Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

 ஆத்திரக் காறனுக்கு புத்தி மட்டு. 

ஒரே சிந்தனை. 

அட அட..இவ்வளவு நாளும் தெரியாமப்போச்சே... இது சொன்னதுக்கும் ஏதாவது  ஸ்பெசல் அலவன்ஸ்  இருக்கா..😁

  • Replies 148
  • Views 11.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் எனப்படுவோர் தமது பிள்ளைகளை தேடுவது என்ற கோரிக்கையை மட்டும் எழுப்புவதும் அதற்காக மட்டும் போராடுவதுமே  ஶ்ரீலங்கா அரசுக்கு காத்திரமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதை வ

  • பகிடி
    பகிடி

    இலங்கையில் உள்ள பல தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அதீத கற்பனை உண்டு. ஆனால் நடைமுறை உண்மையோ வேறு.இன்னும் பத்து ஆண்டுகளில் புலம் பெயர் தமிழர்களிடம் இருக்கும் குறைந்த பட்ச பலமும் முடிவ

  • வணக்கம், முதலில் இதில் என்ன இருக்கிறது என இந்த இமாலய பிரகடனத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, சமஸ்டி தீர்வின் முதல் படி என இதை கருத முடியும் என விளங்கப்படுத்த முடியுமா? இமாலய பிரகடனத்த

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியல்வாதிகளை விட பிக்குகளை இந்த பேச்சுக்குள் இழுப்பது நல்ல விடயம் . யார் என்ன தீர்வுக்கு வந்தாலும் அதனை இலகுவாக உடைக்க கூடியவர்கள் இந்த பிக்குகள் . இந்தியா என்பது வைகோர் பட்டைடை நாய்க்கு சமம் . எந்த விமோசனமும் தமிழருக்கு இல்லை. வடக்கு கிழக்கு இரண்டையும் இணைத்து குறைந்த பட்சம் தீர்வு திடடத்தை எடுத்து , அதனை வலுப்படுத்தி கொண்டு எமது முற்று முழுதான சமஷ்டி தீர்வுக்கு போக வேண்டும் . 

இந்த வகையில் யாராவது ஒருவர் ஆரம்பித்து வைக்க வேண்டும் . இதன் அடுத்த கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு போய் மாணவர்கள் மற்றும் எல்லா தமிழ் சமூக அமைப்பினருடனும் கலந்தாலோசித்து ஒரு தீர்வினை முதலில் வரையறை செய்யவேண்டும் . அதன் பின்னர் சிங்கள மற்றும் அரசாங்கத்துடன் பேச போக வேண்டும் . தமிழ் மக்கள் இப்போதைக்கு என்ன வேண்டும் என்பதை இறுக்கமாக பேசவேண்டும் . சம்பந்தன் மற்றும் சுமாவை , தவிர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

‘இமாலய துரோகிகள்’ எனத் தெரிவித்து புகைப்படங்கள் மீது முட்டை வீச்சு

image_e3caf7a312.jpg

க. அகரன்

 வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பித்து 2500 ஆவது நாளான திங்கட்கிழமை (25) உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படம் தாங்கிய பதாகையின் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். 

அவர்களுடைய போராட்ட கொட்டகைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும் அவர்கள் இமாலய துரோகிகள் எனவும் தெரிவித்திருந்ததோடு தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் இறைமையும் பாதுகாப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றே உரிய தீர்வு எனவும் தெரிவித்திருந்தனர். 

இதனை அடுத்து அவர்கள் அங்கு மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் புகைப்படம் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி இருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார், 

“நல்லிணக்கம் என்ற கருத்து சிங்கள சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு இணையானதல்ல; மாறாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்” என்றார்.

கடந்த 14 ஆண்டுகளில், இனப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, LLRC, UNHRC தீர்மானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அதிகளவில் பிரபலமடைந்து வருவதை தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், உண்மையில், நடைபெறும் நிகழ்வுகள் நல்லிணக்கக் கொள்கைகளுக்கு முரணானதாகவே தெரிகிறது.

தமிழ் மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும்.

 பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும்.

1. தமிழ் பிள்ளைகளின் இருப்பிடத்தை வெளிப்படுத்துவதும் இந்த அநீதிக்கு காரணமான நபர்களை அம்பலப்படுத்துவதும் நல்லிணக்கத்திற்கான முதல் படியாகும்.

அக்கறையுள்ள தாய்மார்களாக, நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு ஏங்குகிறோம். எங்கள் அன்புக்குரியவர்களை சட்டவிரோதமாக கைப்பற்றுவதற்கு பொறுப்பான நபர்களின் விரிவான பட்டியலை நாங்கள் கோருகிறோம். அவர்களில் சிலர் நாட்டிற்கு வெளியே கடத்தப்பட்டுள்ளனர், மற்றவை இலங்கைக்குள் இருப்பதை நாங்கள் அறிவோம். நீதியை உறுதி செய்வதற்காக, இந்த நபர்கள் பொறுப்புக் கூறுவது கட்டாயமாகும், ஏனெனில் அவர்களின் தண்டனை எதிர்காலத்தில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதைத் தடுக்கும்.

2. நல்லிணக்கத்தை நோக்கிய முதல் படி "மணலாறு" தமிழர்களுக்கு திரும்பக் கொடுப்பதாகும்.

சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குடியேற்றப்பட்ட "மணலாறு" எனப்படும் அவர்களின் நிலத்தை மீட்பதற்கான உரிமையை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். நல்லிணக்கம், வடக்கு கிழக்கு தாயகத்தை துண்டு போடக் கூடாது.

3. 1948ல் ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின், ஒற்றையாட்சியின் கீழ் அபகரிக்கப்பட்ட நிலத்தை, திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

தமிழர்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளும் சிங்களவர்கள் சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டுக்கு முன்னரோ அல்லது அதற்குள்ளோ சிங்கள அரசால் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். மேலும், அனைத்து சிங்களக் குடியேற்றவாசிகளும் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நல்லிணக்கத்தை வளர்க்க முடியும்.

4. தமிழ் இனத்தின் நலனுக்காக வடகிழக்கு தமிழ் பல்கலைக்கழகங்களுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும்.

இந்தப் பல்கலைக்கழகம் வடகிழக்கு தாயகத்தில் குறிப்பாக உள்ளூர் தமிழ் மக்களைப் பூர்த்தி செய்யும் வகையில் கட்டப்பட்டது. இது ஸ்ரீமாவோவால் நடைமுறைப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் கொள்கையின் பிரதிபலிப்பாகும், இது தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதை கடினமாக்கியது. இதனால் பல தமிழ் இளைஞர்கள் தமது சொந்த மண்ணில் உயர்கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ் பல்கலைக்கழகங்களில் கணிசமான எண்ணிக்கையில் சிங்கள மாணவர்கள் உள்ளனர். இது தமிழ் கல்விக்கழகப் பகுதியை சிங்கள மையமாக உருவாக்கும் மற்றொரு முறையாகும்.

