Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1. நிஷான் துரையப்பா, 1973 இல் கொழும்பில் பிறந்து, கனடா சென்று, யூனிவர்சிட்டியில் இளமானியாகி, 1995 இல் பொலிஸ் கான்ஸ்டபிளாகி, பலவருட சேவையின் பின் 1.6 மில்லியன் மக்கள் வாழும் மிசுசுகா, பீல் பிராந்தியத்தின் பொலிஸ் தலைமை அதிகாரியாகியுள்ளார்.

2.  முன்னர் கனடாவில் தமிழ் குழுக்களை அடக்க, இலங்கை பொலிஸ் அதிகாரி, சுந்தரலிங்கம் என நினைக்கிறேன், உதவியை பெற்றது கனடா. இதுபோல் பொலிஸ் பிரிவுகள் தமக்கிடையே ஆட்களை, நடைமுறைகளை, தகவல்களை பரிமாறுவதும், விஜயங்கள் செய்வதும் வழமையே. இப்படி வரும் உயரதிகாரிகளுக்கு இப்படி மரியாதை கொடுப்பதும் வழமையே.

3. ஆனால் அல்பிரட் துரையப்பா - சரியாகவோ அல்லது பிழையாகவோ - தமிழின விடுதலை போரினை எதிர்க்கும் தமிழர்களின் முகமாக, தமிழர், சிங்களவரால் நோக்கப்படுகிறார். ஆகவே இந்த வகையில் இவரின் வருகை கூடிய முக்கியத்துவம் பெறுகிறது.

4. நிஷான் - இதுவரைக்கும் இந்த துறைசார் வருகையை மீறி எதுவும் சொல்லவில்லை. 

5. பார்ப்போம். சொல்வதை, செய்வதை வைத்து இதில் நாம் முடிவு எடுக்கலாம். தனியே துறைசார் நடவடிக்கையுடன் மட்டுப்பட்டால் - அலட்டிகொள்ள வேண்டியதில்லை. இல்லை எனில் எதிர்வினையாற்றலாம்.

Edited by goshan_che
  • Thanks 3
  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, மலையான் said:

துரையப்பா அரசியல் ரீதியாக தமிழரசு கட்சிக்கு சவால், அதை அகற்ற பாவிக்கப்பட்டதுதான் துரோகி பட்டம்.

ஈழ தமிழர் அகராதியில் இருக்கும் அருவருக்கதக்க சொல் "துரோகி".

அப்போ.. துரையப்பா.. தமிழரசுக் கட்சிக்கு எதிராகத்தான் செயற்பட்டார். ஏனெனில்.. சொறீலங்கா சுதந்திரக் கட்சி ஆளாக.

உரிமை கோரிய தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல...??! அப்போ துரையப்பாவுக்கு.. உலகத் தமிழாராட்ச்சி மாநாட்டில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு.. காரணம்.. தமிழரசுக் கட்சி..???!

துரோகி என்ற பதம் எல்லா நாடுகளினதும் வரலாற்றில் உள்ளது. துரோகத்தின் பெயரால்.. பிரித்தானிய முடிக்குரியவர்களை போட்டுத் தள்ளின வரலாறு கூட அவர்களின் வரலாற்றில் உண்டு. இப்படி எல்லா நாடுகளிலும் இருக்குது.

துரோகிகளை துரோகிகள் என்று இனங்காண்பதில் எந்தத் தவறும் கிடையாது. மாறாக துரோகங்களை மக்கள் இனங்காணவும் தடுக்கவும் அது உதவலாம். 

உங்களுக்கு ஒவ்வாது விடில்.. ஒதுங்கி இருக்க வேண்டுமே தவிர.. மக்களை அழிக்க முற்படக் கூடாது. துரையப்பா செய்தது சொந்த மக்களை அழித்து தன்னை தன் பதவியை காத்துக் கொள்ள முனைந்தது.  

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

4. நிஷான் - இதுவரைக்கும் இந்த துறைசார் வருகையை மீறி எதுவும் சொல்லவில்லை. 

5. பார்ப்போம். சொல்வதை, செய்வதை வைத்து இதில் நாம் முடிவு எடுக்கலாம். தனியே துறைசார் நடவடிக்கையுடன் மட்டுப்பட்டால் - அலட்டிகொள்ள வேண்டியதில்லை. இல்லை எனில் எதிர்வினையாற்றலாம்.

இல்லையே.. சொறீலங்கா பொலிஸை சுத்தமென்றெல்லோ சொல்லி இருக்குது.

உண்மையான ஒரு பொலிஸ் அதிகாரின்னா.. தனது நாட்டில் உள்ள பொலிஸ் விசேடங்களைச் சொல்லி.. அதனை உதாரணமாக்கி.. சொறீலங்கா பொலிஸ் துறை முன்னேற்றகரமாகவும்.. மனித உரிமைகளுக்கு.. மக்களின் உரிமைகளுக்கு கூடிய மதிப்பளித்தும் செயற்பட வேண்டும் என்று சொல்லி இருக்கனும்.

ஏனெனில்.. சர்வதேச அளவில் சொறீலங்கா பொலிஸ்படைக்கு எதிராக பல மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்களோடு.. போர்க்குற்றச் சாட்டும் உள்ளது. அப்படி இருக்க..?????!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்த அணிவகுப்பு மரியாதையை வழங்கியதனூடாக சிங்களம் தனக்கு ஒரு நண்பனை உருவாக்கியுள்ளது. 

கனடாத் தமிழர்களின் ஒரு பலமான ஆழுமையை துரோகியாக காட்டுவதனூடாக எம்மை நாம் பலவீனப்படுத்தும்  செயலைச் செய்கிறோம். 

எதிரிகளை எப்படி எனது வழிக்குக் கொண்டுவரலாம் என்பதைத்தான் ஒரு  புத்திசாலி யோசிப்பான்.  (சிங்களம் அதைத்தான் செய்கிறது )

இங்கே நாமோ, புதிது புதிதாக எப்படி எதிரிகளை உருவாக்கி எங்களை நாமே பலவீனப்படுத்தலாம் என்பதை யோசிக்கிறோம். 

எதிரிகளை எப்படி  உருவாக்கி,  தம்மைத் தாமே எப்படி அழித்துக்கொள்ளலாம் என்பதற்கு  ஈழத் தமிழ் இனம்  ஒரு  மிகச் சிறந்த உதாரணம். 

😏

Edited by Kapithan
  • Like 2
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@nedukkalapoovan தற்போது எந்த நாட்டில் வாசம் செய்கின்றீர்கள்? இலங்கை, இலங்கை போலிஸ் பற்றி சல்லடை போடுவது சரி. உங்கள் தற்போதைய நாட்டை அறிந்தால் நாங்கள் வகுப்பை, ஆராய்ச்சியை உங்கள் நாட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்: அதன் போலிஸ், அதன் அரசாங்கம், அதன் வரலாற்று சம்பவங்கள் என ஒவ்வொன்றாக..

உங்கள் கதையை பார்தால் உங்கள் அமைவிடம் நிச்சயம் தேவலோகம் போல் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
34 minutes ago, Kapithan said:

இது மிகவும் அபந்தமான குற்றச்சாட்டு.

யாரும் அந்த கனடிய பொலிஸ் நபரை... துரோகி என்று சொல்லவில்லை. 

