Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தயார் : மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தயார் : மைத்திரி

மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியை தொடர்ந்து சிறந்த முறையில் நாட்டில் ஆட்சியை கொண்டு சென்றது நல்லாட்சி அரசாங்கமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தொழிலதிபர்கள், அரச ஊழியர்கள், மீனவர்களோ, பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாடசாலைகளில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாகி உள்ளது என்றும் இதனை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்றும் கூறியுள்ளார்.

ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்ற வகையில், முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் பதவி வகிப்பதற்கு தனக்கு எந்த சிரமமும் இல்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1347237

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் வாருங்கோ, வாருங்கோ...

அடுத்த ஈஸ்டர்க்கு சனம் ரெடியாக வேணுமெல்லோ!! 😡

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தயார்

ஆனால் முந்தைய அனுபவத்தால் மக்கள்தான் தயாராக இல்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆனால் முந்தைய அனுபவத்தால் மக்கள்தான் தயாராக இல்லை🤣

சரியாகச் சொன்னிர்கள் ......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தயார் : மைத்திரி

மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியை தொடர்ந்து சிறந்த முறையில் நாட்டில் ஆட்சியை கொண்டு சென்றது நல்லாட்சி அரசாங்கமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தொழிலதிபர்கள், அரச ஊழியர்கள், மீனவர்களோ, பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாடசாலைகளில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாகி உள்ளது என்றும் இதனை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்றும் கூறியுள்ளார்.

ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்ற வகையில், முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் பதவி வகிப்பதற்கு தனக்கு எந்த சிரமமும் இல்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1347237

பதவி ஆசை என்பது ஒருவரை எவ்வாறு எல்லாம் பேச வைக்கிறது. மக்களை இன்னும் மடையர்கள் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார். சில நேரங்களில் அதுவும் உண்மைதான்.

இவருக்கு விதித்த தண்டனை பணம் இன்னும் கொடுத்து தீர்க்காத படியால் உச்ச நீதி மன்றம் இவரை மீண்டும் அழைத்திருக்கிறது. அப்போது பார்ப்பம் இவரது பதவி ஆசைக்கு என்ன நடக்குதென்று. 

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது முந்தைய அனுபவம் என்ன, அதில் மக்கள் எவ்வாறு மகிழ்ச்சியடைந்தனர், பின் ஏன் உங்களை தவிர்த்தனர், நாடு என்ன முன்னேற்றமடைந்தது என்பதையும் விளக்கலாமே! மக்கள் கேட்கமாட்டார்கள், உங்கள் அனுபவம் நீதிமன்றம் வரை கொண்டுசென்று உங்களை காப்பாற்ற மக்களிடம் பிச்சை கேட்கிறீர்கள், இதில நாடாளும் ஆசை! வெட்கம் கெட்ட முன்னாள் ஜனாதிபதி, அப்பம் திண்டு கட்சியை காட்டிக்கொடுத்து, கதிரை ஏற்றிய மக்களை பலி எடுத்ததுதான்  உங்கள் முந்தைய அனுபவம், சாதனை! இனியும் உங்களை ஜனாதிபதியாக்கினால் அது நீங்கள் விட்ட தவறுக்கு கழுவேறும் சந்தர்ப்பமாகவே இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு அவ்வளவு    அனுபவம்.  அது தான் மக்கள் பதவியை விட்டு கலைத்தவை.  மக்களின் பணத்தை அடித்து சேர்த்தவை  தீர்ந்துபோய் இன்னும் ஒரு சந்தர்பத்துக்காய் காத்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிலாமதி said:

ஐயாவுக்கு அவ்வளவு    அனுபவம்.  அது தான் மக்கள் பதவியை விட்டு கலைத்தவை.  மக்களின் பணத்தை அடித்து சேர்த்தவை  தீர்ந்துபோய் இன்னும் ஒரு சந்தர்பத்துக்காய் காத்திருக்கிறார். 