5. இனப்படுகொலையாளர்களான இலங்கை ஆயுதப்படையினரால் எமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை நிறுத்துமாறு கோருகின்றோம்.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு, போர் பற்றிய எந்த அறிகுறியும் இல்லை. எனவே, அனைத்து இராணுவ முகாம்களையும் அகற்றிவிட்டு, தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும்.

6. அனைத்து சிங்கள பௌத்த சின்னங்களையும் தெற்கே திரும்பப் பெறுங்கள்

வரலாற்றுத் துல்லியத்தை நிவர்த்தி செய்வதற்கு, வடக்கு கிழக்கில் உள்ள எந்தவொரு பௌத்த சின்னங்களையும் அகற்றுவது முக்கியம், அவை சிங்களத்தின் தொல்பொருள் புனைகதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அனைத்து புத்த சின்னங்களையும் தெற்கே திருப்பி விடுங்கள்.

7. தயவு செய்து வடக்கு கிழக்கு தாயகத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

சிங்களவர்கள் வடக்கு கிழக்கு தாயகத்தில் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிங்கள தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களவர்களினால் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் பயப்படுகிறார்கள் என்பதை சிங்களவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது நடக்கும் போதெல்லாம் சிங்கள தெற்கிலிருந்து மக்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் தாயகத்திற்கு ஓடிவிடுவார்கள். சிங்களக் குடியேற்றங்களிலிருந்து வடக்கு கிழக்குப் தாயகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும். இலங்கையின் தெற்குப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் இறுதியில் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் அல்லது வடக்கு-கிழக்குக்குத் திரும்புவதைத் தேர்வு செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவது முக்கியம்.

8. இந்தத் தீவின் வரலாற்றை சிங்களவர்கள் பொய்யாக்கக் கூடாது.

மகா பாரதத்தின் கூற்றுப்படி, இந்த தீவு 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இந்து மன்னர் ராவணனின் ஆட்சியின் கீழ் இருந்தது. மறுபுறம் சிங்கள மக்களின் வரலாறு 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே, மகா வம்சம் முழுத் தீவையும் பௌத்த தேசமாக மாற்ற வேண்டும் என்று முன்மொழிந்த போது, ஆசிரியர் மஹாநாம மகா தேரர் அதை குறிப்பிட்ட வகையில் பக்கச்சார்பாக மற்றும் இனவாத முறையில் எழுதியதாக வாதிடலாம்.

நாம் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் சிங்களவர்கள் செய்யத் தயாராக இருந்தால், அது ஒரு நேர்மையான நல்லிணக்கமாக கருதப்படும். இல்லையேல், கடந்த 75 வருடங்களின் தொடர் கதையாகும்.

கடந்த 14 வருடங்களாக இலங்கையின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை என்பதை வலியுறுத்துவது முக்கியமானது. , எமது காணிகளை அபகரிக்க தமது அரச திணைக்களத்தின் ஊடாக பொய்யான கதைகளை பிரயோகித்து எம்மை ஏமாற்றுகின்றனர்.

அபகரிக்கப்பட்ட காணிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துதல், எமது இந்து வழிபாட்டுத் தலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்து பௌத்த மதத்துடன் தொடர்புடைய சின்னங்கள் மற்றும் விகாரைகளை நிறுவுதல். இந்த நடவடிக்கைகள் வடக்கை சிங்களமயமாக்கும் அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பு முயற்சிகளாகவே பார்க்க முடியும். 

மேலும் முக்கியமாக, வடக்கு கிழக்கில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு கட்டுப்பாடற்ற நடமாட்டத்தை அனுமதிப்பதன் மூலம் எமது இளைஞர்கள் மற்றும் சிறுமிகளுக்கு போதைப்பொருள் கொடுப்பது. இந்த போதைப் பொருட்கள் கேரளாவில் இருந்து கடல் வழியாக கடத்தப்படுகிறது. டீலர்கள் சிங்களப் பொலிசுக்கும் இராணுவத்திற்கும் கமிஷன் கொடுத்து, அவற்றைத் தங்கள் சொந்த வியாபார நடவடிக்கைகளாக மாற்றுகிறார்கள்.

இந்த மருந்துகள் தெருக்களிலும் கடைகளிலும் விற்கப்படுகின்றன, பெரும்பாலும் மற்ற பொருட்களாக மாறுவேடமிட்டு வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் பள்ளிகளுக்குள்ளும் கூட நடக்கின்றன.

துன்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், நல்லிணக்கம் என்ற கருத்தாக்கத்தில் தமிழர்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்பை உள்ளடக்கியிருப்பது முக்கியமானது. இது அவர்கள் சிங்களவர்களுடன் வாழ விரும்புகின்றார்களா அல்லது தமது சொந்த இறையாண்மையை நிலைநாட்ட விரும்புகின்றார்களா என்பதை தீர்மானிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும். இந்த வாக்கெடுப்பில் வடக்கு கிழக்கில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

image_8db5963019.jpg

https://www.tamilmirror.lk/வன்னி/இமாலய-துரோகிகள்-எனத்-தெரிவித்து-புகைப்படங்கள்-மீது-முட்டை-வீச்சு/72-330387

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் எனப்படுவோர் தமது பிள்ளைகளை தேடுவது என்ற கோரிக்கையை மட்டும் எழுப்புவதும் அதற்காக மட்டும் போராடுவதுமே  ஶ்ரீலங்கா அரசுக்கு காத்திரமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதை விட்டு இந்த சங்கத்தின் சார்பில் அரசியல் தீர்வு பற்றி பேசுவதும் அரசியல் தலைமைகள் விடுக்க வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய அறிக்கைகளை வெளியிடுவதும்  இலங்கை அரசுக்கும் யுத்தக் குற்றவாளிகளுக்கும் சாதகமாகவே அமையவதோடு அவர்களது அடிப்படை கோரிக்கையையே நீர்த்தது போக வைக்கும்  என்ற அரசியல் பாலபாடம் கூட இவர்களுக்கு தெரியவில்லை.  

இதை அவர்களுக்கு எடுத்துரைக்க தாயக/ மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழ் தேசியம் பேசி தமது வாழ்வை வளப்படுத்தி வரும்  எந்த அமைப்புகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு தேவை வாக்கு மற்றும் பதவி அரசியல்.

