Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் பயங்கரம் : மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பயங்கரம் : மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பயங்கரம் : மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே நேற்றிரவு  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், எனவும் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இது குறித்த விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் லெவிஸ்டனில் துப்பாக்கி சூடு இருபதிற்கும் அதிகமானவர்கள் பலி

Published By: RAJEEBAN    26 OCT, 2023 | 08:12 AM

image

அமெரிக்காவின் லெவிஸ்டனில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருபதிற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் அந்த பகுதியில் காணப்படுகின்றார் என தெரிவித்துள்ள பொலிஸார் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பல இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள பொலிஸார் சந்தேகநபரின் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்த சம்பவம் குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் 50 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெவிஸ்டனில் நபர் ஒருவர் தொடர்ந்து துப்பாக்கிதாக்குதலில் ஈடுபட்டுள்ளார் மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கதவுகளை மூடிவிட்டு வீடுகளிற்குள் இருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் பல இடங்களில் மக்களிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/167755

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவரை தேடும் பணி தீவிரம்

அமெரிக்காவின் மைனே மாகாணம் லூயிஸ்டன் நகரில் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார்.

அந்நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நுழைந்து அந்த நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அவர் அங்குள்ள மதுபான விடுதி, ஓட்டல், பெளலிங் விளையாட்டு மையம், வணிக வளாகத்தின் பொருட்கள் விநியோக மையம் ஆகியவற்றுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளான்.

இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர். துப்பாக்கி சூடு காரணமாக லூயிஸ்டன் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பொலிஸார் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

US-3.jpg

இந்த துப்பாக்கி சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூடு நடந்தபோது பலர் தப்பிக்க அங்கு உள்ள கட்டிடங்களில் இருந்த அறைகளில் பதுங்கிக்கொண்டனர். அவர்களை பொலிஸார் ஒவ்வொருவராக பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டனர். அதில் அந்த நபர் துப்பாக்கியால் சுட தயாராகுவது இடம் பெற்று இருந்தது.

அவரிடம் ஆயுதம் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் வீட்டுக்கு உள்ளேயே இருக்கும்படியும் லூயிஸ்டன் நகரில் கடைகளை மூடவும் பொலிஸார் அறிவுறுத்தினர். தாக்குதல் நடத்தியவரை பிடிக்க லூயிஸ்டன் நகர் முழுவதும் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

அந்த நபர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே பொலிஸாருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் வீட்டின் அருகில் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகள் நடந்தால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர்.

இது தொடர்பாக மைனே மாகாண ஆளுநர் ஜேனட் மில்ஸ் கூறும்போது, லூயிஸ்டனில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. மாகாணம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டலை பின்பற்றுமாறு அப்பகுதியில் உள்ள மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும் இச்சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் துப்பாக்கி சூட்டு நடத்திய நபரின் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் ராபர்ட் கார்ட் என்றும், மைனேவில் உள்ள அமெரிக்க இராணுவ ரிசர்வ் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்றவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் அவர் மனநல மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிவிக்கின்றனர்.

https://thinakkural.lk/article/278704

  • கருத்துக்கள உறவுகள்

சுடுறவன் Jews ஐ மட்டும் தேடி சுடுறானோ அல்லது எல்லாரையும்தானோ??  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

மேலும் அவர் மனநல மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் இது ஒரு பெரிய பிரச்சனை.

குற்றச் செயல்களில் இருந்து தப்பிப்பதற்காக 

குற்றம் செய்வதற்கு முன்போ அல்லது பின்போ

மனநல வைத்தியசாலையில் போய் படுத்துவிடுவார்கள்.

அப்புறம் என்ன குறைந்த தண்டனைகளுடன் வெளிவந்துடுவார்கள்.

19 minutes ago, Eppothum Thamizhan said:

சுடுறவன் Jews ஐ மட்டும் தேடி சுடுறானோ அல்லது எல்லாரையும்தானோ??  

வெடி பரவலாகத் தான் விழுகுது.

