Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது; நாட்டின் சட்டத்துக்கமையவே கைதுகள் இடம்பெறுகின்றன - கடற்படைத் தளபதி

Published By: DIGITAL DESK 3   24 FEB, 2024 | 06:22 PM

image
 

(இராஜதுரை ஹஷான்)

மீனவர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சனிக்கிழமை (24) நிறைவடைந்தது. திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடற்படை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. இனம், மதம், மொழி என்ற அடிப்படையில்  எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வருடாந்த திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு வழங்கிய சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக இந்திய மீனவர்கள் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் சட்டத்துக்கு அமையவே கைதுகள் இடம்பெறுகின்றன. சட்டத்தை மீறும்போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். அடுத்த திருவிழாவுக்கு முன்னர் முரண்பாடற்ற தீர்வு ஒன்று காணப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் வழமை போல் திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/177207

உங்கள் கருத்தை வரவேட்கிறோம்.  இலங்கைமக்கள் பக்கம் இருக்கும்நியாயத்தை இந்திய மீனவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

  • 2 weeks later...
  • Replies 91
  • Views 4.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • இனி என்ன, அடுத்த செய்தி அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதுதான். இவர்கள் மீன் பிடித்து விட்டு போனால் பரவாயில்லை. கடலில் உள்ள மீன் உட்பத்தியாகும் அடித்தட்டுகளையெல்லாம் பெயர்த்து எறிகிறார்

  • ஏராளன்
    ஏராளன்

    எல்லை தாண்டி மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; ஒருவருக்கு சிறை Published By: DIGITAL DESK 3   22 FEB, 2024 | 12:11 PM இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்ட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது!

10 MAR, 2024 | 07:25 AM
image

நெடுந்தீவு - காங்கேசன்துறை பகுதியில் வைத்து சனிக்கிழமை (9) இரவு 22 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடனும், காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒரு படகுடனும் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

மேலதிக நடவடிக்கைகளை நீரியல்வள திணைக்களத்தினர் மேற்கொள்வார்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/178336

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15 தமிழக மீனவர்கள் கைது

Published By: DIGITAL DESK 3   15 MAR, 2024 | 10:02 AM

image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதனையடுத்து, இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேலும், இந்திய மீனவர்களை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/178771

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டி மீன் பிடித்த 21 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கைது!

17 MAR, 2024 | 09:31 AM
image

எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்தே இலங்கை கடற்படையினரால் இந்த 21 பேரும் கைதாகியுள்ளனர்.

தொடர்ந்து, கைதான மீனவர்கள் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

நீரியல் வள திணைக்களத்தினர் கைதான மீனவர்கள் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/178911

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் மூவர் விடுதலை!

justis-300x200.jpg

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் இன்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதத்தின் இரு வேறு தினங்களில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த மீனவர்கள், 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த மூவரும் படகோட்டிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் இந்திய அரசினால் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விசைப் படகோட்டிகள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பதால், நல்லிணக்க அடிப்படையில் 06 மாத சிறைத்தண்டனையை இரத்து செய்து, யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

இதற்கிணங்க, இன்று மூன்று இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையும் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூவரையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/300829

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். காரைநகர் கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது

18 JUN, 2024 | 11:27 AM
image
 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களைக் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/186333

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில மாதங்களில் 182 இந்திய மீனவர்கள் கைது!

கடந்த சில மாதங்களில் 182 இந்திய மீனவர்கள் கைது!

கடந்த சில மாதங்களில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 180க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த சில மாதங்களில் 182 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், அவர்கள் வந்த 24 மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் இன்று (18) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இந்நாட்டுக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் வந்த கப்பலும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மீன்பிடி படகு மற்றும் அதன் மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/304051

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தொடர் கதையாக போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

 இந்திய இலங்கை நாடுகளுக்கு கடல் எல்லைகள் உண்டா? அதனைக் கண்டுபிடிப்பது எவ்வாறு??

மதில் கட்டப்பட்டுள்ளதா? அல்லது சிலைகள் நிறுவப்பட்டுள்ளனவா?? சிலைகள் தட்டுப்பாடென்றால் இலங்கை அகழ்வாராச்சி நிறுவனத்திடம் ஏராளமான சிலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே!!😆

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

இது ஒரு தொடர் கதையாக போகுது.

தொடர்ந்து களவு எடுத்து கொண்டு வந்தால் தங்களுக்கே  சொந்தமாகிவிடும் என்று நம்புகிறார்கள் போலும்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தொடர்ந்து களவு எடுத்து கொண்டு வந்தால் தங்களுக்கே  சொந்தமாகிவிடும் என்று நம்புகிறார்கள் போலும்

இப்ப அவையள் எங்கண்ட மீனவர்களையல்லே கடற்கொள்ளையர் எண்டு சொல்லீனம். தேபெதிம! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 18 இந்திய மீனவர்கள் கைது!

