Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 DEC, 2023 | 06:45 PM
image

(நா.தனுஜா)

எமது அரசியல் முற்றிலும் மாறுபட்டதாகும். இன்றளவிலே ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது, அந்த அரச இயந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும்.

மாறாக இந்த ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் எதிர்க்கின்றோம் என்பதை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமே காண்பிக்கமுடியும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் மும்மொழிகளிலும் தேர்ச்சியுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் களமிறங்கினால், தான் அவரை ஆதரிப்பதற்குத் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என வலியுறுத்துவதனால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என வலியுறுத்துவதால் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியதைப்போன்ற எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடுமல்லவா எனவும், 2005 ஆம் ஆண்டு தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்தமை அவர்களுக்குப் பாதிப்பாக அமைந்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் பற்றியும் வினவியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,

2005 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் மாத்திரமன்றி, கூட்டமைப்பினரும் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு தமிழ்மக்களை வலியுறுத்தினார்கள்.

இருப்பினும் அப்போது அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்க மிகவும் நல்லவர் எனவும், தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தமையினாலேயே மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார் எனவும் கருத்தக்களை வெளியிட்டனர்.

ஆனால் உண்மையில் யுத்தம் முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வளவு மோசமாக செயற்படுகின்றார் என்று பாருங்கள்.

ஏற்கனவே ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன) எழுச்சியின்போது ரணில் விக்ரமசிங்க எவ்வாறு நடந்துகொண்டார் என்பதும், அதற்கு சிறந்த உதாரணமான 'பட்டலந்த முகாம்' பற்றிய கதைகளும் அனைவருக்கும் தெரியும்.

எனினும் இப்போது அவர் எவ்வாவு மோசமானவர் என்பது மிகத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

ஆகவே 2005 இல் தமிழர்கள் தேர்தலை பகிஷ்கரித்திருக்காவிடின் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றிருந்தாலும், அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின்கீழ் இடம்பெற்றதைப்போன்ற மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும்.

ஆனால் அது இப்போது சர்வதேச ரீதியிலும், மேற்குலகநாடுகள் மத்தியிலும் பரவலாகப் பேசப்படுவதைப்போன்று பேசப்பட்டிருக்காது. மேற்குலகம் ரணிலுக்கு ஆதரவாகவே செயற்பட்டிருக்கும். எனவே சமகால கள நிலைவரங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் 2005 இல் தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததில் எந்தவொரு பிழையும் இல்லை.

இன்றளவிலே தமிழ்மக்கள் சார்ந்த விவகாரங்கள் கணக்கிலெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. அதற்கு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் காரணமாக அமைந்திருக்கின்றன.

எனவே நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தனியொரு தேர்தலாகவன்றி, எதிர்காலத்தேர்தல்களை எவ்வாறு அணுகவேண்டும் என்ற ரீதியிலேயே பார்க்கின்றோம்.

இந்தத் தேர்தலில் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கிப் போட்டியிடுவதால், அவர் வெல்லப்போவதோ அல்லது தமிழ்மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் கிட்டப்போவதோ இல்லை.

எனவே தமிழர் தரப்பில் எவ்வித இழப்புக்களுமின்றி, அதேவேளை மிகவும் வலுவான செய்தியை பெரும்பான்மையின மக்களுக்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கூறுவதற்கான மிகச்சிறந்த சந்தர்ப்பமாகவே இந்த ஜனாதிபதித் தேர்தலைக் கருதுகின்றோம்.

அவ்வாறிருக்கையில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டும் என்று கூறுவதெல்லாம், அவர்களுக்கு விருப்பமான ஏதோவோரு தரப்பை (சிங்கள வேட்பாளரை) ஆதரிப்பதற்காக மாத்திரமேயாகும் என்றார்.

 அவ்வாறெனில் 'சி.வி.விக்கினேஸ்வரன் கூறுவதுபோல் நீங்கள் பொதுவேட்பாளராகக் களமிறங்குவதற்கு முன்வரலாமல்லவா? அதனூடாக நீங்கள் கூறவதைப்போன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்தலாம் அல்லவா?' என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

'எமது அரசியல் முற்றிலும் மாறுபட்டதாகும். இன்றளவிலே ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது, அந்த அரச இயந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும்.