சண்டையில் பாவிக்க வேண்டிய துப்பாக்கிகளை வீட்டுக்குள் வைத்திருந்தால் 

தூங்கவிடுமா என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் இது ஒரு பெரிய பிரச்சனை.

குற்றச் செயல்களில் இருந்து தப்பிப்பதற்காக 

குற்றம் செய்வதற்கு முன்போ அல்லது பின்போ

மனநல வைத்தியசாலையில் போய் படுத்துவிடுவார்கள்.

அப்புறம் என்ன குறைந்த தண்டனைகளுடன் வெளிவந்துடுவார்கள்.

ஜேர்மனியிலையும்  மண்டை களண்டவர் எண்ட சேட்டிக்கற் எடுத்துப்போட்டுதான்  போற வாற சனங்களுக்கு வில்லுக்கத்தியால குத்திக்கொண்டு திரியுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

இங்கேயும் இப்படி சொல்லி (diminished responsibility) குற்றசாட்டிற்குரிய தண்டனை பெறாமல் விலத்தலாம்.

ஆனால் இப்படியானோரை மனநிலையால் கடும் குற்றம் இழைத்தோர் தடுத்து வைக்கப்படும் மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் இருப்பது ஜெயிலை விட மோசம். வெளியால் வருவதும், ஜெயில் விடுதலையை விட கஸ்டம்.

பல வழக்கறிஞர் குற்றத்துகுரிய தண்டனையை ஏற்பது பரவாயில்லை என ஆலோசனை கொடுப்பார்கள்.

பிகு

காசாவில் குழந்தைகள் இறப்பை பற்றிய திரியில் கருத்து சொல்லவில்லை என குறைபட்ட ஆட்கள், இந்த திரியில் செத்தது யூதன் மட்டுமோ என “ஸ்கோர்” கேட்டு போகிறார்கள். 

அல்ஜசீரா சொன்னால்தான் அது அவலம் ஆக்கும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

காசாவில் குழந்தைகள் இறப்பை பற்றிய திரியில் கருத்து சொல்லவில்லை என குறைபட்ட ஆட்கள், இந்த திரியில் செத்தது யூதன் மட்டுமோ என “ஸ்கோர்” கேட்டு போகிறார்கள். 

அல்ஜசீரா சொன்னால்தான் அது அவலம் ஆக்கும்🤣.

உங்களுக்கென்ன விளக்கம் குறைவா? யார் ஸ்கோர் கேட்டது?  இறந்தவர்கள் பற்றிய செய்திகள் சரியாக வெளிவராத்ததால்தான் இறந்தவர்கள் யூதர்களாஎன்று கேட்கவேண்டி வந்தது!

அல்ஜசீரா நடப்பதை அப்படியே காட்டுகிறது. பிபிசி CNN போல் இஸ்ரேலுக்கு செம்பு தூங்குவதில்லை! RT  ஐ முடக்கியதுபோல் ஏன் அல்ஜஸீராவை முடக்க மேற்கால் முடியவில்லை??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அல்ஜசீராவை இஸ்ரேலில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கூறி இருந்தது. காசா வைத்தியசாலையை தாக்கியது இஸ்ரேலிய படை என கூறியது காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

உங்களுக்கென்ன விளக்கம் குறைவா?

ஓம். உங்கள் அளவுக்கு இல்லை 🤣.

ஆனால் இந்த பதில் காசாவில் குழந்தைகள் இறக்கும் திரியில் எழுதாதோர் பற்றிய உங்கள் விளக்கம் ததும்பும் பதிவுக்கான பதிலே.

யாழ்களம் என்ன RIP book ஆ? ஒவ்வொரு திரியிலும் போய் இஸ்ரேல் செய்வது போர்க்குற்றம் என ஒப்பாரி வைக்க கருத்தாளர் என்ன சாவு வீட்டில் காசுக்கு மாரடிக்கும் கூட்டமா?

