Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் ஜபாலியா அகதிமுகாம் மீது இஸ்ரேல் விமானதாக்குதல் - 50க்கும் அதிகமானவர்கள் பலி

Published By: RAJEEBAN     31 OCT, 2023 | 08:55 PM

image

காசாவின் ஜபாலியா அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

F9xw6ayWMAAKhvi.jpeg

இஸ்ரேல் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

F9xw69LXoAAEPvC.jpeg

பொதுமக்கள் இடிபாடுகளிற்குள் இருந்து உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகின்றன.

https://www.virakesari.lk/article/168193

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எந்த நிலையிலும் எனக்கு ஏன் இரக்கம் வருகுதில்லை??

May 2009 னுடன் பலரின் மனங்கள் மரத்துவிட்டதுடன், கண்ணீர்ச் சுரப்பிகளும் வற்றிவிட்டன. 

🥺

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுடன் தாம் போரில் இறங்கி உள்ளனர் என யேர்மனின் ஹூத்தி கிளர்சியாளர் அறிவிப்பு. 

 

 

 

——-

யேர்மனில் இருந்து ஏவப்பட்ட எறிகணை ஒன்று ஜோதானில் வீழ்ந்துள்ளதாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவை முறித்தது பொலிவியா.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவை முறித்தது பொலிவியா.

 

 

 

இஸ்ரேல் இதுக்கெல்லாம் பயந்ததென்றால் ஒரு நாளும் யுத்தத்தில் இரானி இருக்காது. சுத்தி உள்ள நாடுகளே அதிர்ந்து போயிருக்கயில் இவர்கள் ராஜதந்திர உறவுகளை முறித்ததினால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. எத்தனையோ நாடுகள் இஸ்ரவேலை பகிஷ்கரிப்போம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்றுகூறினாலும் அப்படி செய்வதட்கு தயாரில்லை. அப்படி செய்தால் தொழில்நுட்ப ரீதியாக முடங்க நேரிடும். பல சவால்களுக்கு முகம் கொடுக்கநேரிடும்.  

3 hours ago, goshan_che said:

இஸ்ரேலுடன் தாம் போரில் இறங்கி உள்ளனர் என யேர்மனின் ஹூத்தி கிளர்சியாளர் அறிவிப்பு. 

 

 

 

——-

யேர்மனில் இருந்து ஏவப்பட்ட எறிகணை ஒன்று ஜோதானில் வீழ்ந்துள்ளதாம்.

 

 

 

அதாவது எறிகணை போரில் இறங்கி இருக்கிறார்கள். நேரடி போரில் இறங்கினால் பார்க்க கொஞ்சம் அழகாக இருக்கும். பாவம் லெபனான் மக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2023 at 04:54, goshan_che said:

ஈரானின் முக்கிய அதிகார மையங்களில் ஒருவரான குட்ஸ் படைப் பிரிவின் தலைவர் இஸ்மாயில் கயானி, சிரியா போய் இப்போ லெபனான் வந்துள்ளாராம். லெபனானில் ஹிஸ்புலாவின் நசரல்லாவை சந்திக்கிறாராம்.

 

 

 

லெபனானுக்கும் , சிரியாவுக்கும் நல்ல காலம் இல்லைபோல இருக்குது. கஸ்ஸாவை பார்த்தாவது கொஞ்சம் யோசிங்கடா. 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2023 at 19:15, குமாரசாமி said:

இருந்தாலும் வெளிநாடுகளில் வசிக்கும் பலஸ்தீன ஆதரவாளர்கள் அல்லாகு அக்பர் என கோசமிட்டு பொதுவுடமைகளை அழிப்பதை எற்க முடியாது. இது அந்தந்த நாட்டு மக்களையும்  மாற்றி சிந்திக்க வைத்துள்ளது. அடைக்கலம் கொடுத்தவர்களை அழிக்க நினைக்க கூடாது.

