Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி

நான் இதை முழுமையாக பார்த்தபோது வடிவேல் ஓரு காமெடியன். ஆனால் இதை பார்த்து கேட்டு ரசித்து சிரித்து மகிழ்பவர்கள்???

ராமதாஸ்

விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன்

திருநாவுக்கரசு

உட்பட...😭

https://www.facebook.com/purush.piramu/videos/392695573178390/

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த காணொளியை மிக நீண்டகாலம் முன் பார்த்தேன். இது எத்தனையாம் ஆண்டு? ஸ்டாலினும் உட்கார்ந்து வடிவேல் அவர்களின் பேச்சை கேட்கின்றார். கடைசியில் தமிழ்நாடு அரச மரியாதையுடன் விஜயகாந்த் இறுதி நிகழ்வு நடந்துள்ளது.  காலம் எவ்வளவு விந்தையானது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நியாயம் said:

நானும் இந்த காணொளியை மிக நீண்டகாலம் முன் பார்த்தேன். இது எத்தனையாம் ஆண்டு? ஸ்டாலினும் உட்கார்ந்து வடிவேல் அவர்களின் பேச்சை கேட்கின்றார். கடைசியில் தமிழ்நாடு அரச மரியாதையுடன் விஜயகாந்த் இறுதி நிகழ்வு நடந்துள்ளது.  காலம் எவ்வளவு விந்தையானது.

2011ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது பேசின‌ காணொளி...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நியாயம் said:

நானும் இந்த காணொளியை மிக நீண்டகாலம் முன் பார்த்தேன். இது எத்தனையாம் ஆண்டு? ஸ்டாலினும் உட்கார்ந்து வடிவேல் அவர்களின் பேச்சை கேட்கின்றார். கடைசியில் தமிழ்நாடு அரச மரியாதையுடன் விஜயகாந்த் இறுதி நிகழ்வு நடந்துள்ளது.  காலம் எவ்வளவு விந்தையானது.

தொடர்புடைய காணொளி ஒன்று

https://fb.watch/pmr9zNl7kG/

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நியாயம் said:

நானும் இந்த காணொளியை மிக நீண்டகாலம் முன் பார்த்தேன். இது எத்தனையாம் ஆண்டு? ஸ்டாலினும் உட்கார்ந்து வடிவேல் அவர்களின் பேச்சை கேட்கின்றார். கடைசியில் தமிழ்நாடு அரச மரியாதையுடன் விஜயகாந்த் இறுதி நிகழ்வு நடந்துள்ளது.  காலம் எவ்வளவு விந்தையானது.

திராவிடம் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்குது அந்த கூட்டத்தில் வடிவேலின் கதையை கேட்டு சிரித்தவர்கள் விஜயகாந்தின் செத்த வீட்டுக்கு போய் வந்து விட்டார்கள் வடிவேலால் போகமுடியவில்லை வடிவேலின் சினிமா உலகமும் அந்த கதைக்கு பின் முடிந்தே போனது .

  • கருத்துக்கள உறவுகள்
#விஜயகாந்த், #வடிவேலு அரசியல் நமக்கு அப்பாற்பட்டது. இருவரையும் வெவ்வேறு காரணங்களால் எமக்கு பிடிக்கிறது.
வடிவேலு, மரணசடங்கில் கலந்து கலந்துகொள்ளாமைக்கு, எனது நண்பர் #இளவரசு சொல்லும் கோணம் சரியாக படுகிறது.
வாழ்வில் வடிவேலு எப்படியோ, திரையில் அவர் காமடிகிங். விஜயகாந்தே ரசிக்கும் போது நாம் ரசித்து கடப்போம்.

https://www.facebook.com/watch?v=1105562143953252

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜகாந்த் கூட வடிவேல் சம்பந்தப்பட்ட எந்தவொரு அறிக்கையோ மேடைப்பேச்சுக்களோ இடவில்லை எனும் போது நாங்கள் அவர்கள் இருவர் சம்பந்தமாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என்பது என் கருத்து.

