Jump to content

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார் !

Recommended Posts

யாழ் மாநரசபை முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் ஊடக சந்திப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்!

adminOctober 4, 2023
32-2.jpg?fit=720%2C405&ssl=1

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (04.10.23) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவு வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2023/195700/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2023 at 04:39, தமிழ் சிறி said:

புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா

 நீதிபதி தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை தனது ராஜினாமா கடிதத்தில் தெளிவாக விவரித்துள்ளார், அதற்கான ஆதாரங்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் நடந்தேறி சாட்சி பகர்கின்றன. அப்படியிருக்க, அவர் சொல்லாத காரணத்தை சரத் வீரசேகர எப்படி தேடிப்பிடித்து, சொல்வதன் தேவையென்ன? அவர் கூறிய அந்த காரணத்தை விளங்கிக்கொள்வதில் வீரசேகரவுக்கு இருக்கும் பிரச்சனையா? அல்லது அவரை அப்படி வெளியேற்றவேண்டும் என அவரை குறிவைத்து வீரசேகர செயற்பட்டாரா? எந்த விளக்கத்திற்கும் காத்திராமல், அவர் ஏன் அந்த காரணத்தை விழுந்தடித்துக்கொண்டு சொல்கிறார் என வீர சேகரதான் விளக்க வேண்டும்? அப்படியென்றால் நீதிபதிக்கு இங்கு வாழ்வதற்கான சூழல் பாதுகாப்பில்லை என இவரே இதை செல்வதன்மூலம் ஒத்துக்கொள்கிறாரா? அல்லது அவரை சுயமாக தொழிற்பட விடமாட்டேன் என்கிறாரா?

19 hours ago, nunavilan said:

அரசியலமைப்பின் பிரகாரம், தன்னை அச்சுறுத்திய நபருக்கு அழைப்பாணை விடுத்து அவரை மன்றுக்கு முன் ஆஜராக செய்யவும் அல்லது பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரமும் அவருக்கு உள்ளது.

ரொம்பத்தான் பகிடி விடுகிறார் நீதியமைச்சர். தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என அவர் வெளியேறுகிறார் என்றால் இங்கு நீதிக்கு இடமில்லை, சட்டத்திற்கு மதிப்பில்லை என்கிறதுதானே அர்த்தம்! அப்படி ஒன்று நாட்டில் இருந்திருந்தால் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் காட்டுக்கத்தல் கத்தியிருப்பாரா? பிக்குகள் தெருவில் நின்று சன்னதம் ஆடியிருக்கத்தான் முடியுமா? குற்றவாளிகளை விடுவிக்காவிட்டால் நாட்டில் கலவரம் வெடிக்குமென்று நீதிபதியை அச்சுறுத்தி குற்றவாளிகளை போலீசார் விடுவிக்கத்தான் முடிந்திருக்குமா? இதுவே தமிழர் செய்திருந்தால், சட்டம் சும்மா இருந்திருக்குமா?  நாட்டில் சட்டம் நீதி இருக்கென்று கனவு காண்கிறாரா இவர்? சற்றுப்பொறுங்கள்! மக்களே சட்டத்தை கையில் எடுத்து உங்களுக்கு சட்டமென்றால் என்ன? நீதியென்றால் என்ன என்று காண்பிப்பார்கள்!

19 hours ago, nunavilan said:

நீதிபதி சம்பந்தமான விவகாரத்தில் தலையிட அரசாங்கத்திற்கு எதுவித அதிகாரமும் இல்லை. நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கே இதைக் கையாளும் அதிகாரம் உள்ளது.

15 hours ago, ஏராளன் said:

2005, 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் நீதியரசர் ஸ்ரீநிதியை இராணுவ வாகனத்தின் ஊடாக கொலை செய்யும் முயற்சி எடுக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க வலுக்கட்டாயமான முறையில் பதவி நீக்கப்பட்டார். இந்த நாட்டில் நீதி இல்லை என்பதற்கு பல விடயங்கள் சான்று பகர்கின்றன. படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராசசிங்கம் உட்பட பல தலைவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுக்கும், கொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு தொண்டர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.

