Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிகாயவின் பௌத்த தேரர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட “இமயமலை பிரகடனத்திற்கு”க்கு சுவிட்ஸ்ர்லாந்து அரசாங்கம் நிதியளித்தமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் வெளியாகும் பிரதான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய பத்தியில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும், சட்டத்தரணி ஒருவர், இந்த முயற்சி ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பதிலாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலையீட்டுனான இந்த முயற்சிக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தியுள்ளது."

தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி | Switzerland Sponsored The Himalaya Declaration

ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், தமிழர்களும் இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச் சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையில், உலகத் தமிழர் பேரவை மற்றும் பௌத்தத் தேரர்களின் அறிக்கைக்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி அளித்திருப்பது உலகத் தமிழ் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேரர்களின் தனிப்பட்ட கருத்துக்கள்

இமயமலைப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், உலகத் தமிழர் பேரவைத் தலைவர்கள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. 

இவ்வாறான சூழலில் இந்த அறிக்கை அமரபுர நிகாயவின் கருத்து அல்ல என அந்த சங்கத்தின் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்ட அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி | Switzerland Sponsored The Himalaya Declaration

"இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது."

'அனைத்து சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்க' என அழைக்கப்படும் 'இமயமலைப் பிரகடனத்திற்காக' உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து. அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் தலைமையிலான தேரர்கள் குழுவே பிரதானமாக இப்பணியில் ஈடுபட்டது. பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.

தோல்வியடைந்த முயற்சிகள்

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கூட்டறிக்கை தொடர்பில் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. "மதங்களுக்கு இடையிலான முயற்சிகள் இலங்கைக்கு புதிதல்ல.

மாறாக, இத்தகைய முன்முயற்சிகள் சர்வதேச நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டு பல தசாப்தங்களாக ஒரு சிறிய அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

https://tamilwin.com/article/switzerland-sponsored-the-himalaya-declaration-1704820749

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலையீட்டுனான இந்த முயற்சிக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தியுள்ளது.

ஆத்திரம் கொண்ட வெளிநாட்டு தமிழ் சமூகத்தினர் சுவிற்சர்லாந்து  அரசாங்கத்துடனான ராஜதந்திர உறவுகளை துண்டிக்க முடிவு செய்துள்ளனர். சுவிற்சர்லாந்து மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வெளிநாடுவாழ் தமிழர்கள் தமக்குள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் அடைந்த தமிழர்கள் தமது ஒரு நாள் சமூக உதவி பணத்தை பெறாமல் சுவிஸ் அரசுக்கு தமது  அடையாள எதிர்ப்பை காட்டும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 😀😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, island said:

ஆத்திரம் கொண்ட வெளிநாட்டு தமிழ் சமூகத்தினர் சுவிற்சர்லாந்து  அரசாங்கத்துடனான ராஜதந்திர உறவுகளை துண்டிக்க முடிவு செய்துள்ளனர்.

உண்மை தான் நானும் அப்படித் தான் கேள்விப்பட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

குரைக்கிற நாய் கடிக்காது என்பது பேச்சு வழக்கு. 

ஆதலால் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. 

🤣

1 hour ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் நானும் அப்படித் தான் கேள்விப்பட்டேன்.

இராசதந்திரமா ? அப்படீன்னா என்னா ? 

""தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட""

நிராகரித்த தமிழர்களா? யாரப்பா அந்த நிராகரித்த டமில்ஸ்? 

தலயங்கமே அமர்க்களமாக இருக்கிறது. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

ஆத்திரம் கொண்ட வெளிநாட்டு தமிழ் சமூகத்தினர் சுவிற்சர்லாந்து  அரசாங்கத்துடனான ராஜதந்திர உறவுகளை துண்டிக்க முடிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தி அவர்களின் நலனுக்கு எதிரான சுவிட்ஸர்லந்து அரசின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து நானும்  சுவிட்ஸர்லந்துக்கு சுற்றுலா செல்வதை நிறுத்துவது என்று முடிவு செய்யலாமா என்பது பற்றி  யோசித்து கொண்டிருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இமயமலைப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், உலகத் தமிழர் பேரவைத் தலைவர்கள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. 

இவ்வாறான சூழலில் இந்த அறிக்கை அமரபுர நிகாயவின் கருத்து அல்ல என அந்த சங்கத்தின் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்ட அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

"இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது."