புலம்பெயர் நாடுகளில் புலிகளை வைத்து அரசியல் செய்து தமது வாழ்வை ஓட்டுபவர்களுக்கு தேவை தமது வியாபாரம், அதற்கு தேவையான மூலதனமான அடிமுட்டாள்க் கூட்டம். இதைச் சுற்றியே தமிழர் அரசியல் இன்று உள்ளது. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

மிக நியாயமான கருத்து. இப்போ மட்டும் இல்லை. முன்பும் இப்படி இலக்குக்கு அப்பாற்பட்ட விடயங்கள் சிலதை இவர்கள் முன்னெடுத்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழன்பன் said:

இலங்கை அரசியல்வாதிகளை விட பிக்குகளை இந்த பேச்சுக்குள் இழுப்பது நல்ல விடயம் . யார் என்ன தீர்வுக்கு வந்தாலும் அதனை இலகுவாக உடைக்க கூடியவர்கள் இந்த பிக்குகள் . இந்தியா என்பது வைகோர் பட்டைடை நாய்க்கு சமம் . எந்த விமோசனமும் தமிழருக்கு இல்லை. வடக்கு கிழக்கு இரண்டையும் இணைத்து குறைந்த பட்சம் தீர்வு திடடத்தை எடுத்து , அதனை வலுப்படுத்தி கொண்டு எமது முற்று முழுதான சமஷ்டி தீர்வுக்கு போக வேண்டும் . 

வணக்கம்,

முதலில் இதில் என்ன இருக்கிறது என இந்த இமாலய பிரகடனத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, சமஸ்டி தீர்வின் முதல் படி என இதை கருத முடியும் என விளங்கப்படுத்த முடியுமா?

இமாலய பிரகடனத்தில் இப்போ இலங்கயில் சட்டத்தில் இல்லாத எதுவும் இல்லை. இருக்கும் இலங்கை சட்டத்தை சரியாக நடைமுறைபடுத்தி, இலங்கையராக அனைவரும் ஒரு புதிய நாட்டை (ஒற்றையாட்சி) நிர்மாணிக்கவே அது அழைக்கிறது.

இங்கே ஒரு விடயம் மிக முக்கியமானது 

இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், தமிழர்கள் இலங்கை நீதி துறையிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை மயிலத்தமடுவும், வெடுக்குநாறியும், கைதடியும், நாவற்குழியும், இன்னும் பலவும் காட்டி நிற்கும் போது - இந்த நிலையை ஒரு நொடியில் மாற்றும் அதிகாரம் இலங்கைக்கு இருந்தும், அரசும், நீதிமன்றும் எதுவும் செய்யாமல் இருக்கும் போது - சும்மா ஒரு பேப்பரில், ஒரு பிரகடனத்தை எழுதி அதை பிக்குகள் ஏற்பதால் என்ன முனேற்றம் வந்து விடப்போகிறது.

யோசிக்கவும் - ஒரு விடயத்தை எந்த எதிர்ப்பும் இன்றி ஒட்டு மொத்த இலங்கை பெளத்த சங்கமும் ஏற்கிறது எனில் - அதில் தமிழருக்கு ஒரு சொட்டு நல்லது கூட இல்லை, சிங்களவர் நலன் ஒரு அங்குலம் கூட விட்டு கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

உதாரணமாக மேலோட்டமாக அதிகாரபரவலாக்கம் என்கிறது பிரகடனம்.

மாநகரசபையின் குப்பை அள்ளும் அதிகாரம் கூட ஒருவகையில் அதிகார பரவல், பகிர்வுதான்.

ஆனால் நாம் கோரும் அதிகாரப்பகிர்வு அதுவா?

இல்லை.

குறைந்தபட்சம் இப்போ இலங்கையின் சட்டத்தில் இருக்கும், காணி, பொலிஸ் அதிகாரம் கொண்ட, இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபை (அல்லது வடகிழக்கு தமிழர் பெரும்பான்மை பிரதேசம் இணைக்கப்பட்ட அலகு).

இதுதான் எமது ஆக குறைந்த அபிலாசை.

இது ஏலவே இலங்கையின் அதி உயர் சட்டமாகிய அரசியல் சட்டத்தில் உள்ளது.

இதை தர எந்த பிக்கு ஒப்புகொண்டுள்ளார்?

பிக்குகளோடு கதைப்பதால் மட்டுமே தீர்வு வராது.

என்ன கதைக்கிறோம்? அவர்கள் எதை தர ஒப்புகொள்கிறார்கள் என்பது முக்கியம்.

லைக்கா சுபாசும் போய் பிக்குக்கள் காலில் உருண்டார் இல்லையா?

சுரேன் காலில் உருளவில்லை - அது மட்டுமே ஒரே வேறுபாடு.

முதலில் அழுத்தம் திருத்தமாக பிக்குகள் வடகிழக்கு தமிழர் பகுதிகள் இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு தரலாம் என்பதில் தமது நிலைப்பாடு என்ன என்பதை சொன்னால் - அதன் பின் பேசுவதால் பயன் உண்டா இல்லையா என தேடலாம்.

இப்போ சட்டத்தில் உள்ள இதை கூட அவர்களால் தரமுடியாது என்றால்…பேசுவதால் தமிழருக்கு ஒரு பயனும் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழன்பன் said:

இந்த வகையில் யாராவது ஒருவர் ஆரம்பித்து வைக்க வேண்டும் .

யாராவது அல்ல. இனத்தின் நலனில் இதயசுத்தியான அக்கறை உள்ளவர்கள்.

அதேபோல் புலத்திலோ, புலம்பெயர் தேசத்திலோ கணிசமான மக்கள் ஆதரவாவது உள்ளவர்கள்.

ஏஜென்டுகள் எம் இனத்தின் பிரதிநிதிகள் அல்ல.

மேலே சொன்ன இரெண்டு தகமைகளில், உலக தமிழர் பேரவைக்கு இரெண்டாவது அறவே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

முதலாவது - இல்லை என்ற சந்தேகம், வர வர வலுக்கிறது.

8 hours ago, தமிழன்பன் said:

சம்பந்தன் மற்றும் சுமாவை , தவிர்க்க வேண்டும்.

1. அவர்களின் proxy யான சுரேனை வைத்து கொண்டு, இவர்களிருவரையும் தவிர்க்க முடியுமா?

2. தாயகத்தில் மிகபெரும் அரசியல் கட்சியின் தலைமைகளான இவர்களை தவிர்க்க கோரும் நீங்கள், எந்த legitimacy அடிப்படையில் சுரேனை எமக்கான பிரதிநிதி என தீர்மானிக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2023 at 13:37, Kapithan said:

அப்படியென்றால், கந்தையரும் அல்வாயனும் குறை கூறிக்கொண்டு இருப்பீர்களே தவிர அதற்கான காரணங்களைச் சொல்லப்  போவதில்லை? 

நீங்களும்  செய்யப்போவதில்லை, யாரவது நன்மை செய்ய முனைந்தால் அவர்களையும் விடப் போவதில்லை. 

இதற்கு தமிழில் அழகான சொல்லடை ஒன்று உண்டு,......