மேலும்.. குறித்த நபர் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐநாவால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிங்கள அரச பயங்கரவாதக் கட்டமைப்பாகச் செயற்பட்ட சொறீலங்கா பொலிசுக்கு.. ஒரேயடியாக அடிக்க முயலும் வெள்ளைடிப்புக்கும்... அதுவும் மிகவும் முன்னேற்றகரமான பொலிஸ்துறை என்று அடித்து விட்டு புகழ் தேடிக் கொள்ள முனைவதுமே இப்போதைக்கு.. கண்டிக்கப்படுகிறது.

அதுவும் கனடா போன்ற உச்ச மனித உரிமைகளை மக்கள் உரிமைகளை பாதுகாக்கக் கோரும் பொலிஸ்துறையில் இருந்து கொண்டு வாய் கூசாமல் சொல்லும் போலிப் புகழ்ச்சி.. சொறீலங்கா பொலிஸை தவறாக வழிநடத்துவதோடு.. அது மேற்கொண்ட கொள்ளும் மனித இன விரோதச் செயற்பாடுகளை இன்னும் பலமாகத் தொடரவே வழி செய்யும்.

இதுதான் கனடா பொலிஸ் காட்டும் பாதை என்றால்.. கனடா பொலிஸை இனங்காட்டியமைக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

மற்றும்படி.. இவரை துரோகி என்பதால்.. மட்டும் சிங்களம் இவரை போலிப் புகழ்ந்து.. தன் வசப்படுத்தனும் எனறில்லை. சுயநலமிக்க.. எத்தனயோ.. தமிழர்கள்.. சந்தர்ப்பத்திற்காக சிங்களத்தின் காலடியில் வீழ காத்துக்கிடக்கிறார்கள். அந்த நாய் வாலுகளை.. எது கொண்டும் நிமிர்த்த முடியாது. என்ன தான் சனாதன தர்மம் போதித்தாலும். 

Edited by nedukkalapoovan
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, நியாயம் said:

@nedukkalapoovan தற்போது எந்த நாட்டில் வாசம் செய்கின்றீர்கள்? இலங்கை, இலங்கை போலிஸ் பற்றி சல்லடை போடுவது சரி. உங்கள் தற்போதைய நாட்டை அறிந்தால் நாங்கள் வகுப்பை, ஆராய்ச்சியை உங்கள் நாட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்: அதன் போலிஸ், அதன் அரசாங்கம், அதன் வரலாற்று சம்பவங்கள் என ஒவ்வொன்றாக..

உங்கள் கதையை பார்தால் உங்கள் அமைவிடம் நிச்சயம் தேவலோகம் போல் தெரிகின்றது.

1 hour ago, nedukkalapoovan said:

Sri Lanka: Police Abuses Surge Amid Covid-19 Pandemic

https://www.hrw.org/news/2021/08/06/sri-lanka-police-abuses-surge-amid-covid-19-pandemic

Sri Lanka: Grave Abuses Under Discredited Law

https://www.hrw.org/news/2022/02/07/sri-lanka-grave-abuses-under-discredited-law

Sri Lanka’s former president must be investigated for war crimes

https://www.hrw.org/news/2022/07/22/sri-lankas-former-president-must-be-investigated-war-crimes

Excessive use of force

There were multiple instances of excessive and unnecessary force being used against people queuing for fuel. In May, the Ministry of Defence authorized the armed forces to open fire on looters or “anyone causing harm to others”. The army was mobilized to police civilian protests on multiple occasions.

https://www.amnesty.org/en/location/asia-and-the-pacific/south-asia/sri-lanka/report-sri-lanka/

இவை எல்லாம் (சில உதாரணங்களே இணைக்கப்பட்டுள்ளது இங்கு. இப்படிப் பல ரிப்போட் வெளியிடப்பட்டுள்ளது.) போருக்குப் பின்னான சம காலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சொறீலங்கா பொலிஸுக்கு எதிரான சொறீலங்கா படை மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிரான.. குற்றச்சாட்டுக்கள். இவை எல்லாத்தையும் கனடா பொலிஸ் அங்கீகரிக்கிறதா.. இந்த நபரின் செயலின் மூலம்.. அதையா அர்த்தப்படுத்துகிறார்கள்..???!

நேரம் கிடைக்கும் போது இந்த சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் சொறீலங்கா பற்றிய அறிக்கைகளை முதலில் வாசியுங்கள். பின் நாம் வசிப்பது தேவலோகமா.. சொறீலங்கா.. நடப்பு பூமியின் நரகலோகமா என்பதை தீர்மானிக்கலாம். ஆனால்.. சொறீலங்கா பொலிஸ்துறைக்கு சகட்டு மேனிக்கு வெள்ளையடிப்பது.. அது செய்து கொண்டு வரும்.. மக்கள் விரோத.. மனித இன விரோத செயற்பாடுகள் தொடரவும்.. சொறீலங்கா மக்கள்.. அதனால்.. பாதிப்படைவதுமே தொடரும். கனடிய பொலிஸ் அதிகாரிக்கு அதனால்.. எந்த பாதிப்பும் வராது. வெற்றுப் புகழோடு விமானமேறி களிப்படைய வேண்டியான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

An X-ray of the Sri Lankan policing system & torture of the poor

http://www.humanrights.asia/wp-content/uploads/2018/07/X-ray-of-the-Sri-Lankan-policing-system.pdf

Joint Letter on Police Scotland Training for Sri Lankan Police

https://www.hrw.org/news/2021/08/16/joint-letter-police-scotland-training-sri-lankan-police

Police Scotland provided training to Sri Lankan police “on an almost continuous basis” from 2013 until the onset of the Covid-19 pandemic.[6] Police Scotland and your department contend that this programme is designed to enhance the Sri Lankan police’s respect for human rights, and that it particularly aims to reduce gender-based violence. The training also involves assistance in “community policing,” and in the past it has involved other components including crowd control.[7]

There is no evidence of any improvement in the human rights performance of the Sri Lankan police under the Gotabaya Rajapaksa administration. Our experience in Sri Lanka and elsewhere is that so long as there is no political will on the part of the government to end abusive police practices, no amount of “training” is going to bring significant improvements. Instead, continued training efforts merely appear to endorse the actions of an abusive police force.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

It is our understanding that Scottish ministers have the power to intervene to prevent this training programme from continuing. Police Scotland is said to operate a “traffic light” system of red, amber, and green countries which receive training, with those on the red list requiring ministerial approval. We believe that Sri Lanka should be added to the red list. Material previously released under the Freedom of Information Act states that Scottish ministers must approve all overseas police training deployments, and that “ministerial approval is required under section 15 of the Police and Fire Reform (Scotland) Act 2012 (Temporary Service), where Police Scotland receives payment for the delivery of the training.”[9]

https://www.hrw.org/news/2021/08/16/joint-letter-police-scotland-training-sri-lankan-police

ஸ்கொட்லாண்ட் பொலிஸ் சொறீலங்கா பொலிசஸூக்கு வழங்கும் பயிற்சியையே மனித உரிமை அமைப்புக்கள் நிறுத்தச் சொல்லி கோருகின்றன. காரணம்.. சொறீலங்கா பொலிஸ் மனித உரிமைகளை பேணும் விடயத்தில்.. பொலிஸ் துஸ்பிரயோகங்களில்.. இருந்து வெளிவரும் விடயங்களில்.. கவனம் செலுத்துவதாக இல்லை... என்பதால். 

