Jump to content

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் மக்கள் பட்டினி; சிறுவர்கள் உயிரிழக்கும் நிலை ; மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுக்கும் இஸ்ரேலியர்கள் - ஏபிசி

Published By: RAJEEBAN   11 MAR, 2024 | 02:50 PM

image

காசாவில் பாலஸ்தீனியர்கள் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள அதேவேளை காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுப்பதற்கான முயற்சிகளில் இஸ்ரேலியர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலிற்கும் காசாவிற்கும் இடையிலான போக்குவரத்து பாதையான கெரோம் சலோமில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் இவர்கள் வீதியின் நடுவில் அமர்ந்து மறியல் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

isreal_pro2.jpg

இதேபோன்று எகிப்திற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான பாதைகளில் அமர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

காசாவில் பட்டினி நிலைமை உருவாகலாம் என மனிதாபிமான அமைப்புகளும் ஐநாவும் எச்சரித்துள்ளன.

ஹமாசிற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து ஐந்துமாதங்களின் பின்னர் இந்த நிலை காணப்படுகின்றது.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள் ஹமாஸ் பணயக்கைதிகளை பிடித்துவைத்துள்ள நிலையில் காசாவி;ற்குள் மனிதாபிமான உதவிகள் செல்லக்கூடாது என தெரிவிக்கின்றனர்.

எங்கள் மக்களை கொலை செய்தவர்களிற்கு அவர்களை பணயக்கைதிகளாக வைத்துள்ளவர்களுக்கு உணவை வழங்கக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் அவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை நாங்கள் ஹமாசிற்கு உணவு வழங்குகின்றோம் எனஅவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரார்த்தனைகளில் ஈடுபடும் பாடல்பாடும் 40 பேர் காசாவிற்குள் செல்லும் பல டிரக்குகளை தடுத்துநிறுத்தியதை பார்த்துள்ளதாக ஏபிசி தெரிவித்துள்ளது.

ஹமாசிடம் பணயக்கைதிகளாக உள்ளவர்களை சகோதரர்கள் என குறிப்பிடும் அவர்கள் அவர்களை மறக்ககூடாது என்கின்றனர்.

israel_protest.jpg

அவர்கள் எங்கள் சகோதரர்களை மீண்டும் தரும்வரைக்கும் நாங்கள் காசாவின் கழுத்தை நெரித்து மூச்சுதிணறச்செய்யவேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏன்நான் அவர்களை பற்றி கவலைப்படவேண்டும் அவர்கள் எங்கள் எதிரிகள் எங்கள் சகோதரர்களை கொலை செய்தவர்கள்என்கின்றார் ஒருவர்.

israel_pro1.jpg

மனிதாபிமான உதவிகளை அவர்கள் எவ்வாறு தடுத்துநிறுத்துகின்றனர்?

ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதும் இஸ்ரேலிய பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற முயன்றனர்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யுவதியை அகற்ற முயன்றார்.

நீங்கள் எதிரியுடன் இணைந்து செயற்படுகின்றீர்களா என அவரின் நண்பியொருவர் கேள்வி எழுப்பினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டங்களை கைவிட மறுத்ததும் பொலிஸார் அவர்களை அகற்றும் முயற்சியை கைவிட்டனர்.

https://www.virakesari.lk/article/178428

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

காஸா போர் நிறுத்தத்தை இன்னும் நெருங்கவில்லை: கட்டார்

Published By: SETHU   12 MAR, 2024 | 06:09 PM

image

காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் இஸ்ரேலும் ஹமாஸும் இன்னும் நெருங்கிவரவில்லை என பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

காஸாவில் போர் நிறுத்ததை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் பலவாரங்களாக முயன்றன.

இதற்காக எகிப்திய தலைநகர் கெய்ரோவில்  பேச்சுவார்ததைகள் நடைபெற்றன. 

புனித ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. 

