Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு காசாவில் 11 லட்சம் பேரை ஒரே நாளில் வெளியேற எச்சரிக்கும் இஸ்ரேல் ராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல் - காசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

காசா பகுதியில் வசிக்கும் மக்களை ‘பாதுகாப்புப் காரணங்களுக்காக’ அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

காசா நகரத்தில் வசிப்பவர்களை தெற்கு பகுதிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது.

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 447 குழந்தைகள், 248 பெண்கள் உட்பட 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்தாக்குதலின் பகுதியாக, தரைவழித் தாக்குதல் நடத்த காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், கனரக பீரங்கிகள் மற்றும் டாங்கிகளைத் திரட்டி வருகிறது.

இதைத் தொடர்ந்தே, அடுத்த 24 மணிநேரங்களில் காசா நகரத்தில் இருக்கும் மக்களை தெற்கிலிருக்கும் பகுதிகளுக்கு இடம்பெயரச் சொல்லியிருக்கிறது இஸ்ரேல்.

ஐ.நா.வின் தகவலின்படி, வாடி காசா எனப்படும் பகுதிக்கு வடக்கே இருக்கும் 11 லட்சம் மக்கள் ஒரே நாளில் தெற்கு நோக்கி இடம் பெயர வேண்டிவரும்.

 
இஸ்ரேல், பாலத்தீனம், காசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

'அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள்'

அடுத்த அறிவிப்பு வரும்போதுதான் வெளியேறிய மக்கள் மீண்டும் காசாவுக்குத் திரும்ப முடியும் என்றி இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருக்கிறது.

காசா நகரின் கீழ் சுரங்கப்பாதைகளுக்குள்ளும், பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்களுக்குள்ளும் ஹமாஸ் இயக்கத்தினர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.

"உங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் உங்கள் குடும்பங்களின் பாதுகாப்பிற்காகவும், உங்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து விலகிச் செல்லுங்கள்," என காசா நகரின் பொதுமக்களிடம் இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியிருக்கிறது.

மேலும், அடுத்து வரும் நாட்களில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் காசா நகரில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்றும் பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க விரிவான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

 
இஸ்ரேல், பாலத்தீனம், காசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

‘ஏற்கனவே துயரமான சூழ்நிலையை ஒரு பேரழிவாக மாற்றக்கூடிய சாத்தியத்தைத் தவிர்க்க, இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு’ ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது

‘பேரழிவாக மாறக்கூடிய சாத்தியம்’

வாடி காசாவின் வடக்கே வசிக்கும் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு காசாவுக்கு இடம்பெயர வேண்டும் என்று இஸ்ரேலிய ராணுவம் ஐ.நா.விடம் கூறியுள்ளதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தோராயமாக 11லட்சம் மக்களை இடம்பெயரச் சொல்வது என்று ஐ.நா. கூறுகிறது. இது காசா பகுதியின் முழு மக்கள்தொகையில் பாதி. இதில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட காசா நகரமும் அடங்கும்.

பயங்கரமான மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இத்தகைய இடப்பெயர்வு நடைபெறுவது சாத்தியமற்றது என ஐ.நா. கூறுகிறது.

‘ஏற்கனவே துயரமான சூழ்நிலையை ஒரு பேரழிவாக மாற்றக்கூடிய சாத்தியத்தைத் தவிர்க்க, இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு’ ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர்பு அதிகாரிகள் காஸாவில் உள்ள ஐ.நா குழுத் தலைவர்களிடம் இந்த உத்தரவு பற்றி கூறியிருக்கின்றனர். அந்த உத்தரவில் அனைத்து ஐ.நா ஊழியர்களும், ஐ.நா நடத்தும் பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளடக்கிய ஐ.நா வசதிகளில் அடைக்கலம் பெற்றவர்களும் வெளியேறும்படிக் கூறப்பட்டிருக்கிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரு ஒரு அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

 
இஸ்ரேல், பாலத்தீனம், காசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐ.நா.வில் இருக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதர் கிலாட் எர்டன், காஸாவில் வசிப்பவர்களுக்கு இஸ்ரேல் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து வருவதாகக் கூறியுள்ளார்

‘ஐ.நா. இஸ்ரேலுக்கு போதிக்கக் கூடாது’

ஐ.நா.வின் கோரிக்கைக்கு எதிர்வினையாற்றியிருக்கும் இஸ்ரேல், அதனை ‘வெட்கக்கேடானது’ என்று கூறியிருக்கிறது.

ஐ.நா.வில் இருக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதர் கிலாட் எர்டன், காஸாவில் வசிப்பவர்களுக்கு இஸ்ரேல் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து வருவதாகவும், ஹமாஸுக்கு எதிரான அதன் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடாதவர்களுக்கு தீங்கு விளைவிப்பதைக் குறைக்க முயற்சிப்பதாகவும் கூறினார்.

"பல ஆண்டுகளாக, ஹமாஸ் குழுவுக்கும், அதன் ஆயுதங்கள் மற்றும் கொலைக்குற்றங்களுக்கும் மறைவிடமாகப் பயன்படும் காசா பகுதியின் கட்டுமானங்களைப் பற்றி ஐ.நா சபை பாராமுகமாக இருந்து வருகிறது," என்று அவர் கூறினார்.

"இப்போது, ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலின் குடிமக்களுக்கு ஆதரவாக நிற்பதற்குப் பதிலாக, ஐ.நா. இஸ்ரேலுக்குப் போதனை வழங்குகிறது," என்று எர்டன் கூறினார்.

மேலும் அவர், “பணயக்கைதிகளை மீட்பது, ஹமாஸைக் கண்டிப்பது மற்றும் இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை ஆதரிப்பது போன்றவற்றில் இப்போது ஐ.நா கவனம் செலுத்துவதே நல்லது,” என்று கூறினார்.

 
இஸ்ரேல், பாலத்தீனம், காசா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

காசாவின் பொது சுகாதார நிலையங்கள் அடிக்கடி மின்வெட்டு மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. பல சேவைகள் மற்றும் சிறப்பு சிகிச்சைகள் கிடைக்கவில்லை

காசாவில் தீவிரமடைந்திருக்கும் மனிதநேயச் சிக்கல்கள்

சுமார் 22 லட்சம் மக்கள் வசிக்கும் காசா பகுதிக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களை இஸ்ரேல் முற்றிலுமாகத் துண்டித்துள்ளது.

இதனால் அங்குள்ள மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள், பள்ளிகள், மற்றும் பிற அத்தியாவசியச் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

முன்னதாகவே காசாவில் உள்ள 80% மக்களுக்கு சர்வதேச உதவி தேவைப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

காசாவில் உள்ள ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையத்திலும், எரிபொருள் இல்லாததால், அக்டோபர் 11-ஆம் தேதி மின் உற்பத்தி நின்றுவிட்டது. இதனால், அங்குள்ள மருத்துவமனைகள் தங்களது ஜெனரேட்டர்கள் மூலம் படுகாயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். குறைந்த அளவு எரிபொருளையே கொண்டிருந்த சில மருத்துவமனைகள், சில நாட்களில் தங்களிடம் உள்ள எரிபொருள் தீர்ந்துவிடும் எனக்கூறியுள்ளன.

தண்ணீர் விநியோகத்தைத் துண்டிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையால், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் இன்றி தவிக்கன்றனர். உள்ளூரில் உள்ள தண்ணீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் செயல்படுவதற்கும் எரிபொருள் தேவைப்படும்.