August 16, 2021 1:00AM EDT

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, nedukkalapoovan said:

இது மிகவும் அபந்தமான குற்றச்சாட்டு.

யாரும் அந்த கனடிய பொலிஸ் நபரை... துரோகி என்று சொல்லவில்லை. 

மேலும்.. குறித்த நபர் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐநாவால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிங்கள அரச பயங்கரவாதக் கட்டமைப்பாகச் செயற்பட்ட சொறீலங்கா பொலிசுக்கு.. ஒரேயடியாக அடிக்க முயலும் வெள்ளைடிப்புக்கும்... அதுவும் மிகவும் முன்னேற்றகரமான பொலிஸ்துறை என்று அடித்து விட்டு புகழ் தேடிக் கொள்ள முனைவதுமே இப்போதைக்கு.. கண்டிக்கப்படுகிறது.

அதுவும் கனடா போன்ற உச்ச மனித உரிமைகளை மக்கள் உரிமைகளை பாதுகாக்கக் கோரும் பொலிஸ்துறையில் இருந்து கொண்டு வாய் கூசாமல் சொல்லும் போலிப் புகழ்ச்சி.. சொறீலங்கா பொலிஸை தவறாக வழிநடத்துவதோடு.. அது மேற்கொண்ட கொள்ளும் மனித இன விரோதச் செயற்பாடுகளை இன்னும் பலமாகத் தொடரவே வழி செய்யும்.

இதுதான் கனடா பொலிஸ் காட்டும் பாதை என்றால்.. கனடா பொலிஸை இனங்காட்டியமைக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

மற்றும்படி.. இவரை துரோகி என்பதால்.. மட்டும் சிங்களம் இவரை போலிப் புகழ்ந்து.. தன் வசப்படுத்தனும் எனறில்லை. சுயநலமிக்க.. எத்தனயோ.. தமிழர்கள்.. சந்தர்ப்பத்திற்காக சிங்களத்தின் காலடியில் வீழ காத்துக்கிடக்கிறார்கள். அந்த நாய் வாலுகளை.. எது கொண்டும் நிமிர்த்த முடியாது. என்ன தான் சனாதன தர்மம் போதித்தாலும். 

1) is a matter of happiness that Sri Lanka has achieved great development in the past 20 years.
இதுதான் உங்கள் பிரச்சனையா ? 

During the discussion, which covered various topics related to the security of both countries, programme aimed at strengthening community Police Units, implemented under advice and guidance of Minister Alles received special appreciation from the Canadian Police Chief.

Nishan Duraiappah pledged the full support of the Canadian Police to further enhance the programme.

உதையும் கவனியுங்கள். 👆

There were about 70 families there. Today, a large number of Sri Lankan families are residing there. A large number of people have obtained citizenship.

Professionals from various fields of education are working in big positions there,” he said.

“Sri Lanka has achieved a lot of development compared to that time. Roads are developed. Like the tourism industry, other industries have developed. I saw a large group of tourists coming to this country,” he said.

உதையும் கவனியுங்கள்  👆

மேலே உள்ள ஒரு வசனத்தை (1)  வைத்துத்தான் அவரைத் துரோகி என்கிறீர்களென்றால் தாராளமாக துரோகிப்பட்டம்கொ டுங்கள்.

ஆனால் ஒன்று, 

இம்முறை நீங்கள்  அவரைத் துரோகியென்று சுட்டுக் கொல்ல முடியாது. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, Kapithan said:

சொறீலங்காவில் எல்லாமே மகிழ்ச்சியாத்தான் போகுது. 

சனம் சாப்பிட வழியில்லாமல் இருப்பது தெரியவில்லை.

ஆமாம் அவர் வரும் போது 70 குடும்பங்கள். அதன் பின் இவ்வளவு குடும்பங்கள் எதுக்கு கனடா வந்தவை.. கனடாவை முன்னேற்றவா..????!

அதுபோக.. சொறீலங்கா பொலிஸ் எந்தக் கண்டனத்துக்கும் உரியதல்ல. என்ன இன்னும் அதனை வலுப்படுத்த கனடா பொலிஸ் சார்பில் இவர் அவைக்கு உதவி வழங்குவார். (கவனிக்க.. இவர் ஒட்டுமொத்த கனடா சார்பாக பேசவல்ல.. பொலிஸ் அதிகாரி கிடையாது. ஒரு பிராந்திய பொலிஸ் அதிகாரி மட்டுமே.)

ஆகா.. சொறீலங்கா.. உலகின் சொர்க்கம். 

சொறீலங்கா பற்றிய நேர்மறை தகவல்கள்.. ரிப்போட்கள் பொய். நான் கனடா பொலிஸ் அதிகாரி சொல்லுறன் கேளுங்கோ.. சொறீலங்கா.. குட்.

முடியல்லைண்ணை.. உங்க காவடி.

மேலும்.. துரோகிகள் பற்றி.... துரோகிகளை காலம் தானே இனங்காட்டிச் செல்லும். அவர்களை அவர்களே காலத்தால்.. அழித்தும் கொள்வார்கள்.

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வணக்கம்...உறவுகளே. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.... இலங்கைப் பொலிசுக்கோ,ஆமிக்கோ ,ஏன் சனதிபதிக்குக்கூட .. வேலையில்லை என்றுதான் கருதவேண்டிக்கிடக்கு....தமிழகத்தில் சிறுவர் பாட்டுப்போட்டியில் வென்ற கில்மிச்சவுக்கும்,வெல்லாத அசானிக்குமே...கேடயம் கொடுக்கிற நிலமையில் நாடு இருக்குது..சனாதிபதி போன் எடுத்து வாழ்த்திகிறார்...இப்படியிருக்க ஒரு நகரசபை பொலிசு அதிகாரி ...நாட்டிற்குப் போனால் என்ன செய்வினம்....அவர் சொந்தலீவிலை போனாரோ,சொந்தங்களை பார்க்கப் போனாரோ தெரியாது...எப்படா...எங்கை யாரைபிடித்து எம்மை தூயவனாக்குவம் என்று திரயிறவைக்கு ...கனடா பொலிசு மாட்டிவிட்டார்...இந்த கேடையம் கொடுத்த தென்னக்கோனே ..அங்கு நடைபெற்ற சர்ச் தாக்குதலில் குற்றவாளீ...றணிலின் தயவால் ஒரு வருசத்துகு வேலை கிடைச்சிருக்கு...இப்போது அங்கு அரசியல் வறுமை ...அதற் குப் பிச்சைபோட ..தமிழர்தான் வேணும்...அங்கை போற எந்த தமிழனுக்கும்  ஆலவட்டம் வீசுவினம்...இப்ப அது தொடர் கதை..அதை யாழில் லென்ஸ் வைத்துக் ..   காட்டுகினம்

Edited by alvayan
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, nedukkalapoovan said:

சொறீலங்காவில் எல்லாமே மகிழ்ச்சியாத்தான் போகுது. 

சனம் சாப்பிட வழியில்லாமல் இருப்பது தெரியவில்லை.

ஆமாம் அவர் வரும் போது 70 குடும்பங்கள். அதன் பின் இவ்வளவு குடும்பங்கள் எதுக்கு கனடா வந்தவை.. கனடாவை முன்னேற்றவா..????!

