Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, Kandiah57 said:

பாலஸ்தீன  ஆதரவாளர்கள்

என்னது?

பாலஸ்தீன ஆதரவாளர்களா😝.

ஜோக் அடியாதேங்கோ அண்ணை.

இப்படி எழுதும் ஆட்களில் 90% க்கும் மேல் அக் மார்க் முஸ்லிம் வெறுப்பாளர்கள்.

அவர்கள் சொந்த நிலத்தில், எங்கள் எதிரியான இந்தியா கஸ்மீரி முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து, அவர்கள் சிறப்புரிமையை மீறி, மாநில அந்தஸ்தை பறித்து, மாநிலத்தை இரண்டாக்கிய போது அதை வரவேற்றவர்கள்.

ஒரு அப்பாவி முஸ்லிம் பெண்ணின் அபாயாவை இரத்தினபுரியில் காடையர் கழட்டிய போது அதை சரி என வாதாடியவர்கள்.

உகிர் முஸ்லீம்களுக்கு ஒரு அநியாயமும் நடக்கவில்லை என எழுதியவர்கள்.

இங்கே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் எழுத ஒரு காரணம் மட்டும்தான்.

இஸ்ரேலை மேற்கு ஆதரிப்பதே அந்த காரணம்.

இஸ்ரேலை மேற்கு ஆதரிக்காமல், மேற்கின் இடத்தில் சீனா இருந்திருந்தால்…இப்ப வெட்டடா, கொத்தடா எண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதி இருப்பார்கள்🤣.

Edited by goshan_che
  • Like 3
  • Haha 3
  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, goshan_che said:

என்னது?

பாலஸ்தீன ஆதரவாளர்களா😝.

ஜோக் அடியாதேங்கோ அண்ணை.

இப்படி எழுதும் ஆட்களில் 90% க்கும் மேல் அக் மார்க் முஸ்லிம் வெறுப்பாளர்கள்.

அவர்கள் சொந்த நிலத்தில், எங்கள் எதிரியான இந்தியா கஸ்மீரி முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து, அவர்கள் சிறப்புரிமையை மீறி, மாநில அந்தஸ்தை பறித்து, மாநிலத்தை இரண்டாக்கிய போது அதை வரவேற்றவர்கள்.

ஒரு அப்பாவி முஸ்லிம் பெண்ணின் அபாயாவை இரத்தினபுரியில் காடையர் கழட்டிய போது அதை சரி என வாதாடியவர்கள்.

உகிர் முஸ்லீம்களுக்கு ஒரு அநியாயமும் நடக்கவில்லை என எழுதியவர்கள்.

இங்கே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் எழுத ஒரு காரணம் மட்டும்தான்.

இஸ்ரேலை மேற்கு ஆதரிப்பதே அந்த காரணம்.

இஸ்ரேலை மேற்கு ஆதரிக்காமல், மேற்கின் இடத்தில் சீனா இருந்திருந்தால்…இப்ப வெட்டடா, கொத்தடா எண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதி இருப்பார்கள்🤣.

என்ன இருந்தாலும் இப்படி நேரடியாக  உண்மையை எழுதி இப்படி  எம்மை தோலுரிப்பது எங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.  நீங்க ரொம்ப மோசம் சார். 

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, goshan_che said:

என்னது?

பாலஸ்தீன ஆதரவாளர்களா😝.

ஜோக் அடியாதேங்கோ அண்ணை.

இப்படி எழுதும் ஆட்களில் 90% க்கும் மேல் அக் மார்க் முஸ்லிம் வெறுப்பாளர்கள்.

அவர்கள் சொந்த நிலத்தில், எங்கள் எதிரியான இந்தியா கஸ்மீரி முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து, அவர்கள் சிறப்புரிமையை மீறி, மாநில அந்தஸ்தை பறித்து, மாநிலத்தை இரண்டாக்கிய போது அதை வரவேற்றவர்கள்.

ஒரு அப்பாவி முஸ்லிம் பெண்ணின் அபாயாவை இரத்தினபுரியில் காடையர் கழட்டிய போது அதை சரி என வாதாடியவர்கள்.

உகிர் முஸ்லீம்களுக்கு ஒரு அநியாயமும் நடக்கவில்லை என எழுதியவர்கள்.