இதை தான் அறியாமை என்று சொல்வது   சிலர் பேசுவது எழுதுவது கதைப்பது  மூலமாக தங்களுடைய அறியாமையை  வெளிப்படுத்தி விடுவார்கள்  ஆனால் வேதனை என்னவென்றால் அது அவர்களுக்கு தெரிவதில்லை புரிவதுமில்லை  

இங்கே சுரேன் சுரேந்திரன். இலங்கையில் எதிர்கட்சிதலைவர சதீஷ்  பிரேமதாச  உடன் பேசியதைப்பார்த்தால்  ...அவர் ஐனதிபதி ஆகும் போது  தமிழர்கள் பிரச்சனையை எப்படி தீர்ப்பேன். என்று  எந்தவொரு உறுதி மொழியையும் குறைந்த பட்ச முன்மொழிவுகளையும். வழங்கவில்லை   இந்த சுரேன் அவரிடம் கோரிக்கைகளை முன் வைக்கவில்லை  ஆனால்  புலம்பெயர் தமிழர்கள் என்று சொல்லக்கூடாது  புலம்பெயர் இலங்கையார். என்று சொல்ல வேண்டும்  என்று  முடிவு செய்து விட்டார்கள்   தமிழன். தன்னை  தமிழன் என்று சொல்வதில்  இவருக்கு என்ன பிரச்சனை???  

தமிழன்  என்று சொல்வதை கைவிட்டால்   தமிழர்கள் பிரச்சனை பற்றி எப்படி பேச முடியும் ??   ஒரு புலம்பெயர் சிங்கள அமைப்பிடம்  இப்படி கோரி இருப்பார்களா??  இல்லை இல்லை இல்லாவே இல்லை    இந்த சுரேன்  1983 ஆனி ஆடி ஆவணி மாதங்களில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு 

[தமிழர்கள் ] நீதி வழங்கமாறு   கேட்டுக்கொண்டாரா ?? குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஏன் கேட்கவில்லை?? 

2009 இல் இலட்சக்கணக்கான இலங்கையார். கொல்லப்பட்டதை  ஏன்  நினைவு ஊட்டவில்லை ??  30 ஆண்டுகளாக கொல்லப்பட்டார்கள் அவர்கள் இலங்கையார் தானா???  இது போன்ற கேள்விகள் கேட்க முடியாத சுரேனுக்கு பேச்சுவார்த்தை செய்ய என்ன தகுதிகளுண்டு??  

புலிகள் போல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்   

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kandiah57 said:

அண்ணை,

யாழ்களத்தில் மிக அரிதாக நான் காணும் ஒரு விடயம் சிந்தனைத் தெளிவு. Clarity of thought. உங்களிடம் அது மிதமிஞ்சியே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உறைப்பன பதிவு....நன்றி..

அதேபோல் புலத்திலோ, புலம்பெயர் தேசத்திலோ கணிசமான மக்கள் ஆதரவாவது உள்ளவர்கள்.

ஏஜென்டுகள் எம் இனத்தின் பிரதிநிதிகள் அல்ல.

மேலே சொன்ன இரெண்டு தகமைகளில், உலக தமிழர் பேரவைக்கு இரெண்டாவது அறவே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இது தெரியாமல் 3 நாளாக கொடி பிடிப்பவர்களை என்னவென்று சொல்வது..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

புலிகள் போல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

இதுதான் தாங்கள் முன்வைக்கும் யோசனையா ? 

🤣

7 hours ago, Kandiah57 said:

1) இதை தான் அறியாமை என்று சொல்வது   சிலர் பேசுவது எழுதுவது கதைப்பது  மூலமாக தங்களுடைய அறியாமையை  வெளிப்படுத்தி விடுவார்கள்  ஆனால் வேதனை என்னவென்றால் அது அவர்களுக்கு தெரிவதில்லை புரிவதுமில்லை  

2) இங்கே சுரேன் சுரேந்திரன். இலங்கையில் எதிர்கட்சிதலைவர சதீஷ்  பிரேமதாச  உடன் பேசியதைப்பார்த்தால்  ...அவர் ஐனதிபதி ஆகும் போது  தமிழர்கள் பிரச்சனையை எப்படி தீர்ப்பேன். என்று  எந்தவொரு உறுதி மொழியையும் குறைந்த பட்ச முன்மொழிவுகளையும். வழங்கவில்லை   இந்த சுரேன் அவரிடம் கோரிக்கைகளை முன் வைக்கவில்லை  ஆனால்  புலம்பெயர் தமிழர்கள் என்று சொல்லக்கூடாது  புலம்பெயர் இலங்கையார். என்று சொல்ல வேண்டும்  என்று  முடிவு செய்து விட்டார்கள்   தமிழன். தன்னை  தமிழன் என்று சொல்வதில்  இவருக்கு என்ன பிரச்சனை???  

தமிழன்  என்று சொல்வதை கைவிட்டால்   தமிழர்கள் பிரச்சனை பற்றி எப்படி பேச முடியும் ??   ஒரு புலம்பெயர் சிங்கள அமைப்பிடம்  இப்படி கோரி இருப்பார்களா??  இல்லை இல்லை இல்லாவே இல்லை    இந்த சுரேன்  1983 ஆனி ஆடி ஆவணி மாதங்களில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு. தமிழர்கள் ] நீதி வழங்கமாறு   கேட்டுக்கொண்டாரா ?? குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஏன் கேட்கவில்லை??  2009 இல் இலட்சக்கணக்கான இலங்கையார். கொல்லப்பட்டதை  ஏன்  நினைவு ஊட்டவில்லை ??  30 ஆண்டுகளாக கொல்லப்பட்டார்கள் அவர்கள் இலங்கையார் தானா???  இது போன்ற கேள்விகள் கேட்க முடியாத சுரேனுக்கு பேச்சுவார்த்தை செய்ய என்ன தகுதிகளுண்டு??  

புலிகள் போல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்   

ஆரம்பத்தில் கேட்ட கேள்விதான். திரும்பவும் நினைவூட்டுகிறேன். 

"சுரேன்  தகுதியானவர் இல்லையென்றால், தாங்கள் யாரை பிரேரிப்பீர்கள? 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, island said:

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் எனப்படுவோர் தமது பிள்ளைகளை தேடுவது என்ற கோரிக்கையை மட்டும் எழுப்புவதும் அதற்காக மட்டும் போராடுவதுமே  ஶ்ரீலங்கா அரசுக்கு காத்திரமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதை விட்டு

1) இந்த சங்கத்தின் சார்பில் அரசியல் தீர்வு பற்றி பேசுவதும் 

1) கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலா அவர்கள் இதை இத்தனை வருடங்கள் தொடர்கிறார்கள்???

