Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸாவில் சண்டை நிறுத்தம், 50 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க உடன்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு நல்லவங்களா இருந்தா எதுக்கு இஸ்ரேலுக்குள்ள புகுந்தப்போ அவ்வளவு குழந்தைகளையும் பெண்களையும் ஆண்களையும் கொல்லணும்..? கொல்லவேண்டியது ராணுவத்தை அல்லவா..? இரு பகுதியும் ஒண்டுக்கும் குறைஞ்சவங்க இல்ல..

  • Replies 61
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆபத்தான பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் தங்களை நல்லவர்களாக காட்டுவதற்கு உலகம் முழுவதும் பொய்பரப்புரைகளை நடத்தி வருகின்றது. இம் மாத ஆரம்பத்தில்  பொதுமக்கள் பெரியவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அங்கே இருந்த விலங்குகள் என்று சுட்டுகொன்றும்  பலரை கடத்தியும் சென்றனர்.  கடத்தி கொண்டு சென்ற குழந்தைகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் கைகளில் தூக்கிவைத்து படம் காட்டுவதை பார்த்திருப்பீர்கள். ஹமாசுக்கு தமிழில் வெள்ளை அடிக்கும் முயற்சி தான் இங்கே நடை பெறுகின்றது.

 

நீங்கள் உக்ரேனுக்கு  வெள்ளை அடித்து முடிந்து இப்போ இஸ்ரேலுக்கு வெள்ளை அடிக்க தொடங்கி உள்ளீர்கள் போலுள்ளது!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிக போர் நிறுத்தத்தால் கல்யாணி அக்காவும் வந்துவிட்டார் 😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

பணயக் கைதிகளை கமாஸ் நன்றாகவே கவனித்துள்ளது போல தெரிகிறது.

எந்த கவனிப்பை சொல்லுகிறீர்கள்? எல்லோரும் விடுவிக்கப்படட பின்னர்தான் உண்மையான கவனிப்பு தெரிய வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

எந்த கவனிப்பை சொல்லுகிறீர்கள்? எல்லோரும் விடுவிக்கப்படட பின்னர்தான் உண்மையான கவனிப்பு தெரிய வரும். 

45-50 நாட்களாக பணய கைதிகளாக இருந்தவர்கள் எதுவித களைப்பும் இல்லாமல் போகிறார்களே

பார்க்கலையோ?

  • கருத்துக்கள உறவுகள்

 

இரண்டாவது பகுதியாக விடுவிக்கப்பட்ட பணய கைதிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட உறவினரின் புதைகுழிக்கு சென்ற பிறகே வீட்டிற்கு செல்வேன் - விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீன பெண் தெரிவிப்பு

Published By: RAJEEBAN    26 NOV, 2023 | 11:03 AM

image

இஸ்ரேலிய இராணுவத்தினரால் விடுதலை செய்யபட்ட பாலஸ்தீன யுவதி மேற்குகரையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்புவதற்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உறவினரின் புதைகுழிக்கு செல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

23 வயது நூர்ஹான் அவாட் மேற்குகரையில் வைத்து விடுதலை செய்யப்பட்டார்.

ஜெரூசலேத்தில் 2015 இல் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என்ற சந்தேகத்தில் இவர் கைதுசெய்யப்பட்டார் அவ்வேளை இவர் சுடப்பட்டார்.

F_1NFfYWQAAeR3A.jpeg

பத்துஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நூர்ஹான் அவாட் 8 ஆண்டுகள் தண்டனையை பூர்த்தி செய்துள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலையான பின்னர் தான் கைதுசெய்யப்பட்ட அன்று சுட்டுக்கொல்லப்பட்ட  உறவினரின் புதைகுழிக்கு சென்ற பின்னரே வீடு திரும்புவேன் என தெரிவித்து அங்கு சென்றார்.

https://www.virakesari.lk/article/170268

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய சிறையிலிருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை – முழுமையாக மகிழ்ச்சியடையமுடியாத நிலையில் உறவுகள்

Published By: RAJEEBAN   26 NOV, 2023 | 09:26 AM

image

ரொய்ட்டர்

ஹமாசுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள பாலஸ்தீனியர்களின் குடும்பத்தவர்களுக்கு நிம்மதி என்பது கவலையுடன் சேர்ந்ததாக காணப்படுகின்றது.

நான்குநாள் மோதல் இடைநிறுத்தத்தின் பின்னர் யுத்தம் தொடரவுள்ளமையே இதற்கு காரணம்.

palesti_free1.jpeg

கட்டாரின் முயற்சிகளினால் சாத்தியமான தற்காலிக மோதல் இடைநிறுத்தம் காரணமாக 24 பெண்கள் 15 சிறுவர்கள் அடங்கிய 39 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலின் போது ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 13 இஸ்ரேலியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக மேற்குகரையில் உள்ள அவர்களது வீடுகளை இஸ்ரேலிய படையினர் சோதனையிட்டனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர் - இஸ்ரேலிய பொலிஸார் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.