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இணக்கப்பாட்டை நாம் நெருக்கவில்லை   என கட்டார் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றபோதிலும், அதற்கான போர்நிறுத்தத்துக்கான காலவரம்பு எதனையும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காஸாவில் யுத்தத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31184 ஆக அதிகரித்துள்ளது என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/178555

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரை தீவிரப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு; இஸ்ரேல் அதிரடி

2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், காசாவிலுள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரால் ஏற்பட்டு உள்ள செலவுகளை ஈடுகட்டுவதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், போரை இஸ்ரேல் அரசு தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், காசாவிலுள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரால் ஏற்பட்டு உள்ள செலவுகளை ஈடுகட்டுவதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி, மொத்த பட்ஜெட்டுக்கான தொகை ரூ.13 லட்சத்து 41 ஆயிரத்து 981 கோடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால், ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 868 கோடி செலவினத்தில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் ராணுவ செலவினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

போருக்கான செலவினங்களை ஈடுகட்டுவது மற்றும் ராணுவ அமைப்பை பலப்படுத்துவது என்ற இரண்டு நோக்கங்களும் அடங்கும். இந்த கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீட்டால், 2024-ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.6 சதவீத பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

அதனுடன், 2024 மற்றும் 2025 ஆண்டில் ரூ.46 ஆயிரத்து 389 கோடி அளவுக்கு நிதியானது சரிகட்டப்படும். இதேபோன்று, நாட்டில் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளுக்கும் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

வங்கிகளில் இருந்து கிடைக்கும் லாப தொகைக்கு வரி விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் அடங்கும். இந்த மேம்பட்ட பட்ஜெட்டானது, போருக்கான முயற்சிகளை அமல்படுத்த உதவியாக இருக்கும் என இஸ்ரேல் நிதியமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் ஷ்லோமி ஹெய்ஸ்லர் கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/295706

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிவாரணப் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு

Capture-13.jpg

கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.

கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் இராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காசா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதேபோல் கடைசி நகராக, ரபா நகரை இஸ்ரேல் படை குறிவைத்துள்ளது. ரபா நகரில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை திட்டமிட்டுள்ளது

Capture-1-7.jpg

இதற்கிடையே போரினால் காசாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு சரியான அளவில் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் கிடைக்காததால்,பசி பட்டினியால் வாடுகின்றனர். மக்களுக்கு ஐ.நா. அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இங்கும் கடும் நெரிசல் காணப்படுகிறது.

இந்நிலையில், வடக்கு காசா நகரில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் இன்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில்,6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

https://thinakkural.lk/article/295887

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் மிதக்கும் துறைமுகம் மூலம் நிவாரண உதவிகள் மக்களுக்கு கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

அமெரிக்காவின் மிதக்கும் துறைமுகம் மூலம் நிவாரண உதவிகள் மக்களுக்கு கிடைக்குமா?

அமெரிக்காவில் தேர்தல் வருகின்றதல்லவா.....மிதக்கும் துறை முகம் என்ன பறக்கும் துறைமுகமே உருவாக்குவார்கள். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

2009 இல் வன்னியில் இவ்வாறு நிவாரணத்தை எதிர்பார்த்துநின்ற வேளை பலநூற்றுக்கணக்கானோரை இலங்கை விமானப்படை குண்டுவீசிக் கொன்றது. இன்று இஸ்ரேல் செய்வது அன்று இலங்கை செய்ததைத்தான்.

 மேற்குக் கரையில் அடாத்தாக இஸ்ரேலியர்களைக் குடியேற்றி அவர்களை இராணுவமயப்படுத்துவது போலவே முல்லைத்தீவில் சிங்களவர்களைக் குடியேற்றி இராணுவமயப்படுத்தி வருகிறோம் என்று 1985 இல் இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே கூறியது.

இன்று இஸ்ரேலை ஆதரிப்பவர்கள், உண்மையிலேயே தமிழ் மக்கள் மீதான இனக்கொலையினை ஆதரிக்கிறார்கள் என்றே பொருள். 

இஸ்ரேலும், இலங்கையும் இனவழிப்பில் இணைந்தே செயற்பட்டு வருகின்றன. புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

Edited by ரஞ்சித்
குடியேற்றி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

2009 இல் வன்னியில் இவ்வாறு நிவாரணத்தை எதிர்பார்த்துநின்ற வேளை பலநூற்றுக்கணக்கானோரை இலங்கை விமானப்படை குண்டுவீசிக் கொன்றது. இன்று இஸ்ரேல் செய்வது அன்று இலங்கை செய்ததைத்தான்.