காசாவிற்கு சரக்கு கொண்டு வரப்படும் கெரேம் ஷாலோம் பகுதியும் மூடப்படுவதால், உணவு இருப்பும் குறைந்து வருகிறது. காசாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு கடைகள் பொருட்கள் பற்றாக்குறை உள்ளதாகக் கூறியுள்ளன. பெரும்பாலான கடைகளில் இரண்டு வாரங்களுக்கு போதுமான உணவு இருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது.

காசாவின் பொது சுகாதார நிலையங்கள் அடிக்கடி மின்வெட்டு மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. பல சேவைகள் மற்றும் சிறப்பு சிகிச்சைகள் கிடைக்கவில்லை.

குறைந்தது இரண்டு லட்சம் மக்கள், தங்கள் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதாலும், உயிருக்கு பயந்தும் இடம் பெயர்ந்துள்ளனர். பெரும்பாலானோர் ஐ.நா. நடத்தும் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/clm0dv2dn92o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெயர தொடங்கியது காசாவின் வடபகுதி

13 OCT, 2023 | 05:01 PM
image
 

காசாவின் வடபகுதியிலிருந்து  மக்கள் பெருமளவில் இடம்பெயரத்தொடங்கியுள்ளனர்.

5c395268-00c7-4a32-b7a8-2a567231689a.jpg

நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களையும் குடும்பங்களையும் காணமுடிவதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

gaza_civilaian_fleeing11.jpg

gaza_fleeing.jpg

செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான கார்கள் மோட்டார் சைக்கிள்கள் டிரக்குகளில் பெருமளவு பொருட்களுடன் இடம்பெயர்வதை மக்கள் தங்கள் கால்நடைகளுடன் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

gaza_flleing3.jpg

https://www.virakesari.lk/article/166800

1995 யாழ் இடப்பெயர்வு நினைவுக்கு வருகிறது, ஐப்பசி மாதக் கடைசியில் இடம் பெயர்ந்தோம் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் தென்பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட 70க்கும் அதிகமானவர்கள் பலி

Published By: RAJEEBAN

14 OCT, 2023 | 05:11 PM
image
 

தென்காசாவை நோக்கி இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்த பாலஸ்தீனியர்களின் வாகனத்தொடரணி மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் பெரும் அழிவு இடம்பெற்றுள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

வடகாசாவிலிருந்து தென்காசாவை நோக்கி செல்லும் சலா அன் டின் வீதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து பெருமளவு மக்கள் இடம்பெயரத்தொடங்கியதால் அந்த பகுதியில் பெருமளவு சனநெரிசல் காணப்பட்டவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோக்களில் 12 உடல்களை அடையாளம் காணமுடிகின்றது என தெரிவித்துள்ள பிபிசி அதில் சில இரண்டு முதல் ஐந்து வயதுடையவர்களினது போல தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளது.

அனேகமான உடல்கள் டிரக்கொன்றின் பின்பகுதியில் காணப்படுகின்றன-ஏனைய சேதமடைந்த வாகனங்களையும் காணமுடிகின்றது

இந்த தாக்குதலில் 70 பேர் கொல்லப்ட்டனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166864

1995 ஒரே இரவில் வலிகாம மக்களின் இடப்பெயர்வு யாருக்கும் நினைவு வருகிறதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மிரட்டியதால் புகலிடம் தேடிச் சென்ற காசா மக்கள் மீதும் தாக்குதல் - யார் காரணம்?

இஸ்ரேல் vs பாலத்தீனம்
14 அக்டோபர் 2023, 13:26 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த 7 அக்டோபர் 2023 அன்று அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை 20 நிமிடத்தில் ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குதலைத் தொடங்கினர். பின்னர் அதே நாளில் மீண்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டதுடன், ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் நாட்டிற்குள்ளும் ஊடுறுவி தாக்குதல் நடத்தினர். இதில் 1,300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 150 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்ததுடன், பலரை காசாவுக்குக் கடத்திச் சென்றனர்.

ஹமாஸ் ஆயுதக் குழுவின் தாக்குதல் ஒரு தீவிரவாத நடவடிக்கை என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கண்டனம் தெரிவித்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இத்தாக்குதலைக் கண்டித்தன.

இதற்கிடையே, போருக்குத் தயார் நிலைப் பிரகடனத்தை இஸ்ரேல் பிறப்பித்ததுடன் உடனடி தாக்குதலையும் தொடங்கியது. இஸ்ரேலுக்கு உதவும் விதத்தில் அமெரிக்கா ஒரு போர்க்கப்பலையும் அனுப்பிவைத்தது. தாக்குதல் தொடங்கி ஒருவாரம் கடந்த நிலையில் காசா பகுதியில் தரைவழித் தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கியது. இந்தப் போரில் கிட்டத்தட்ட 2,000 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 3,38,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

காசா மீது வெள்ளிக்கிழமை நடத்திய தரைவழித் தாக்குதலில், காணாமல் போன இஸ்ரேலியர்களின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடத்திச் சென்ற இஸ்ரேலியர்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன், இந்த தரைவழித் தாக்குதலை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலாக நடத்தியதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

 
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

இஸ்ரேல்-ஹமாஸ்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

காசாவிலிருந்து கால்நடையாக தென்பகுதியை நோக்கி பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

வடக்கு காசாவில் வசிக்கும் 11 லட்சம் பாலத்தீனர்களை தெற்கு நோக்கி பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளதால் பொதுமக்களிடையே பீதி உருவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை பத்து மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே இவ்வாறு பொதுமக்கள் இடம்பெயரவேண்டும் என்றும் இஸ்ரேல் கூறியது. பொதுமக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் வாகனங்கள் மூலமாகவோ அல்லது கால்நடையாகவோ வெளியேறி வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தவேண்டிய சாலைகளையும் இஸ்ரேல் ராணுவம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ், இப்படி பொதுமக்களை இடம்பெயரச் செய்வது மிகவும் ஆபத்தானது என்றும், மனிதாபிமான உணர்வுடன் இந்நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வடக்கு காசாவில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் இஸ்ரேலின் உத்தரவை "அமல்படுத்துவது முற்றிலும் சாத்தியமற்றது" என்று கூறினார்.

"காசாவைப் போன்ற ஒரு இடத்தில் 24 மணி நேரத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற முடியும் என்பதை கற்பனை செய்யக் கூட முடியாது என்றும் இது ஒரு மனிதாபிமற்ற நடவடிக்கையாக மட்டுமே இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

 
இஸ்ரேல்-ஹமாஸ்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

பொதுமக்கள் இடம்பெயர கூடுதல் கால அவகாசம் அளிக்கவேண்டும் என இஸ்ரேல் நாட்டுக்கு பலதரப்பிலும் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்த போதிலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைப் பின்பற்றுவதும் கடமையாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாதி, பாலஸ்தீனர்களை இப்படி இடப்பெயர்ச்சி செய்ய முயலும் இஸ்ரேலின் எந்தவொரு நடவடிக்கையும் அந்தப் பகுதியில் ஒரு பெரும் மோதலுக்கு வித்திடும்" தள்ளும் என்று கூறினார்.