உண்மையான மகிழ்ச்சியில்லை என தெரிவித்தார் விடுதலை செய்யப்பட்ட 24 வயது மராபகீரின் தாயார் சோவ்சன் பகீர்.

pales_free.jpeg

2015 இல் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மராபகீருக்கு எட்டுவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மகள் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னர் தனது வீட்டை இஸ்ரேலிய பொலிஸார் சோதனையிட்டனர் என அவர் தெரிவித்தார்.

மகிழ்ச்சியடைவதற்கு அஞ்சுகின்றோம், அதேவேளை காசாவில் இடம்பெறும் விடயங்களால் எங்களால் இந்த விடுதலை குறித்து மகிழ்ச்சியடைய முடியவில்லை என விடுதலையானவரின் தாயார் தெரிவித்தார்.

நான்குநாள் மோதல் இடைநிறுத்தத்தின்போது ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 50 பேரும் 150 பாலஸ்தீனியர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

palestin_pri.jpeg

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில்  ரமல்லாவிற்கு அருகில் உள்ள பெய்டுனியாவில் இளைஞர்கள் வாகனங்களின் ஒலிகளை எழுப்பியும் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியபடியும் பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றனர்.

சிலர் ஹமாஸ் கொடியுடன் காணப்பட்டனர் அவர்கள் ஹமாஸ் பேச்சாளர் அபுஉபைடாவின் பெயரை குறிப்பிட்டு கோசங்களை எழுப்பினர்.

நான் இந்த விடுதலையை எப்படி உணர்கின்றேன் என்பதை என்னால் வர்ணிக்கமுடியவில்லை ஆண்டவருக்கு நன்றி என 17வயது லைத்ஓத்மன் தெரிவித்தார்- இவர் வெடிபொருட்களை எறிந்தார் என்ற சந்கேதத்தில் இந்த வருட ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்டு வெள்ளிக்கிழமை விடுதலையாகியுள்ளார்.

இஸ்ரேலிய சிறைக்குள் நிலைமை மிகமோசமாக உள்ளது என அவர் தெரிவித்தார்- அவரை சிலர் தோளில் சுமந்து சென்றனர்.

ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் கைதுசெய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யப்போவதாக இஸ்ரேலிய கொமாண்டோக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும் வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, தாங்கள் தாக்குதல்களை தொடரப்போவதாக இஸ்ரேலிய கொமாண்டோக்கள் தெரிவித்துள்ளனர்.

pales_free4.jpeg

காசா மீது இஸ்ரேலிய படையினர் விமானகுண்டு வீச்சினையும் தாக்குதலையும் மேற்கொண்டதில் 14000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் மருத்துவ அமைச்சு தெரிவிக்கின்றது.

தற்காலிக மோதல் இடைநிறுத்தம் முடிவிற்கு வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கத்திக்குத்து தாக்குதல் குற்றம்சாட்டப்பட்ட தனது மகள்  பாத்திமா வரவிற்காக காத்திருப்பதாக பெத்லஹேமின் டெய்சே அகதி முகாமிலிருந்து இஸ்மாயில் சஹீன் தெரிவித்தார்.

32 வயது கணிணி நிபுணரான ஐந்து வயது பிள்ளையின் தாயாரான அவர் கைதுசெய்யப்பட்டவேளை ஐந்து தடவை சுடப்பட்டார், முதல் தடவை நான் எனது மகளை சிறையில் பார்க்கச்சென்றவேளை அவரை சக்கரநாற்காலியில் பார்த்து ஆச்சரியமடைந்தேன் என தாயார் தெரிவித்தார்.

pales_free4.jpeg

கடவுளுக்கு நன்றி பணயக்கைதிகள் பரிமாற்ற உடன்பாடு காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் அவரது விடுதலை குறித்து எங்களால் சிறிதளவே மகிழ்ச்சியடையமுடியும், ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ள காசாவில் எங்கள் சகோதரர்களின் நிலையை எங்களால் புறக்கணிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/170261

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - ஹமாஸ்: போர் நிறுத்தம் முடிந்து தொடங்கும் தாக்குதல் மேலும் பேரழிவுகரமாக இருக்குமா?

ஹமாஸ் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதால் என்ன பலன் கிடைக்கும்? போர் நிறுத்தம் முடிந்தவுடன் என்ன நடக்கும்?

