Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர் ரஜினிகாந்த் அல்ல..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் பிரபல நட்சத்திரங்களின் சாயல் கொண்ட இளைஞர்கள் அவர்களைப் போலவே ஸ்டைலாக உடை அணிவது அவர்களைப் போலவே தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் புகைப்படங்கள் ரிலீஸ் வீடியோக்கள் என வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பெரும்பாலும் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அவர்களது இளமைக்கால தோற்றத்தில் தான் பலரும் தங்களது உருவத்தை ஸ்டைலாக மாற்றிக் கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்.

Untitled-5-2.jpg

ஆனால் 72 வயதில் ரஜினிகாந்த் தற்போது இருக்கும் தோற்றத்தில், கேரளாவில் கொச்சியை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் சுதாகர் பிரபு என்பவர் கிட்டத்தட்ட ரஜினியின் சாயலிலேயே பார்ப்பதற்கு ஆச்சரியம் தருகிறார்.
பலரும் அவருடன் ஆர்வமாக புகைப்படம் செல்பி எடுத்துக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.

https://thinakkural.lk/article/279219

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ரஜினிகாந்த் அல்ல..!

அவரை விட அழகாக இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இவர் ரஜினிகாந்த் அல்ல..!

அவரை விட அழகாக இருக்கிறார்.

ஆளை, பரட்டயரை, பார்த்து வையுங்கோ. அடுத்த ரஜனி படத்தில, இவரை டூப் போட வைப்பார்கள். 🤪

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

இவர் ரஜினிகாந்த் அல்ல..!

அவரை விட அழகாக இருக்கிறார்.

புகழ் பெற்ற போலிகள்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

புகழ் பெற்ற போலிகள்......!   😂

1 hour ago, Nathamuni said:

ஆளை, பரட்டயரை, பார்த்து வையுங்கோ. அடுத்த ரஜனி படத்தில, இவரை டூப் போட வைப்பார்கள். 🤪

இவரும் அவர் வயசுக்கு கிட்டத்தான். இவர் என்னத்த டூப் போட முடியும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இவரும் அவர் வயசுக்கு கிட்டத்தான். இவர் என்னத்த டூப் போட முடியும்🤣.

அட நீங்க வேற. இப்பெல்லாம், ரஜனிக்கு முந்திமாதிரி, படத்தில், சண்டை பிடிக்கவோ, ஆடவோ முடியாது. ஒவ்வொரு movement டும் மிக slow வாக எடுக்கிறார்கள்.

ஆகவே இப்படி ஒரு ஆள் இருந்தால், உதவும். கோடிக்கணக்கில் நடக்கும் வியாபாரம். எதுவுமே உதவும்.    

உண்மையில, முதலில் செய்தியுள் போகாம படத்தினைப் பார்த்து, பாரட்டை என்ன இப்படி கழுசானோடே நிக்குதே என்று நினைத்தேன்.

பிறகுதான் இவர் வேற எண்டு தெரிந்தது.🤣😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அட நீங்க வேற. இப்பெல்லாம், ரஜனிக்கு முந்திமாதிரி, படத்தில், சண்டை பிடிக்கவோ, ஆடவோ முடியாது. ஒவ்வொரு movement டும் மிக slow வாக எடுக்கிறார்கள்.

ஆகவே இப்படி ஒரு ஆள் இருந்தால், உதவும். கோடிக்கணக்கில் நடக்கும் வியாபாரம். எதுவுமே உதவும்.    

உண்மையில, முதலில் செய்தியுள் போகாம படத்தினைப் பார்த்து, பாரட்டை என்ன இப்படி கழுசானோடே நிக்குதே என்று நினைத்தேன்.

பிறகுதான் இவர் வேற எண்டு தெரிந்தது.🤣😁

அப்ப நானும் அமிதாப் டூப்பாக முயற்சித்து பாப்பம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

அப்ப நானும் அமிதாப் டூப்பாக முயற்சித்து பாப்பம்🤣

வயசும்... அப்படி!!! 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அப்ப நானும் அமிதாப் டூப்பாக முயற்சித்து பாப்பம்🤣

ஏன் இந்த அண்ணன் தம்பி பிரெண்டு அமெரிக்க மாப்பிள்ளை இந்த கரெக்டர் எல்லாம் பண்னமாட்டிங்க..?

