Jump to content

கேணல் கடாபியை கொல்வதற்காக 81 பேருடன் பயணித்த விமானத்தை பிரான்ஸ் சுட்டு வீழ்த்தியது - இத்தாலிய முன்னாள் பிரதமர் பரபரப்புக் குற்றச்சாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 SEP, 2023 | 11:08 AM
image
 

(ஆர்.சேதுராமன்)

1980 ஆம் ஆண்டில், அப்­போ­தைய லிபிய அதி­ப­ரான கேணல் முவம்மர் கடா­பியை கொலை செய்யும் முயற்­சியில் 81 பேருடன் பய­ணித்துக் கொண்­டி­ருந்த இத்­தா­லியப் பய­ணிகள் விமா­ன­மொன்றை பிரெஞ்சுப் படை­யினர் கவ­ன­யீ­ன­மாக சுட்டு வீழ்த்­தினர் என இத்­தா­லியின் முன்னாள் பிர­தமர் குய்­லி­யானோ அமாட்டோ குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

இச்­சம்­ப­வத்­துக்கு அமெ­ரிக்­காவும், பிரான்ஸும்  பொறுப்பு எனவும், தோல்­வி­ய­டைந்த இப்­ப­டு­கொலை முயற்சி மூடி மறைக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

1992, 1993 மற்றும் 2000, 2001 காலப்­ப­கு­தி­களில் இரு தட­வைகள் பிர­த­ம­ராக பதவி வகித்­தவர் குய்­லி­யானோ அமாட்டோ.

1980 ஜூன் 27 ஆம் திகதி, இத்­தா­லியின், இத்­தா­வியா விமான நிறு­வ­னத்தின் பிளைட் 870 விமானம் இத்­தா­லியின் போலோக்னா நக­ரி­லி­ருந்து இத்­தா­லியின் சிசிலி தீவி­லுள்ள  பாலேர்மோ நகரை நோக்கி சென்று கொண்­டி­ருந்­தது.

மெக்­டொனெல் டக்ளஸ் டிசி9 ரகத்தைச் சேர்ந்த இவ்­வி­மானம், மத்­திய தரைக்­க­டலில் சிசிலி தீவுக்கு அரு­கி­லுள்ள உஸ்­டிக்கா  தீவில் வீழ்ந்து நொறுங்­கி­யது.

இதனால், விமா­னத்­தி­லி­ருந்த 77 பய­ணிகள் உட்­பட 81 பேரும் உயி­ரி­ழந்­தனர். இத்­தா­லியில்   இடம்பெற்ற மிக மோச­மான  விமான அனர்த்தம் இது­வாகும்.

 இச்­சம்­பவம் இடம்­பெற்று 43 வரு­டங்கள் கடந்த நிலையில், இத்­தா­லிய முன்னாள் பிர­தமர் குய்­லி­யானோ அமாட்டோ, இத்­தா­லியின் லா ரிபப்­ளிக்கா பத்­தி­ரி­கைக்கு அண்­மையில் அளித்த செவ்­வியில் மேற்­படி குற்ற­ச்­ சாட்­டு­களை தெரி­வித்­துள்ளார்.

'அமெ­ரிக்­காவின் உத­வி­யுடன், கேணல் முவம்மர் கடா­பியை ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு பிரான்ஸ் முயற்­சித்­தது.  

குறித்த தினத்தில் நேட்டோ விமா­னங்­களின் போர்ப் பயிற்­சி­யொன்று அப்­ப­கு­தியில் நடத்­தப்­பட்­டது.

லிபிய இரா­ணுவ விமா­ன­மென்றே உண்­மை­யான இலக்­காக இருந்­தது. யூகோஸ்­லா­வி­யா­வுக்கு சென்­றி­ருந்த கேணல் கடாபி, மேற்­படி விமா­னத்தில் பய­ணிப்பார் என நம்­பப்­பப்­பட்­டது. ஆனால், இது தொடர்பில் கடா­பிக்கு இத்­தா­லி­யினால் தகவல் தெரி­விக்­கப்­பட்­டது. அதனால் அந்த இரா­ணுவ விமா­னத்தில் அவர் பய­ணிக்­க­வில்லை என அமாட்டோ கூறி­யுள்ளார்.

