Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Nathamuni said:

றோ -  சிரிப்பு போலீஸ்!!

ஜோக் அடிக்காம போங்க சாரே!!

🤣🥳😂

சீமானை தவிர இந்தியாவில் வேறு யாரும் புலிகளை இன்று வரை இப்படி ஆதரிக்க முடியாது.

எல்லார் மேலும் பாயும் தேசிய பாதுகாப்பு சட்டம் சீமான் மீது மட்டும் பாயாது.

சீமானை முந்தள்ள நாம் தமிழரின் ஆரம்ப உறுப்பினர் ஒருவரை ரோ போட்டு கூட தள்ளியது. இவை எல்லாம் நான் முன்பே பல திரிகளில் எழுதி விட்டேன்.

காலிஸ்தான் ஆதரவு சீக்கியரை கனடாவில் வைத்து போட்டுத்தள்ளும் ரோ, சீமானை தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் தலைவர் படத்தை கொண்டு செல்ல அனுமதிக்கும்.

ரோ என்ன செய்கிறது என்பது ரோவை புரிந்து அவதானிப்போருக்கு புரியும்.

ரோ  சிரிப்பு பொலிஸ் ஆக இருந்திருந்தால் எப்போதோ இலங்கை இரெண்டாக உடைந்திருக்கும். 

 

  • Thanks 1
  • Replies 196
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா? இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலங்களை, அவர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையினை அப்பட்டமாக பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாகப் பேசிவருபவர் சீமான் மட்டும்

பாலபத்ர ஓணாண்டி

உங்கட கதை ஒரு உப்பு சப்பில்லாத கதை ரஞ்சித்.. இதே திமுகா புலிகளை ஆதரித்தபோது அதிமுக ஆதரவாளர்கள் புலிகளை இப்படித்தான் கேவலமாக பேசினார்கள்.. ஜெயலலிதாவே கேவலமாக பேசிய பதிவுகள் உண்டு..தமிழ்நாட்டில் ஒரு கட்

ரஞ்சித்

ஈழத்தமிழரின் போராட்டத்திற்கான தனது வெளிப்படையான ஆதரவினை தனது அரசியலின் பிரதான மூலதனமாக இட்டு சீமான் செய்துவரும் செயற்பாடுகள் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவருவதை சீமானை ஆ

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
31 minutes ago, island said:

நாம பிரபாகரனை விட்டுக்கொடுக்க ரெடி. ஆனால் சீமானை விட்டு கொடுக்க மாட்டோம் என்று ஒரு கும்பல் அலைவது தெரிகிறது. 😂😂

வீழ்வது தமிழினம் என்றாலும் வாழ்வது சீமானாக இருக்க வேண்டுமாம். 

சரீங்க தல!

கேட்ட கேள்விக்கு பதில் பிளீஸ்?

6 minutes ago, goshan_che said:

சீமானை தவிர இந்தியாவில் வேறு யாரும் புலிகளை இன்று வரை இப்படி ஆதரிக்க முடியாது.

எல்லார் மேலும் பாயும் தேசிய பாதுகாப்பு சட்டம் சீமான் மீது மட்டும் பாயாது.

சீமானை முந்தள்ள நாம் தமிழரின் ஆரம்ப உறுப்பினர் ஒருவரை ரோ போட்டு கூட தள்ளியது. இவை எல்லாம் நான் முன்பே பல திரிகளில் எழுதி விட்டேன்.

காலிஸ்தான் ஆதரவு சீக்கியரை கனடாவில் வைத்து போட்டுத்தள்ளும் ரோ, சீமானை தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் தலைவர் படத்தை கொண்டு செல்ல அனுமதிக்கும்.

ரோ என்ன செய்கிறது என்பது ரோவை புரிந்து அவதானிப்போருக்கு புரியும்.

ரோ  சிரிப்பு பொலிஸ் ஆக இருந்திருந்தால் எப்போதோ இலங்கை இரெண்டாக உடைந்திருக்கும். 

 

கோசன், றோவிண்ட ஆளோ?? 😂😂🤣

எதுக்குமே பிரயோசமில்லாத றோவை தூக்கிப் பிடிக்கிற சீவன் எனக்குத் தெரிஞ்சு நீங்கள் தான். 

தவிர, அது உள்நாட்டு அரசியலில் தலையிடுவதில்லை என்று தெரியுமா, இல்லையா?

அதுக்குதான், ED, IT, IB என்று இருக்குதே ஒரு லிஸ்ட்! 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் தலைவரைப் பற்றியும் தமிழகமெங்கும் சீமான் பிரச்சாரம் செய்து மக்களிடம் எடுத்துச் சென்றார் என்பது எந்தளவிற்கு உண்மையானது? 
ஏன், சீமானுக்கு முன்னர் தமிழகத்தில் ஈழத்தமிழரின் போராட்டம்பற்றியோ அல்லது அவர்களது அவலங்கள் பற்றியோ எவருக்குமே தெரிந்திருக்கவில்லை என்று எப்படி முடிவிற்கு வருகிறோம்?

உதாரணத்திற்கு 1983 ஆம் ஆண்டு ஜூலை தமிழினப்படுகொலையின் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலை பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? ஜெயவர்த்தனவை அடக்குவதற்கு முதல், கொந்தளிக்கும் தமிழகத்தினை அடக்குங்கள் என்று இந்திரா காந்தி தனது அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணித்தது தெரியுமா? அன்று ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் உம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருநாநிதியும் ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தை முழுமையாக ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவந்து (பந்த் அல்லது ஹர்த்தால்), முற்றான வேலைநிறுத்தம், பாடசாலையடைப்பு போக்குவரத்து அடைப்பு, வியாபார நிறுத்தம், பொதுச் சேவைகள் நிறுத்தம் என்று  தமது ஆதரவு நிலைப்பாட்டைக் காட்டினார்களே? அன்று தமிழகம் தழுவிய மனிதச் சங்கிலிப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றதே? ஈழத்தில் நடப்பது தெரியாமலா தமிழக மக்கள் இவற்றினைச் செய்தார்கள்? தமிழகத்தின் சேலம் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் உட்பட பல பகுதிகளில் புலிகளின் பயிற்சி முகாம்கள் 1983 ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டு விட்டன. இப்பகுதி மக்களுக்கு புலிகளை நன்றாகவே தெரிந்திருந்தது. ஆக, சீமானே முதன் முதலாக தலைவரையும் புலிகளையும் தமிழகத்திற்குக் கொண்டுசென்றார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழர்கள் ஜனநாயக ரீதியில் செல்வநாயகம் தலைமையில் போராடும்போதே தமிழகத்திற்கு ஈழத்தில் நடப்பது தெரிந்தே இருந்தது.