நடிச்சா கீரோ சார்.. நா வெய்ட் பண்ரன் சார்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏன் இந்த அண்ணன் தம்பி பிரெண்டு அமெரிக்க மாப்பிள்ளை இந்த கரெக்டர் எல்லாம் பண்னமாட்டிங்க..?

நடிச்சா கீரோ சார்.. நா வெய்ட் பண்ரன் சார்...🤣

ஹீரோ தவிர வேறு எந்த ரோலுக்கும் என் முகம் செட் ஆகாது…அதான் யோசிக்கிறன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

யாராவது இந்த கட்டைய புடிங்க.. அடுத்து உலக நாயகன்'னு சொல்லிட்டு வருவானுங்க... ஒரே அடியா அடிச்சு காலி பண்ணிறனும்..🤣

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாராவது இந்த கட்டைய புடிங்க.. அடுத்து உலக நாயகன்'னு சொல்லிட்டு வருவானுங்க... ஒரே அடியா அடிச்சு காலி பண்ணிறனும்..🤣

spacer.png

ஒரு உலக நாயகன் கனவை, உலக்கையால் அடித்து கலைக்காதீர்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்

உங்க லண்டனிலும் ஒரு பரட்டை தானும் ரஜனி தான் என்று இருந்திச்சு.. இப்ப ஆளைக் காணம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

உங்க லண்டனிலும் ஒரு பரட்டை தானும் ரஜனி தான் என்று இருந்திச்சு.. இப்ப ஆளைக் காணம். 

ஆளை காணோமா?

உங்க ஹரோ பக்கம் வந்தீங்கள் எண்டா கையில பிடிச்சு தரலாம்.

சுரேஷ் கிருஷ்ணாவும் மனிசியும் ஹரோ கவுன்சிலர்ஸ்..🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

ஆளை காணோமே?

உங்க ஹரோ பக்கம் வந்தீங்கள் எண்டா கையில பிடிச்சு தரலாம்.

சுரேஷ் கிருஷ்ணாவும் மனிசியும் ஹரோ கவுன்சிலர்ஸ்..🤣

இடையில மேயரா வேற இருந்தவர்.

விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இடையில மேயரா வேற இருந்தவர்.

விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ.

பகிடி விடுறியள்.

மார்கற்றிங்!

அது தெரியாம, உங்க கணபேர், ஐபிசிக்கும், ஒரு பேப்பருக்கும், நோட்டீஸ் அடிக்கவும் காசை கொட்டியும் ஓட்டு விலேல்ல.

இலண்டண் பாபாவின்ட இரண்டொரு ரசனி பாட்டு, பட்டைய கிளப்ப, மனிசியோட கரோ கவுண்சில்ல ஒக்காந்திருக்கிறார்.

ஏலு மெண்டால் அசைச்சுப் பாரூங்கோவன்!

என்ற ஓட்டு யாருக்கு எண்டு சொல்லுங்கோ பார்ப்போம். 🤣😁

சீமான் ஆதரவாளர், ஓட்டு டீம்காவுக்கு விழாது எண்டு நெனச்சா, நான் ஒண்டுமே செய்யேலாது! 😂🤣

இப்ப ஓணாண்டியாருக்கு விசர் வரப்போகுது.

***

இளமையில் உழைத்தவன் முதுமையில் சிரிக்கிறான்.
இளமையில் படுத்தவன், முதுமையில் தவிக்கிறான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

இப்ப ஓணாண்டியாருக்கு விசர் வரப்போகுது.

ஓணாண்டியார் இது தான் எண்டு சொல்லக்கூடிய ஆள்...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

பகிடி விடுறியள்.

மார்கற்றிங்!

அது தெரியாம, உங்க கணபேர், ஐபிசிக்கும், ஒரு பேப்பருக்கும், நோட்டீஸ் அடிக்கவும் காசை கொட்டியும் ஓட்டு விலேல்ல.

இலண்டண் பாபாவின்ட இரண்டொரு ரசனி பாட்டு, பட்டைய கிளப்ப, மனிசியோட கரோ கவுண்சில்ல ஒக்காந்திருக்கிறார்.

ஏலு மெண்டால் அசைச்சுப் பாரூங்கோவன்!