எனினும், பிரான்ஸ் போர் விமா­னத்­தி­லி­ருந்து ஏவு­க­ணை­யினால் இத்­தா­வியா பிளைட் 870 பய­ணிகள் விமானம், சுட்­டு­வீழ்த்­தப்­பட்­டது என அமாட்டோ கூறி­யுள்ளார்.

இது தொடர்­பாக விசா­ரணை நடத்தி, இவ்­வி­டயம் உறுதிப்படுத்தப்பட்டால்  பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளிடம் பிரான்ஸ் மன்­னிப்பு கோர வேண்டும் என பிரான்ஸ் ஜனா­தி­பதி இமா­னுவெல் மெக்­ரோ­னிடம் அமாட்டோ கோரி­யுள்ளார்.

அவ்­வி­மானம் வீழ்ந்­தது எப்­படி என்­பது நீண்­ட ­காலமாக மர்­ம­மாகவே இருந்­தது. அது சுட்­டு­வீழ்த்­தப்­பட்­டி­ருக்­கலாம் அல்­லது விமா­னத்தில் குண்­டு­வெ­டித்­தி­ருக்­கலாம் என சிலர் கூறி­யி­ருந்­தனர். பல வரு­டங்­களின் பின் கட­ல­டி­யி­லி­ருந்த விமானச் சிதை­வுகள் ஆராய்ப்­பட்­ட­பின்னர், அது ஏவு­க­ணை­யினால் சுடப்­பட்­டி­ருக்­கலாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

குறித்த இரவில் அப்­ப­கு­தியின் வான் ­ப­ரப்பில்  இரா­ணுவ நட­வ­டிக்கை எதுவும் இடம்­பெ­ற­வில்லை என அமெ­ரிக்க, பிரான்ஸ், நேட்டோ அதி­கா­ரிகள், மேற்­படி சம்­ப­வத்தின் பின்னர் தெரி­வித்­தி­ருந்­தனர்.

லிபிய, பிரான்ஸ் போர் விமா­னங்­க­ளுக்கு இடை­யி­லான மோத­லின்­போது, தவ­று­த­லாக இப்­ப­ய­ணிகள் விமானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தாக மேற்­படி சம்­பவம் இடம்­பெற்ற காலத்தில் இத்­தா­லிய பிர­த­ம­ராக பதவி வகித்த,  பிரான்­சிஸ்கோ காசிகா 2008 ஆம் ஆண்டு தெரி­வித்­தி­ருந்தார்.

மேற்­படி விமா­னத்தைப் பாது­காக்கத் தவ­றி­ய­மைக்­காக, பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு 100 மில்­லியன் யூரோ இழப்­பீட்டை இத்­தா­லிய அரசு வழங்க வேண்டும் என இத்­தா­லிய நீதி­மன்றம் 2011 ஆம் ஆண்டு உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

கேணல் கடாபி 2011 ஆம் ஆண்டு லிபிய உள்­நாட்டு யுத்­தத்­தின்­போது கொல்­லப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், முன்னாள் பிர­தமர் அமாட்­டோவின் கருத்து தொடர்­பாக பிரான்ஸ் அரசு உட­ன­டி­யாக கருத்துத் தெரி­விக்­க­வில்லை.

இத்­தா­லியின் தற்­போ­தைய பிர­தமர் ஜியோர்ஜியா மெலோனி கூறுகையில், அமாட்டோவின் கருத்து கவனத்திற்கொள்ளத் தக்கது. எனினும், அவர் தனது சொந்த அனுமானங்களுக்கு அப்பால், உறுதியான ஆதாரங்களை  முன்வைக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். இது தொடர்பில் தன்னிடம் உறுதியான ஆதாரம் இல்லை என அமாட்டோ கூறியுள்ளார்.