நீங்கள் சொல்லுவது போல பாலஸ்தீன அகதிகள் மட்டுமல்ல எல்லா இஸ்லாமியர்களும் அப்படிதான் செய்கிறார்கள். இஸ்லாமியர்களே ஒரு தடவை கூறி இருந்தார்கள் மேட்குலகை யுத்தம் இல்லாமல் இஸ்லாமிய நாடாக்குவதாக. அவர்கள் எல்லா வசதிகளையும் அங்கு பெற்றுக்கொண்டு தங்கள் இனத்தையும் பெருக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

வெள்ளைக்காரன் மனித உரிமை எண்டு சொல்லிக்கொண்டு கண்மூடி தனமாக திரிகிறான். இன்று லண்டன் மாநகர் முதல்வர், ஸ்கொட்லான்ட் முதலமைச்சர் முஸ்லிம்கள் கைகளில். இன்னும் கொஞ்ச காலத்தில் அவர்கள்தான் பெரும்பான்மையினர்.

மற்றைய எல்லா நாடுகளிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை காணலாம். நிச்சயமாக ஒரு நாளைக்கு எல்லோருக்கும் முறயான ஆப்பு வைப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

ஜபாலலியா அகதிமுகாமை இஸ்ரேல் தாக்கி 400 பேருக்கு மேல் பலியாம்.

 

 

 

இதில் 400 க்கு மேல் என்பதை விட மனித இழப்பு 150 வரை என்பதே சரியாக படுகிறது.

இந்த முகாமில் ஒரு பாரிய ஹமாஸ் நிலக்கீழ் வலையமைப்பு இருக்கிறதாம்.

இஸ்ரேல் மக்களை வெளியேறுமாறு கூறி விட்டே தாக்குதல் நடத்தியதாம்.

நிலக்கீழ் வலையமைப்பு உடைந்து விழ, அத்தோடு மேலே இருந்த மக்கள் குடியிருப்புகளும் வீழ்ந்தனவாம்.

பிகு

வாசித்த, ரேடியோவில் கேட்ட தகவல்களை பகிர்கிறேன். இஸ்ரேலுக்கு வெள்ளை அடிக்கவல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

காசா, எகிப்து எல்லை வெளிநாட்டவர்களுக்காக திறக்கப்படும். காயப்பட்ட பலஸ்தீனியர்களும் அடங்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/10/2023 at 13:36, goshan_che said:

பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு என ஒரு கட்சி ஸ்தாபிக்கபட்டுள்ளது. ஆனால் Party of Islam இன் சாசனம், நிதி பொறிமுறை தேர்தல் சட்டத்துக்கு உட்பட்டு இல்லை என கூறி தேர்தல்கள் ஆணையம் இதை பதிவு செய்ய மறுத்துள்ளது.

அழிவின் ஆரம்பம்.

எல்லாம் நல்லதுக்கே.

ஜேர்மனியில் பெரிய அரசியல் கட்சிகளுக்குள்ளேயே முஸ்ளீம்கள் பெரிய பதவிகளில் அமர்ந்து விட்டார்கள்.போகப் போகத்தான் பின் விளைவுகள் தெரிய வரும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

spacer.png

spacer.png

 

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
 

இஸ்ரேல் மீது பாய்ந்த 8000 ராக்கெட்டுகள்! 4000 பேர் மரணம் | THUPPARIYUM SHAMBU

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாசின் அக்7 நரவேட்டையின் தணிக்கையிடப்படாத வீடியோக்களை பார்வையிட்ட பின் இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களின் மனநிலையாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய படைகளின் காஸாவை இரு கூறாக்கும் நடவடிக்கை கிட்டதட்ட முடிவை நெருங்கிவிட்டதாக தெரிகிறது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே எதிவு கூறியபடி, பலஸ்தீன அகதிகளை இஸ்ரேல் காசாவைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்து அவர்களை ஏற்றுக்கொள்ளும்படி எகிப்தைக் கேட்டிருக்கிறது. ஆனால் எகிப்தோ அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறது.

இந்த ஹமாஸ் தாக்குதலும் அதனைத் தொடர்ந்த இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையும் Greater Israel எனும் திட்டத்தின் ஒருபகுதிதான் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. 

“Leaked document fuels concern Israel plans to push Palestinians from Gaza into Egypt”

 

An Israeli government document suggesting the mass relocation of Gaza's 2.3 million people to Egypt's Sinai Peninsula is fuelling concerns about the possible ethnic cleansing of Palestinians.