இங்கே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் எழுத ஒரு காரணம் மட்டும்தான்.

இஸ்ரேலை மேற்கு ஆதரிப்பதே அந்த காரணம்.

இஸ்ரேலை மேற்கு ஆதரிக்காமல், மேற்கின் இடத்தில் சீனா இருந்திருந்தால்…இப்ப வெட்டடா, கொத்தடா எண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதி இருப்பார்கள்🤣.

எழுதுவதற்கு மன்னிக்கவும்

எனக்கு இஸ்ரேலை ரொம்ப பிடிக்கும்.

அவர்களது இனப்பற்று மற்றும் ஒற்றுமை 

உலகையே ஆளும் பொருளாதார மற்றும் அறிவியல் வளர்ச்சி

இருந்தால் இப்படி இருக்கணும் என் இனம். என் தேசம். நன்றி 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, விசுகு said:

எழுதுவதற்கு மன்னிக்கவும்

எனக்கு இஸ்ரேலை ரொம்ப பிடிக்கும்.

அவர்களது இனப்பற்று மற்றும் ஒற்றுமை 

உலகையே ஆளும் பொருளாதார மற்றும் அறிவியல் வளர்ச்சி

இருந்தால் இப்படி இருக்கணும் என் இனம். என் தேசம். நன்றி 

இண்டைக்கு நான் தப்பித்தேன்.

உங்களைத்தான் தோலை உரித்து உப்பு கண்டம் போடப்போகிறார்கள்🤪.

#கச்சேரி களைகட்டும்😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

இண்டைக்கு நான் தப்பித்தேன்.

உங்களைத்தான் தோலை உரித்து உப்பு கண்டம் போடப்போகிறார்கள்🤪.

#கச்சேரி களைகட்டும்😂

இது கூவி ஆட்களை கூப்பிடுவது மாதிரி இருக்கே?😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விசுகு said:

எனக்கு இஸ்ரேலை ரொம்ப பிடிக்கும்.

பிடிக்கும் (like) என்பதை விட அவர்கள் மீது எனக்கிருப்பதை begrudging respect தயக்கம்-சேர் மரியாதை எனலாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடத்தப்பட்ட இஸ்ரேலிய சிறுவர்கள் : ஹமாஸ் வெளியிட்ட காணொளி

கடந்த சனிக்கிழமையன்று தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது கடத்தப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளைக் காட்டுவது போல் தோன்றும் புதிய காணொளி காட்சிகளை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் டெலிகிராம் சனலில் வெளியிடப்பட்ட காணொளியில், “ஹமாஸ் போராளிகள், ஒப்பரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தின் முதல் நாளில் கிப்புட்ஸ் ‘ஹோலெட்’ சண்டைகளுக்கு மத்தியில் குழந்தைகளிடம் கருணை காட்டுகிறார்கள்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

காணொளியில் உள்ள குழந்தைகளின்

கிப்புட்ஸ் ஹோலிட் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில், பதின்மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

காணொளியில் உள்ள குழந்தைகளின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாததால், அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது கொல்லப்பட்டவர்களில் அவர்களின் பெற்றோரும் இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சமீபத்திய ஹமாஸ் காணொளியின் காட்சிகள் இஸ்ரேலிய குழந்தைகளை ஹமாஸ் மீண்டும் காஸாவிற்கு அழைத்துச் சென்றதைக் காட்டுவதாகத் தோன்றுவதாக ஹீப்ரு ஊடக ஆதாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

ஹமாஸ் உறுப்பினர்களின் இரக்கம்

முதலாவதாக, ஹமாஸின் உறுப்பினர் ஒரு சிறு குழந்தையின் காலில் ஒரு கட்டு கட்டுவது போல் தோன்றுகிறது. அடுத்தடுத்த காட்சிகளில், இராணுவ சீருடையுடன் உள்ள ஆண்கள், தாக்குதல் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தியபடி, சிறு குழந்தைகளை தூக்கிக்கொண்டு, முதுகில் தட்டிக் கொடுத்து, அவர்களிடம் பேசுகிறார்கள்.