ஒரு அறிக்கையில், காசாவுக்கான மனிதாபிமான உதவியை இஸ்ரேல் தடுப்பதும், வடக்கில் உள்ள குடிமக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவும் சர்வதேச சட்டத்தை "அப்பட்டமான" மீறுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

இதற்கிடையே, காசாவின் வடபகுதியில் இருந்து இடம்பெயர்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

ஆன் அபு ஷரர் என்பவருடைய மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், இந்த இடம்பெயரும் செயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. "எனது மனைவிக்கு இன்னும் 5 நாட்களில் குழந்தை பிறக்கவுள்ளது," என 29 வயது நிரம்பிய வழக்கறிஞர் ஆன் அபு ஷரர் வேதனையுடன் பிபிசிடம் தெரிவித்தார். "அவர் சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தையைப் பெற்றெருக்க ஒரு நல்ல மருத்துவமனையைக் கண்டறியும் தேவையில் இருக்கிறேன்."

இந்த தம்பதிக்கு, இஸ்ரேல் அரசின் உத்தரவு குறித்து வியாழக்கிழமையன்று இரவு தான் தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் காசாவில் உள்ள வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றாலும், உறவினர்கள் வற்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. வாகனங்களிலும், கால்நடையாகவும் தெற்கு பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவர்களுடன் அவர்களும் இணைந்துகொண்டனர்.

அதனால் வெறும் இரண்டு மணிநேரத்தில் ஒரு குழந்தைக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் கிளம்பிவிட்டனர். "நாங்கள் எங்கள் வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறினோம். ஆனால் நாங்கள் எங்கே போகிறோம் என்பது எங்களுக்குத் தெரியாது. எந்த ஒரு ஏற்பாட்டையும் செய்யமுடியவில்லை என்பது மட்டுமல்ல, எந்த இடமும் பாதுகாப்பான இடமாகத் தெரியவில்லை," என அவர் நடுங்கும் குரலில் தெரிவித்தார்.

இஸ்ரேல் விதித்துள்ள கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்று காசா மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

புகலிடம் தேடிச் சென்ற காசா மக்கள் மீது தாக்குதல்

இஸ்ரேல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இடம் பெயர்ந்த தெற்கு காசா நோக்கி இடம் பெயர்ந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோரை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்றின் மீது திடீர் தாக்குதல் நடந்தது. அந்த வாகனத்தில் சுமார் 30 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.

உயிர் பிழைக்க பாதுகாப்பான இடம் தேடிச் சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என்று பாலத்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் அரசோ, அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது.

 
இஸ்ரேல்-ஹமாஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

காசாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் தகர்ந்து விழுந்துவிட்டன.

இப்போது அவர்கள் தெற்கு நகரமான ரஃபாவை அடைந்துள்ளனர். அங்குதான் ஏற்கெனவே இடம்பெயர்ந்து வந்த பாலத்தீன மக்கள் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கியுள்ளனர். ரஃபாவில் ஒரு நல்ல மகப்பேறு மருத்துவமனை இருப்பதால் அந்த இடத்தைத் தேர்வு செய்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

இப்படி இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களில் பலர் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். வரௌண்ட் அல்-டாகஃப் என்ற 24 வயது மாணவி, தனது குடும்பத்தினர் 7 பேருடன் இணைந்து தெற்கு பகுதிக்குப் பயணம் மேற்கொண்டார். அவரது குடும்பத்தினர் இப்போது டெயர் அல்-பாலா நகரில் ஒரே வீட்டில் 20 பேர் வசிக்கும் இடத்தில் தங்கியுள்ளனர். “நாங்கள் அமர்வதற்கு ஒரு சேர் கூட இங்கில்லை. என்னுடைய வீட்டை விட்டு வெளியேறி இப்படித் தவிப்பதை எப்படி விளக்குவதற்கு வார்த்தைகளே இல்லை” என்கிறார் அவர்.

கடந்த வார இறுதியில் இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பொதுமக்கள் மற்றும் ராணுத்தினர் மீது தாக்குதல் நடத்த எல்லை தாண்டியதில் 1300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு நடவடிக்கையில் 2,000 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இருந்து பிரிட்டன் குடிமக்களை மீட்பதற்காக அந்நாட்டு அரசு ஒரு சார்ட்டட் விமானத்தை வெள்ளிக்கிழமையன்று அனுப்பியது. அந்த விமானம் சைப்ரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளது. டெல் அவிவ் நகரிலிருந்து சைப்ரஸ் நாட்டுக்கு மீட்பு விமானம் இரண்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே மற்ற வணிக ரீதியிலான போக்குவரத்து விமானங்கள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டுக்கான பயணங்களை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது எக்ஸ் பதிவில் அவசர மற்றும் ஆபத்து காலத் தேவைகளை பொதுமக்களுக்கு அளிப்பதற்காக நிவாரணப் பொருட்களுடன் ஒரு விமானத்தை அனுப்பியுள்ளதாகவும், அந்த விமானம் காசாவின் எல்லையில் இருந்து சுமார் 28 மைல் (45 கிமீ) தொலைவில் உள்ள எகிப்திய நகரமான ஆரிஷில் தரையிறங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

எரிபொருள், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை

திங்களன்று எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியுடன் அவர் பேசியதைத் தொடர்ந்து தொடர்ந்து, இந்த விமானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

காசாவை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ள நிலையில், அங்கு எரிபொருள், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை இந்த முற்றுகை நீடிக்கும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அளிப்பதற்காக முற்றுகையைத் திரும்பப்பெறுமாறு ஐ.நா. சபை இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

காசாவுடனான இஸ்ரேல் எல்லையில் சுமார் 3,00,000 பாதுகாப்பு வீரர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டிற்குள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் லெபனானில் இருந்து எல்லை தாண்ட முயற்சித்த ஏராளமானோரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் செய்திகள்

காசா மீது நடக்கவுள்ள தரைவழித் தாக்குதல் குறித்த செய்திகள் சனிக்கிழமையன்று ஊடகங்களின் முதல் பக்கங்களில் அதிக எண்ணிக்கையில் வெளியாகியுள்ளன.

முன்னதாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட உள்ளூர் அளவிலான சோதனைகள் இஸ்ரேலிய பணயக்கைதிகளைக் கண்டுபிடித்து "பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்கள் அடங்கியுள்ள பகுதியை சுத்தப்படுத்தும்" நோக்கம் கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக டெய்லி டெலிகிராப் மேற்கோள் காட்டுகிறது.

டெய்லி மெயில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கை "வெறும் ஆரம்பம்" என்றும், "இந்த போரை முன்னெப்போதையும் விட வலுவாக முடிப்போம்" என்று சபதம் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

காசா ஒரு "நரக குழிக்குள்" இறங்குவதாகவும், "சரிவின் விளிம்பில்" இருப்பதாகவும் தி ஐ நியூஸ் எச்சரித்துள்ளதாகவும், ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள 4,23,000 க்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ நியூஸ் கூறியுள்ளது.

"அப்பாவிகளுக்கு உயிர் வாழ வாய்ப்பு கொடுங்கள்" என்று டெய்லி எக்ஸ்பிரஸில் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. "ஹமாஸ் செய்த பாவங்களுக்காக காசா குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது" என்று கேன்டர்பரி பேராயர் இஸ்ரேலுக்கு விடுத்துள்ள வேண்டுகோளையும் டெய்லி எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமையன்று லண்டனில் பாலத்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நிலையில், ங்கிலாந்தில் மெட் போலீசார் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் என்றும், எந்த வித தாக்குதலும் நடக்காமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் டெய்லி மிரர் கூறுகிறது. துணை உதவி ஆணையர் லாரன்ஸ் டெய்லர், "மிக முக்கியமான காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக" தெரிவித்திருந்தார் என்றும் டெய்லி மிரர் கூறுகிறது.

ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு மக்கள்

கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்படி உயிரிழந்த 100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் பட்டியலைத் தொகுத்து ஏஎஃப்பி (AFP )வெளியிட்டுள்ளது, உயிரிழந்த, காணாமல் போன அல்லது பணயக் கைதிகளாகச் சிக்கியுள்ள வெளிநாட்டினர் குறித்த தகவல்கள் ஒவ்வொரு நாட்டு அரசும் தெரிவித்துள்ள தகவல்களுடன் இணைத்து உறுதி செய்யப்பட்டுள்ளது:

அமெரிக்கா: 27 பேர் உயிரிழப்பு

தாய்லாந்து: 24 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ்: 15 பேர் உயிரிழப்பு

நேபாளம்: 10 பேர் உயிரிழப்பு

அர்ஜென்டினா: 7 பேர் உயிரிழப்பு

உக்ரைன்: 7 பேர் உயிரிழப்பு

ரஷ்யா: 4 பேர் உயிரிழப்பு

இங்கிலாந்து: 4 பேர் உயிரிழப்பு

சிலி: 4 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரியா: 3 பேர் உயிரிழப்பு

பெலாரஸ்: 3 பேர் உயிரிழப்பு

கனடா: 3 பேர் உயிரிழப்பு

சீனா: 3 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ்: 3 பேர் உயிரிழப்பு

பிரேசில்: 3 பேர் உயிரிழப்பு

பெரு: 2 பேர் உயிரிழப்பு

ருமேனியா: 2 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியா, அஜர்பைஜான், கம்போடியா, அயர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கொலம்பியா, பராகுவே ஆகிய ஒவ்வொரு நாட்டினரும் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும்,

ஜெர்மனி, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த பலர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், இத்தாலி, பராகுவே, இலங்கை, தான்சானியா நாடுகளைச் சேர்ந்த பலரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க குடிமக்கள் காசாவை விட்டு ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் செல்ல முடியும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இஸ்ரேலிய மற்றும் எகிப்திய அரசுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையைத் தொடர்ந்து, இன்று உள்ளூர் நேரப்படி 12:00 மணி முதல் 17:00 மணி வரை கடவுப்பாதை திறந்திருக்கும்.

காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ், அமெரிக்கக் குடிமக்கள் பிரதேசத்தை விட்டு வெளியேற அனுமதிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

'ஹமாஸை ஒழிப்போம்' - இஸ்ரேல் ராணுவம்

லெப்டினன்ட் கர்னல் கான்ரிகஸ் கூறுகையில், காசா பகுதியைச் சுற்றிலும் இஸ்ரேலிய ரிசர்வ் வீரர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றனர் என்றார்.

"எங்கள் நோக்கம் மிகத் தெளிவாக உள்ளது, இந்தப் போரின் இறுதிக் கட்டம், ஹமாஸ் மற்றும் அதன் ராணுவத் திறன்களை சிதைத்து, அடிப்படையில் நிலைமையை மாற்றுவோம். இதனால் ஹமாஸ் மீண்டும் ஒருபோதும் இஸ்ரேலிய குடிமக்கள் அல்லது வீரர்கள் மீது எந்தவிதமான தாக்குதலையும் நடத்த முடியாது."

லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு நிகழ்வைப் பற்றி அவர் பேசும் போது, “நாங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேலிய ராணுவத்தினரை நோக்கி டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை வீசினர். சிறிது நேரம் போர் நடந்தது, இறுதியில் நிலைமை அமைதியானது," என்று கூறினார். "பின்னர் ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு ட்ரோன்களை அனுப்பியது என்பதுடன் இஸ்ரேலிய விமானங்களுக்கு எதிராக தரையிலிருந்து ஏவுகணைகளை வீசியது."

அந்த இரண்டு முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. ஆனால் வடக்கு எல்லையில் நிலைமை "மிகவும் பதட்டமாக உள்ளது" என்றார் அவர்.

இஸ்ரேலை எதிர்த்து கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போரில் ஈடுபடப்போவதாக ஹமாஸ் குழுவினர் அறிவித்துள்ளர்.

https://www.bbc.com/tamil/articles/c89w43j2vgno

  • கருத்துக்கள உறவுகள்

இனச் சுத்திகரிப்பு என ஐநா மனித உரிமை அமைப்பு  குற்றச்சாட்டு.

“In the name of self-defense, Israel is seeking to justify what would amount to ethnic cleansing,” UN Special Rapporteur Francesca Albanese said,"

 

https://www.ohchr.org/en/press-releases/2023/10/un-expert-warns-new-instance-mass-ethnic-cleansing-palestinians-calls#:~:text=“Israel has already carried out,the limits of international law.

😏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் கெடு முடிந்தாலும் மக்கள் காஸாவை விட்டு வெளியேறாதது ஏன்?

காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ப்பிராஸ் கிலானி
  • பதவி, பிபிசி அரபிக்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

வடக்கு காஸா பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேல் அளித்த காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனால், சிலர் இன்னும் காஸாவை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறுகின்றனர்.

இஸ்ரேல் அளித்த காலக்கெடு முடிவடைந்தாலும், முகமது இப்ராஹிம் வடக்கு காஸாவை விட்டு வெளியேறப் போவதில்லை.

வீட்டின் அறையில் 42 வயதான இப்ராஹிம் பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ள தனது உறவினர்களுடன் அமர்ந்துள்ளார். அவர்களில் சிலர் தங்களுக்குள் பேசுகிறார்கள்.

மற்றவர்கள் இந்த நெருக்கடி தொடர்பான செய்திகளை தங்கள் தொலைபேசியில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

"என் நிலத்தை நான் விட்டுக் கொடுக்கவில்லை, ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்," என்கிறார் இப்ராஹிம்.

"அவர்கள் எங்கள் தலைக்கு மேல் உள்ள இந்த கூரைகளை அழித்தாலும், என்னால் வேறு எங்கும் செல்ல முடியாது, நான் இங்கேயே தான் இருப்பேன்," என்கிறார் அவர்.

இப்ராஹிமும் அவரது குடும்பத்தினரும் ஏற்கனவே காஸா நகரைச் சுற்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்றுள்ளனர்.

 
காஸா

பட மூலாதாரம்,EPA-EFE

படக்குறிப்பு,

தண்ணீர், உணவு, மின்சாரம் ஆகியவை துண்டிக்கப்பட்டதால் காஸாவில் நிலைமை மோசமாகி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, ராக்கெட்டுகள் வீசப்பட்டபோது, என் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஓடிவிட்டேன், என்றார் இப்ராஹிம்.

இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜபாலியா பகுதியை விட்டு வெளியேறி ஷேக் ரத்வானுக்கு வந்தனர். ஆனால், அந்தப் பகுதியும் குறிவைக்கப்பட்டு தாக்கப்படும் என்பதை அவர்கள் அறிந்தனர். இதற்குப் பிறகு அவர் காஸாவின் புறநகர்ப் பகுதியில் குடியேற்றச் சென்றனர்.

ஆனால், இப்போது அவர் வடக்கு காசாவை விட்டு வெளியேறுவது சரியாக இருக்காது. இருப்பினும், வடக்கு பகுதியை விட்டு வெளியேறுமாறு மக்களை எச்சரித்துள்ளது, இஸ்ரேல்.

