Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

52c9fd84-d316-4481-8965-d241a3c6c215.jpg

- யாழ் அஸீம் -

 

உங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக் கனவுகளை 

நினைவுப்புதையல்களை 

உங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை 

மண்ணின்மேல் உங்களது மதலைத் தமிழ் 

ஏன் மறைந்ததென்ற அங்கலாய்ப்பில் 

உங்களது முன்னோர்களின் 

எலும்புச் செல்வங்கள் உறங்குகின்ற 

ஈமப்புகை குழிகளை 

வாழையடி வாழையென உங்கள் தலைமுறைகளை 

அல்லாஹூ அக்பர் என ஆர்ப்பரித்த பள்ளிவாசல்களை 

எல்லாம் முன்வைத்து 

மன்னிப்பீர் என்று வாய்விட்டலறாமல் 

எல்லாம் அபகரித்து 

நட்பில்லாச் சூரியனின் கீழ் 

உப்புக்களர் வழியே ஓடென்று விரட்டிவிட்ட 

குற்றமெதுவுமறியா இக்குணக்குன்று மானிடர்கள் 

ஐந்து வருடங்கள் 

கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றனர். 

ஆறாம் வருடமும் அழுவதே விதியென்றால் 

வ. ஐ. ச. ஜெயபாலன் 

 

1990 ம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயக மண்ணிலிருந்து வேறோடு பிடுங்கி வீசப்பட்டதை முன்னிட்டு கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களால் பாடப்பட்ட கவிதையின் சில வரிகளே அவை. வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு ஆறாவது வருட முடிவை முன்னிட்டு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் உயர்ச்சி பொங்கப் பாடிய இக்கவிதை இப்பொதும் எம் செவிகளில் எதிரொலிக்கிறது. சிறந்த கவிஞராக மட்டுமன்றி சிறந்த நடிகருமான 'ஆடுகளம்' புகழ் ஜெயபாலன் அவர்கள் மானிடதேசம் மிக்க உயர்ந்த பண்புடையவராவார். 

 

பரம்பரை பரம்பரையாக பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்த வடபுல முஸ்லிம்கள் அவர்களது தாயக மண்ணிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு, இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 33 வருடங்களானாலும், இவ்வரலாறானது வட மாகாண முஸ்லிம்களின் வரலாற்றில் என்றும் அழிக்க முடியாக வடுவாக பதிந்து விட்டது. 1990 ஒக்டோபர் மாதத்தின் இறுதியில் வடமாகாணத்திலுள்ள சகல மாவட்டங்களிலிருந்து சுமார் 75,000 முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்ட துயர நிகழ்வை நினைவு கூறும் கறுப்பு ஒக்டோபருக்கு மூன்று தசாப்தங்கள் கடந்தும் முடியாத துயரோடு வடபுல முஸ்லிம் அகதிகள் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும். 

 

வட புல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவு கூரல் மூலம் நடந்து முடிந்த கசப்பான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் மீட்டுதல் மூலம் தமிழ் முஸ்லிம் உறவுக்குப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென விமர்சித்து சிலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவ்வாறு விமர்சிப்பது கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் உரிமையையும் மறுப்பதற்குச் சமமாகும். 

 

1987 ஜூலை சம்பவத்தின் போது தமிழ் மக்கள் மீது பெரும்பான்மைச் சமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்களையும், மாவீரர் தினத்தையும், மற்றும் திலீபன் நினைவு தினத்தையும் தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இவ்வாறு நினைவுபடுத்தலானது உறவுகளைப் பாதிக்கும் என எவரும் விமர்சிப்பதில்லை. ஒவ்வொரு சமூகமும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும், செயற்படுத்துவதற்கும் உரிமையுள்ளது. அவ்வாறே எமது வடபுல முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பை கறுக்கு ஒக்டோபர் என நினைவு கூரலானது அவசியமானதும் நியாயமானதுமாகும். 

 

அத்துடன் கறுப்பு ஒக்டோபர் நிகழ்வுகளில் எம்மை பலவந்தமாக வெளியேற்றிய தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுகின்றோமே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 

 

மேலும் ஒரு சமூகம் தனது சொந்த வரலாற்றை அறியவில்லையோ, அந்த சமூகம் எதிர்காலம் பற்றிய சிந்தனையில்லாத சமூகமாகும். எனவே எமது வரலாற்றை ஆதாரபூர்வமாக அடுத்த சந்ததிக்கு உரிய முறையில் கடத்தி வைக்க வேண்டியது. எமது தார்மிகக் கடமையாகும். எமது முன்னோர்கள், ஆய்வாளர்கள் எழுதி வைத்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்துதான் தற்போது எமது வரலாற்றை அறிந்து கொள்னிறோம். அண்மையில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் வடமாகாணச் சபையின் அவைத் தலைவருமான சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள், நல்லூர் கந்தசாமி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இஸ்லாமிய பாபா ஒருவரின் சமாதி இருக்கின்றது என்று கூறப்படும் கருத்து முழுமையாக தவறானது என்று தெரிவித்திருந்தார். சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள் யாழ்ப்பான முஸ்லிம்களுடன் நெருக்கமான உறவு கொண்டவர் எனினும் இவ்வாறான தவறான கருத்துக்களை சுட்டிக் காட்டுவதன் மூலம் எமது தமிழ் முஸ்லிம் உறவு வலுப்பபெற வேண்டும் என்ற நோக்கில் ஏற்கனவே பிரபல எழுத்தானரும் நாவலாசிரியருமான செங்கை சூழியான் எழுதிய நல்லூர் கந்தசாமி கோயில் வரலாறு என்ற ஆய்வு நூலிலிருந்தும், அ. முத்துத் தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் (1972) என்ற வரலாற்று நூலிலிருந்தும் நல்லூர் கந்தசாமி கோயில் வீதிக்குள் முஸ்லிம் பெரியாருடைய சமாதி இருந்தது என்பதை விளக்க முடிந்தது. எனவே எமது எதிர்கால சந்ததிக்கு தற்போதைய வரலாறுகளையும், நிகழ்வுகளையும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பதிவு செய்து வைக்க வேண்டியது அவசியமாகும். 

 

அத்துடன் வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 33 வருடங்களாகியும், பூரணமான மீள் குடியேற்றம் செய்யப்படாமல் அகதி முகாம்களில் வாழும் அவலம் இன்னும் தொடர்கின்றது என்பது கசப்பான உண்மையாகும். இன்னும் ஆக்கபூர்வமான பூரண மீள் குடியேற்றம் நடைபெறாத காரணத்தை முன்னிட்டும் வெளியேற்றத்தை ஆண்டுதோறும் நினைவுகூர்வதன் மூலம் மறுக்கப்படும் எமது உரிமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இதுவாகும். சில அரசியல்வாதிகளாலும் அரச அதிகாரிகளாலும், புனர்வாழ்வு நிறுவனங்களாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒதுக்கப்படுகின்ற நிலை இன்னும் காணப்படுவது வேதனைக்குரியதாகும். 