The leaked document, first reported in Israeli media, was compiled by an Israeli government research agency known as the Intelligence Ministry and was dated Oct. 13 — six days after Hamas led deadly attacks on Israel and the Israeli government declared war against the Palestinian militant group, which controls Gaza.

Although not a binding policy, it has deepened long-standing Egyptian fears that Israel wants to make Gaza into Egypt's problem and revived Palestinians' memories of the displacement of hundreds of thousands of people who fled or were forced from their homes during the fighting surrounding Israel's creation in 1948, which Palestinians refer to as the Nakba, the Arabic word for catastrophe.

"What happened in 1948 will not be allowed to happen again," Nabil Abu Rudeineh, spokesperson for Palestinian President Mahmoud Abbas, told The Associated Press in reaction to the paper.

He said a mass displacement of Palestinians would be "tantamount to declaring a new war."

What happened in 1948 will not be allowed to happen again," Nabil Abu Rudeineh, spokesperson for Palestinian President Mahmoud Abbas, told The Associated Press in reaction to the paper.

He said a mass displacement of Palestinians would be "tantamount to declaring a new war."

WATCH | Israeli document weighs possible outcomes for population of Gaza: 

ST_DYER_ISRAEL_GAZA_EXPULSION_MEMO_clean.jpg
 
In a paper circulated among Israeli intelligence, officials discuss possible outcomes for the population of Gaza in the Israel-Hamas conflict, one of which includes forcing Gaza's more than two million inhabitants out of the territory into Egypt. The paper also mentions Canada as a place that could take in refugees.  2:07

 

A long-term plan

A Hebrew-English translation of the document, published by the Israeli website +972 Magazine, outlined three options regarding the civilian population of Gaza.

One would see the civilians remain in Gaza under the rule of the Palestinian Authority — which was ejected from Gaza after a weeklong 2007 war that put Hamas in power — while the second suggested an attempt to establish "a local Arab non-Islamist political leadership" to govern the population.

Neither of these options were considered feasible strategies to create ideological change and deter future militancy against Israel.

The third option, the evacuation of civilians in Gaza to Sinai, would "yield positive, long-term strategic outcomes for Israel," the document stated.

The proposal does not indicate this would be a temporary relocation.

"In the first stage, tent cities will be established in the area of Sinai," it reads. "The next stage includes the establishment of a humanitarian zone to assist the civilian population of Gaza and the construction of cities in a resettled area in northern Sinai."

 

https://www.cbc.ca/amp/1.7015576

🤨

 

 

""தற்போதைய HAMASன் தாக்குதலால் பலனடையப்போவது யார் ? 

1) நிச்சயமாக பலஸ்தீனர்கள் இல்லை. 

2) அடித்த சில வாரங்களில் Israel மேற்கொள்ளும் போகும் இராணுவ  நடவடிக்கையின் பின்னர், இஸ்ரேல் கைப்பற்றப்போகும் Gaza வின் நிலப்பரப்பு யார் பலனடைந்தனர் என்பதைக் கூறும்.  

3) தற்போதைய நிலையில் உலகத்தை தனக்கு ஆதரவாகத் திருப்பும் வேலைகளை இஸ்ரேல் செய்யும். அதன் விளைவாக உலகின் அனுதாபத்தை தனக்குச் சாதகமாகப் பாவித்து இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கும். அப்போது பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகில் யாருமே இருக்கப்போவதில்லை, ஈரானையும், லெபனானின் ஹிஸ்புல்லாவையும் தவிர. 

4) காசாவினை மண்ணோடு மண்ணாக்கிய பின்னர் இஸ்ரேல் Gazaவின் பெரும்பகுதியையும், அதன் கடற்பரப்பையும் தனது ழுமையான கட்டுப்பாட்டில்  கொண்டுவரும். 

5) இவற்றைப் பார்க்கும்போது, இப்படி ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டிய தேவை யாருக்கு எழுகிறது? 

6) மேற்கூறியவற்றை நோக்கும்போது, இஸ்ரேலின் புலனாய்வுத்துறைக்குத் தெரியாமல் இப்படி ஒரு இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான தயாரிப்புக்களில் ஹமாஸ் ஈடுபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது.  