மாறாக இந்த ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் எதிர்க்கின்றோம் என்பதை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமே காண்பிக்கமுடியும்.

ஆகவே தமிழ்மக்கள் பழைய கதைகளை நம்பி மீண்டும் மீண்டும் ஏமாறாமல், இவ்விடயத்தில் நன்கு சிந்தித்து தீர்மானமொன்றை மேற்கொள்ளவேண்டும்' என்று வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/172772

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2023 at 10:14, ஏராளன் said:

இவருக்கு இப்போதுதான் தெரியுமோ? அப்படி என்றால் இவர் எப்படி அந்த அரச எந்திரத்தில் போட்டிபோட்டு பாராளமன்ற உறுப்பினராகினார்? எப்படி மாகாண சபை தேர்தலில்  போட்டிபோடடார்? இனி வரும் தேர்தல் எல்லாவற்றையும் இவர் பகிஷ்கரிக்க போகின்றாரா? ஐயோ ஐயோ.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Cruso said:

இவருக்கு இப்போதுதான் தெரியுமோ? அப்படி என்றால் இவர் எப்படி அந்த அரச எந்திரத்தில் போட்டிபோட்டு பாராளமன்ற உறுப்பினராகினார்? எப்படி மாகாண சபை தேர்தலில்  போட்டிபோடடார்? இனி வரும் தேர்தல் எல்லாவற்றையும் இவர் பகிஷ்கரிக்க போகின்றாரா? ஐயோ ஐயோ.

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறிந்து எதிர்ப்பை காட்டலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நியாயம் said:

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறிந்து எதிர்ப்பை காட்டலாம். 

அது நடக்காது பாருங்கோ. ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி. 

  • கருத்துக்கள உறவுகள்

இவரது தந்தை மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுதினம் ஜனவரி ஐந்து என ஒரு தகவல் பார்த்தேன்.  தந்தை தற்போது உயிருடன் என்றால் அவர் எப்படியான நிலைப்பாட்டை எடுப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

இவரது தந்தை மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுதினம் ஜனவரி ஐந்து என ஒரு தகவல் பார்த்தேன்.  தந்தை தற்போது உயிருடன் என்றால் அவர் எப்படியான நிலைப்பாட்டை எடுப்பாரோ?

IMG-5353.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

IMG-5353.jpg

1982 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை பகிஷகரிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி மக்களிடம் கோரிக்கை விட,  அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திரு குமார் பொன்னம்பலம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து,  அதை உறுதிப்படுத்த தனக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார். 

ஆனால் உண்மையில் மக்கள் அந்த இரு கோரிக்கைகளையும் நிராகரித்ததே வரலாறு.  

வட கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் அம்பாறை மாவட்டத்தை தவிர்தது விட்டு பார்ததால் கூட முக்கிய இரண்டு தேசியக்கட்சிகளும் சேர்ந்து 325000 வாக்குகளை பெற, குமார் பொன்னம்பலம் வெறும் 155000 வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த ஜதார்த்தத்தை,   தமிழ்மக்களின் மனவோட்டத்தை எமது விடுதலைப்போராட்டத்தை நடத்திய எவரும்  கவனத்தில் கொள்ளவில்லை. 

சுதந்திரத்திற்கு பின்னர் தேர்தல் பகிஷகரிப்பு என்றுமே தமிழர் பகுதிகளில் வெற்றி பெறவில்லை. புலிகளில் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது அல்லது ஆயுத முனையில் மட்டுமே அது சாத்தியமானது என்பதே உண்மை வரலாறு.  அதை உலகம் கருத்தில் எடுக்காது.  

 1999 ல் சந்திரிக்கா மீது பாரிய குற்றச்சாட்டுகளை தமிழ் சமூகம் சார்பாக உலக அளவில் பரப்புரை செய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கூட யாழ்பபாண மாவட்டதில் மட்டும் அவர் 52000 திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார்.

ஜனதிபதி தேர்தலில்  மூலம் அரசியல் தீர்வு திட்டத்தை எப்படியும் பெற முடியாது. ஆகவே இதனை உபயோகித்து சமயோசத்துடன் தமிழ் மக்களின்  கல்வி  சமூக பொருளாதார பலப்படுத்தலை செய்ய முடிந்தால் அதை தமிழ்கட்சிகள் செய்வது நல்லது. அவர்களிடம் அதற்கான வலு மட்டுமே தற்போது உள்ளது என்பது எனது அபிப்பிராயம்.    