கடத்தப்பட்ட இஸ்ரேலிய சிறுவர்கள் : ஹமாஸ் வெளியிட்ட காணொளி | Hamas Posts Kidnapped Israeli Children

ஒரு தீவிரவாதி ஒரு சிறு குழந்தையை ஊஞ்சலில் முன்னும் பின்னுமாக ஆட்டுவதைக் காட்டும் காட்சியில், குழந்தை அழுவதைக் கேட்க முடிகிறது.

காணொளியில் சேர்க்கப்பட்டுள்ள இறுதி காட்சியில், ஒரு கப் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு சிரிக்கும் குழந்தையைக் காட்டுகிறது. ஆங்கிலத்தில், ஒரு ஆண் குழந்தையிடம், "பிஸ்மில்லாஹ்' (அல்லாஹ்வின் பெயரில்) என்று சொல்லுங்கள்" என்று கூறுகிறார். குழந்தை "பிஸ்மில்லா" என்று சொல்கிறது. "யாலா, குடிக்கவும்," அந்த மனிதன் குழந்தைக்கு சொல்கிறான். பின்னர் குழந்தை அந்த தண்ணீரை குடிக்கத் தொடங்குகிறது..   

https://ibctamil.com/article/hamas-posts-kidnapped-israeli-children-1697285733

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, goshan_che said:

பிடிக்கும் (like) என்பதை விட அவர்கள் மீது எனக்கிருப்பதை begrudging respect தயக்கம்-சேர் மரியாதை எனலாம்.

வம்பு எதுக்கு? 😅மாற்றி விடவா?🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

என்னது?

பாலஸ்தீன ஆதரவாளர்களா😝.

ஜோக் அடியாதேங்கோ அண்ணை.

இப்படி எழுதும் ஆட்களில் 90% க்கும் மேல் அக் மார்க் முஸ்லிம் வெறுப்பாளர்கள்.

அவர்கள் சொந்த நிலத்தில், எங்கள் எதிரியான இந்தியா கஸ்மீரி முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து, அவர்கள் சிறப்புரிமையை மீறி, மாநில அந்தஸ்தை பறித்து, மாநிலத்தை இரண்டாக்கிய போது அதை வரவேற்றவர்கள்.

ஒரு அப்பாவி முஸ்லிம் பெண்ணின் அபாயாவை இரத்தினபுரியில் காடையர் கழட்டிய போது அதை சரி என வாதாடியவர்கள்.

உகிர் முஸ்லீம்களுக்கு ஒரு அநியாயமும் நடக்கவில்லை என எழுதியவர்கள்.

இங்கே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் எழுத ஒரு காரணம் மட்டும்தான்.

இஸ்ரேலை மேற்கு ஆதரிப்பதே அந்த காரணம்.

இஸ்ரேலை மேற்கு ஆதரிக்காமல், மேற்கின் இடத்தில் சீனா இருந்திருந்தால்…இப்ப வெட்டடா, கொத்தடா எண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதி இருப்பார்கள்🤣.

கதியில்லாமல் அலையும் றொகிங்கியா முஸ்லிம்களை விட்டு விட்டீர்கள்! அவர்களையும் நல்ல விதமாகப் பார்க்காத "பலஸ்தீன விடுதலை ஆதரவாளர்கள்"!😎

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

வம்பு எதுக்கு? 😅மாற்றி விடவா?🤪

அந்த பயம் இருக்கட்டும்😝

10 minutes ago, Justin said:

கதியில்லாமல் அலையும் றொகிங்கியா முஸ்லிம்களை விட்டு விட்டீர்கள்! அவர்களையும் நல்ல விதமாகப் பார்க்காத "பலஸ்தீன விடுதலை ஆதரவாளர்கள்"!😎

விடவில்லை. நினைத்தேன்.

ஆனால் ரொகிங்கியர்களை அடிப்பவர்கள் மதவாத பெளத்த சங்கத்தால் வழிநடத்தப்படுபவர்கள் என்பதால் - அவர்களுக்கு கொஞ்சம் மனமிரங்கினார்கள் என நியாபகம்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/10/2023 at 20:30, goshan_che said:

எண்ட பே படமும் யூடியூப்பில் இருக்கிறது.

