Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனியை விட பனஞ்சீனியும், தேனும் ஒருவகை இனிப்பு மருந்தாகும். வெள்ளை சீனியியை வெள்ளை நிறத்திற்கு கொண்டு வர பல கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றன. பனஞ்சீனி என்பது கரும்புச்சாறில் இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சீனி ஆகும். பனஞ்சீனி இயற்கை நிறம் மற்றும் மணத்துடன் கிடைப்பதால் அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கின்றன. அன்றாட வாழ்வில், பனஞ்சீனியை பயன்படுத்துவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

* பனஞ்சீனியில் விற்றமின்-பி6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும், இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும்.

* பனஞ்சீனியால் சருமத்தை ஸ்க்ரப் செய்வதன்மூலம், இறந்த செல்கள் சரும துளைகளில் படிந்திருக்கும் அவற்றை நீக்கும். மேலும் அழுக்கு மற்றும் தூசுக்களை அகற்றி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவும்.

* பனஞ்சீனியில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க இது பெரிதளவில் உதவுகிறது. மேலும், இதில் பசியைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதால், எடையை குறைக்க உதவுகிறது.

* பனஞ்சீனியில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் வலிகளைப் போக்கவும், வயிற்றுப் பிடிப்புகளைப் போக்கவும், வலியைக் குறைக்கவும், பனஞ்சீனி பயன்படுகிறது.   (ஐ)  

 

https://newuthayan.com/article/நாட்டுச்_சர்க்கரையின்_மருத்துவ_பலன்கள். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2024 at 08:41, தமிழன்பன் said:

பனஞ்சீனி என்பது கரும்புச்சாறில் இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சீனி ஆகும்.

உதயன் யாழிலிருந்து பனஞ்சீனியின் உற்பத்தி விளத்தம் சிறப்போ சிறப்பு. கரும்பிலிருந்து செய்வதால் கரும்புச் சீனியென்றல்லவா அழைக்கப்படுகிறது. அல்லது உதயன்காரர் பெயரை மாற்றிவிட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பனஞ்சீனி என்பது கரும்புச்சாறில் இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சீனி ஆகும். 

 

பனஞ்சீனி என்பது   பனைஞ் சாறிலிருந்து(கள்ளு ) இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சீனி ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்

பதனீரைப் பயன்படுத்தி பனங்கட்டி வந்தது. இப்பொழுது பனஞ்சீனியும் வந்திருக்கிறது. பனஞ்சீனி இலங்கையிலும் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்பட்டது. பனங்கட்டியினைச் செய்யும் முறையிலிருந்து சற்று வேறுபட்டு பனஞ்சீனி செய்யும் முறை அமைகிறது. பனம்பாணியினைக் காய்ச்சும் விதத்திலும் பின் அதனை இறுகச் செய்து பதப்படுத்தும் முறையிலும் சில வேறுபாடுகள் இருப்பதுதான் முக்கியம் எனலாம். மூலம் என்பது பதனீரே ஆகும்.

யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் காலத்திலே பனஞ்சீனிக் கென்று ஒரு தொழிற்சாலையானது பொலிகண்டிப் பகுதியில் அமைக்கப் பட்டிருந்ததாம். இங்கு பனஞ்சீனி செய்வதற்கான பதனீரினை -உடுப்பிட்டிகொற்றாவத்தை,  பருத்தித்துறைசிங்கைநகர் போன்ற இடங்களில் பெற்று குழாய் மூலமாக பொலிகண்டியில் அமைந்திருந்த பனஞ்சீனித் தொழிற்சாலைக்கு கொண்டு வந்திருப்பதாகச் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. இப்படியாகப் பெறப்பட்ட பதனீரின் மூலம் பனஞ்சீனி உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்னும் செய்தி மிகவும் காத்திரமான செய்தியாகவே இருக்கிறதல்லவா! அந்தத் தொழிற்சாலை அங்கு இருந்திருக்கிறது என்பதற்கான எச்சங்கள் இன்றும்  இருப்பதாக வடமராட்சி மக்கள் தெரிவிக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கது.

