Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ண‌ன் சீமான் மீது தொடுத்த‌ புகாரை திரும்ப‌ பெற்ற‌ விஜ‌ய‌ல‌ட்சுமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற பிறகும் சீமானிடம் காவல்துறை விசாரணை ஏன்?

நேரில் ஆஜரான சீமான்

பட மூலாதாரம்,IDUMVAVAM KARTHI/ NAAM TAMILAR

படக்குறிப்பு,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் மீது நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த புகார் தொடர்பாக இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள சென்னையைச் சேர்ந்த நடிகை விஜயலட்சுமி, ‘‘சீமான் என்னை திருமணம் செய்து ஏமாற்றியதுடன், என் அனுமதியின்றி கருவைக் கலைத்துள்ளார்,’’ எனக் கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, 2011இல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை, ஆரம்பம் முதலே சீமான் மறுத்து வருகிறார். அவ்வப்போது இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகி அரசியல் களத்தில் பேசுபொருளாவதும், பிறகு அமைதியாவதும் கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருகிறது.

சீமான் மீதான விஜயலட்சுமி புகார் என்ன?

சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார்.

“நான் சினிமாவில் நடித்து சேர்த்து வைத்திருந்த 60 லட்சம் ரூபாய் பணம், 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைப் பெற்றுக்கொண்டார். எனக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரின் பேரில், 2011இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்.

சீமான் மீதும், என்னை மிரட்டும் மதுரை செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என விஜயலட்சுமி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

 
நேரில் ஆஜரான சீமான்
படக்குறிப்பு,

விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விஜயலட்சுமியின் புகாரின் பேரில் சீமான் மீது போலீஸார், பாலியல் வல்லுறவு, மோசடி, மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த விவகாரம் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

போலீசார் விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து, 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தி, ஆதாரங்களைப் பெற்று, திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

விஜயலட்சுமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் மீது, நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் அவதூறு வழக்குகள் பதிவு செய்ததுடன், ‘விஜயலட்சுமி பணம் பறிப்பதற்காக சீமான் மீது புகார் கொடுத்துள்ளார்,’ எனக் கூறி, சமூக ஊடகங்களில் வீடியோக்களையும் பதிவேற்றினர்.

சீமானுக்கு காவல்துறை சம்மன்

விஜயலட்சுமிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அவருடைய புகார் தொடர்பாக காவல் நிலையத்தில கடந்த 9ஆம் தேதி நேரில் ஆஜராக போலீசார் சீமானுக்கு சம்மன் அளித்தனர்.

ஆனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி தமக்கு சில முக்கிய அரசியல் நிகழ்ச்சிகள் இருப்பதால் தன்னால் நேரில் காவல் நிலையத்துக்கு வரமுடியாது எனத் தெரிவித்த சீமான், தனது வழக்கறிஞரை அனுப்பிவைத்தார்.

இருப்பினும் போலீசார் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என இரண்டாவது முறையாக கடந்த 14-ம் தேதி ஒரு சம்மனை அளித்தனர்.

இதற்கிடையே, நடிகை விஜயலட்சுமி தன் மீது பொய் புகார்களைத் தெரிவித்து களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி சீமான் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் தனக்கு இழப்பீடாக ரூ. 1 கோடி வழங்கவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றது ஏன்?

ஆனால், இந்த முறையும் கடந்த 15ஆம் தேதியன்று தனது புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை விஜயலட்சுமி, மீண்டும் பெங்களூருவுக்குப் போவதாக அறிவித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து சீமானிடம் பேசியதாகக் குறிப்பிட்ட அவர், “வழக்கின் போக்கு எனக்கு திருப்திகரமாக இல்லை. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மெத்தனமாகச் செயல்பட்டனர். கடைசியில் சீமான் தான் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார்," என்றார்.

மேலும், "தமிழ்நாட்டில் சீமானுக்கு அதிகாரம் உள்ளது. அவரை எதுவும் செய்ய முடியாது. என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். சீமான் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்,” என்றார்.