அமாட்டோவின் கருத்தானது, பிரான்ஸ் – இத்தாலிய உறவுகளில் அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

 

plane-2.jpg

 

polane-3.jpg

https://www.virakesari.lk/article/164389

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தோனேசியா பகுதியில் ஏற்பட்ட சுனாமிக்கு காரணமும் பிரான்ஸ் இந்து சமுத்திரத்தில் நடத்திய அணுகுண்டு சோதனை தான் என்றும் ஒரு கருத்துகோள் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருக்கள்.. என்னவோ செய்தால்.. குற்றமே இல்லை. அமெரிக்காவும் வாலுகளும் செய்யாத பயங்கரவாதமில்லை. ஆனால்.. இராணுவ பலத்தை வைச்சுக் கொண்டு அடுத்தவையை பயங்கரவாதி ஆக்கி அழிப்பதில் இவர்கள் வல்லவர்கள். கொலைகாரப் பயங்கரவாதக் கூட்டம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பகிடி said:

இலங்கை இந்தோனேசியா பகுதியில் ஏற்பட்ட சுனாமிக்கு காரணமும் பிரான்ஸ் இந்து சமுத்திரத்தில் நடத்திய அணுகுண்டு சோதனை தான் என்றும் ஒரு கருத்துகோள் உண்டு 

கருதுகோள் என்பது ஒரு sliver of evidence அடிப்படையில் உருவாக்கப் படும் அனுமானம் அல்லவா? என்ன தோற்றுவாயாம் இந்தக் கருதுகோளுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

கருதுகோள் என்பது ஒரு sliver of evidence அடிப்படையில் உருவாக்கப் படும் அனுமானம் அல்லவா? என்ன தோற்றுவாயாம் இந்தக் கருதுகோளுக்கு?

அந்த நேரத்தில் எகிப்தில் வெளியான ஒரு பத்திரிகையில் இந்த செய்தி வந்தது. தவிர அன்று பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவியதில் பிரான்ஸ்சின் பங்கு பெரியது.

இன்னொரு கொசுறுச் செய்தி சொல்லவா!!

ரஷியாவுக்கும் யப்பானுக்கும் இடையில் ஒரு தீவுக்காக அடிக்கடி ஒரு பிரச்னை கிளம்பும் அல்லவா? அதை எப்போது எல்லாம் யப்பான் சர்வதேச ரீதியாக கொண்டு செல்லுதோ அப்போது எல்லாம் யப்பானில் வீடுகள் குலுங்குமாம் 🤣.இந்த கருது கோளுக்கு எவிடென்ஸ் ஒரு ஜப்பானியப் பெண்ணை திருமணம் செய்த ஒரு ரஷியன் நண்பர் சொன்னது 

Edited by பகிடி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பகிடி said:

அந்த நேரத்தில் எகிப்தில் வெளியான ஒரு பத்திரிகையில் இந்த செய்தி வந்தது. தவிர அன்று பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவியதில் பிரான்ஸ்சின் பங்கு பெரியது.

 

எகிப்து செய்தியை விடுங்கள், ஏதாவது மித்திரன் பாணி செய்தியாக இருக்கும். ஆனால், 2004 சுனாமியின் பின் பிரான்சை விட 4 மடங்குகள் உதவியை ஜேர்மனி தான் செய்திருக்கிறது. ஜேர்மனி இரகசியமாக அணுவாயுதம் வைத்திருக்கிறது என்றும் ஒரு கருதுகோளைக் கிளப்பி விடுவார்கள்  போல!

22 hours ago, பகிடி said:

 

இன்னொரு கொசுறுச் செய்தி சொல்லவா!!