பட மூலாதாரம்,REUTERS/IBRAHEEM ABU MUSTAFA

படக்குறிப்பு,

காஸா மீதான இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பீட்டர் ஆர் நியூமேன்
  • பதவி, லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்பு ஆய்வுகள் துறை பேராசிரியர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பல வாரங்களாக எதிர்பார்க்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துவிட்டன.

ஹமாஸ் வெள்ளிக்கிழமை நான்கு தாய்லாந்து குடிமக்கள் உட்பட 24 பணயக் கைதிகளை விடுவித்தது. அவர்களில் 13 பேர் இஸ்ரேலிய குடிமக்கள். இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பாலத்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

போர் நிறுத்த உடன்படிக்கையின் கீழ், இந்த நான்கு நாட்களுக்கு தாக்குதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இருநூறு டிரக்குகள், நான்கு எரிபொருள் லாரிகள் மற்றும் நான்கு டிரக்குகள் தினமும் காஸாவுக்குள் நுழைய வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில், இரு தரப்பினரும் வடக்கு மற்றும் தெற்கு காஸாவில் எந்தத் தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் இஸ்ரேலும் காஸா மீது கண்காணிப்பு ட்ரோன்களை பறக்கவிடாது.

ஆனால், நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 97 டிரக்குகளை வடக்கு காஸாவிற்கு செல்லவிடாமல் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியதாகவும், தெற்கு காஸா மீது ஆளில்லா விமானங்களைப் பறக்கவிட்டதாகவும் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது.

 
ஹமாஸ் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதால் என்ன பலன் கிடைக்கும்? போர் நிறுத்தம் முடிந்தவுடன் என்ன நடக்கும்?

பட மூலாதாரம்,HOSTAGES AND MISSING FAMILIES FORUM

படக்குறிப்பு,

வெள்ளிக்கிழமை, ஹமாஸ் 13 இஸ்ரேலிய குடிமக்களை விடுவித்தது.

இந்தப் போர் நிறுத்தம் ஹமாஸுக்கு ஒரு வியூக ரீதியிலான சாதகமாகவும் உள்ளது. இது பல வாரங்களாக நீடித்து வந்த கடுமையான தாக்குதலில் இருந்து மீண்டுவர ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு உதவும். ஏனெனில் போர் நடந்த காலகட்டத்தில் அது இஸ்ரேலிய தாக்குதலில் சிக்கி பல இழப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது.

ஹமாஸ் தனது கட்டளைச் சங்கிலி அமைப்பை மீண்டும் உறுதியாக நிறுவுவதற்கும், முன்னேறும் இஸ்ரேலிய ராணுவத்துக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களுக்குத் தனது போராளிகளை நிலைநிறுத்துவதற்கும் இந்த போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

எஞ்சியுள்ள பணயக் கைதிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றும் வாய்ப்பையும் இந்தப் போர் நிறுத்தம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதும், இஸ்ரேலுக்கு அவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பதும் முக்கிய விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், இதிலிருந்து வேறு எந்தப் பலன்களும் அறிவிக்கப்படாவிட்டாலும், பணயக் கைதிகள் விடுதலை ஒப்பந்தம் ஹமாஸுக்கு கணிசமான வியூக ரீதியிலான மற்றும் உத்தி ரீதியிலான ஆதாயமாகும்.

பணயக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் விடுதலைக்கு இது ஒரு நல்ல செய்தி என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், அந்த பணயக் கைதிகளை விடுவிப்பது மிகவும் கடினமாகவும் பெரும் விலை கொடுக்கப்படும் விஷயமாகவும் மாறும் என்பதே கசப்பான உண்மை.

ஹமாஸ் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதால் என்ன பலன் கிடைக்கும்? போர் நிறுத்தம் முடிந்தவுடன் என்ன நடக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த போர் இடைநிறுத்தம் தற்போதைய பாதிப்பில் இருந்து இரு தரப்பினருக்கும் நிவாரணம் அளித்துள்ளது. ஆனால் இது மிகவும் மோசமான நெருக்கடியின் முடிவு அல்லது அந்த முடிவின் தொடக்கம் என்று பொருள்படாது.

அதே நேரம் இந்தத் தாக்குதல் நிறுத்தம் ஹமாஸ் அமைப்புக்கு பல வழிகளில் பயனளிக்கும்.

இந்த நான்கு நாட்களில் ஹமாஸால் பணயக் கைதிகளாக இருந்த டஜன் கணக்கான முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டிருப்பது இஸ்ரேலியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இதன் பொருள் ஹமாஸ் 150க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை இன்னும் வைத்திருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான பணயக் கைதிகளை வைத்திருப்பதைவிட இது அவர்களுக்கு அதிக லாபம் தரும் ஒப்பந்தமாக இருக்கலாம்.