 மேற்குக் கரையில் அடாத்தாக இஸ்ரேலியர்களைக் குடியேற்றி அவர்களை இராணுவமயப்படுத்துவது போலவே முல்லைத்தீவில் சிங்களவர்களைக் குடியேற்றி இராணுவமயப்படுத்தி வருகிறோம் என்று 1985 இல் இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே கூறியது.

இன்று இஸ்ரேலை ஆதரிப்பவர்கள், உண்மையிலேயே தமிழ் மக்கள் மீதான இனக்கொலையினை ஆதரிக்கிறார்கள் என்றே பொருள். 

இஸ்ரேலும், இலங்கையும் இனவழிப்பில் இணைந்தே செயற்பட்டு வருகின்றன. புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

இவ்வளவையும் எம்கெதிராக செய்தவர்களை பலஸ்தீனம் வரவேற்பு மதிப்பு மரியாதை செய்தது. இப்போ யாம் என்ன செய்ய???

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

இவ்வளவையும் எம்கெதிராக செய்தவர்களை பலஸ்தீனம் வரவேற்பு மதிப்பு மரியாதை செய்தது. இப்போ யாம் என்ன செய்ய???

புரட்சி சிங்கங்கள் கியூபாவும் எமக்கு எதிராக ஐ நாவில் வாக்களித்த்தார்கள். யாரின் குற்றம்  அது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

புரட்சி சிங்கங்கள் கியூபாவும் எமக்கு எதிராக ஐ நாவில் வாக்களித்த்தார்கள். யாரின் குற்றம்  அது??

அதே...

எல்லாமே சிங்கங்கள் தான். நாம் பதுங்குவோம். ஒதுங்குவோம். 

Link to comment
Share on other sites

21 minutes ago, விசுகு said:

அதே...

எல்லாமே சிங்கங்கள் தான். நாம் பதுங்குவோம். ஒதுங்குவோம். 

நாங்கள் யாரையும் நண்பராக்காமல் குய்யோ முறையோ என்பதில் பலனில்லை.
சிங்களம் தமிழர்கள்(புலிகள்) முஸ்லிம்களை தமது இடத்தை விட்டு கலைத்து விட்டார்கள் என்று கூறி முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றார்கள் என்பதை நீங்கள் அறியாது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நாங்கள் யாரையும் நண்பராக்காமல் குய்யோ முறையோ என்பதில் பலனில்லை.
சிங்களம் தமிழர்கள்(புலிகள்) முஸ்லிம்களை தமது இடத்தை விட்டு கலைத்து விட்டார்கள் என்று கூறி முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றார்கள் என்பதை நீங்கள் அறியாது அல்ல.

அப்படியானால் கியூபா வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சிங்களம் என்ன சொன்னது? அவர்கள் எதற்காக எமக்கு எதிராக வாக்களித்தார்கள்?? எனவே தவறு நம்மிடம் இல்லை. அவரவர் அரசியலில் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 hours ago, விசுகு said:

இவ்வளவையும் எம்கெதிராக செய்தவர்களை பலஸ்தீனம் வரவேற்பு மதிப்பு மரியாதை செய்தது. இப்போ யாம் என்ன செய்ய???

15 hours ago, விசுகு said:

அதே...

எல்லாமே சிங்கங்கள் தான். நாம் பதுங்குவோம். ஒதுங்குவோம். 

13 hours ago, விசுகு said:

அப்படியானால் கியூபா வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சிங்களம் என்ன சொன்னது? அவர்கள் எதற்காக எமக்கு எதிராக வாக்களித்தார்கள்?? எனவே தவறு நம்மிடம் இல்லை. அவரவர் அரசியலில் இருக்கிறது. 

என்ன விசுகர் நல்லாய்த்தான் குழம்பீட்டியள் போல கிடக்கு 🤣

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு முன்னர் இந்திய ராஜதந்திரிகள்( மேனன்ஸ் அன்ட் நாயர்ஸ்)  ஐரோப்பா,அமெரிக்கா என பறந்து பறந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வாயை மூடியது ஞாபகமில்லையா?

நாங்கள் வீடு வாங்கும் போது அக்கம் பக்கம் நல்ல ஏரியா பார்த்து வீடு வாங்குகின்றோம் அல்லவா? அந்த ஏரியா சரியில்லா விட்டால் அந்தப்பக்கம் தலை வைத்து பார்க்கவே மாட்டோம். 