"காஸாவின் தெற்குப் பகுதிக்கு செல்லச் சொல்கிறார்கள். இப்போது நானும் என் குடும்பமும் எங்கு செல்ல வேண்டும்?" எனக் கேட்கிறார் இப்ராஹிம்.

இப்ராஹிமின் பிள்ளைகள் தங்கள் வீட்டின் தோட்டத்தை நினைவு கூர்கின்றனர். இப்போது அவர்கள் மற்ற உறவினர்களுடன் ஒரு குடியிருப்பில் அடைக்கப்பட்டுள்ளனர். அவரது மகன் அஹ்மத் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் சைக்கிள் ஓட்டுவதை விரும்பினார்.

இப்ராஹிமின் மகன் அஹ்மத் இப்போது தனது நண்பன் இன்னும் உயிருடன் இருக்கிறானா என்று தந்தையிடம் கேட்டான். ஆனால், அஹ்மத்தால் அவனுடைய நண்பனை அடைய வழியில்லை.

 
அபு
படக்குறிப்பு,

அபு, குழுாயில் உள்ள கடைசி துளி நீரை எடுக்க முயற்சிக்கிறார்

'உணவு இல்லை, தண்ணீர் இல்லை, வாழ்க்கை இல்லை'

அருகிலுள்ள தெருவில், 38 வயதான அபு ஜமீல், கட்டடம் கட்டுபவர். குடிநீர் குழாய் அருகே அமர்ந்து கடைசி சில துளிகளை குடிக்க முயற்சிக்கிறார்.

"எட்டு நாட்களாக இங்கு உணவோ, தண்ணீரோ இல்லை” என்கிறார் அபு.

காஸாவிற்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை இஸ்ரேல் துண்டித்துள்ளது. மேலும், எரிபொருள் மற்றும் இதர பொருட்களும் அந்தப் பகுதிக்குள் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.

"தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, வாழ்க்கை இல்லை, எவ்வளவு சிரமம்" என்று அபு ஜமீல் வருத்தப்பட்டார்.

ஆனால், அபு தனது ஐந்து குழந்தைகளுடன் வடக்கு காஸா பகுதியில் தங்க முடிவு செய்துள்ளார். அவர், இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்களின் தந்தை. இளைய குழந்தையின் வயது நான்கு.

"எங்களுக்குப் போக இடமில்லை, எங்கள் வீட்டைத் தாக்கினாலும் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம், இந்த ஆறு பேர் கொண்ட குடும்பத்துடன் நாங்கள் எங்கே போவது?" எனக் கேட்டார் அபு

 
குழந்தைகள்
படக்குறிப்பு,

ராணுவ ஆளில்லா விமானங்கள் வானில் வட்டமிடுகையில், அருகில் உள்ள நெடுஞ்சாலையில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் சுற்றித் திரிகின்றனர்.

 

தயார் நிலையில் உள்ள இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேலின் உத்தரவிற்குப் பிறகு, வடக்கு காஸாவை இருப்பிடமாக் கொண்டுள்ள 11 லட்சம் மக்களின் சுமார் நான்கு லட்சம் பேர் காஸா அல்-தின் சாலை வழியாக 48 மணி நேரத்திற்குள் தெற்கு நோக்கி நகர்ந்ததாக ஹமாஸ் ஆயுதக்குழு கூறுகிறது.

இஸ்ரேலிய எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலையில் இருந்து காஸா பகுதியின் காட்சி, நடக்கவிருக்கும் தரைவழி தாக்குதல்களின் தெளிவான படத்தை அளிக்கிறது.

ராணுவ ஆளில்லா விமானங்கள் வானில் வட்டமிடுகையில், அருகில் உள்ள நெடுஞ்சாலையில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் சுற்றித் திரிகின்றனர்.

எல்லையில் உள்ள வேலிக்கு அருகில் சிறிய ரக ஆயுதத் தாக்குதல் சத்தம் கேட்கிறது. பதிலுக்கு இஸ்ரேலிய ராணும் குண்டுகளை வீசின.

அப்பகுதியில் மறைந்திருந்த ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

அருகிலுள்ள இஸ்ரேலிய நகரமான டெரோட் பகுதியில் இருந்தவர்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டனர். முக்கிய சாலைகளைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

எங்களின் பயணத்தில் சில நிமிடங்கள் கூட கடந்திருக்கவில்லை, எங்களுக்கு முன்னால் எந்த ராணுவ வாகனமும் செல்லவில்லை.

அக்டோபர் 7, சனிக்கிழமையன்று ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸை அழிக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தின் மையமாக இந்த மாபெரும் இராணுவத் தாக்குதலை பார்க்கலாம்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 1300 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஹமாஸ் 126 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.

பாலத்தீனிய சுகாதார அமைச்சின் ஆதாரங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை வரை காஸா பகுதி மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலத்தீனியர்களின் எண்ணிக்கை 2,383 ஐ எட்டியுள்ளது. மேலும், 10,814 பேர் காயமடைந்துள்ளனர்.

காஸா
படக்குறிப்பு,

காஸாவில் குழந்தைகள் இன்னும் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

தூசிகளால் சூழ்ந்துள்ள காஸா

காஸா நகரில் குழந்தைகள் இன்னும் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த குழந்தைகள் அமைதியான சிறிய தருணங்களில் அருகிலுள்ள தெருக்களிலும் சாலைகளிலும் சுற்றித் திரிகின்றனர்.

எங்கும் போரால் சூழப்பட்ட அவர்களின் வாழ்க்கையில் இதுதான் ஒரே வழி.

காஸாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். இந்த மோதலில் இதுவரை 700 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீனிய பிராந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாவில் உள்ள ஹமாஸ் நிர்வாகம் வடக்கு பகுதியை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அதேசமயம், வடக்கு காஸாவில் இருந்து வெளியேறும் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த அவர்களை வெளியேற விடாது ஹமாஸ் தடுக்கிறது என்று இஸ்ரேல் கூறுகிறது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டை காஸா வில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு நிராகரித்துள்ளது.

இஸ்ரேல் வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க முடிவுசெய்துள்ள நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழு அவர்கள் கைப்பற்றிய கட்டடங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக கொரில்லாப் தாக்குதலை தொடங்கினால், இந்த சண்டை பல மாதங்கள் நீடிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cgr4mg2rnv0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்காசாவிற்கு செல்லுமாறு கூறிவிட்டு அங்கும் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்- மருத்துவமனைகளுக்கு வந்த 110 உடல்கள் - இடிபாடுகளிற்குள் அடையாள காணமுடியாத நிலையில் உடற்பாகங்கள்

Published By: RAJEEBAN  17 OCT, 2023 | 04:59 PM

image
 

காசாவின் மருத்துவமனைகளுக்கு 110 உடல்கள் வந்து சேர்ந்தன என முகமத் ஜகாவுத் என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தென்காசாவில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்களே வந்துள்ளன என மருத்துவர்தெரிவித்துள்ளார்.

 gaza_hos_34.jpg

அல் நசீர் மருத்துவமனைக்கு 40 உடல்களும் ரபா எல்லையில் இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 60 உடல்கள் நஜார் மருத்துவமனைக்கும் வந்தன என தெரிவித்துள்ள அவர் ஐரோப்பிய மருத்துவமனைக்கு 10 உடல்கள் வந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