23 JUN, 2024 | 09:15 AM
image
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (23)  அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்த 18 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைதானவர்கள் மையிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன்,  கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/186738

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024இல் இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய படகுகள் கைப்பற்றல்; 204 மீனவர்கள் கைது

Published By: DIGITAL DESK 3

24 JUN, 2024 | 03:25 PM
image
 

2024 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 204 மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த  22 மற்றும் 23 ஆம் திகதி அதிகாலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கடற்படையினரால் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்த 18 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/186841

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது : இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு!

25 JUN, 2024 | 09:17 AM
image
 

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்யச் சென்ற இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்திய மீனவர்களை கைதுசெய்ய முயன்ற போது படகிலிருந்து தவறி விழுந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது ஒரு இந்திய மீனவர்களின் படகு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் 10 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர்.

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகும் கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதே பரிசோதனையின் பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/186897

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 இந்திய மீனவர்கள் கைது!

womwn-Arrest-300x200.jpg

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/305775

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

Published By: DIGITAL DESK 3   23 JUL, 2024 | 09:51 AM

image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்பட்ட இரண்டு விசைப்படகு களையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி விசைப் படகு  மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின் பகுதி சேதம் அடைந்து படகில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை சுமார் 2 மணியளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர்  இரண்டு விசை படகையும் அதிலிருந்த  9 இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்  காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடத்திய பின் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் அனைவரும்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு பின் மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/189132

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 22 இந்திய மீனவர்கள் கைது!

06 AUG, 2024 | 12:22 PM
image
 

மன்னாரை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 22 மீனவர்கள் பயன்படுத்திய இரு படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/190392

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கடற்பரப்பில் 35 இந்திய மீனவர்கள் கைது!

Published By: DIGITAL DESK 3

09 AUG, 2024 | 04:34 PM
image
 

மன்னாரை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்திய 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/190679

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் சொத்தை கொள்ளையடிச்சு வாழுகின்ற மானங்கெட்ட பிழைப்பு! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

அடுத்தவன் சொத்தை கொள்ளையடிச்சு வாழுகின்ற மானங்கெட்ட பிழைப்பு! 

தலைவர்கள் எப்படியோ

குடிமக்கள் அப்படி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

24 AUG, 2024 | 09:31 AM
image
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை  கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.  

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை  கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (23) யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

11 இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகு இலங்கை கடற்படையினரால் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மயிலிட்டி கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

2.jpg

1.jpg

https://www.virakesari.lk/article/191843

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8 இந்திய மீனவர்கள் கைது 

Published By: DIGITAL DESK 3   27 AUG, 2024 | 02:15 PM

image
 

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ் ஆண்டு இதுவரையான காலத்தில் 46 இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 341 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/192120

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

28 AUG, 2024 | 12:13 PM
image

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரியசியா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கிங்சன் (40), மெக்கன்ஸ் (37), ராஜ் (43), இன்னாசி ராஜா (45), சசி (40), மாரியப்பன் (45 ), அடிமை (33), முனியராஜ் ( 23) ஆகிய எட்டு பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 8 பேருக்கும் செப்டம்பர் 14 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீனவர்களை சிறைப்பிடித்ததைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேசுவரத்தில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை.

https://www.virakesari.lk/article/192210

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் சொந்த ஊர் சென்றடைந்தனர்

05 SEP, 2024 | 04:25 PM
image

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர் இன்று வியாழக்கிழமை காலையில் ராமேசுவரம் .சென்றடைந்தனர்

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய இசாக் ராபின் செல்வக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கடந்த ஜுலை 23-ம் தேதி அன்று கைப்பற்றப்பட்டது.

1306790.jpg

படகுகளிலிருந்த   9 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று ஊர்காவல்துறை நீதிமன்றம் 7 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தது. அதேசமயம்  ஹரி கிருஷ்ணன சகாய ராபர்ட் ஆகிய இருவருக்கும் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.

விடுதலை செய்யப்பட்ட 7 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புதன்கிழமை இரவு சென்னைசென்றடைந்தனர். . பின்பு மீனவர்கள் 7 பேரும் மீன்வளத்துறையினர் மூலம் தனி வாகனத்தில் ராமேசுவரத்திற்கு வியாழக்கிழமை காலை அழைத்து செல்லப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/192937

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது | 14 Indian Fishermen Arrested

14 பேர் கைது

இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்றொழிலிற்கு பயன்படுத்திய 3 படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அவர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்பட்டு் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

https://tamilwin.com/article/14-indian-fishermen-arrested-1725717376#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.