Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்... செங்கடலில் 'ஹவுதி' தொடர் அராஜகம்!

இந்திய கப்பல்
 

இந்தியாவிலிருந்து ஜெட் விமான எரிபொருளை ஏற்றிக்கொண்டு, செங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல் மீது யேமன் கிளா்ச்சியாளா்கள் படையான ஹவுதி அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் கப்பல்களை தாக்கி அழிப்போம் என்று ஏமன் கிளர்ச்சிப்படையான ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து  அந்த வழியாக செல்லும் அனைத்து கப்பல்களையும் அந்த அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் நார்வே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி அமைப்பு நேற்று இரவு இந்திய கப்பலையும்  தாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், " இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமான எரிபொருளை ஏற்றிக்கொண்டு கா்நாடகத்தின் மங்களூரு துறைமுகத்திலிருந்து மாா்ஷல் ஐலண்ட் கொடியுடன் செங்கடலில் வந்து கொண்டிருந்த 'ஆா்ட்மா் என்கவுன்டர்' கப்பலை நோக்கி புதன்கிழமை அதிகாலை 2 ஏவுகணைகள் வீசப்பட்டன.

 

முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல்-மண்டெப் நீரிணைக்கு அருகே அந்தக் கப்பல் வந்துகொண்டிருந்தபோது, ஹவுதி கிளர்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் பகுதியிலிருந்து அந்த ஏவுகணைகள் வீசப்பட்டன. எனினும், அந்த ஏவுகணைகள் குறி தவறிக் கடலுக்குள் விழுந்தன. இந்தச் சம்பவத்தின்போது கிளர்ச்சியாளா்களின் டிரோன் ஒன்றை அமெரிக்க போா்க் கப்பல் சுட்டுவீழ்த்தியது" என்று அதிகாரிகள் கூறினா்.

ஹவுதி கிளா்ச்சியாளர்களால் குறிவைக்கப்பட்ட எரிபொருள் கப்பலில் ஆயுதம் ஏந்திய பாதுகாவலா்கள் இருந்ததாகவும், படகில் வந்து அந்தக் கப்பலில் ஏற முயன்றவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அந்தப் பாதுகாவலர்கள் விரட்டியடித்ததாகவும் தனியாா் உளவு நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.

 
ஹவுதி படை
ஹவுதி படை

காஸா போா் விவகாரத்தில் எரிபொருள் கப்பல் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியுள்ளது இதுவே முதல்முறையாகும். எனினும், இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளா்கள் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

கடந்த திங்கள்கிழமை இரவுகூட, நாா்வே கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பலொன்றின் மீது யேமன் நாட்டின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். எனினும், இதில் யாரும் காயமடையவில்லை என்று அந்தக் கப்பலை இயக்கி வரும் நிறுவனம் தெரிவித்தது.

இதுபோன்ற தாக்குதல்களால் ராணுவரீதியில் எந்தப் பலனும் இல்லை என்றாலும், யேமனில் தங்களுக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காக கிளா்ச்சியாளா்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது.

https://kamadenu.hindutamil.in/international/missile-attack-targeting-indian-ship

  • கருத்துக்கள உறவுகள்

ஹூத்தி தீவிரவாதிகளினால் எமனின் ஒரு பகுதி ஆட்சியில் உள்ளது. இவர்கள் ஈரானின் உதவியுடன்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். எனவே அவர்களால் எந்த கப்பல் , எந்த நாட்டுக்கு உரியது, எங்கே போகிறது என்றெல்லாம் தெரியாது. ஏதாவது தவறான தகவல் வந்தால் அவ்வளவுதான். அந்த கப்பலுக்கு ஏவுகணை தாக்குதல்தான். இப்படி நடந்தால் அது இஸ்ரேலுக்குத்தான் நனமை பயக்கும். எல்லா நாடுகளும் தங்கள் கப்பல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டி வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

செங்கடல் பகுதியில் இரண்டு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்

Published By: RAJEEBAN   16 DEC, 2023 | 11:50 AM

image
 

செங்கடல் பகுதியில் இரண்டு கப்பல்கள்  ஏவுகணை தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்கா யேமனிலிருந்தே ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.

