Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10. அடுத்து ரவுண்டு கட்டப்படுவோர் -அரபு நாடுகள்.  அரபு நாடுகள் காஸாவில் நடப்பதை தடுக்க முடியாத அளவுக்கு ஆண்மையின்மையின் உச்சத்தில் உள்ளனவா? கேள்வி.

(அட ஜவ்வு மாரி இழுக்காம கேமா, கேம் இல்லையா எண்டு சொல்லுங்க நசரல்லா பாய்🤣).

11. காஸாவில் நடப்பது ஏனைய (அரபு-இஸ்ரேலிய) யுத்தங்கள் போல அல்ல. இது ஒரு தீர்க்கமான முடிவை தரும் யுத்தம்.

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

12. அமரிக்காவும், இஸ்ரேலும் விரிவான பிராந்திய யுத்தம் பற்றி கவலை கொள்ளவேண்டும். இது நடக்க கூடியதுதான்.

13. இஸ்ரேல் லெபனான் எல்லையில் எல்லா தெரிவுகளையும் நாம் பரிசீலிப்போம்.

14. நாம் அமரிக்க கப்பல்களை எதிர்கொள்ள தயாராய் உள்ளோம். அமெரிக்கா ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லெபனானில் தனது தோல்வியை நினைவில் கொள்ள வேண்டும்.

14. அக்8 இல் இருந்து நாம் இந்த யுத்தத்தில் ஒரு அங்கமாகி விட்டோம்.

15. பிராந்தியத்தில் உள்ள எதிர்பியங்கள் மீது ஈரானுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை(அப்பனும் குதிருக்குள் இல்லை🤣).

  • கருத்துக்கள உறவுகள்

16. இஸ்ரேலின் கவனத்தை நாம் வடக்கு எல்லையில் இழுத்து வைத்திருப்பது, அதன் கைகளை காஸாவில் கட்டிப்போட்டுள்ளது. தனியே அரசியல் எதிர்ப்பை மட்டும் நாம் வெளியிட்டு இருப்பின். இஸ்ரேல் காஸாவை முழு மூச்சாக தாக்கி இருக்கும்.

17. நாம் knock out வெற்றியை அல்லாமல், points அடிப்படையில் வெல்கிறோம் (பாக்ஸிங் ரசிகர் போல).

டிஸ்கி

நசருல்லா : நீ ஒழுங்கான ரவுடி எண்டா என் ஏரியாவுக்கு வந்து என்னை அடிடா பாப்பம்🤣.

(எல்லையில் சொறிவதை தவிர வேறு எதையும் செய்வோம் என சொல்லவில்லை).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்புலன்ஸை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல் பலர் பலி

03 NOV, 2023 | 08:58 PM
image

காசாவில் கடுமையான காயங்களிற்குள்ளானவர்களுடன் சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.

https://www.virakesari.lk/article/168462

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

8. உலகம் தம்மோடுதானாம். 

9. ஹமாசின் ஆக் 7 நடவடிக்கையை ஆதரிக்க வேண்டியது மனிதாபிமானம் (🤣) உள்ள ஒவ்வொரு உலக மாந்தரினதும் கடமையாம்.

டிஸ்கி

யாழ்கள புட்டின் பிரிகேட்டுக்கு இன்னொரு நாயகன் உருவாகியுள்ளார்

மேற்கு எதிர்ப்பு, அமெரிக்க குலைப்பன், "கிளிசரின் கண்ணீர்" மனிதாபிமானம்  எல்லாம் கலந்து இப்ப புரின் ஆதரவாளர் நசரல்லா விசிறிகளாக மாறப் போகிறார்கள்!

தோல், கண் நிறம் கூட நெருங்கி வந்து விட்டது! ஆனால் ஒரு விடயம் துருத்திக் கொண்டு இடிக்குமே? மதத்தை என்ன செய்வது😂?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

ஆனால் ஒரு விடயம் துருத்திக் கொண்டு இடிக்குமே?

eBay யில் ஓடர் பண்ணிக்கலாம்🤣

https://www.ebay.co.uk/itm/125518778599

  • கருத்துக்கள உறவுகள்

@Justin நசருல்லா பில்டப் கொடுத்து விட்டு - 8ம் திகதி முதல் செய்ததைதான் இனியும் செய்வோம் எண்டு சொல்லி விட்டு கிளம்பி விட்டார்?