 

முப்பத்து மூன்று வருடங்கள் கடந்தாலும் அந்த வெளியேற்ற நிகழ்வுகளும், அவலங்களும் எமக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களும் இப்போது நினைத்தாலும் இதயம் வலிக்கின்றது. காலத்தின் நீட்சியில் எம்மால் மன்னிக்க முடிந்தாலும் மறக்க முடியாது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் முஸ்லிம்களின் அமைப்பின் செயலாளர் நிஸாம் நைஸர் ஒக்டோபர் 30ம் திகதி யாழ் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட இறுதி நேரங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நேரில் கண்டவர் அனுபவித்தவர். இறுதி நேர அவலங்களை அவர் பின்வருமாறு கூறுகிறார். 

 

1990 ஒக்டோபர் 30ம் திகதி அதிகாலையில் ஒலிபெருக்கி கட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் வாகனங்களில் இவ்வாறு அறிவிப்புச் செய்யப்பட்டது. வீடுகளிலுள்ள ஆண்கள் யாவரும் ஜின்னா மைதாலத்தில் உடனடியாக வாருங்கள் அங்குள்ள ஆண்கள் யாவரும் சென்றபோது விடுதலைப் புலிகளின் முக்கியமான பொறுப்பிலுள்ள இளம்பரிதி இரண்டு மணித்தியாலங்களில் உடனடியாக வெளியேறுங்கள் என்று கட்டளையிட்டபோது எங்களில் ஒருவர் 'நாங்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்று வினவியபோது சகல கட்டிடங்களையும் தவிர ஏனைய பொருட்களை கொண்டு செல்ல முடியும். என்று எமக்குக் கூறப்பட்டது. அவ்வேளையில் ஒருவர் எமது முஸ்லிம் சகோதரர்கள் சிலரை கைதிகளாக பிடித்து வைத்திருக்கின்றீர்கள் சிலரிடம் கப்பம் கேட்டும் தடுத்தும் வைத்துள்ளீர்கள்! அவர்களுடைய நிலைமை என்ன? என்று வினவிய போது, கைதிகளாக இருப்பவர்கள் நாங்கள் கோரும் மன்னிப்பு நிதியைக் கட்டி அவரைக் கூட்டிச் செல்லலாம். அவருடன் ஒருவர் மட்டும் நிற்கலாம் என்று எமக்கு கூறப்பட்டது. தொடர்ந்து, 20 நிமிடம் கடந்து விட்டது. இன்னும் ஒரு மணி 40 நிமிடம் உள்ளது. எந்தப் பிரச்சினையும் செய்யாமல் உடனடியாக வெளியேறுங்கள். அல்லது நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள். என்று எமக்குக் கூறப்பட்டது. நாங்கள் வீடுகளுக்குச் சென்ற போது வீடுகள் பூட்டப்பட்டு பெண்களும், சிறுவர்களும் வீதியில் நின்று அழுது கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் 16 பள்ளிவாசல்கள், 4 பாடசாலைகள் 13 பிரதான வீதிகள் அமைந்திருந்தன. சகலவற்றையும் துறந்து எமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நினைவுகள் துயரம் மிக்க அந்தக் கணங்கள் எந்த வினாடியும் மறக்க முடியாது. குறிப்பிட்ட 3 வீதிகளால் மட்டும் வெளியேற அனுமதித்தார்கள். கையில் கொண்டு செல்லக்கூடியவற்றையும் பணத்தையும் நகைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட போது ஐந்து சந்தியிலும், சில முக்கிய சந்திகளிலும் நின்ற விடுதலைப்புலிகள் எமது பொருட்கள் யாவற்றையும் நகைகள் பணம் முழுவதையும் பறிமுதல் செய்தனர். 200 ரூபாய்கள் மட்டும் தந்தது மட்டுமன்றி எங்களுடைய உடல்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், பெண்புலிகள் பெண்களுடைய உடை, உடல்களை பரிசோதனை செய்து சகலதையும் பறிமுதல் செய்தனர். குழந்தைகளின் கை, கழுது;து, காதுகளிலிருந்த நகைகளையும் அபரித்தனர். பெண்புலி ஒருவர் உரப்பையொன்றை வைத்து சகலருடைய கைக்கடிகாரங்களையும் இடும்படி அவற்றை சேகரித்தார். எங்களுடைய பைசிக்கிள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் சகலவற்றையும் அபகரித்த பின்னர் எமது லொறிகளில் ஆடு, மாடுகளைப் போல் ஏற்றப்பட்டோம். வவுனியாவின் எல்லைப் பகுதியில் எம்மை இறக்கிவிட்டு எமது வாகனங்களை எடுத்துச் சென்றுவிட்டனர். 

 

பின்னர் அனேமான வடமாகாண முஸ்லிம்கள் புத்தளத்துக்கு வந்து சேர்ந்தனர். புத்தளத்து மக்கள் எம்மை அன்புடன் அரவணைத்து தற்காலிகமாக அங்குள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டோம். அம்மக்கள் தமது உடல், பொருள் பணத்தை எமக்ககாகச் செலவழித்து அவர்கள் செய்த தியாகத்தை எம் உயிருள்ள வரை மறக்க முடியாது. 

 

இவ்வாறு வட மாகாணத்திலிருந்து வெறியேற்றப்பட்டு 33 வருடங்கள் கடந்தும், இம்மக்களின் மீள்குnயேற்றம் பூரணமாக நடைபெறவில்லை. மீள்குடியேற்றம் முற்றுப்பெறாத காரணத்தால், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அதிக முகாம்களின் வாழ்வியல் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பலர் கல்வியை இழந்துள்ளனர். சிலர் உளவியல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பல இளைஞர்கள் சரியான தொழில் வசதிகள் இன்றி அகதி முகாம்களில் அல்லலுற்று வாழ்கின்றனர். இத்தகைய சிரமமான சூழ்நிலையிலும் கல்வி தொழில் விடயத்தில் முன்னேறியவர்கள் பலர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

மீள்குடியேற்றமும் வீட்டுத் திட்டமும்.