இங்கே இஸ்ரேல் செய்ததை போர்குற்றம் இல்லை என யாரும் சொன்னதாக தெரியவில்லை. பலர் பல திரிகளிலும் இதை எழுதி இருக்கும் போது, ஒவ்வொரு திரியிலும் இதை எழுதவேண்டும் இல்லை என்றால் அவர்கள் மேற்கின் பரப்புரையை நம்புபவர்கள் என எழுதியது உங்களை போன்ற ஒரு விளக்க குஞ்சுக்கே ஓவரா தெரியவில்லையா?

1 hour ago, Eppothum Thamizhan said:

அல்ஜசீரா நடப்பதை அப்படியே காட்டுகிறது

இவ்வளவு அப்பாவியா நீங்கள்?

இவர்கள் அரபு/முஸ்லிம் நேயர்களின் நோக்கில் இருந்து செய்தியை அணுகுகிறார்கள்.

1 hour ago, Eppothum Thamizhan said:

அல்ஜசீரா நடப்பதை அப்படியே காட்டுகிறது. பிபிசி CNN போல் இஸ்ரேலுக்கு செம்பு தூங்குவதில்லை

எல்லாரும் செம்புதான் - யாருக்கு தூக்குகிறார்கள் என்பதே வேறுபடுகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

RT  ஐ முடக்கியதுபோல் ஏன் அல்ஜஸீராவை முடக்க மேற்கால் முடியவில்லை??

ஏன் என்றால் பிபிசி, சி என் என், அல்ஜசீரா, யாழ்.கொம் இவை எல்லாம் ஒரு agenda வோடு இயங்கினாலும் RT போல் பிரச்சார ஊடகம்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இந்த திரியில் செத்தது யூதன் மட்டுமோ என “ஸ்கோர்” கேட்டு போகிறார்கள். 

நானும் முதலில் யூதர்களைத் தான் சுட்டுவிட்டார்கள் என எண்ணி செய்தியைப் பார்த்தால் அகப்பட்டவர்களை தட்டியிருக்கிறான்.

சகல யுத இடங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் முதலில் யூதர்களைத் தான் சுட்டுவிட்டார்கள் என எண்ணி செய்தியைப் பார்த்தால் அகப்பட்டவர்களை தட்டியிருக்கிறான்.

சகல யுத இடங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கு.

9/11 பழிதீர்க்கிறோம் என சும்மா போன சீக்கிய கிழவனை போட்டு தாக்கிய நாடல்லவா?

அதிகரித்த இஸ்லாமிய குடியேற்றத்தால் யூதர்கள் மேற்கில் கூட பாதுகாப்பாக வாழ முடியாது என்ற நிலையை உருவாக்குகிறார்கள்.

இதை எப்படி யூதர் எதிர்கொள்வார்கள் என்பது முக்கியம்.

நான் நினைக்கிறேன் விரைவில் மேற்கில் இஸ்லாமியரின் எண்ணிக்கைகை, வகிபாகத்கை குறைக்க யூதர் காய் நகர்த்துவர் என.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஆனால் இந்த பதில் காசாவில் குழந்தைகள் இறக்கும் திரியில் எழுதாதோர் பற்றிய உங்கள் விளக்கம் ததும்பும் பதிவுக்கான பதிலே.

நீங்கள் எந்த திரியில் எதை எழுதினால் எனக்கென்ன? அந்த திரியில் அதைப்பற்றி கேட்டது யாரென போய் திரியை வசித்து பாருங்கள்! யாரோ கேட்டதற்கு என்னை ஏன் அதற்குள் இழுக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் எந்த திரியில் எதை எழுதினால் எனக்கென்ன? அந்த திரியில் அதைப்பற்றி கேட்டது யாரென போய் திரியை வசித்து பாருங்கள்! யாரோ கேட்டதற்கு என்னை ஏன் அதற்குள் இழுக்கிறீர்கள்?

எப்போதோ வாங்கிய அடியால் இப்போதும் பின்னங்காலை தூக்கி கொண்டு நடக்கும் நபருடன், நீங்கள் சம்பந்தமே இல்லாமல் சேர்ந்து, தனிமனித தாக்குதலுக்கு சிங்சாஞ் போடுவதால் வரும் வினை இது என நினைக்கிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2023 at 10:34, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் இது ஒரு பெரிய பிரச்சனை.

