Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி...

// துவாரகாவின் பெயரால் நவம்பர் 27 (2023) அன்று வெளிவந்திருக்கும் வீடியோவில் இருப்பது துவாரகா அல்ல. நான் அறிந்தவரையில், இயக்கப் பணிகளில் இருந்த துவாரகா இறுதிப் போர்க்காலத்திலே தியாகச்சாவு அடைந்துவிட்டார். துவாரகா மற்றும் அவரது அப்பாவின் பெயர்களால் முன்னெடுக்கப்படும் 'மோசடி' நடவடிக்கைகள், கடுமையான கண்டனத்திற்குரியவை. அவை தனியாகவும் விரிவாகவும் பேசப்படவேண்டியவை.

துவாரகாவின் பெரியப்பாவின் மகன் (கார்த்திக் மனோகரன்) டென்மார்க் நாட்டில் இருக்கிறார். மரபணுப் பரிசோதனை மூலம் உண்மையான துவாரகாவை அடையாளம் காணக்கூடிய பொறிமுறைக்குத் தனது தந்தையும் தானும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். துவாரகா பெயரில் வரக்கூடியவர் யாராயினும், முதலில் மரபணுப் பரிசோதனை மூலம் தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  

துவாரகா பெயரில் ஆள் மாறாட்டமும் அரசியல் மோசடியும் செய்யத் துணிபவர்கள், நம்பகத்தன்மை கொண்ட மரபணுப் பரிசோதனைக்கு உடன்படமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். குளறுபடிகள் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் கூடிய மரபணுப் பரிசோதனை முறைப்படியாக நடக்குமெனில், 'கூட்டுக் களவாணிகள்' அம்பலப்பட்டுவிடுவார்கள். 

துவாரகாவின் தியாகச்சாவு இறுதிப் போர்க்காலத்தில் நிகழ்ந்துவிட்டதையோ அவரது குடும்பத்தினரின் பங்கேற்புடன் இறுதி நிகழ்வுகள் நடந்ததையோ அப்போது வெகு சிலரே அறிந்திருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் எவருமே இறுதிப் போரில் இருந்து தப்பிப்பிழைக்கவில்லை. ஆக, துவாரகாவோ அவரது குடும்பத்தினரோ இப்போது இல்லை  

இதை எழுதத்தொடங்கிய பின்னர், துவாரகாவை நன்கு அறிந்த, துவாரகாவின் அண்ணனோடு (சாள்ஸ் அன்ரனி) இயக்கப் பணிகளில் இறுதிவரை இருந்த, எனது நீண்டகால நெருங்கிய நண்பர் ஒருவருடன் நீண்ட நேரம் உரையாடினேன். 

வெற்றுச் சடங்குகளாகவோ அடையாள அரசியலின் வினைத்திறன் குன்றிய செயற்பாடாகவோ பொருளாதார வளங்களை வீணடிக்கும் கொண்டாட்டங்களாகவோ அஞ்சலி நிகழ்வுகள் அமைந்துவிடக்கூடாது. அஞ்சலி நிகழ்வுகளில், அரசியல் முதிர்ச்சியும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் தேசிய ஒருமைப்பாடும் சனநாயகப் பண்புகளும் அவசியமானவை. 

உயிர்த்தியாகிகளை நினைவுகூர்ந்து அஞ்சலிப்பது, ஒருங்கிணைந்த 'விடுதலை அரசியல்' முன்னெடுப்புகளின் பகுதியாக அமைய வேண்டும். கடந்த காலத்தின் கசடுத்தனங்கள், போலி நம்பிக்கைகள், அடிப்படைவாத நிலைப்பாடுகள், இயக்க முரண்பாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து காவியபடி விடுதலை அரசியல் வழியில் ஆரோக்கியமாக முன் நகர முடியாது. //

மேலதிக இணைப்பு (2023-12-07)

// வி பு தலைவரை நன்கு அறிந்திருக்கிறேன் என்பதால், அவரது உடல் சார்ந்த காட்சிகளைப் பார்க்க முடிந்த காலத்திலேயே அவரது மரணம் சார்ந்த உண்மைகளை என்னளவில் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது.