ஹாமாசை ஹிஸ்புல்லா ஈரானும் கை கழுவி விட்டனவா? 

ஹூத்திகள், ஈராக்கிய ஜிகாதிகள், ஹிஸ்புல்லா எல்லாரும் அவரவர் நாட்டில் இருந்த படி மட்டுபட்ட தாக்குதலை செய்ய மட்டுமே தயார், களத்தில் இறங்க தயாரில்லை போல கிடக்கு?

உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

ஈயாடக் காணோம்…பிசியா யாழ் களத்தினரே...😀

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

@Justin நசருல்லா பில்டப் கொடுத்து விட்டு - 8ம் திகதி முதல் செய்ததைதான் இனியும் செய்வோம் எண்டு சொல்லி விட்டு கிளம்பி விட்டார்?

ஹாமாசை ஹிஸ்புல்லா ஈரானும் கை கழுவி விட்டனவா? 

ஹூத்திகள், ஈராக்கிய ஜிகாதிகள், ஹிஸ்புல்லா எல்லாரும் அவரவர் நாட்டில் இருந்த படி மட்டுபட்ட தாக்குதலை செய்ய மட்டுமே தயார், களத்தில் இறங்க தயாரில்லை போல கிடக்கு?

உங்கள் கருத்து என்ன?

ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும் நாடுகளின் அரசுகளுக்கே உள்ளூர் நிகழ்ச்சி நிரல், வெளியுலக நிகழ்ச்சி நிரல் எனப் பல திசைகளில் இழுபடும் "அட்ஜஸ்ட்மென்ற் வாழ்க்கை" எனும் போது, ஒரு உருப்படியான இலக்கும் இல்லாமல் "கொல்,ஒளித்திரு, கொல்" என்றிருக்கும் பயங்கரவாதக் கும்பல்களுக்கு எவ்வளவு தலையிடிகள் இருக்கும்😂?

பலஸ்தீனர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்ற அக்கறை உண்மையிலேயே அரபுலகில் இருந்திருந்தால், 1993 இலிருந்தே கப்பலைத் திருப்பியிருக்க முடியுமே இந்த நாடுகளால்? ஏன் முடியவில்லை? சவூதி ஒரு திசை, ஜோர்தான் , எகிப்து இன்னொரு திசை என்று அவர்கள் பாடு தான் அவர்களுக்கு முக்கியம். கிளின்ரனும், ராபினும், நோர்வேயும் பலஸ்தீனருக்குச் செய்த நன்மைகளை விடக் குறைவாகத் தான் அரபு சக்திகள் செய்திருக்கின்றன.  

இன்னொரு பக்கம், அமெரிக்கா மறைமுகமாகக் கூட தங்கள் மீது பாய்ந்து விடக் கூடாதென்ற அக்கறையும் இந்தப் பயங்கரவாதக் குழுக்களுக்கு இருக்கிறது. இப்படி தீய வன்முறைச் சக்திகளை ஒடுக்கி வைக்க அமெரிக்கா, நேட்டோ, AUKUS போன்றவை தேவை தான்!

Edited by Justin
எழுத்துப் பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்+

என்னப்பா மெர்காவா இப்பிடிப் பறக்குது, உருசிய தகரிகள் மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Justin said:

அண்மையில் எகிப்தின் பிரதமர் கூறி இருந்தார் -  மில்லியன் கணக்கில் மக்கள் இழப்பு ஏற்பட்டாலும் காஸா அகதிகள் எமது எல்லையை கடப்பதை தடுப்போம் என. எல்லை தாண்டும் அகதிகள் பற்றி, டிரம்ப்போ, ஃபராஜோ, ஓபனோ கூட எடுக்காத கடும் போக்கு இது.