சில வேளைகளில் தோட்டம் துரவுகளில் வைத்து  விஜயகாந்த் அவர்கள் வடிவேலுவுக்கு பச்சை மட்டையடி திருவிழா நடத்தியிருக்காலாம் என்ற ஊகம் எனக்குண்டு. ஏனென்றால் விஜயகாந்த் கறுப்பு எம்ஜிஆர். வடிவேல் வாய் திறக்க ஏலாத அளவுக்கு ஏதோ நடந்திருக்கு 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

வடிவேலு, மரணசடங்கில் கலந்து கலந்துகொள்ளாமைக்கு

இப்படியும் ஒரு பிரச்சனை நடைபெறுகிறதோ 🙄  மரணசடங்கில் கலந்து கொள்வது அல்லது கலந்து கொள்ளாமல் விடுவது அவர்களது விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2024 at 08:25, விசுகு said:

இது விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி

நான் இதை முழுமையாக பார்த்தபோது வடிவேல் ஓரு காமெடியன். ஆனால் இதை பார்த்து கேட்டு ரசித்து சிரித்து மகிழ்பவர்கள்???

ராமதாஸ்

விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன்

திருநாவுக்கரசு

உட்பட...😭

https://www.facebook.com/purush.piramu/videos/392695573178390/

வடிவேலுவின் பெருந்தன்மை பேச்சு, உண்மை முகம், கொஞ்சம் கூட சபை நாகரிகம் இல்லாமல் அரசியல் மேடையை நகைச்சுவை மேடையாக பாவித்து கைதட்டல் வாங்கியிருக்கிறார். நாளைக்கு நமக்கும் இதுதான் என்று உணராதவர்களும், தான் வெளியே தனித்து நிற்பேன் என்று அப்போ உணராத வடிவேலுவும். நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலுங் கூட மிதிக்கும் என்பார்கள். ஆனால் வடிவேலுவை பற்றி விஜய காந்த் பேசியதாக எங்கேயும் காண்பிக்கப்படவில்லை. பல தடவை விஜயகாந்த் சொல்லியதை கேட்டிருக்கிறேன், "என்னைப்பற்றி யார் எது வேண்டுமானாலும்  பேசினால் பேசிற்று போகட்டும், அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன், நான் செய்ய வேண்டியதை செய்து போட்டுபோவேன்." என்பார். சொன்னார், செய்தார். அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கடைசியில் நிரூபித்தார்கள், மக்களின் மனதை வென்றார். கள்ள வோட்டு வாங்காதவர்.                             

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

மரணசடங்கில் கலந்து கலந்துகொள்ளாமைக்கு, எனது நண்பர் #இளவரசு சொல்லும் கோணம் சரியாக படுகிறது.

சில ரசிகர்களின், தொண்டர்களின்  கேள்வியும், வருத்தமும், கோபமும்  இதுவே.  விஜயகாந்த் நோயுற்றிருக்கும்போதும் வடிவேலு அவரை  சந்தித்து வருத்தத்தை தெரிவிக்கவில்லை, அவர் இறந்த போதும்  காணொளியிலோ பத்திரிகை வாயிலாகவோ இரங்கலையும் தெரிவிக்கவில்லை என்பதே. அது வடிவேலுவுக்கும் வடிவாக தெரியும் அதனாலேயே தவிர்த்துக்கொண்டார். வடிவேலுவை எல்லோரும் ரசிக்க வேண்டும், எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்பதே அவரது பேச்சு தெளிவாக விளக்குகிறது. விஜயகாந்தின் வாழ்வு துதிப்பதற்கு உரியதென மக்கள் காண்பித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2024 at 09:09, பெருமாள் said:

திராவிடம் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்குது அந்த கூட்டத்தில் வடிவேலின் கதையை கேட்டு சிரித்தவர்கள் விஜயகாந்தின் செத்த வீட்டுக்கு போய் வந்து விட்டார்கள் வடிவேலால் போகமுடியவில்லை வடிவேலின் சினிமா உலகமும் அந்த கதைக்கு பின் முடிந்தே போனது .