சரக்குகப்பல்களே தாக்கப்பட்டன.

ஒரு கப்பல் ஆளில்லா விமான தாக்குதலிற்குள்ளாகியுள்ளது மற்றைய கப்பல் ஏவுகணை தாக்குதலிற்குள்ளாகியுள்ளது.

ஆளில்லா விமானதாக்குதலை நிராகரித்துள்ள யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

சர்வதேச வர்த்தகத்திற்கு பல் அல் மன்டாப் நீரிணையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

யேமனின் ஹெளத்திகளின் பகுதியிலிருந்து ஏவப்பட்ட ஏதோ ஒன்று அமெரிக்க கப்பலை தாக்கியுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான அல் ஜஸ்ரா என்ற கப்பலே தாக்குதலிற்குள்ளாகியுள்ளது.

கிரேக்க துறைமுகத்திலிருந்து சிங்கப்பூரிற்கு சென்றுகொண்டிருந்த கப்பலே தாக்குதலிற்குள்ளாகியுள்ளது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

அல்ஜஸ்ராவை தாக்கியது குறித்து எதனையும் தெரிவிக்காத ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் வேறு இரண்டு கப்பல்களை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு கப்பல்தாக்குதலிற்குள்ளாகி தீப்பற்றி எரிகின்றது – அமெரிக்க கப்பல் ஒன்று உதவிக்கு விரைந்துள்ளது எனஅமெரிக்கா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/171816

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு எதிராக யார் எவர் என்ன செய்தாலும் பாராட்டலாம் 👍

On 14/12/2023 at 20:43, Cruso said:

. எனவே அவர்களால் எந்த கப்பல் , எந்த நாட்டுக்கு உரியது, எங்கே போகிறது என்றெல்லாம் தெரியாது. ஏதாவது தவறான தகவல் வந்தால் அவ்வளவுதான். அந்த கப்பலுக்கு ஏவுகணை தாக்குதல்தான். 

இது எப்படித் தங்களுக்கு உறுதியாகத் தெரியும்? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இந்தியாவிற்கு எதிராக யார் எவர் என்ன செய்தாலும் பாராட்டலாம் 👍

இது எப்படித் தங்களுக்கு உறுதியாகத் தெரியும்? 

😁

ஹூத்தி என்பது ஒரு தீவிரவாத கும்பல். உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படட அரசு இல்லை. அதை சில காரணங்களுக்காக பயங்கரவாதிகளாக அறிவிக்க படாத போதும் அவர்கள் பயங்கரவாதிகளே. இரான் சொல்படி நடக்கும் ஒரு கும்பல். இப்போது விளங்கி இருக்குமென்று நினைக்கிறேன். 😜

  • கருத்துக்கள உறவுகள்

கருங்கடலில்.. செய்யும் விளையாட்டு.. செங்கடலில் வினையாகிக் கிடக்கு.

அங்க ஒரு கோமாளி உக்ரைன். இங்க ஒரு ஏமாளி ஏமன். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Cruso said:

ஹூத்தி என்பது ஒரு தீவிரவாத கும்பல். உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படட அரசு இல்லை. அதை சில காரணங்களுக்காக பயங்கரவாதிகளாக அறிவிக்க படாத போதும் அவர்கள் பயங்கரவாதிகளே. இரான் சொல்படி நடக்கும் ஒரு கும்பல். இப்போது விளங்கி இருக்குமென்று நினைக்கிறேன். 😜

 உங்கள் விளக்கத்தை மனம்போன போக்கில் எழுதாதீர்கள். 

இவர்கள் பயங்கரவாதிகள் இவர்கள் போராளிகள் என்று எழுதப்பட்ட சட்டங்கள் எதுவும் இல்லை. 

