Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்”

தமிழ் அரசியல் கட்சிகளின் இணப்பாட்டுடன் அழைப்பு விடுக்கப்படுமாயின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக பொது வேட்பாளரை நிறுத்துவது மிக சிறந்தது.

அப்படியான தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றால், தானே அதற்கு பொருத்தமானவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற பெரிய ஆசை தனக்கு இருக்கவில்லை எனவும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறும் வாய்ப்பு குறைவாக இருப்பதால், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் கூடுதலான நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.samakalam.com/அழைப்பு-விடுத்தால்-ஜனாத/

  • கருத்துக்கள உறவுகள்

@Kavi arunasalam ஐயா யாழுக்கு மீண்டு, இந்த செய்திக்கு ஒரு கார்டூன் போட வேண்டும்🙏.

#80 பதிலும் ஆசை வரும்🤣
 
பிகு

நான் நினைக்கிறேன் AKD வரவை தடுக்க “பழைய காவலர்” (old guard) ஒன்றாக இணைகிறது என. 

ஆனால் தமிழ் பொது வேட்பாளர் இறங்கினால், அது AKD க்கு சாதகமாகவே முடியும்?

வழமையாக பொது தமிழ் வேட்பாளரை நான் ஆதரிப்பதில்லை. 

ஆனால்,

1. இமாலய பேய்க்காட்டல்

2. போலிகா

என இருவேறு பட்ட முனைகளில், டெல்லி பிலிம் இன்ஸ்டிடூட் இல் படித்த ஒரே இயக்குனர் இயக்கும் நாடகங்களை பிசுபிசுக்க பண்ண, AKD ஐ வெல்லவைக்க இது உதவும் எனில் அணுகலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சா நெஞ்சன், உழவர் மகன் சுமந்திரன் அவர்கள் ஜனாதிபதி போட்டிக்கு தகுதியானவர்.🌟

பழசை எடுங்க புதிசை போடுங்க.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

அஞ்சா நெஞ்சன், உழவர் மகன் சுமந்திரன் அவர்கள் ஜனாதிபதி போட்டிக்கு தகுதியானவர்.🌟

பழசை எடுங்க புதிசை போடுங்க.....🤣

ஆமா..நானும் வரவேற்கின்றேன்....கனடாவில் காசு திரட்ட ரெடி...அள்ளித்தாருங்கள்....தளபதியின் வெற்றி..நம் இனத்தின்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, alvayan said:

கனடாவில் காசு திரட்ட ரெடி...அள்ளித்தாருங்கள்....தளபதியின் வெற்றி..நம் இனத்தின்........

இன்னும் எதிர் பார்க்கின்றேன்.....😂
laughing-ilavarasu.gif
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:
 
இன்னும் எதிர் பார்க்கின்றேன்.....😂
laughing-ilavarasu.gif

முதலில் உண்டியல் செய்து தமிழ்கடைவழிய..வைக்க ரெடியாகிறேன்...அது சரி ரணிலிடம் எப்ப எலக்ஸ்சன் என்று கேட்டுச் சொல்லுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

முதலில் உண்டியல் செய்து தமிழ்கடைவழிய..வைக்க ரெடியாகிறேன்...அது சரி ரணிலிடம் எப்ப எலக்ஸ்சன் என்று கேட்டுச் சொல்லுங்கோ...

சரி நீங்க உண்டியலை வையுங்க.

நான் அதில ஓட்டையை போட்டுக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

தமிழ் அரசியல் கட்சிகளின் இணப்பாட்டுடன் அழைப்பு விடுக்கப்படுமாயின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்குத் தொண்டாற்றுவதற்கான வேணவாவை ஐயா நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

”அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்”

தமிழ் அரசியல் கட்சிகளின் இணப்பாட்டுடன் அழைப்பு விடுக்கப்படுமாயின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக பொது வேட்பாளரை நிறுத்துவது மிக சிறந்தது.

அப்படியான தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றால், தானே அதற்கு பொருத்தமானவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற பெரிய ஆசை தனக்கு இருக்கவில்லை எனவும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறும் வாய்ப்பு குறைவாக இருப்பதால், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் கூடுதலான நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.samakalam.com/அழைப்பு-விடுத்தால்-ஜனாத/

ஐயா "போதும் உங்கள் யாளமே"  செய்தது போதும் 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர்?

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2023 at 15:05, goshan_che said:

இந்த செய்திக்கு ஒரு கார்டூன் போட வேண்டும்

IMG-5289.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kavi arunasalam said:

IMG-5289.jpg

கண்டது சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்

ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டும் செயலை செய்து வருகின்றனர்!

ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டும் செயலை செய்து வருகின்றனர்!

ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டும் செயற்பாட்டையே தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் செய்து வருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தை பொறுத்த அளவுக்கு உங்களுக்கு தெரியும் நாட்டினுடைய ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது அரசாங்கமோ தற்போது இருக்கின்ற பொருளாதார பிரச்சினையை சீர்படுத்திக் கொண்டு இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை எழுச்சி பாதைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக வேலைத்திட்டங்களை தான் தற்பொழுது முன்னெடுத்து கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லா கட்சிகளும் மத்தியிலும் அவர் ஜனாதிபதி வேட்பாளர் இவர் ஜனாதிபதி வேட்பாளர் சிலர் நான்தான் ஜனாதிபதி வேட்பாளராக வரப் போகின்றேன் நான் தான் கேட்கப் போகின்றேன் என்று பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது எது எவ்வாறாக இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருக்கின்றது பாராளுமன்ற தேர்தலுக்கும் இன்னமும் காலங்கள் இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் காண காலங்கள் இருப்பதினால் அதற்கு கிட்டத்தட்ட 10 மாதங்கள் இருக்கின்றது ஆகவே அது தொடர்பாக அரசாங்க தரப்பில் எது விதமான தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதனை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

உண்மையில் ஒரு தமிழ் வேட்பாளரை நாம் நியமித்து இந்த நாடு உங்களுக்கு தெரியும் காலகாலமாக இனவாத போக்கோடு செயல்படுகின்ற ஒரு நாடு நிச்சயமாக இந்த நாட்டில் தமிழ் வேட்பாளரை நிறுத்தி நாம் எதை சாதிக்க முடியும் எமது மக்கள் சார்பாக.
எமது தமிழ் மக்கள் சார்பாக ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி நாங்கள் ஜனாதிபதியாக அவரை கொண்டு வர முடியுமா என்பதனை சிந்திக்க வேண்டும் இது முதலாவது விடயம்.

இரண்டாவது இப்போது உங்களுக்கு தெரியும் சில நேரங்களில் எமது தமிழ் தரப்புகள் விடுகின்ற பிழைகள் என்ன என்றால் யார் ஒரு ஜனாதிபதியின் தேர்தலில் தோற்பாரோ அவருக்கு ஆதரிப்பை வழங்குவது தோற்பார் எனத் தெரியும் சாதாரண மக்களுக்கு விளங்கும் இவர் வெல்லுவார் இவர் தோற்பார் என்று தெரிந்தும் சில பேருக்கு சென்று அதாவது ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டுவது போன்று அவ்வாறானவர்களுக்கு ஆதரவினை வழங்கி கடைசியில் வெற்றி பெறும் ஜனாதிபதியுடன் பேசி எதையும் செய்து கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு செல்வது வழமை.

ஆனால் தமிழ் தரப்புகள் பல்வேறுபட்ட கட்சிகள் இருந்தாலும் பல கொள்கை கோட்பாடுகளோடு பயணித்தாலும் இந்த நாட்டில் எப்படி பார்த்தாலும் சிங்கள மக்களை மையப்படுத்திய ஒருவர்தான் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் தான் ஜனாதிபதியாக வர போகின்றார் ஆகவே இந்த நேரத்தில் தான் தமிழ் தலைமைகள் மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டும்.

ஜனாதிபதியாக வர சாத்தியமாக உள்ள ஒருவரோடு நாங்கள் பேச வேண்டும் ஒருமித்த குரலிலே எல்லோரும் பேசி எமது மக்களுக்கு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளாக இருக்கலாம் அபிவிருத்தி சார்ந்த விடயங்களாக இருக்கலாம் உடனடியாக ஆற்ற வேண்டிய விடயங்களாக இருக்கலாம் நீண்ட காலத்தில் செய்து முடிக்க வேண்டிய விடயங்களாக இருக்கலாம் ஒவ்வாறாக இருந்தாலும் இது தொடர்பாக நாங்கள் தீர்க்கமாக கலந்த ஆலோசித்து அதில் ஒரு இணக்கப்பாட்டை எட்டி அதன் பிற்பாடு நாங்கள் அவருக்கு ஆதரவு வழங்கி எங்களது மக்கள் நிழல் சார்ந்த விடயங்களை நாங்கள் செய்து சாதித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

https://tamil.adaderana.lk/news.php?nid=182127

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.