எம் இனத்தின் தலையெழுத்து கிந்தியா அயல்நாடு.என்ன செய்வது? விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் காலத்தை கடத்துவது ஈழத்தமிழரின் நிலை.

 

 

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இவ்வளவையும் எம்கெதிராக செய்தவர்களை பலஸ்தீனம் வரவேற்பு மதிப்பு மரியாதை செய்தது. இப்போ யாம் என்ன செய்ய???

யார் செய்தாலும் பிழை சரியாகாது 

3 hours ago, விசுகு said:

அப்படியானால் கியூபா வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சிங்களம் என்ன சொன்னது? அவர்கள் எதற்காக எமக்கு எதிராக வாக்களித்தார்கள்?? எனவே தவறு நம்மிடம் இல்லை. அவரவர் அரசியலில் இருக்கிறது. 

எரிக் சொல்ஹெய்ம் கூறியபடி நமக்கு உலக அரசியல் சரிவராது. 

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

அப்படியானால் கியூபா வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சிங்களம் என்ன சொன்னது? அவர்கள் எதற்காக எமக்கு எதிராக வாக்களித்தார்கள்?? எனவே தவறு நம்மிடம் இல்லை. அவரவர் அரசியலில் இருக்கிறது. 

இன்று வரை எமக்குரிய நண்பர்களையும் பலஸ்தீனியர்களின் நண்பர்களையும் (நாடுகளையும்) கணக்கில் எடுங்கள். யார் எங்கு பிழை விட்டோம் என புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் இதுவரை  13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொலை!

07-3.jpg

காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேலிய படைகள் சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக, அல்-ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அறுவைச்சிகிச்சை பிரிவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு குண்டுவீச்சு தாக்குதல்களும் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளன.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பல சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/296160

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

காசாவில் இதுவரை  13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொலை!

07-3.jpg

காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேலிய படைகள் சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக, அல்-ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அறுவைச்சிகிச்சை பிரிவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு குண்டுவீச்சு தாக்குதல்களும் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளன.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பல சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/296160

13000 சிறுவர்களின் பெயர்களை அல்ஜசீரா தனது தொலைக்காட்சியின் பின்புலத்தில் ஓட விட்டுள்ளது.

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர், மொசாட் தலைவர் பேச்சுவார்த்தை

Published By: SETHU   18 MAR, 2024 | 03:46 PM

image

காஸா போர் நிறுத்தம் தொடர்பில், கட்டார் பிரதமர், இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொஸாட்டின் தலைவர் மற்றும் எகிப்திய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தார் பிரதமர் மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, மொசாட் தலைவர் டேவிட் பார்னியா, மற்றும் எகிப்தி அதிகாரிகள் ஆகியார் இன்று கட்டார் தலைநகர் தோஹாவில் எதிர்பார்க்கப்படுவதாக தன்னை அடையாளப்படுத்த விரும்பாத வட்டாரமொன்று ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளது. 

காஸாவில் 6 வார கால போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான  திட்டத்தை  பேச்சுவார்த்தை மத்தியஸ்தர்களான எகிப்து மற்றும் கட்டாரிடம் ஹமாஸ் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைத்திருந்தது. எனினும் அதை இஸ்ரேல் நிராகரித்தது.

இத்திட்டத்தின்படி, 42 நாட்களுக்கு போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும். அக்காலப்பதியில் 42 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும்.

ஒவ்வொரு பணயக் கைதிக்கும் 20 முதல் 50 வரையான எண்ணிக்கையிலான பலஸ்தீன சிறைக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 7 ஆம் திகதி, இஸ்ரேலின் தென் பகுpயிலிருந்து சுமார் 250 பேரை பணயக் கைதிகளாக காஸாவுக்குள் ஹமாஸ் இயக்கம் கொண்டு சென்றது. அவர்களில் சுமார் 130 பேர் காஸாவிலிருந்து விடுவிக்கப்படாதுள்ளனர் என இஸ்ரேல் நம்புகிறது. உயிரிழந்துவிட்டதாக கருதப்படும் 32 பேரும் இவர்களில் அடங்குவர்.

பெண்கள், சிறார்கள், வயோதிபர்கள், நோயாளிகள் முதலில் விடுவிக்கப்படுவர். 