அவர் இருப்பதாக வலிந்து பொய்களை விதைப்பவர்களும் அவற்றை நம்பக்கூடிய சுயசிந்தனை அற்றவர்களும் அவரை வைத்துப் பிழைப்பும் இழிவரசியலும் செய்ய முனைவோரும் பெருகியிருக்கும் நிலையில், மறுக்கவே முடியாத துல்லியமான ஆதாரங்களையும் தர்க்க நியாயங்களையும் சுய அனுபவங்களையும் முன்வைத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தி எடுத்துரைக்க வேண்டியுள்ளது. 

அவரது மரணம் தொடர்பான பல்வேறு தரவுகளையும் ஆவணங்களையும் நீண்டகாலமாகச் சேகரித்துவருகிறேன். கிடைத்திருக்கும் ஆவணங்களைப் பல்வேறு தரவுகளுடன் ஒப்பாய்வு செய்து மேலும் சில மறைக்கப்பட்ட உண்மைகளைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. இதுவரை யாரும் அறிந்திராத முக்கியமான சில புள்ளிகள் என்னிடம் உள்ளன.

வருங்காலத்தில் வாய்ப்புள்ளபோது, வி பு தலைவரின் மரணம் தொடர்பான 'புலனாய்வு ஊடகவியல்' (Investigative Journalism) வகைப்பட்ட விரிவான ஆய்வை அறிக்கையாகவோ வீடியோப் பதிவாகவோ வெளியிட முடியும். ஊடகவியல் அறங்களின் அடிப்படையில் அது அமையும். எதுவும் தப்பாகிவிடக் கூடாது என்பதிற் கவனமாக இருக்கிறேன்.

இறுதிப் போர் முடிவடைந்த பின்னர், காயமடைந்திருந்த நான் தென் இலங்கைப் பகுதிகளில் இராணுவ வைத்தியர்களின் வைத்தியப் பராமரிப்பில் இருக்க நேர்ந்தது. அப்போது சில இந்திய வைத்தியர்களும் இருந்தார்கள். போரின் முடிவில் இராணுவத்தினராற் பதிவுசெய்யப்பட்டிருந்த போர்க்குற்ற ஆவணங்கள் பலவற்றை அப்போது பார்க்க முடிந்தது. இறுதிப் போரில் நான் ஊடகப் பணிகளில் ஈடுபட்டிருந்ததை எப்படியோ அறிந்திருந்த சிலர், தாமாகவே முன்வந்து பல்வேறுபட்ட பிரத்தியேகமான அவலக் காட்சிகளைக் கண்பித்தார்கள். அவற்றுள்ளே பிரபாகரனின் உடல் சாந்த காட்சிகளும் அடங்கியிருந்தன. 

வெவ்வேறு தரப்பினரால் வெவ்வேறு நிலைகளில் அவரது உடல் கையாளப்பட்டிருக்கக்கூடும். இராணுவ வைத்தியர்கள், அவரது தலையில் இருந்து சில பகுதிகளை எதற்காகவோ பிரித்தெடுத்துப் பாதுகாத்திருக்கிறார்கள். அது நடந்த பிறகுதான், வேறு தரப்பினரால் அவரது உடல் திரு. கருணாவுக்கும் திரு. தயாநிதிக்கும் வேறு ஊடகங்களைச் சார்ந்தவர்களுக்கும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. முழு நிகழ்வுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவை எப்போதாவது வெளிவரக்கூடும்.

இக் கட்டுரையினை எழுதி முடித்தபின்னர், இறுதிவரை மேல் மட்ட இயக்கப் பணிகளில் இருந்து போரின் முடிவில் இராணுவப் பாதுகாப்பில் இருந்துவிட்டு வந்த 'தம்பி' ஒருவர் என்னுடன் உரையாடினார். (மிக நீண்ட காலமாக என்னை நன்கு அறிந்தவர்.) ஒரு இராணுவ அதிகாரியின் கைத்தொலைபேசியில் இருந்து அவர் பார்த்த அந்தரங்கமான வீடியோப் பதிவைக் குறித்து விபரித்தார். அந்தக் கைத்தொலைபேசியின் வகை அவருக்கு இப்போதும் நினைவிருக்கிறது. அவரது வாக்குமூலமும் எனது அனுபவங்களும் ஆய்வுகளும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன.