'அனைத்து சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்க' என அழைக்கப்படும் 'இமயமலைப் பிரகடனத்திற்காக' உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து. அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் தலைமையிலான தேரர்கள் குழுவே பிரதானமாக இப்பணியில் ஈடுபட்டது. பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.

தோல்வியடைந்த முயற்சிகள்

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கூட்டறிக்கை தொடர்பில் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. "மதங்களுக்கு இடையிலான முயற்சிகள் இலங்கைக்கு புதிதல்ல.

மாறாக, இத்தகைய முன்முயற்சிகள் சர்வதேச நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டு பல தசாப்தங்களாக ஒரு சிறிய அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதுக்கு என்ன சொல்கிறீர்கள்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

குரைக்கிற நாய் கடிக்காது என்பது பேச்சு வழக்கு. 

ஆதலால் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. 

🤣

இராசதந்திரமா ? அப்படீன்னா என்னா ? 

""தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட""

நிராகரித்த தமிழர்களா? யாரப்பா அந்த நிராகரித்த டமில்ஸ்? 

தலயங்கமே அமர்க்களமாக இருக்கிறது. 

🤣

இங்கு யார் விசையம் தெரியாமல் குரைப்பது....சிங்களவரே நிராகரித்து விட்டார்கள்...  ...கனடாவில ஒரு ஆள்   டமிலரல்லாத சி...ஆரென்று தெரிகிறதா

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, alvayan said:

இதுக்கு என்ன சொல்கிறீர்கள்...

அவசரப்படாமல் இருங்கள்  மூன்று மாதம் போக  ஏமாத்திட்டீங்களே என்று சொல்லுவார்கள்.   அவர்களுக்கு என்ன  உழைத்து செலவு செய்கிறார்களா?? இல்லையே??  சுவிற்சர்லாந்து கொடுக்கிறது,இன்னும் வேறு நாடுகளும் கொடுக்கிறதோ !  யார் கண்டார்???   உலகத்தை சுற்றி பார்த்து செலவு செய்ய வேண்டியது தான்    தமிழர்களின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்துவது  ஒரு விளையாட்டு  வருட வருடம் நடக்கும்  🤣😂. காலப்போக்கில் போட்டி கூட நடத்தலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, alvayan said:

இங்கு யார் விசையம் தெரியாமல் குரைப்பது....சிங்களவரே நிராகரித்து விட்டார்கள்...  ...கனடாவில ஒரு ஆள்   டமிலரல்லாத சி...ஆரென்று தெரிகிறதா

தனிமரம் தோப்பாகாது 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தி அவர்களின் நலனுக்கு எதிரான சுவிட்ஸர்லந்து அரசின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து நானும்  சுவிட்ஸர்லந்துக்கு சுற்றுலா செல்வதை நிறுத்துவது என்று முடிவு செய்யலாமா என்பது பற்றி  யோசித்து கொண்டிருக்கின்றேன்.

அப்படி செய்தால் நீங்கள் தான்  தீர்வு வர விடமால். குழப்பினீர்கள்  என்று சொல்வார்கள் யாழ் களத்தில் கூட எழுதுவார்கள் 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

தனிமரம் தோப்பாகாது 

🤣

அது நீங்கள் தான்...அதுகிடக்க உங்கள் (தனிய)இமய்மலைக்கு சிங்களவர் ஆதரவா ..இல்லையா..முதலில் அதை கூறிவிட்டு ...உங்கள்  பிழைப்பைப் பாருங்கள்...

6 minutes ago, Kandiah57 said:

அவசரப்படாமல் இருங்கள்  மூன்று மாதம் போக  ஏமாத்திட்டீங்களே என்று சொல்லுவார்கள்.   அவர்களுக்கு என்ன  உழைத்து செலவு செய்கிறார்களா?? இல்லையே??  சுவிற்சர்லாந்து கொடுக்கிறது,இன்னும் வேறு நாடுகளும் கொடுக்கிறதோ !  யார் கண்டார்???   உலகத்தை சுற்றி பார்த்து செலவு செய்ய வேண்டியது தான்    தமிழர்களின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்துவது  ஒரு விளையாட்டு  வருட வருடம் நடக்கும்  🤣😂. காலப்போக்கில் போட்டி கூட நடத்தலாம் 