அவரிடட அப்படி ஒன்றும் பெரிதாக பணம் இல்லை. நீதிமன்ற தீர்ப்பின்படி 100 மில்லியன் ரூபா கடட வேண்டும். அவர் பிச்சை எடுத்துதான் 15 மில்லியன் ரூபா கட்டினார். மிகுதி பணத்தை பற்றி பேச நீதிமன்றம் இம்மாதம் அவரை அளித்திருக்கிறது. இவர் ஒரு நேர்மையான(?)  அரசியல்வாதி. மற்றப்படி நாட்டில் என்ன நடக்குதென்று அவருக்கு ஒன்றும் தெரியாது. அடுத்த நாள் பத்திரிகையில் பார்த்துதான் தெரிந்து கொள்ளுவாராம். பாவம் மனுஷன். 

  • கருத்துக்கள உறவுகள்

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது. ருசி கண்ட பூனை அங்கேயேதான் சுற்றி சுற்றி படுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2023 at 12:34, தமிழ் சிறி said:

ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்ற வகையில், முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் பதவி வகிப்பதற்கு தனக்கு எந்த சிரமமும் இல்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்த. சந்திரிக்கா  ....போன்றோருக்கும்  அனுபவம் உண்டு”   ஆனால் வயோதிபர்களை. தெரிவு செய்ய விரும்பவில்லை  ..தமிழர்கள்   உங்களை தெரிவு செய்யமாட்டார்கள்  மோடியை பாருங்கள் இந்தியாவை எவ்வளவு முன்னேற்றியுள்ளார்.   ஏன் உங்களால் முடியவில்லை    ?? நாங்கள் எங்கள் தலைவர் சம்பந்தனை  தான் தெரிவு செய்வோம்’’ 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மறைமுகமாக மைத்திரிக்கே என்று சொல்ல வருகிறீர்கள். சம்பந்தரே இவருக்குத்தான் குத்தி, நீதிமன்றத்திலும் குத்தி முறிஞ்சு தன் எதிர்க்கட்சி கதிரையை பறிகொடுத்தவர் இவரை காப்பாற்றப்போய். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

மறைமுகமாக மைத்திரிக்கே என்று சொல்ல வருகிறீர்கள். சம்பந்தரே இவருக்குத்தான் குத்தி, நீதிமன்றத்திலும் குத்தி முறிஞ்சு தன் எதிர்க்கட்சி கதிரையை பறிகொடுத்தவர் இவரை காப்பாற்றப்போய். 

இல்லை  ஒருபோதும் இல்லை   இந்த முறை   மகிந்த  ரணில்  மைத்திரி   பிரமாதாசா   தமிழர்களில்   சிவாஜி   அல்லது வேறு யாராவது போட்டி இட வேண்டும் ...சிங்கள வாக்குகள்   நானகு   ஐந்து  பகுதியாக  பிரிய வேண்டும்     எவர் ஐனதிபதி  ஆனாலும்  நமக்கு ஒன்று தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

எவர் ஐனதிபதி  ஆனாலும்  நமக்கு ஒன்று தான் 🤣

பிறகு, ஏன் இந்த யோசனை? முன்பும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டு பலராலும் பரிகசிக்கப்பட்டதே! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பிறகு, ஏன் இந்த யோசனை? முன்பும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டு பலராலும் பரிகசிக்கப்பட்டதே! 

அது   சிங்கள அரசியல் கட்சிகள் பலமாக இருக்கக்கூடாது   பல பிரிவுகள் இருக்க வேண்டும்.....அதில் ஒரு பிரிவு   எமக்கான. தீர்வை ஆதரிக்க வேண்டும்   ஆதரிக்கலாம்  சிங்களவரில். ஒரு குறிப்பிட்ட பகுதினர். தமிழருக்கான. தீர்வை ஆதரிக்கிறார்கள். இல்லையா?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Ex-Prez. Sirisena to run for President again. -News. daily morning Suceep 2023.09.01.0'

