Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரோ ஒருவர் அனுப்பிய நெஞ்சை உருக்கிய நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாரோ ஒருவர் அனுப்பிய நெஞ்சை உருக்கிய நிகழ்வு...
 
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்..
விமானம் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு நம் இராணுவ வீரர்கள் பதினைந்து பேர் வந்து என் இருக்கையைச் சுற்றி அமர்ந்தார்கள்.
நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.
எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..? என்றேன்.
ஆக்ராவுக்கு.... அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி..... என்றனர்.
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்,அப்பொழுது ஒரு அறிவிப்பு.
மதிய உணவு தயார்.....சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும்போது, எனக்குப் பின்னால் இருந்த ராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உ டைந்து போனேன்.
ஏன்... சாப்பாடு வாங்கலையா? என்றேன்.
இல்லை சார்.... விலை அதிகம்.... என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது..... மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும்..... அங்கு இறங்கி உண்ணலாம், விலையும் குறைவாக இருக்கும் என்றார்.
ஆமாம்..... உண்மை.
இதை கேட்ட பொழுது என் மனது மிகவும் வலித்தது உடனே விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்.
அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள். கண்களில் கண்ணீர். இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்துதான் என்றாள்.....
நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன். அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்ததை நான் பார்த்தேன்..... நான் வெட்கப்படுகிறேன் எனக்கூறி இந்தாருங்கள்..... என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்.நான் என் இருக்கைக்கு திரும்பினேன்.
சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தளும்ப என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, இது ஒரு மிகப்பெரிய கருணை செயல்.....மிகவும் மகிழ்ச்சி..... உங்களைப் போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே என்று சொல்லி சென்றார்.
 
விண்ணுக்கு எட்டும் அளவிற்கு விமானத்துக்குள் ஒரே கைதட்டல்.....
முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்.
விமானம் வந்து நின்றது. நான் இறங்கினேன். இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக் கற்றைகளைத் திணித்தார்.....
இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்.
அவர்கள் அருகில் சென்றேன். நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம் சேர்ந்துள்ளது.
ஒரு தூண்டுதல்..... பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்.....
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன். போகும் வழியில் நன்றாக சாப்பிடுங்கள். கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும் என்றேன்.காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்.....
இந்த இளம் வீரர்கள் தம் குடும்ப பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளை பாதுகாத்துக் கொண்டு, தன்னுடைய உயிரினைத் துச்சமாக மதித்து எப்படி நம்மை பாது காக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை.....
இவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ள தயாராக இல்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள்
வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுவதுடன், அவர்களை தெய்வங்களாகவும் பூஜித்து, அவர்களுக்கு கோவில் கட்டி வணங்குவது போன்ற செயல்களால் தங்களது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு
மிகுந்த வேதனை அளித்தது.....
கோடி கணக்கில் பணம், சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்,
ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் இந்த இராணுவ வீரர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது.
எம் தேசத்து
என் இளைஞனே...!
என் சகோதரனே...!
நம் தேச நலன் காக்க
வெளியே வா.....
படித்ததும் பகிர்ந்தேன்!
👮🏻‍♂️🙏✈️
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இராணுவத்துக்கு போகிறவர்கள் மிகவும் கஸ்டப்பட்டவர்கள் என பேசுவார்கள்.

இலங்கையிலும் இதே நிலை என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
 
 · 
Follow
Former Served at Indian Army for Sixteen Years.Updated 2y

I served in Indian Army for 16 years. I was enlisted in a supporting arm of the Army. Unlike the infantry and armoured regiments, which comprises of a particular caste or state people, like Rajputs, Sikhs, Marathas Biharis etc , my supporting arm regiment represents people from all the states. During my 16 years of service, I was posted in 14 different large units and I never saw a Gujarathi person.

இந்தியா ஒரு விசித்திரமான கூட்டுகலவை நிறைந்த நாடு மேல் இந்திய ராணுவத்தில் 16 வருடம் வேலை செய்த முன்னாள் ராணுவ அதிகாரி சொல்கிறார் ராணுவத்தில் வேலை செய்த 16 வருட காலத்தில் ஒரு குஜராத்தி ஆர்மியை தான் காணவில்லை என்கிறார் . ஆனால் இந்தியா என்ற பெயரை பயன்படுத்தி மற்றைய மாநிலங்களை கொள்ளையடிப்பதுதான் அங்கு நடக்குது அதனால் நாட்டை காக்கும் ராணுவத்துக்கு ஒழுங்கான சம்பளம் கொடுக்காமல் பிச்சை காரர்களாக உலாவ விட்டு உள்ளார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அட்டாரி வாகா எல்லை அணிவகுப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தினது கதையென்பதால் இணைத்துள்ளேன்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவில் இராணுவத்துக்கு போகிறவர்கள் மிகவும் கஸ்டப்பட்டவர்கள் என பேசுவார்கள்.

இலங்கையிலும் இதே நிலை என எண்ணுகிறேன்.

ஆண்களுக்கு இராணுவ பயிற்சி என்பது மேற்கத்திய நாடுகளில் கட்டாய சேவையாக இருக்கும். பெண்களுக்கு மருத்துவ பயிற்சி கட்டாயமாக இருக்கும். தற்போதைய சட்டங்கள் விபரமாக தெரியவில்லை. இருந்தாலும் இராணுவம் அரச உத்தியோகம்  என்பதும் பல சலுகைகள் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

படித்துக் கொண்டிருக்கும் பொழுதே கண்கள் வேர்க்கின்றன........நிஜமாகவே நெகிழ்ச்சியான நிகழ்வுதான்......!  🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.