வீடுகளின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டவர்களின் உடல்கள் சிலவற்றை  மீட்புகுழுவினர் மீட்டெடுத்து அனுப்பி உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளன -சில உடற்பாகங்களை  எங்களால் அடையாளம் காணமுடியவில்லை என சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ள அந்த மருத்துவர் வடகாசவிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களின் வீடுகளே தாக்கப்பட்டுள்ளன எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

gaza_new1111222.jpg

ஒரு வீட்டில் மாத்திரம் 150 பேர் தஞ்சம்புகுந்திருந்தனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 பேர் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167102

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் வாழும் 23 லட்சம் பேரையும் ஒட்டுமொத்தமாக இடம் மாற்ற இஸ்ரேல் திட்டமா?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

14 அக்டோபர் 2023
புதுப்பிக்கப்பட்டது 18 அக்டோபர் 2023

காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300ஐ தாண்டியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், 2,329 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 9,714 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி பொதுமக்கள், வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. இஸ்ரேலில் இதுவரை 1,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதற்குப் பதிலடியாக அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது, மேலும் தரைவழித் தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் ராணுவம் தரை, வான், மற்றும் கடல் வழித் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக இஸ்ரேல் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த இடத்தில், எத்தனை மணிக்கு என வேறு எந்த குறிப்பிட்ட தகவலையும் தெரிவிக்கவில்லை.

தரை வழியில் ஆக்ரோஷமான தாக்குதல் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யூ போர்க் களத்தில் உள்ள வீரர்களிடம், “அடுத்த கட்டம் வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலத்தீனர்களை தெற்கு நோக்கி நகர இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் கால்நடையாகவும் வாகனங்களிலும் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேல், பாலத்தீனம், காசா, ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக சுகாதார நிறுவனம் இஸ்ரேலின் இந்த உத்தரவைக் கண்டித்துள்ளது. மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளை வெளியேறச் சொல்வது மரண தண்டனைக்கு சமம் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், வடக்கு காசாவிலிருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்துள்ளதை பிபிசி உறுதி செய்துள்ளது.

காஸா மக்களை பூண்டோடு இடம் மாற்ற இஸ்ரேல் திட்டமா?

காஸா மீது தரைவழியே படையெடுத்துச் சென்று ஹமாஸை பூண்டோடு அழிக்க திட்டமிடும் இஸ்ரேல், இந்த மோதலின் போது காசாவின் 23 லட்சம் மக்களையும் ஒட்டுமொத்தமாக எகிப்தின் சினாய் பாலைவனத்திற்கு மாற்ற இஸ்ரேல் விரும்புவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

முன்னதாக எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி ஒரு மாநாட்டில் உரையாற்றுகையில், "காசாவில் இப்போது நடப்பது பொதுமக்களை தஞ்சம் புகுந்து எகிப்துக்கு இடம்பெயரச் செய்யும் முயற்சியாகும், இதை ஏற்கக் கூடாது" என்று கூறினார்.

இது நடந்தால், எகிப்திய மக்கள் "லட்சக்கணக்கில் வீதிக்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்கலாம்" என்று அவர் எச்சரித்தார்.

பாலஸ்தீனர்கள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேறினால், அது பாலஸ்தீனர்களின் தனி நாடு நம்பிக்கையை "குலைத்துவிடும்" என்று எகிப்து ஏற்கனவே எச்சரித்துள்ளது.

ஆனால், அரபு நாடுகளில் பொதுமக்களின் கோபத்தைத் தூண்டக் கூடிய, அத்தகைய ஒப்பந்தத்திற்கு உடந்தையாக இருந்தால் அது எகிப்திய அரசாங்கத்திற்கு மிகவும் ஆபத்தானது.

எந்தவொரு மக்கள் வருகையும் எகிப்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் மற்றும் அதன் அமைதியற்ற சினாய் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சத்தை உருவாக்கும்.

காஸா இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாலஸ்தீனர்கள் ஹமாஸுக்கு எதிரான தாக்குதலின் போது "போராளிகளை சமாளிக்கும் வரை" இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்திற்கு மாற்றலாம் என்று சிசி பரிந்துரைத்தார்.

நூற்றுக்கணக்கான லாரிகள் உதவிப் பொருட்களுடன் வடக்கு சினாயில் குவிந்துள்ளன, இது எகிப்தின் ரஃபா வழியாக காசாவிற்கு அனுப்ப அனுமதிக்கும் ஒப்பந்தத்திற்காக காத்திருக்கிறது.

இது பாலஸ்தீன மக்கள் வெளியேறுவதற்கான ஒரே பாதையாகும், இது இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் அதை திறக்க அனுமதிக்க இஸ்ரேலின் ஒப்புதல் தேவைப்படும். சமீபத்திய நாட்களில், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு இது நான்கு முறை இலக்காகியுள்ளது-

'நாங்கள் விலங்குகள் அல்ல, மனிதர்கள்'

முகமது மற்றும் அவரது மனைவி மூன்று குழந்தைகளுடன் தெற்கு காசாவில் உள்ள மகசி முகாமை வெள்ளிக்கிழமை சென்றடைந்தனர். எனினும் அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை.

அவர், “கையறு நிலையில் இருக்கிறோம். எங்களுக்கு ஆறுதலே இல்லை” என்று பிபிசியிடம் கூறினார். “நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. வேறு இடத்துக்குச் செல்வதுகூட பாதுகாப்பானதாக இல்லை,” என்றார். 31 வயதான முகமது, கடந்த மூன்று நாட்களை விவரிக்கவே முடியாது என்றார்.

“நாங்கள் இரு புறமும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் பணயக் கைதிகளாக உள்ளோம்,” என அவர் கூறினார்.

காஸாவின் வடக்குப் பகுதியில் இருந்து தெற்குப் பகுதிக்கு எத்தனை பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் பிரதேசத்திற்குள் இயங்கும் ஐக்கிய நாடுகள் நிவாரண நிறுவனத்தின் கூற்றுப்படி, இது "ஒரு வெளியேற்றம்."

இஸ்ரேல் பாலத்தீனம் மோதல்

காஸா மக்கள் வெளியேற 3 மணிநேரம் அவகாசம்

காசா மக்கள் வெளியேற பாதுகாப்பான வழித்தடம் மூன்று மணி நேரங்களுக்கு திறந்திருக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் இன்னமும் இருப்பவர்கள், அவர்கள் நேரப்படி காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள் வெளியேற வேண்டும் என எச்சரித்துள்ளது.

பெய்ட் ஹனூன் பகுதியிலிருந்து கான் யூனிஸ் பகுதிக்கு செல்லும் நேரடி வழியாக மட்டுமே மக்கள் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த வழித்தடத்தில் தாக்குதல் நடத்தப்படாது என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காஸா மக்கள் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனக் கூறும் இஸ்ரேல் கடந்த இரண்டு நாட்களில் மக்களுக்கான காலக்கெடுவை மாற்றிக்கொண்டே வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தபோது 24 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் எனக் கூறியது. அப்போது இரண்டு வழித்தடங்களில் செல்லலாம் என்று கூறியது. எனினும் வெளியேறிக் கொண்டிருந்த மக்கள் சென்ற வாகனங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது.

