Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் திடீர் பிரசித்தி பெற்றுவரும் இவர் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நண்பர் ஒருவரிடமிருந்து குறுந்தகவலுடன் காணொளி இணைப்பும் இருந்தது.

ஆரம்பத்தில் ஏமாற்று போல இருந்தாலும் போகபோக மிகவும் குழப்பமாக இருந்தது.

உண்மையாக இருக்குமா?நம்பலாமா?

பலரும் சொல்கிறார்களே என்று ஒரே குளப்பமாக இருக்கிறது.

யாழில் இந்த வைத்தியர் என்று சொல்லப்படுபவர் இருப்பதால் @ஏராளன் தான் இதை உறுதிப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டி வெட்டி கான்சரோ எண்டு செக் பண்ண கொழும்பிக்கு அனுப்பி அது கான்சர் ரியூமர் கட்டி இல்லை பெனின் கட்டி எண்டு ரிசல்ட்டும் வந்திருக்கு.. அதவிட வருசம் வருசம் வளர வெட்டுறதாம்.. சளி கட்டிக்கும் தோல் சதைகளால் ஆன கட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் யாழ்ப்பாண டொக்ரேர்ஸ் அதை வெட்டி கொழும்புக்கு அனுப்ப கொழும்பு வைதியசாலை ஆய்வுகூடத்தில்கூட சளிக்கட்டிக்கும் தோல் கட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் பரிசோதனை செய்து ரிசல்டும் வந்திருக்கு.. எங்கட பக்கத்து வீட்டு சின்னப்பொடியனுக்கே தெரியும் காறித்துப்புற சளிக்கட்டிக்கும் வெட்டி எடுக்குற தோல்கட்டிக்கும் வித்தியாசம்,, அந்த கட்டிய இவர் சளி கட்டி கட்டியா இருக்கு எண்டு கரச்சவராம்.. கெட்ட கோவம் வருகுது.. பிரண்ட்ஸ் படத்தில நேசமணிய லேபர் கோவாலு அடிச்ச கட்டையால அடிக்கவேணும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

சாமியாருட்ட சாத்திரம் பாக்க ஆயிரம் பேர் வருவாங்கள்.. மூண்டு பேருக்கு சரியா வந்திடும்.. 997 பேருக்கு பிழைச்சுபோம்.. 997 பேரும் அத விட்டிட்டு அடுத்த வேலை பாக்க போயிடுவாங்கள்.. ஆனா இந்த மூண்டு பேரும் ஊர் முழுக்க தம்பட்டம் அடிச்சு இன்னொரு முன்னூறு பேர் சாத்திரி வீட்ட போயிடுவானுகள்.. அதில ஒரு மூண்டு தேறி இன்னொரு முன்னூறை அனுப்பும்.. சாத்திரம் பிழைச்ச 297 அதை மறந்திட்டு இல்லா சாமியாருக்கு வீட்டில தூசணத்தால ஏசிப்போட்டு அடுத்த வேலை பாக்க போயிடுவாங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

கெட்ட கோவம் வருகுது.

IMG-4488.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சாமியாருட்ட சாத்திரம் பாக்க ஆயிரம் பேர் வருவாங்கள்.. மூண்டு பேருக்கு சரியா வந்திடும்.. 997 பேருக்கு பிழைச்சுபோம்.. 997 பேரும் அத விட்டிட்டு அடுத்த வேலை பாக்க போயிடுவாங்கள்.. ஆனா இந்த மூண்டு பேரும் ஊர் முழுக்க தம்பட்டம் அடிச்சு இன்னொரு முன்னூறு பேர் சாத்திரி வீட்ட போயிடுவானுகள்.. அதில ஒரு மூண்டு தேறி இன்னொரு முன்னூறை அனுப்பும்.. சாத்திரம் பிழைச்ச 297 அதை மறந்திட்டு இல்லா சாமியாருக்கு வீட்டில தூசணத்தால ஏசிப்போட்டு அடுத்த வேலை பாக்க போயிடுவாங்கள்..

ஓணாண்டி நீங்களும் ஊரில இருக்கிறபடியால் நேரடி ரிப்போட் ஒன்று தரலாமே?