கோஷான் இணைப்புக்கு நன்றி. இந்த படத்தில் வந்த ஒரு பாடலின் மெட்டை அப்படியே ஈயடிச்சான் கொப்பியடித்து  “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு” என்ற  பாடலை இயற்றி உள்ளார்கள் எம்மவர்கள். 😂

படத்தின் நடுவிலும் இறுதியிலுமாக இரு முறை அந்த பாடல் வருகிறது. 

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, island said:

கோஷான் இணைப்புக்கு நன்றி. இந்த படத்தில் வந்த ஒரு பாடலின் மெட்டை அப்படியே ஈயடிச்சான் கொப்பியடித்து  “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு” என்ற  பாடலை இயற்றி உள்ளார்கள் எம்மவர்கள். 😂

படத்தின் நடுவிலும் இறுதியிலுமாக இரு முறை அந்த பாடல் வருகிறது. 

கழுகு கண் என்பது போல் வெளவ்வால் காதைய்யா உங்களுக்கு😂.

ஆனால் இதை கொப்பி அல்லாமல் inspiration எண்டு தான் சொல்லோணும் என இளையராஜா, ரெஹ்மான், தேவா எல்லாரும் சொல்லி இருக்கினம்.

அவையே அப்படி எனும் போது, அடிப்படை உபகரணங்களை வைத்து இசையமைச்ச நாமும் ஓகேதான்😎.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

அந்த பயம் இருக்கட்டும்😝

நீயுமா ராசா 🤣 (சிரிப்புக்குறிகளை கவனிக்க தவறியதேனோ?)😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

கழுகு கண் என்பது போல் வெளவ்வால் காதைய்யா உங்களுக்கு😂.

ஆனால் இதை கொப்பி அல்லாமல் inspiration எண்டு தான் சொல்லோணும் என இளையராஜா, ரெஹ்மான், தேவா எல்லாரும் சொல்லி இருக்கினம்.

அவையே அப்படி எனும் போது, அடிப்படை உபகரணங்களை வைத்து இசையமைச்ச நாமும் ஓகேதான்😎.

சரியுங்க அப்ப inspiration என்றே  சொல்லுவோம். 😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, island said:

கோஷான் இணைப்புக்கு நன்றி. இந்த படத்தில் வந்த ஒரு பாடலின் மெட்டை அப்படியே ஈயடிச்சான் கொப்பியடித்து  “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு” என்ற  பாடலை இயற்றி உள்ளார்கள் எம்மவர்கள். 😂

படத்தின் நடுவிலும் இறுதியிலுமாக இரு முறை அந்த பாடல் வருகிறது. 

என்ன ஐலண்டு நையாண்டியா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

என்ன ஐலண்டு நையாண்டியா?

இதில என்ன ஐயா நையாண்டி.   பாடலின் மெட்டை சொன்னேன். உண்மைதானே.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுதான் பலஸ்தீன அகதிகள் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலாம்.

இஸ்ரேலிய ஆதரவு கணக்குகள் இது வான்வழித் தாக்குதல் அல்ல - தரையில் இருந்து வெடித்துள்ளது, ஹமாஸ் சொந்த மக்களையே தாக்கியது என்கிறனர்.

பிகு

இந்த X கணக்கு மொசாட் என்ற பெயரில் இயங்கினாலும் அது உண்மையான மொசாடின் கணக்கு அல்ல. அதன் அருகில் satirical என போடப்பட்டுள்ளதை காண்க.

கடந்த சனியன்று நடந்த தாக்குதலுக்கு முன் இது இஸ்ரேல் பற்றிய சுய நையாண்டிகளையே பகிர்ந்து வந்தது. தாக்குதல் நடந்த தினத்தில் இருந்து, Iron Dome தாக்குதல் முடியும் வரை இஸ்ரேல் சார்பாக நையாண்டி அற்ற தகவல்களை வெளியிடுகிறது.

இது இஸ்ரேலியரின் கணக்கு, ஆனால் மொசாட்டின் கணக்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள சிரிய பகுதியான கோலான் குன்றுகள் மீது சிரியாவில் இருந்து ஒரு வான்வெளி ஆயுதம் ஏவப்பட்டதாம்.

காஸா எல்லையில் காத்து நிற்கும் மருந்து, உணவு இதர நிவாரணங்கள்.