பிரித்தானியர் காலத்தின் தொடர்ச்சியோ தெரியவில்லை மீண்டும் பொலிகண்டியில் பனஞ்சீனித் தொழில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பொலிகண்டியில் தொடங்கப்பட்ட பனஞ்சீனிச் செய்கை பெரும் வெற்றியைக் கண்டிருக்கிறதுஅத்துடன் சண்டிலிப்பாயிலும் பனஞ் சீனி செய்யப்பட்டிருக்கிறது. பொலிகண்டியில் ஆரம்பிக்கப்பட்ட பனஞ்சீனிச் செய்கையினைக் கண்ணுற்றதால் ஆர்வமேற்பட்டு திருவடிநிலைமந்துவில்ருவம்பானை ஆகிய இடங்களில் முயற்சி எடுக்கப்ப ட்டபோதும் அது பொருந்தி வராமலே ஆகிவிட்டது, முயற்சி என்பது விடாமல் நடந்தபடி இருந்தது. இந்த நிலையில் 1971 ஆம் ஆண்டில் கீரிமலையில் ஆரம்பிக்கப்பட்ட பனம் பொருள் உற்பத்தி நிலையத்தில் சாத்தியமாகியது எனலாம். இலங்கையின் விஞ்ஞான சபையினரும்இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திச் சபையினரும் இணைந்து எடுத்த முயற்சியினால் பனஞ்சீனி உற்பத்தி என்பது புத்து யிர்ப்பினைப் பெற்றது என்று அறியக்கூடியதாக இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் பனஞ்சீனித் தொழிலானது முன் நோக்கிச் செல்லத் தொடங்கிய தெனலாம். 1972 - 1973 ஆண்டுகளில் சிங்கைநகர் பனம்பொருள் உற்பத்தி நிலையத்தால் பனஞ்சீனியின் உற்பத்தியானாது நல்ல வெளிச்சத்தைக் காட்டும் நிலைக்கு வந்தது. மக்களின் ஆதரவும் பெருகியது1974 - 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் தொழிற்சாலைகள் எழுச்சி பெற்று பனஞ்சீனி உற்பத்தி சிறப்பான ஒரு நிலையினை அடைந்தது என்பது நோக்கத்தக்கதாகும். இந்த வகையில் சரசாலைஅச்சுவேலிபருத்தித்துறைசண்டிருப்பாய்மந்துவில் ஆகிய இடங்களில் பனஞ்சீனியை உற்பத்தி செய்வதற்காக பாரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன என்பதுதான் முக்கிய செய்தியாகும். சிறப்பாகச் செயற்பட்டுநல்ல உற்பத்தியினையும் கொடுத்துமக்களின் மனதிலும் இடம்பிடித்து நின்ற பனஞ்சீனித் தொழில் - ஆட்சியிலிருந்த அரசின் கொள்கைகளாலும்நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தச் சூழ்நிலை காரணமாகவும், தொடரமுடியாத நிலைக்கு ஆளாகிவிட்டது என்பதும் நோக்கத்தக்கது.