@Nathamuni, @goshan_che, @suvy, @Cruso, @satan, @நிலாமதி, @Kandiah57

மைத்திரியின்.. ஆசையை பார்த்து, சிங்களவர்களே... தப்பினோம் பிழைத்தோம் என்று,  
அலறி அடித்துக் கொண்டு  நாட்டை விட்டு, ஓட தயாராக இருக்கிறார்கள். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை பாகிஸ்தான் உடன்  தரைவழி  தொடர்பிலிருந்தால்  அதாவது கடல் இல்லாமல்    தரை மார்க்கமாக. கார் பஸ்கள்   சைக்கிள்....போன்றவற்றில்  பயணம் செய்ய கூடியதாக இருந்தால்  நாடு எப்படி இருக்கும்??? 🤣😁

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிக்கு நல்லா விளங்கீட்டுது ...... ஸ்ரீலங்கா எவ்வளவு வங்குரோத்தில போனாலும் சரி, 8 ம் கட்டைக்கு எழுதுப் பட்டாலும் சரி இந்தியாவும் சீனாவும் பங்களாதேசும் அதை மூழ்க விடாது என்று....... அதனால்தான் சக்கடத்தார் ( மதனமுத்தாக்கள்) ஏறிச் சறுக்கின குதிரையில் தானும் இன்னொருக்கால் ஏறிபார்க்கலாம் என்று நினைக்கிறதில என்ன தப்பு......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாச்சி என்கிற பெயரோடு அனுபவித்த சுகம் மீண்டும் அழைக்குது இவரை. சிங்களமக்கள் இவருக்கு பிச்சை போட வசதியில்லாமல் தப்பியோடுகிறார்களோ? பிச்சை என்று கேட்காமல் வேறு வழியாக அறவிடுவார் மக்களிடம், தான் செலுத்தவேண்டிய இழப்பீட்டுத்தொகையை ஈடு செய்வதற்கு. அவரவர் பழக்கம் அவர்களுக்கு தெரிந்ததபடியால் தப்பியோடுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. தமிழரை அழித்து தேடிய அரசியல், சிங்கள மக்களையும் நாடோடிகளாக்கியது.  

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2023 at 08:49, தமிழ் சிறி said:

May be an image of text that says 'Ex-Prez. Sirisena to run for President again. -News. daily morning Suceep 2023.09.01.0'

@Nathamuni, @goshan_che, @suvy, @Cruso, @satan, @நிலாமதி, @Kandiah57

மைத்திரியின்.. ஆசையை பார்த்து, சிங்களவர்களே... தப்பினோம் பிழைத்தோம் என்று,  
அலறி அடித்துக் கொண்டு  நாட்டை விட்டு, ஓட தயாராக இருக்கிறார்கள். 😂 🤣

நான் நினைக்கிறன் உண்மையில் மைத்திரி தமிழரின் நண்பர் என.

இப்படி சிங்களவர் எல்லாரும் ஓடினா - பிறகு முழு நாடும் எங்களுக்குத்தானே?🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதலின் போது இவர் தானே சனாதிபதியாக இருந்தவர்??

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

இப்படி சிங்களவர் எல்லாரும் ஓடினா - பிறகு முழு நாடும் எங்களுக்குத்தானே?

உங்களின் ஆசை அளவுக்கு மீறியது. யாராம் எங்களை ஆளுவது? 

35 minutes ago, nunavilan said:

ஈஸ்டர் தாக்குதலின் போது இவர் தானே சனாதிபதியாக இருந்தவர்??

அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? நட்ட ஈடு வழங்க முடியாமல், விரும்பாமல் அதற்குள்; மீண்டும் அரசியல் செய்ய ஆசை துடிக்கிறார். உண்மையிலேயே மனச்சாட்சியுள்ள மனிதன் எவரும் அந்த துயர சம்பவத்துக்கு பொறுப்பேற்று அரசியலில் இருந்து ஒதுங்கி விடவேண்டும். இங்கு இறந்தது, தாக்கப்பட்டது, யாருமற்ற ஏதிலித்தமிழன்தானே. அவன் இருக்குமட்டும் அவன் முதுகிலேறி அரசியல் செய்யலாம் ஜாலியாய். அன்றைய உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புத் தாக்குதலும், இன்றைய பிக்குகளின் கோரத்தாண்டவமும் எதை சொல்கிறது? தாங்களே வன்முறையை தூண்டுவதும் அதை அடக்கும் கதாநாயகர் தாம் என்று பிரசாரம் செய்து ஆட்சியை பிடிப்பதும் இது காலாகாலமாக நடக்கும் ஒன்று. இதுவே இவர்களின் அரசியலுக்கும் இருப்புக்கும் ஆப்பாக மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