அதுபோக.. சொறீலங்கா பொலிஸ் எந்தக் கண்டனத்துக்கும் உரியதல்ல. என்ன இன்னும் அதனை வலுப்படுத்த கனடா பொலிஸ் சார்பில் இவர் அவைக்கு உதவி வழங்குவார். (கவனிக்க.. இவர் ஒட்டுமொத்த கனடா சார்பாக பேசவல்ல.. பொலிஸ் அதிகாரி கிடையாது. ஒரு பிராந்திய பொலிஸ் அதிகாரி மட்டுமே.)

ஆகா.. சொறீலங்கா.. உலகின் சொர்க்கம். 

சொறீலங்கா பற்றிய நேர்மறை தகவல்கள்.. ரிப்போட்கள் பொய். நான் கனடா பொலிஸ் அதிகாரி சொல்லுறன் கேளுங்கோ.. சொறீலங்கா.. குட்.

முடியல்லைண்ணை.. உங்க காவடி.

மேலும்.. துரோகிகள் பற்றி.... துரோகிகளை காலம் தானே இனங்காட்டிச் செல்லும். அவர்களை அவர்களே காலத்தால்.. அழித்தும் கொள்வார்கள்.

முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சைப் போடுகிறீர்கள். 

குறித்துவைத்துக் கொள்ளுங்கள், 

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியும் ஒருநாள் இலங்கை செல்லத்தான் போகிறார்.  முன்னேற்றங்கள்  குறித்து பாராட்டத்தான் போகிறார்.

இப்போதே அவருக்கும் ஒரு துரோகிப்பட்டத்தை ஆயத்தமாக வைத்திருங்கள் .  ஏனென்றால் நமக்குத்தான் Positive ஆன விடயங்களை வரவேற்கவும் தெரியாது, Diplomacy யும் தெரியாது.

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kapithan said:

இப்போதே அவருக்கும் ஒரு துரோகிப்பட்டத்தை ஆயத்தமாக வைத்திருங்கள் .  ஏனென்றால் நமக்குத்தான் Positive ஆன விடயங்களை வரவேற்கவும் தெரியாது, Diplomacy யும் தெரியாது.

2009 க்குப் பின் தமிழர்களுக்கு இதெல்லாம் தனிநபர் வியாபாரமாப் போச்சு.

ஆளாளுக்கு சொறீலங்கா சிங்களவனின் காலில் வீழ்ந்து..சரணாகதி அடைவதெல்லாம்.. டிப்ளோமசி.. பாசிட்டிவ் திங்கிங்.

உங்கட சுமந்திரன் செய்யாததா.. கண்டது என்ன 15 ஆண்டுகள் கடந்து விட்டன.

உங்கட சம்பந்தர் செய்யாததா.. 50/60 ஆண்டுகள் கடந்து விட்டன.

உங்கட சி ரி சி ஈழத்துக்குள் இமாலயத்தை கொண்டு வரப் போட்டினம்.. பிரகடனம் என்னாச்சு.. பிரண்டு போச்சா.

அடிப்படையில் எம்மவர்களுக்கு டிப்ளோமசி என்றாலே என்னென்று தெரியாது. எதிரியின் காலில் போய் நேரடியாக வீழ்வதும்.. அவனை பாராட்டி வியாபாரம் வாங்குவதும்.. கேடயம்.. விருது.. பத்திரமும் வாங்குவதென்றால்.. அது டிப்ளோமசி கிடையாது. டிப்பொசிட்.. இன் பின்.. தான். 

நீங்களும் சில பல ஆங்கிலப் பதங்களை எழுதி இவையை ஏதோ பெரிய வித்துவான்களாக காட்ட நினைக்கிறீர்கள்.. நிச்சயம் சிங்களத்தின் காலில் வீழ்ந்தோ.. முதுகை வருடியோ.. அவனை பாராட்டியோ.. உங்கட டிப்ளோமசி அமையும் என்றால்.. அதனை எத்தனையோ பேர் செய்து முடிச்சிருப்பினம். சிங்களத்திடம் அது சுய சலுகை வாங்கிப் பிழைப்பை ஓட்ட உதவலாமே தவிர.. தமிழ் மக்களுக்கு அணு அளவும் விமோசனம் வராது. 

இனியும் மக்களிடம்.... உங்களின் சொந்த சுயலாபங்களை இட்டான.. சிங்களவனிடம் சரணாகதி அடைவதை எல்லாம் டிப்ளோமசின்னு சொல்லிக்கிட்டு வராதீர்கள்.

ஹரி ஆனந்த சங்கரி.. கனடா எம் பி. உலகத்தமிழனத்துக்கு தலைவர் கிடையாது. அவரை மையப்படுத்தி.. தமிழர் உரிமை கோரலும் இல்லை. எனவே.. அவர் மக்களுக்கான.. நேர்மையான வழியில் செல்லும் வரை.. வரவேற்கப்படுவார். எதிரியின் போக்கில் போவதாக மக்கள் உணரும் பட்சத்தில்... மிச்சத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனந்த சங்கரி எடுத்துக்காட்டு. 

Edited by nedukkalapoovan
  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, nedukkalapoovan said:

நீங்கள் தாராளமாக துரோகிப்பட்டம் கொடுக்கலாம். Good luck. 

ஆனால் நடைமுறையில் இவ்வாறான  சிந்தனை முறைகளால்   நடைமுறைச் சாத்தியமான எந்த ஒரு காரியத்தையும் நிலம் சார்ந்த மக்களுக்காகச் சாதிக்க முடியாது  என்பதுதான் உண்மை. அதுதான் எங்கள் வரலாறும் கூட. 

🙏

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nedukkalapoovan said:

நேரம் கிடைக்கும் போது இந்த சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் சொறீலங்கா பற்றிய அறிக்கைகளை முதலில் வாசியுங்கள். பின் நாம் வசிப்பது தேவலோகமா.. சொறீலங்கா.. நடப்பு பூமியின் நரகலோகமா என்பதை தீர்மானிக்கலாம். ஆனால்.. சொறீலங்கா பொலிஸ்துறைக்கு சகட்டு மேனிக்கு வெள்ளையடிப்பது.. அது செய்து கொண்டு வரும்.. மக்கள் விரோத.. மனித இன விரோத செயற்பாடுகள் தொடரவும்.. சொறீலங்கா மக்கள்.. அதனால்.. பாதிப்படைவதுமே தொடரும். கனடிய பொலிஸ் அதிகாரிக்கு அதனால்.. எந்த பாதிப்பும் வராது. வெற்றுப் புகழோடு விமானமேறி களிப்படைய வேண்டியான். 

எனக்கு தெரிந்த அளவில் கனேடிய அரசாங்கம் நீண்ட காலமாகவும், தொடர்ச்சியாகவும் இலங்கை மக்களின் நலன்களிற்காக பல்வேறு திட்டங்களை செயற்படுத்திவருகின்றது. 

காவல்துறை பொறுப்பதிகாரி நிசான் அவர்கள் போதைவஸ்து சம்மந்தமான விடயங்கள், கும்பல்களை கட்டுக்குள் கொண்டுவருவதிலும் அனுபவம் மிக்கவர் என கூறப்படுகின்றது. 

இலங்கை போலிசு அல்லாடும் நிலையில் அனுபவஸ்தர் ஒருவர் உதவி மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்றால் நாம் அதற்கு ஆதரவாக நிற்கவேண்டும். 