இஸ்ரேல் உள்நுழைய அனுமதி மறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகதிகள் தொடரணி தாக்குதல் பற்றி மேற்கில் இருந்து இராணுவ விடயங்களை எழுதும் ஒரு கணக்கின் பார்வை. முழு நூல் (thread) ஐயும் வாசிக்கவும் (X ஐ ஏனைய மொழிகளிலும் மொழிமாற்றிப்பார்க்கலாம்). 

சண்டையின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இஸ்ரேல்-ஹமாஸ் கடற்சண்டை.

ஹாமாசின் படகு ஏரிகிறது. கடலில் குதித்தோர் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குகிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர்.

இந்த மனித பேரவலதிலும் நக இயலுமா?

பார்த்து விட்டு சொல்லுங்கள்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இஸ்ரேல்.. அகதிகளாக வெளியேறச் சொல்லிவிட்டு.. அந்த அகதிகள் மீது குண்டு தாக்குதல் நடத்தி இருப்பது அப்படியே யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வின் போது சாரை சாரையாக மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது நாவற்குழி பகுதியில் வைச்சு விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல பொது மக்கள் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தார்கள். 

ஆக அடக்குமுறையாளர்களுக்கு கொள்கை வகுக்கும் அமெரிக்க மேற்குலக ஜாம்பவான்கள்.. தங்கள் நலனுக்காக..  பலவீனமான இனங்களில்.. மனித இன அழிப்புக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையே இச்சம்பவம் மீண்டும்..  இனங்காட்டுகிறது.

உக்ரைனில் டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்தை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்.. கொசவாவில் மதிப்பினமாம்.. சேர்பியாவில் பிரிவினைக்கு ஆதரவாம். ஏனெனில் நேட்டோ ஊடுருவலுக்கு அது அவசியம்.

ஜோர்ஜியாவில் சுதந்திர தேசங்களை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்..  ஜோர்ஜிய ஒருமைப்பாட்டுக்கு உழைப்பினமாம்... ஏனெனில் ஜோர்ஜியாவின் அமைவிடம் நேட்டோவுக்கு அதன் விரிவாக்கத்திற்கு அவசியம். 

முன்னர் அமெரிக்கவும் மேற்குலக நாடுகளும்.. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த குர்திஷ் மக்களின் போராட்ட அமைப்பின் ஆதரவை.. சிரியாவில் அரசுக்கு எதிரான மோதலுக்கும் நேட்டோ ஊடுருவலுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் போது.. மேற்குலக ஜாம்பவான்கள்.. குர்திஷ் இன மக்களின் போராட்டத்தை விரும்பியோ விரும்பாமலோ ஆதரிக்க நேரிட்டது. இன்று... நேட்டோ நாடான துருக்கி தொடர்ந்தும்.. குர்திஷ் இனப்படுகொலை செய்வதை கண்டும் காணாமலும் இருப்பினமாம். (துருக்கியும் முஸ்லிம் தான்.. குர்திஷும் முஸ்லிம் தான்) 

அதேபோல்.. தான் பலஸ்தீன மக்கள் விடுதலையிலும்.. மேற்குலகம் இஸ்ரேலின் ஊடாக மத்திய கிழக்கில் தன் ஆக்கிரமிப்பு ஊடுருவல் நிலைப்பாட்டை போனிக் கொள்ள இஸ்ரேலின் எல்லா விதமான பயங்கரவாதச் செயல்களையும் அங்கீகரித்து நிற்கிறது.

ஈழத்திலும் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஆதரவோடு.. தங்களின் பூகோள நலனை பெற்றுக் கொள்ளத் தக்க வகையில்.. அமெரிக்காவும் அதன் மேற்குலக கூட்டாளிகளும்.. தமிழர்களின் தார்மீக விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து.. இனப்படுகொலைகளின் ஊடாக.. தமிழர்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து சிங்கள பெளத்த பேரினவாதத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதன் ஊடாக அதனை.. குசிப்படுத்துவதன் ஊடாக தமது நலனை பேணிக் கொள்ள கங்கணம் கட்டி நிற்கின்றனர். அதற்கு ஹிந்தியா கூட்டு உடந்தையாக உள்ள அதேவேளை.. சீனா போட்டியாளராக இருப்பதால்.. அப்பப்ப.. போர்க்குற்றம்.. மனித உரிமைகள் கோசங்களை சர்வதேச அரங்கில் போட்டு சிங்கள பெளத்த பேரினவாதத்தை தங்கள் பக்கம் அதிகம் சார்ந்திருக்க பார்த்துக் கொள்கிறார்கள்.