 

1990ம் ஆண்டு வடக்கிலிருந்து 75,000 பேர் வெளியேற்றப்பட்டனர். 33 வருடகால சனத்தொகை வளர்ச்சி காரணமாக இப்போது இத்தொகை பலமடங்காக அதிகரித்துள்ளது. எனினும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் பல சவால்கள் காணப்படுகின்றன. அசரு புலிகள் யுத்தம் 2009 இல் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். '1990ம் ஆண்டு முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்ட போது அதனைத் தடுக்க எவரும் முன்வரவில்லை. இப்போது எனது அரசாங்கம், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தபடியால், 2010 மே மாதமளவில் முஸ்லிம்கள் மீளக்குடியேற்றப்படுவதற்கான சகல வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்றார். இவ்வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

 

தொடர்ந்தும் வடமாகாண முஸ்லிம்கள் குடியேறுவதில் பல இறுக்கமான நிபந்தனைகள் காரணமாகவும் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டுமாயின் மீள்குடியேறிய மாவட்டத்திலுள்ள அந்த இடிந்து சிதைந்த வீட்டில் தான் வசிக்க வேண்டும். குறுகிய கால 2 அல்லது 3 வருடங்களில் மீளக் குறியேறும் தமிழ் மக்களுடைய வீடுகளில் உடன் குடியேற முடியும். முப்பத்து மூன்று வருட காலமாக இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் அல்லலுற்று வீடு திரும்பும், வட மாகாண முஸ்லிம்கள், இடிந்து சிதைந்து குட்டிச் சுவராகி காடுகளாக மாறியிருக்கும் நிலையில் எவ்வாறு குடியேறுவது? எப்படி வசிப்பது? கிணறுகளும் மலச கூடங்களும் அழிந்து சிதைந்த நிலையிலுள்ள வீட்டில் எவ்வாறு வாழ்வது? இத்தகைய இறுக்கமான நிபந்தனையும் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

யுத்தத்தால் வெளியேற்றப்பட்டு, அகதிகளாகவும் உள்நாட்டிலும், இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு நஷ்டஈட்டையும் பெற்றுக் கொடுக்கவும் மீண்டும் இவ்வாறு நடக்காது என உத்தரவாதம் அளிப்பதும் நிலைமாறு கால நீதி எனப்படும். இம்முறைமை பல நாடுகளில் நடைமுறைமைப்படுத்துகிறது. இந்நீதி ஒழுங்கை ஐக்கிய நாடுகள் சபையும் அங்கீகரித்துள்ளது. இதனை கடந்த நல்லாட்சி அரசும் அங்கீகரித்து கையொப்பமிட்டுள்ளது. 

 

இந்நீதி ஒழுங்கின்படி வட மாகாண முஸ்லிம்கள் உடனடியாக மீளக்குடியேற முடியாத காரணம் 30 வருடங்களாக பாவனையற்று, காடுகளாக மாறியுள்ள இடங்களில் கொட்டில்கள் அமைத்து, மலசல கூடங்கள் ஒருவாக்கி எவ்வாறு குடியேறுவது என்பதாகும். இவ்வாறு பல இறுக்கமான நிபந்தனைகளை விதிப்பதன் காரணமாக வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி சமத்துவத்துக்கான யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவரும், யாழ் கிளிநொச்சி முஸடலிம் சம்மேளகத்தின் பொதுச் செயலாளருமான ஆர். கே. சுவர்கஹான் (சுனீஸ்) பல்வேறு காரணிகளைக் குறிப்பிட்டுள்ளார். 

 

'வடமாகாண முஸ்லிம்கள் மீளக்குடியேற்ற விடயத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கான சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். 

 

1.  மீள் குடியேற்றத்துக்கான ஆண்டுகள் 13 வருடங்கள் சென்றாலும் யாழ் முஸ்லிம்களைப் பொறுப்பவரை பூரணமாக சாத்தியப்படவில்லை. இதுவரை 250 க்கு உட்பட்ட வீட்டு உதவிகள் தான் யாழ் முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இது ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் வெளியேற்றப்படும்போது 4500 குடும்பங்கள் இருந்தன. மீள் குடியேறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 2500 குடும்பங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன. அதனை பேருக்கும் பதிவு ஏற்படுத்தி பங்கீட்டு அட்டையும் வழங்கப்பட்டது. ஆனாலும் திட்டமிட்ட இதனைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் மீளாய்வு என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களை மட்டும் பதிவில் வைத்தனர். பதிவில் உள்ள 600 பேரைத் தவிர ஏனையவர்களை இரத்துச் செய்தனர். தற்போது சிறிது சிறிதாகக் குடியேறி 1000 குடும்பம் குடியேறியுள்ளனர். இன்னும் 1000 குடியேறக்கூடிய சாத்தியம் உண்டு. கடந்த 13 ஆண்டுகளில் 250 க்கு உட்பட்ட வீட்டு உதவிகள் கிடைத்தன என்றால் 2000 குடும்பங்களுக்கு எடுக்கும் காலம் மிகக் கூடியதாகும். இவ்வாறான சூழ்நிலையில் வெளியேற்றத்தின் வலிகளை சுமந்தவர்களும், மீள்குடியேற்றம் தேவை என விருப்புடன் வந்தவர்களும் மீளக்குடியேறுவதில் விரக்தியடைந்து திரும்பி விடுவார்கள். இவ்வாறான சூழ் நிலைக்குக் காரணம் அரசாங்கமா, மவாட்ட அரசாங்க அதிகாரிகளா என்பதை நாம் சிந்திக்கும்போது யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் திட்டமிட்டுத் தடுக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 

 

2.  மேலும் புத்தளம் மாவட்டத்தில் யாழ் முஸ்லிம் வாக்குகள் 21,000 ஐ தாண்டியுள்ளது. யாழ் மண்ணில் இந்த வாக்குகள் இருக்குமாயின் நாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெறக்கூடிய சாத்தியம் உண்டு. அதே நேரம் புத்தளம் மாவட்டத்தில் யாழ் மண்ணில் பிறந்தவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவராயின் புத்தளம் மகக்ளுடன் முரண்படக்கூடிய சூழ்நிலை உருவாகக் கூடும். அதேநேரம் புத்தளத்திலுள்ள பல அகதி முகாம்களில் அடிப்பதை வசதிகளின்றி பல சிரமங்களை எதிர்நோக்கி வாழ்கின்றனர். எனவே அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்னும் யாழ் மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு அது சாத்தியமில்லை. அத்துடன் யாழ்ப்பாணத்தில் 2010 இல் நடந்த மாநகர சபை தேர்தலில் 4 பிரதிநிதிகளைப் பெற முடிந்தது. 2018 இல் நடந்த மாநகர சபை தேர்தலில் 4 பிரதிநிதிகளைப் பெற முடிந்தது. 2018 இல் நடந்த மாநகர சபை தேர்தலில் ஒரு பிரதி நிதியையே பெற்றோம். எதிர் காலத்தில் எவரையும் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. வட்டார இணைப்புக்கள் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ் முஸ்லிம்களாகிய நாம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறோம். 