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2024 at 01:35, Cruso said:

இவருக்கு இப்போதுதான் தெரியுமோ? அப்படி என்றால் இவர் எப்படி அந்த அரச எந்திரத்தில் போட்டிபோட்டு பாராளமன்ற உறுப்பினராகினார்? எப்படி மாகாண சபை தேர்தலில்  போட்டிபோடடார்? இனி வரும் தேர்தல் எல்லாவற்றையும் இவர் பகிஷ்கரிக்க போகின்றாரா? ஐயோ ஐயோ.

பாராளுமன்ற உறுப்பினர்களாக வெல்லக்கூடிய. வாய்ப்புகள் இருந்தது போட்டி இட்டார். மாகாண சபையும். அவ்வறே,. ஆனால் ஐனதிபதியாக முடியாது  முடியாவே முடியாது ...எனவே போட்டி இடாமையால். பிரச்சனையில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

IMG-5353.jpg

கேலிச்சித்திரத்திற்கு நன்றி கலைஞர் கவி அருணாசலம்.  

தந்தையார் சுட்டு கொல்லப்பட்ட சமயம் நானும் கொழும்பில் தான் வசித்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் தவிப்பதற்கான முழு உரிமையும் திரு கஜேந்திரகுமாருக்கு உள்ளது. மக்களை பகிஷகரிக்குமாறு கோரிக்கை விடும் உரிமையும் அவருக்கு உள்ளது.

அதே வேளை இவ்வாறானவர்களின் கோரிக்கைகளை  புறக்கணித்து வழமைபோல் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் மக்களுக்கு உள்ளது.  எனது கணிப்பில் இரண்டாவது தான் நடைபெறும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் அவர் அந்த பகிஷ்கரிப்புக்கு சொல்லும் காரணம்தான் வேடிக்கையாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ யாருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்?
ஏன்  வாக்களிக்க  வேண்டும்?
அரசுடன் ஒரு டீலை எழுத்து மூலம் பெற்று அதனை செய்விக்க கூடிய யாராவது எம்முடம் உள்ளார்களா?  
 
  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2024 at 10:01, island said:

 குமார் பொன்னம்பலம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து,  அதை உறுதிப்படுத்த தனக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.   

வட கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் அம்பாறை மாவட்டத்தை தவிர்தது விட்டு பார்ததால் கூட முக்கிய இரண்டு தேசியக்கட்சிகளும் சேர்ந்து 325000 வாக்குகளை பெற, குமார் பொன்னம்பலம் வெறும் 155000 வாக்குகளை மட்டுமே 

தரவுகளுக்கு நன்றி

ஆனால் இது தமிழர்களின் ஒற்றுமை மற்றும் ஒரே கொள்கை சார்ந்த நிலைப்பாட்டின் பலவீனத்தை காட்டுகிறதே தவிர அவரின் தோல்வி அல்ல. 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தரவுகளுக்கு நன்றி

ஆனால் இது தமிழர்களின் ஒற்றுமை மற்றும் ஒரே கொள்கை சார்ந்த நிலைப்பாட்டின் பலவீனத்தை காட்டுகிறதே தவிர அவரின் தோல்வி அல்ல. 

விசுகு, நான் கூறியது  அவரின் தோல்வி பற்றியதல்ல. மக்களின் மனவோட்டம் அரசியல் தலைவர்களால் புரிந்து கொள்ளப்படாமை பற்றியதே.   அரசியல்க்கட்சிகள் அல்லது அரசியல் இயக்கங்கள் உருவாக்கும் கொள்கைகளை மக்கள் ஒட்டு மொத்தமாக ஏற்று கொள்ளவேண்டிய  கடப்பாடு மக்களுக்கு இல்லை. மக்கள் மனவோட்டத்தை அனுசரித்தே அரசியல்கட்சிகள்/ இயக்கங்கள் தீர்மானங்களை எடுக்கவேண்டும்.  மக்களின் மன நிலை நிச்சயமாக ஒட்டு மொத்தமான கும்பல் மனநிலையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.  அப்படி இருக்கவும் மாட்டாது. ஆகவே அது மக்களின் பலவீனம் அல்ல.  அரசியலை முன்னெடுத்த தலைமைகளின் பலவீனம் மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