ஆண் சிப்பாய்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை பின்னர் விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புனித ரமழான் நோன்புக்காலம் ஆரம்பமாகுவதற்கு முன்னர் 6 வாரகால போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு மத்தியஸ்தர்கள் முயற்சித்தனர். எனினும், 6 நிரந்தரமான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதுடன், காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படையினர் முழுமையாக வாபஸ்பெற்றால் மாத்திரமே பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என ஹமாஸ்  நிபந்தனை விதித்திருந்தது.

புதிய திட்டத்தின்படி, காஸாவிலுள்ள அனைத்து நகரங்கள் மற்றும் மக்கள் நிறைந்த பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேற வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.

யுத்தத்துக்கு முந்தைய காலத்தில் போன்று தினமும் 500 மனிதாபிமான உதவிப் பொருட்கள் காஸாவுக்கு அனுப்பபட வேண்டும் எனவும் ஹமாஸ் கோரியுள்ளது.

இதேவேளை, காஸாவிலிருந்து தனது படையினரை வாபஸ்பெறுவதற்கு இதுவரை இஸ்ரேல் மறுத்துவருகிறது. அது ஹமாஸுக்கு வெற்றியாக அமைந்துவிடும் என இஸ்ரேல் கூறுகிறது.

போர் நிறுத்தத்துக்கான ஹமாஸின் யோசனைகள் யதார்த்தமற்றை எனவும், ஆனால், கட்டாரில் நடைபெறவுள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு தனது பிரதிநிதிகளை இஸ்ரேலிய அரசாங்கம் அனுப்பும் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு தெரிவித்திருந்தார். 

அண்மையில் எகிப்தில் நடைபெற்ற பேச்சுவார்ததைளுக்கு இஸ்ரேலிய பிரதிநிதிகள் அனுப்பப்படவில்லை.

செப்டெம்பர் 7 ஆம் திகதியிலிருந்து, இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவில் 31,726 பேர் உயிரிழந்துள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு  இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

 https://www.virakesari.lk/article/179048

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை

Published By: RAJEEBAN    19 MAR, 2024 | 10:56 AM

image
 

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர்.

காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய  படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார்.

அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது.

அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179096

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர் பலி: வெள்ளை மாளிகை தெரிவிப்பு

Published By: SETHU   19 MAR, 2024 | 01:25 PM

image

ஹமாஸ் அமைப்பின் 3 ஆவது உயர் தலைவரான மர்வான் இஸா, கடந்தவாரம் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார் என வெள்ளை மாளிகை நேற்று திங்கட்கிழமை (18) தெரிவித்துள்ளது.

ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியின் பிரதித் தலைவராக விளங்கியவர் மர்வான் இஸா. 

மார்ச் 9, 10 ஆம் திகதிகளில் இஸாவை இலக்குவைத்து காஸாவில் தாக்குதல் நட்ததப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியர் ஹகாரி கடந்த 11 ஆம் திகதி கூறினார். 

எனினும், அந்நடவடிக்கையில் இஸா கொல்லப்பட்டாரா என்பது தெளிவில்லை என ஹகாரி கூறியிருந்தார். 

இந்நிலையில், கடந்தவாரம் இஸ்ரேலின் தாக்குதலில் இஸா கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலீவன் நேற்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179110

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியது கனடா - நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Published By: RAJEEBAN    20 MAR, 2024 | 10:13 AM

image
 

இஸ்ரேலிற்கு எதிர்காலத்தில் ஆயுதங்களை விற்பனை செய்வதை கனடா நிறுத்தியுள்ளது.

கனடாவின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்தே கனடா இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ளது.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் இதனை தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கம் இஸ்ரேலிற்கான எதிர்கால ஆயுத விற்பனையை நிறுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் ஆட்சியில் உள்ள லிபரல் கட்சி இஸ்ரேலிற்கான ஆயுதவிற்பனையை நிறுத்தவேண்டும் என தெரிவிக்கும் தீர்மானமொன்றை  புதிய ஜனநாயக கட்சி தீர்மானமொன்றை கனடாவின் பொதுச்சபையில் சமர்ப்பித்தது - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தில் இணைந்துள்ள இந்த கட்சி காசாவில் பொதுமக்களை காப்பாற்றுவதற்கு கனடா அரசாங்கம் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்ததீர்மானம் கனடாவின் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா பாலஸ்தீன தேசத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனவும் இந்த தீர்மானம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/179187