அன்று தமிழகத்தின் அனைத்து அரசியல்த் தலைவர்களும் ஈழத்தமிழர்களுக்கு தமது அரசியல் ஆதாயங்களை முன்னிறுத்தி உதவினார்கள். எம்.ஜி.ஆர், கருநாநிதி உட்பட பெருமளவு அரசியல்வாதிகளுக்கு ஈழத்தமிழனின் அவலம் தமது அரசியலுக்குத் தேவைப்பட்டது. ஆகவே, இயல்பாகவே எழும் தமிழக மக்களின் அனுதாப அலையினை அரசியலாக்கி தமது செல்வாக்கினை வளர்த்துக்கொண்டார்கள். ஈழத்தமிழனின் அவலங்களுக்கான அனுதாபம் என்று ஆரம்பித்து ஈற்றில் ஒவ்வொரு அரசியல்வாதியும் புலிகள், டெலோ, புளொட் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு இயக்கத்தை ஆதரித்தார்கள். பின்னர் இவர்கள் உருவாக்கிய பிரிவினையினையே சகோதர யுத்தம் என்று விமர்சித்தார்கள். அரசியல்வாதிகள் தமது சொந்த ஆதாயத்திற்காக ஒவ்வொரு இயக்கத்தை ஆதரித்தபோதும் பெரும்பாலான தமிழக மக்களுக்கு ஈழத்தமிழன் மீது அனுதாபம் இருந்தே வந்தது. 

1991 ஆம் ஆண்டு சிறிபெரும்புதூர் துன்பியல் நிகழ்வின் பின்னர் இந்த நிலை பாரிய சரிவைக் கண்டது. காங்கிரஸும், அ.தி.மு.க வும் ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க, தி.மு.க மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறிப்போனது. அன்றிலிருந்து ஈழத்தமிழனின் போராட்டம் மீதான தமிழக மக்களின் அனுதாபம் சிறிது சிறிதாக கரையத் தொடங்கியது. பல தமிழக மக்களுக்கு ராஜீவ் கொல்லப்பட்டதைக் காட்டிலும், தமிழ்நாட்டின் இப்படிச் செய்துவிட்டார்கள் என்கிற ஆத்திரமே அவர்களை ஈழப்போராட்டத்தில் வெறும் பார்வையாளர்களாக  இருக்கும்படி செய்துவிட்டது. 

ஆனால், தமிழகத்தில் தொடர்ச்சியாக ஈழத்தமிழனின் போராட்டத்தை அரசியல் நோக்கிற்காகவன்றி உண்மையாகவே ஆதரித்துவந்த வெகுசிலரின் விடாமுயற்சியே அனுதாபத்தினை நூழிலையில் தக்கவைத்து 2009 இல் மீண்டும் பெரும் உணர்வெழுச்சியாக மாற்றிக் காட்டியது. 2009 இல் கருநாநிதி ஆடிய அனைத்துத் துரோக நாடகங்களையும் மீறி தமிழகம் மீண்டும் ஈழத்தமிழனுக்காகக் கண்ணீர்விட்டது. சீமானின் பிரச்சாரத்தினால் நடந்தது அல்ல அது. மக்கள் தாமாகவே முன்வந்து போராடிய நிகழ்வு அது. 

Edited by ரஞ்சித்
பார்வையாளர்களாக
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவை நம்பியிருப்பதை ஈழத்தமிழர்கள் கைவிட வேண்டும்.

1983 இல் இந்திரா காந்தியிடம் வங்கதேசத்தினை ஒத்த போர் ஒன்றினை தமிழ்ப் போராளிகளுடன் சேர்ந்து நடத்தி  தமிழருக்கென்று தனிநாட்டினை உருவாக்கலாமா என்று அதிகாரிகள் கேட்டனராம். அவர் உடனடியாகவே மறுத்து, இலங்கையைப் பிரிக்க நான் விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் சுயாட்சியுடைய பிராந்தியங்கள் எனும் கோட்பாட்டை அதிகாரிகள் வைத்தபோது, அதனையும் நிராகரித்துவிட்டார். அவரது சமாதானத் தரகர் பார்த்தசாரதி கூட ஜெயவர்த்தனவின் மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான அதிகாரங்களைப் பலப்படுத்துங்கள், தமிழர்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறோம் என்று ஜெயவர்த்தனவுடன் பேசியிருக்கிறார். 

இந்த நிலையில் இந்தியா எவ்வாறான தீர்வைத் தரும் என்று எதிர்பார்க்கிறோம்?

சரி, இந்தியாவின் சர்வ வல்லமை பொருந்திய பிரதமரே மாவட்ட அபிவிருத்திச் சபையினைப் பலப்படுத்திக் கொடுங்கள் என்று இணங்கியபோது, எந்நேரமும் மத்திய அரசினால் கலைக்கப்படாலம் எனும் கத்திமுனையில் தொங்கும் தமிழக அரசின் முதலமைச்சரோ அல்லது முதலமைச்சர் ஆகும் கனவில் இருக்கும் ஒருவரோ எவ்வகையான தீர்வினை தமிழருக்குத் தந்துவிடப்போகிறார் என்று அவரை ஆதரிக்கிறோம்? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னைப்பொறுத்தவரை எம்.ஜி.ஆர், கருநாநிதி, சீமான் உட்பட பெரும்பாலான தமிழக அரசியல்வாதிகள் ஈழத்தமிழனின் போராட்டத்தைக் கையில் எடுப்பதே தமது அரசியல் ஆதாயத்திற்காகத்தான். இதில் ஒருவரும் விதிவிலக்கல்ல. வைக்கோ, திருமா, குளத்தூர்மணி, ராமதாஸ், சுபவீ ஆகியோர் ஒருகாலத்தில் ஈழப்போராட்டத்தை ஆதரித்தபோதும் இன்று அதுபற்றிப் பேசுவதில்லை. எப்போதாவது ஒரு பத்திரிக்கை அறிக்கையுடன் அவர்களது ஈழத்தமிழர் ஆதரவு அடங்கிவிடுகிறது. கருநாநிதிபற்றியோ, ஜெயலலிதா  (2009 இல் ராணுவத்தை அனுப்பி ஈழம் அமைத்துத் தருவேன் என்று கருநாநிதியின் மரீனா உண்ணாவிரத நாடகத்திற்கு நிகரான நாடகத்தை ஆடிக்காட்டினாலும் கூட) பற்றிப் பேசத் தேவையில்லை. ஒருகட்டத்தில் வெளிப்படையாகவே போராட்டத்தை எதிர்த்தார்கள் அல்லது திறை மறைவில் அழிக்கத் துணைபோனார்கள்.