ஏறத்தாழ 240 பணயக் கைதிகளை வைத்திருப்பது எந்தவொரு அமைப்புக்கும் பெரும் சுமையாகும். இந்த பணயக் கைதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும், தேவைப்பட்டால், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

 
ஹமாஸ் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதால் என்ன பலன் கிடைக்கும்? போர் நிறுத்தம் முடிந்தவுடன் என்ன நடக்கும்?

பட மூலாதாரம்,HOSTAGES AND MISSING FAMILIES FORUM

படக்குறிப்பு,

தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் குடிமக்கள் வெள்ளிக்கிழமை ஹமாஸால் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களில் சிலர் வயதானவர்களாக இருக்கலாம், நோய்வாய்ப்பட்டவர்களாக இருக்கலாம், அல்லது ஏதேனும் சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்தால், அது நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.

சிறப்பு கவனிப்பு தேவைப்படுபவர்களை "விடுதலை" செய்வதன் மூலம், ஹமாஸ் தாராள மனப்பான்மையைக் காட்டவில்லை. மாறாக மற்ற இடங்களில் தேவைப்படும் வளங்களை முதன்மையாகப் பெறுகிறது என்பதே உண்மை.

தாய்லாந்து மற்றும் நேபாளத்தை சேர்ந்த சுமார் இரண்டு டஜன் தொழிலாளர்களின் விஷயத்தில் இது குறிப்பாக மிகப்பெரிய உண்மையாக இருக்கிறது. அவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்வது ஹமாஸுக்கு எந்த வியூகரீதியிலான பயன்களையும் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் இஸ்ரேலியரோ அல்லது யூதரோ அல்ல.

மற்றொரு காரணம் என்னவென்றால், எஞ்சியிருக்கும் பணயக் கைதிகளை வைத்திருப்பதற்கு அவர்களுக்கு ஒரு 'எளிதான வாதம்' கிடைக்கும். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேலிய வீரர்கள் அல்லது போருக்குப் பயன்படும் வயதுடையவர்கள்.

அவர்கள் "எதிரி வீரர்கள்" அல்லது போர்க் கைதிகள் என்று ஹமாஸ் வாதிட முடியும்.

 
ஹமாஸ் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதால் என்ன பலன் கிடைக்கும்? போர் நிறுத்தம் முடிந்தவுடன் என்ன நடக்கும்?
படக்குறிப்பு,

எகிப்துடனான ரஃபா கடவுப் பாதையில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன.

மேலும் இது கைதிகளைப் பரிமாறிக்கொள்ள பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.

கடந்த காலத்தில் நடந்தது போல், ஒரு சில இஸ்ரேலிய வீரர்களுக்கு ஈடாக நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டபோது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஹமாஸ் உறுப்பினர்களை விடுவிக்க அந்நாட்டு அரசை ஹமாஸ் வலியுறுத்தும்.

போர் நிறுத்தத்தின் இரண்டாவது நாளில் ஜெருசலேமில் இருந்த பிபிசியின் யோலண்டே நெல் அளித்த தகவல்களின்படி, எகிப்தின் ரஃபா கடவுப் பாதையில் இருந்து காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல ட்ரக்குகள் மற்றும் லாரிகள் வரிசையாக அதிகாலையில் இருந்து காத்திருந்தன.

நான்கு டேங்கர் டீசல் மற்றும் எல்பிஜி கேஸ் ஏற்றப்பட்ட நான்கு டிரக்குகளை நிவாரணப் பொருட்களுடன் காஸாவுக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதித்துள்ளது.

நிவாரணப் பொருட்களை ஏற்றிய சுமார் 200 டிரக்குகள் சனிக்கிழமை காஸாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
ஹமாஸ் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதால் என்ன பலன் கிடைக்கும்? போர் நிறுத்தம் முடிந்தவுடன் என்ன நடக்கும்?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

காஸாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர்.

போர் தொடங்கிய பின்னர் அக்டோபர் 21ஆம் தேதி காஸாவுக்கு உதவிப் பொருட்கள் வரத் தொடங்கியதில் இருந்து முதன் முதலாக இவ்வளவு பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் வந்துள்ளன என வெள்ளிக்கிழமை, ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

பாலத்தீன அகதிகளுக்கான அமைப்பான UNRWA-வின் செய்தித் தொடர்பாளர் ஜூலியட் டூமாவின் கருத்துப்படி, இந்த நேரத்தில் அனைத்து வகையான உதவிகளும் மிக முக்கியமாகத் தேவைப்படுகின்றன.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள், ரேஷன், மருந்துகள், குடிநீர். தூய்மைக்குத் தேவையான சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பெட்டி போன்றவை மிகவும் முக்கியமானவை,” என்றார்.