 
நேரில் ஆஜரான சீமான்

பட மூலாதாரம்,NAAM TAMILAR KATCHI

வழக்கைத் திரும்பப் பெற யாரும் வற்புறுத்தவில்லை என்றும், புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறிய அவர், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியதோடு, தனி ஒருவராக அவரால் போராட முடியவில்லை என்றும், சீமானை எதிர்கொள்ள போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜரான சீமானிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் கேள்விகளுக்கு சீமான் பதில் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " என் மீது களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மக்களிடம் எனக்கு அதிகரிக்கும் செல்வாக்கை அழிக்க அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. இருப்பினும், சட்டப் படி, போலீசாரின் விசாரணைக்கு நான் நேரில் வரவேண்டும் என்பதால் 18ஆம் தேதி வருவதாக அவர்களிடம் தெரிவித்திருந்தேன். அதனடிப்படையில் இன்று காவல் நிலையத்தில் ஆஜராகி போலீசாரின் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன்," என்றார்.

காவல் நிலையத்தில் ஆஜராக சீமான் வந்த போது, அவர் மனைவியும் உடனிருந்தார். சீமானுடைய ஆதரவாளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் காவல் நிலையத்தின் அருகே குவிந்திருந்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

வழக்கு வாபஸ் பெற்ற பிறகும் சீமான் ஆஜர் ஏன்?

காவல் நிலையத்துக்கு சீமான் நேரில் சென்றது குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் பிபிசி தமிழுடன் பேசிய போது, "விசாரணைக்காக சீமான் காவல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்றது புகார்தாரர் புகாரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறாரா என்பதைப் பற்றியது அல்ல. விஜயலட்சுமி அளித்த ஒரு புகார் தொடர்பாக விசாரணை நடத்த சீமானுக்கு போலீசார் அழைப்பாணையை அனுப்பியிருந்தனர்.

அதை ஏற்பது மற்றும் காவல் நிலையத்துக்குச் சென்று போலீசாரின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது சீமானின் சட்டப்பூர்வமான கடமை என்பதைத் தவிர, புகாரில் என்ன கூறப்பட்டிருந்தது என்பது குறித்து அல்லது சீமானிடம் போலீசார் என்ன கேள்விகளைக் கேட்டனர் என்பது குறித்து யாருக்கும் தெரியாது," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cxw4zn7xg1jo

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இன்னொரு திரியில் என்று நினைக்கிறேன் எதில் என்று சரியாக நாபகம் இல்லை..சீமான் வழக்குப்போடவில்லை நோட்டீஸ்தான் அனுப்பி இருக்கிறார் என்று இணையவன் எழுதி இருந்தார்.. அது தவறு சீமான் வழக்கு போட்டு இருக்கிறார்.. ஒருவர் மீது வெறுப்பை வச்சு தவறான தகவல்களை பரப்புவது அழகு அல்ல.. 

சீமான் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என்று தெரியுமா ? 

தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, இணையவன் said:

சீமான் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என்று தெரியுமா ? 

தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன். 🙂

சுப்ரீம் கோர்ட் லாயர் ஓணாண்டி….

சுப்ரீம் கோர்ட் லாயர் ஓணாண்டி….

சுப்ரீம் கோர்ட் லாயர் ஓணாண்டி….

46 minutes ago, இணையவன் said:

தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன். 🙂

சென்னை பெருநகர சிவில் நீதி மன்றில் தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, இணையவன் said:

சீமான் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என்று தெரியுமா ? 

தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன். 🙂

யாழில் சீமானை பின் தொட‌ர்ந்த‌வ‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ர்..........இன்னும் ஒரு சில‌ மாத‌த்தில் வீர‌ல‌ட்சுமி விஜ‌ய‌ல‌ட்சுமி முக்தார் ஏறி இற‌ங்கும் போது தெரிய‌ வ‌ரும் அது ம‌ட்டும் திராவிட‌ம் போடும் நாட‌க‌த்தை பார்த்து ர‌சிக்க‌லாம்...........இந்த‌ ஏவ‌ல்துறை ச‌ட்ட‌ விதிமுறைக‌ளை மீறி இருக்கின‌ம்...........அண்ண‌ன் சீமான வீசார‌னைக்கு என்று அழைத்து விட்டு அண்ண‌ன் சீமான் விள‌க்க‌ம் கொடுக்கும் போது அதை காணொளி ப‌திவு செய்து இருக்கின‌ம் அண்ண‌ன் சீமானின் வைக்க‌ல் அந்த‌ வீடியோ ப‌திவை க‌ண்ட‌தும் உட‌ன‌ நிப்பாட்ட‌ சொன்னார்..............அந்த‌க் கால‌த்து திமுக்கா போயும் போயும் ம‌ன‌ நோயாளி பெண்ண‌ வைச்சு போடும் கூத்த‌ பார்க‌ ச‌லிப்பாய் இருக்கு.............விஜ‌ய‌ல‌ட்சுமியின் உருட்டு பிர‌ட்டு இன்றும் பிடி ப‌ட்டு போய் விட்ட‌து😁.................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

சீமான் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என்று தெரியுமா ? 

தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன். 🙂

ஒரு ஆங்கில ஊடகத்தில் சென்னை நகர சிவில் கோர்ட்டில் 10 இலட்சம் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் என்று இருக்கிறது. அதற்கு முன்னர், 1 கோடி கோரி வழக்குப் போடுவோம் என்ற நோட்டீஸ் வீரலட்சுமிக்கும், விஜயலட்சுமிக்கும் அனுப்பப் பட்டதாம். இதையெல்லாம் 5 நிமிடம் செலவழித்துத் தேடிய போது இன்னும் சில செய்திகள் (இந்த யூ ரியூப் அலட்டல்களில் வராதவை) கிடைத்தன.

- சீமான் நேராகப் பொலிஸ் நிலையம் செல்லாமல் அவரது வழக்கறிஞர்கள் பாசறையினர் இயன்ற அளவு காத்திருக்கின்றனர்.

- பொலிஸ் இரண்டாம் முறை சம்மன் கொடுத்த போது வாங்க மறுத்திருக்கின்றனர் (இது அமெரிக்காவில் ட்ரம்ப்/சிவப்புக் கட்சி அணுகுமுறை😎)

- இன்னொரு இடத்தில், ஒரு வழக்கறிஞர் (ஹிஜாப் போட்ட பெண்மணி) சொன்னதற்கு முரணாக , சீனியர் வழக்கறிஞர் திருத்திச் சொல்லியிருக்கிறார் - இது பணம் கொடுக்கப் பட்ட விடயமானது.

- சீமானின் வழக்கறிஞர்கள் இந்த கேசை, ஒரு சட்ட நுணுக்கத்தின் (technicality) அடிப்படையில் வெல்ல முடியுமென நம்பிப் பேசுவதாகவே தெரிகிறது.

இப்படிப் பல சந்து பொந்துகளால் புகுந்து புறப்பட்டுத் தான் தப்பியிருக்கிறார்கள், தற்போதைக்கு!

கோசான் பாணி டிஸ்கி😎: கல்யாணசுந்தரத்தை இழந்தது போல வழக்கறிஞர் பாசறையில் யாரையும் இழக்காமல் இனிப் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்!  இல்லையேல் தேரை இழுத்துக் தெருவில விட்டுடுவாங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் உறைக்கும்தான் 
அதுக்கு என்ன செய்ய ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

10 இலட்சம் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் என்று இருக்கிறது. அதற்கு முன்னர், 1 கோடி கோரி வழக்குப் போடுவோம் என்ற நோட்டீஸ் வீரலட்சுமிக்கும், விஜயலட்சுமிக்கும் அனுப்பப் பட்டதாம்.

என்ன இது அண்ணன் மானத்தின் நிகர விலை சட் என்று 1 கோடியில் இருந்து 10 லட்சமாக வீழ்ந்துவிட்டது🤣.

சிலவேளை தான் தப்ப, இதில் சம்பந்தமே இல்லாத பாவம் கயல் அண்ணியை போலிஸ் ஸ்டேசன் இழுத்து வந்ததால் அண்ணனின் மானத்தின் விலை குறைந்து விட்டதோ? 

நேற்று @Kandiah57 கந்தையா அண்ணை திண்னையில் கேட்டார், நஸ்ட ஈடு கொடுக்க, கேட்பவருக்கு மானம் இருக்கா? என்று.

எதோ இருக்கிற மட்டுக்கும் போட்டு கொடுங்க ஜட்ஜ் ஐயா என கேட்க்கலாம் எனச் சொன்னேன். 

இப்ப பார்த்தா 1 கோடி 10 லட்சம் ஆகி உள்ளது.

நான் நினைக்கிறேன் நாதக வக்கீல்கள் அணி யாழ்களத்த்தில்தான் நோட்ஸ் எடுக்கிறார்கள் என🤣.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.