ரஷியாவுக்கும் யப்பானுக்கும் இடையில் ஒரு தீவுக்காக அடிக்கடி ஒரு பிரச்னை கிளம்பும் அல்லவா? அதை எப்போது எல்லாம் யப்பான் சர்வதேச ரீதியாக கொண்டு செல்லுதோ அப்போது எல்லாம் யப்பானில் வீடுகள் குலுங்குமாம் 🤣.இந்த கருது கோளுக்கு எவிடென்ஸ் ஒரு ஜப்பானியப் பெண்ணை திருமணம் செய்த ஒரு ரஷியன் நண்பர் சொன்னது 

ஜப்பான் என்ற தீவுக் கூட்டம் அமைந்திருப்பது உலகின் 4 புவித்தகடுகள் (tectonic plates) சந்திக்கும் பிரதேசத்தின் மீது. உலகின் வேறெங்கும் ஏற்படுவதை விட அதிக நில அதிர்வுகள் (tremors) ஜப்பானில் தான் பதிவாகின்றன. எத்தனை அதிர்வுகள்? சராசரியாக வருடத்திற்கு 1,500 அதிர்வுகள்! இதை அறியாமலே ஜப்பானில் வாழ்ந்திருக்கிறதா உங்கள் ரஷ்ய நண்பனின் மனைவி😂?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Justin @பகிடி  

கருதுகோள்களை உருவாக்க மித்திரன் பாணி பத்திரிகைகளில் நிருபராக சேர்வது அந்த காலம். இப்போதெல்லாம் ஓரு ஸ்மாட் போன் முகநூல், வட்ஸப்  போதும்.  எவன் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பி அதை share  செய்வதற்காகவே  மூளையை off  செய்து விட்டு ஒரு கும்பலே  இணைய உலகில் காத்திருக்கிறது. 😂

Edited by island
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2023 at 18:41, Justin said:

எகிப்து செய்தியை விடுங்கள், ஏதாவது மித்திரன் பாணி செய்தியாக இருக்கும். ஆனால், 2004 சுனாமியின் பின் பிரான்சை விட 4 மடங்குகள் உதவியை ஜேர்மனி தான் செய்திருக்கிறது. ஜேர்மனி இரகசியமாக அணுவாயுதம் வைத்திருக்கிறது என்றும் ஒரு கருதுகோளைக் கிளப்பி விடுவார்கள்  போல!

ஜப்பான் என்ற தீவுக் கூட்டம் அமைந்திருப்பது உலகின் 4 புவித்தகடுகள் (tectonic plates) சந்திக்கும் பிரதேசத்தின் மீது. உலகின் வேறெங்கும் ஏற்படுவதை விட அதிக நில அதிர்வுகள் (tremors) ஜப்பானில் தான் பதிவாகின்றன. எத்தனை அதிர்வுகள்? சராசரியாக வருடத்திற்கு 1,500 அதிர்வுகள்! இதை அறியாமலே ஜப்பானில் வாழ்ந்திருக்கிறதா உங்கள் ரஷ்ய நண்பனின் மனைவி😂?

நான் இது போன்ற செய்திகளை நம்புவதில்லை. ஆனால் இப்படி எல்லாம் செய்திகள் உலவுது என்று சொல்ல வந்தேன் 😄😄

Edited by பகிடி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2023 at 07:40, island said:

இப்போதெல்லாம் ஓரு ஸ்மாட் போன் முகநூல், வட்ஸப்  போதும்.  எவன் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பி அதை share  செய்வதற்காகவே  மூளையை off  செய்து விட்டு ஒரு கும்பலே  இணைய உலகில் காத்திருக்கிறது. 😂

முழுமையான உண்மை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இதை உக்ரேன் போர் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சொல்லிக்கொண்டு வருகின்றேன். அப்போது என் மீது கோபப்பட்டவர்கள் தான் அதிகம். அண்மையில் ஜேர்மனியும் மற்றும் ஒரு சில நாடுகளும் உக்ரேனுக்கான பண உதவியை நிறுத்தியிருந்தனர். இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருங்கள். உக்ரேனைப்பற்றிய நல்ல செய்திகள் வரும். 😂
    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.