11 minutes ago, Kavi arunasalam said:

IMG-4488.jpg

போறது போகட்டும் விடுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று நண்பர் ஒருவரிடமிருந்து குறுந்தகவலுடன் காணொளி இணைப்பும் இருந்தது.

ஆரம்பத்தில் ஏமாற்று போல இருந்தாலும் போகபோக மிகவும் குழப்பமாக இருந்தது.

உண்மையாக இருக்குமா?நம்பலாமா?

பலரும் சொல்கிறார்களே என்று ஒரே குளப்பமாக இருக்கிறது.

யாழில் இந்த வைத்தியர் என்று சொல்லப்படுபவர் இருப்பதால் @ஏராளன் தான் இதை உறுதிப்படுத்த வேண்டும்.

முயன்று பார்க்கிறேன் அண்ணை.
எங்கட கிராம வைபர் குறூப்பில் இந்த வீடியோ வந்தது. என்னையும் போய்க் காட்டச் சொல்லி ஊரிலயும் வெளிநாட்டிலயும் இருந்து பிறசர் குடுக்கினம்! முதல்ல போன்ல விடயத்தைச் சொல்லிக் கேட்டுவிட்டு பிறகு நேர போற எண்ணம்.

9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கட்டி வெட்டி கான்சரோ எண்டு செக் பண்ண கொழும்பிக்கு அனுப்பி அது கான்சர் ரியூமர் கட்டி இல்லை பெனின் கட்டி எண்டு ரிசல்ட்டும் வந்திருக்கு.. அதவிட வருசம் வருசம் வளர வெட்டுறதாம்.. சளி கட்டிக்கும் தோல் சதைகளால் ஆன கட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் யாழ்ப்பாண டொக்ரேர்ஸ் அதை வெட்டி கொழும்புக்கு அனுப்ப கொழும்பு வைதியசாலை ஆய்வுகூடத்தில்கூட சளிக்கட்டிக்கும் தோல் கட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் பரிசோதனை செய்து ரிசல்டும் வந்திருக்கு.. எங்கட பக்கத்து வீட்டு சின்னப்பொடியனுக்கே தெரியும் காறித்துப்புற சளிக்கட்டிக்கும் வெட்டி எடுக்குற தோல்கட்டிக்கும் வித்தியாசம்,, அந்த கட்டிய இவர் சளி கட்டி கட்டியா இருக்கு எண்டு கரச்சவராம்.. கெட்ட கோவம் வருகுது.. பிரண்ட்ஸ் படத்தில நேசமணிய லேபர் கோவாலு அடிச்ச கட்டையால அடிக்கவேணும்..

9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சாமியாருட்ட சாத்திரம் பாக்க ஆயிரம் பேர் வருவாங்கள்.. மூண்டு பேருக்கு சரியா வந்திடும்.. 997 பேருக்கு பிழைச்சுபோம்.. 997 பேரும் அத விட்டிட்டு அடுத்த வேலை பாக்க போயிடுவாங்கள்.. ஆனா இந்த மூண்டு பேரும் ஊர் முழுக்க தம்பட்டம் அடிச்சு இன்னொரு முன்னூறு பேர் சாத்திரி வீட்ட போயிடுவானுகள்.. அதில ஒரு மூண்டு தேறி இன்னொரு முன்னூறை அனுப்பும்.. சாத்திரம் பிழைச்ச 297 அதை மறந்திட்டு இல்லா சாமியாருக்கு வீட்டில தூசணத்தால ஏசிப்போட்டு அடுத்த வேலை பாக்க போயிடுவாங்கள்..

புலவரின் கருத்தும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே, ஆனால் ஏழை நோயாளிகளுக்கு எல்லாவற்றையும் யோசிக்க முடியாது தானே?! 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

முயன்று பார்க்கிறேன் அண்ணை.
எங்கட கிராம வைபர் குறூப்பில் இந்த வீடியோ வந்தது. என்னையும் போய்க் காட்டச் சொல்லி ஊரிலயும் வெளிநாட்டிலயும் இருந்து பிறசர் குடுக்கினம்! முதல்ல போன்ல விடயத்தைச் சொல்லிக் கேட்டுவிட்டு பிறகு நேர போற எண்ணம்.