குற்றச் செயல்களில் இருந்து தப்பிப்பதற்காக 

குற்றம் செய்வதற்கு முன்போ அல்லது பின்போ

மனநல வைத்தியசாலையில் போய் படுத்துவிடுவார்கள்.

அப்புறம் என்ன குறைந்த தண்டனைகளுடன் வெளிவந்துடுவார்கள்.

வெடி பரவலாகத் தான் விழுகுது.

சண்டையில் பாவிக்க வேண்டிய துப்பாக்கிகளை வீட்டுக்குள் வைத்திருந்தால் 

தூங்கவிடுமா என்ன?

அது ஏன் அமெரிக்காவில் உள்ளவன் மட்டும் இப்படி செய்கிறான்? அதுவும் ஆண்கள் மட்டும். பெண்கள் இப்படி செய்வதாக தெரியவில்லை. 

இது தனிநபரில் உள்ள பிரச்சனை அல்ல நாட்டில் உள்ள பிரச்சனை. மற்ற நாட்டுக்காரங்கள் போல இல்லாமல் அமெரிக்காவில் உள்ள ஒருத்தன் முன்பின் தெரியாத ஆட்களை சுட்டுத்தள்கின்றான் என்றால் நாடு தன்னை சுய பரிசீலனை/சோதனை செய்யவேண்டும். 

வேறு நாடுகளில் துப்பாக்கி லைசன்ஸ், துப்பாக்கி இல்லையா ஆட்களிடம். அது ஏன் அமெரிக்காரன் மூளை மட்டும் இப்படி கோணலாக செல்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நியாயம் said:

இங்கு பெரிய பெரிய சண்டைகளில் பயன்படுத்தும் துப்பாக்கிகளை அதிக விலை கொடுத்து வாங்கி எத்தனை நாள்த் தான் வீட்டுக்குள் பூட்டி வைத்திருக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

22 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இராணுவ வீரர் சடலமாக மீட்பு- தற்கொலை செய்து கொண்டதாக தகவல்

அமெரிக்காவின் மைனே மாகாணம் லூயிஸ்டன் நகரில் கடந்த 25 ஆம் திகதி ரொபர்ட் கார்ட் என்பவர் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

விளையாட்டு விடுதி, ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 22 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

முன்னாள் இராணுவ வீரரான ரொபர்ட் கார்ட் தப்பி ஓடிவிட்டார். அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது வீட்டை சுற்றி வளைத்து தேடினர். ஆனால் அங்கு அவர் இல்லை. இதையடுத்து லூயிஸ்டன் நகர் முழுவதும் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ரொபர்ட் கார்டிடம் துப்பாக்கி இருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறும், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் பொலிஸார் அறிவுறுத்தினர். கடந்த 2 நாட்களாக பொலிஸார் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் ரொபர்ட் கார்ட் பிணமாக மீட்கப்பட் டார்.

அவரது உடலில் துப்பாக்கி குண்டு காயம் இருந்தது. ரொபர்ட் கார்ட் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லூயிஸ்டனின் தென்கிழக்கே உள்ள லிஸ்பன் நீர்வீழ்ச்சி அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் ரொபர்ட் கார்ட் உடல் கண்டெடுக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். இதனால் லூயிஸ்டன் நகரில் 2 நாட்களாக நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

https://thinakkural.lk/article/279034

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2023 at 04:55, goshan_che said:

எல்லாரும் செம்புதான் - யாருக்கு தூக்குகிறார்கள் என்பதே வேறுபடுகிறது.

On 27/10/2023 at 05:03, goshan_che said:

ஏன் என்றால் பிபிசி, சி என் என், அல்ஜசீரா, யாழ்.கொம் இவை எல்லாம் ஒரு agenda வோடு இயங்கினாலும் RT போல் பிரச்சார ஊடகம்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

செம்பு தூக்குவது வேறு. அப்பட்டமான பிரச்சாரம் வேறு.

நாம் தமிழர் விடயத்தில் - யாழ்களத்தில் உங்களுக்கும் நாதமுனிக்கும் உள்ள வித்தியாசம் போல 🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.