காத்திருக்கும் நிவாரண வாகனங்கள்

இஸ்ரேல் Vs பாலத்க்தீனம்

முன்னதாக ஐ.நாவின் நிவாரண நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான ஜூலியட் டுமா பிபிசியிடம் பேசியபோது, "இது நாங்கள் இதுவரை கண்டதிலேயே மிகவும் மோசமானது. இது காஸா மக்களை பள்ளத்தில் தள்ளப்படுவதைப் போன்றது. உலகின் கண் முன்னாலேயே இது நடந்து கொண்டிருக்கிறது," என்றார்.

மேலும் அவர், "களத்தில் உள்ள சக ஊழியர்களின் கூற்றுப்படி, ஒரு மிகப்பெரிய வெளியேற்றம் நடைபெற்று வருகிறது. மக்கள் அங்கிருந்து காலி செய்கிறார்கள். தங்கள் கார்களுடன் செல்ல முடிபவர்கள் செல்கிறார்கள், சிலர் நடந்து செல்கிறார்கள், சிலர் படுக்கைகளை எடுத்துச் செல்கிறார்கள்"

"மக்கள் பயத்தில் உறைந்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

மற்றொரு புறம், எகிப்து எல்லையில் நிவாரணங்கள் வழங்க வந்துள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகளைக் காண முடிகிறது.

எகிப்து மற்றும் துருக்கியில் இருந்து வந்துள்ள நிவாரண வாகனங்கள் ஆரிஷ் நகரத்தில் எல்லை அருகே காத்துக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் காரணமாக பாலத்தீன எல்லைப்பகுதி சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் காஸாவிலிருந்து உள்ளேயும் வெளியேயும் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை உள்ளே அனுமதிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c89w43j2vgno

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இடத்தைவிட்டு குண்டைப்போட்டு அடாவடிதானமாக மக்களை வெளியேற்றுபவன் ஜனநாயகவாதி 
சொந்த வீட்டில் இருங்கள் ஓடிக்கொண்டு இருந்தால் திரத்திக்கொண்டே இருப்பார்கள் என்பவன் பயங்கரவாதி 

  • கருத்துக்கள உறவுகள்

உப்பை திண்டவன் தண்ணீர் குடிப்பான். அதுபோல பயங்கரவாதத்தில் ஈடு படடவன் அதட்குரியபலனை அடைந்தே ஆக வேண்டும். எனவே பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வெளியேறிதான் ஆக வேண்டும். இலங்கையில் நாங்களும் அப்படி இல்லை என்று யுத்த பகுதிக்குள் இருந்திருந்தால் அழிந்து போயிருப்போம். ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்கும் முதல் முன்னெச்சரிக்கை எடுப்பது நல்லதுதானே. 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Cruso said:

உப்பை திண்டவன் தண்ணீர் குடிப்பான். அதுபோல பயங்கரவாதத்தில் ஈடு படடவன் அதட்குரியபலனை அடைந்தே ஆக வேண்டும். எனவே பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வெளியேறிதான் ஆக வேண்டும். இலங்கையில் நாங்களும் அப்படி இல்லை என்று யுத்த பகுதிக்குள் இருந்திருந்தால் அழிந்து போயிருப்போம். ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்கும் முதல் முன்னெச்சரிக்கை எடுப்பது நல்லதுதானே. 

இந்த யுத்தம் முடிந்ததும் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் நாங்களும் இருக்கிறோம் என்று காட்ட என்ன செய்யலாம்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை வடக்கிற்கும் கிழக்கிற்கும் கூட்டிவந்து ஈழத்தமிழர்களின் நட்சத்திரம் என்று விருது கொடுக்கலாம்.
அவரது பெயரை  வடக்கிலும் கிழக்கிலும் இரண்டு வீதிகளுக்கு வைக்கலாம்.
இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு கல் எறியும் கூட்டம் நிச்சயம் இந்த பெயர்ப்பலகையில் கைவைக்கும் இதன்மூலம் இலங்கையில் உள்ள  ஹமாஸ்களை சர்வதேசத்திற்கு இனம்காட்டலாம். செய்வார்களா ....?       

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
Just now, அக்னியஷ்த்ரா said:

இந்த யுத்தம் முடிந்ததும் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் நாங்களும் இருக்கிறோம் என்று காட்ட என்ன செய்யலாம்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை வடக்கிற்கும் கிழக்கிற்கும் கூட்டிவந்து ஈழத்தமிழர்களின் நட்சத்திரம் என்று விருது கொடுக்கலாம்.
அவரது பெயரை  வடக்கிலும் கிழக்கிலும் இரண்டு வீதிகளுக்கு வைக்கலாம்.
இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு கல் எறியும் கூட்டம் நிச்சயம் இந்த பெயர்ப்பலகையில் கைவைக்கும் இதன்மூலம் இலங்கையில் உள்ள  ஹமாஸ்களை சர்வதேசத்திற்கு இனம்காட்டலாம். செய்வார்களா ....?       

தயவு செய்து இலங்கை தமிழ் அரசியல்வாதிகளை பற்றி பேச வேண்டாம். எந்த கட்சியில் எந்த அரசியல்வாதி இருக்கிறார் எண்டு இங்குள்ள நாங்களே குழம்பி போய் உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Cruso said:

உப்பை திண்டவன் தண்ணீர் குடிப்பான். அதுபோல பயங்கரவாதத்தில் ஈடு படடவன் அதட்குரியபலனை அடைந்தே ஆக வேண்டும். எனவே பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வெளியேறிதான் ஆக வேண்டும். இலங்கையில் நாங்களும் அப்படி இல்லை என்று யுத்த பகுதிக்குள் இருந்திருந்தால் அழிந்து போயிருப்போம். ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்கும் முதல் முன்னெச்சரிக்கை எடுப்பது நல்லதுதானே. 

உங்களை,[போன்றவர்களை] எல்லாம் சிங்களவன் அடித்து நாட்டை துரத்தினத்தில் ஒரு பிழையுமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

உங்களை,[போன்றவர்களை] எல்லாம் சிங்களவன் அடித்து நாட்டை துரத்தினத்தில் ஒரு பிழையுமில்லை 

என்னை எண்டால் சிங்களவன் அடிக்கவும் இல்லை, துரத்தவும் இல்லை. எனக்கு விருப்பம் என்றால் முறைப்படி விண்ணப்பம்பண்ணி போகும் தகுதியுண்டு. உங்கள் நிலைமை எப்படியோ?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Cruso said:

என்னை எண்டால் சிங்களவன் அடிக்கவும் இல்லை, துரத்தவும் இல்லை. எனக்கு விருப்பம் என்றால் முறைப்படி விண்ணப்பம்பண்ணி போகும் தகுதியுண்டு. உங்கள் நிலைமை எப்படியோ?

நீங்கள் எந்த வகையில் நாட்டை விட்டு வந்தீர்கள் என்பது முக்கியமில்லை ...எப்படியோ உங்களை எல்லாம் நாட்டை விட்டு துரத்தித்திட்டானே அது தான் முக்கியம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

நீங்கள் எந்த வகையில் நாட்டை விட்டு வந்தீர்கள் என்பது முக்கியமில்லை ...எப்படியோ உங்களை எல்லாம் நாட்டை விட்டு துரத்தித்திட்டானே அது தான் முக்கியம் 
 

குருசோ இலங்கையில் இருப்பதாக சொன்ன நியாபகம்.