பார்த்து செய்யவும். முன்னர் ஒரு முறை இப்படியான ஆட்கள் கண்டபடி போட்டு அமுக்கி அதில் வந்த வேதனை பற்றி எழுதி இருந்தீர்கள்.

இந்த வீடியோவை எனக்கு சில நாட்கள் முன் வட்சப்பில் அனுப்பி இருந்தார்கள் (சயாடிக்கா நோவுக்கு). இதை பார்த்த போது நீங்கள் எழுதியதுதான் நியாபகம் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பார்த்து செய்யவும். முன்னர் ஒரு முறை இப்படியான ஆட்கள் கண்டபடி போட்டு அமுக்கி அதில் வந்த வேதனை பற்றி எழுதி இருந்தீர்கள்.

இந்த வீடியோவை எனக்கு சில நாட்கள் முன் வட்சப்பில் அனுப்பி இருந்தார்கள் (சயாடிக்கா நோவுக்கு). இதை பார்த்த போது நீங்கள் எழுதியதுதான் நியாபகம் வந்தது.

படிப்படியாக குறைந்து செல்லும் எனது உடலின் இயங்குநிலையை மீட்டெடுப்பது கடினம் என்றாலும் மேலும் பலவீனமாகாமல் தடுக்க முடியாதா எனும் நப்பாசை தான் அண்ணை.

அறிவுறுத்தலுக்கு நன்றியண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பல குறுஞ்சுருளொளிகள்..சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. பெண்களையும் போட்டு நசுக்கி எடுக்கிறார்கள் இப்படியான ஆண்கள்.

உடல் உபாதை தீருதோ.. இல்ல வேறு நோக்கங்கள் தீருதோ தெரியாது.. சமூக ஊடகங்களின் தாக்கம் இதில் இருக்க வாய்ப்பிருக்குது.

எனவே இதனை ஒரு வைத்திய நடைமுறையாக கருதி செயற்படுவதை விட.. இதில் உங்களின் சொந்த முன்னெச்சரிக்கை சார் முடிவோடு இயங்குவதே சிறப்பு. சாதக பாதக விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது நம்புறதா இல்லையா என்று தெழரியாமல் கிடக்கு மேசையில் இருக்கும் போத்தல்களில் இருக்கும் மருந்தை எடுத்து பையில் போட்டுக் கொடுக்கிறார். எல்லா வருத்தங்களுக்கும் ஒஆர மருந்துகள் வேலை செய்யுமா?வருத்தம் வந்தவர்கள் கொஞ்சக் காசுதானே என்று யே்ப் பார்க்கிறதில் தப்பில்லை என்று தோன்றுகிறது. குணமானால் நல்லதுதானே. இப்படி 4 பேர்இருந்தால் ஆஸ்பத்திகளை இழுத்து மூட வேண்டி வருமே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

படிப்படியாக குறைந்து செல்லும் எனது உடலின் இயங்குநிலையை மீட்டெடுப்பது கடினம் என்றாலும் மேலும் பலவீனமாகாமல் தடுக்க முடியாதா எனும் நப்பாசை தான் அண்ணை.

அறிவுறுத்தலுக்கு நன்றியண்ணை.

வேறு தெரிவுகள் இல்லை எனும் போது, எதையும் முயன்று பார்ப்பதில் தவறில்லை.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் இப்போ எமக்கு உள்ள விஞ்ஞான அறிவை மட்டும் வைத்து விளங்கி கொள்ள முடியாது.

எனக்கு இரு கேசுகள் தெரியும். இரெண்டுமே auto immune வகை நோய்கள். ஒருவரை கொழும்பில் உள்ள அதியுச்ச வைத்தியர்களும், இன்னொருவரை அமெரிக்கா வரை கொண்டு போயும் - கைவிரித்து, சாவு ஒரு வருடத்தில் என கூறிய நிலையில் pranic healing மூலம் மீண்டு, இன்று வரை வாழ்கிறார்கள், பிள்ளை குட்டியுடன்.