காஸாவில் உள்ள பெரும்பாலான தங்குமிடங்கள் நிரம்பி வழிகின்றன. சுமார் 10 லட்சம் இடம்பெயர்ந்த மக்கள் அங்குள்ள பள்ளிகளிலும் மற்ற இடங்களிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர் என்று ஐ.நா.வின் பாலத்தீன அகதிகளுக்காக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பு கூறுகிறது.

காஸாவில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகக் கூறினர்.

பெரும்பாலானோர் குளிக்கவும், துணி துவைக்கவும்கூட முடியாமல் தவிக்கின்றனர். போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து, பாலத்தீனர்கள், தங்களுடைய அழிக்கப்பட்ட வீடுகளுக்குத் திரும்புவது, குப்பைகளில் பயனுள்ள எதையும் தேடுவது போன்ற அவநம்பிக்கையான காட்சிகளை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இஸ்ரேல் - ஹமாஸ்: போர் நிறுத்தம் முடிந்து தொடங்கும் தாக்குதல் மேலும் பேரழிவுகரமாக இருக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹமாஸ் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதால் என்ன பலன் கிடைக்கும்? போர் நிறுத்தம் முடிந்தவுடன் என்ன நடக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது போன்ற ஒரு சூழ்நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் என்ன நடக்கும் என்பது பெரும் குழப்பத்தை அளிக்கும் விஷயமாகவே நீடிக்கிறது.

இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடங்கினாலோ, காஸாவின் தெற்கு பகுதியை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தினாலோ, முன்பைவிட இழப்புகள் பேரழிவுகரமாக அதிகரிக்கும் என்ற அச்சமும் சர்வதேச அளவில் நீடித்து வருகிறது.

காஸாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்த பொதுமக்கள், வரவிருக்கும் குளிர்காலத்தை எப்படித் தாக்குப்பிடிப்பார்கள் என்பதும், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் ஓரிடத்தில் குவியும்போது அங்கே ஏற்படவிருக்கும் புதிய தேவைகள் மற்றும் நெருக்கடிகளைச் சமாளிப்பது பெரும் சவாலாக மாறும்.

மறுபுறம், இஸ்ரேல் மீண்டும் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால், அதற்கு சர்வதேச சமூகமும், அது இஸ்ரேலின் நட்பு நாடாகவே இருந்தாலும் அந்நாட்டிலிருந்து பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே தொடர்கிறது.

இருப்பினும், சர்வதேச அழுத்தங்களுக்கு பெஞ்சமின் நெதன்யாகு அடிபணிய மாட்டார் என்றும், அதை இஸ்ரேலியர்களும் விரும்புவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c132rejen66o

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அவ்வளவு நல்லவங்களா இருந்தா எதுக்கு இஸ்ரேலுக்குள்ள புகுந்தப்போ அவ்வளவு குழந்தைகளையும் பெண்களையும் ஆண்களையும் கொல்லணும்..? கொல்லவேண்டியது ராணுவத்தை அல்லவா..? இரு பகுதியும் ஒண்டுக்கும் குறைஞ்சவங்க இல்ல..

நேரில் நின்று பார்த்தோமா?
எல்லாம் அவர்கள் செய்திகளில் அவர்களே வாசித்தது.

காமாஸ் வீடியோக்கள் பல மறுநாள் ட்விட்டரில் இருந்தது பின்பு காணாமல் போய்விட்டது 
இசை நிகழ்ச்சியில் இருந்து தப்பி ஓடியவர்கள் காமாஸ் பயங்கரவாதிகளை கடந்துதான் ஓடுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நேரில் நின்று பார்த்தோமா?
எல்லாம் அவர்கள் செய்திகளில் அவர்களே வாசித்தது.

காமாஸ் வீடியோக்கள் பல மறுநாள் ட்விட்டரில் இருந்தது பின்பு காணாமல் போய்விட்டது 
இசை நிகழ்ச்சியில் இருந்து தப்பி ஓடியவர்கள் காமாஸ் பயங்கரவாதிகளை கடந்துதான் ஓடுகிறார்கள் 

மிக‌ ச‌ரியான‌ க‌ருத்து................

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

45-50 நாட்களாக பணய கைதிகளாக இருந்தவர்கள் எதுவித களைப்பும் இல்லாமல் போகிறார்களே

பார்க்கலையோ?

ஓ அதை சொல்கிறீர்களா? பார்த்தேன்  பார்த்தேன். இல்லாவிட்ட்தால் என்ன நடந்திருக்குமென்று தெரியும்தானே ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

ஓ அதை சொல்கிறீர்களா? பார்த்தேன்  பார்த்தேன். இல்லாவிட்ட்தால் என்ன நடந்திருக்குமென்று தெரியும்தானே ?