ஏனெனில், இஸ்ரேல் தனது நீண்ட கால நோக்கத்தை எட்டுவதற்காக திட்டமிடும் நாடே தவிர, குறுகிய நலன்களுக்காக தன்னை பலிகொடுப்பதில்லை.  இங்கே இந்த இராணுவ நடவடிக்கையால் குறுகிய நலனை (publicity) யை பெற்றது மட்டுமே ஹமாஸ் கண்ட வெற்றி. ""

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இஸ்ரேலிய படைகளின் காஸாவை இரு கூறாக்கும் நடவடிக்கை கிட்டதட்ட முடிவை நெருங்கிவிட்டதாக தெரிகிறது.

 

 

 

வடக்கு காஸ்ஸா , தெட்கு கஸ்ஸா. வடக்கு  காசா சுத்தமாக்க படட பின்னர் தெட்கு கஸ்ஸா சுத்தமாக்கப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2023 at 21:42, ஏராளன் said:

காசாவின் ஜபாலியா அகதிமுகாம் மீது இஸ்ரேல் விமானதாக்குதல் - 50க்கும் அதிகமானவர்கள் பலி

Published By: RAJEEBAN     31 OCT, 2023 | 08:55 PM

image

காசாவின் ஜபாலியா அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

F9xw6ayWMAAKhvi.jpeg

இஸ்ரேல் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

F9xw69LXoAAEPvC.jpeg

பொதுமக்கள் இடிபாடுகளிற்குள் இருந்து உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகின்றன.

https://www.virakesari.lk/article/168193

பொது மக்கள் மரணிப்பது ஒரு கவலையான விடயம். இருந்தாலும் பொதுவாக எல்லோரும் ஒன்றை மறந்து விடுகிறார்கள். ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இந்த கொலைக்களத்தை திறந்தவர்கள்.

இஸ்ரேல் மனித உயிர்களை பலி கொடுத்தது. மேலும் மனித உயிர்களை காப்பதட்காக எண்ணிமுடியாத பணத்தை செலவு செய்கிறது. அப்படி என்றால் இந்த பயங்கரவாதிகள் இந்த சண்டையை தொடங்கு முதல் மக்களின் பாத்து காப்பு பற்றி சிந்தித்திருக்க வேண்டும்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா , ஹூத்தி பயங்கரவாதிகளால் ஏவப்படும் எறிகணைகள் இஸ்ரேலில் விழுந்திருந்தால் காஸாவில் இறந்தவர்களை விட நிறைய பேர் இஸ்ரேவேலில் மரித்திருப்பார்கள்.

எனவே இந்த பயங்கரவாதிகள்தான் இதட்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனாலும் என்ன, பயங்கரவாதிகளுக்கு இதெல்லாமே தேவைப்படுகின்றது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

பொது மக்கள் மரணிப்பது ஒரு கவலையான விடயம். இருந்தாலும் பொதுவாக எல்லோரும் ஒன்றை மறந்து விடுகிறார்கள். ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இந்த கொலைக்களத்தை திறந்தவர்கள்.

இஸ்ரேல் மனித உயிர்களை பலி கொடுத்தது. மேலும் மனித உயிர்களை காப்பதட்காக எண்ணிமுடியாத பணத்தை செலவு செய்கிறது. அப்படி என்றால் இந்த பயங்கரவாதிகள் இந்த சண்டையை தொடங்கு முதல் மக்களின் பாத்து காப்பு பற்றி சிந்தித்திருக்க வேண்டும்.

ஹமாஸ், ஹிஸ்புல்லா , ஹூத்தி பயங்கரவாதிகளால் ஏவப்படும் எறிகணைகள் இஸ்ரேலில் விழுந்திருந்தால் காஸாவில் இறந்தவர்களை விட நிறைய பேர் இஸ்ரேவேலில் மரித்திருப்பார்கள்.

எனவே இந்த பயங்கரவாதிகள்தான் இதட்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனாலும் என்ன, பயங்கரவாதிகளுக்கு இதெல்லாமே தேவைப்படுகின்றது.  