வி பு தலைவரின் உடல் சார்ந்த மூன்று பிரத்தியேகமான படங்களை, இந்திய இராணுவத் தரப்பிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகர் ஒருவர் எப்படியோ பெற்றிருக்கிறார். முன் அறிமுகம் இல்லாத அவரைப் பல மாதங்களுக்கு முன்னரே தொடர்புகொண்டு உரையாடியிருக்கிறேன்.

எது எப்படியிருந்தாலும், வி பு தலைவரின் மரணம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகிவிட்ட துன்பியல் நிகழ்வு. அவரது மரணம், இனி ஒருபோதும் மர்மமாக இருக்க முடியாது. //

-அமரதாஸ்.(https://www.facebook.com/amara.thaas)

இக் கட்டுரையினை பின்வரும் இணையத்தள இணைப்பில் முழுமையாகப் படிக்கலாம்.

https://widevisionstudio.com/archives/3671

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்திடம் சரணடைந்த பலர், பணம் கொடுத்து, தப்பி, இந்தியா போயிருக்கிறார்கள். கார்னெல் ரமேஷ் போன்றோர், அடித்து, எரித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி இந்தியா போன பலரில், தமிழ்க்கவி என்னும் ஒரு பெண், பத்திரிக்கையாளர் திருநாவுக்கரசு, வெளியே தெரிந்தவர்கள். தெரியாத பலர் இயக்க காரர், அங்கிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். பிள்ளையானின் கையால் மௌலானா கூட, இந்தியா போயே சுவிஸ் வந்திருக்கிறார்.

இந்த ராணுவத்திடம் பணம் கொடுத்து தப்ப என்று, கொழும்பில் ஒரு சிங்கள இராணுவ முகவர் கூட்டம்  இயங்கியதாக கேள்விப்பட்டேன். அவர்களிடம், ராணுவத்திடம் இருந்தவர்கள் பெயர் விபரங்களை கொடுக்க, அவர்கள், உடனே, வன்னி பக்கம் தொடர்பு கொண்டு, ஆட்களை பாதுகாப்பாக நகர்த்தி, மன்னார் ஊடாக இந்தியா போக ஒழுங்கு செய்தனர் என்று கேள்வி.

இது நான் கேள்விப்பட்டது. உண்மையோ தெரியவில்லை. ஆனாலும், கொடியவர்களின் கையில் இருந்து தப்பியவர்கள், பணத்தினை கொடுத்தே தப்பி இருக்கலாம்.

@பாலபத்ர ஓணாண்டி

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ராணுவத்திடம் சரணடைந்த பலர், பணம் கொடுத்து, தப்பி, இந்தியா போயிருக்கிறார்கள். கார்னெல் ரமேஷ் போன்றோர், அடித்து, எரித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி இந்தியா போன பலரில், தமிழ்க்கவி என்னும் ஒரு பெண், பத்திரிக்கையாளர் திருநாவுக்கரசு, வெளியே தெரிந்தவர்கள். தெரியாத பலர் இயக்க காரர், அங்கிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். பிள்ளையானின் கையால் மௌலானா கூட, இந்தியா போயே சுவிஸ் வந்திருக்கிறார்.

இந்த ராணுவத்திடம் பணம் கொடுத்து தப்ப என்று, கொழும்பில் ஒரு சிங்கள இராணுவ முகவர் கூட்டம்  இயங்கியதாக கேள்விப்பட்டேன். அவர்களிடம், வெளியே இருந்தவர்கள் பெயர் விபரங்களை கொடுக்க, அவர்கள், உடனே, வன்னி பக்கம் தொடர்பு கொண்டு, ஆட்களை பாதுகாப்பாக நகர்த்தி, மன்னார் ஊடாக இந்தியா போக ஒழுங்கு செய்தனர் என்று கேள்வி.

இது நான் கேள்விப்பட்டது. உண்மையோ தெரியவில்லை. ஆனாலும், கொடியவர்களின் கையில் இருந்து தப்பியவர்கள், பணத்தினை கொடுத்தே தப்பி இருக்கலாம்.

