால் எல்லாம் தலைகீழாக உள்ளன. நற்சிந்தனையுடைய இளைய தலைமுறையொன்று உருவாகும்வரை எல்லாம் காணல்நீரே.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nochchi said:

பாலியல் திருப்தியின்மை என்பது எல்லா வயதில் உள்ளோரிடமும் ஏற்படுவதை ஆய்வுகள் சுட்டுகின்றன. அது ஒரு கூட்டுமுயற்சியென்பதை நான்சொல்லியா..... 

சம வயதுத் திருமணங்களில் எல்லாம் சரியாக இருப்பதுண்டா?

ஆகவேதான் சொல்கிறேன் - பாலியல் திருப்தியின்மை, இன விருத்தியின்மை என்பன சம/சமனற்ற வயது ஜோடிகளுக்கு பொதுவான பிரச்சனை.

சமனற்ற வயது ஜோடிகள் இணைவதை இதை காட்டி எதிர்க்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

என்ன டிவோர்ஸ் பண்ணினால் மொட்டை அடித்து பெண்ணை மூலையில் வைப்பார்களா?

வாழ்க்கையில் எல்லாமும் இருக்கு. சம வயதில் உருகி உருகி காதலித்து விட்டு டிவோர்ஸ் ஆவதில்லையா?

இப்போ இதுவும், ஊரிலும் வாழ்வின் ஒரு அங்கம் என ஆகிவிட்டது. அதுதான் சரியும் கூட.

மேற்கின்நிலையிலிருந்து எமது குமுகாயத்தை நோக்குதல் பொருத்தமாக இல்லை. அதற்காக அவர்கள் இந்த உலகுக்குள் இல்லையா என்று கேட்க வேண்டாம். காதலில் மனமொத்தால் உடலொவ்வாமை தாக்கம் செலுத்தாதென்பது எவளவுதூரம் பொய் என்பதற்கான பதில் உங்கள் கருத்திலேயே உள்ளது.  எதனைச் சரியென்பது சில நாட்கள், சில வாரங்கள், சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு போதலா? இது மற்றுமொரு குமுகாயச் சுமையாக மாறாதா?
 
  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்

எனது நண்பர் ஒருவர் இப்படி செய்திருந்தால் இதைவிட கொடூரமாக அவர் முடிவு இருந்திருக்கும். ஆனால் உங்களுக்கு செய்தி கிடைத்திருக்காது.

குற்றங்களை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகம் அல்லது முதுகில் குத்துதலை???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

Simon Howell என்ற ஒரு பிரிட்டிஸ், அமேரிக்க டிவியில் வரும் இசை தொடர்பில் ஆளுமை.

இவர் ஒரு மில்லியனேயர். இவரது அமெரிக்க நண்பர் பில்லியனேயர்.

நம்பி வீட்டுக்குள்ள விட.... கல்யாணமே கட்டாத Simon, பிள்ளைய நான் சுமக்கிறன் எண்டு அம்மணி சொல்ல, நண்பர் டிவோசில ஓட, இவர் பிள்ளைய வளக்கிறார்.

ஆக, நம்மூரில மட்டுமல்ல, இது உலகளாவிய பிரச்சணை. நம்மூரில இப்ப கைதாகின ஆட்கள் உள்ள போக அடுத்த முறை நமக்கேன் வம்பு என கவனமாக இருப்பர்.

மேலும் இறந்த நபர், 18 வயசுப் பெண்ணை தீடீரென காதலித்து இழுத்துக் கொண்டு ஓடீயிரார். அதாவது பெண் சிறுமியாக இருக்கும் போதே, அதாவது 17 வயதுக்கு முன்னரே இவர் நிச்சயமாக தவறாக (child abuse) நடாத்தி இருப்பார் என்று நிணைக்கிறேன். (Grooming)

விகடனில் வாசித்த தமிழகத்தில் குக்கிராமத்தில் நடந்த சம்பவம். இரு child abusers. குடும்பஸ்தர்கள். கண நாட்களாக சேட்டை. ஊர் பஞ்சாயத்து காதும், காது வைச்ச மாதிரி விசாரிச்சு, கடும் எச்சரிக்கை விட்டது.