இஸ்ரேலின் இனச் சுத்தீகரிப்பை ஊக்குவிக்க கூடாது என்பதை ஒரு காரானமாக கருதினாலும், அதை விட, தமது நாட்டில் 2 மில்லியன் பலஸ்தீனர்கள் வந்தால் ஏற்படும் அரசியல் குழப்பமே அவர்களுக்கு முக்கியமாக தெரிகிறது.

அதே போலவே இப்போ ஹிஸ்புல்லாவும், ஈரானும் கூட.

நேரடியாகவே நசருல்லா இஸ்ரேலை ஒரே அடியில் (நாக் அவுட்) பண்ணும் இயலுமை தம்மிடம் இல்லை என சொல்லி களத்தில் இறங்குவதில் இருந்து தவிர்ந்து கொண்டுள்ளார்.

ஹமாசை பப்பாவில் ஏற்றி விட்டு - இப்போ எல்லாரும் விலகுவது போலவே படுகிறது.

அடி பாவம் அப்பாவி பலஸ்தீனருக்கே.

இனியாவது இந்த “இஸ்ரேலை வழித்தொழிப்போம்” பேர்வழிகளை நம்பாமல் இரு நாடு முடிவுக்கு பலஸ்தீன மக்கள் ஃபட்டா மூலம் செல்ல வேண்டும்.

————

நசருல்லாவுக்கு ஒரு ஹமாஸ் ஆதரவாளரின் எதிர்வினையாம் (தரவு/ஆதாரம் என்பதாக இல்லை just anecdotal).  

#சப்பல் ஷாட்

#ஜார்ஜ் புஷ் 🤣

  • கருத்துக்கள உறவுகள்+

இதை விட நேற்றும் ஒன்று பாத்தேன். ஒரு கவச ஆளணி காவி அப்படியே சிதறி 11 இஸ்ரேலிய படைவீரர்கள் கொல்லப்பட்டனராம். 
 
Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நன்னிச் சோழன் said:

என்னப்பா மெர்காவா இப்பிடிப் பறக்குது, உருசிய தகரிகள் மாதிரி.

Expanding foam போல ஒரு புதிய ஆயுதத்தை இஸ்ரேல் பாவிக்கிறதாம். சுரங்க ஓட்டைகளை கண்டு பிடித்து முதலில் உள்ளே ஒட்சிசனை உறிஞ்சும் குண்டுகள் ஏவப்படுமாம். பின்னர் இந்த புதிய ஆயுதத்தை ஏவினால் அது விரிந்து கொண்டே போய் கிட்டதட்ட ஒரு கிமி நீள சுரங்கத்தை அப்படியே கல்லுப்போல இறுக்கி விடுமாம்.

ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. 

எழுதியவரின்  கற்பனையோம் தெரியாது 🤣.

Edited by goshan_che
Form - foam

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இஸ்ரேலுக்கு 14.3 பில்லியன் டாலர் கொடுக்கிறது

ஆனால் உக்ரேனுக்கு பின்னர் பார்ப்போம் என்று இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா இஸ்ரேலுக்கு 14.3 பில்லியன் டாலர் கொடுக்கிறது

ஆனால் உக்ரேனுக்கு பின்னர் பார்ப்போம் என்று இருக்கிறார்கள்.

உக்ரேனுக்கு கோவிந்தா கோவிந்தா தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, kalyani said:

உக்ரேனுக்கு கோவிந்தா கோவிந்தா தான்.

இனிமேல் உக்கிரேனுக்கான அமெரிக்க உதவிகள் கேள்விக் குறியே.

அமெரிக்கா உதவாவிட்டால் மற்றைய நாடுகளும் செத்த நாயில் உண்ணி கழன்றது போல கழன்று விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்ட மருத்துவ ஊர்தி.