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்த பேச்சுவார்த்தையை குழப்ப இஸ்ரேல் சதி: ஹமாஸ் தலைவர்

Published By: SETHU    20 MAR, 2024 | 11:13 AM

image

காஸா பிராந்தியத்தின் மிகப் பெரிய வைத்தியசாலையை இஸ்ரேல் முற்றுகையிட்டதையடுத்து, காஸா போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை குழப்புவற்கு இஸ்ரேல் சதி செய்கிறது என ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியே குற்றம் சுமத்தியுள்ளார். 

ஹமாஸின் சிரேஷ்ட தலைவர்களை தான் இலக்கு வைத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை காஸாவின் அல் ஷிபா வைத்தியசாலை முற்றுகையின்போது, ஹமாஸின் டசின் கணக்கான தலைவர்கள் கொல்லப்பட்டனர் எனவும், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கட்டாரை தளமாகக்கொண்ட, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே இது தொடர்பாக கூறுகையில், 'அல் ஷிபா மருத்துவ வளாகத்தில் ஸியோனிஸ படைகளின் நடவடிக்கையானது, காஸாவில் வாழ்க்கை சூழல் மீளத் திரும்புவதை  தடுக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. 

பொலிஸ் அதிகாரிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் வேண்டுமேன்றே இலக்கு வைப்பதானது குழப்பங்களையும்  எமது மக்களிடையே வன்முறைகளையும் ஏற்படுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. 

டோஹாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை குழப்பும் முயற்சியையும் இது வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179197

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 20/3/2024 at 06:15, ஏராளன் said:

இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியது கனடா - நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Published By: RAJEEBAN    20 MAR, 2024 | 10:13 AM

image
 

இஸ்ரேலிற்கு எதிர்காலத்தில் ஆயுதங்களை விற்பனை செய்வதை கனடா நிறுத்தியுள்ளது.

கனடாவின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்தே கனடா இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ளது.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் இதனை தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கம் இஸ்ரேலிற்கான எதிர்கால ஆயுத விற்பனையை நிறுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் ஆட்சியில் உள்ள லிபரல் கட்சி இஸ்ரேலிற்கான ஆயுதவிற்பனையை நிறுத்தவேண்டும் என தெரிவிக்கும் தீர்மானமொன்றை  புதிய ஜனநாயக கட்சி தீர்மானமொன்றை கனடாவின் பொதுச்சபையில் சமர்ப்பித்தது - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தில் இணைந்துள்ள இந்த கட்சி காசாவில் பொதுமக்களை காப்பாற்றுவதற்கு கனடா அரசாங்கம் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்ததீர்மானம் கனடாவின் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா பாலஸ்தீன தேசத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனவும் இந்த தீர்மானம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/179187

மனிதப் பேரழிவு தொடர்பான தனது அதிருப்தியை மேற்கு  இஸ்ரேலிற்கு வெளிப்படுத்தும் செயல். அத்துடன் வட அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடு. 

ஆனாலும் இது ஒரு கண்துடைப்பு வேலை மட்டுமே…… 

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

மனிதப் பேரழிவு தொடர்பான தனது அதிருப்தியை மேற்கு  இஸ்ரேலிற்கு வெளிப்படுத்தும் செயல். அத்துடன் வட அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடு. 

இஸ்ரேலுக்கு ஆதரவான மேற்கத்தையர் செய்யும் பக்காவான செயல். இந்த முறை ரம்லான்  இஞ்சை எல்லா இடமும் களைகட்டுது. 😂

8b1794e5-bb1d-4c65-bcd6-1903d54797f0.jpe

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஸா போர் நிறுத்தம்: அமெரிக்காவின் பிரேரணை மீது பாதுகாப்புச் சபையில் இன்று வாக்கெடுப்பு

Published By: SETHU    22 MAR, 2024 | 02:39 PM

image

காஸாவில் உடனடியாக போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதை வலியுறுத்துவதற்காக அமெரிக்க அனுசரணையுடன் முன்வைக்கப்படும் பிரேரணை தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிகளை  அமெரிக்கா ஏற்கெனவே 3 தடவைகள் தனது வீட்டோ அதிகாரரத்தைப் பயன்படுத்தி தடுத்தது.