கிறீத்தவத்தை தழுவாத எவரும் மோட்சமடைய முடியாது /இஸ்லாத்தைத் தழுவாத எல்லோரும் சிலை வழிபாட்டாளர்கள் அதனால் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பது போல இருக்கிறது உங்கள் விளக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

 உங்கள் விளக்கத்தை மனம்போன போக்கில் எழுதாதீர்கள். 

இவர்கள் பயங்கரவாதிகள் இவர்கள் போராளிகள் என்று எழுதப்பட்ட சட்டங்கள் எதுவும் இல்லை. 

கிறீத்தவத்தை தழுவாத எவரும் மோட்சமடைய முடியாது /இஸ்லாத்தைத் தழுவாத எல்லோரும் சிலை வழிபாட்டாளர்கள் அதனால் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பது போல இருக்கிறது உங்கள் விளக்கம். 

எனக்கு தெரியும் பயங்கரவாதிகள் என்ற வார்த்தை உங்களுக்கு அலர்ஜி என்று. மற்றப்படி  நான் எழுதியது சரிதான். 

அது சரி போப்பாண்டவர் எதுக்கு தன்னை அங்கு அடக்கம்பண்ண வேண்டும் இங்கு அடக்கம்பண்ண வேண்டும் என்று சொல்லுகிறார்? அப்படி அடக்கம் பண்ணினால் மோட்ச்சம் போய் விடுவாரோ?

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

எனக்கு தெரியும் பயங்கரவாதிகள் என்ற வார்த்தை உங்களுக்கு அலர்ஜி என்று. மற்றப்படி  நான் எழுதியது சரிதான். 

அது சரி போப்பாண்டவர் எதுக்கு தன்னை அங்கு அடக்கம்பண்ண வேண்டும் இங்கு அடக்கம்பண்ண வேண்டும் என்று சொல்லுகிறார்? அப்படி அடக்கம் பண்ணினால் மோட்ச்சம் போய் விடுவாரோ?

நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் மத நம்பிக்கைக்குள்ளாகப் பார்பவர் அதனால் உங்களுக்கு எல்லாமே’ மஞ்சளாகத்தான் தெரியும் . 

இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்ந்து, பிறருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காத எவரும் மறு உலகு ஒன்று இருக்குமானால்அங்குமட்டும் மகிழ்ச்சியாக வாழ்வான் என நம்புவது  நகைப்பிற்கிடமானது. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் மத நம்பிக்கைக்குள்ளாகப் பார்பவர் அதனால் உங்களுக்கு எல்லாமே’ மஞ்சளாகத்தான் தெரியும் . 

இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்ந்து, பிறருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காத எவரும் மறு உலகு ஒன்று இருக்குமானால்அங்குமட்டும் மகிழ்ச்சியாக வாழ்வான் என நம்புவது  நகைப்பிற்கிடமானது. 

😏

நான் மதத்துடன் சம்பந்தப்பட்டு எதையும் எழுத வில்லை. நீங்கள்தான் அப்படி நினைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். காகத்துக்கு கனவிலும் பவ்வி தின்னும் எண்ணமென்று சொல்லுவார்கள். முதலில் இருந்து மீண்டும் வாசியுங்கள்.😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

நான் மதத்துடன் சம்பந்தப்பட்டு எதையும் எழுத வில்லை. நீங்கள்தான் அப்படி நினைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். காகத்துக்கு கனவிலும் பவ்வி தின்னும் எண்ணமென்று சொல்லுவார்கள். முதலில் இருந்து மீண்டும் வாசியுங்கள்.😜

நான் கூறியதில் தவறேதும் இல்லை என்பது உங்கள் கோபத்தில் வெளிப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

நான் கூறியதில் தவறேதும் இல்லை என்பது உங்கள் கோபத்தில் வெளிப்படுகிறது. 