இப்படியாப்பட்ட அமெரிக்காவையும்... அதன் மேற்குலகக் கூட்டாளிகளையும்.. ஏன் இங்கு சிலர் ஆதரிக்கினம் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அமெரிக்காவினது முழு இராணுவ பொருண்மிய உதவியோடு கட்டியமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புக்கள் தான்.. தலிபான்கள்.. பில்லேடனின் அல்குவைதா அமைப்பு.. ஐ எஸ் ஐ எஸ்.. போன்றவை. இவை ஏதோ ஒரு தருணத்தில் அமெரிக்காவினால் அதன் மேற்குலக ஏஜெண்டுகளால்..ஏமாற்றப்பட்டதன் விளைவே.. அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்கும் எதிரான அவர்களின் சில நடவடிக்கைகள்.. மேலும் சில நடவடிக்கைகள்.. அமெரிக்காவின் தலையீடுகளை இட்டு இவர்களால் அமெரிக்காவின் அதன் மேற்குக் கூட்டாளிகளின் உளவு அமைப்புக்களின் தூண்டுதலின் பெயரில் இடம்பெற்ற கலகங்கள்.

குறிப்பாக.. துனிசியாவில் ஆரம்பித்து.. லிபியாவில் கடாபியை முடிக்க தூண்டிவிடப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத புரட்சிப் போராட்டங்கள். இவற்றின் முடிவில்.. அமெரிக்காவால்.. மேற்குலகால் ஏமாற்றப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களைச் சார்ந்தோரே.. பின்னர் பிரித்தானியாவில் மான்செஸ்டர் நகரில் குண்டுத்தாக்குதலை நடத்தினார்கள். இதையிட்டு.. அமெரிக்கா தன் தவறுகளை ஒத்துக்கொண்டு பிரித்தானிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டது கூட இல்லை.

இப்படியாப்பட்ட அடக்குமுறைகளுக்கு துணைபோவதும்.... தமது பூகோள நலனை மட்டும் முன்னிறுத்தி மட்டும்..செயற்படும்.. அமெரிக்க.. மேற்குலக நாடுகளையும் அவர் தம் ஏஜென்டு நாடுகளையும் அரசுகளையும்.. குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாடுகளையும்..ஆதரிப்பது என்பது உலகில் உரிமைகள் மறுக்கப்பட்டு.. ஒடுக்கப்படும் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். 

இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் என்பது வேறு.. இஸ்லாமிய மக்களின் அவர் தம் சொந்த பூர்வீக நில மற்றும் ஆட்சி உரிமைப் போராட்டம் என்பது வேறு.

இந்தப் பகுப்பறிவுள்ள யாழ் கள உறுப்பினர்கள் தெளிவாத்தான் எல்லாம் எழுதினம். இந்த தெளிவற்றவை தான்.. தாம் எதற்கு எதை ஆதரிக்கினம் என்ற ஒரு விளக்கமே இன்றி.. மாற்றுக் கருத்து நிலை என்ற சப்பை போட்டி மனப்பாங்கிலும்.. தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற கோதாவிலும்.. அப்பட்டமான இனப்படுகொலைகளையும்.. மனித இன உரிமை மீறல்களை செய்யும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளை கேள்விக்கு உட்படுத்தாமலே ஆதரிக்கவும் செய்கிறார்கள். 

ரஷ்சிய - உக்ரைன் மோதலின் அடிப்பட்டைக்காரணம்.. டான்பாஸ் பிராந்திய மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகளும் இனப்படுகொலையும். இதன் பின்னணியில் உக்ரைனுக்கு இராணுவ ஆயுத மற்றும் சதி திட்டங்களை தீட்டிக் கொடுத்தது அமெரிக்காவும் மேற்குலக நேட்டோ நாடுகளும் என்பது எப்போதோ வெளிப்பட்ட பின்னும்.. புட்டினின் இந்த சதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்ப்பவர்களை என்னென்பது.