நான் தற்செயலாக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வடிவேலு ஐயா பாடிய ஓர் பாடல் கேட்டேன். பாடல் சக்கை போடுபோடுகின்றது. தொலைக்காட்சியை பார்த்தால் அவரது புகழ்/பெருமை மங்கியமாதிரி தெரியவில்லை. யூரியூப், இதர சமூக ஊடகங்களில் சிலர் எழுதும் பின்னூட்டங்களை வைத்துக்கொண்டு நாம் என்னதான் ஊகிக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பழைய இணைப்பு, வடிவேலு இதனால் நன்றாக அனுபவித்துவிட்டார், மனிசன் திருந்தி இப்ப மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார், நடிகனாக பலரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கின்றார் இன்றுவரை👍

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயம் said:

நான் தற்செயலாக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வடிவேலு ஐயா பாடிய ஓர் பாடல் கேட்டேன். பாடல் சக்கை போடுபோடுகின்றது. தொலைக்காட்சியை பார்த்தால் அவரது புகழ்/பெருமை மங்கியமாதிரி தெரியவில்லை. யூரியூப், இதர சமூக ஊடகங்களில் சிலர் எழுதும் பின்னூட்டங்களை வைத்துக்கொண்டு நாம் என்னதான் ஊகிக்கலாம்?

ஓம் நிங்கள் சொல்வது போல் அந்த தெனாவட்டு  கதைக்கு முன் வருடத்துக்கு இரண்டு மூன்று நடித்தவர் அந்த தென வட்டு  கதை சொல்லியபின் வருடத்துக்கு 5௦ படங்களுக்கு மேல் நடிக்கிறார் நான்தான் இந்த விசர்  யூரியூப், இதர சமூக ஊடகங்களில் தவறாக வழிநடத்தபட்டு விட்டேன் 😀

என்ன இருந்தாலும் வடி வேலின் நகைசுவை போல் வராது .

உருவாகும் மீம்ஸ் முக்கால்வாசி அவருடைய படம்கள் இல்லாமல் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

எனக்கு வைகைப்புயல், கப்டன் இருவரிடையேயான முன்னைய பிரச்சனை சரியாக நினைவில் இப்போது இல்லை.  நான் நினைக்கின்றேன் கப்டன் வைகைபுயலுக்கு மிரட்டல் கொடுத்ததன் தொடர்ச்சியாகவே அவர் குழம்பினார் என. வீட்டுக்கு/வீட்டில்/வீடு தாக்கபடும் என்று மிரட்டல் செய்யப்பட்டதாக வாசித்து நினைவு.  

கப்டனும் கொஞ்சம் முன் கோபக்காரர் என்பதும் நாம் கவனிக்கத்தக்கது.  ஆட்களுக்கு முன்னேலேயே அவரது தொண்டர்களை அவர் அடிக்கும் காணொளிகள் முன்பு பகிரப்பட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நியாயம் said:

எனக்கு வைகைப்புயல், கப்டன் இருவரிடையேயான முன்னைய பிரச்சனை சரியாக நினைவில் இப்போது இல்லை.  நான் நினைக்கின்றேன் கப்டன் வைகைபுயலுக்கு மிரட்டல் கொடுத்ததன் தொடர்ச்சியாகவே அவர் குழம்பினார் என. வீட்டுக்கு/வீட்டில்/வீடு தாக்கபடும் என்று மிரட்டல் செய்யப்பட்டதாக வாசித்து நினைவு.  

கப்டனும் கொஞ்சம் முன் கோபக்காரர் என்பதும் நாம் கவனிக்கத்தக்கது.  ஆட்களுக்கு முன்னேலேயே அவரது தொண்டர்களை அவர் அடிக்கும் காணொளிகள் முன்பு பகிரப்பட்டது.  

ஒரு படத்தில்  ஒரு காட்சியில் விஜயகாந்தை பார்த்து வருங்கால முதல்வர் என  வடிவேல் சொல்லும் காட்சி அமைக்கப்பட்டதாம். அதற்கு வடிவேலு மறுக்கவே அங்கிருந்துதான் பிரச்சனை புகைய ஆரம்பித்ததாக பல வருடங்களுக்கு முன் வாசித்த ஞாபகம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.