என்ற ஓட்டு யாருக்கு எண்டு சொல்லுங்கோ பார்ப்போம். 🤣😁

சீமான் ஆதரவாளர், ஓட்டு டீம்காவுக்கு விழாது எண்டு நெனச்சா, நான் ஒண்டுமே செய்யேலாது! 😂🤣

இப்ப ஓணாண்டியாருக்கு விசர் வரப்போகுது.

***

இளமையில் உழைத்தவன் முதுமையில் சிரிக்கிறான்.
இளமையில் படுத்தவன், முதுமையில் தவிக்கிறான்.

எல்லாருக்கும் வயிறு இருக்கு. எல்லாருக்கும் பசிக்கும். 

அவரவர் குட்டிக்கரணம் அடித்தோ, குரங்கு டான்ஸ் ஆடியோ, தமக்கு தெரிந்த வித்தைகளை செய்து பசியாற்றுவதில் எனக்கு ஒரு விமர்சனமும் இல்லை.

ஆனால் - இவ்வளவு மினக்கெட்டு, மார்கெட்டிங் எல்லாம் செய்து பிஸ்கோத்து லோக்கல் கவுன்சிலர் ஆவதற்கு - நேரத்தை வேறு வினைத்திறனா வழியில் செலவழித்திருக்கலாம்.

இங்கே சில பழைய மாணவர் சங்கம் அப்பிடி இப்பிடி ஆயிரம், ரெண்டாயிரம்  Brent Council grant க்கு அலையும் அமைப்புகள் இவரை பிரதம அதிதியாக கூப்பிடும். வருட வருமானம் நாட்டின் சராசரி ஆண்டு வருமானத்தை விட குறைவு. Council Leader, போன்ற கனமான பதவிகளை கட்சி கொடுக்காது (இவரின் இயலுமை தெரியும்). 

இதை தவிர இதில் என்ன இருக்கு ?

ஆனால் அவரவருக்கு அவரவர் வழி.

பாஸ்,

இதெல்லாம் பகிடியா ரசிச்சுட்டு போகனும்.

தவிர, தம்மைப் பிரபலப்படுத்தி, அதன் மூலம் பல வியாபாரங்கள் செய்வது இவர்கள் கெட்டித்தனம்.

உள்ளூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை மக்கள் நம்பவே செய்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

பாஸ்,

இதெல்லாம் பகிடியா ரசிச்சுட்டு போகனும்.

தவிர, தம்மைப் பிரபலப்படுத்தி, அதன் மூலம் பல வியாபாரங்கள் செய்வது இவர்கள் கெட்டித்தனம்.

உள்ளூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை மக்கள் நம்பவே செய்வர்.

உண்மைதான். நான் இவரை ஆரம்பகாலம் முதல் பார்த்து ரசிக்கவே செய்கிறேன்.

ஆனால் நான் பாரதியார் கவிதை சொன்னது, வெளிநாடு வந்து, இவ்வளவு உலக விடயம் அடிபட்ட பிறகும் இவருக்கு வோட் போடும் எங்கட ஆட்களுக்கு அறிவில்லை என்பதையே.

இதற்குள் தமிழ் நாட்டுக்காரனுக்கு சினிமா மோகம், அவர்களை ஒரு மாயையில் அழித்தி வைத்துள்ளார்கள் என லெக்சர் வேற அடிப்போம்🤣.

அவர்களாவது ஒரிஜினல் பாபாவையே அரசியல் என்றவுடன் நோஸ் கட் பண்ணி அனுப்பினார்கள். நாம்? இலண்டன் பாபா அவரின் மனைவியையும் எம் பிரதிநிதிகளாக தேர்ந்து வைத்துள்ளோம்.

அப்படி இல்லை.

இப்போது வேடிக்கையாக தோன்றினாலும், அவர், ரஜனி உச்சத்தில் இருந்த போது,  தன்னைப் பிரபலபடுத்திக் கொண்டார்.

அது கை மேல் பலன் கொடுக்கிறது.

என்னதான் சொன்னாலும் வாக்கு விழுகிறது.

போடுபவர்கள் முட்டாள்கள் என்று சொன்னால், நாம் தான் முட்டாளாவோம், இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லை.

இப்போது வேடிக்கையாக தோன்றினாலும், அவர், ரஜனி உச்சத்தில் இருந்த போது,  தன்னைப் பிரபலபடுத்திக் கொண்டார்.