சட், சட் என பல விடயங்களை அவர் சொல்வதில் இருந்து அவர் கொழும்பில் இருக்கிறார் என நான் ஊகிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2023 at 04:09, Cruso said:

உப்பை திண்டவன் தண்ணீர் குடிப்பான். அதுபோல பயங்கரவாதத்தில் ஈடு படடவன் அதட்குரியபலனை அடைந்தே ஆக வேண்டும். எனவே பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வெளியேறிதான் ஆக வேண்டும். இலங்கையில் நாங்களும் அப்படி இல்லை என்று யுத்த பகுதிக்குள் இருந்திருந்தால் அழிந்து போயிருப்போம். ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்கும் முதல் முன்னெச்சரிக்கை எடுப்பது நல்லதுதானே. 

உப்பை திண்டதால்தான் முள்ளிவாய்க்கால்வரை தண்ணி குடித்தோம்… உரிய பலனை முள்ளிவாய்க்கால்வரை அளிவை சந்தித்து அனுபவித்திருக்கிறம் ஆக பயங்கரவாதத்தில் நாம் ஈடுபட்டதனால்… இலங்கை ராணுவம் பயங்கரவாதிகளை அழிக்கும் முதல் முன்னெச்சரிக்கை எடுத்து முள்ளிவாய்க்கால்வரை எம்மை அனுப்பி வைத்தது…

அப்படித்தானே..?

என்னக்கென்னவோ யாழை தமிழ் இனவாதத்தளமாக மற்ற இனங்களுக்கிடையே குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லீம்மளுக்கு மத்தியில் காட்டவேணும் என்றே சிலர் திட்டமிட்டு எழுதுவது போலவே இருக்கு..

இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்களுடன் இவர்கள் பழகிப்பார்க்கவேண்டும்.. ஈழத்தமிழர்களையும் அவர்கள் போராட்டத்தையும் அவர்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று..

மத அடிப்படைவாதிகள் மீது இருக்கும் வெறுப்பை ஒட்டுமொத்த ஒரு சமூகத்தின் மீதும் வன்மமாக கக்கக்கூடாது.. எல்லா இனத்திலும் பல விதிவிலக்கு விசருகள் இருக்கத்தான் செய்வார்கள்.. அதற்காக அந்த இனமே அழியவேண்டும் என்று பகுத்தறிவுள்ள எவனும் எழுதமாட்டான்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில்  வாழவில்லை என்பது உங்கள் எழுத்துக்களால் புலப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உப்பை திண்டதால்தான் முள்ளிவாய்க்கால்வரை தண்ணி குடித்தோம்… உரிய பலனை முள்ளிவாய்க்கால்வரை அளிவை சந்தித்து அனுபவித்திருக்கிறம் ஆக பயங்கரவாதத்தில் நாம் ஈடுபட்டதனால்… இலங்கை ராணுவம் பயங்கரவாதிகளை அழிக்கும் முதல் முன்னெச்சரிக்கை எடுத்து முள்ளிவாய்க்கால்வரை எம்மை அனுப்பி வைத்தது…

அப்படித்தானே..?

என்னக்கென்னவோ யாழை தமிழ் இனவாதத்தளமாக மற்ற இனங்களுக்கிடையே குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லீம்மளுக்கு மத்தியில் காட்டவேணும் என்றே சிலர் திட்டமிட்டு எழுதுவது போலவே இருக்கு..

இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்களுடன் இவர்கள் பழகிப்பார்க்கவேண்டும்.. ஈழத்தமிழர்களையும் அவர்கள் போராட்டத்தையும் அவர்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று..

மத அடிப்படைவாதிகள் மீது இருக்கும் வெறுப்பை ஒட்டுமொத்த ஒரு சமூகத்தின் மீதும் வன்மமாக கக்கக்கூடாது.. எல்லா இனத்திலும் பல விதிவிலக்கு விசருகள் இருக்கத்தான் செய்வார்கள்.. அதற்காக அந்த இனமே அழியவேண்டும் என்று பகுத்தறிவுள்ள எவனும் எழுதமாட்டான்..

இஸ்ரவேல் இஸ்ரேவேலியர்களுக்குத்தான் சொந்தம். வந்து குடியேறியவர்களுக்கு அல்ல. நாங்களும் யுத்தத்தால் பாதிக்கப்படடவர்கள்தான். முஸ்லிம்களின் தொல்லைகள் உங்களுக்கு விளங்காது. அவர்களுடன் பட்டு அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். நாங்கள் இலங்கையில் இருக்கிறோம், தமிழ் நாட்டில் இல்லை. தமிழ் நாட்டு முஸ்லிம்கள் இலங்கையில் இருந்தால் தமிழர்களுக்கு எதிராகத்தான் இருப்பார்கள். அது அவர்களின் வசதியை பொறுத்தது. நீங்கள் முஸ்லிமா?

3 hours ago, ரதி said:

நீங்கள் எந்த வகையில் நாட்டை விட்டு வந்தீர்கள் என்பது முக்கியமில்லை ...எப்படியோ உங்களை எல்லாம் நாட்டை விட்டு துரத்தித்திட்டானே அது தான் முக்கியம் 
 

உங்களுக்கு தமிழ் விளங்கவில்லை போல தெரிகின்றது. நான் நல்ல தமிழில்தானே  எழுதுகிறேன். நான் எங்கும் ஓடவில்லை , இலங்கையில்தான் இருக்கிறேன் என்று எழுதியிருக்கிறேன். மீண்டும் வாசிக்கவும். என்னைப்போல ஒருவன் ஓடி ஒழிய மாடடான். 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் ஒரு மதம்.
தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தமிழர்களாக இருந்தால் அது ஒற்றும் சாதனை அல்ல இந்து தமிழர்களாய் இருக்கலாம் கிஸ்தவர்கள் தமிழர்களாக இருக்கலாம் முஸ்லிம்கள் ஏன் அப்படியிருக்க கூடாது.
தமிழ்நாட்டில் அரபி வகுப்பு என்ற பெயரில் ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது பற்றிய விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது இப்படியான கண்மூடித்தனமான முஸ்லிம் மத மயக்கம் கொண்ட யாழ்கள உறவு ஒருவர்  இவ‌ர்க‌ளும் அந்த‌ கால‌ங்க‌ளில் மேற்குலக நாடுகளுக்கு வந்து இருக்கலாம்என்று எழுதியிருந்தார்.(முஸ்லிம் நாடுகள் அவர்களை ஏற்று கொள்ளாது 😂 ) அவர்களும் வந்திருந்தால் கமாஸ், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதத்தை ஆதரித்து தற்போது நடைபெறுகின்ற   வன்முறை போராட்டங்கள் மேலும் பலம்பெற்று இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2023 at 21:29, goshan_che said:

குருசோ இலங்கையில் இருப்பதாக சொன்ன நியாபகம்.

சட், சட் என பல விடயங்களை அவர் சொல்வதில் இருந்து அவர் கொழும்பில் இருக்கிறார் என நான் ஊகிக்கிறேன்.

அவர் முதலே சில திரிகளில் தான் கொழும்பில் இருக்கிறேன் என எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன்....அவர் எழுத்துக்களை பார்க்க தெரியவில்லையா😐 நன்றாய் படித்து, கொழும்பில் பெரிய அரச பதவியில் இருக்கிறார் அல்லது ஓய்வு பெற்று விட்டார் 
எந்த விதத்திலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்...அவருக்கு தனிப்பட ஏதாவது ஒரு ,சில முஸ்லீம் ஆப்பு வைத்திருப்பார்கள்..அதற்கு பதிலாக பாலஸ்தீனர்கள் முற்றாக அழிய வேண்டும் என விரும்புகிறார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.