கேட்டகவில்லை. ஒருநாள் இருவரும் மரமொன்றில் தூக்கில் தொங்கினார்கள். பஞ்சாயத்து தற்கொலை என்று சொல்ல, போலீசும் ஏற்று பைல் மூடப்பட்டது.

ஆகவே, நாம் ஊராரின் கோவத்துக்கு காரணம் இந்தக் கோணத்திலும் இருக்கலாமோ என்றும் பார்க்கவும் வேண்டும். 

விசாரணையில் வெளிவரலாம்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்

எனது நண்பர் ஒருவர் இப்படி செய்திருந்தால் இதைவிட கொடூரமாக அவர் முடிவு இருந்திருக்கும். ஆனால் உங்களுக்கு செய்தி கிடைத்திருக்காது.

குற்றங்களை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகம் அல்லது முதுகில் குத்துதலை???

நாம் கேள்விப்படுபவை எல்லாம் யாரோ யாரோ கூறியவை. உண்மை, பொய் தெரியாது. 

கொல்லப்பட்டவர் வசதி படைத்தவர்,  இந்த பிள்ளை வீட்டுக்கு பல உதவிகள் செய்துள்ளாராம் என்றும் ஒரு கதை. 

தகப்பனின் நண்பர் என்றால் எப்படி நண்பர் என தெரியாது. யாராவது காசு உதவி செய்தாலே நண்பர் என்று தானே சொல்வார்கள். 

நீங்கள் அரிதான ஒரு சம்பவத்தை வைத்து அதை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்து ஒட்டி கற்பனை பண்ணி பார்த்து ஏன் டென்சன் ஆகின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அதே

1 minute ago, நியாயத்தை கதைப்போம் said:

நாம் கேள்விப்படுபவை எல்லாம் யாரோ யாரோ கூறியவை. உண்மை, பொய் தெரியாது. 

கொல்லப்பட்டவர் வசதி படைத்தவர்,  இந்த பிள்ளை வீட்டுக்கு பல உதவிகள் செய்துள்ளாராம் என்றும் ஒரு கதை. 

தகப்பனின் நண்பர் என்றால் எப்படி நண்பர் என தெரியாது. யாராவது காசு உதவி செய்தாலே நண்பர் என்று தானே சொல்வார்கள். 

நீங்கள் அரிதான ஒரு சம்பவத்தை வைத்து அதை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்து ஒட்டி கற்பனை பண்ணி பார்த்து ஏன் டென்சன் ஆகின்றீர்கள். 

அதிலும் காசைக்காட்டி.???

அப்ப முடிவு சரிதான்.

அப்பு ராசா நான் ரென்சனாகவில்லை. உண்மையை சொன்னேன் 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்

எனது நண்பர் ஒருவர் இப்படி செய்திருந்தால் இதைவிட கொடூரமாக அவர் முடிவு இருந்திருக்கும். ஆனால் உங்களுக்கு செய்தி கிடைத்திருக்காது.

குற்றங்களை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகம் அல்லது முதுகில் குத்துதலை???

பயமாக இருக்கிறது. யாரோடு பழகுவதென்ற ஐயமே ஏற்படும் சூழல் வளர்ந்து குறுகிவிடப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nochchi said:

பயமாக இருக்கிறது. யாரோடு பழகுவதென்ற ஐயமே ஏற்படும் சூழல் வளர்ந்து குறுகிவிடப்போகிறது.

நெஞ்சில் வஞ்சம் இருந்தால்...

அந்தப்பயம்  தொடரட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான முரண்காதல் சம்பவங்கள் உலகிலும் ஊர்மனைகளிலும் கூடுதலாக நடந்திருக்கின்றன். அதில் ஊர்மனைகளில் பல பழிதீர்க்கும் கொலைகளில் முடிந்தும் இருக்கின்றன. மேலை நாடுகளில் தனி மனித உரிமை எனும் போர்வையில் கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் மானப்பிரச்சனையாக பார்த்து கொலைகளில் முடித்து விடுவார்கள்.