என்னடா பெரிய பகுத்தறிவு பீத்தல் எல்லாம் செய்வானே - இவனே இப்படி எழுதுகிறானே என நீங்கள் நினைக்க கூடும்.

நானும் இதை இறை சக்தி என நம்பவில்லை. ஆனால் இது நடந்தது உண்மை. சும்மா ஒரு நாளில் நடக்கும் கண் கட்டு வித்தை அல்ல, இறுதி முயற்சியாக முயன்று, பலமாத தொடர் “வைத்தியத்தின்” பின் அவர்கள் படிப்படியாக மீண்டதை என் கண்களால் கண்டேன்.

ஓணாண்டி சொல்வது போல்  3/1000 ஆக இருக்கலாம். 2/3 ஐ நான் கண்டிருக்கலாம்.

ஆனால் தலையிடியும் காய்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். வேறு தெரிவுகள் இல்லை என்ற நிலையில் இதை முயற்சித்து பார்க்கலாம்.

நான் அப்படித்தான் செய்வேன்.

பிகு

ஒருவருக்கு சாவு ஒரு வருடம். மற்றையவருக்கு சில வருடம் என ஆங்கில முறை வைத்தியர்கள் சொன்னது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் , நான் இவரை பற்றி அறிந்து இருக்கவில்லை ...ஆனாலும், உயிருக்கு ஆபத்து இல்லாதவிடத்து எதையும் முயற்சித்து பார்ப்பதில் தப்பில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நவீன மருத்துவமும் பாரம்பரிய மருத்துவமும் இணைந்த கூட்டு மருத்து முறை ஒன்றை உருவாக்கினால் நோயாளிகள் மிகுந்த பயனடைவார்கள். இந்த முயற்சியில் தமிழ்நாட்டில் சித்த மருத்துவர் கு.சிவராமன் ஈடுபட்டுள்ளார்.

3 hours ago, nedukkalapoovan said:

இப்படி பல குறுஞ்சுருளொளிகள்..சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. பெண்களையும் போட்டு நசுக்கி எடுக்கிறார்கள் இப்படியான ஆண்கள்.

உடல் உபாதை தீருதோ.. இல்ல வேறு நோக்கங்கள் தீருதோ தெரியாது.. சமூக ஊடகங்களின் தாக்கம் இதில் இருக்க வாய்ப்பிருக்குது.

எனவே இதனை ஒரு வைத்திய நடைமுறையாக கருதி செயற்படுவதை விட.. இதில் உங்களின் சொந்த முன்னெச்சரிக்கை சார் முடிவோடு இயங்குவதே சிறப்பு. சாதக பாதக விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு. 

உங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி சகோதரா.

2 hours ago, புலவர் said:

என்னப்பா இது நம்புறதா இல்லையா என்று தெழரியாமல் கிடக்கு மேசையில் இருக்கும் போத்தல்களில் இருக்கும் மருந்தை எடுத்து பையில் போட்டுக் கொடுக்கிறார். எல்லா வருத்தங்களுக்கும் ஒஆர மருந்துகள் வேலை செய்யுமா?வருத்தம் வந்தவர்கள் கொஞ்சக் காசுதானே என்று யே்ப் பார்க்கிறதில் தப்பில்லை என்று தோன்றுகிறது. குணமானால் நல்லதுதானே. இப்படி 4 பேர்இருந்தால் ஆஸ்பத்திகளை இழுத்து மூட வேண்டி வருமே. 

இவரை சித்தர் என்று காணொளியில் கூறுகின்றனர். மாதத்தில் 5 நாட்கள் மானிப்பாய் தோட்டவெளிக்கு வருவதாக குறிப்பிட்டார்கள்.