@பாலபத்ர ஓணாண்டி

பல முக்கிய தளபதிகளே கருணா மூலமா இங்கு லண்டன் மட்டும் கொண்டு வந்து விடப்பட்டுள்ளார்கள் அரசியல் அல்லது போராட்டம் பற்றி பேசக்கூடாது என்ற இலங்கை அரசின் நிபந்தனை என்று சொல்லி லட்ஷக்கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு அது வேறு   அதனால் கருணா நல்லவரா கெட்டவரா என்று செம குழப்பத்தில் உள்ளேன் . நம்ம தொழில் வேறு ஊர் ஊர் ஆக திரியனும் .என்ன நடக்குது என்றே புரியலை .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

ம்..ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ம்..ம்ம்

அப்பிடித்தான் ஒரு நாள் லண்டன் வெளியில் போனால் உள்ளே வருவது பல நேரங்களில் சிக்கல் காரணம் கள்ள லைசன்சில் பாசக்கினது எதாவது ஒன்று மோட்டார் வே யையில் அடி  பட்டு கிடக்கும்  இங்கு கள்ள லைசன் எடுக்க 5000பவுன்ஸ் அதனால் விபத்துகளும் கூட  சரி ல்லூசியம் பக்கம் வண்டியை இறக்குவம் என்று இறக்க கணேசா கடை ரொட்டி சிலருக்கு எதிரியாகி விட்டது .

Just now, பெருமாள் said:

😃😀

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்   

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள்  உறங்குவதில்லை...ஊமையாக அழுவதைதவிர...வேறுமார்க்கம் இல்லை...எங்கோ ஒரு மூலையில்...உயிருடன் அவர்கள் இருக்கக்கூடாதா என்ற ஏக்கமும் இல்லாமல்லில்லை...ஆனால் எம்முடைய சனத்தின்..உருட்டுப் பிரட்டில்...அவர்கள் இல்லாமல் இருப்பதேமேல்...எனினும் இப்படி எத்தனை ..கதை ..காட்டுரைகளை  வாசிக்க வேண்டுமோ என்ற ஆதங்கமும் உண்டு...இவ்வுலகில் அவர்கள்  இல்லையெனின் எனது ஆழ்ந்த அஞ்சலிகள். தலைவனே உங்கள்  தியாகத்துக்கு ஈடேது...

  • கருத்துக்கள உறவுகள்

அமரதாஸ் “அவரது அப்பா” எனக் கூறி நழுவுகிறார். 

எவருமே துணிந்து முன் வருகிறார்கள் இல்லை. இதுதான் மற்றவர்களுக்கு வசதியாகி விட்டது.

இங்கு யாழில் கூட நிர்வாகம் ஒருவருடம் தலைவருக்கும் வீர வணக்கம் செலுத்தும் மறு வருடம் காணக் கிடைக்காது. 

ஒரு வேளை கள உறவு சாத்திரி (அஞ்சலி செலுத்திய முறை தவறாக இருந்தாலும் ) செய்தது சரியா? 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

பல முக்கிய தளபதிகளே கருணா மூலமா இங்கு லண்டன் மட்டும் கொண்டு வந்து விடப்பட்டுள்ளார்கள் அரசியல் அல்லது போராட்டம் பற்றி பேசக்கூடாது என்ற இலங்கை அரசின் நிபந்தனை என்று சொல்லி லட்ஷக்கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு அது வேறு   அதனால் கருணா நல்லவரா கெட்டவரா என்று செம குழப்பத்தில் உள்ளேன் . நம்ம தொழில் வேறு ஊர் ஊர் ஆக திரியனும் .என்ன நடக்குது என்றே புரியலை .

அனுபவம் சிறந்த ஆசான் பெருமாள்😄 ...மற்றவர் சொல்லும் போது விளங்காது பட்டு தெரிந்தால் தான் புரியும் 

8 hours ago, MEERA said:

அமரதாஸ் “அவரது அப்பா” எனக் கூறி நழுவுகிறார். 

எவருமே துணிந்து முன் வருகிறார்கள் இல்லை. இதுதான் மற்றவர்களுக்கு வசதியாகி விட்டது.