வழங்கிய கட்டளையை மீளப்பெறுமாறு சட்டமா அதிபர் விடுத்த அழுத்தத்தினால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

 ஹிஹி.... பாவம் நீதியமைச்சர், நாட்டில், நீதியமைச்சில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை அவருக்கு. தமிழ் நீதிபதிகளை அச்சுறுத்தி தமக்கு சாதகமான தீர்ப்புகளை பெற்று அவர்களை வைத்தே போர்க்குற்ற விசாரணைகளை செய்து தமிழருக்கு அநிஞாயம் செய்ய நினைத்திருப்பார்கள், ஆனால் அந்த எண்ணத்தை  தவிடு பொடியாக்கியுள்ளார் நீதிபதி சரவணராஜா. பிழையான தீர்ப்பை வழங்கி தன் மக்களுக்கும், மனசாட்சிக்கும், நீதிக்கும் தவறிழைக்காமல் தமிழரின் துர்ப்பாக்கிய நிலையை உலகுக்கு வெளிபடுத்தியிருக்கிறார் தனது ராஜினாமா மூலம், இது பாராட்டத்தக்கது! மக்களாலேயே தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் விலைபோகும்போது, சிங்களத்திடம் சம்பளம் பெறும் ஓருவர் துணிந்து எடுத்த முடிவு சிங்களத்தின் நீதியை உலகுக்கு துகிலுரித்துக்காட்டியது வரவேற்கத்தக்கது. எத்தனை நாட்கள் தூங்காத இரவுகளாய் கழித்திருப்பார் இவர்? மரணத்துக்காய் காத்திருந்திருப்பார்? இனியென்ன? நீதிபதி இளஞ்செழியனை நியமிப்பார்கள், சிங்களத்தின் அபிமானம் பெற்றவர் இவர். பொறுத்திருந்து பாப்போம்! சரத் வீரசேகர நீதிபதி சரவணராஜாவை மனநோயாளி என விமர்சிக்கும்போது இளஞ்செழியனை புகழ்ந்து கருத்து தெரிவித்திருந்தார். இவர் தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்குவார் என நினைக்கிறார். அவர் அப்படி செய்யாவிட்டால், சரவண ராஜாவின் நிலையே இவருக்கு மட்டுமல்ல எந்த தமிழ் நீதிபதிக்கும் நடக்கும். நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் சிங்கள புலனாய்வாளரின் தாக்குதலாக இருக்குமோவென சந்தேகமாக இருக்கிறது நடப்பவற்றை வைத்து நோக்கும்போது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் : நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை

news-01-17.jpg

முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக விசாரணை குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் நீதிச் சேவைகள் சங்கம் நேற்று(03) பிரதம நீதியரசரை சந்தித்து கடிதமொன்றை கையளித்திருந்தது.

சம்பவத்திற்கான காரணத்தையும் பொறுப்புக்கூற வேண்டியவர்களையும் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிச் சேவைகள் சங்கம் குறித்த கடிதத்தினூடாக பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

https://thinakkural.lk/article/275520

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஆணைக்குழுவை வைத்தே பலரை சிறிலங்கா அரசு ஏமாற்றுகிறது.

தன்னைத்தான் ஏமாற்றுகிறது! உடனே அதை அமைத்து விடுவார்கள், முடிவு மட்டும் வராது. வெளியில் இருந்து வந்தால் வசை பாடுவது வழமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விவகாரம்: மனம் திறந்தார் சரத்வீரசேகர

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விவகாரம்: மனம் திறந்தார் சரத்வீரசேகர

முல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால், என்னை அந்த நேரத்திலேயே கைது செய்திருக்கலாம் என  நாடாளுமன் உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பாக  நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”2 ஆயிரம் வருடங்கள் பழைமையான எமது பௌத்த புராதானச் சின்னத்தில், பொங்கல் வைத்து வழிபட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. அப்போது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு நீதிபதியுடன் பேசிய காரணத்தினால், நானும் எனது கருத்துக்களை முன்வைக்க நீதிபதியிடம் அனுமதி கேட்டிருந்தேன்.

எனினும், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.நான் முன்னாள் இராணுவ அதிகாரி என்பதாலும், எனக்கு சட்டங்கள் தெரியும் என்பதாலும், நீதிபதியொருவர் கருத்து வெளியிட மறுத்தமையால், நானும் அமைதியாகிவிட்டேன். நாடாளுமன்றிலும், குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த அனுமதியளித்தமை தவறு என்றும் இது இந்து- பௌத்த மக்களிடையே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றுதான் கூறியிருந்தேன். இதனை நான் இன்றும் கூறுவேன். இது எப்படி அச்சுறுத்தலாகும்?

அந்த சம்பவத்திற்குப் பின்னர் நான் குறித்த நீதிபதியை சந்திக்கக்கூட இல்லை.முல்லைத்தீவு, நீதிபதிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் 5 வழக்குகள் உள்ளன.இந்த வழக்குகள் தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாக தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சட்டமா அதிபரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், அவரது தீர்ப்பை மாற்றுமாறு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது தெரிவித்துள்ளது.