ஆமாம்

ஆனால் அது கூட தலைவர்களின் மக்கள் மீதான கணக்கெடுப்பாக இருக்கும் இருக்கிறது. அல்லது இன்று இது பற்றிய தகவல்கள் இருக்காது அல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

ஆமாம்

ஆனால் அது கூட தலைவர்களின் மக்கள் மீதான கணக்கெடுப்பாக இருக்கும் இருக்கிறது. அல்லது இன்று இது பற்றிய தகவல்கள் இருக்காது அல்லவா??

பல தகவல்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது.  1977 வட்டுக்கோட்டைத்  தீர்மானத்தை கூட வட கிழக்கில் கிட்டதட்ட அரைவாசி மக்கள் மாத்திரமே ஆதரித்துள்ளனர். அந்த புள்ளிவிபரங்களை சம்பந்தபட்ட தலைவர்கள் ஆராய்ந்து ஜதார்த்தத்தை உணர்ந்து   நேர்மையாக அணுகாமல் தமது அரசியல் நலன்களுக்கு ஏற்ற முறையிலேயே கொள்கைகளை வகுத்தனர்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

பல தகவல்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது.  1977 வட்டுக்கோட்டைத்  தீர்மானத்தை கூட வட கிழக்கில் கிட்டதட்ட அரைவாசி மக்கள் மாத்திரமே ஆதரித்துள்ளனர். அந்த புள்ளிவிபரங்களை சம்பந்தபட்ட தலைவர்கள் ஆராய்ந்து ஜதார்த்தத்தை உணர்ந்து   நேர்மையாக அணுகாமல் தமது அரசியல் நலன்களுக்கு ஏற்ற முறையிலேயே கொள்கைகளை வகுத்தனர்.  

தோல்வியுற்ற நிலையை வைத்து பேசுகிறீர்கள்.

51 வீத வாக்கு எடுத்தால் அவர் தான் நாட்டின் தலைவர்.

தமிழீழ கோரிக்கை எழ  தமிழர்கள் காரணம் அல்ல. சிங்கள தேசத்தின் வஞ்சகமே காரணம்.

 அது இன்றும் முன்பைவிட அதிக வலுவுடனேயே இருக்கிறது. அது இருக்கும் வரை தமிழர் தாகம் அணையாது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

தோல்வியுற்ற நிலையை வைத்து பேசுகிறீர்கள்.

51 வீத வாக்கு எடுத்தால் அவர் தான் நாட்டின் தலைவர்.

தமிழீழ கோரிக்கை எழ  தமிழர்கள் காரணம் அல்ல. சிங்கள தேசத்தின் வஞ்சகமே காரணம்.

 அது இன்றும் முன்பைவிட அதிக வலுவுடனேயே இருக்கிறது. அது இருக்கும் வரை தமிழர் தாகம் அணையாது. 

நான் பேசியது ஜதார்தத அரசியல். நீங்கள் பேசுவது  உங்கள் ஆசை. அவ்வாறு  ஆசை கொள்ளும் முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழ் அரசியலில் யதார்த்த  அரசியல் அறவே இல்லை.

ஈழ தமிழ் மக்கள் மனதில் வேரோடிப்போயுள்ள  இன்றைய கிழட்டு அரசியல்வாதிகள் முகமன் அரசியல் அழிய ஈழத்தமிழர்களுக்கு சில வேளைகளில் நல்லகாலம் பிறக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, island said:

நான் பேசியது ஜதார்தத அரசியல். நீங்கள் பேசுவது  உங்கள் ஆசை. அவ்வாறு  ஆசை கொள்ளும் முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது. 

என்னுடையது ஆசை அன்று. வரலாறு படிப்பினை. நீங்கள் பேசுவது வரலாற்றை பிரிவுபடுத்தும் பட்டறிவை கேலிக் கூத்தாக்கும் பேச்சரசியல். அதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது தான் 2009க்கு பின்னரான காலப்பகுதியில் தமிழினம் நகராது நிற்பதற்கான காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

அரசுடன் ஒரு டீலை எழுத்து மூலம் பெற்று அதனை செய்விக்க கூடிய யாராவது எம்முடம் உள்ளார்களா?  
 