அது கை மேல் பலன் கொடுக்கிறது.

என்னதான் சொன்னாலும் வாக்கு விழுகிறது.

போடுபவர்கள் முட்டாள்கள் என்று சொன்னால், நாம் தான் முட்டாளாவோம், இல்லையா?

அம்மணமாக போகும் ஊரில் ஆடை உடுத்துபவன் பைத்தியக்காரன்.

நான் சொன்னது போல் அவர் தன் பிழைப்புக்கு என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை. ரித்தீஷ், பவர் ஸ்டார்…இப்படி பலர் உள்ளார்கள்.

ஆனால் ஒரு சமூகமாக நாம் எமது பிரதிநிதிகள் என யாரை அனுப்புகிறோம் என்பது நம் எல்லோரினதும் கவனத்துக்குரியதே.

மேற்குலகில் எமது உள்ளூர் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகளாக கோமாளிகளை தெரிவு செய்து விட்டு, மேற்கு நம்மை கவனத்தில் எடுக்கவில்லை என அழுது என்ன பயன்.

ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு போடும் எல்லா தெரிவும் புத்திசாலித்தனமானதாக இருக்காது. முன்னேறி கொண்டிருந்த இலங்கையை முட்டாள்தனமாக இனவாதிகளுக்கு வாக்களித்து சிங்களவர் நாசமறுத்ததை போல், தன் விரலால் தன் கண்ணை பிரிட்டன் குத்தி கொண்ட பிரெக்சிற் போல் -  வாக்காளர் முட்டாள் தனமாக முடிவெடுக்கும் சந்தர்பங்கள் உளன.

வாக்காளர் முட்டாள்கள் என அரசியல்வாதிகள் சொல்ல கூடாது, நம்மை போல நோக்கர்கள் சொல்லலாம்.

ஆகவே இலண்டன் பாபாவை வாக்கு போட்டு தெரிவு செய்த அத்தனை தமிழர்களும் அடி முட்டாள்களே. மலையகத்தில் ஒரு லயனில் வசிக்கும், எழுத வாசிக்க தெரியாத அப்பாவி தொண்டமான் குடும்பத்துக்கு போடுவதை கூட புரிந்து கொள்ளலாம். ஹரொவில் இருந்து கொண்டு இப்படி மந்தைகள் போல் வாகுரிமையை பாவிப்பதற்கு வடிகட்டிய முட்டாள்தனம் என்பதை விட வேறு வார்த்தை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

அவரது மணைவி கணக்காளர்.

பலருக்கு அவரது நிறுவனம் கணக்கெழுதுது. இலங்கையிலும் கிளை உள்ளது.

அவர்களது குடுமி சும்மா ஆடவில்லை.

வெர்ஜின் உரிமையாளர், ரிட்சட் பிரான்சன் பலூனீல பறந்த போது, ரிஸ்க் எடுக்கும் கிறுக்கன் என்றார்கள்.

பின்னர் அவரே சொன்னார், சமூக வளைத்தளம் இல்லாத அந்த காலத்தில்,  டிவி விளம்பரத்துக்கு, 30 செக்கனுக்கு, மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிரதான செய்தியில் 5 நிமிடம் வெர்ஜின் சின்னம் பொறிக்கப்பட்ட பலூனில்... இலவச விளம்பரம்!!

இன்று உலகின் ரொப் 10 பிராண்ட்களில் ஒன்று வெர்ஜின்.

அவர் தனது வெர்ஜின் பிராண்டை வாடகைக்கு விட்டே பல மில்லியன் உழைக்கிறார்.

Virgin Airways,

Virgin Cable,

Virgin Credit cards….

நாம் கீபோட்டில கைவிரல் வித்தை காட்டுவதில் திறமையாளர்கள். 😂🤣
 
இன்றும் விஜய் கட்டவுட்டுக்கு பாரீசில் பாலூத்திறம், இலண்டணில, லியோ படத்தை பார்க்கப் போன விஜய் ரசிகருக்கும், அங்கு வந்த தல ரசிகர்களுக்கும் அடிபாடு.

நீங்கள் என்னெண்டா... எங்கட ஆட்களைப் பத்தி பெரிய நிணைப்பு... 