பிள்ளைகளைத் தான் கொடுத்து விட்டோம் ஒரு தீர்வையாவது பெற்று விடமுடியாதா என்ற அவர்களது நிலை புரியாமலே தமிழராக உள்ளோமே?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

வணக்கம்,

முதலில் இதில் என்ன இருக்கிறது என இந்த இமாலய பிரகடனத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, சமஸ்டி தீர்வின் முதல் படி என இதை கருத முடியும் என விளங்கப்படுத்த முடியுமா?

இமாலய பிரகடனத்தில் இப்போ இலங்கயில் சட்டத்தில் இல்லாத எதுவும் இல்லை. இருக்கும் இலங்கை சட்டத்தை சரியாக நடைமுறைபடுத்தி, இலங்கையராக அனைவரும் ஒரு புதிய நாட்டை (ஒற்றையாட்சி) நிர்மாணிக்கவே அது அழைக்கிறது.

இங்கே ஒரு விடயம் மிக முக்கியமானது 

இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், தமிழர்கள் இலங்கை நீதி துறையிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை மயிலத்தமடுவும், வெடுக்குநாறியும், கைதடியும், நாவற்குழியும், இன்னும் பலவும் காட்டி நிற்கும் போது - இந்த நிலையை ஒரு நொடியில் மாற்றும் அதிகாரம் இலங்கைக்கு இருந்தும், அரசும், நீதிமன்றும் எதுவும் செய்யாமல் இருக்கும் போது - சும்மா ஒரு பேப்பரில், ஒரு பிரகடனத்தை எழுதி அதை பிக்குகள் ஏற்பதால் என்ன முனேற்றம் வந்து விடப்போகிறது.

யோசிக்கவும் - ஒரு விடயத்தை எந்த எதிர்ப்பும் இன்றி ஒட்டு மொத்த இலங்கை பெளத்த சங்கமும் ஏற்கிறது எனில் - அதில் தமிழருக்கு ஒரு சொட்டு நல்லது கூட இல்லை, சிங்களவர் நலன் ஒரு அங்குலம் கூட விட்டு கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

உதாரணமாக மேலோட்டமாக அதிகாரபரவலாக்கம் என்கிறது பிரகடனம்.

மாநகரசபையின் குப்பை அள்ளும் அதிகாரம் கூட ஒருவகையில் அதிகார பரவல், பகிர்வுதான்.

ஆனால் நாம் கோரும் அதிகாரப்பகிர்வு அதுவா?

இல்லை.

குறைந்தபட்சம் இப்போ இலங்கையின் சட்டத்தில் இருக்கும், காணி, பொலிஸ் அதிகாரம் கொண்ட, இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபை (அல்லது வடகிழக்கு தமிழர் பெரும்பான்மை பிரதேசம் இணைக்கப்பட்ட அலகு).

இதுதான் எமது ஆக குறைந்த அபிலாசை.

இது ஏலவே இலங்கையின் அதி உயர் சட்டமாகிய அரசியல் சட்டத்தில் உள்ளது.

இதை தர எந்த பிக்கு ஒப்புகொண்டுள்ளார்?

பிக்குகளோடு கதைப்பதால் மட்டுமே தீர்வு வராது.

என்ன கதைக்கிறோம்? அவர்கள் எதை தர ஒப்புகொள்கிறார்கள் என்பது முக்கியம்.

லைக்கா சுபாசும் போய் பிக்குக்கள் காலில் உருண்டார் இல்லையா?

சுரேன் காலில் உருளவில்லை - அது மட்டுமே ஒரே வேறுபாடு.

முதலில் அழுத்தம் திருத்தமாக பிக்குகள் வடகிழக்கு தமிழர் பகுதிகள் இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு தரலாம் என்பதில் தமது நிலைப்பாடு என்ன என்பதை சொன்னால் - அதன் பின் பேசுவதால் பயன் உண்டா இல்லையா என தேடலாம்.

இப்போ சட்டத்தில் உள்ள இதை கூட அவர்களால் தரமுடியாது என்றால்…பேசுவதால் தமிழருக்கு ஒரு பயனும் இல்லை.

இவை அனைத்தையும் தாண்டி இடைப்பூசாரிகளை தவிர்த்து சாமியுடன் (பிக்குகளின் முடிவே இலங்கையில் இறுதியானது) பேசத் தொடங்கியிருப்பது சரியான பாதையாகவே தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆரம்பத்தில் கேட்ட கேள்விதான். திரும்பவும் நினைவூட்டுகிறேன். 

"சுரேன்  தகுதியானவர் இல்லையென்றால், தாங்கள் யாரை பிரேரிப்பீர்கள? 

நீங்கள் எப்போதும் கேள்விகள் கேட்கிறீர்கள்   ஆனால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் அளிப்பதில்லை  நீங்கள் யாழ் கருத்து கள உறுப்பினர் அல்லது பத்திரிகை  தொலைக்காட்சி,.....போன்றவற்றிற்கான நிருபரா???  தயவுசெய்து செய்து  எங்களுக்கு பதில் அளிக்கவும் பிழை சரிக்கு அப்பால்   பதில்கள் எமக்கு முக்கியம்   அப்போ தான் கருத்தாட முடியும்   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இதுதான் தாங்கள் முன்வைக்கும் யோசனையா ? 

இல்லை,..ஆனால் குறைந்த பட்ச தீர்வுகள் வைக்க முடியாது,...அதிகூடிய ஒற்றை ஆட்சிகுள்  ஆட்சியை மத்திய அரசு கலைக்க முடியாத  தேர்தல்கள் நடந்த முடியாத  அதிகாரம்கள் மிக்க ஆட்சி  நாங்களே’ எங்கள் தேர்தல்களை நடத்தும் அதிகாரம்  சுருக்கமாகச் சொன்னால்  ஒரு தனி நாடு போல்  ஆனால் இலங்கை என்ற நாட்டுகுள்  ஆட்சி செய்வோம்  

நாங்கள் இப்போது  தந்தை செல்வநாயகம். காலத்தில் வாழவில்லை  இலங்கை தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் வாழ்கிறார்கள்  அந்தந்த நாடுகளில் நாட்டுக்குள் நடக்கும் மாநிலங்கள் ஆட்சி,.மாநிலத்தில் நடக்கும் மாநகராட்சி   மாநகரில்  நடக்கும் நகராட்சி  நகரில் நடக்கும் கிராமங்களின் ஆட்சி   இவற்றை எல்லாம்  கண்டு களிக்கிறோம். மட்டுமல்ல அவற்றின் உறுப்பினர்கள் பதவியில் இருந்து  வெள்ளையர்களை ஆட்சி செய்கிறோம். இந்நிலையில்  அதிகாரம் கொடுந்தால் நாடு பிளவுகள் படடுவிடும்  என்ற நொண்டி சாட்டை. பூச்சாண்டியை  ஒரு சிறுதுளி கூட நம்ப தயாரில்லை மேலும் 