 

3.  வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வெளிமாவட்டத்தில் சொந்தமாக விடு இருக்கக் கூடாது என்பதும் மீள் குடியேற்றத்தை தடுக்கும் ஒரு காரணியாகும். 33 வருடங்கள் வாழ்பவர்கள் சிறுகச் சிறுகச் சேமித்து சிறியதொரு குடிசையை வாங்கினாலும் மீள்குடியேற்ற உரிமை மறுக்கப்படுவது மிகப்பெரும் அநீதியாகும். 

 

4.  தாம் வாழும் பிரதேசத்திலிருந்து வாக்குகளை இரத்துச் செய்து விட்டு மீளக்குடியேறும் மாவட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்வி, தொழில் போன்ற காரணங்களால் ஏற்கனவே வாழ்ந்த மாவட்டங்களில் திடீரென வாக்குகளை வெட்டிச் செல்வது சாத்தியமில்லை. இதன் காரணமாகவும் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ளது. 

 

5.  வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்;பாக ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடப்பட்ட போதிலும், இன்றுவரை நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. 

 

6.  அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு போன்ற நிறுவனங்களுக்கு, வடபுலமுஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரும்பாத அரச அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும், சில இனவாதிகளும், மீளத்திரும்பும் அகதிகள் தம் சொத்துக்களை விற்பதற்கும், வியாபாரத்துக்காகவும், நட்டஈட்டைப் பெறவும் வருகின்றனர். இவர்கள் நிரந்தரமாக குடியிருக்க வரவில்லை என்ற காரணங்களைக் கூறி மீள் குடியேற்றத்தை தந்திரமாகத் தடுத்து வருகின்றனர். 

 

7.  மீள் குடியேற்றத்தை தடுப்பதிலும், வீட்டுத் திட்டங்களில் உள்வாங்கப்படுவதற்கும் இடையூறான காரணிகளுள் பிரதானமானது யாதெனில், 2008 க்கு முன் இடம் பெயர்ந்தவர்கள், பழைய அகதிகள் எனவும், 2008 க்கு பின்னர் இடம் பெயர்ந்தவர்கள் பழைய அகதிகள் எனவும் பாகுபடுத்தப்பட்டு, புதிய அகதிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டதாதும். இதில் 1990 இல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் அகதிகளைப் புறக்கணிப்பதற்கு அரசியல்வாதிகளாலும், சில தமிழ் உயர் அதிகாரிகளாலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகும். 

 

அண்மையில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்கள், வடக்கில் வாழும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 100 ஏன்னர் காணி வழங்கத் திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியபோது, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள், தமிழ் - முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்த பிரதமர் முயற்சிக்கிறார் என இம்மீள்குடியேற்றம் சாத்தியமில்லை எனக்கூறி தடுக்க முயற்சிக்கிறார். இவ்வாறான அரசியல்வாதிகளும், தமிழ் உயர் அதிகாரிகளும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க முடியற்சிக்கின்றனர் என்பதற்கு இந்நிகழ்வு அத்தாட்சியாகும். 

 

33 வருடங்கள் அகதி வாழ்க்கை வாந்து தாயக மண்ணுக்கு திரும்பும் இம்மக்கள் மீது கருணைகாட்டுவதற்குப் பதிலாக, எவ்வித நெகிழ்வுத் தன்மையற்ற இறுக்கமாக நிபந்தனைகளையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர். மீள்குடியேற்றம் ஆரம்பமாகி கடந்த 13 வருடங்களாக யாழ் முஸ்லிம் அகதிகளுக்கு கிராம சேவையாளர் பிரிவு, மீள்குடியேற்ற அமைச்சு, இந்திய வீடமைப்புத் திட்டம் என்பவற்றினூடாக இதுவரை 250 வீடுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 

 

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நாச்சிக்குடா பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனை அரசுக்குத் தெரிவிக்கும் நோக்கில் அண்மையில் நாச்சிக்குடாவிலிருந்து ஹாமீம் என்ற சகோதரரும் அவருடன் ஈசப்பா என்பவரும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகம் வரை நடந்து சென்று தமது கோரிக்கைகளை; கையளித்தனர். 45 நாட்களாக பலசிரமங்களுக்கு மத்தியிலும் நடந்து சென்ற அவர்களுக்கு நீர்கொழும்பில் சிறிது தடை ஏற்பட்டாலும் அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றினர். நாச்சிக்குடா மக்களுடைய மீள்குடியேற்றத்தில் பல தடைகளும், பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக அவர்களுடைய வாழ்விட எல்லைகள் மாற்றப்பட்டுள்ளன. நாச்சிக்குடா என்ற பிரதேசம் சுருங்கி முழங்காவில் என்ற பிரதேசம் விரிவாக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகளால் எமது மீள்குடியேற்றம் புறக்கணிக்கப்படுவதற்கு இந்நிகழ்வும் ஒரு உதாரணமாகும். 

 

1990 ஒக்டோபரில் வடமாகாண முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு சகல பொருட்களும் சூறையாடப்பட்டு வெளியேற்றப்பட்ட வரலாறு உலகறிந்த விடயம். அம்மக்கள் வாழ்ந்து இடிந்து சிதையுண்ட வீடு, காணி உறுதிப்பத்திரம், முன்னர் குடியிருந்ததற்கான வாக்குப்பதிவு, இவைகள் யாவும் இருக்கும்போது, இம்மக்கள் தாயக மண்ணில் வாழ்ந்த உரிமையை நிரூபிக்க வேறென்ன ஆதாரம் வேண்டும். 

 

எனவே இத்தகைய சந்தர்ப்பத்தில் வடமாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக சேவை நிறுவனங்கள், நலன் விரும்பிகள், புத்தி ஜீவிகள் ஒன்றிணைந்து இம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதி, பிரதமர், ஆகியோருக்கு அறியத்தருவதுடன் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கும், 90ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கும், குறுகிய காலத்தில் மீள் குடியேறிய தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்துக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கி, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குnடியேற்றத்துக்கென விசேட திட்டங்களையும் உருவாக்க முயற்சிப்பது காலத்தின் கட்டாயமாகும். 

https://www.jaffnamuslim.com/2023/10/33.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலைப்புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவு : நஷ்ட ஈடு கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

27 OCT, 2023 | 06:05 PM
image

விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 33 வருடங்களாகி விட்டதை நினைவுகூரியும், தமக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறு கோரியும் புத்தளத்தில் முஸ்லிம்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மக்கள் மறுமலர்ச்சி முன்னனி கட்சியின் தலைவரால் புத்தளம் - கொழும்பு வீதியின் ரத்மல்யாய பகுதியில் ஜும்ஆத் தொழுகை முடிவடைந்த பின்னர் இந்த ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.

விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, 33 வருடங்களாகியும் காலங்காலமாக மாறி வருகின்ற அரசாங்கங்களினால் தமக்கு நன்மையான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தும், தாம் இழந்தவைக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறு கோரியும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் போது தமது கோரிக்கைகளை எடுத்துக்கூறியும், கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Screenshot_20231027-155931_MX_Player.jpg

Screenshot_20231027-155917_MX_Player.jpg

Screenshot_20231027-155854_MX_Player.jpg

Screenshot_20231027-155759_MX_Player.jpg

Screenshot_20231027-155816_MX_Player.jpg

https://www.virakesari.lk/article/167907

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு விதத்தில் பார்த்தால் விடுதலை  புலிகள் முஸ்லீம்களின் எதிர்காலத்திற்கு நல்லது செய்துள்ளார்கள்? 

முஸ்லீம்கள் வெளியேற்றப்படவில்லை என்றால் முள்ளிவாய்காலில் தமிழருடன் சேர்ந்து அவலப்பட்டு இருப்பார்கள்  

அத்துடன் விடுதலை புலிகள் அமைப்பினுள் உள்வாங்கப்பட்டு இருப்பின் படையினரின் கைதுகள், கெடுபிடிகளுக்கு ஆளாகி இருப்பார்கள். 

தமிழரை போல் போரின் வலி தெரியாமல்/முகம் கொடுக்காமல் தப்பியதால் முஸ்லீம்கள் தமிழரை விட முன்னேறினார்கள் என கொள்ளலாம்?

விதி விலக்குகள் உள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

விடுதலைப்புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவு : நஷ்ட ஈடு கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

27 OCT, 2023 | 06:05 PM
image

விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 33 வருடங்களாகி விட்டதை நினைவுகூரியும், தமக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறு கோரியும் புத்தளத்தில் முஸ்லிம்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மக்கள் மறுமலர்ச்சி முன்னனி கட்சியின் தலைவரால் புத்தளம் - கொழும்பு வீதியின் ரத்மல்யாய பகுதியில் ஜும்ஆத் தொழுகை முடிவடைந்த பின்னர் இந்த ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.

விடுதலைப் புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, 33 வருடங்களாகியும் காலங்காலமாக மாறி வருகின்ற அரசாங்கங்களினால் தமக்கு நன்மையான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தும், தாம் இழந்தவைக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறு கோரியும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் போது தமது கோரிக்கைகளை எடுத்துக்கூறியும், கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Screenshot_20231027-155931_MX_Player.jpg

Screenshot_20231027-155917_MX_Player.jpg

Screenshot_20231027-155854_MX_Player.jpg

Screenshot_20231027-155759_MX_Player.jpg

Screenshot_20231027-155816_MX_Player.jpg

https://www.virakesari.lk/article/167907

இதிலே தமிழை சுத்தமாக எழுதியுள்ளார்கள்.

ஆனாலும் அரசு பிரசுரிக்கும் பல் தகவல்களில் பிழை பிழையாக எழுதுகிறார்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, நியாயம் said:

ஒரு விதத்தில் பார்த்தால் விடுதலை  புலிகள் முஸ்லீம்களின் எதிர்காலத்திற்கு நல்லது செய்துள்ளார்கள்? 

முஸ்லீம்கள் வெளியேற்றப்படவில்லை என்றால் முள்ளிவாய்காலில் தமிழருடன் சேர்ந்து அவலப்பட்டு இருப்பார்கள்  

அத்துடன் விடுதலை புலிகள் அமைப்பினுள் உள்வாங்கப்பட்டு இருப்பின் படையினரின் கைதுகள், கெடுபிடிகளுக்கு ஆளாகி இருப்பார்கள். 

தமிழரை போல் போரின் வலி தெரியாமல்/முகம் கொடுக்காமல் தப்பியதால் முஸ்லீம்கள் தமிழரை விட முன்னேறினார்கள் என கொள்ளலாம்?

விதி விலக்குகள் உள்ளன. 

அப்படி பார்த்தால் சிங்களவனும் நமக்கு நல்லதுதான் செஞ்சிருக்கான்.. அவன் போர் தொடுத்ததால்தான் நாம் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு ஓடிவந்து அசைலம் அடித்து எமது பலதலைமுறைகள் சிங்களவரைவிட புலம்பெயர் நாடுகளில் நன்றாக முன்னேறி உள்ளார்கள்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்படி பார்த்தால் சிங்களவனும் நமக்கு நல்லதுதான் செஞ்சிருக்கான்.. அவன் போர் தொடுத்ததால்தான் நாம் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு ஓடிவந்து அசைலம் அடித்து எமது பலதலைமுறைகள் சிங்களவரைவிட புலம்பெயர் நாடுகளில் நன்றாக முன்னேறி உள்ளார்கள்..

 

போராடியவர்கள், பொதுமக்கள் எல்லோருமாக சேர்த்து இதற்கு கொடுத்த விலை கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் தமிழ் மக்களின் உயிர்கள் என கூறலாமா? வெளிநாடு சென்றவர்கள் ஐந்து இலட்சம் சேருமா? கூட்டிக்கழித்தால் முன்னேற்றம் 0?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Since 11 June 1990, over one million people have been displaced by the fighting between Sri Lankan armed forces and the Liberation Tigers of Tamil Eelam (Reuters 2 Sept. 1990, 1 Sept. 1990). The resolve of the Tamil guerrillas and the army's large-scale military operation aimed at eliminating resistance have prompted many civilians to flee their homes. Massacres of Muslim communities, bombings, pillage, extortion and harassment of inhabitants by the various forces have also forced much of the population of northeastern Sri Lanka to flee in recent weeks (Le Monde 29 June 1990; Reuters 29 Oct. 1990; The Associated Press 21 Oct. 1990). Refugees, most of them Tamils fleeing from air bombing and fighting in the northeast, come from all social strata, with young children making up the largest group (The Hindu 4 Aug. 1990c; Inter Press Service 22 Aug. 1990).

https://www.refworld.org/docid/3ae6a8058.html

இதே காலப் பகுதியில் கிழக்கில் இருந்தும் வடக்கில் இருந்தும் சிங்களப் படைகளாலும்.. சிங்கள முஸ்லிம் ஊர்காவல்படைகளாலும் சுட்டும் வெட்டியும் பல நூறு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு.. கிழக்கில் இருந்து வடக்கு நோக்கியும்.. தமிழகம் நோக்கியும்... தமிழ் மக்கள் சாரை சாரையாக இடம்பெயரவும் செய்யப்பட்டனர்.

கல்முனை.. சம்பாந்துறை.. சம்பூர்.. மூதூர்.. நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட கிழக்கின் முக்கிய பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லிம் ஜிகாத் பயங்கரவாதக் காடைகளால்.. படுகொலை செய்யப்பட்டதோடு.. துரத்தி அடிக்கவும் பட்டனர்.