அப்படி அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தால், அவர் இதுதொடர்பாக பிடியாணையொன்ற பிறப்பித்திருக்கவும் முடியும்.
அவர் வெளிநாடு செல்வதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக, அவரது வாகனத்தை விற்பனை செய்து, வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவரை அவர் சந்தித்துள்ளார்.பொலிஸ் பாதுகாப்பும் அவருக்கு குறைக்கப்படவில்லை என பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவரது மனைவியோ, இவரால் தனக்கு தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுவதாக நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையே அளித்துள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸிலும், இதுதொடர்பாக அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார். இதில், குறித்த நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் மனநல வைத்தியர்கள், இவருக்கு வைத்தியம் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நீதிபதி கூறுவாராயின், அது யாரால் என்பதை அவர் வெளிப்படையாகக் கூறவேண்டும். ஜனாதிபதி, பொலிஸ் அமைச்சர் உள்ளிட்டோர், இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்ய குழுக்களை நியமித்துள்ளனர்.

இந்தக் குழுக்கள் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை செய்து, உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று நாமும் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1352326

######################    #####################   #################

தீவிரமடைந்து வரும் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்!

தீவிரமடைந்து வரும் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக  நீதிச்சேவை ஆணைக்குழுவினால்  விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கான காரணங்கள் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தொடர்பாக ஆராய்ந்து நீதிமன்ற செயல்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை களைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதிச்சேவை ஆணைக்குழு, பிரதம நீதியரசரிடமும்  நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

https://athavannews.com/2023/1352325

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் : நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை

கொஞ்ச காலத்துக்கு முன்பு கைதுப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் புகுந்து தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் ஒரு அமைச்சர் மிரட்டினாரே அந்த விசாரணை என்னாச்சு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

முல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால், என்னை அந்த நேரத்திலேயே கைது செய்திருக்கலாம்

8 hours ago, தமிழ் சிறி said:

முல்லைத்தீவு பொலிஸிலும், இதுதொடர்பாக அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார். இதில், குறித்த நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் மனநல வைத்தியர்கள், இவருக்கு வைத்தியம் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதிசேவையிடம் கேட்கவேண்டிய கேள்வி இதற்கு பதிலளிக்க முடியாவிடில் அதன் விசாரணைகளும் கேள்விக்குரியதே. உங்களுக்கு சார்பான தீர்ப்புகளை தர மறுத்தவர்களை மனநோயாளிகள் என வர்ணிக்கும் மனநோய் உங்களுக்கு உண்டு.

9 hours ago, தமிழ் சிறி said:

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”2 ஆயிரம் வருடங்கள் பழைமையான எமது பௌத்த புராதானச் சின்னத்தில், பொங்கல் வைத்து வழிபட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

ஆமா..... அதுக்கு முந்திய பழமை வாய்ந்த பௌத்த புராதன சின்னங்கள் இந்தியாவில் இருக்கிறது, ஏன் அங்கு போய் நீங்கள் உரிமை  கோர முடியாது உங்களுக்கு? பௌத்தம் என்றால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட யார் சொல்லித்தந்தது உங்களுக்கு? பௌத்தம் இந்தியாவில் இருந்து வந்தது, தமிழர் இந்தியாவில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என்கிறீர்கள், அவர்கள் அதை கொண்டு வந்திருக்கலாம், அவர்களுக்காக கொண்டு வந்திருக்கலாம், ஏனெனில் சங்கமித்தை வந்திறங்கியது தமிழரின் பூர்வீக நிலத்திலேயே. அன்றுவரை அது எங்கள்பிரதேசமென நீங்களும் ஒப்புக்கொண்டு எங்களை அவ்விடம் நோக்கி துரத்தியடித்தீர்கள், இப்போ அடாவடி பண்ணுகிறீர்கள். இப்போ கூறுங்கள், ஆருக்கு மனநோய் என்பதை. தமிழர் வந்தேறு குடிகள் அவர்களுக்கு இந்த நாட்டில் இடம் இல்லை எனும்போது வந்தேறிய புத்தரை உங்களுடையது என்று மட்டும்  சொந்தம் கொண்டாடும்  பிடிவாதம் எப்படி என்று விளங்கவில்லை.   