உங்கள் மேலான கவனத்திற்கு  கூடிய பட்ச தீர்வுக்குள்  குறைந்த பட்ச தீர்வுகள் உண்டு”  அதனை தரலாம். ஏற்பதற்க்கு என்றும் தயார்,.....ஆனால்  குறைந்த பட்ச தீர்வுக்குள். கூடிய பட்ச தீர்வுகள் இல்லை   இன்றைய நிலையில்  முற்போக்கான சிங்கள தலைவர்கள்  இது என்ன  ஒரு கிராமசபைக்கு கூட  போதிய தீர்வுகள் இல்லை  கூட கேளுங்கள் என்று கோரலாம் இல்லையா ?? எனவே தான்  குறைந்த பட்ச தீர்வுகள் தர முடியாது கோர முடியாது 🤣😂🤣 

உங்கள் எதிர்பார்ப்புகள் தவறென்று கூற முடியாது. ஆனால் இலங்கையில் எமது மக்கள் தற்போது  இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் எதிர்பார்ப்பு யதார்த்தமானவைய? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலா அவர்கள் இதை இத்தனை வருடங்கள் தொடர்கிறார்கள்??

நான் இலங்கையில் நின்ற போது காணாமல் ஆக்கப்பட்டோரின் சில உறவினர்களின் உறவினர் மற்றும் தெரிந்தவர்கள் எங்களிடம் அவர்கள் இன்னும் தங்களது ஆட்கள், பிள்ளை, கணவர் உயிருடன் இருப்பதாக நம்பி அனுமான சக்தி கொண்ட சாமிமார்களிடம் பணம் எல்லாம் ஏமாறுகிறார்கள், சிலர் யேசுவிடமும் போகிறார்கள் என்று தெரிவித்தனர்.

17 hours ago, island said:

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் எனப்படுவோர் தமது பிள்ளைகளை தேடுவது என்ற கோரிக்கையை மட்டும் எழுப்புவதும் அதற்காக மட்டும் போராடுவதுமே  ஶ்ரீலங்கா அரசுக்கு காத்திரமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதை விட்டு இந்த சங்கத்தின் சார்பில் அரசியல் தீர்வு பற்றி பேசுவதும் அரசியல் தலைமைகள் விடுக்க வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய அறிக்கைகளை வெளியிடுவதும்  இலங்கை அரசுக்கும் யுத்தக் குற்றவாளிகளுக்கும் சாதகமாகவே அமையவதோடு அவர்களது அடிப்படை கோரிக்கையையே நீர்த்தது போக வைக்கும்  என்ற அரசியல் பாலபாடம் கூட இவர்களுக்கு தெரியவில்லை.  

இதை அவர்களுக்கு எடுத்துரைக்க தாயக/ மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழ் தேசியம் பேசி தமது வாழ்வை வளப்படுத்தி வரும்  எந்த அமைப்புகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு தேவை வாக்கு மற்றும் பதவி அரசியல்.

புலம்பெயர் நாடுகளில் புலிகளை வைத்து அரசியல் செய்து தமது வாழ்வை ஓட்டுபவர்களுக்கு தேவை தமது வியாபாரம், அதற்கு தேவையான மூலதனமான அடிமுட்டாள்க் கூட்டம். இதைச் சுற்றியே தமிழர் அரசியல் இன்று உள்ளது

சிறப்பான கருத்தை தெரிவித்தீர்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இப்படி நல்லதை எவரும் சொல்வதில்லை . அவர்களின் துன்பத்தை தங்களது அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்துபவர்கள் தான் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

தாயகத்தில் மிகபெரும் அரசியல் கட்சியின் தலைமைகளான இவர்களை தவிர்க்க கோரும் நீங்கள்,

ச்ம்பந்தர் ,சுமந்திரன் இருவரையும் தவிர்க்க வேண்டும் என்று சொன்னாலே வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் பேராதரவு கிடைக்கும் என்ற காரணமாக இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

உங்கள் எதிர்பார்ப்புகள் தவறென்று கூற முடியாது. ஆனால் இலங்கையில் எமது மக்கள் தற்போது  இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் எதிர்பார்ப்பு யதார்த்தமானவைய? 

அது தெரிந்து தான்  தெளிவாக சொல்லியுள்ளேன்   அவர்கள் விரும்பும் தீர்வு எதனையும் தரலாம். ஆனால் நாங்கள் சொல்லும் தீர்வுகள் எப்போதும் அதி உச்ச அதிகாரம்கள் கொண்டவையாகயிருக்கும் இருக்கவேண்டும்    அவர்கள் குறைத்து அல்லது நாட்டை பிரிந்தும்  தமிழ் ஈழம் தரலாம் ஆனால்  

புலிகள் இல்லை   பலம் இல்லை    தரமாட்டார்கள்  புக்குகள் எதிர்பார்ப்புகள்   சிங்கள மக்கள் விரும்பமாட்டார்கள்   எதிர்கட்சி எதிர்க்கும,..............இப்படியான  காரணிகளுக்காக. நாங்களே’ வழிய. குறைந்த தீர்வுகள் கேட்க முடியாது   இதில் கிடைத்தாலும் கிடைக்கவிட்டாலும் புலிகள் வழி மிக சரியும் உறுதியுமாகும்  

  • கருத்துக்கள உறவுகள்

சுரேன் சுரேந்திரனுக்காக வக்காலத்து வாங்கவில்லை , அவரின் ஆதரவரலாறும் இல்லை. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் . இந்தியாவோ அமெரிக்காவோ ஏன் யாராலும் இலங்கையில் பிக்குகளின் சிங்களவாதத்தை நிறுத்த முடியவில்லை ஏனில் சீனா என்ற பெரிய புத்த நாடு இருப்பதால். இதனை தெளிவாக விளங்கவேண்டும் . தலைவரின் கொள்கை தான் எமக்கான சரியான தீர்வு , சமஷடி யும் அல்ல .

இப்ப இதனை யாரால் பெற்று தர முடியும் அல்லது சாத்தியமா . சும்மா தேசியம் கதைத்து எங்களின் கோமணமும் புடுங்கிற நிலையில் இருக்கிறோம் . எவராவது முதலில் இறங்கி உண்மையான சிங்கள பேரினவாதிகளான பிக்குகளை ஒரு பாதைக்கு கொண்டு வரவேண்டும் . அந்த முயற்சியில் இறங்குவதில் என்ன தப்பை காண்கிறீர்கள் . இதை தான் சொல்வது தானும் படாது தள்ளியும் படாது என்று. 

இப்ப உள்ள எல்லா அரசியல் மற்றும் அமைப்புக்கள் எல்லாமே சும்மா கதைக்க மட்டும் உள்ளார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அரித்து படி படியாக தான் எங்களது குறைந்த பட்சம் சம்ஷடி இணை அடைய முடியும். 