வடக்கு யாழ்ப்பாணம்.. சாவகச்சேரி.. பருத்தித்துறை.. கிளிநொச்சி.. பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் திட்டமிட்ட வகையில்.. கிழக்குப் போன்று வடக்கிலும்.. தமிழ் - முஸ்லிம் கலவரத்தை தூண்ட நிகழ்த்தப்பட்ட சதிகள் விடுதலைப்புலிகளால் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டதுடன்.. வடக்கு முஸ்லிம்கள் பாதுகாப்பான வெளியேற்றதுக்கு கோரப்பட்டதுடன்.. போர் முடிவோடு மீளக் குடியேறவும் உறுதியளிக்கப்பட்டது.

இதன் பிரகாரம்.. 2002 பிரபா - ஹக்கீம் சந்திப்பின் பின் முஸ்லிம்கள் வடக்கில் மீளக் குடியேற புலிகளால் அழைக்கப்பட்டும் இருந்தனர். 

பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் – ஹக்கீம் காக்கா  அந்தர்பல்டி – Eelamaravar

Hakeem-Prabha-Secret-Agreement.preview.jpg

 

இத்தகைய அப்பட்டமான உண்மைகளை மறைத்து.. சில முஸ்லிம் மத வெறிக் காடைகள் இப்படியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது.. இவர்களே.. தமிழ் - முஸ்லிம் பிரிவினைக்கு கலவரங்களுக்கு சிங்களத்தின் தூண்டுதலில் உதவி செய்தவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தை பலமாக எழுப்பவதோடு.. இது தமிழ் - முஸ்லிம் நீண்ட கால நலனை பாதிக்கவும் செய்யும். 

Edited by nedukkalapoovan
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது தவறுதான், நியாயப்படுத்த முடியாது.

ஆனால், உண்மையில், பிட்டும், தேங்காய்ப்பூவுமாக இருந்த தமிழ் பேசும் மக்களை, மிக நுட்பமாக, மத ரீதியில் பிரிந்தவர், கிழட்டு நரி என்று சொல்லப்பட்ட ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே. அவர் கபடத்துக்கு இரையானவர், அஸ்ரப். தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து கிளப்பப்பட்டு, முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினை உருவாக்க பணமும் கொடுத்து, அமைச்சரும் ஆக்கினார்.

அதுபோலவே, ஜிஜி பொன்னம்பலம், திருசெல்வம், மலையகத்தின் தொண்டைமான் இணைந்து முப்பெரும் தமிழர் தலைவர்களாக இணைந்த போது, தொண்டைமானை அதே பாணியில் பிரித்து அமைச்சராக்கினார் JRJ.