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, goshan_che said:

Expanding form போல ஒரு புதிய ஆயுதத்தை இஸ்ரேல் பாவிக்கிறதாம். சுரங்க ஓட்டைகளை கண்டு பிடித்து முதலில் உள்ளே ஒட்சிசனை உறிஞ்சும் குண்டுகள் ஏவப்படுமாம். பின்னர் இந்த புதிய ஆயுதத்தை ஏவினால் அது விரிந்து கொண்டே போய் கிட்டதட்ட ஒரு கிமி நீள சுரங்கத்தை அப்படியே கல்லுப்போல இறுக்கி விடுமாம்.

ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. 

எழுதியவரின்  கற்பனையோம் தெரியாது 🤣.

இல்லை, அது மெய்தான். ஆயினும் அது அடிபாட்டில் பாவிக்கப்பட்டுள்ளதா என்பது ஐயமே. மற்றது நீங்கள் சொல்வது போன்று 1கிமீ நீளத்தெற்கெல்லாம் அடைக்காது.

உது ஒரு நெகிழிப் பை போன்ற பொருளாகும். அதற்குள் எஃகால் ஆன ஒரு குச்சி போன்ற பொருளொன்று இருக்கும். அது இப்பைக்குள் இருக்கும் இரு விதமான திரவங்களை பிரித்து வைத்திருக்கும். அதை இழுத்தவுடன் (கைக்குண்டுக்கு இழுவூசியை கழட்டுவது போல்) அத்திரவங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து, நுரை போன்று ஆகி, பெருக்கெடுத்து பெரிதாகி சில நொடிகளில் கட்டியாகி விடும். அது குறிவைத்து எறியப்பட்ட குகைவழியின் வாசலோ அல்லது வழியோ உடனே அடைக்கப்பட்டு விடும். அந்த வழி/வாசலின் அந்தப் பக்கம் உள்ளோர் உள்ளையே அம்பிட்டுவிடுவர். மறுபக்கம் வாசல் இருப்பின் பிழைப்பர், இல்லையேல் 72 கன்னிகளை காண வெளிக்கிட வேண்டியது தான்.

இது நான் கோராவில் வாசித்து அறிந்த விடையம்.

சுருங்கச் சொல்லின் பண்டைய காலத்த்தில் குகைவழிகளை அடைக்கும் இகுப்பங்களின் (boulder) நவீன கால வடிவம்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நன்னிச் சோழன் said:

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இஸ்ரேல் இறைமை உள்ள ஒரு ஜனநாயக நாடு.. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு.. யாருக்கும் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்.. ஆனால் இஸ்ரேல் அப்படி அல்ல.. ஹமாசைபோல அப்பாவி மக்களை கண்ணைமூடிக்கொண்டு கொன்று அளிக்க முடியாது.. ஒரு இறைமை உள்ள ஜனநாயக அரசு அப்பாவி மக்களை கொல்லாமல் மாற்றுவழிகளை கண்டுபிடிக்கவேடும் கமாசை அளிக்க.. இப்படி நீங்கள் எழுதுவது போல் எல்லாம் ஒரு ஜனநாயக நாடு பேசமுடியாது..

பயங்கரரவாதிகளுடனான யுத்தத்தில் பொது மக்களும் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இறைமையுள்ள நாடுகளுடனான யுத்தத்திலேயே மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படும்போது பயங்கர வாதிகளுடனானன யுத்தத்தில் இது ஒன்றும் பெரிதல்ல. அதட்கும் அந்த பயங்கரவாதிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அப்படி இல்லாமல் இஸ்ரவேல்  யுத்த குற்றம் புரிந்ததென்றால் ஐக்கிய நாடுகள்சபை அதனை பார்த்து கொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

@Justin நசருல்லா பில்டப் கொடுத்து விட்டு - 8ம் திகதி முதல் செய்ததைதான் இனியும் செய்வோம் எண்டு சொல்லி விட்டு கிளம்பி விட்டார்?

ஹாமாசை ஹிஸ்புல்லா ஈரானும் கை கழுவி விட்டனவா? 

ஹூத்திகள், ஈராக்கிய ஜிகாதிகள், ஹிஸ்புல்லா எல்லாரும் அவரவர் நாட்டில் இருந்த படி மட்டுபட்ட தாக்குதலை செய்ய மட்டுமே தயார், களத்தில் இறங்க தயாரில்லை போல கிடக்கு?