Link to comment
Share on other sites

யாழில் இடம்பெற்ற மனித சங்கிலி போராட்டம் ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தலை கண்டித்து.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது!

adminOctober 5, 2023
Mullai.jpg?fit=1170%2C761&ssl=1

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (04.10.23) இரவு தமிழ் தேசிய கட்சிகளான 07 கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

அடுத்த கட்ட போராட்டமாக ஹார்த்தலை அறிவிக்கலாம்  என சிலர் கருத்து தெரிவித்த போதிலும் , அது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுத்து நாளைய தினம் வெள்ளிக்கிழமை அடுத்த கட்ட போராட்டம் தொடர்பிலான அறிவிப்பை அறிவிக்கப்படும்  என கூறி கூட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.

நீதிபதிக்கு நீதி கோரி நேற்றைய தினம் புதன்கிழமை (04.10.23) காலை யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
https://globaltamilnews.net/2023/195734/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவித அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை என்கிறது CID!

adminOctober 12, 2023
Saravanarajah.jpeg?fit=600%2C400&ssl=1

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் , அவரது திடீர் வெளிநாடுப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25ஆம் தேதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, செப்டம்பர் 24ஆம் தேதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

குறித்த சம்பவத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஏதேனும் குழுக்களின் செல்வாக்கு இருக்கிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உயிரச்சுறுத்தல் காரணமாக நீதிபதி சரவணராஜா பதவியை இராஜினாமா செய்தது தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
 
https://globaltamilnews.net/2023/195973/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இதைத்தான் சொல்லுவியளெண்டு எல்லாருக்கும் தெரியும் தானே. இதுக்கேன் மக்கள் பணத்தில் விசாரணையெண்டு வெள்ளையும் சொள்ளையுமா அலையுறியள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரமடைந்து வரும் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்!

முல்லைத்தீவு முன்னாள் நீதவானுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை : சி.ஐ.டி. வழங்கிய முழுமையான அறிக்கை

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு சென்றமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு செப்டம்பர் 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவணராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அவை குறித்து விசாரணை நடத்திய குற்றபுலனிவு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜா 2021 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நீதவானாக நியமிக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் முகவர் ஒருவர் ஊடாக விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டது என்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அமெரிக்காவில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த தொலைபேசி எண் செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ம் திகதி இலங்கை திரும்புவதற்கு டிக்கெட் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதவான் விமான டிக்கெட்டை பயன்படுத்தவில்லை என்பது விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதியின் வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவரது ஆவணத்தில் நைரோபியே அவரது இலக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் சேவையிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய இரண்டு அதிகாரிகளும், உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புக்காக 12 மணித்தியாலங்கள் உட்பட தினமும் நான்கு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேலும் நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள் பிரேமன், பாதுகாப்பு போதுமானதாக இல்லை என நீதிபதி ஒருபோதும் கூறவில்லை என்றும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி தம்மிடம் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

நீதிபதி வெளிநாடு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனது காரை விற்றுவிட்டு செப்டம்பர் 23ஆம் திகதி வெளிநாடு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றில் கடமையாற்றி வரும், தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என நீதிமன்றப் பதிவாளர் கூறியுள்ளார்.

இதேவேளை தனது கணவர் நீதிபதி என்ற முறையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு இல்லாதது குறித்து குறிப்பிட்ட அவர் சமீபகாலமாக அவ்வாறான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தன்னிடம் கூறவில்லை எனவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் தனது கணவர் வெளியேறியதாகவும், அவர் வெளிநாடு செல்வது தனக்குத் தெரியாது என்றும் நீதிபதியின் மனைவி கூறியுள்ளார்.

https://athavannews.com/2023/1353807

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இந்த செய்தியை சரத் வீரசேகராவும் உறுதி படுத்தி இருக்கிறார். உடனடியாகவே நாங்கள் அதட்கு மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டொம். அவர்களில் அவ்வளவு நம்பிக்கை எங்களுக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

”நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை”

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நீதிபதி ரி.சரவணராஜாவுக்குச் சட்டமா அதிபர் அழுத்தம் கொடுத்தார் என்று வெளியாகிய செய்திகள் அடிப்படையற்றவை. அத்துடன் இந்த நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை என்று நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்றும் நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி அதில் உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தான் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகளுக்கு மன அழுத்தம் இருப்பது வழமை. மன அழுத்தத்தால் பதவி விலகுவதாக இருந்தால் இலங்கையிலுள்ள சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும். நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. உரிய தீர்மானத்தை ஆணைக்குழு எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த விடயத்தில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றார்.

http://www.samakalam.com/நீதிபதி-சரவணராஜாவின்-பத/

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.