ஆனால், இந்த நரித்தனமான வேலையால் நாட்டினை நடுத்தெருவில் இழுத்து விட்டு, நாசமாக விட்டு சென்றார் அந்த கடைந்தெடுத்த இனவாதி.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிக்க நன்றி ரஞ்சித். யாழில் நீண்ட விளக்கம் கொடுக்க கூடிய மிக அரிதான கருத்தாளர்களில் நீங்களும் வழவனும் அடக்கம்.    உங்களை ஏன் @ பண்ணினேன் என்பதை வழவனுக்கான பதிலில் காண்க🙏. நான் போட்ட ஜெய்ஹிந்தின் அர்த்தம் அநேகமாக அனைவரும்கும் விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். அதுதான் முழு நேர மேற்கு எதிர்ப்பு பிரச்சாரகர்களின் உண்மையான கபட நோக்கம். ஏனையவர்களின் பிரச்சனை வேற. அவர்கள் நல்லவர்கள். ஆனால் எமக்கு நடந்த பிழைக்கு மேற்கு மட்டுமே தவறு என்பது போல் அவர்களை புல் டைம் காரர் மூளை சலவை செய்கிறார்கள். அதுதான் நீங்கள் சுட்டிய அளவுக்கு கொள்கை பிறழ்வு ஏற்பட காரணம். அதே போல் எப்போதும் ஒரு hero worship இல் இருந்து இவர்களுக்கு பழகிவிட்டது. அதனால்தான் தலைவருக்கு பின், சீமான், புட்டின் என அலைகிறார்கள். உப்பு கல்லும் வைரமும் ஒன்றென கருதி. இவர்களை போலவே முழு புலம்பெயர் சமூகத்தையும் மந்தைகள் ஆக்கி விடலாம் என்பதுதான் புல்டைம் காரர்களின் திட்டம். பார்க்கலாம்…. We are fighting a good fight, keep at it👍 இது எம்போன்றோருக்கு சரி… ஆனால் சம்பளத்து வேலை செய்பவர்கள் சதா அதே விடயத்தை எழுதி கொண்டே இருக்க வேண்டும்… அல்லது டெல்லியில் இருந்து கோல் வரும்🤣
    • போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 2 மீன் அடிச்ச ஆப்பு !   மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று போகும் போதெல்லாம் எங்கோ ஒரு இலக்கில் எதிரி சிதறப் போகும் யாதார்த்தம் நிமிர்ந்து நிற்கும். இலக்குக்காக அந்த மனிதர்கள் அலைந்த நாட்கள் கொஞ்சமல்ல. ஓய்வு என்பது மரணத்துக்கு பின் என்பது அவர்களது இயல்பாக இருக்கலாம். ஓய்வின்றி தேசியத்தலைவரின் எண்ணங்களுக்கு அந்த மனிதர்கள் வண்ணம் பூசி வெற்றி என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். 1996 முல்லை மண்ணில் முப்படைகளும் குந்தி இருந்து எம் மக்களுக்கு கொடுத்த பெரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளியிட்டனர் விடுதலைப்புலிகளின் சண்டையணிகள். யாழ்ப்பாணத்தை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த பின் விடுதலைப்புலிகள் பலமிழந்துவிட்டதாக பரப்புரை செய்து கொண்டிருந்த சிங்களத்துக்கு நெத்தியடி கொடுத்த விடுதலைப்புலிகளின் அணிகளில் இவர்களும் இருந்தார்கள். பெரும் வெற்றியை எமக்குத் தந்துவிட்டு மீண்டும் மணலாறுக் காட்டை வதிவிடமாக கொண்டு எதிரிக்காக அலைந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறு தான் அவர்களில் இருந்த வேவுப் போராளிகளின் அணி ஒன்று வேவுக்காக சென்று திரும்பிய போது புன்னகையோடு இலக்கை கூறுகிறார்கள். “மரியதாஸ் ( பின்நாட்களில் “ஜெயசிக்குறு” நடவடிக்கையில் கப்டன் மரியதாஸ் வீரச்சாவு) அண்ண 10 பேரண்ண வடிவா குடுக்கலாம்…” ரைபிள் எல்லாத்தையும் நிலத்தில வைச்சிட்டு சென்றிக்கு ஒருத்தன் மட்டும் நிக்கிறான் மற்றவ குளிக்கிறாங்கள் கிளைமோர் ஒன்று செட் பண்ணினால் 10 பேரையும் தூக்கலாம்” எந்த இடத்தில? தளபதி ஆவலோடு வினவுகிறார். அண்ண எங்கட சின்னக் குளத்தில அண்ண. மணலாறு காட்டிடையே விடுதலைக்காக பயணித்துக் கொண்டிருந்த மூத்த போராளியும் அந்த வேவு அணிகளுக்கான அணித்தலைவனாகவும் இருந்த மரியதாஸ்க்கு வேவுத்தகவல் பிரியோசனமானதாகவே தோன்றியது. அந்த இலக்கு அவர்களின் வேவு வலயத்துக்குள் கொண்டுவரப்படுகிறது. அடிச்சால் பத்து சிங்களப் படையைக் கொண்ட எதிரியின் ஒரு அணி உயிரிழக்கும். அந்த குளம் எம்மவர்களின் பார்வை வீச்சில் இருந்து தப்பிக்க முடியாத அளவிற்கு வேவுப் போராளிகள் காத்திருந்தார்கள். தளபதி ஊடாக தலைவரின் அனுமதிக்காக திட்டம் அனுப்பப்படுகிறது. உடனடியாக திட்டம் அனுமதிக்கப்பட மகிழ்வில் பூரித்து போகிறார்கள் அவர்கள். குளத்தின் இந்தக்கரை எம்மவர்களாலும் மறு கரை இராணுவத்தாலும் சூழப்பட்டருந்தது. தினமும் குளிப்பதற்காக குறித்த நேரத்தில் அந்த அணி வந்து போகிறது. இது அந்த காலத்தில் அரியதான ஒரு இலக்கு. தொடர் வேவுகள் இலக்கை உறுதிப்படுத்திக் கொள்ள அன்றைய காலை வேளை அவர்களுக்காக குளத்துக்குள் ஒரு கிளைமோர் தயாராக காத்திருக்கிறது. இரவோடு இரவாக மரியதாஸ் கிளைமோரை குளத்து நீரின் அடியில் புதைத்திருந்தான். காத்திருக்கிறார்கள். அடிச்ச மறு நிமிடம் தங்களை எதிர்த்து தாக்க வேறு அணி வரலாம் அவர்கள் எம் அணிகளை நோக்கி பாரிய தாக்குதல் செய்யலாம் என்ற நியம் மரியதாஸ் தலமையிலான போராளிகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் அதற்கும் தயாராகவே காத்திருந்தார்கள். அப்போதெல்லாம் எம் வெடிகுண்டு தொழில்நுட்பம் வயிரின் மூலம் மின் கொடுக்கப்பட்டு வெடிக்க வைப்பதே. அதனால் நீண்ட மின் கடத்தக்கூடியதான தொலைபேசி வயரை குளத்து நீரின் அடியால் மிக சிரமத்தோடு தாட்டு கிளைமோரை நிலைப்படுத்துகிறார் மரியதாஸ். நீரிற்கு வெளியிலும் மண்ணுக்குள் வயரை தாட்டு குளக்கரையில் இருந்த பெரும் காட்டுக்குள் கொண்டு வருகிறார். இப்போது எல்லாம் தயார். மின்கலத்தின் மூலம் வெடிக்க வைக்க தயாராக காத்திருக்கிறார்கள் அந்த மனிதர்கள். மரியதாஸ் கண் இமைக்காமல் இராணுவ அணியை அவதானித்த்துக் கொண்டிருக்கிறார். தூர சில உருவங்கள் காட்டை விட்டு வெளி வருவது தெரிகிறது. இராணுவ அணி உடைகளை கழைந்து குளிப்பதற்காக குளத்துக்குள் இறங்குகின்றனர். அவர்களில் சிலர் துப்பாக்கியோடும் சிலர் குளிப்பதற்கான பொருட்களோடுமே வந்திருந்தனர். குளத்துக்குள் இறங்கி சிலர் குளிக்க இரண்டு மூன்று பேர் அருகில் இருந்த கற்களில் உடைகளை தோய்க்கத் தொடங்கி இருந்தனர். இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் நெருக்கமாக வந்து விட்டது. மரியதாஸ் மின் இணைப்பை மின்கலத்தின் மூலம் கொடுக்கிறான். “ஏமாற்றம்…” கிளைமோர் வெடிக்காமல் சதி செய்தது மின்கலத்தில் மின் இல்லை என்று நினைத்து வேறு மின்கலத்தின் மூலம் மீண்டும் முயற்சி செய்த போது அதுவும் தோல்வி. மனம் வெறுத்துப் போக குளத்தையே வெறித்து பாக்கிறார்கள். ச்சீ… தப்பீட்டாங்கள்… அனைவரும் மனம் வெறுத்து அந்த குளக்கரையோரம் நீண்டு நிமிர்ந்த மரங்களின் அடியில் படுத்து கிடக்கிறார்கள். இலக்கு தப்பி விட்டது. வந்த அணி திரும்பி விட்டது. தளபதிக்கு விடயம் தெரிவிக்கப்பட்டு இவர்களும் அன்று முழுவதும் அந்த காட்டோரம் படுத்திருந்து தாம் தயாராக்கி வைத்த கிளைமோரை மீட்க குளத்துக்குள் இறங்குகிறார்கள். கிளைமோரை தூக்கி வெளியில் வந்து பார்த்த போது சிரிப்பதா அழுவதா என்று நிலை தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.