100 % தவறு. இங்கு கோபம்  எல்லாம் கிடையாது. 😛

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

100 % தவறு. இங்கு கோபம்  எல்லாம் கிடையாது. 😛

நன்றி 👍

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் : செங்கடல் வழியாக பயணத்தை நிறுத்திய முக்கிய நிறுவனங்கள்!

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதால் குறித்த பாதை வழியாக தங்கள் கப்பல்கள் பயணிப்பதை முன்னணிக் கப்பல் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து டென்மார்க்கில் தலமையகத்தைக் கொண்டு செயற்பட்டு வரும் முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

எனவே, அந்தக் கடல் பாதை வழியாக நிறுவனத்தின் கப்பல்கள் இயக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பல்கள் மீது ஹ_தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதால் அவர்களுக்கோ, காஸாவில் போரிடும் ஹமாஸ் அமைப்பினருக்கோ இராணுவ ரீதியில் எந்தப் பலனும் கிடைக்காது.

இருப்பினும், உள்நாட்டில் தங்களுக்கான ஆதரவைப் பெருக்கிக்கொள்வதற்காக இத்தகைய தாக்குதல்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுவதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1363391

  • கருத்துக்கள உறவுகள்

அரபிக்கடல் பகுதியில் கடத்தப்பட்டகப்பலை மீட்க சுற்றி வளைத்தது இந்திய கடற்படை

17 DEC, 2023 | 11:04 AM
image
 

புதுடெல்லி: அரபிக் கடல் பகுதியில் கடத்தப்பட்டு சோமாலியா கொண்டு செல்லப்பட்டமோல்ட்டா  நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது. அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

அரபிக் கடல் பகுதியில் கடந்த வியாழக் கிழமையன்று மோல்ட்டா   நாட்டு சரக்கு கப்பல் ‘எம்.வி.ரூன்’ 18 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலை 6 பேர் கும்பல் கடத்தியதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் அரபிக் கடல் பகுதியில் எம்.வி ரூன் சரக்கு கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலை கடற்படை விமானம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எம்.வி.ரூன் கப்பல் சோமாலியாகடல் பகுதியில் புன்ட்லேண்ட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய கடற்படை கப்பல் தற்போது எம்.வி.ரூன் கப்பலை நேற்று காலை இடைமறித்தது. எம்.வி.ரூன் சரக்கு கப்பலுக்குள் நுழைந்த கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியை இந்திய கடற்படையினர் கூட்டணி நாடுகளின் கடற்படை உதவியுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/171868

  • கருத்துக்கள உறவுகள்

ஒயில் பரல் விலையை ஏற்றுவதுக்கும் விளயாடுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - ஐரோப்பா சரக்கு கப்பல் சேவையில் புதிய சிக்கல் - 'கண்ணீர் வாசலில்' என்ன நடக்கிறது?

இஸ்ரேல், பலத்தீனம், ஹமாஸ், ஏமன், ஹூதி, செங்கடல், வர்த்தகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

19 டிசம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் கப்பல்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, உலகின் பெருநிறுவனங்கள் செங்கடல் வழியாகச் செல்லும் தங்களது அனைத்து கப்பல் போக்குவரத்தையும் நிறுத்துவதாக அறிவித்துவருகின்றன.

சமீபத்திய இந்த அறிவிப்பைச் செய்த பெரிய நிறுவனம், எண்ணெய் நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP).

இதற்குமுன் மேர்ஸ்க் (Maersk) போன்ற உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகத்தில் முக்கியமாக விளங்கும் இந்தப் பாதையில் தங்கள் கப்பல்கள் செல்வதை நிறுத்தின. ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 18), ஹூதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, பிரிட்டன், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, சீஷெல்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றின் பங்கேற்புடன் ஒரு சர்வதேச கடற்படையை அமெரிக்கா அறிவித்தது.

செங்கடலில் கடல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ‘ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியனைத்’ தொடங்குவதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் அறிவித்திருக்கிறார்.