இதைத்தானே இலங்கை இராணுவமும், அரசாங்கமும் எங்கள் விடயத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2023 at 20:24, Cruso said:

நீங்கள் சொல்லுவது போல பாலஸ்தீன அகதிகள் மட்டுமல்ல எல்லா இஸ்லாமியர்களும் அப்படிதான் செய்கிறார்கள். இஸ்லாமியர்களே ஒரு தடவை கூறி இருந்தார்கள் மேட்குலகை யுத்தம் இல்லாமல் இஸ்லாமிய நாடாக்குவதாக. அவர்கள் எல்லா வசதிகளையும் அங்கு பெற்றுக்கொண்டு தங்கள் இனத்தையும் பெருக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

வெள்ளைக்காரன் மனித உரிமை எண்டு சொல்லிக்கொண்டு கண்மூடி தனமாக திரிகிறான். இன்று லண்டன் மாநகர் முதல்வர், ஸ்கொட்லான்ட் முதலமைச்சர் முஸ்லிம்கள் கைகளில். இன்னும் கொஞ்ச காலத்தில் அவர்கள்தான் பெரும்பான்மையினர்.

மற்றைய எல்லா நாடுகளிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை காணலாம். நிச்சயமாக ஒரு நாளைக்கு எல்லோருக்கும் முறயான ஆப்பு வைப்பார்கள். 

புரிந்தால் நன்று !!
எல்லா வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. 

கா கூ என்று கத்தி 
வாவ் வாவ் என்று குலைகிற நாய்கள் சென்று படுத்துவிடும் 

பாய்கிற புலிகள் தக்க தருணத்திற்கு மெதுவாகவே நகரும் 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆம் அவர்கள் பயங்கரவத்திற்கு எதிராக போர் செய்துகொண்டு இருக்கும் 
இந்த இக்கட்டான சூழலில்  
யாழ் கள  தளபதிகள் தலைமையில் நாம் எமது ஆதரவை இஸ்திரேலி ஜனநாயக இராணுவத்துக்கு 
கொடுப்பது என்பது இன்றி அமையாத ஒரு கடமை 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

ஆம் அவர்கள் பயங்கரவத்திற்கு எதிராக போர் செய்துகொண்டு இருக்கும் 
இந்த இக்கட்டான சூழலில்  
யாழ் கள  தளபதிகள் தலைமையில் நாம் எமது ஆதரவை இஸ்திரேலி ஜனநாயக இராணுவத்துக்கு 
கொடுப்பது என்பது இன்றி அமையாத ஒரு கடமை 

 

விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில், இலங்கை ஆமிக்கு ஆதரவாக “சமாதான பிராசாரம்” செய்பவர்களை, இது சிங்களவர் நாடு, நாம் சோழ வதேறிகள் அடங்கித்தான் வாழவேண்டும் அதுதான் எமது உண்மை மார்க்கம் என ஒரு மொக்கு கூட்டம் கத்தி கொண்டு திரிந்தால், அவர்களை, அவர்கள் எப்படி கையாண்டிருப்பர்?

அது பிழை என யாரும் எழுதினால் உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும்.

தக்காளி சோஸ் வடியுது, தொடைச்சிகோங்கோ🤣

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் சண்டை நிறுத்தத்துக்கு பைடன் அழைப்பு - தற்போதைய தகவல்கள்

பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் சண்டையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவிந் மினசோட்டாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசும்போது அவர் கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு கூறினார்.

"ஒரு தற்காலிக சண்டை நிறுத்தம் தேவை என்று நான் நினைக்கிறேன். சண்டையை நிறுத்துவது என்றால், பணயக் கைதிகளை காப்பாற்ற நேரம் கொடுங்கள் என்கிறேன்," என்று அவர் கூறினார்.

மனிதாபிமான உதவி, ஹமாஸ் பிடியில் உள்ள 240 பணயக் கைதிகள் ஜோ பைடன் குறிப்பிட்டதாக வெள்ளை மாளிகை பின்னர் தெளிவுபடுத்தியது.

 

அந்த நிகழ்ச்சியில் "இப்போது போர்நிறுத்தம்" என்று பாடிய பெண்ணை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். பின்னர் பேசிய பைடன், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்களுக்கு தற்போதைய நிலைமை "நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது" என்று கூறினார்.

"நான் இரு தனி நாடுகள் தீர்வை ஆதரித்தேன்; தொடக்கத்தில் இருந்தே அதுதான் என் நிலைப்பாடு" என்று பைடன் மேலும் கூறினார். "உண்மை என்னவென்றால், ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. ஒரு வெளிப்படையான பயங்கரவாத அமைப்பு." என்று அவர் மேலும் கூறினார்.