என்னண்ண ஆச்சு? இங்க பார் மீன் என்ன செய்திருக்கு என்று? அட நாசமா போன மீன்கள் இப்பிடி வயர கடிச்சு தின்டிருக்குதகள்? இடையில் அறுபட்டு கிடந்த வயரைப் பார்த்து மீன்களை திட்டத் தொடங்கினான் ஆறுமுகம். விடுடா அதுகளுக்கு தெரிஞ்சு போச்சு போல இவங்கள் ஆமிய மட்டுமல்ல எங்களையும் சேர்த்து சாகடிக்க போறாங்கள் என்று அது தான் அதுகள் எங்களுக்கு எதிரா போர்க்கொடி தூக்கி இருக்குதுகள். என்று இரகசியமாக கூறி சிரித்து விட்டு முகாம் மீண்டார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் அந்த இலக்கு தவறியது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நீரைத் தவிர வேறு இடத்தில் கிளைமோரை பொருத்தினால் இலக்கு வலயத்துக்குள் அந்த அணி முழுவதும் வராது அதனால் அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. அதனால் சிந்தனையை கூர்மையாக்கிக் கொண்டான். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து களைத்த அவனுக்கு வயர்லெஸ் ( wireless ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை கருத்தரித்தது. அதாவது வயர் இணைப்பு இல்லாது வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம். உதாரணத்துக்கு ரிமோட்கொன்ரோல் (remote control ) தனக்கு தோன்றியதை மரியதாஸ்க்கு தெரியப்படுத்தினான். மரியதாஸுக்கும் அது சரியான ஒன்றாகவே பட்டது. சிந்தனை செயலாக்கம் பெற்றது இரண்டு வோக்கிகள் அதற்காக பயன்படுத்தப்பட்டன. ஒரு வோக்கியின் ஒலிபெருக்கிக்கு செல்லும் வயரில் இருந்து கிடைக்கும் மின்சாரம் கிளைமோரோடு இணைக்கப்படுகிறது. அந்த மின்சாரத் தூண்டல் கிளைமோரை வெடிக்க வைக்க போதுமானதா என்று சரிபார்க்கப்பட்டு அதற்கான மின்சாரத் தூண்டலை அதிகரிக்க செய்யும் ஒரு இலத்திரனியல் பகுதி அதனுடன் இணைக்கப்படுகிறது. அதன் மூலம் கிளைமோருக்கான வெடிப்பிக்குத் தேவையான மின்சாரம் சரி செய்யப்படுகிறது. இப்போது இவர்கள் கையில் இருக்கும் வோக்கியின் PTT அமத்தப்பட்டால் கிளைமோருடன் இணைக்கப்பட்ட வோக்கியில் இருந்து மின்சாரம் பாச்சப்படும் அந்த மின் தூண்டல் வெடிப்பியை வெடிக்க வைத்து கிளைமோர் வெடிக்கும் இலக்கு தவறாது சிதறும். ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. அதாவது இவர்கள் அந்த திட்டத்துக்காக பயன்படுத்திய வோக்கியின் இலக்கம் 328. இதே இலக்கத்தில் எதிரியும் தொடர்பை பேணுவானாக இருந்தால் அல்லது வோக்கியின் அழைப்பு வலயத்துக்குள் இருந்து வேறு எதாவது வோக்கியில் இருந்து அந்த இலக்கத்துக்கு PTT அழுத்தப்பட்டால் கட்டாயமாக கிளைமோர் வெடித்து சிதறும். ஆனாலும் எமது அணிகளுக்கு இந்த இலக்கத்தை பாவிக்க வேணாம் என்ற ஒரு கட்டளையை வழங்கி ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால் எதிரி…? யோசித்த போது இறுதியாக முயற்சி செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவர்களாக நடவடிக்கையில் இறங்கினர் மரியதாஸ் தலமையிலான அணி. அந்த நெருக்கடியான காலமானது தொழில்நுட்ப அறிவியல் வளராத இயக்க வரலாற்றின் பக்கத்தை கொண்டது. ஆனாலும் கிடைக்கும் பொருட்களின் மூலம் உயர் பயன்பாட்டை பெறக்கூடிய விடுதலைப்புலிகளின் போராளிகள் தமது உயர் தொழில்நுட்ப அறிவை தம் சிந்தனைகளுக்கூடாகவே வளர்த்துக் கொண்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடே இந்த கிளைமோர் தாக்குதல்.சில வாரங்கள் கடந்து போக, மீண்டும் வேவுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட அந்த இரவு அவர்களுக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது சிலவேளைகளில் இதுவும் தவறினால்? அனைவரின் மனதிலும் இதுவே எழுந்த கேள்வி. வெடிக்காமல் போனால் பரவாயில்லை தவறி இலக்கு வர முன் வெடித்தால்? இலக்கு பிசகி விடும் அதே நேரம் இப்படியான இலகுவாக கிடைக்கும் இலக்குக்காக நீண்ட காலங்கள் காத்திருக்க வேண்டி வரும். அனைவரும் அந்த குளக்கரையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மரியதாஸ் கையில் வெடிக்க வைக்கும் வோக்கி இருந்தது. இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் வருகிறது. இவர்களின் மனப் பதட்டம் அதிகரிக்கிறது. வந்தவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு தமக்கான ஆபத்து காத்திருப்பதை அறியாது சிரித்து மகிழ்கின்றனர். மரியதாஸின் கையில் இருந்த வோக்கியின் PTT அழுத்தப்படுகிறது. அந்த காலை நேரம் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாது கிளைமோர் வெடித்து சிதறிப் போக சிங்களத்து சிப்பாய்கள் 9 பேர் அந்த இடத்திலையே சிதறிப் போனார்கள் காவல் பணியில் இருந்த ஒரு இராணுவம் மட்டும் காயத்தோடு தப்பித்து சென்று விட இலக்கை துவம்சம் செய்த வோக்கிக்கு ஒரு முத்தத்தை கொடுக்கிறான் மரியதாஸ். உடனே பின்தளம் திரும்ப கட்டளையிடுகிறான். அனைவரும் வெற்றி பெற்றுக் கொண்டு தளம் திரும்பினர். மரியதாஸ் தலமையிலான மணலாறு மாவட்ட படையணியின் வேவுப் போராளிகளின் இந்த தாக்குதலானது சிங்களத்துக்கு தடுமாற்றத்தையும் எமக்கு மகிழ்வையும் தந்த போது, அடுத்த இலக்கைத் தேடி அந்த மனிதர்கள் அந்த பெரும் காட்டுக்குள் ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தார்கள்… கவிமகன்.இ 22.11.2017
    • சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம்     இது வட தமிழீழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்திருந்தது.             அங்கு பயின்ற மருத்துவர்களும் தாதியரும்   நடுவில் அமர்ந்திருப்பவர் படைய மருத்துவர் லெப். கேணல் சத்தியா அவர்கள்                 பின்னாளில்         திருவுருவப்படத்திற்கு வலது பக்கம் அமர்ந்திருப்பவர் மரு. சத்தியமூர்த்தி ஆவார்.
    • பெரியார் ராமசாமியைத் தனது பேரன் என்று சீமான் ஒரு காலத்தில் அழைத்துவந்தார். இதனை ஒரு கூட்டத்தில் கிண்டலடித்துப் பேசிய பெரியாரின் உண்மையான பேரனான இளங்கோவன், "நாந்தான் பெரியாரின் உண்மையான பேரன், சீமான் கள்ளப்பேரன், அவன் பெரியாரின் சின்னவீட்டிற்குப் பிறந்தாலும் பிறந்திருப்பான்" என்று கூறியிருந்தார். அதன்பிறகு பெரியாரை தனது பேரன் என்று கூறுவதைச் சீமான் தவிர்த்து விட்டிருக்கலாம். இப்போது இளங்கோவனின் மரணத்திற்குத் துக்கம் விசாரிக்கச் சென்றிருக்கத் தேவையில்லை. அவரது அரசியல் அவருக்குத்தான் புரியும். அதனால் எமக்கேதும் நடக்கப்போவதில்லை. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.