எனது கருத்து என்னவெனில் அநேகமான முரண் உறவாட்டங்களில் காமம் அல்லது பண வசதி மட்டுமே மேலோங்கியிருக்கும்.அங்கு காதல் என்பது இரண்டாம் பட்சமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியிலும் இது போன்ற சம்பவங்கள் தமிழ் குடும்பங்களில் ஏற்பட்டு முளையிலே கிள்ளி மூடி மறைக்கப்பட்டுள்ளது.

சொந்த அப்பனாக இருந்தாலும் வயது வந்த பெண் பிள்ளைகளை மடியில் வைத்து கொஞ்ச மாட்டார்கள். இது நம்ம ஊர் பழக்கவழக்கம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

நெஞ்சில் வஞ்சம் இருந்தால்...

அந்தப்பயம்  தொடரட்டும்

வளர்நிலைக் குமுகாயம்... கல்தோன்றி மண்தோன்றா.... என்ற விளித்தலோடு பேசும் எமதினத்தினது இந்தப்போக்கு எங்கு கொண்டுபோய் நிறுத்தப்போகிறது. இதற்கு இன்று உறவுமுறைகளை மதிக்காத போக்கும் இதற்கு அடிப்படை. கொஞ்சம் வசதி வந்தவிட்டாலோ அல்லது படித்து முன்னேறிவிட்டாலோ நீ யார் என்னைக் கேள்விகேட்க என்ற மனநிலையும் பெருகிவிட்டது.இவைகூட ஆரோக்கியமற்ற நிலைதானே. இவையெல்லாம் சேர்ந்தே குமுகாயப் பிறள்வுகளை ஏற்படுத்துகின்றன. அண்மையில் தாயகத்திலே அதிர்ச்சியான விடயமொன்றை அறிந்தபோது என்ன என்றாகிவிட்டது. ஒன்றுவிட்ட அதாவது, கூடப்பிறந்த அண்ணின் மகன்தானே என்று கவனியாமல் விட்டதால் பெரும் அவமானமாகிவிட்டதாக அவன் தன் மகளை திருமணம் செய்துவிட்டானெ அன்பரொருவர் அழுதுவிட்டார். அழைத்துச் சென்று தாலியும் கட்டி குடும்பமாகிவிட்டார்கள். எங்கே போகிறது எமது இனம்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nochchi said:

வாழ்வுக்கு  சமூகம் மீதான பயம்  மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம்

ஆனால் இன்று  அவை மழுங்கடிக்கப்பட்டு விட்டன

ஒன்றுவிட்ட  சித்தப்பாக்களுக்கு  எமக்கிருந்த  பயம் அல்லது  அவர்களுக்கு எம்மீதிருந்த பொறுப்பு இன்று இருக்கா??

இவன் யார் என்னை  தட்டிக்கேட்க என்ற  பிள்ளைகளும்

என்  பிள்ளை  என்ன  செய்தாலும் எவனும் தட்டிக்கேட்கக்கூடாது என்ற பெற்றோரும் வளர்ந்து  விட்ட சூழல்? இப்படித்தான் முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

மிக மிக ஆபத்தானதொரு நிலையை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தியுள்ளன. நாம் யாரிடமும் கையேந்தத் தேவையில்லை. எனவே எமக்கு எவருடைய புத்திமதியும் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nochchi said:

மிக மிக ஆபத்தானதொரு நிலையை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தியுள்ளன. நாம் யாரிடமும் கையேந்தத் தேவையில்லை. எனவே எமக்கு எவருடைய புத்திமதியும் தேவையில்லை.

இவ்வாறு  சமுகத்தை  தள்ளி  வைக்கும் பெற்றோர்

தாமாவது பிள்ளைகளை கண்டிப்புடன்  வளர்க்கிறார்களா என்றால்  அதுவும்  இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இவ்வாறு  சமுகத்தை  தள்ளி  வைக்கும் பெற்றோர்

தாமாவது பிள்ளைகளை கண்டிப்புடன்  வளர்க்கிறார்களா என்றால்  அதுவும்  இல்லை

அவர்களுக்கு அதுக்கு ஏது நேரம். குறுந்திரை காவியங்களுக்குக் கண்ணீர் துடைக்கவே நேரம்போதாதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வாழ்வுக்கு  சமூகம் மீதான பயம்  மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம்

எப்படியான பயம் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் அண்ணா? 