சாமி விடை கொடுத்தாலும்

பூசாரி விடமாட்டார் என்பது போல

நெத்தன்யாகுவே பணய கைதிகளை பிடிக்க முடியாமல் போர்நிறுத்தம் செய்து 150 பாலஸ்தீனியர்களையும் விடுவிக்கிறார்.

நீங்க என்னடா என்றால் இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் தெரியும் தானே என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

சாமி விடை கொடுத்தாலும்

பூசாரி விடமாட்டார் என்பது போல

நெத்தன்யாகுவே பணய கைதிகளை பிடிக்க முடியாமல் போர்நிறுத்தம் செய்து 150 பாலஸ்தீனியர்களையும் விடுவிக்கிறார்.

நீங்க என்னடா என்றால் இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் தெரியும் தானே என்கிறீர்கள்.

கொஞ்சம் பொறுத்திருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் கமாஸ் போர்நிறுத்தம் இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

What we're covering

  • An agreement has been reached to extend the Israel-Hamas truce in Gaza by two additional days, Qatar announced. 
  • Families of hostages expected to be released by Hamas on Monday have been notified, the Israeli prime minister's office said. Under the deal, Hamas needs to release 10 more hostages for each additional day’s pause in the fighting.
  • Over the first three days of the truce, Hamas released a total of 58 hostages, primarily women and children, and Israel freed 117 Palestinian prisoners. Hamas, Israel and the US had been working through ongoing issues with Monday's list of hostages, sources said, including ensuring children on the list are not released without their mothers or grandmothers who might also be in captivity.

https://www.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-11-27-23/index.html

  • கருத்துக்கள உறவுகள்

 

விடுவிக்கப்பட்ட 11 இஸ்ரேலிய பணயக்கைதிகள் மீண்டும் இஸ்ரேலிய எல்லைக்கு வந்துவிட்டனர் மற்றும் இஸ்ரேலிய தற்காப்புப் படைகளுடன் சேர்ந்து வருகின்றனர் என்று IDF ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகள் அவர்களின் உடல்நிலை குறித்த ஆரம்ப மருத்துவ மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் இணையும் வரை இஸ்ரேலியப் படைகள் அவர்களுடன் செல்வார்கள் என IDF தெரிவித்துள்ளது.

இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர்கள் தெற்கு இஸ்ரேலில் உள்ள கெரெம் ஷாலோமில் ஹெலிகாப்டர்களில் ஏறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://www.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-11-27-23/index.html

Edited by ஈழப்பிரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோதல் இடைநிறுத்தம் மேலும் இரண்டு நாட்களிற்கு நீடிப்பு - மேலும் பல பணயக்கைதிகளும் பாலஸ்தீனியர்களும் விடுதலை

28 NOV, 2023 | 10:21 AM
image

இஸ்ரேலும் ஹமாசும் மேலும் இரண்டு நாட்கள் மோதல் இடைநிறுத்தத்தை  நீடிப்பதற்கு இணங்கியுள்ளன.

நான்கு நாள் மோதல் இடைநிறுத்தம் முடிவிற்கு வருவதற்கு சற்று முன்னர் கட்டார் இதனை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மூன்று வயது சிறுவன் உட்பட 11 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

இதுவரை ஹமாஸ் 50 பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது.

இதேவேளை 30 சிறுவர்கள் மூன்று பெண்கள் உட்பட 33 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/170429

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Israel Hamas Truce-ஆல் உணர்ச்சிமிகு தருணம்: அங்கே Israeli பணய கைதிகள், இங்கே Palestinian கைதிகள்...

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்  ஏற்பட்டுள்ளது. 

இதன் கீழ் 50 இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் 150 பாலத்தீன கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பாலத்தீனர்களுக்கு பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வரவேற்பு கொடுத்தனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோதல் தவிர்ப்பு மேலும் ஒருநாள் நீடிப்பு

30 NOV, 2023 | 11:44 AM
image

ஹமாசுடனான மோதல் இடைநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பணயக்கைதிகளையும் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களையும் விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையிலேயே இஸ்ரேலிய இராணுவம் இதனை அறிவித்துள்ளது.

பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதன் காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் யுத்தநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்படுகின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.-

புதன்கிழமை இரவு மேலும் 16 பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ள ஹமாஸ் மோதல் இடைநிறுத்த நீடிப்பை உறுதி செய்துள்ளது.

இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் புதன்கிழமை இஸ்ரேலிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/170619

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்தித்த இன்னல்கள்: விவரிக்கும் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள்

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தினர். இரண்டு நிமிடத்திற்குள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் சிறு குழந்தைகள் உட்பட 84 வயது முதியோர் வரை அடங்குவர்.

46 நாட்களுக்கு மேல் சண்டை நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அந்த போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.

Capture-23.jpg

முதல் நான்கு நாட்களில் 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ள செய்தி நிறுவனங்கள் முயற்சி செய்தன.

ஆனால், மருத்துவமனைகளுக்கு தகவலை பரிமாறிக் கொள்ளவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தகவல் கசிந்துள்ளது. வடக்கு காசாவில் பிடிக்கப்பட்ட தாய்லாந்தை சேர்ந்த 17 பேர் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் உள்ள அதிகாரி மூலம் பிணைக்கைதிகள் எதிர்கொண்ட இன்னல்கள் தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு மிகவும் குறைந்த ஊட்டச்சத்து குறைந்த உணவுகளே கொடுக்கப்பட்டடுள்ளது. மேலும், கொஞ்சமாக அரிசி உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, ஃபவா பீன்ஸ், சில சில நேரங்களில் பிட்டாவுடன் உப்பு கலந்த சீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து ஏனைய ஏதும் வழங்கப்படவில்லை. காய்கறிகள், முட்டை போன்ற உணவுகள் வழங்கவில்லை.

Capture-1-8.jpg

பலர் தங்களுடைய எடையில் 10 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் குறைந்துள்ளனர். அவர்களுக்கு ஒளி (வெளிச்சம்) காட்டப்படவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வெளிச்சம் காட்டப்பட்டுள்ளது.

தங்களது தகவலை பரிமாறிக்கொள்ள பேனா அல்லது பென்சில் கேட்டபோது, அதற்கு ஹமாஸ் அமைப்பினர் அனுமதி அளிக்கவில்லை. எழுத்து மூலம் தகவலை பரிமாற்றம் செய்யக்கூடும் என பயந்ததால் அனுமதிக்கவில்லை. தொலைக்காட்சி, வாசிப்பு தொடர்பானதுக்கும் அனுமதிக்கவில்லை. ஒருவர் மூலம் ஒருவர் என்ற வகையில் தகவலை பரிமாறிக் கொள்ள அனுமதித்துள்ளனர். முதியவர்கள் தூங்குவதற்கு சிரமப்பட்டுள்ளனர். சேரில் இருந்தவாறு தூங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இன்னல்களை சந்தித்ததாக மருத்துவமனை அதிகாரி தகவலை பகிர்ந்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் விடுவிக்கப்பட்ட பிறகு தங்களது தாயாரை சந்திக்கும் மகிழ்ச்சியில் வந்தபோது, ஹமாஸ் தாக்குதலின்போது உயிரிழந்ததாக அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் மனவேதனை அடைந்தனர்.

https://thinakkural.lk/article/282865

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்தம் முடிந்து இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் மீண்டும் துவக்கம் - சமீபத்திய தகவல்கள்

காஸா, ஹமாஸ், இஸ்ரேல், பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏழு நாட்கள் அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்தம் முடிந்து இன்று (வெள்ளி, டிசம்பர் 1) மீண்டும் போர் துவங்கியிருக்கிறது.

தெற்கு காஸாவிலிருந்து மக்களை வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை வீசியிருக்கிறது.

பொர்நிறுத்தம் முறியடிக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய ராணுவம் மற்றும் ஹமாஸ் இருதரப்பும் பரஸ்பரக் குற்றம் சாட்டிக்கொள்கின்றன.

ஹமாஸின் சுகாதார அமைச்சகம், வெள்ளிக்கிழமை 32 மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது.

அதேசமயம் காஸாவிலிருந்து தெற்கு இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகள் ஏவப்பட்டிருக்கின்றன.

 
காஸா, ஹமாஸ், இஸ்ரேல், பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹமாஸின் சுகாதார அமைச்சகம், வெள்ளிக்கிழமை 32 மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது

இஸ்ரேல் என்ன சொல்கிறது?

வெள்ளிக்கிழமை எக்ஸ் சமூக வலைதளத்தில் இடப்பட்ட ஒரு பதிவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காஸாவில் மீண்டும் போரைத் துவங்குவதாகத் தெரிவித்திருந்தது.

அப்பதிவில், ஹமாஸ் போர்நிறுத்த உடன்பாட்டை மீறிவிட்டதாகவும் அதனால் போர் மீண்டும் துவங்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் மெலதிக பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்ளவில்லை எனவும், அது போர்நிறுத்த உடன்படிக்கையை மீறுவதாகவும் தெரிவித்தார். “ஹமாஸ் அனைத்து பெண் பணயக்கைதிகளையும் விடுவிக்கவில்லை, மேலும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது,” என்று அவரது அலுவலகம் தெரிவித்தது.