இதுக்கு கனடாவில் இருந்து பக்கவாத்தியம் வேராஈ...😄

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

ஆத்திரம் கொண்ட வெளிநாட்டு தமிழ் சமூகத்தினர் சுவிற்சர்லாந்து  அரசாங்கத்துடனான ராஜதந்திர உறவுகளை துண்டிக்க முடிவு செய்துள்ளனர். சுவிற்சர்லாந்து மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வெளிநாடுவாழ் தமிழர்கள் தமக்குள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் அடைந்த தமிழர்கள் தமது ஒரு நாள் சமூக உதவி பணத்தை பெறாமல் சுவிஸ் அரசுக்கு தமது  அடையாள எதிர்ப்பை காட்டும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 😀😂

இவர்கள் என்ன செய்தாலும் இமயமலையை கொண்டு வந்து இலங்கையில் நிறுவப்படும்   நாலு மொட்டைகள் போதும்  மற்ற மொட்டைகள் பற்றி கவலையில்லை     🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

இவர்கள் என்ன செய்தாலும் இமயமலையை கொண்டு வந்து இலங்கையில் நிறுவப்படும்   நாலு மொட்டைகள் போதும்  மற்ற மொட்டைகள் பற்றி கவலையில்லை     🤣😂

கனடாவில் ஒருவரை விட்டு விட்டியள்....அவரையும் சேர்த்துக் கொள்ளுங்கோ😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அது நீங்கள் தான்...அதுகிடக்க உங்கள் (தனிய)இமய்மலைக்கு சிங்களவர் ஆதரவா ..இல்லையா..முதலில் அதை கூறிவிட்டு ...உங்கள்  பிழைப்பைப் பாருங்கள்...

நிலத்திலுள்ள மக்களுக்கு நன்மை நடக்குமானால் எந்த  முயற்சியும் வரவேற்கத் தக்கதே. 

முயற்சிகளைத் தடுக்கும் எந்த உரிமையும் புலம்பெயர் டமில்ஸ்சுக்கு இல்லை. தனக்கு எது தேவை என்பதை நிலத்தில் உள்ளவர்களே தீர்மானிக்க வேண்டும். தீர்மானிப்பார்கள். (அல்லது தீர்மானித்து வைக்கப்படும்). 

அந்த உரிமை பொருளாதார அகதிகளுக்கு இல்லவே இல்லை. அதிலும் குறிப்பாக, போராட்டத்திற்குச் சேகரிக்கப்பட்ட பணத்தை பதுக்கு வைத்திருக்கும் எலிகளுக்கு அப்படி ஒரு உரிமையும் இல்லை. 

👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அவசரப்படாமல் இருங்கள்  மூன்று மாதம் போக  ஏமாத்திட்டீங்களே என்று சொல்லுவார்கள்.   அவர்களுக்கு என்ன  உழைத்து செலவு செய்கிறார்களா?? இல்லையே??  சுவிற்சர்லாந்து கொடுக்கிறது,இன்னும் வேறு நாடுகளும் கொடுக்கிறதோ !  யார் கண்டார்???   உலகத்தை சுற்றி பார்த்து செலவு செய்ய வேண்டியது தான்    தமிழர்களின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்துவது  ஒரு விளையாட்டு  வருட வருடம் நடக்கும்  🤣😂. காலப்போக்கில் போட்டி கூட நடத்தலாம் 

இந்த  முயற்சி தோற்றால்  இன்னும் பல புதிய நூறு  முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ,மேற்கொள்ளப்படுகின்றன. 

இங்கே கேள்வி புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாமா என்பதுதான். 

அதற்குப் பதில் ஆம் என்பதே. 

அவை எல்லாம் வெற்றிபெறுமா?

முயற்சிகள் எல்லாமே வெற்றிபெறும் என்று கூற முடியாது. ஆனாலும்  தொடர்ந்து முயற்சிக்கப்படும். 

13ம் திருத்தம் +இந்திய இலங்கை உடன்படிக்கை + விபு காலத்திலான சமஸ்டி என்பன முயற்சிகளின் பலன்களே.

பலனை அறுவடை செய்யத் தெரியாமல் கோவணத்தையும் களற்றிக்கொடுத்ததற்கு மிகவும் முக்கிய  காரணம் புலம்பெயர் பொருளாதார அகதிகளே. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

பலனை அறுவடை செய்யத் தெரியாமல் கோவணத்தையும் களற்றிக்கொடுத்ததற்கு மிகவும் முக்கிய  காரணம் புலம்பெயர் பொருளாதார அகதிகளே. 