தனது வாக்கு வங்கி வளர்வதற்காக பிரபாகரன் பற்றியும், தமிழீழம் பற்றியும் சீமான் இதுவரை பேசிவந்தார். ஆனால், அவரது பேச்சுக்களில் புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். சிலவேளை, தனியே ஈழ ஆதரவு நிலைப்பாடு தேர்தலில் பலன் தராது என்பதை சீமான் உணரத் தலைப்பட்டிருக்கலாம். 

சீமான் புலிகளையும், தலைவரையும் தான் மட்டுமே பிரச்சாரப் பொருளாக்க முடியும் எனும்  நிலையில் ஆரம்பித்த அரசியல் இன்று அவரது கட்சியினரும் ஆதரவாளர்களும் மட்டுமே எமக்கான ஆதரவு நிலையினை எடுக்க உந்தியிருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளில் இருந்தபோதும் ஈழத்தமிழனின் மேல் அனுதாபம் கொண்டிருந்த பலர் இப்போது அதற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்க சீமானின் பிரத்தியேக "தமிழ்த் தேசியம்" தூண்டிவிட்டது என்றே நினைக்கிறேன். 80 களில் ஏறத்தாள 100 வீதம் ஈழ அனுதாப நிலையில் இருந்து இன்று வெறும் 11 வீதம் (சீமானுக்கு இறுதியாகக் கிடைத்த வாக்குககளின் எண்ணிக்கை)ஆகக் குறைய சீமான் காரணமாகிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  

சீமான் உட்பட தமிழக அரசியல்வாதிகள் எல்லோருமே மண் குதிரைகள். இவர்களை நம்பி நாம் பின்னால் அலைய வேண்டியதில்லை.

சீமான் எமக்கு எதிரியல்ல, அதேவேளை அவரால் ஈழத்தில் ஒரு துரும்பைத்தன்னும் அசைக்க முடியாது. அவரது பேச்சைக் கேட்டுக் கைதட்டலாம், ஆனால் அவரது அரசியல் எமக்கானது அல்ல. அவருக்கானது, அவரது ஆதரவாளர்களுக்கானது. நாம் எட்டவே நிற்கலாம். 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 minutes ago, ரஞ்சித் said:

என்னைப்பொறுத்தவரை எம்.ஜி.ஆர், கருநாநிதி, சீமான் உட்பட பெரும்பாலான தமிழக அரசியல்வாதிகள் ஈழத்தமிழனின் போராட்டத்தைக் கையில் எடுப்பதே தமது அரசியல் ஆதாயத்திற்காகத்தான். இதில் ஒருவரும் விதிவிலக்கல்ல. வைக்கோ, திருமா, குளத்தூர்மணி, ராமதாஸ், சுபவீ ஆகியோர் ஒருகாலத்தில் ஈழப்போராட்டத்தை ஆதரித்தபோதும் இன்று அதுபற்றிப் பேசுவதில்லை. எப்போதாவது ஒரு பத்திரிக்கை அறிக்கையுடன் அவர்களது ஈழத்தமிழர் ஆதரவு அடங்கிவிடுகிறது. கருநாநிதிபற்றியோ, ஜெயலலிதா  (2009 இல் ராணுவத்தை அனுப்பி ஈழம் அமைத்துத் தருவேன் என்று கருநாநிதியின் மரீனா உண்ணாவிரத நாடகத்திற்கு நிகரான நாடகத்தை ஆடிக்காட்டினாலும் கூட) பற்றிப் பேசத் தேவையில்லை. ஒருகட்டத்தில் வெளிப்படையாகவே போராட்டத்தை எதிர்த்தார்கள் அல்லது திறை மறைவில் அழிக்கத் துணைபோனார்கள்.

தனது வாக்கு வங்கி வளர்வதற்காக பிரபாகரன் பற்றியும், தமிழீழம் பற்றியும் சீமான் இதுவரை பேசிவந்தார். ஆனால், அவரது பேச்சுக்களில் புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். சிலவேளை, தனியே ஈழ ஆதரவு நிலைப்பாடு தேர்தலில் பலன் தராது என்பதை சீமான் உணரத் தலைப்பட்டிருக்கலாம். 

சீமான் புலிகளையும், தலைவரையும் தான் மட்டுமே பிரச்சாரப் பொருளாக்க முடியும் எனும்  நிலையில் ஆரம்பித்த அரசியல் இன்று அவரது கட்சியினரும் ஆதரவாளர்களும் மட்டுமே எமக்கான ஆதரவு நிலையினை எடுக்க உந்தியிருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளில் இருந்தபோதும் ஈழத்தமிழனின் மேல் அனுதாபம் கொண்டிருந்த பலர் இப்போது அதற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்க சீமானின் பிரத்தியேக "தமிழ்த் தேசியம்" தூண்டிவிட்டது என்றே நினைக்கிறேன். 80 களில் ஏறத்தாள 100 வீதம் ஈழ அனுதாப நிலையில் இருந்து இன்று வெறும் 11 வீதம் (சீமானுக்கு இறுதியாகக் கிடைத்த வாக்குககளின் எண்ணிக்கை)ஆகக் குறைய சீமான் காரணமாகிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  

ஈழத்தமிழருக்கான ஆதரவுத்தளம் 1990 க்குப் பின் படு வீழ்ச்சி அடைந்த கதை, ராஜீவ் கொலையுடன் ஆரம்பமாவதை சொல்லாமல் தவிர்த்தது ஏனோ?

பிரபாகரன் படத்தை வைத்திருந்தாலே சிறை என்று இருந்த நிலை குறித்தும் பேசலாமே!

கட்டுமரத்தின் உண்ணாவிரத நாடகம்?

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Nathamuni said:

ஈழத்தமிழருக்கான ஆதரவுத்தளம் 1990 க்குப் பின் படு வீழ்ச்சி அடைந்த கதை, ராஜீவ் கொலையுடன் ஆரம்பமாவதை சொல்லாமல் தவிர்த்தது ஏனோ?