30, 40 வருடங்களுக்கு முன்பிருந்த மாதிரி  கட்டுப்பாடுகள் இப்பொழுது சாத்தியமா? சமூகத்தின் மீதான பயம் கூட முன்பு மாதிரி இப்பொழுது இருக்க முடியுமா?  

தற்போதைய உலகப்போக்கின் படி பயம், கட்டுப்பாடுகள் எந்த வகையில் ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்கும்?  

கட்டுபாடுகளை அதிகரிக்க அதிகரிக்கத்தான் அதனை மீறவேண்டும் என்ற நிலையும் உருவாவதையும் பார்த்திருக்கிறோம். 

எங்களது சமூகம் பல வழிகளில் இறுக்கமான ஒன்று என எனக்கு தோன்றுவதுண்டு ஏனெனில் பெற்றோரின் மீதான பயத்தில்/மரியாதையில்/அவர்களை மனம் நோகடிக்க விரும்பாமல் விருப்பமில்லாத பந்தத்தில் இணைந்தவர்கள் இருக்கிறார்கள்..

சமூகத்தின் மீதான பயம் காரணமாக மனம் ஒன்றாத மனைவியை/கணவனை விவாகரத்து செய்ய முடியாமல் வேறு வகையான உறவை நாடியவர்களும் எங்கள் சமூகத்தில் உள்ளனர்.. 

விருப்பமில்லாத துறையில் பெற்றோருக்காக படித்து வாழ்க்கையை ஏனோதானோ என்று வாழ்பவர்களும் எங்கள் சமூகத்தி்ல் உள்ளனர்.. 

சமூகத்தைக் காட்டி பயப்படுத்தி கட்டுப்பாடுகளை போடும் பட்சத்தில் தற்கொலைகளும் ஆணவக்கொலைகளும்தான் அதிகரிக்கும். இப்பொழுது நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் கூட வெளிச்சத்திற்கு வராமல் போகும் நிலையும் உள்ளது ஏனென்றால் சமூகத்தின் மீதான பயத்தில் வெளியே கூறாமல் குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்காமல் நடமாடும் நிலையும் உள்ளது. 

இன்று எங்களது நிலை இப்படிப் போக நாங்களேதான் காரணம். போதைவஸ்திற்கு அடிமையாகும் இளைய சமுகத்தை மாற்ற முடியாமல் அரசியல் தொடங்கி சமூக நிலைவேறுபாடுகள், வெளிநாட்டுப் பணத்தினால் ஒரு பகுதி தாங்கள் நினைத்ததை செய்ய இன்னொரு பகுதி அந்த நிலையை அடைய குறுக்கு வழிகளை நாடுகிறது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி கூடுகிறது. கல்வியில் நாட்டமின்மை, போசாக்கின்மையால் பாடசாலைக்கு போகமல் இருப்போர் வீதம் அதிகரிக்கிறது.. மாணவர்களின் எண்ணங்கள் திசை திரும்பிப்போகாமல் இருக்க தேவையான வளங்கள் இல்லை வழிகாட்டிகளும் இல்லை. 

 உண்மையில் இந்த சம்பவம் எங்களது குடும்பங்களில் நடந்திருந்தால் ஒவ்வொருவரும் வேறுவிதமாக நடந்திருப்பார்கள்.. ஆனால் யாருக்கோ நடந்தமையால் நிறைய கூறுகிறோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கட்டுப்பாடுகள் என்பதும் ஒருவித அச்சம் அல்லது போதை என்று கூட சொல்லலாம்.

கரணம் தப்பினால்???