செய்விக்கலாம். ஆனால் அதட்கு முன்னர் தமிழ் காட்சிகள் எல்லாம் ஒற்றுமைப்பட வேண்டும். இல்லாவிட்ட்தால் பகிஷ்கரிப்பு, தமிழர் தரப்பு தனியாக கேட்பது என்பதெல்லாம் வெற்று கோஷம்தான்.  ஒன்று பாடடால் உண்டு வாழ்வு இல்லாவிட்ட்தால் எல்லோருக்குமே தாழ்வு. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

அரசுடன் ஒரு டீலை எழுத்து மூலம் பெற்று அதனை செய்விக்க கூடிய யாராவது எம்முடம் உள்ளார்களா?  

அதை அப்பவே செய்திருக்கலாமே அரசுடன் சேர்ந்து இருப்பையாவது காப்பாற்றுங்கள் என்று சொன்னவர்களுக்கு துரோகி பட்டம் கொடுத்துவிட்டு கூத்தாடிகளுடன் அடித்த கூத்து மட்டுமே ஈழ  தமிழர்களுக்கு மிச்சம்.  இப்போது சுடலை ஞானம் வந்து என்ன பிரயோசனம்  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

என்னுடையது ஆசை அன்று. வரலாறு படிப்பினை. நீங்கள் பேசுவது வரலாற்றை பிரிவுபடுத்தும் பட்டறிவை கேலிக் கூத்தாக்கும் பேச்சரசியல். அதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது தான் 2009க்கு பின்னரான காலப்பகுதியில் தமிழினம் நகராது நிற்பதற்கான காரணம். 

வரலாற்று படிப்பினை என்பது மக்களுடையது.  அந்த மக்களின் வரலாற்று  படிப்பினையுனூடான மனவோட்டம் எப்படி இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளாது,  அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக வகுத்த கொள்கைகளை மக்கள் மீது  திணித்துவிட்டு,  மக்களை குறை சொல்வது எவ்வளது தவறானது  என்பதை, மக்கள்  வெளிப்படுத்திய தேர்தல்   தரவுகள் மூலம் ஆதாரத்துடன் தெரிவித்திருந்தேன்.   அது தான் உண்மையான வரலாறு.  அது  எப்படிப் பேச்சரசியல் ஆகும்?  

2009 ல் இருந்து தமிழினம் நகராது நிற்கிறது என்ற உங்கள் கூற்றே தவறானது. 1948 ல் இருந்து இன்று வரையான ஒட்டு மொத்த காலப்பகுதியிலும் அது பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதே உண்மை.  அவ்வாறு பின்னோக்கி நகர்ததியவர்கள்  எவரும் அதற்கு பொறுப்பு கூறவில்லை.

தமது இருப்பை காப்பாறினாலே போதும் என்ற அவலநிலைக்கு மக்களை கொண்டுவந்ததே  ஒட்டுமொத்தமான கடந்த கால அரசியலின் விளைவாக உள்ள நிலையில்,  அதை சுட்டிக்காட்டி இனியாவது மக்களின் விருப்பை  அறிந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறுவது எப்படி பேச்சு அரசியலாகும்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

தோல்வி அடைந்தது என்பதால் அந்த வரலாறு தவறான முடிவுகளை எடுத்தது என்பது தான் உங்கள் ஆலோசனை. இது மிகவும் அபட்டமானது. 

தமிழ் மக்களே தலைவர்களை தெரிவு செய்தார்கள் என்பதும் தமது அபிலாஷைகளை கொண்டு செல்ல ஏதுவாக வழிகளை திறந்தார்கள் என்பதும் தற்போது பசி ஆற அவர்கள் அமைதி காத்தாலும் பசி ஆறியபின் அடக்குமுறைகளை எதிர்க்கும் தாயக மண்ணை காக்கும் போராட்டத்தில் ஒன்றிணைந்து ஆணை வழங்குவது தான் வரலாறு. நான் பலமுறை பல தேர்தல்களில் பார்த்து அதிசயித்த வரலாறு இது. நன்றி. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.