 

31 minutes ago, ரஞ்சித் said:

1991 ஆம் ஆண்டு சிறிபெரும்புதூர் துன்பியல் நிகழ்வின் பின்னர் இந்த நிலை பாரிய சரிவைக் கண்டது. காங்கிரஸும், அ.தி.மு.க வும் ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க, தி.மு.க மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறிப்போனது. அன்றிலிருந்து ஈழத்தமிழனின் போராட்டம் மீதான தமிழக மக்களின் அனுதாபம் சிறிது சிறிதாக கரையத் தொடங்கியது. பல தமிழக மக்களுக்கு ராஜீவ் கொல்லப்பட்டதைக் காட்டிலும், தமிழ்நாட்டின் இப்படிச் செய்துவிட்டார்கள் என்கிற ஆத்திரமே அவர்களை ஈழப்போராட்டத்தில் வெறும் பார்வையாளர்களாக  இருக்கும்படி செய்துவிட்டது. 

 

6 minutes ago, Nathamuni said:

கட்டுமரத்தின் உண்ணாவிரத நாடகம்?

 

10 minutes ago, ரஞ்சித் said:

கருநாநிதிபற்றியோ, ஜெயலலிதா  (2009 இல் ராணுவத்தை அனுப்பி ஈழம் அமைத்துத் தருவேன் என்று கருநாநிதியின் மரீனா உண்ணாவிரத நாடகத்திற்கு நிகரான நாடகத்தை ஆடிக்காட்டினாலும் கூட) பற்றிப் பேசத் தேவையில்லை. ஒருகட்டத்தில் வெளிப்படையாகவே போராட்டத்தை எதிர்த்தார்கள் அல்லது திறை மறைவில் அழிக்கத் துணைபோனார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, ரஞ்சித் said:

 

 

 

3 minutes ago, ரஞ்சித் said:

 

 

சரி, பிரபாகரன் இன்றும் தமிழகத்தில் பேசு பொருளாயும், தமிழர் வீரத்தின் அடையாளமாயும் திகழும் காரணம் என்ன?

இது தான் நான் காலையில் இருந்து கேட்கும் கேள்வி.

புலிகளும், அதனூடாக ஈழத்தமிழரும் தமிழக அரசியலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்களா , இல்லையா?

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Nathamuni said:

பிரபாகரன் இன்றும் தமிழகத்தில் பேசு பொருளாயும்

நாம் தமிழர் மட்டுமே தலைவரைப் போற்றிப் பேசும் போது மற்றைய கட்சிகள் அனைத்துமே அவரை மிகவும் கேவலமாக இகழ்வதை, எள்ளி நகையாடுவதை உணர்கிறீர்களா? அப்படியிருக்கும்போது, தமிழகம் முழுதுமே தலைவரைப் பேசுபொருளாக்கியிருப்பதாக எப்படி நினைக்கிறீர்கள்?

சீமான் அரசியலுக்கு வரு முன்னர் தலைவரினதும் புலிகளினதும் வீரம் குறித்து தமிழகத்தில் எவருமே அறிந்திருக்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா? ஒரு காலத்தில் உலகமே வியந்த ஒப்பற்ற விடுதலை இராணுவமாக புலிகள் திகழ்ந்தார்கள். அது சீமானின் பிரச்சாரத்தால் கட்டப்பட்ட விம்பம் கிடையாது. உலகமே அறிந்த வீரர்களை தமிழகம் அறிந்திருக்காதா என்ன? அதுவும் எமது தொப்புள்க்கொடி உறவுகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று எப்படி நினைக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, ரஞ்சித் said:

நாம் தமிழர் மட்டுமே தலைவரைப் போற்றிப் பேசும் போது மற்றைய கட்சிகள் அனைத்துமே அவரை மிகவும் கேவலமாக இகழ்வதை, எள்ளி நகையாடுவதை உணர்கிறீர்களா? அப்படியிருக்கும்போது, தமிழகம் முழுதுமே தலைவரைப் பேசுபொருளாக்கியிருப்பதாக எப்படி நினைக்கிறீர்கள்?

சீமான் அரசியலுக்கு வரு முன்னர் தலைவரினதும் புலிகளினதும் வீரம் குறித்து தமிழகத்தில் எவருமே அறிந்திருக்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா? ஒரு காலத்தில் உலகமே வியந்த ஒப்பற்ற விடுதலை இராணுவமாக புலிகள் திகழ்ந்தார்கள். அது சீமானின் பிரச்சாரத்தால் கட்டப்பட்ட விம்பம் கிடையாது. உலகமே அறிந்த வீரர்களை தமிழகம் அறிந்திருக்காதா என்ன? அதுவும் எமது தொப்புள்க்கொடி உறவுகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று எப்படி நினைக்கிறீர்கள்? 

இல்லை,

எனது பொயின்ட் மறுவழமானது!

புலிகள் தான் சீமானை அழைத்து உருவேத்தி, நிதி கொடுத்து இறக்கி விட்டார்கள் என்பது உண்மையாணால், சீமான் மேல் தவறு சொல்லும் தார்மீக உரிமை எமக்கு உள்ளதா?

அதாவது தவறு பிரபாகரனின் மேல் என்று சொல்லலாமா?

மன்னிக்க வேண்டும் கேள்வி உங்கள் தலைப்புடன் சம்பந்தப்பட்டது!

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Nathamuni said:

புலிகள் தான் சீமானை அழைத்து உருவேத்தி, நிதி கொடுத்து இறக்கி விட்டார்கள் என்பது உண்மையாணால்

தலைவர் போராட்டத்தின வழிநடத்தும் பொறுப்பினை சீமானிடம் கொடுத்தார் என்று நான் நம்பவில்லை. 2009 மேயிற்கு முன்னர் யுத்தத்தை நிறுத்த, இந்தியாவின் அழுத்தத்தை குறைக்க,  தமிழகத்தில் போராட்டங்களை நடத்த சீமானின் உதவியைக் கோரியிருக்கலாம். ஆனால், 2009 மேயிற்குப் பின்னர் அதற்கான தேவையும் இல்லாமல்ப் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன். 

அதுமட்டுமல்லாமல், சீமான் இன்று செய்யும் அரசியலால் தலைவர் எதை எண்ணி அவரிடம் கோரியிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை நிச்சயம் செய்யமுடியாதென்பது எனது எண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 minutes ago, ரஞ்சித் said:

தலைவர் போராட்டத்தின வழிநடத்தும் பொறுப்பினை சீமானிடம் கொடுத்தார் என்று நான் நம்பவில்லை. 2009 மேயிற்கு முன்னர் யுத்தத்தை நிறுத்த, இந்தியாவின் அழுத்தத்தை குறைக்க,  தமிழகத்தில் போராட்டங்களை நடத்த சீமானின் உதவியைக் கோரியிருக்கலாம். ஆனால், 2009 மேயிற்குப் பின்னர் அதற்கான தேவையும் இல்லாமல்ப் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன். 