இலங்கை போலிசு என்றாலே இனப்பிணக்குகளை மட்டும் எப்போதும் தொங்கிப்பிடித்துக்கொண்டு ஆடக்கூடாது. 

போலிசு சேவை நாளாந்த வாழ்வில் பலநூறு உள்ளன. நீங்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்றுகொண்டு ஊஞ்சல் ஆடுகின்றீர்கள். 

நிசான் பயணம் கனேடிய அரசாங்கத்தின் வேண்டுகோள் நிமித்தமான உத்தியோகபூர்வமான பயணமாக தெரிகின்றது. 

இங்கே இந்த இடத்தில் நிசான் நில்லாமல் ஒரு சீக்கியரோ அல்லது வேறு நாட்டு இனத்தவரோ நின்றால் என்ன செய்வீர்கள்?  

இலங்கை போலிசு சேவையில் முன்னேற்றம் ஏற்பட்டால் அந்த நன்மைகள் எல்லாருக்கும் உண்டு. போக்குவரத்து துறை தொடக்கம் போதைவஸ்து வரை பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
37 minutes ago, நியாயம் said:

எனக்கு தெரிந்த அளவில் கனேடிய அரசாங்கம் நீண்ட காலமாகவும், தொடர்ச்சியாகவும் இலங்கை மக்களின் நலன்களிற்காக பல்வேறு திட்டங்களை செயற்படுத்திவருகின்றது. 

கனடா பல விதமான உதவிகளை பல நாடுகளுக்கும் செய்து தான் வருகிறது. தமிழ் அகதிகளை அரவணைத்துக் கொண்டு இன்னொரு பக்கம்.. தமிழினப் படுகொலையின் போதும் அது மறைமுகமாக பங்களித்துள்ளது. அது வேறு விவாதிக்கப்பட வேண்டிய விடயம். 

37 minutes ago, நியாயம் said:

காவல்துறை பொறுப்பதிகாரி நிசான் அவர்கள் போதைவஸ்து சம்மந்தமான விடயங்கள், கும்பல்களை கட்டுக்குள் கொண்டுவருவதிலும் அனுபவம் மிக்கவர் என கூறப்படுகின்றது. 

ஆமாம்.. அது தான் கனடாவில்.. சட்டரீதியாக்கிட்டாங்கள். சும்மா எல்லாம் அவிழ்த்துவிடக் கூடாது. சொறீலங்காவில் கஞ்சா வளர்க்க அமைச்சர் பரிந்துரைக்க.. சொறீலங்கா பொலிஸ் போதைவஸ்து கடத்திறவனை பிடிக்குதாம். போதைவஸ்து கடத்துவதே பொலிஸ். இதில...???! இவர் என்ன அறிவுரையை வழங்குவார்..??!

37 minutes ago, நியாயம் said:

இலங்கை போலிசு என்றாலே இனப்பிணக்குகளை மட்டும் எப்போதும் தொங்கிப்பிடித்துக்கொண்டு ஆடக்கூடாது. 

இனப்படுகொலையின் அங்கமாகவும் ஆக்கிரமிப்பின் அங்கமாகவும் சொறீலங்கா பொலிஸ் இருக்குது. அதனை தவிர்த்து தமிழ் மக்களின் நலன் குறித்து பேச முடியாது. தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச உரிமையில் கூட.. பொலிஸ் அதிகாரங்களை தர மறுக்குது சிங்களம். இந்த இடத்தில் சொறீலங்கா பொலிஸுக்கு வெள்ளையடிப்பது.. அதுவும் ஒரு புலம்பெயர் கனடிய தமிழரை கொண்டு வெள்ளையடிப்பது தற்செயலானதல்ல. நன்கு திட்டமிட்ட செயல். தொங்க வேண்டிய இடத்தில் தொங்காமல் விட்டுத்தான்.. எமக்கான நீதி.. உரிமைகளை இழந்து நிற்கிறோம். அதே தவறை திரும்ப திரும்பச் செய்யக் கூடாது. தனிநபர்களின் போலிப் புகழ் தேடலுக்காக.

37 minutes ago, நியாயம் said:

போலிசு சேவை நாளாந்த வாழ்வில் பலநூறு உள்ளன. நீங்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்றுகொண்டு ஊஞ்சல் ஆடுகின்றீர்கள். 

அந்த பல நூறு வட்டங்களும் மாசுபட்ட ஒரு பொலிஸ் என்றால் அது சொறீலங்கா பொலிஸ். நான் சொல்லவில்லை.. ஆண்டு தோறும் வெளிவரும்.. மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் சொல்கின்றன. அவர்களும் தேவை இல்லாத ஊஞ்சலாடினமாக்கும். உங்களுக்கு சொறீலங்கா பொலிஸூக்கு குஞ்சம் கட்ட வேண்டிய தேவை இருக்கலாம். நமக்கில்லை.

37 minutes ago, நியாயம் said:

நிசான் பயணம் கனேடிய அரசாங்கத்தின் வேண்டுகோள் நிமித்தமான உத்தியோகபூர்வமான பயணமாக தெரிகின்றது.

தெரிகிறது... ஆனால் நிச்சயமா தெரியவில்லை. இதுவே போதும். 

37 minutes ago, நியாயம் said:

இங்கே இந்த இடத்தில் நிசான் நில்லாமல் ஒரு சீக்கியரோ அல்லது வேறு நாட்டு இனத்தவரோ நின்றால் என்ன செய்வீர்கள்?

அறியாமல் செய்கிறாங்கள் என்று சொல்லிவிட்டுப் போகலாம். அறிந்து செய்தாலும். ஆனால் இதுகள் சொந்த இனத்தின் இத்துனை துயர்களையும் அழிவுகளையும் கண்ட பின்னும்.. சொறீலங்கா பொலிஸில்.. உண்மையான நேர்மையான சர்வதேச தரத்திலான.. மாற்றங்களை கோராமல்.. போலிப் புகழ்ச்சி செய்து.. கேடயம் வாங்கிச் செல்வது எந்த வகையில்.. சொறீலங்கா பொலிஸ் தன் தரத்தை மேம்படுத்த.. தன்னை திருத்திக்க.. தன் தவறுகளுக்கு பொறுப்பேற்று குற்றவாளிகளை தண்டிக்க.. கப்பம் ஏவல் கொள்ளை கொலை..கடத்தலில் கூட்டுப் பங்காளியாக இருப்பதை விட்டொழிக்க தூண்டும்..??!

இவை எதுவுமே நிகழாமல்.. சொறீலங்கா பொலிஸ் உருப்படுற மாதிரியே தெரியவில்லை. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பகிரங்க குற்றச்சாட்டுக்களை சுமக்கும் ஒரு கொடிய பொலிஸ் சேவைக்கு.. கனடா உதவுவது எந்த வகையில்.. கனடாவின் கொள்கைகளுக்கு அமைவாகும்.. இதை கனடாவிடம் கேட்க வேண்டிய ஒரு நபர்.. சொறீலங்கா பொலிஸூக்கு வெள்ளையடிச்சு கேடயம் வாங்கிச் செல்வதன் நோக்கமென்ன..??!