 
காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"காயமடைந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர்"

20,000 க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்கள் காஸா பகுதியில் இன்னும் சிக்கியுள்ளனர் என்று எல்லைகள் அற்ற மருத்துவர்கள் (MSF) அமைப்பு தெரிவித்துள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக 335 வெளிநாட்டவர்கள், 76 படுகாயமடைந்த, நோய்வாய்ப்பட்டவர்கள் ரஃபா எல்லைப் பாதை வழியாக வெளியே கொண்டு வரப்பட்டதாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை எகிப்திய கள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதைக் கண்டதாக ஏஎஃப்பி தெரிவித்துள்ளது.

இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுமாறு எம்.எஸ்.எஃப். அழைப்பு விடுத்துள்ளது. சண்டையை நிறுத்துவதுடன், முக்கியமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

"காஸாவில் அனைவரும் உணவு கேட்கிறார்கள், தண்ணீர் கேட்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்தபோது அதிர்ச்சியடைந்தேன்" என்று போர் தொடங்கியதில் இருந்து காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஐ.நா அதிகாரி பிலிப் லாஸரினி கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/crg1mk99g3vo

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில், இலங்கை ஆமிக்கு ஆதரவாக “சமாதான பிராசாரம்” செய்பவர்களை, இது சிங்களவர் நாடு, நாம் சோழ வதேறிகள் அடங்கித்தான் வாழவேண்டும் அதுதான் எமது உண்மை மார்க்கம் என ஒரு மொக்கு கூட்டம் கத்தி கொண்டு திரிந்தால், அவர்களை, அவர்கள் எப்படி கையாண்டிருப்பர்?

அது பிழை என யாரும் எழுதினால் உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும்.

தக்காளி சோஸ் வடியுது, தொடைச்சிகோங்கோ🤣

 

அதுக்கும் 
பலஸ்தீனியர்கள் மேல் நடக்கும் இனஅழிப்பு போரை நிறுத்து 
அப்பாவி சிறுவர்களை கொல்வதை நிறுத்து எண்பதுக்கும் 
என்ன தொடர்ப்பு என்று எனக்கு புரியவில்லை 

ஆனால் அதில்  உங்களுக்கு எதோ வில்லங்கம் இருக்கு என்பது புரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

அதுக்கும் 
பலஸ்தீனியர்கள் மேல் நடக்கும் இனஅழிப்பு போரை நிறுத்து 
அப்பாவி சிறுவர்களை கொல்வதை நிறுத்து எண்பதுக்கும் 
என்ன தொடர்ப்பு என்று எனக்கு புரியவில்லை 

ஆனால் அதில்  உங்களுக்கு எதோ வில்லங்கம் இருக்கு என்பது புரிகிறது 

ஏன் என்றால் நீங்கள் இந்த ரெண்டு பக்கமும் ஜடாமுடி தொங்கவிட்ட யூத பழமைவாதிகள் ஏன் இப்படி எதிர்கிறார்கள் என்ற அடிப்படையை விளங்கி கொள்ளாமல் அல்லது விளங்கியும் மறைத்து எழுதுகிறீர்கள்.

இவர்கள் இப்படி எதிர்ப்பதன் அடிப்படைகாரணம் - இவர்கள் நம்பிக்கை படி (டோரா) ஆண்டவன் யூதருக்கு கொடுத்த சாபத்தினால் அவர்கள் நாடு அற்று அலைவார்கள். அப்படி அலையும் போது அவர்கள் வாழும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் ஆண்டவனுக்கு கொடுத்த உறுதிமொழி.

பின்னர் ஆண்டவனே இஸ்ரேலை உருவாக்கித்தருவார்.

இவர்கள் அது வரை பொறுக்கிறார்கள். தாம் வாழும் நாடு என கருதும் பலஸ்தீனுக்கு விசுவாசம் காட்டுகிறார்கள்.

இவர்களை பொறுத்தவரை யூதர் கூடி இஸ்ரேலை உருவாக்கியமை யூத மத நிந்தனை. 

இப்போ புரிகிறதா என் ஒப்பீடு ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.