😏

ஓ நீங்கள்  அகதி இல்லைத்தானே....அப்ப ......  தானே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நிலத்திலுள்ள மக்களுக்கு நன்மை நடக்குமானால் எந்த  முயற்சியும் வரவேற்கத் தக்கதே. 

முயற்சிகளைத் தடுக்கும் எந்த உரிமையும் புலம்பெயர் டமில்ஸ்சுக்கு இல்லை. தனக்கு எது தேவை என்பதை நிலத்தில் உள்ளவர்களே தீர்மானிக்க வேண்டும். தீர்மானிப்பார்கள். (அல்லது தீர்மானித்து வைக்கப்படும்). 

அந்த உரிமை பொருளாதார அகதிகளுக்கு இல்லவே இல்லை. அதிலும் குறிப்பாக, போராட்டத்திற்குச் சேகரிக்கப்பட்ட பணத்தை பதுக்கு வைத்திருக்கும் எலிகளுக்கு அப்படி ஒரு உரிமையும் இல்லை. 

👍

முதல் பதில் சொல்ல வேண்டியது...இதுதான்...பிக்கும்மர் ,சிங்களவர்,ஆதரிக்கின்றனரா?

ரணில் ஆதரிக்கின்றாரா..

அமைச்சர்மார் யாராவது ஆதரிக்கின்றனரா..?

தமிழரசுக்கட்சி  ஆதரிக்கின்றதா

அல்லது மற்ற தமிழ் கட்சிகள் ..ஆதரிக்கின்றதா ?

மகிந்தவும் கட்சியும்  ஆதரிக்கின்றதா..

பிரேமதாசா,பீரிசு, அனுர திசநாயக்கா  ஆதரிக்கின்றனரா...

இதற்கு பதில் கூறிவிட்டு.. மற்றவர்களீண்   கோ ...பற்றி கதைக்கவும்...கூலிக்கு மாரடிக்கிறது...அதுக்கிள்ளை வெள்ளையும் சொள்ளையும் கதை

முதலில் நான் கேட்ட கேள்களுக்கு பதில் தரவும்...அது முடியாது...ஏனெனில் உங்கடை டிசைன் அப்படி

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, alvayan said:

நீங்கள் எதை கூறினாலும் முடிவெடுக்கும் அதிகாரம்  நிலத்திலுள்ள மக்களுக்கு மட்டுமே  இருக்கிறது. 

பொருளாதார அகதிகளுக்கு அல்ல. 

புதிய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என்றோ ஒருநாள் முயற்சி கைகூடும். உங்களால்  ஒன்றும் செய்ய முடியாது. 

😉

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  முயற்சி தோற்றால்  இன்னும் பல புதிய நூறு  முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ,மேற்கொள்ளப்படுகின்றன. 

இப்படியெல்லாம் முயற்சிக்க யார் உங்களுக்கு அதிகாரம் தந்ததது...அல்லது ..பாட்டும் நானே பாவமும் நானே போலவோ...அப்பு இது ஒரு இனத்திற்கான தீர்வு...சம்பந்த்தன் அய்யாவே இப்ப 50  வருசமாய் எம்பியாய் ,தலைவராய் இருந்து ,..தீபாவளீயைச்  சொல்லி காலம் கடத்துகிறார்...இதென்னடாஎன்றால் ..ஒரு அரசாங்கத்தின்ரை ஏஜென்டாய்...இருந்துகொண் டு....தீர்வுகுக்கதை ..கதைக்கிறியள்...ஒருதன் ஒரு கேள்வி கேட்டல் மறுமொழி கொடுக்கோணும்....அதை விட்டிட்டு பழைய கால பிரக்கிராசிமாதிரி திருப்பித் திருப்பி கேள்வி கேட்கிறது.... கோமணக்கதை கதைக்கிறது...நீங்கள் சார்ந்திருக்கின்ற  ஆட்களின்ரை கோ...நல்ல வாசமாம்..அதையே பாவியுங்கோ....குலைக்கிற   நாயைக்கண்டால் விலத்திப் ப்போவம் எண்ட மாதிரியும் ஒரூக்கால் கதை அடிபட்டது...வீட்டு நாயள்  நல்ல வளர்ப்புநாயள்தான் நான்...வழியாலை போற    சொறி நாய்..பெட்டை நாயைகண்டால்தன் குலைக்கும் ...இது விளங்கினால் சரி

21 minutes ago, Kapithan said:

நீங்கள் எதை கூறினாலும் முடிவெடுக்கும் அதிகாரம்  நிலத்திலுள்ள மக்களுக்கு மட்டுமே  இருக்கிறது. 