உங்கள் கருத்து என்ன?

இவர்களெல்லாம் வாயால வடை சுடும் கூடடம். நேற்று  ஒருவர் ஒரு முஸ்லீம் இணையத்தளத்தில் எழுதி இருந்ததை பார்க்கும்போது கவலையாக இருந்தது.  

இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து அடித்தால் அரை மணி நேரத்தில் எல்லோரும் இறந்து  விடுவார்களாம். எனவே அப்பாவி யூத ஜனங்களை பாது காக்க வேண்டுமாம்.

கொலைக்கு கொலை தீர்வாகாதாம். சண்டையிடும் இருவரை பிரித்துவிடுவதைவிட சமரசம் பேசி சேர்த்து வைப்பது அல்லாஹ்வுக்கு பிடித்தமான விடயமாம்.

இப்படியாக அல்லா எல்லாவற்றையும் பார்த்து கொல்லுவாராம் எண்டு நிறைய எழுதிக்கொண்டு போகிறார். விளங்கினால் சரிதான். 

6 hours ago, goshan_che said:

Expanding foam போல ஒரு புதிய ஆயுதத்தை இஸ்ரேல் பாவிக்கிறதாம். சுரங்க ஓட்டைகளை கண்டு பிடித்து முதலில் உள்ளே ஒட்சிசனை உறிஞ்சும் குண்டுகள் ஏவப்படுமாம். பின்னர் இந்த புதிய ஆயுதத்தை ஏவினால் அது விரிந்து கொண்டே போய் கிட்டதட்ட ஒரு கிமி நீள சுரங்கத்தை அப்படியே கல்லுப்போல இறுக்கி விடுமாம்.

ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. 

எழுதியவரின்  கற்பனையோம் தெரியாது 🤣.

அப்படியான ஒரு வகை ஆயுதத்தைபாவிக்கிறார்கள். அவர்களது வலைபின்னாலான சுரங்கத்திட்க்குள் செலுத்துவதன்மூலம் ஹமாஸ் பயங்கரவாதிகளை உயிரோடு சமாதியாக்க போகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

பயங்கரரவாதிகளுடனான யுத்தத்தில் பொது மக்களும் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இறைமையுள்ள நாடுகளுடனான யுத்தத்திலேயே மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படும்போது பயங்கர வாதிகளுடனானன யுத்தத்தில் இது ஒன்றும் பெரிதல்ல. அதட்கும் அந்த பயங்கரவாதிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அப்படி இல்லாமல் இஸ்ரவேல்  யுத்த குற்றம் புரிந்ததென்றால் ஐக்கிய நாடுகள்சபை அதனை பார்த்து கொள்ள வேண்டும். 

மறைமுகமாக விடுதலைப் புலிகளைச் சொல்கிறீர்களோ? 

  • கருத்துக்கள உறவுகள்

396737296_723518303146478_81856220418979

394139181_723897399775235_74669326957630

398669731_723545819810393_33269292265818

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் உள்ள ஐ.நா பள்ளி அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இதற்கிடையே காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

இதற்கிடையே, ஜபாலியா முகாம் மீது 2 ஆவது நாளான நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா பள்ளிக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சின்
செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/280060

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுதாக்குதல்.

கடந்த சில மணித்தியாலங்களில் தெற்கு காசா நகரில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல்களால் அல்-சப்ரா பகுதியில் உள்ள அலி பின் அபி தாலிப் மற்றும் அல்-இஸ்திஜாபா என்ற பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் காசாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து முந்தைய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள பாடசாலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த அகதிகள் முகாம் கடந்த நாட்களில் மூன்று முறை தாக்கப்பட்டுள்ளது என்றும் இந்த புதிய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

அத்தோடு முற்றுகை நடவடிக்கைக்கு மத்தியில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோலர் பொனல்கள் மற்றும் ஜெனரேட்டர்களை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக காசாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2023/1357192

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.