சொறீலங்கா பொலிஸில் உள்ளவர்களில் பலர் குற்றவாளிகள். அவர்களை தண்டிக்காமல்.. நீதியின் முன் நிறுத்தாமல்.. சொறீலங்கா பொலிஸ் உருப்படாது. அதேபோல்.. சொறீலங்கா பொலிஸை அரசியலுக்கு அப்பால் கண்காணிக்கக் கூடிய சுயாதீன அமைப்புக்கள் இன்றி.. சொறீலங்கா பொலிஸ் உருப்பட வாய்ப்பில்லை. மாறாக.. சொறீலங்கா பொலிஸின் கடந்த கால நிகழ்கால குற்றங்களை மறைத்து குற்றவாளிக் குலாமாக இருக்கும் சொறீலங்கா பொலிஸுக்கு வெள்ளையடிப்பதால்.. எந்த மாற்றமும் வராது.

அதேபோல்.. தமிழர் பிரதேசங்களில் இருந்து.. இனப்படுகொலையின் அங்கமான சொறீலங்கா பொலிஸ் வெளியேற்றப்பட்டு.. பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். தமிழீழ காவல்துறைக்கு ஒப்பான நேர்மையும் கண்ணியமும் கட்டுப்பாடும் செயல்திறனும் மிக்க ஒரு காவல்துறையை தமிழர் தரப்பு கட்டியமைப்பது அவசியம். தமிழர் பகுதி வாழ் முஸ்லிம்களும்.. சிங்களவர்களும்.. விகிதாசார அடிப்படையில் உள்வாங்கப்பட வேண்டும். இதனை கனடாவிடம்.. வலியுறுத்த துரையப்பாவின் எச்சங்கள் தயாராமோ..?!

Edited by nedukkalapoovan
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

நீங்கள் தாராளமாக துரோகிப்பட்டம் கொடுக்கலாம். Good luck. 

ஆனால் நடைமுறையில் உங்களைப்போன்று சிந்திப்பவர்களால்  நடைமுறைச் சாத்தியமான எந்த ஒரு காரியத்தையும் நிலம் சார்ந்த மக்களுக்காகச் சாதிக்க முடியாது  என்பதுதான் உண்மை. அதுதான் எங்கள் வரலாறும் கூட. 

🙏

இனவாத சிங்களச் சிறிலங்காவுக்கு தன்ரை நாட்டு பிரச்சனையை தானே தீர்க்க வக்கில்லை. 
இந்த திறத்திலை.......
துரையப்பாவின்ரை பேரன் கேக்குதோ´?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

அதேபோல்.. தமிழர் பிரதேசங்களில் இருந்து.. இனப்படுகொலையின் அங்கமான சொறீலங்கா பொலிஸ் வெளியேற்றப்பட்டு.. பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். தமிழீழ காவல்துறைக்கு ஒப்பான நேர்மையும் கண்ணியமும் கட்டுப்பாடும் செயல்திறனும் மிக்க ஒரு காவல்துறையை தமிழர் தரப்பு கட்டியமைப்பது அவசியம்.

சிறிலங்கா இனப்படுகொலையரசையும், அதனை நிகழ்த்தி முடித்த இனக் கொலைஞர்களையும் காப்பதில் தமிழர்களும் அக்கறைகாட்டுவது ஒன்றும் புதிதல்ல. இனப்படுகொலை தொடங்கியகாலம் முதல் உள்நாட்டிலே சிங்களத்தைக் காத்த தமிழ்த் தரப்புகள் இருந்தன. அதே இனஅழிப்பைக் கரணியமாக முன்வைத்து புலம்பெயர்ந்த தரப்பிலும் சிறிலங்கா இனப்படுகொலையரசையும், அதனை நிகழ்த்தி முடித்த இனக் கொலைஞர்களையும் காப்பதற்கெனவும் தமிழர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானது அல்லவே. 
இந்தந் திரியிலே தலைப்புத் தொடர்பாகத் தொடங்கிப்பின் 'துறையப்பாவின் பேரன் யார்,, என நீண்டு விரிந்து துரோகியா, துரோகியில்லையா நாளைக்கு இன்னும் பலருக்குப்பட்டம் கொடுப்பீர்களா, அந்த விழாவுக்கு நாமும் வரலாமா என நீண்டு செல்கிறது. அதிற் தவறேதும் இல்லைத்தான். களமென்றால் கருத்தாடவும் குளமென்றால் நீந்தவும் வேண்டும்தானே. ஆனால், இங்கே நீந்துவதோடு சிறிலங்காவுக்குத் தங்கமுலாம் பூசலும் நடக்கிறது. 
துறையப்பா யார்? அவர்தொடர்பான வரலாற்றுத் தகவல் என்ன? தமிழருக் எதிராக என்ன செய்தார், என்பவற்றையும் தேடலாம் அல்லவா? நியாயப்படுத்துவதற்கான தேடலைப்போல், அவரது அநியாயங்களையும் தேடுவது நன்று என்பதே பொதுநிலைப் பண்பாக இருக்கமுடியும். 
சிறிலங்காவினது பிரதமாராக இருந்த சிறிமாவோவால் தமிழரது பண்பாட்டுத் தலைநகராக விளங்கும் யாழ் மண்ணிலே தமிழ் ஆராய்ச்சி மாநாடானது, உலகத் தமிழ் அறிஞர் பெருமக்களது பங்களிப்போடும், வருகையோடும் ஷஷஉலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,,  நடைபெறுவதா(?) என்ற இனவன்மத்துடனான தடைகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்றதைப் பொறுக்காது சிங்களப் காவற்றுறையெனும் காடையரைப் பயன்படுத்தித் தமிழர்களை கொன்றதைத் தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்களின் நினைவாலயம் இன்றும் இருக்கிறது. (தெரியாதவர்கள் யாழ்ப்பாணம் சென்றால் பார்க்கலாம்.) ஆனால், கொலைஞர்கள் இன்னும் தண்டிக்கப்படவுமில்லை. சிங்களம் ஒப்புக்காவது வருத்தம் தெரிவித்ததும் இல்லை. 
இடங்களைக் கொடுக்க மறுத்து மாநாட்டைக் குழப்பியடித்து சிறிமாவோ அரசின்  தமிழினக் கொலைக்கு உடந்தையாக இருந்த துறையப்பாவின் வம்சத்துக்கான நன்றிக்கடனோடு, தமக்கான வெள்ளையடிப்பையும் சிறிலங்காக் காட்டுமிராண்டிக் காவல்துறை மேலிடம் செய்கிறது. அண்மையில் வட்டுக்கோட்டைப் பகுதியிலே விசாரணைக்கென அழைத்துச் சென்று காவாலித்துறைக் காவலில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி யாழிலும் இடம்பெற்றதாக நினைவு. 