இஸ்ரேலிய ராணுவம் ஹமாஸ் ஒப்புக்கொண்டபடி அனைத்து பெண் மற்றும் குழந்தைப் பணயக்கைதிகளை விடுவிக்கவில்லை என்று கூறியிருக்கிறது.

 
காஸா, ஹமாஸ், இஸ்ரேல், பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து காஸாவிலிருந்து வெளியேறும் பாலத்தீனர்கள்

ஹமாஸ் தரப்பு என்ன சொல்கிறது?

அதே சமயம், பொர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு நெருக்கமாக இருந்த ஒருவர், பிபிசியிடம், இஸ்ரேல் வடக்கு காஸாவிற்கு வரும் எரிபொருளை முடக்கியதுதான் போர்நிறுத்தம் முறிந்ததற்குக் காரணம் என்று ஹமாஸ் கூறியதாகத் தெரிவித்தார்.

மேலும், ஹமாஸ் பணயக்கைதிகளாகப் பிடித்த இஸ்ரேலிய ஆண்களை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடன்பாட்டின்படி விடுவிக்க மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

காஸா, ஹமாஸ், இஸ்ரேல், பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உணவு, தண்ணீர், மற்றும் மருந்துப் பொஎருட்களுக்கான கடுமையான பற்றாக்குறை ஏற்பப்ட வய்ப்புள்ளது

மனிதாபிமானச் சிக்கல் குறித்த அச்சங்கள்

போர் மீண்டும் துவங்கப்பட்டது காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை மீண்டும் மோசமாக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உணவு, தண்ணீர், மற்றும் மருந்துப் பொஎருட்களுக்கான கடுமையான பற்றாக்குறை ஏற்பப்ட வய்ப்புள்ளது.

ஏழு நாள் இடைக்காலப் போர்நிறுத்ததால், காஸாவுக்குள் உதவிகளை எடுத்துச் செல்லும் டிரக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தது. ஆனால் காஸாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இல்லை என்று ஐ.நா. கூறியிருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c9r660p15eqo

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிமொழிகளை ஹமாஸ் புறக்கணித்ததால் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது: எண்டனி பிளிங்கன்

இஸ்ரேல், ஹமாஸ் இடையே மத்தியஸ்தரராக செயற்பட்டு வந்த அமெரிக்கா, கட்டார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தத்தை நீடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தன.

ஆனால், ஹமாஸ் இடைக்கால போர் நிறுத்த செயற்பாட்டை மீறிவிட்டது. கூடுதலாக இஸ்ரேல் பகுதி மீது தாக்குல் நடத்தியது எனக்கூறி, இஸ்ரேல் இராணுவம் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் உறுதிமொழிகளைப் புறக்கணித்ததாலேயே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எண்டனி பிளிங்கன், இடைநிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் பொதுமக்களுக்கு தெளிவான பாதுகாப்பை ஏற்படுத்துவது மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்பதை தெளிவுபடுத்தினேன். போர் நிறுத்தம் ஏன் முடிவுக்கு வந்தது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம்.ஹமாசால் அது முடிவுக்கு வந்தது. ஹமாஸ் அமைப்பினர் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டனர். போர் நிறுத்தம் முடியும் முன்பே அது ஜெருசலேமில் ஒரு கொடூரமான தாக்குதலை நடத்தி 3 பேரைக் கொன்றது. அமெரிக்கர்கள் உட்பட ஏனையவர்களைக் காயப்படுத்தியது. போர் நிறுத்தம் முடிவதற்குள் அது ரொக்கெட்டுகளை வீசத் தொடங்கியது. சில பிணைக்கைதிகளை விடுவிப்பதில் அது செய்த கடமைகளை மறுத்தது என தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/283279

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் போர் உச்ச‌த்தை தொட்டு விட்ட‌து ம்ம்ம்ம்ம்ம்ம் சீக்கிர‌ம் போர் நின்று 
ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌ விடிவு கால‌ம் பிற‌க்க‌ட்டும்..............

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

மீண்டும் போர் உச்ச‌த்தை தொட்டு விட்ட‌து ம்ம்ம்ம்ம்ம்ம் சீக்கிர‌ம் போர் நின்று 
ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌ விடிவு கால‌ம் பிற‌க்க‌ட்டும்..............

உங்கள் ஆசை நிறைவேற எனது வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

உங்கள் ஆசை நிறைவேற எனது வாழ்த்துக்கள். 

எதை வைச்சு சொல்லுறிங்க‌ள்😏............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.