14 minutes ago, ரதி said:

ஏராளன் , நான் இவரை பற்றி அறிந்து இருக்கவில்லை ...ஆனாலும், உயிருக்கு ஆபத்து இல்லாதவிடத்து எதையும் முயற்சித்து பார்ப்பதில் தப்பில்லை 

நன்றி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஏராளன்.. எனக்கு உங்களுக்கு உடல்நிலை நன்றாக இல்லை என்பது இன்றுதான் தெரியும்.. கோசான் எழுதியதை வைத்து பார்க்கும்போது auto immune வகை நோய் நிலை என்று நினைக்கிறேன்.. இந்த வகை நோயால்தான் சமந்தாவும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து முக்கால்வாசிக்கும் மேல் மீண்டுவிட்டார் எண்டு நினைக்கிறேன்.. உங்கள் பிரச்சினையை விளக்கமாக எழுதினால் இங்கு யாழ்கள உறவுகள் நமக்கு தெரிந்ததை தெரிந்த மருத்துவ இடங்களை சொல்ல முடியும்.. இது குறித்து உதவ முடியும் என்றால் ஒன்றினைந்து உங்களுக்கு உதவமுடியும் உறவே..

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி புலவரே.
எனது நோய்நிலை தசை பலவீனம்{Muscular dystrophy (MD) refers to a group of genetic diseases that cause progressive weakness and degeneration of skeletal muscles. These disorders (of which there are more than 30) vary in age of onset, severity, and the pattern of the affected muscles} ஆதல். இது ஒரு பரம்பரை நோய்நிலை என நவீன மருத்துவர்கள் கூறுகிறார்கள். நானும் எனது தம்பியும் பாதிக்கப்பட்டுள்ளோம். பெரியம்மாவின் 2 ஆண் பிள்ளைகள்(அண்ணாக்கள்) பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருவரில் மூத்த அண்ணா 56 வயதில் திடீரென காலமாகிவிட்டார்.

1998 இல் யாழ் போதனா வைத்தியசாலையில் 2 நாட்கள் வார்ட்டில் தங்கி ஸ்கான் பரிசோதனையின் பின் இதயத்தசையில் பிரச்சனை இல்லை என்று டொக்ரர் திருமதி நாகேந்திரா அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது என்னைப் பொறுப்பெடுத்த வைத்திய நிபுணர் மகேசன் அவர்கள் என்னுடைய நோய்நிலை LGMD எனத் தெரிவித்தார்.

தற்போது நரம்பியல் நிபுணர் டொக்ரர் ஜீவகன் அவர்களின் உதவியால் சிங்கப்பூர் நரம்பியல் நிபுணர் யாழ் போதனா வைத்தியசாலையில் பரிசோதித்து பின்னர் இரத்த மாதிரிகளைப் பெற்றுச் சென்றார். இதனால் எமது நோய்நிலை என்ன பிரிவு என துல்லியமாக தெரிய வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் ஒரு காணொளி வெளிவந்திருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

முயன்று பார்க்கிறேன் அண்ணை.
எங்கட கிராம வைபர் குறூப்பில் இந்த வீடியோ வந்தது. என்னையும் போய்க் காட்டச் சொல்லி ஊரிலயும் வெளிநாட்டிலயும் இருந்து பிறசர் குடுக்கினம்! முதல்ல போன்ல விடயத்தைச் சொல்லிக் கேட்டுவிட்டு பிறகு நேர போற எண்ணம்.

உங்களுக்கு பல அனுபவங்கள் இருக்கிறபடியால் போய் கொஞ்ச நேரம் பேசினாலே நிலமைகளை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

எனவே ஒருமுறை போய்த் தான் பாருங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

மேலும் ஒரு காணொளி வெளிவந்திருக்கிறது.

இவர்கள் இயற்கை ( youtube family) உபாதைக்கு போவதை மட்டும்  தான் பப்ளிக்கில் போடமல் இருக்கிறார்கள்..காலப் போக்கில் அதுவும் போடுவார்கள்..🤑