 
இஸ்ரேல், பலத்தீனம், ஹமாஸ், ஏமன், ஹூதி, செங்கடல், வர்த்தகம்
படக்குறிப்பு,

கப்பல்கள் இப்போது தென் ஆப்பிரிக்காவின் ‘கேப் ஆஃப் குட் ஹோப்’-ஐச் சுற்றிகொண்டு ஒரு நீண்ட பாதையில் செல்ல வேண்டும். இதனால் பயணம் சுமார் 10 நாட்கள் நீளும். இதற்கு பல மில்லியன் டாலர்கள் அதிகமாகச் செலவாகும்

உலக வர்த்தகத்தில் மிக முக்கிய பாதை

எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் நுகர்வோர் பொருட்களை கொண்டு செல்வதற்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் செங்கடல் ஒன்றாகும்.

S&P குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் என்ற ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில், ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கிட்டத்தட்ட 15% இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து செங்கடல் வழியாக அனுப்பப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. அதில் 21.5% சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், 13% க்கும் அதிகமானது கச்சா எண்ணெய்.

‘கண்ணீர் வாசல்’ என்றும் அழைக்கப்படும் மந்தப் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களை ஹூதிகள் குறிவைக்கிறார்கள். இதனால், இந்த 32 கி.மீ. அகலமுள்ள நீரிணை கப்பல்கள் செல்வதற்கு ஆபத்தானதாக மாறியுள்ளது.

அரேபிய தீபகற்பத்தில் இருக்கும் ஏமன், மற்றும் ஆப்பிரிக்கக் கடற்கரையில் உள்ள ஜிபூடி மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

இது ஒரு முக்கியமான கடல் வழியான சூயஸ் கால்வாயை தெற்கிலிருந்து கப்பல்கள் அடையும் பாதையாகும்.

 
இஸ்ரேல், பலத்தீனம், ஹமாஸ், ஏமன், ஹூதி, செங்கடல், வர்த்தகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த விவகாரத்தால், அதிக இன்சூரன்ஸ் பிரீமியங்கள் போன்ற சங்கிலித் தொடர் விளைவுகளை தொழில்கள் எதிர்கொள்ளும்

சமீபத்திய தாக்குதல்

உலகின் இரண்டாவது பெரிய கப்பல் நிறுவனமான மேர்ஸ்க், கடந்த வாரம் செங்கடல் வழித்தடத்தில் ஏற்றுமதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதன் ஒரு கப்பல் மற்றும் ஒரு கண்டெய்னர் கப்பல் மீது நடத்தப்பட்ட, ‘மயிரிழையில் தப்பிய’ தாக்குதலுக்குப்பின் நிலைமை ‘ஆபத்தானது’ என்று விவரித்திருந்தது.

அதைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய கப்பல் குழுவான மெடிடரேனியன் ஷிப்பிங் கம்பெனி (எம்.எஸ்.சி) தனது கப்பல்களையும் அந்தப் பகுதியிலிருந்து திருப்பி விடுவதாகக் கூறியது.

திங்கட்கிழமை (டிசம்பர் 18), உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்று, இனி செங்கடல் வழியாக இஸ்ரேலிய சரக்குகளை கொண்டு செல்லாது என்று கூறியது.

பிபிசி பார்த்த ஒரு அறிக்கையில், எவர்கிரீன் லைன் நிறுவனம், ‘கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, உடனடியாக இஸ்ரேலிய சரக்குகளை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக நிறுத்த முடிவுசெய்திருப்பதாக’ அறிவித்திருந்தது. மேலும் அதன் கண்டெய்னர் கப்பல்கள் செங்கடல் வழியாக செல்வதை மறுஅறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தியது.