அதுமட்டுமல்லாமல், சீமான் இன்று செய்யும் அரசியலால் தலைவர் எதை எண்ணி அவரிடம் கோரியிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை நிச்சயம் செய்யமுடியாதென்பது எனது எண்ணம். 

நாம், ஈழத்தமிழர் அப்படி நம்பவில்லை என்று சொல்லலாம்.

ஆனால் அதை நம்பி 31 இலட்சம் வாக்குகள் விழுந்திருக்கிறதே, அய்யா!

( ராஜீவ் கொலையும் புலிகள் செய்யவில்லை என்றுதானே சொன்னார்கள்! )

தலைவர் போராட்டத்தை அவரிடம் கொடுக்கவில்லை. தமிழகத்தில் சாதீயத்துக்கு எதிராக போராட அறிவுறுத்தினார் என்றே நான் நம்புகிறேன்

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Nathamuni said:

தமிழகத்தில் சாதீயத்துக்கு எதிராக போராட அறிவுறுத்தினார்

இருக்கலாம், மறுக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, ரஞ்சித் said:

இருக்கலாம், மறுக்கவில்லை. 

நன்றி!

நான் முன்னரே சொன்னது தான்.

ஈழத்தில் சாதியத்துக்கு வெளியே தமிழரை ஓர்மப்படுத்தி சிங்களத்துக்கு எதிராக போராட வைத்தார் பிரபாகரன்.

அதனையே சீமான் அந்தத் தலைவனின் பெயரிலேயே செய்கிறார்

சீமான் தானே தலைவர் என்றால், நாடார் என ஒதுக்குவார்கள் என்பதால், வெளிநாட்டவராயினும் தமிழன் என்பதால் தலைவன் என்கிறார்.

ஆக இது சாதீயத்துக்கு எதிரான போராட்டம்.

உயர் சாதியினருக்கு பிடிக்காதுஎனினும், எம்மால் முடிந்தவரை ஆதரவு தருவோம். 🙏
 

பிரபாகரனைக் காட்டி சாதியத்துக்கு வெளியே, Neutral தலைவராக, சீமான் அரசியல் செய்வதாக, நான் சொல்லவில்லை, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சொல்கிறார்,

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Nathamuni said:

நன்றி!

நான் முன்னரே சொன்னது தான்.

ஈழத்தில் சாதியத்துக்கு வெளியே தமிழரை ஓர்மப்படுத்தி சிங்களத்துக்கு எதிராக போராட வைத்தார் பிரபாகரன்.

அதனையே சீமான் அந்தத் தலைவனின் பெயரிலேயே செய்கிறார்

சீமான் தானே தலைவர் என்றால், நாடார் என ஒதுக்குவார்கள் என்பதால், வெளிநாட்டவராயினும் தமிழன் என்று தலைவன் என்கிறார்.

ஆக இது சாதீயத்துக்கு எதிரான போராட்டம்.

உயர் சாதியினருக்கு பிடிக்காதுஎனினும், எம்மால் முடிந்தவரை ஆதரவு தருவோம். 🙏

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ரஞ்சித் said:

நன்றி

ஆகவே, இத்துடன், திரியை மூடுமாறு கோரலாம்!

🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரகு

நீங்கள் திரியை ஆரம்பிக்கும் போது எழுதியதையும் தற்போது எழுதுவதையும் மீண்டும் வாசியுங்கள்.   

எங்களை வைத்து காமெடி ஒன்றும் செய்யமாட்டீர்கள் தானே?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Nathamuni said:

பிரபாகரன் படத்தை வைத்திருந்தாலே சிறை என்று இருந்த நிலை குறித்தும் பேசலாமே!

இந்த நிலை சீமானுக்காக மத்திய அரசால் தளர்த்தப்பட்டது என்பதை நீங்களும் பேசலாமே. 

 

1 hour ago, Nathamuni said:

சரி, பிரபாகரன் இன்றும் தமிழகத்தில் பேசு பொருளாயும், தமிழர் வீரத்தின் அடையாளமாயும் திகழும் காரணம் என்ன?

அவர் எப்போதும் தமிழகத்தில் அப்படித்தான் இருந்தார்.

சீமானால் அதை கைது பயம் இன்றி (மத்தியின் அனுமதியோடு) உரக்க கூவ முடிந்தது.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

புலிகளும், அதனூடாக ஈழத்தமிழரும் தமிழக அரசியலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்களா , இல்லையா?

இல்லை.

புலிகள் ஒரு போதும் இதை விரும்பவில்லை.

அங்கே முகாம் இருந்த காலத்தில் கூட, பிரச்சார கூட்டம், ஆட் சேர்பு எதையும் செய்யவில்லை.

காரணம் வலுவானது. புலிகளுக்கு தமிழ்நாட்டின் வரலாறு, மக்கள் மனநிலை, யதார்த்தம் எல்லாம் நன்கு தெரியும்.

தம்மால் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்பதும், தமிழ் தேசியத்துக்கான களம் அதுவல்ல, என்ற தெளிவும் அவர்களுக்கு இருந்தது.

இப்போதும் புலிகள் அங்கே ஒரு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சீமானின் ஆதரவு, anti incumbency vote. எல்லாரும் கூட்டணி, அத்தனை பேரையும் விரும்பாத 10-15 சதவீதம் சீமானின் பின்னால்.

இது யாழ்பாணத்தில் டக்லஸ் எப்போதும் எடுக்கும் 12% வாக்கு வங்கி போன்றது.

 

52 minutes ago, Nathamuni said:

ஆனால் அதை நம்பி 31 இலட்சம் வாக்குகள் விழுந்திருக்கிறதே, அய்யா!

மொத்தமாக தமிழ்நாட்டில் வாக்காளர் தொகையோடு ஒப்பிட்டால் இது சொற்பமே.

39 minutes ago, Nathamuni said:

ஆக இது சாதீயத்துக்கு எதிரான போராட்டம்.

உயர் சாதியினருக்கு பிடிக்காதுஎனினும், எம்மால் முடிந்தவரை ஆதரவு தருவோம்.

இதுவும் பச்சை பொய். எந்த உயர் சாதியை எதிர்த்து சீமான் போரிடுகிறார்?

ஆதிக்க சாதியான தேவரை ஆதரிக்கிறார்.

பிராமணர் தமிழர் என்றார்.

ஆணவக கொலையை கண்டிக்க மறுத்தார்.

அடிமட்ட அருந்தததியரை வந்தேறிகள் என கூறி வழக்கை சந்திக்கிறார்.