சும்மா வாய்ச்சொல்லில் வீரர்களடி என்ற விதத்தில் இங்கே பதிவினை இடவேண்டாம் . எல்லா யதார்த்தமும் தலைவர் போனவுடன் முடிந்து விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

1) கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலா அவர்கள் இதை இத்தனை வருடங்கள் தொடர்கிறார்கள்???

பிள்ளைகளைத் தான் கொடுத்து விட்டோம் ஒரு தீர்வையாவது பெற்று விடமுடியாதா என்ற அவர்களது நிலை புரியாமலே தமிழராக உள்ளோமே?

இது புரியாமல் இல்லை. ஆனால் சில தந்திரோபாயங்களை வெளிப்படையாக காட்ட கூடாது. அவர்கள் நேரடியாக தீர்வை கோருவது, அல்லது தீர்வுக்கான அரசியலில் தலையிடுவது அவர்கள் கையில் இருக்கு துருப்பு சீட்டின் கனதியை குறைக்கும்.

அவர்கள் காணாமல் போனோருக்கான நியாயத்தை மட்டும் வலியுறுத்தி கொண்டே வந்தால் - அது இயல்பாகவே தீர்வுக்கு உதவும்.

வகிபாகப்பிரிப்பு., அவரவர் அவரவர் வேலையை மட்டும் செய்வது மிக அவசியம்.

5 hours ago, விசுகு said:

இவை அனைத்தையும் தாண்டி இடைப்பூசாரிகளை தவிர்த்து சாமியுடன் (பிக்குகளின் முடிவே இலங்கையில் இறுதியானது) பேசத் தொடங்கியிருப்பது சரியான பாதையாகவே தெரிகிறது. 

சிங்கள அரசியல்வாதிகள் இடைபூசாரிகள் அல்ல.

அவர்கள் பிக்குகளின் கையில் இருக்கும், கருவிகள், ஒலிவாங்கிகள், ஒலிபெருக்கிகள்.

முன்னர் பிக்குகளுடன் இந்த கருவிகள் மூலம் உரையாடினோம். இப்போ நேரடியாக உரையாடுகிறோம்.

ஆனால் உரையாடலின் தன்மையில், போக்கில் ஒரு சின்ன மாற்றமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழன்பன் said:

இந்தியாவோ அமெரிக்காவோ ஏன் யாராலும் இலங்கையில் பிக்குகளின் சிங்களவாதத்தை நிறுத்த முடியவில்லை ஏனில் சீனா என்ற பெரிய புத்த நாடு இருப்பதால். இதனை தெளிவாக விளங்கவேண்டும் .

இல்லை மிக பிழையான புரிதல். சீனா ஒரு பெளத்த நாடே அல்ல. அதன் அரசியலில் பெளத்தத்துக்கு எந்த இடமும் இல்லை. இலங்கயில் மட்டும் அல்ல சீனாவினுள் கூட சீன அரசு பெளத்தத்தை முன்நிறுத்துவது இல்லை.

மாறாக, இஸ்லாம், கிறீஸ்தவம், பலுங் கொங், போல பெளத்தம் மீதும் சீன அரச கட்டமைப்பே கொஞ்சம் சந்தேகத்துடந்தான் இருக்கிறது.

சீனாவில் CCP தன் அதிகாரத்துக்கு சவாலான ஒரு கட்டமைப்பாக பெளத்த மதத்தை கண்காணிக்கிறது என்பதே யதார்த்தம்.

பெளத்தம் காரணமாக பர்மா, தாய்லாந்து இலங்கையை நெருங்கி வரும் அளவு கூட சீனா பெளத்தத்தை தன் இலங்கை, சர்வதேச உறவுகளில் முன் நிறுத்துவதில்லை.

அதேபோல், 2000 வரை இலங்கயில் மட்டும் அல்ல, தெற்காசியாவிலே சீனாவின் பிரசன்னம் சொல்லும்படி இருக்கவில்லை. ஆனால் அப்போதும் கூட மேற்கும், இந்தியாவும் இலங்கை சார்பு நிலையையே எடுத்தன.

இப்போ சீனாவுக்கு இலங்கையில் ஒரு மறுக்க முடியாத வகிபாகம் உண்டு, ஆனால் இது பெளத்தத்துடன் சம்பந்த பட்டதே இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழன்பன் said:

இப்ப இதனை யாரால் பெற்று தர முடியும் அல்லது சாத்தியமா . சும்மா தேசியம் கதைத்து எங்களின் கோமணமும் புடுங்கிற நிலையில் இருக்கிறோம் . எவராவது முதலில் இறங்கி உண்மையான சிங்கள பேரினவாதிகளான பிக்குகளை ஒரு பாதைக்கு கொண்டு வரவேண்டும் . அந்த முயற்சியில் இறங்குவதில் என்ன தப்பை காண்கிறீர்கள் . இதை தான் சொல்வது தானும் படாது தள்ளியும் படாது என்று. 

இது தானும் படான் தள்ளியும் படான் மனநிலை அல்ல.

மாறாக இன்னும் ஒரு பேய்காட்டலுக்கு முன்கூடியே ஊதும் அபாய அறிவிப்பு.

பேரினவாதிகளை தமிழர் தரப்பு தனியாக கையாள்கிறதா? 

அது முடியுமானதா?

இல்லை ரோ இதை ஒருங்கிணைக்கிறதா?

மேற்கில் சுரேனின் அமைப்பு  இருந்தாலும் இதில் மேற்கு அரசுகளின் பங்கு இருப்பதாக தெரியவில்லை.

இது மிக தெளிவாக இந்திய நிகழ்சி நிரலில் நடக்கிறது.

அது கூட ஓக்கே. முயற்சித்து பார்க்கலாம்.

ஆனால், இரெண்டு வருடம் சுரேன் பிக்குகளுடன் பேசிய பின்னும், ஏலவே இந்தியா 1987 இல் கொடுத்த தீர்வை கூட இமாலய பிரகடனத்தில் சேர்க்க முடியவில்லை.

இப்போ இருக்கும் நிலை, status quo வைத்தான் பிக்குகள் தருகிறார்கள் எனும் போது, அவர்களிடம் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன?

பேசுவதால் ஒரு நன்மையும் இல்லை. ஆனால் காலம் கடத்தப்படும், இன்னொரு “தீபாவளிக்குள் தீர்வு” நாடகம் அரங்கேறும். இதனால் தீமை விளையும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழன்பன் said:

இப்ப உள்ள எல்லா அரசியல் மற்றும் அமைப்புக்கள் எல்லாமே சும்மா கதைக்க மட்டும் உள்ளார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அரித்து படி படியாக தான் எங்களது குறைந்த பட்சம் சம்ஷடி இணை அடைய முடியும். 