அப்படியே, ஊரிலையிருந்து கிரேனீல தூக்கி இங்கை வைச்சிருக்கு!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

அவரது மணைவி கணக்காளர்.

பலருக்கு கணக்கழுதுறார். இலங்கையிலும் கிளை உள்ளது.

அவர்களது குடுமி சும்மா ஆடவில்லை.

வெர்ஜின் உரிமையாளர், ரிட்சட் பிரான்சன் பலூனீல பறந்த போது, ரிஸ்க் எடுக்கும் கிறுக்கன் என்றார்கள்.

பின்னர் அவரே சொன்னார், சமூக வளைத்தளம் இல்லாத அந்த காலத்தில்,  டிவி விளம்பரத்துக்கு, 30 செக்கனுக்கு, மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிரதான செய்தியில் 5 நிமிடம் வெர்ஜின் சின்னம் பொறிக்கப்பட்ட பலூனில்...

இன்று உலகின் ரொப் 10 பிராண்ட்களில் ஒன்று வெர்ஜின்.

அவர் தனது வெர்ஜின் பிராண்டை வாடகைக்கு விட்டே பல மில்லியன் உழைக்கிறார்.

Virgin Airways,

Virgin Cable,

Virgin Credit cards….

நாம் கீபோட்டில கைவிரல் வித்தை காட்டுவதில் திறமையாளர்கள். 😂🤣
 
இன்றும் விஜய் கட்டவுட்டுக்கு பாரீசில் பாலூத்திறம், இலண்டணில, லியோ படத்தை பார்க்கப் போன விஜய் ரசிகருக்கும், அங்கு வந்த தல ரசிகர்களுக்கும் அடிபாடு.

நீங்கள் என்னெண்டா... எங்கட ஆட்களைப் பத்தி பெரிய நிணைப்பு... 

யோவ் என்னையா இது…

நான் சொல்லாதை ஒன்றை சொன்னதாக பாவித்து வேர்ஜின் அத்லாந்திக், அண்டாடிக் எண்டு நீட்டி முளக்கிறியள்🤣.

பாபா முட்டாள் என நான் சொல்லவில்லை. அவர் ஒரு புகழ்விரும்பி. கழுதை கெட்டால் குட்டி சுவர் என்பதாக அரசியலில் இறங்கியுள்ளார். அதற்கு இந்த ரஜனியை கொப்பி அடிக்கும் கோமாளித்தனம் புலம்பெயர் மொக்குகளிடம் வேர்கவுட் ஆகும் என தெரிந்து பாவித்துள்ளார்.

நான் அடிமுட்டாள்கள் என சொல்வது ஹரோ வாழ் புலம் பெயர் தமிழ் மகா சனங்களையே.

பிகு

எல்லாரையும் இல்ல பாபாக்கு வாக்கு போட்ட பேய்குஞ்சுகளை மட்டும்தான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நான் அடிமுட்டாள்கள் என சொல்வது ஹரோ வாழ் புலம் பெயர் தமிழ் மகா சனங்களையே.

யோவ் அதை தானய்யா சொல்லுறன்.

நம்ம தமிழ் சனத்தைப் பத்தி எடுப்பா நெணைக்கிறங்க எண்டு!

உங்க ஒருவர், எஸ்டேட் ஏஜன்ட் நடாத்திறவராம். புங்குடுதீவாம்.

கரோவீல தன் ஊர் ஆக்களுக்குள்ள கன்வஸ் பண்ணி, 800 சொச்சம் வாக்குகளை பெற்று தோத்துட்டார்.

இந்தக் கூட்டத்த சரியாக் கணிச்சது சுரேஸ்.

பிழையா கணிக்கிறது, உடான்சர்!! 😂🤣

நீங்க வேற!!

வேற கொசுறு: சில வருசத்துக்கு முன்னர், ஈலிங் கனகதுர்க்கை அம்மன் நிர்வாகத்தில இருந்து கரூணைலிங்கத்தை தோற்கடிச்சிட்டினம்.

அடுத்த வருசத்துக் கிடைல, புங்குடுதீவாரை உறுப்பினரா சேர வைத்து, ஆள் உள்ள. இப்ப அசைக்கேலாது.

நம்ம, விசுகண்ண வந்து கரோவில நிண்டாலும் வெற்றிதான். 😜

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.