புட்டின்.. ஒரு அழிக்கப்படும் இனத்தின் காவலராக உள்ள வரை.. அவர் பக்கம் தர்மம் இருக்கும். அதற்காக புட்டினும் ரஷ்சியாவும் தமிழ் மக்களின் அழிவுகளை தடுக்க வந்தார்கள்.. அல்லது தடுக்க உதவினார்கள் என்பது அல்ல அதன் அர்த்தம். மேற்குலகின் தேவைகளுக்காக அழிக்கப்படும் குறைந்தது..  ஒரு இன மக்களின் பாதுகாவலராகவாவது.. புட்டின் இருக்கிறார் என்பதுதான் ரஷ்சிய - உக்ரைன் மோதலின் யதார்த்தமாகும். 

Edited by nedukkalapoovan
  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ நா வழியாக ஈரான் இஸ்ரேலுக்கு ஒரு செய்தியை அனுப்பி உள்ளதாம்.

நாம் இந்த பிணக்கு மேலும் தீவிரமடைவதை விரும்பவில்லை. ஆனால் காஸா நடவடிக்கை தொடர்ந்தால் தாம் தலையிட நேரும் என்பதே அச்செய்தியாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து புரிந்த தாக்குதலும், சாதாரண மக்களை மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்ததும், குழந்தைகள் உட்பட பலரைக் கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருப்பதும் பலஸ்தீனர்களின் வரலாற்றில் மிகமோசமான கட்டம். ஹமாஸின் இந்த மோசமான படுகொலைகளை எவராலும் நியாயப்படுத்தமுடியாது. முக்கியமாக உரிமைகளுக்குப் போராடும் அடக்கப்பட்ட இனமான தமிழர் நாம் அடிப்படையான மனிதப் பண்புகளை எந்தக் காலகட்டத்திலும் கைவிடக்கூடாது.

இந்த வகையில் ஹமாஸ் இஸ்ரேலிய யூத மக்களை கொடூரமாகப் படுகொலை செய்ததையும், பணயக் கைதிகளாகச் சிறைபிடித்து கொடுமை செய்வதையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். 

அதேவேளை, ஹமாஸின் தாக்குதலைக் காரணமாக வைத்து இஸ்ரேலிய அரசும், படைகளும் காஸாவில் நடத்தும் மிகமோசமான விமானத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை கொத்துகொத்தாகக் கொல்வதையும், குடியிருப்புக்களை தரைமட்டமாக்குவதையும், உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை முற்றாக முடக்குவதையும், அதற்கும் மேலாக வடகாஸாவின் 10 லட்சத்திற்கு மேலான மக்களை 24 மணிநேரத்தில் வெளியேற உத்தரவு இட்டு மிக மோசமான அவலத்தை உருவாக்குவதையும் ஒருபோதும் ஆதரிக்கமுடியாது. இஸ்ரேலின் காஸா மீதான முற்றுகைக்கும் உள்ளே நிகழப்போகும் பேரழிவுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குநாடுகளும், கையாலாகாத ஐ.நா. சபையுமே காரணம்.

இஸ்ரேலின் “தாக்குதல் தவிர்ப்பு வலயம்” ஆன தெற்கு காஸாவும் மிகமோசமான தாக்குதலுக்கு ஆளாகும். ஹமாஸை அழித்துத் துடைக்க என்று தாக்குதலை நடாத்தும் இஸ்ரேல், காஸாவில் வாழும் ஒட்டுமொத்த பலஸ்தீனர்களை அழிக்கவும், முழுமையாக வெளியேற்றவும் இந்தத்தாக்குதலை உச்சமாகப் பாவிக்கும். நாம் இதனைப் “பொப்கோர்னை” கொறித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கக்கூடாத். குறைந்த பட்ச மனித நேயமுள்ள அனைவரும் ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களைப் பழிவாங்கும் இஸ்ரேலின் பேரழிவு தரும் தாக்குதலை எதிர்க்கவேண்டும்.

  • Like 3
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, கிருபன் said:

ஆமென்(கிறேன்) 🙏

எனவே 1967 இல் அவரவர் இருந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.