மிழ் நாட்டு மக்களை, தமிழ் சாதி, தெலுங்கு சாதி என பிரித்து வோட்டரசியல் செய்யும் சீமான், சாதிய ஒழிப்பில் தலைவரின் கால் தூசிக்கும் ஈடாக மாட்டார்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, Nathamuni said:

ஆகவே, இத்துடன், திரியை மூடுமாறு கோரலாம்!

ஒவ்வொரு விதமாக திரியை மூட முயற்சிக்கிறீர்கள் 🤣.

மற்றைய வாசகர்கள், நிர்வாகம் அவ்வளவு முட்டாள்கள் என்றா எண்ணுகிறீர்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

கோசன், றோவிண்ட ஆளோ?? 😂😂🤣

எதுக்குமே பிரயோசமில்லாத றோவை தூக்கிப் பிடிக்கிற சீவன் எனக்குத் தெரிஞ்சு நீங்கள் தான். 

தவிர, அது உள்நாட்டு அரசியலில் தலையிடுவதில்லை என்று தெரியுமா, இல்லையா?

அதுக்குதான், ED, IT, IB என்று இருக்குதே ஒரு லிஸ்ட்! 

“எதற்கும் பிரயோசனம் இல்லாத” ரோதான் எமது போராட்டத்தை நசுக்கியது.

“எதற்கும் பிரயோசனம் இல்லாத” ரோதான் இன்றும் தமிழ் தேசியம் உருப்படியாக மீள் எழுந்து விட கூடாது என்று வேலை செய்கிறது.

யார் ஒருவர் ஈழதமிழனை ரோ ஒரு ஆபத்தில்லை என நம்ப வைக்க முயல்கிறாரோ அவரை இட்டு ஈழத்தமிழன் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

சீமான் உள்நாட்டு விடயம் அல்ல.

அவர் இந்தியாவுக்கான உலகளாவிய ஆபத்து என ரோ கருதும் தமிழ் தேசியத்தை கையாளும், மடைமாற்றும் ஏஜெண்ட் - இது ரோவின் விடயதானம்தான்.

2 hours ago, goshan_che said:

காலிஸ்தான் ஆதரவு சீக்கியரை கனடாவில் வைத்து போட்டுத்தள்ளும் ரோ, சீமானை தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் தலைவர் படத்தை கொண்டு செல்ல அனுமதிக்கும்.

பொதுவாக,

ஒவ்வொரு முறை இதை பற்றி சிந்திக்கும் போதும், நான் மேலே சொன்ன கோணத்தை கவனத்தில் எடுங்கள்.

#உள்ளங்கை நெல்லிக்கனி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/9/2023 at 23:03, ரஞ்சித் said:

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலங்களை, அவர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையினை அப்பட்டமாக பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாகப் பேசிவருபவர் சீமான் மட்டும் தான் என்பதில் எவருக்கும் ஐய்யமிருக்க வாய்ப்பில்லை. இன்றுவரை தமிழ்நாட்டில் இருந்த அரசியல்வாதிகளில் மிகவும் வெளிப்படையாக இலங்கையினையும், இந்தியக் காங்கிரஸையும் நேரடியாகவே ஈழத்தமிழர் படுகொலையின் சூத்திரதாரிகள் என்று சீமான் குற்றஞ்சாட்டுவதுபோல வேறு எவருமே செய்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வுள்ளவர்களிடையே எமது போராட்டம் பற்றியும், தலைமை பற்றியும், எம்மீது நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றியும் சீமான் பல விடயங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். எமது போராட்டம் பற்றிய தெளிவான விளக்கத்தினைக் கொண்டிருக்காத பலர் இன்று சீமானினால் அறிவூட்டப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் நல்ல விடயங்களே.

கேள்வி என்னவென்றால், தனது அரசியல் மூலம் சீமான் அடைய நினைப்பது என்ன? அல்லது, தமிழ்நாட்டில் சீமானினால் அடையக் கூடிய அதியுச்ச‌ பதவி/அதிகாரம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதற்கப்பால் வேறு இருக்கிறதா?  ஒரு பேச்சிற்கு சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிடுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அந்த அதிகாரத்தைக் கொண்டு சீமான் எமக்குச் செய்யக் கூடியது என்ன? அது, எம்.ஜி.ஆரோ அல்லது கருநாநிதியோ (1980 களின் ஆரம்பத்தில் அவர் இருந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்)முதலமைச்சர்களாக இருந்த காலத்தில் செய்ய முடிந்தவற்றைக் காட்டிலும் எந்தளவிற்கு வேறுபட்டதாக இருக்கும்? புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்த எம்.ஜி.ஆர் தனது பங்காளியாக மத்தியில் ஆட்சிசெய்த இந்திராவையோ அல்லது ரஜீவையோ அழுத்தம்கொடுத்து தமிழருக்கு நீதியான தீர்வொன்றினை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்ததா? புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்படாத, ராஜீவின் மரணத்திற்கு முற்பட்ட காலத்திலேயே எமக்கு வெளிப்படையாக ஆதரவு தந்த (சீமானைப் போல் இல்லாதுவிட்டாலும், ஓரளவிற்கு) எம்.ஜி.ஆர் இனால் செய்யமுடியவில்லையென்றால், தற்போது புலிகள் மீதான தடையும் ராஜீவைக் கொன்றவர்கள் என்கிற அவப்பெயரும், தமிழினப் படுகொலையில் இந்தியாவின் நேரடிப் பங்கும் தெளிவாகிவிட்ட சூழ்நிலையில் சீமானினால் எமக்கு தரக்கூடிய தீர்வென்ன? மத்திய அரசு மீது சீமான் செலுத்தப்போகும் (முதலமைச்சர் ஆகியபின்னர்) அழுத்தம் எவ்வாறிருக்கும்? என்னைப்பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சீமான் செலுத்தக்கூடிய அரசியல் செல்வாக்கு குறுகியது. தமிழ்நாட்டின் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு அவர் இன்னமும் நீண்டகாலம் காத்திருக்கவேண்டியிருக்கும். முதலமைச்சர் ஆகியபின்னரும் அவர் மத்திக்குக் கொடுக்கப்போகும் அழுத்தம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. அந்த மட்டுப்படுத்தப்பட்ட அழுத்ததினைப் பாவித்து தமிழருக்கான நியாயமான, கெளரவமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது. 