 
இஸ்ரேல், பலத்தீனம், ஹமாஸ், ஏமன், ஹூதி, செங்கடல், வர்த்தகம்
படக்குறிப்பு,

எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் நுகர்வோர் பொருட்களை கொண்டு செல்வதற்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் செங்கடல் ஒன்றாகும்

இந்தியா - ஐரோப்பா சரக்கு கப்பல் சேவையில் புதிய சிக்கல்

மந்தப் நீரிணையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கப்பல்கள் இப்போது தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றிகொண்டு ஒரு நீண்ட பாதையில் செல்ல வேண்டும். இதனால் பயணம் சுமார் 10 நாட்கள் நீளும். இதற்கு பல மில்லியன் டாலர்கள் அதிகமாகச் செலவாகும்.

"நுகர்வோர் பொருட்கள் தான் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும். இருப்பினும் தற்போதைய இடையூறுகள் சீசன் இல்லாத சமயத்தில் நிகழ்கின்றன," என்று S&P குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் கிறிஸ் ரோஜர்ஸ் கூறினார்.

ஆசியா, மத்திய தரைக்கடல், ஐரோப்பா, அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு இடையே நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் கண்டெய்னர்களும் தென் ஆப்பிரிக்காவைச் சுற்றி திருப்பி விடப்படும் என்று எவர்கிரீன் லைன் தெரிவித்துள்ளது.

சரக்கு விகிதங்களின் தரவுகளை ஆய்வு செய்யும் நிறுவனமான செனெட்டாவின் தலைமை ஆய்வாளர் பீட்டர் சாண்ட், சரக்குகள் தாமதமாக வருவதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க கப்பல் நிறுவனங்கள் இப்போது தொடர்பு கொள்ளும் என்றார். “இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு கண்டிப்பாக விலை கொடுக்க வேண்டும்,” என்றும் கூறினார்.

அதிக இன்சூரன்ஸ் பிரீமியங்கள் போன்ற சங்கிலித் தொடர் விளைவுகளை தொழில்கள் எதிர்கொள்ளும் என்று அவர் கூறினார். ஆனால் 2021-ஆம் ஆண்டில் எவர் கிவன் என்ற பெரும் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியபோது விளைந்த நெருக்கடியைச் சமாளித்ததைவிட கப்பல் நிறுவனங்கள் தற்போது சிறந்த நிலையில் உள்ளன என்று குறிப்பிட்டார்.

 
இஸ்ரேல், பலத்தீனம், ஹமாஸ், ஏமன், ஹூதி, செங்கடல், வர்த்தகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மற்ற பெரிய எண்ணெய் நிறுவனங்களும் BPயைப் போலவே கப்பல்களின் பாதையை மாற்ற முடிவெடுத்தால், எண்ணெய் விலை உயரக்கூடும்

எண்ணெய் விலை உயரும்

சரக்கு மற்றும் போக்குவரத்துக்கான பட்டய நிறுவனத்தைச் சேர்ந்த சூ டெர்பிலோவ்ஸ்கி, எரிபொருள் மற்றும் நேரத்தின் கூடுதல் செலவுகள் ஒருபுறமிருக்க, போர் அபாயங்களின் மீதான காப்பீட்டுச் செலவுகள் ‘அதிவேகமாக’ அதிகரித்து வருவதாகவும், வாடிக்கையாளர்களும் அதிக விலையை எதிர்கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

மற்ற பெரிய எண்ணெய் நிறுவனங்களும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தைப் போலவே கப்பல்களின் பாதையை மாற்ற முடிவெடுத்தால், எண்ணெய் விலை உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எண்ணெய் விலைக்கான சர்வதேச அளவுகோலான ப்ரெண்ட் கச்சா (Brent Crude) எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 78.44 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

"இந்த கட்டத்தில் தாக்கம் எவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று யூரேசியா குழுமத்தின் ஆய்வாளர் கிரிகோரி ப்ரூ கூறினார்.

"பல கப்பல் நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்தை திசை திருப்பினாலும், இடையூறு ஓரிரு வாரங்களுக்கு மேல் நீடித்தால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளது," என்றார் ப்ரூ.

https://www.bbc.com/tamil/articles/cpw3np2eq90o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.