பொருளாதார அகதிகளுக்கு அல்ல. 

புதிய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என்றோ ஒருநாள் முயற்சி கைகூடும். உங்களால்  ஒன்றும் செய்ய முடியாது. 

😉

பொருளாதார   அகதிக்கும்  அந்த உரிமை இருக்கும் ..காட்டிக்கொடுக்கும் கயவர் கூட்டத்துக்கு  ஒருநாளும் இருக்காது.. வருசம் பிறந்திட்டுது..இனி புதுக் கணக்குத்தானே...போஸ்டை போடுங்க.. போடப் போட வரும் ... மாசக் கடைசியிலை சிவாஸ்றீகலும் தருவினம் ..அது உங்கடை திறமையிலைதான் இருக்கு.. இன்னமும் இருக்கு   பிறகு வாறன்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

புதிய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என்றோ ஒருநாள் முயற்சி கைகூடும். உங்களால்  ஒன்றும் செய்ய முடியாது. 

இது நேரடியாக ரணில் சொல்லித்தந்ததோ..

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பிரக்கிராசி அம்மா..அம்பிகா...எல்லாத்தையும்..புட்டு புட்டு..வைச்சவ... அதுகள்  ஒன்றுக்குமே பதில் இல்லை...அதோடை நான் கேட்ட கேள்விகளுக்கும் பதில் இல்லை..இதுக்கிள்ளை புதிசு புதிசா யோசிக்கினமாம்...இது என்ன மீன்கடையே...ஒரு இனமப்பா..பாதிக்கப்பட்ட இனம்...அதுகளின்தீர்வை..அந்த மக்கள் தீர்மானிக்க வேண்டும் அரச ஏஜெண்டுகள்  .. அல்ல..உங்கள்  சுயபுத்தியில்..காசு பெரிதெனப்பாராது...இனத்துக்கு சேவை செய்யவும்

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கை செல்ல காரணமான முக்கிய பெண்

இதுவும் அரசாங்கத்தின் ஆயுதத்தில் ஒன்று....கனடாவில் இது அவையின் பார்ட்டிகளீல் இலகுவாக கிடைக்கும்..அந்த .......தான் ...இங்கை ஓடி ஓடி அலைய வைக்குது...

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா எல்லோரும் ரென்சன் ஆகுறீங்க?  மரியானா அகழி (Mariana Trench) வரை எமது அரசியல் பலத்தை கொண்டு சென்று விட்டு இமாலய தீர்வு ( Himalaya) ( இமாலய பிரகடனம் அல்ல)  ஒன்று கிடைக்கும் என்று மனப்பால் குடிப்பது  ஓவராக தெரியவில்லையா?

 தற்போதைய நிலையில் தமிழ் அரசியலை நடத்துவதாக கூறும் தாயக, புலம்பெயர் அரசியலாளர்களின் வெற்றுக்கூச்சல்கள், அவர்களது மாயை அரசியல் ஆகியவை ஜதார்ததமான அரசியல் தீர்வை அடைவதற்கும்,  தமிழ்  மக்களின் இருப்பை  காப்பாற்றுவதற்கும் முடியாத அளவிற்கும் ஏன்  அதற்கு   கிட்ட கூட வரமுடியாத அளவுக்குமான  ஒரு பாரிய இடைவெளியுடன் உள்ளது  என்ற விடயம் சாதாரண பொது அறிவு உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிந்த உண்மை. அதனால் தானே என்னவோ தாயகத்தில் வாழும் புதிய தலைமுறையினர் இந்த மாயை அரசியல் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.  அத்துடன் ஏற்கனவே தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்று மாய்மாலம் காட்டி தமக்கு முன்னைய தலைமுறையை நாசப்படுத்தியது  போல தம்மையும் ஆக்கிவிடுவார்களோ என்ற முன்னைச்சரிக்கையாகவும் இருக்கலாம்.  கிடைத்த வாழ்வை இயன்றளவு மகிழ்வாக கழிக்க அவர்கள் விரும்புவது நியாயமே! அவர்களது கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றறைப் பலப்படுத்துவது அவர்களது முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.    