இப்போ உங்களிடம் ஒரு கேள்வி

மாணவருக்கு ஆசிரியரிடம் பயம் அல்லது மரியாதை

சிஸ்யனுக்கு குருவிடம் பயம் அல்லது மரியாதை

பிள்ளைகளுக்கு பெற்றோர்களிடம் பயம் அல்லது மரியாதை

இப்படி பெற்றோர்களுக்கு???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

அண்மையில் தாயகத்திலே அதிர்ச்சியான விடயமொன்றை அறிந்தபோது என்ன என்றாகிவிட்டது. ஒன்றுவிட்ட அதாவது, கூடப்பிறந்த அண்ணின் மகன்தானே என்று கவனியாமல் விட்டதால் பெரும் அவமானமாகிவிட்டதாக அவன் தன் மகளை திருமணம் செய்துவிட்டானெ அன்பரொருவர் அழுதுவிட்டார். அழைத்துச் சென்று தாலியும் கட்டி குடும்பமாகிவிட்டார்கள். எங்கே போகிறது எமது இனம்? 

இவ்வாறான திருமணங்கள் சட்டப்படி செல்லாதே!  மேற்கு நாடுகளில் கூட செல்லாது.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் ஊகங்கள் ரெட்டை கட்டி பறக்கிறன.

இதுவரை வயது வித்தியாசம் மட்டுமே செய்தியாக வந்துள்ளது. மிகுதி grooming, seduction எல்லாம் அவரவர் கற்பனையே.

உலைவாயை மூடினாலும் வம்பளக்கும் ஊர்வாயை மூட முடியாது.

ஒத்த வயதுடையவர் சீதனத்துக்காக, அழகிற்காக, குடும்ப பெயருக்காக, படிப்புக்காக மணம் முடிப்பதில்லையா?

திருமணம் என்பதே அடிப்படையில் ஒரு கொடுக்கல் வாங்கல் உடன்படிக்கைதான். அதில் ஒரு விடயம் காதல். இன்னொரு விடயம் பணம். அந்தஸ்து, வயதான காலத்தில் துணை,   etc etc

பல கலாச்சார காதலர்களுக்கு இந்த வயது வித்தியாசத்தை சகிக்க கஸ்டமாய் உள்ளது.

எனது அம்மம்மா தன் 16 வயதில் 32 வயதில் என் அம்மப்பாவை கலியாணம் செய்து பொன்விழாவும் கண்டார்கள்.

இது வழமையானது இல்லை. ஆனால் நடக்கவே இல்லை என்ற விடயமும் இல்லை.

சட்டத்துக்கு உட்பட்டு, வயது வந்த தனிமனிதர் வாழ்வில் செய்யும் விடயங்களில் தலையிடாமல் வாழ்வது என்பது ஒரு நாகரீகமான சமூகத்தின் பண்பு - தமிழர்களுக்கு long way to go.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

உங்கள் அம்மம்மா

அம்மப்பாவின்  நண்பரின் மகள் இல்லையே???

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

இவ்வாறான திருமணங்கள் சட்டப்படி செல்லாதே!  மேற்கு நாடுகளில் கூட செல்லாது.  

சட்டப்படி செல்லாதவைகள் ஏற்று கொள் முடியாதவைகள்  மனித உரிமைகளுக்கு எதிரானது தான் அந்த கலாச்சாரம். cousin னை திருமணம் செய்வதும்  கலாச்சாரமாம் அதை தான் காப்பாற்ற வேண்டுமாம்.

3 hours ago, goshan_che said:

சட்டத்துக்கு உட்பட்டு, வயது வந்த தனிமனிதர் வாழ்வில் செய்யும் விடயங்களில் தலையிடாமல் வாழ்வது என்பது ஒரு நாகரீகமான சமூகத்தின் பண்பு - தமிழர்களுக்கு long way to go.

நூறு வீதம் உண்மை.

4 hours ago, goshan_che said:

பல கலாச்சார காதலர்களுக்கு இந்த வயது வித்தியாசத்தை சகிக்க கஸ்டமாய் உள்ளது

கலாச்சார காதலர்கள்  - அடிப்படைவாதிகளை கவுரமாக அழைக்கும் ஒரு பெயரோ 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.