இங்கு யாழில் கூட நிர்வாகம் ஒருவருடம் தலைவருக்கும் வீர வணக்கம் செலுத்தும் மறு வருடம் காணக் கிடைக்காது. 

ஒரு வேளை கள உறவு சாத்திரி (அஞ்சலி செலுத்திய முறை தவறாக இருந்தாலும் ) செய்தது சரியா? 

"துவாரகாவுக்கும்,பிரபாகரனுக்கும் அஞ்சலி" என்று அமரதாஸ் தலைப்பு வைத்தால் பார்க்க நன்றாகவாக இருக்குது?
மோகன், தலைவர் எங்கேயாவது நிம்மதியாய் இருக்கிறார் என்று நினைச்சிட்டு இருக்கிறாராக்கும்  😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அனுபவம் சிறந்த ஆசான் பெருமாள்😄 ...மற்றவர் சொல்லும் போது விளங்காது பட்டு தெரிந்தால் தான் புரியும் 

இல்லை அவர் இலங்கை அரசோடு இறுதி சண்டையில்  இல்லாமல் இருந்தால் புலிகள் இப்பவும் இருந்து இருப்பார்கள் .

இரண்டு சொல்லு சொல்லாமல் இருந்து இருந்தால் முதலாவது தொடர்ந்து இடைவெளி கொடுக்காமல் போர் புரிந்தால் வெற்றி .

இரண்டாவது ஒரு மைல்  தூரத்தில் ஒரு படையணியையும் இன்னுமொரு படையணியையும் எதிர் எதிரே சண்டை போட  வைக்க இரண்டு சிங்கள படையணியும் பயத்தில் மூன்று மைல்  தள்ளி அதாவது பின்வாங்கி கவர் எடுத்து இருந்தினம் இதை நடைமுறையில் செய்து காட்டி சிங்கள படையின் பலவீனத்தை உணரவைத்து பலமாக்கியவர் .

சுடுதண்ணி விசிறலால் திரும்ப ஸ்ரீலங்கா சென்றது என்பது நம்ப கூடிய விடயம் அல்ல  லிவர்பூலில் அமைதியாக வாழ்ந்து இருந்தால் அவ்வளவு அழிவும் இவ்வளவு சீர் கேடும் தமிழ் இனத்துக்கு வந்து இருக்காது . 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

திரும்பவும் முதலில் இருந்தா 🤯என்னால முடியல்ல😁 பெருமாள் 😍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

திரும்பவும் முதலில் இருந்தா 🤯என்னால முடியல்ல😁 பெருமாள் 😍

உலகில் தமிழன் என்ற இனம் இருக்குமட்டும் கருணாவின் துரோகம் மறக்கப்பட முடியாது எப்படி வன்னியனை காட்டிக்கொடுத்த காக்கை வன்னியன் பெயரோ அது போல் கருணாவின் பெயரும் இருக்கும் கருணா எனும் பெயரை பிற்காலத்தில் யாருமே தம் பிள்ளைகளுக்கு வைக்க மாட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2023 at 21:42, பெருமாள் said:

உலகில் தமிழன் என்ற இனம் இருக்குமட்டும் கருணாவின் துரோகம் மறக்கப்பட முடியாது எப்படி வன்னியனை காட்டிக்கொடுத்த காக்கை வன்னியன் பெயரோ அது போல் கருணாவின் பெயரும் இருக்கும் கருணா எனும் பெயரை பிற்காலத்தில் யாருமே தம் பிள்ளைகளுக்கு வைக்க மாட்டார்கள் .

பொய்  வேகமாய் பரவும் . உண்மை மெதுவாய் பரவினாலும் கடைசியில் அது தான் வெல்லும் ..கடந்த காலங்களில் கருணா கெட்டவர் என்று உறுதியாய் சொன்னிர்கள். இப்ப நல்லவரா/கெட்டவரா என்று கேட்க்கிறீர்கள்...நாளைக்கு என்ன சொல்லுவீர்கள் என நானும் கேட்க ஆவல் ....அது வரைக்கும்  யாழும் தொடர்ந்து இருக்க வேண்டும் ...நானும் தான் 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.