ஒருவேளை இந்தக் படுகொலைகளை அறியாதவர்களுக்காக, ஏனென்றால் யாழ்பாணத்தில் அப்படியொரு படுகொலை நடந்ததா என்ற வினா எழும்பினாலும் ஆச்சரியப்படமுடியாதுபோல் தெரிகிறது.
  1974.01.10 அன்று தமிழாராய்ச்சி மாநாட்டின்போது படுகொலைசெய்யப்பட்டோர்:
01) வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15 – மாணவன்)
02) பரம்சோதி சரவணபவன் (வயது 26)
03) வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32)
04) ஜோன்பிடலிஸ் சிக்மறிலிங்கம் (வயது 52 – ஆசிரியர்)
05) புலேந்திரன் அருளப்பு (வயது 53)
06) இராசதுரை சிவானந்தம் (வயது 21 – மாணவன்)
08) இராஜன் தேவரட்ணம் (வயது 26)
09) சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56 – ஆயுள்வேத வைத்தியர்)
10) சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14 – மாணவன்)
ஆகியோர் உள்ளடங்கலாகப் பதினொரு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என்பது கவனத்திற்குரியது. படுகொலைக்குத் தலைமைதாங்கிய சிங்கள அதிகாரி, மேலதிகாரியாக அப்போதைய பிரதமாரான சிறீமாவோவால்(சிறிலங்கா சுதந்திரக் கட்சி) பதவி உயர்த்தப்பட்டார் போன்ற சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டதே சிறிலங்கா அரசும் அதன் காவல்துறையும் என்பதைத் தமிழினம் அறிந்ததே. இன்னுமொரு உண்மை தெரிந்தாகணும், அதாவது இவரது குடும்பத்தினர் 1974இல் ஏன் கொழும்பில் இருந்து அகதியாப் போனது. 
நட்பார்ந்த நன்றியுடன்  
நொச்சி

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சிறிலங்காவினது பிரதமாராக இருந்த சிறிமாவோவால் தமிழரது பண்பாட்டுத் தலைநகராக விளங்கும் யாழ் மண்ணிலே தமிழ் ஆராய்ச்சி மாநாடானது, உலகத் தமிழ் அறிஞர் பெருமக்களது பங்களிப்போடும், வருகையோடும் ஷஷஉலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,,  நடைபெறுவதா(?) என்ற இனவன்மத்துடனான தடைகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்றதைப் பொறுக்காது சிங்களப் காவற்றுறையெனும் காடையரைப் பயன்படுத்தித் தமிழர்களை கொன்றதைத் தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்களின் நினைவாலயம் இன்றும் இருக்கிறது. (தெரியாதவர்கள் யாழ்ப்பாணம் சென்றால் பார்க்கலாம்.) ஆனால், கொலைஞர்கள் இன்னும் தண்டிக்கப்படவுமில்லை. சிங்களம் ஒப்புக்காவது வருத்தம் தெரிவித்ததும் இல்லை. 
இடங்களைக் கொடுக்க மறுத்து மாநாட்டைக் குழப்பியடித்து சிறிமாவோ அரசின்  தமிழினக் கொலைக்கு உடந்தையாக இருந்த துறையப்பாவின் வம்சத்துக்கான நன்றிக்கடனோடு, தமக்கான வெள்ளையடிப்பையும் சிறிலங்காக் காட்டுமிராண்டிக் காவல்துறை மேலிடம் செய்கிறது. அண்மையில் வட்டுக்கோட்டைப் பகுதியிலே விசாரணைக்கென அழைத்துச் சென்று காவாலித்துறைக் காவலில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி யாழிலும் இடம்பெற்றதாக நினைவு. 

இந்த மாநாட்டில் ..என்னுடைய சிறிய வயதில்...மேடையேற்றப்பட்ட  நாட்டுக்கூத்து ஒன்றில்..பாத்திரமேற்று...  நடித்திருக்கின்றேன் என்பதையும் பெருமையுடன்    சொல்லிக் கொள்கின்றேன்...சம்பவம் நடைபெற்ற வேளையில்கூட யாழ்நகரில்தான்..நின்றேன்...இப்ப  இங்கு ஒருவர் கல்குலேட்டருடன் வரப்போகிறார்...அப்ப துரையப்பா காலம் நான் சொன்னது..சரிதான் என்று😁

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, nedukkalapoovan said:

இல்லையே.. சொறீலங்கா பொலிஸை சுத்தமென்றெல்லோ சொல்லி இருக்குது.

இதை நான் வாசிக்கவில்லை அல்லது தவற விட்டுள்ளேன் எனில் சுட்டவும்.

இலங்கையில் வீதி, கட்டிடங்கள் என்பன 2003 இல் தான் வந்தபோது இருந்ததை விட இப்போ அபிவிருத்தி அடைந்துள்ளன என்கிறார். இது சரியான கூற்றுத்தானே (அதற்காக கடன்பட்டனர் என்பது வேறு).

ஆனால் இலங்கை பொலிஸ் திறம் என நற்சான்றிதழ் கொடுத்தாரா?

அப்படியாயின் எமது கனடிய அமைப்புகள் இதை கையில் எடுக்கலாம்.

ஏனெனில்,

1. இவ்வாறு சர்வதேச அரசியல் பேசுவது ஒரு பிராந்திய பொலிஸ் அதிகாரி தொழில் அல்ல, அவரின் தொழில் முறை கட்டுப்பாட்டை மீறுவதாய் ஆகலாம். கூடவே இவரின் கண்காணிப்பில் வரும் இலங்கை பூர்வீக கனடிய தமிழர்கள் பலர் இலங்கை பொலீசின் கொடுமைக்கு உள்ளானோர் என்ற வகையில், இவரின் பக்கசார்பின்மை பற்றிய நம்பிக்கையீனத்தை இவர் இப்படி சொல்வது ஏற்படுத்தலாம்.

2. கூடவே இப்படி சொல்வது இலங்கையின் பொறுப்புகூறல் இன்மை பற்றிய கனடிய அரசின் உத்தியோக பூர்வ நிலைப்பாட்டுக்கு எதிராக அமையும். ஒரு அரச உத்தியோகத்தாராய் இவர் இதை செய்வதும் கூடாது.

ஆனால் அதற்கு இவர் இப்படி இலங்கை பொலிசை பற்றி சொல்லி இருக்க வேண்டும்.

இல்லாமல் - கட்டிடம், ரோடு போட்டுள்ளார்கள் என சொன்னதை வைத்து எதுவும் செய்யவியலாது.

ஆனால் - சகல காவல்துறையும் ஏதோ ஒரு மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு கட்டுப்பட்டே இருக்கும்.

அந்தவகையில் parliamentary select committee for home affairs அல்லது இதை ஒத்த பிராந்திய அலகுக்கு, மக்கள் பிரதிநிதிகள் மூலம் இவரை அழைத்து, விஜயம் பற்றியும், கனேடிய அரசுக்கு அறிவித்தா போனார், வெளிவிவகார கோணத்தில் தலையிட்டாரா என்பதையும் கேள்விக்கு உள்ளாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, goshan_che said:

நானும் கனடாவில் இருப்பதனால்..2 உதாரணம் சொல்கின்றேன்..எனதுவீட்டு முற்றத்தில்  நின்ற வாகனத்தின் பிற்பக்கத்தில் யாரோ இடித்து பாரிய சேதம்என்னவென்று தெரியவில்லைபொலிசுக்கு  அறிவித்து ..இரு ஆபிசர்ஸ்  வந்தினம் ..மிக இள  ம் பையன்கள்..  ஒருவர் தமிழ்..இன்னொருவர் பாகிஸ்தான்….இவையை கண்டவுடன் ..அதிர்ச்சி..அந்த நம்ம அதிகாரி மகனின் வகுப்புத் தோழன் ..அத்துடன் எமதுவீட்டில் பிரத்தியோக பாடம் படித்த மாணவனும்அப்ப நானும் மனுசியும் ..எமக்கு நீதி கிடைத்துவிட்டதுபோல்மள மள  என்றூ  கொட்டித்தீர்த்தம்எல்லாவற்றையு பொறுமையாக கேட்டுவிட்டுஅன்ரி..அங்கிள்..இதுவாகனம் சடுதியாக திருப்பும்போது ஏற்பட்ட அடி..நீங்கள்  என்னதான்ஆதாரங்கள்  சொன்னாலும்..அதனை நாமும் எமது சட்டமும்தான் ..முடிவு செய்யும்தனிப்பட்ட முறையில்  என்னால் எதுவும்  எதுவும் செய்ய முடியாது