நீங்கள் உலக அரசியலை எந்தளவுக்கு அவதானிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை 
மேற்குக்கும் ரஸ்யாவுக்குமான யுத்தம் உக்றேனை விட அதி தீவிரமாக ஆப்ரிக்காவில்தான் நடந்துகொண்டு 
இருக்கிறது. தங்களுக்கு சாதகம் அல்லாததாலும் இரண்டுக்குமான காரணம் ஒன்று என்பதாலும் ... அது சரி இது பிழை என்று ஒரே நேரத்தில் எப்படி கூறுவது என்பதாலும் மேற்கு ஊடங்கங்கள் மவுனம் காத்து வருகின்றன. 

ஈழத்தமிழருக்கும் .... தமிழக தமிழருக்கும் இருக்கும் உறவை பிரித்துவிடடால் கூட ஒன்றும் ஆகப்போவதில்லை 
களியாட்டமும் சினிமாவும்தான் இல்லாமல் போகும் 

தமிழகத்தில் தமிழரின் எதிர்காலவாழ்வு நிலைக்குமா? நீடிக்குமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி 
அதுக்கு சீமானின் அரசியல் சாதகமாக இருக்குமா .... பாதகமாக இருக்குமா? 

உங்கள் வீட்டு காணிக்குள் ஒரு நாகபாம்பு புத்து இருந்தால் ...
நீங்கள் உங்கள் பாட்டில் இருக்கலாம் பாம்பு தன்பாட்டில் இருக்கும் 
நீங்கள் எப்போ பாம்பை தீண்டுகிறீர்களோ அன்று பாம்பும் உங்களை தீண்ட முயற்சி செய்யும். 

பாம்பு புத்தை எப்படி அழிப்பது? 
என்ன ரிஸ்க் எடுப்பது? என்பதுதான் ஆரோக்கியமான விவாதம். 

1980களில் புலிகளுக்கு எத்தனை படித்த (என்று தமக்குள் தாமே எண்ணிக்கொண்டு அலையும்) மூடர்கள் ஆதரவு  கொடுத்தார்கள்? இந்த அளவுக்கு புலிகள் வளர்வார்கள் என்று யார் கணித்தார்கள்? 
பிரபாகரனை போலீசு பிடிச்சு சுட எல்லாம் முடிந்துபோகும் என்றுதான் அடித்துக்கொண்டு இருந்தார்கள்  
எதிர்வினை என்பது இருப்பக்கமும் சாதகம் பாதகம் உள்ளது அனால் முடிவு உழைப்பில் மட்டுமே உள்ளது.

நீங்கள் உங்கள் நெஞ்சுக்கு நேர்மையாக தமிழ் மொழியை தமிழ் இனத்தை நேசிக்கிறீர்களா? 
உங்களுக்கு இருக்கும் ஒரே பதில் உழைப்புதான்.  தமிழை தக்கவைக்க நாம் என்ன செய்கிறோம்? 

ஏன் கனடா அரசு காலிஸ்தான்களுக்கு ஆதரவு கொடுக்கிறது?
ஏன் இந்தியாவுடன் முரண்படுகிறது? இஸ்ட்ரேல் செய்கிறது என்று இந்திய ரா முந்திரிகொடடை போல 
சும்மா இருந்தவனை சுட்டு அதன் விளைவை பார்க்கிறீர்களா? 

உலகில் பாரியதொரு பொருளாதார போர் நடந்துகொண்டு இருக்கிறது 
உலகின் மொத்த பொருளாதாரம் $30 ட்ரில்லியன்கள் அதில் அதிக தொகையை யார் கையாள்கிறான் 
அவனுடைய பலம் என்ன? ஏன் சில நாடுகளில் போரை உண்டுபண்ணுகிறான்? 
ஏன் சில நாடுகளில் பிரிவினையை உண்டுபண்ணுகிறான்? ஏன் மதங்களை அழிக்கிறான்?
ஏன் பாலியல் விடயங்களை ஊக்குவிக்கிறான்? ஏன் குழந்தைகளுக்கு கே லெஸ்பியன் உணர்வை தூண்டுகிறான்? இவை பற்றி மேலோட்டமாக கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்  

இதுக்குள் இருந்து தமிழை மொழியை  தமிழ் வாழ்க்கை முறைமையை மருந்து செடிகள் கொடிகள் புல் பூண்டுகள்  மூலிகைகளை எப்படி காப்பாற்றுவது ? 
நாம் வாழ்ந்த வாழ்வை எதிர்கால சந்ததிக்கு எப்படி கையளிப்பது?
என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் 

சீமான் தனியாளாக நின்று எதையும் புடுங்க முடியாது 
எல்லோருக்குமே பிடிக்கும்படியான தத்துவத்தை கடவுளால் கூட கொடுக்க முடியாது 
காரணம் மனிதரில் சோம்பேறிகள் சுயநல கூட்டம் பெரும்பான்மை. 

நான் நிறைய விடயம் எழுதி இருக்கிறேன் பார்த்தல் ஒருவேளை ஒன்றும் புரியாது 
ஆனால் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை 
இன்று ஆப்பிரிக்காவில் நிகழ்வதுக்கும் சீமான் பேசும் அரசியலுக்கும் நிறைய தொடர்பு உண்டு 
அதுபோல உக்ரைன் சண்டைக்கும் தொடர்பு உண்டு ... காலிஸ்தான் பிரிவினைக்கும் தொடர்பு உண்டு. 

காரணம் நீங்கள் தற்போதைய கருணாநிதி குடும்பத்தை தனி குடும்பமாக பார்க்காதீர்கள் 
அவர்களையே வெளியில் இருப்பவன் ஒருவன்தான் ஆட்டி கொண்டு இருக்கிறான் 
பொருளாதார ரீதியாக அவர்கள் இனி ஆடித்தான் ஆகவேண்டும் 

பொருளாதார ரீதியாக அரசியலை கொஞ்சம் பாருங்கள் 
முதலீடுகள் எங்கிருந்து வருகிறது? ஏன் முதலிடுகிறான் என்று அறியுங்கள்.
கருணாநிதி குடும்பம் இலங்கையில் செய்யும் முதலீட்டு தொகையை தேடிப்பாருங்கள்? 
இந்தியாவில் எத்தனையோ வழி இருக்க ஏன் இவ்வளவு ரிஸ்க்? என்று தேடிப்பாருங்கள் 

சீமானின் அரசியல் நிற்சயம் தேவை 
ஆனால் அதனால் வரும் எதிர்வினையை சீமான் தடுப்பாரா எப்படி? 
என்பதுதான் இங்கு வாதம் செய்ய வேண்டிய ஒன்று 
அதை சீமான் செய்ய முடியாது ..... என்பது தெளிந்த விடை 
தமிழர்கள் எப்படி கையாள்வார்கள்? அந்தளவு அறிவு இருக்கா என்பதுதான் வாதம் செய்ய கூடியது 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

எந்நேரமும் மத்திய அரசினால் கலைக்கப்படாலம் எனும் கத்திமுனையில் தொங்கும் தமிழக அரசின் முதலமைச்சரோ அல்லது முதலமைச்சர் ஆகும் கனவில் இருக்கும் ஒருவரோ எவ்வகையான தீர்வினை தமிழருக்குத் தந்துவிடப்போகிறார் என்று அவரை ஆதரிக்கிறோம்? 