சம்பவத்தன்று வெளிநாடு ஒன்றில் இருந்தார். இவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. பிள்ளையான் போன்றவர்கள் இவர்களின் கட்டளையை நிறைவேற்றியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச்சமயம் இவர் சிங்கப்பூரிலோ வேறொரு நாட்டிலே இருந்தார் என நினைக்கிறன். பயணத்தை மேற்கொள்வதற்கு முதல், அன்றிருந்த பிரச்சனைகளுக்கு தனது பயணத்தை முடித்துக்கொண்டு வந்தபின் பதில் வழங்குவதாக கூறியிருந்தார். தாக்குதலுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்தபின் தன்னை அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே அந்த பயணத்தை மேற்கொண்டிருந்ததாக நான் நினைக்கிறன். பல கொலை கொள்ளை சம்பவங்களின் சூத்திரதாரிகள் தாங்கள் அப்போது நாட்டில் இல்லை, பதவியில் இல்லை அல்லது சம்பவ இடத்தில் இல்லை என கூறி தங்களை அதிலிருந்து விடுவித்துக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சம்பவத்தை திட்டமிட்டு நடத்தும் கருத்தாக்கள் சம்பவ இடத்தில இருக்க வேண்டுமென்பதில்லை, அவர்கள் எங்குமிருக்கலாம். திட்டம் நடைமுறைப்படுத்தல் இவர்களுடையது. வேண்டுமென்றே தங்களை விடுவித்து தப்பித்துகொள்வதற்காக இப்படியான பயணங்களை வைத்தியசாலைகளை பயன் படுத்துகிறார்கள். மூளை இவர்களுடையது, இவர் சம்பந்தப்படாமலிருந்திருந்தால் ஏன் நட்ட ஈடு வழங்க கேட்கப்பட்டிருக்கிறார்? இவரும் ஒரு பகுதியை செலுத்தியிருக்கிறாரே? தான் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை நிரூபிக்க மக்களிடம் கை நீட்டுகிறார். நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கவில்லை, மனவருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவில்லை, நட்ட ஈடு வழங்க வக்கில்லை. இவரை மக்கள் ஏன் தெரிந்தெடுக்க வேண்டும்? பிழைகளை மக்கள் தெரிந்தெடுப்பார்கள் என்கிற நம்பிக்கை, அதனால் ஏற்பட்ட அரசியல் அவரை அப்படி சிந்திக்க தூண்டுகிறது. இந்த சிந்தனையை நடைமுறையை மக்களே மாற்றவேண்டும் இல்லையேல் அதற்கு அவர்கள் பலியாவார்கள். 

42 minutes ago, nunavilan said:

பிள்ளையான் போன்றவர்கள் இவர்களின் கட்டளையை நிறைவேற்றியவர்கள்.

அந்த சமயம் பிள்ளையானும் சிறையில் இருந்தார் என நினைக்கிறன். ஆனால் சிறையிலிருந்துகொண்டே தேர்தலில் வெல்ல முடியுமென்றால்; ஏன் இதை செய்ய அவரால் முடியாது? தனது அரக்கத்தனத்துக்கு எதிராக போராடிய விடுதலை போராளியை தனது கொலைகளுக்கு சிங்களம் பாவிப்பதை எப்படி சொல்வது? இவர்கள் போராடப் போகாமல் இருந்திருந்தால்; இவர்களுக்கும் போராட்டத்துக்கும் இனத்துக்கும் நலமாக இருந்திருக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.