புலம் பெயர் புதிய தலைமுறையை பொறுத்தவரை ஶ்ரீலங்கா என்றால் தென்பகுதி அழகான கடற்கரை ரிசோட்டுகளும்,  மத்திய மலைநாட்டின் மிக ரம்மியமான எல்லே போன்ற மனத்தை கவரும் பிரதேசங்களே முன்நிற்கிறது என்பதை அத்த பிரதேசங்களுக்கு செல்வோர் அறிந்து கொள்ள முடியும்.    அதுவும் நியாமானது தான்.  உதாவாக்கரை அரசியல் சித்தாத்தங்களுக்குள் சிக்கிக் கொள்ளாது அவர்களாவது மகிழ்வாக வாழட்டும்.  

இனவாதம், அரசியல் பலமின்மை, ஜதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்க மறுக்கும் கும்பல் மனப்பான்மை, தர்ககரீதியில் விடயங்களை அணுகாமல் உணர்சி வசப்பட்டு அதனபால் விடயங்களை அணுகும் மனப்பான்மை ஆகிய காரணங்களால்,  ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்வது தற்போது வாழும் தலைமுறையில் சாத்தியமில்லை என்பதால்,  யாராவது அரசியல் தீர்வை நோக்கி சில கிலோமீற்றர் கள் கூட நகர்ந்து விடுவார்களோ என று எவரும் கவலை கொள்ள தேவையில்லை. நடக்கவே நடக்காது. ஆகவே நிம்மதியாக தமது மிகுதி வாழ்வை  வாழ்ந்து விட்டுப் போய்ச் சேருவதே எதிர் காலத்தலைமுறைக்கு இந்த தலைமுறை   செய்யக்கூடிய சேவை.  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எங்கு வாழ்ந்தாலும். தமிழன் தான்   தமிழனை புலம்பெயர் தமிழன் இலங்கையில் வாழும் தமிழன் என்று ஏன்  பிரிக்க வேண்டும்??   இலங்கையில் வாழும் தமிழருக்கு சுயாட்சி பற்றிய நேரடியான அனுபவம் இல்லை    புலம்பெயர் தமிழருக்கு சுயாட்சி பற்றிய போதிய அனுபவங்கள் உண்டு  எனவேதான் இலங்கையில் நிறுவப்படும் சுயாட்சி பற்றிய பேச்சுவார்த்தைகளில்  புலம்பெயர் தமிழர்களை தவிர்க்க முடியாது  கூடாது  புலம்பெயர் தமிழன் கதைக்கக்கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும் ????  இப்படி சொல்பவர்கள் சுரேன் சுரேந்திரனை ஆதரிக்க காரணம் என்ன?? அவர் புலம்பெயர் தமிழர் இல்லையா??     

ஒவ்வொரு தமிழனும் பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறான்.  ஆனால் ஏமாற்றப்போவதை இல்லை   பேச்சுவார்த்தை என்பது தீர்வு கண்டிப்பாக தருவேன் என்பவர்களுடன்  தான் பேச வேண்டும்   தமிழருக்கு தீர்வு கொடுக்க கூடாது  என்பவருடனும்,.என்னுடன் பேச விருப்பம் இல்லா விடில். வெளியில் போகலாம் என்பவனுடனும். ஏன்  பேச வேண்டும்??? என்ன பேச முடியும் ?? இங்கே எவரும் பேச்சுவார்த்தையை எதிர்க்கவில்லை   தொடர்ந்தும் ஏமாறுவதை எதிர்கிறார்கள். சும்மா கை கொடுத்த உடனும். இதோ தீர்வு வந்து விட்டது அதே தீர்வு வருகிறது என்று தமிழனை தமிழனே  திட்டமிட்டவகையில் ஏமாற்றுவதை எதிர்க்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

இப்படியெல்லாம் முயற்சிக்க யார் உங்களுக்கு அதிகாரம் தந்ததது...

இலங்கை அரசாங்கம்  ..ஏனென்றால் வெளிநாடுகளுக்கு சொல்லலாம் பேச்சுவார்த்தை தமிழர்கள் உடன் நடக்கிறது என்று   இப்படியே இந்த உலகில் வாழும் வரை பேசி கொண்டே இருப்பார்கள்  தீர்வு ஒருகாலும் வாராது  அது பேச்சுவார்த்தை இல் ஈடுபட்டிருக்கும் இருபகுதிக்கும். தெரியும் அவர்கள் எல்லாரதும் நோக்கமும் பேச்சுவார்த்தை தான்  தீர்வைப்பெறுவதல்ல  கொடுப்பதுமில்லை  இப்படி தமிழனை தமிழனே ஏமாற்றிக் கொள்கிறார்கள்   சிங்களவன் ஏமாற்றினால். என்ன??  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.