நல்ல கேள்வியுடன் கூடிய புரிதல்கள்  நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, Maruthankerny said:

சீமானின் அரசியல் நிற்சயம் தேவை 

சீமானின் அரசியல் அல்ல.

தமிழ் நாட்டில் உண்மையான தமிழ் தேசிய அரசியல் நிச்சயம் தேவை.

அந்த மண் சார்ந்த சீமான் பேசும் விடயங்களையும் பேசும் அரசியலாக அது இருக்கும்.

அவர்களுக்கு மட்டும் இல்லை, ஈழத்தில், வெளிநாட்டில் வாழும் சகல தமிழருக்கும் அது தேவை.

ஆனால் அதற்கு தமிழ் தேசிய அடையாளத்தை விரிந்து செல்லும், உள்வாங்கும் அடையாளமாக மாற்றுவது முதல் படி.

ஆனால் இப்படி பட்ட உண்மையான ஒரு தமிழ் தேசிய அரசியல், தலைவர் தமிழ் நாட்டில் உருவாக எத்தனித்த மறுகணமே, இந்தியா அதை முளையிலேயே கிள்ளி விடும்.

இதுதான் யதார்த்தம்.

 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
38 minutes ago, goshan_che said:

 

மிழ் நாட்டு மக்களை, தமிழ் சாதி, தெலுங்கு சாதி என பிரித்து வோட்டரசியல் செய்யும் சீமான், சாதிய ஒழிப்பில் தலைவரின் கால் தூசிக்கும் ஈடாக மாட்டார்.

தெலுங்கு ஒரு சாதியல்ல, ஒரு இனம்!

இரண்டுக்கும் இடையே பெரும் வித்தியாசம்! 

24 minutes ago, goshan_che said:

எதற்கும் பிரயோசனம் இல்லாத” ரோதான் எமது போராட்டத்தை நசுக்கியது.

“எதற்கும் பிரயோசனம் இல்லாத” ரோதான் இன்றும் தமிழ் தேசியம் உருப்படியாக மீள் எழுந்து விட கூடாது என்று வேலை செய்கிறது.

யார் ஒருவர் ஈழதமிழனை ரோ ஒரு ஆபத்தில்லை என நம்ப வைக்க முயல்கிறாரோ அவரை இட்டு ஈழத்தமிழன் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

உங்கள் புரிதல் இதுதானா?

போரை நடாத்த, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன் இந்தியா உள்பட பல நாடுகள் உதவின என்பது பதிவான செய்தி!

ரோ ஆபத்தில்லை என்று எங்கப்பா சொன்னேன். நேற்றுத் தான் பக்கம் பக்கமா பேசி நன்றியும் சொன்னேனே.

மறதியோ?

மீண்டும்: இலங்கையில் றோ செய்ய இனி எதுவுமே இல்லை. காரணம், சீன, அமெரிக்க உளவுத்துறைகள் பலம். றோ சகல விடயங்களிலும் கோட்டை விட்டதை விரிவாக விவாதித்து, அதுவே உங்கள் உணர்வும் என்றீர்களே!

மாலைதீவு!

இதுக்கும் மேலே றோ பூச்சாண்டி வேணாமே!!

உங்களுக்கு நேரம் உள்ளது. நின்று வெளாடுங்கோ. எனக்கொரு மீற்றிங்  இருக்கு, சந்திப்பம்!

Edited by Nathamuni



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிக;ள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது. சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?  புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த‌ இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே?  டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை. சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிட‌வேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் த‌ண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவ்பர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை.   தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது. இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா ‍- உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார்.  இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. 
    • அந்தக் கஞ்சி பழங்கஞ்சியா அல்லது புதுக் கஞ்சியா? உந்தக் க்ஞ்சியில் வெளுத்த  உடுப்பு போட்டு நீற்றாக அயன் செய்ய முடியுமா?  😁
    • பலரை நம்பி ஏமாந்த அனுபவத்தைப் போல சிலரை நம்பாமல் ஏமாறும் சந்தர்ப்பங்ளும் எதிர்காலத்தில் வரலாம். சீமான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் சம்பிரதாயத்திற்கு அதைத் செய்திருக்கலாம்.அவரது ஆதரவாளர்களும் தம்பிமார்களும் இதை விருமபமாட்டார்கள் என்பது உண்மை. இளங்கோவனுக்கு சம்பிரதாயத்துக்கு கூட சீமான் அஞ்சி செலுத்தாமல் விட்டிருந்தால்  எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம்.ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.மற்றும் வயறு முத்துவின் கவிதையைப்பற்றி அலட்டிக்கொள்ள அவசியமில்லை.
    • சுமந்திரன் பிராண்ட் பேதி மாத்திரை நன்றாகத்தான் வேலை செய்கிறது சிறியருக்கு.   எனக்கென்னமோ சிறியருடைய பெயரில் கிளிநொச்சியில் பார் இருப்பதாக ஒரு சந்தேகம். சிறியர் என்றவுடன் விழுந்தடித்து ஓடி வருகிறார்.  🤣
    • இனி கனடாப் பக்கம் வர வேண்டாம்! சுமந்திரனிற்கு நடந்த கதி. முன்னொரு காலத்திலே.... சுமந்திரனும், சாணக்கியனும் கனடா போய்.... ஒட்டோவா பாராளுமன்றம் நடக்காத நாளில்,  அதற்கு முன், வெளியே நின்று படம் எடுத்துவிட்டு வந்து,  கனடா எம்.பி. மாருடன் நம்ம நாட்டு பிரச்சினை  பற்றி கதைத்ததாக  "றீல்" விட்டதை  நாம் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை.  அதற்குப் பிறகு சுத்துமாத்து சுமந்திரன்  கனடா பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. அந்தளவுக்கு மரியாதை கொடுத்து அனுப்பியிருந்தார்கள். சுத்துமாத்து செல்லும் இடம் எல்லாம்... வாங்கிக் கட்டிக் கொண்டு வருவது வழக்கமாகி விட்டது. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.