  • கருத்துக்கள உறவுகள்

நோய் குணமாகா விட்டாலும் பின் விளைவுகள் இல்லை என்பதாலும் செலவு குறைந்தது என்பதாலும் வழமையான சிகிச்சையுடன் இவருடைய சிகிச்சையைுயும் முயன்று பார்ப்பதில் தவறில்லை. மேலும் இவர் வர்மக்கலை மூலம் நோய்களைக் குணப்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். வர்மக்கலையை எல்லோராலும் கற்று விட முடியாது. வர்மக்கலை நரம்புகளைத் தூண்டுவதன் மூலம் உடலில் மந்த நிலையில் உள்ள சுரப்பிகளைத் தூண்டுவதன் மூலம் நடைபெறுகிறது என்று நினைக்கிறேன்.உதாரணமாக ஒருவருக்கு இன்சுலின் சுரப்பது குறையுமாயின்  அவருக்கு இன்சுலின் வெளியிலிருந்து ஏற்றப்hடுகிறது. வர்மக்கலையில் நரம்புகளைத்தூண்டுவதன் மூலம் இன்சுலின் சுரப்பியை த்தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்யப்படுகிறது. அக்குபங்சர் சிகிச்சையும் இதனை ஒத்ததே .வர்மக்கலையின் பிந்திய வடிவமே அக்குபங்சர் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, யாயினி said:

இவர்கள் இயற்கை ( youtube family) உபாதைக்கு போவதை மட்டும்  தான் பப்ளிக்கில் போடமல் இருக்கிறார்கள்..காலப் போக்கில் அதுவும் போடுவார்கள்..🤑

அவை ஏற்கனவே உள்ளன. உங்கள் பார்வையில்தான் இன்னும்படவில்லை. 

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

நோய் குணமாகா விட்டாலும் பின் விளைவுகள் இல்லை என்பதாலும் செலவு குறைந்தது என்பதாலும் வழமையான சிகிச்சையுடன் இவருடைய சிகிச்சையைுயும் முயன்று பார்ப்பதில் தவறில்லை. மேலும் இவர் வர்மக்கலை மூலம் நோய்களைக் குணப்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். வர்மக்கலையை எல்லோராலும் கற்று விட முடியாது. வர்மக்கலை நரம்புகளைத் தூண்டுவதன் மூலம் உடலில் மந்த நிலையில் உள்ள சுரப்பிகளைத் தூண்டுவதன் மூலம் நடைபெறுகிறது என்று நினைக்கிறேன்.உதாரணமாக ஒருவருக்கு இன்சுலின் சுரப்பது குறையுமாயின்  அவருக்கு இன்சுலின் வெளியிலிருந்து ஏற்றப்hடுகிறது. வர்மக்கலையில் நரம்புகளைத்தூண்டுவதன் மூலம் இன்சுலின் சுரப்பியை த்தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்யப்படுகிறது. அக்குபங்சர் சிகிச்சையும் இதனை ஒத்ததே .வர்மக்கலையின் பிந்திய வடிவமே அக்குபங்சர் என்று நினைக்கிறேன்.

இவர் கைவைத்தியம் செய்கின்றார்.  இப்படி முன்பு வந்த ஒரு வீடியோவை எனது மருத்துவர் நண்பர் ஒருவரிடம் காட்டி விளக்கம் கேட்டேன். பல கோணங்களில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டினார். 

நாங்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பத்தை பின்பற்றியே பயணிக்கின்றோம். விஞ்ஞானம், தொழில்நுட்பம் துல்லியமானது. அல்லது துல்லியத்தை நோக்கியது. 

இப்படியான வீடியோக்கள் வருவது நல்லது. இல்லாவிட்டால் ஊரில் என்ன நடைபெறுகின்றது, மக்கள் நிலமைகள் ஒன்றும் எமக்கு தெரியாமல் போய்விடும். 

அதேசமயம், மருத்துவதுறை சார்ந்தோரே இப்படியான வீடியோக்களுக்கு விளக்கம் தரவேண்டும். கழுத்தில் எழுபதாயிரம் நரம்புகள் செல்கின்றன என கூறுகின்றார். மின்விளக்கு போன்ற ஒன்றினால் முதுகு பக்கமாக சூடு பிடிக்கின்றார். அவரவர் தமது ஓன் ரிஸ்கில் இவரிடம் செல்கின்றார்கள். 

யூரியூப் வீடியோக்களை பார்த்து உணர்ச்சி அடைகின்றோம். அறிவுதான் உணர்ச்சி அளவுக்கு வேலை செய்யவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.