நமக்கு முதலில் தேவை நம் தரப்பை சீர்படுத்துவது, ஒருங்கிணைப்பது, ஒற்றுமையாக முன் நகர்வது.

எல்லாரும் வாய்சொல்லில் வீரர் என்பதால் - எஜெண்டுகளை தலைவர்களாக ஏற்க முடியாது.

பெண்ணுக்கு நல்ல மாப்புள்ளை கிடைக்கவில்லை ஆகவே பிணத்துக்கு கட்டி வைத்தேன் என்பதை போல இருக்கிறது இந்த லொஜிக்.

எமக்கான தீர்வு - சிங்களத்தை ஆயுத அல்லது மேற்கத்தைய அரசுகளின் ஈடுபாட்டுடன் அரசியல் ரீதியில் அழுத்துவதன் மூலம் மட்டுமே அடையப்படக்கூடும். ஒரு போதும் நாம் நேரடியாக சிங்களதுடன் பேசியோ, அல்லது தனியே இந்திய அனுசரணையிலோ இது நடவாது.

பாலா அண்ணை, தலைவர், அமிர், செல்வா, பொன்னர், இராமநாதன் - அத்தனை பேர் காலத்திலும் இதுதான் கள யதார்த்தம்.

இந்த இமாலய பிரகடனம் இன்னொரு முறை இந்தியாவை இலங்கயில் முன்னிலை படுத்த, பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கையை மீட்க, இலங்கை, இந்தியா சேர்ந்து ஆடும் நாடகம்.

இதில் தமிழரும் நாமம் 100% உத்தரவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இது தானும் படான் தள்ளியும் படான் மனநிலை அல்ல.

மாறாக இன்னும் ஒரு பேய்காட்டலுக்கு முன்கூடியே ஊதும் அபாய அறிவிப்பு.

பேரினவாதிகளை தமிழர் தரப்பு தனியாக கையாள்கிறதா? 

அது முடியுமானதா?

இல்லை ரோ இதை ஒருங்கிணைக்கிறதா?

மேற்கில் சுரேனின் அமைப்பு  இருந்தாலும் இதில் மேற்கு அரசுகளின் பங்கு இருப்பதாக தெரியவில்லை.

இது மிக தெளிவாக இந்திய நிகழ்சி நிரலில் நடக்கிறது.

அது கூட ஓக்கே. முயற்சித்து பார்க்கலாம்.

ஆனால், இரெண்டு வருடம் சுரேன் பிக்குகளுடன் பேசிய பின்னும், ஏலவே இந்தியா 1987 இல் கொடுத்த தீர்வை கூட இமாலய பிரகடனத்தில் சேர்க்க முடியவில்லை.

இப்போ இருக்கும் நிலை, status quo வைத்தான் பிக்குகள் தருகிறார்கள் எனும் போது, அவர்களிடம் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன?

பேசுவதால் ஒரு நன்மையும் இல்லை. ஆனால் காலம் கடத்தப்படும், இன்னொரு “தீபாவளிக்குள் தீர்வு” நாடகம் அரங்கேறும். இதனால் தீமை விளையும்.

பெரிதாக ஒன்றையும் தரமாட்டார்கள் தான், ஆனால் தமிழர் விடயத்தில் பிக்குகள் இப்பவுமே மிதவாத போக்கில் இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டி , அரசாங்கத்தை நெருக்கவேண்டும் அதாவது தமிழர் உரிமைக்கும் சிங்கள இனவாதத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை உலகிற்கு வெளிக்கொணரலாம் .

உண்மையை சொல்லப்போனால் சரியான ராஜதந்திரம் என்பது எம்மிடம் இல்லை. இந்தியா கொண்டு வந்த 13 இணை கூட சிங்களம் மறுக்கின்றது. நாமும் இன்னொரு வழியில் இந்தியாவை இதுக்குள் கொண்டு வரவேண்டும் . சுரேனுக்கு அந்த திறமை இருக்குமா தெரியவில்லை . முயலலாமே 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழன்பன் said:

பெரிதாக ஒன்றையும் தரமாட்டார்கள் தான், ஆனால் தமிழர் விடயத்தில் பிக்குகள் இப்பவுமே மிதவாத போக்கில் இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டி , அரசாங்கத்தை நெருக்கவேண்டும் அதாவது தமிழர் உரிமைக்கும் சிங்கள இனவாதத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை உலகிற்கு வெளிக்கொணரலாம் .

உண்மையை சொல்லப்போனால் சரியான ராஜதந்திரம் என்பது எம்மிடம் இல்லை. இந்தியா கொண்டு வந்த 13 இணை கூட சிங்களம் மறுக்கின்றது. நாமும் இன்னொரு வழியில் இந்தியாவை இதுக்குள் கொண்டு வரவேண்டும் . சுரேனுக்கு அந்த திறமை இருக்குமா தெரியவில்லை . முயலலாமே 

இமாலய பிரகடனம் “13ஐ முழுமையாக அமல்படுத்துவோம்” என கூறி இருந்தால் நீங்கள் மேலே சொன்னது சரி.

ஆனால் தமிழர்களோடு கதைத்து விட்டார்கள் - கதைத்ததே பெரிய முன்னேற்றம் - ஆகா பார்த்தீர்களா பிக்குகள் மிதவாதிகள் ஆகி விட்டார்கள் என நாம் சொன்னால், அதை யாரும் நம்பபோவதில்லை. இலங்கை தமிழருக்கு நியாயமான தீர்வை தராது - என்பதற்கு எதுவுமே இல்லாத இமாலய பிரகடனமே அண்மைய சாட்சி.

பிக்குகளுடன் 2 வருடம் பேசினேன் - அவர்கள் 87இல் தருவதாக சொன்னதை கூட தரவில்லை. 

உண்மையில் சுரேன் இதைத்தான் வெளி நாடுகளுக்கு சொல்ல வேண்டும்.

9 minutes ago, தமிழன்பன் said:

சுரேனுக்கு அந்த திறமை இருக்குமா தெரியவில்லை . முயலலாமே 

நேரடியாக பிக்குகளுடன் பேசி எமக்கு ஒரு நியாயமான தீர்வை எடுக்கும் திறமை….

சுரேனுக்கு அல்ல….தலைவருக்கே இருந்ததில்லை.

ஏன் என்றால்….பிக்குகள் டிசைன் அப்படி.

அதனால்தான் தலைவர் பலமாக இருந்த போது கூட இதை முயலவில்லை.

முயற்சி திருவினையாக்கும் என்பதால்….வீட்டு முற்றத்தில் நிண்டு எம்பி, எம்பி குதித்தால் ஒருநாள் பறக்க ஆரம்பித்து விடுவோம் என வீணாக முயலக்கூடாது.

ஒரு முயற்சி எடுக்கும் போது அதில் ஒரு realistic prospect of success இருக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.