இந்நிலையில் தற்போது காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா, பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்க அனுசரணையுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போர் நிறுத்தத்துக்கான அமெரிக்காவின் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று  வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இன்று எகிப்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். 

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவுடன் போர் நிறுத்தம் குறித்து பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

https://www.virakesari.lk/article/179434

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Mayu   / 2024 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0      - 73 ஏ எம் கீத்  கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின்  தலைவர் கே.அண்ணாமலை இலங்கை தமிழரசுக்கட்சி யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் திருகோணமலை தமிழரசு கட்சி நகரசபை பிரதேசசபை தலைவர் உறுப்பினர்களுக்கிடையை  கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில்  நடைபெற்றது.         இதன்போது, எதிர்கால அரசியல் களநிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்  கலந்துரையாடப்பட்டன.   Tamilmirror Online || அண்ணாமலையுடன் ஆளுநர் சந்திப்பு
    • வ.சக்தி  ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படா விட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.   இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டன.  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது கலந்து கொண்டு  கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் தனிப்பட்ட திறமையினை பாராட்ட வேண்டும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை நீடிப்பதற்கு அரசியல் யாப்பில் உள்ள விடயத்தினை ஜனாதிபதி கோரியிருப்பதானது சிறந்த விடயமாக பார்க்கின்றேன். இந்த நாட்டில் வரிசை யுகம் இருந்தபோது அதனை குறுகிய காலத்தில் வழமைக்கு கொண்டுவந்த ஒரு திறமையானவர்தான் இன்றைய ஜனாதிபதி. அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்றாலும் வடகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள். அவரினால்தான் இன்று சர்வதேச சமூகம் பல உதவிகளை வழங்கியுள்ளன. ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் அவர்களையே ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். சம்மந்தன் ஐயாவை நாம் என்றும் மறக்க முடியாது தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக தள்ளாடும் வயதிலும் நின்று குரல் கொடுத்த ஓர் மாமனிதன் அவர். அவருக்கு எமது கட்சி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவருடைய இறப்பு மாபெரும் இழப்பாகும். பாராளுமன்றத்திலே நபன் இருக்கும்போது என்னுடன் மிகவும் அன்பாக கதைப்பார். தற்போது தமிழர்களின்  எதிர்கால உரிமையை காப்பாற்றுவதற்காக உருவாகிய கட்சிதான்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே பதவிக்கு போட்டி நடக்கின்றது. சுமந்திரன் ஒருப்பக்கம் சிறிதரன் மறுபக்கம் என பதவிக்காக வழக்கும் வைத்திருக்கின்றார்கள். இதுவைரகாலமும் ஒரு தூணிலேதான் அந்த கட்சி நின்றது அதுதான் சம்மந்தன் ஐயா. அந்த தூண் சாய்ந்து விட்டது. ஆகவே அக்கட்சி சிதறுவதற்கு வாய்பிருக்கின்றது. அதனால்தான் நாங்கள் அனைத்து கட்சிகளையும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். R Tamilmirror Online || ரணிலை ஆதரிக்க தீர்மானம்; கருணா
    • யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!  08 JUL, 2024 | 05:46 PM   யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார். வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார். அதேவேளை வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது. இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா ,பொதுமக்கள் வெளியே போக சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன் என தெரிவித்து வைத்தியசாலையில் தொடர்ந்து இன்றைய தினம் நண்பகல் வரையில் தங்கியிருந்த நிலையில் , நீண்ட இழுபறியில் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார்.  வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது. அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.      யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!  | Virakesari.lk
    • அந்த தட்டுக்கதை சிறு வயதில் எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  எமக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிள்ளைகளை படிபடி என்று படிப்பித்த பின்பு வேலை அவர்கள் குடும்பம் இவைகளையே பார்க்கவே கஸ்டப்படுகிறார்கள். நியூயோர்க்கில் எமது குடும்ப நண்பர்கள் நாம் பிள்ளைகளுடன் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லி எமது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகுது என்பதை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார்கள்.
    • 🤣........ வெறும் அப்சவேர்ஷன் தானுங்க.......... மற்றபடி இந்த ஏரியாவிற்கு சுத்தமாக லாயக்கில்லாத ஆளுங்க.......
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.