இப்படித்தான்..சிறீலன்க சென்ற நம்ம அதிகாரியிடம் ..தென்னக்கோன் கொட்டித்  தீர்த்திருப்பாரு.. குளிரவக்க கேடயமும் கொடுத்திருப்பார் அதிகாரி தம்முடைய  நிலையைச் சொன்னாலும் இதை கீழிருந்துபார்த்த சிங்களப் பத்திரிகைக்காரரும் ..தம்முடைய கற்பனைக்கு எழுதிகிழித்திருப்பினம்..அதை அப்படியே  ..யாழில்  உள்ள சிரீலன்கா நலன்விரும்பிகள்… ..சீனாவும் தானாவும் ஒன்றாயிட்டினம் என்று பீத்துகினம்

ஒருநண்பருக்கு ஏற்பட்டதுகுடும்பத்தகராறுபொலிசுவரை சென்றுகோட்சுவரை  போயாச்சு.. லாயரை வைச்சாச்சு…..லாயர் யாரென்றால்..மகனுடன் படித்தவர்நம்ம வீட்டிலும் வந்து படித்தவர்அப்ப அந்த நண்பர் சார்பாக ..லாயரிடம் நானும் மனைவியும்… நண்பபரின் இக்கட்டான   சூழ்நிலை பற்றி எடுத்துரைத்தோம்..அன்பாக கேட்ட லாயர்தம்பி….சொன்னது ..சூழ்நிலை விளங்குது..ஆனால் சட்டம் இடம்தராது….இப்படித்தான் .. நம்ம ஆபிசரும்  எல்லாவற்றையும் உன்னிப்பாக கேட்டிருப்பாருஆனல் கனடாவில் சட்டத்தை மீறமுடியாதேஆனால் யாழில் பக்க வாத்தியாகாரர் தமக்கேற்றவாறு தாளத்தை மாற்றிலங்கா மாதாவுக்குஜெயவேவா போடவைப்பினம்

Edited by alvayan
எழுத்துப்பிழை
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
34 minutes ago, goshan_che said:

இதை நான் வாசிக்கவில்லை அல்லது தவற விட்டுள்ளேன் எனில் சுட்டவும்.

9 hours ago, Kapithan said:

During the discussion, which covered various topics related to the security of both countries, programme aimed at strengthening community Police Units, implemented under advice and guidance of Minister Alles received special appreciation from the Canadian Police Chief.

Quote

The training also involves assistance in “community policing,” and in the past it has involved other components including crowd control.[7]

There is no evidence of any improvement in the human rights performance of the Sri Lankan police under the Gotabaya Rajapaksa administration. Our experience in Sri Lanka and elsewhere is that so long as there is no political will on the part of the government to end abusive police practices, no amount of “training” is going to bring significant improvements. Instead, continued training efforts merely appear to endorse the actions of an abusive police force.

https://www.hrw.org/news/2021/08/16/joint-letter-police-scotland-training-sri-lankan-police

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைப்பில் துரையப்பா அவர்களின் பேரப்பிள்ளை என உள்ளது. கலைக்களஞ்சியத்தில் மருமகன்/பெறாமகன் என உள்ளது. 

இங்கே எவருக்குமே நிசான் பற்றி இணையத்தகவல் நீங்கலாக எதுவும் தெரியவில்லை. 

இதை ஏன் இங்கே குறிப்பிட வேண்டும் என்றால் முதலில் தலைமை பொலிஸ் அதிகாரி நிசானுக்கு தமிழ் பேசத்தெரியுமா என்பதே ஒரு கேள்விக்குறி. அடுத்ததாக இவர் தன்னை தமிழராக அடையாளப்படுத்துகின்றாரா, இவர் வாழ்வியல் எப்படிப்பட்டது என்பது எமக்கு தெரியாது. அடுத்ததாக இவர் இலங்கை பிரச்சனைகளை எப்படி பார்க்கின்றார், துரையப்பா அவர்கள் சாவு விடயத்தை எப்படி பார்க்கின்றார் இவை எதுவுமே எமக்கு தெரியாது. இலங்கை/இலங்கை தமிழர் பிரச்சனை/கனடா தமிழர் பற்றிய நிசான் கண்ணோட்டம் யாது என்பது எமக்கு தெரியாது.

நிசான் மிக நீண்டகாலம் கனடாவில் வாழ்கின்றார் எனும் அளவில் அவர் நிச்சயமாக நம்மவர்களை மட்டுக்கட்டி இருப்பார். நம்மவர்களை எடைபோடத்தெரியாத ஒருவர் இவ்வளவு பெரிய உயர்நிலைக்கு வரமுடியாது. 

ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் அவர் இன்னோர் உறவினர் எனும் தகவலின் அடிப்படையில் இங்கே சேறடிக்கப்படுகின்றார்.

யாழ் களத்து ஜாம்பவான்களின் கருத்துக்களை பார்க்க புளகாங்கிதம் ஏற்படுகின்றது என நான் ஏற்கனவே மேலே கூறி உள்ளேன்.

இங்கே கோசான் ஒரு படி மேலே சென்று நிசானுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் எனும் அளவில் கருத்து சொல்லி உள்ளார். 

இங்கே எல்லாரும் அறிவாளிகள் அல்லவா. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் காட்டிய மேற்கோளில் முதலாவதை பகிர்ந்தவர் என் ignore list இல் இருப்பதால் அதை நான் இப்போதே காண்கிறேன்.

ஆனால் இதை வைத்து நிஷான் இலங்கை பொலிசுக்கு நற்சான்றிதழ் கொடுத்ததாக என்னால் கருத முடியவில்லை.

மாறாக கனேடிய பொலிஸ் உதவியுடன் இலங்கை பொலிஸ் செயற்படுத்திய, இலங்கை உள்நாட்டு அமைச்சர் வழிநடத்திய,  community policing units ஐ மேம்படுத்தும் செயற்திட்டம் நடந்தேறிய விதத்தை, நிஷான் பாராட்டியுள்ளார்.

இது ஒட்டுமொத்த இலங்கை பொலிசிற்கான, அதன் policing ற்கான பாராட்டு அல்ல, மாறாக குறித்த project ஐ, செயற்படுத்திய விதத்துக்கான பாராட்டு.

  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்  வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது. போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார். “நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது. ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு. எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”. இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர். குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும்.  புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர். போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது. மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின. புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது. ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது.  அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது. போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது. மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது. அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின. இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார். மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.  இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின. தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின. போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக  தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள். இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர். பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன. மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது.  சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து  தேர்வு செய்யப்பட்ட  ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர். ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள். இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது. மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது. குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில்  மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள். போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன.  இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும். உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர். வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார். திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது. உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார். தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர். பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள்.  ( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்) இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது. உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது. “எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்” என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம். https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/
    • கவனமா போய் வா மச்சான் !     புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.2017
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.