இலங்கையில் பனஞ்சீனி உற்பத்தி என்று நோக்கும் பொழுதுஇந்தியாவின் சீனித் தொழில் நிபுணரான பேராசிரியர் றாவ் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இலங்கையின் சீனித் தேவைபற்றி அவர் ஆராய்ந்தார். அதன் படி அவர் பனஞ்சீனியைச் செய்வதையே பெரிதும் விரும்பினார் என்றுதான் அறியக் கூடியதாக இருக்கிறது. "சீனியை இறக்குமதி செய்வதால் ஏற்படும் சிக்கலிருந்து விடுபட  வேண்டுமானால்இயற்கை மூலவளங்களைப் பாவிக்க வேண்டும். பனையிலி ருந்து தரமான பனங்கட்டிபனஞ்சீனி செய்யலாம் " என்று அவர் தன் மனக்கருத்தை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் அமையாது "யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற பனை வளத்தைக் கொண்டுநல்லதொரு பனஞ்சீனி ஆலையை ஆரம்பிக்கலாம்" என்னும் அவரின் கூற்றும் மிகவும் முக்கியமானது என்பதைக் கருத்தில் எடுக்க வேண்டும். இந்திய நிபுணர் கூறியதோடுஅதற்கு வலுசேர்க்கும் வகையில் ஜேர்மனியின் பொருளாதார நிபுணர்களும் யாழ்ப்பாணத்தில் "பாரிய சீனித் தொழிற்சா லையினை அமைக்கலாம்" என்று அறிவுறுத்தியமையும் மனங்கொள்ளல் வேண்டும்.

தமிழ்நாட்டில் பனஞ்சீனியைத்  தயாரிப்பதில் நிபுணத்துவம் மிக்கவர்கள் பலர் மாநிலம் தோறுமே இருக்கிறார்கள். பனஞ்சீனியின்  பயன்பாடும் அங்கு இருக்கிறது. சித்த வைத்தியத்தை பெரிதாக எண்ணுகின்றவர்கள் பலர் இருக்கின்ற காரணத்தால்  பனஞ்சீனி பற்றிய  புரிதல் அங்கு இருக்கிறதுநேச்சுரல் ஃபுட்ஸ் அண்ட் ஹெர்ப்ஸ் என்னும் பெயரில் ஒரு நிறுவனத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரவணன் என்பவர் தொடங்கி இருக்கிறார். திருச்செங்கோட்டையைச் சேர்ந்த இவர் கணணித்துறையில் பட்டம் பெற்ற ஒரு பொறியியலாளராவார்இவரின் தாத்தா பனங்கட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இவரின் அப்பாவே ஒரு துணைக் கலெக்டராவார். தாத்தாவின் உணர்வு பேரனான சரவணனுக்குள் ஏற்பட்ட காராணத்தால் படித்த படிப்பினை ஒரு பக்கம் வைத்து விட்டு பனையின் பக்கம் வந்துவிடார். இவரும் மனைவியுமாக இணைந்து பனங்கட்டிபனஞ்சீனி செய்வதில் ஈடுபட்டு  நிற்கிறார்கள் என்பது நோக்கத்தக்கது. இவர்களின் விடா முயற்சியினால் பலரும் பயன் அடைகிறார்கள். பனஞ்சீனியும் விற்பனைக்கு உகந்த விதத்தில் உற்பத்தி செய்ய்யப்பட்டும் வருகிறது.

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பனைவெல்ல உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள்இயங்குகின்றன. இந்தச் சங்கங்கள் வாயிலாக பனஞ்சீனி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பனங்கட்டியைப் போலவே பனஞ்சீனியையும் பானங்களுக்கும்இனிப்பான பொருட்கள் செய்வதற்கும் பயன்படுத்தலாம். பனஞ்சீனியில் செய்யப்படுகின்ற அத்தனையும் நல்ல சுவையினைத் தருவதோடு உடலின் ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாகவும் இருக்கும் என்பதுதான் முக்கியமாகும்.

பதனீரின் அவதாரங்களில் பனங்கற்கண்டு அதாவது கல்லாக் காரமும் ஒரு நிலை எனலாம். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பனங்கல்லாக்காரம் நிச்சயம் இருக்கும். அதற்குக் காரணம் அதன் பயன்மிக்க மருத்துவக் குணமேயாகும். ஆயுள் வேதம்சித்த மருத்துவம் இரண்டுமே பனங்கற்கண்டை விதந்தே கூறுகின்றன. ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதாக இவை தெரிவிக்கின்றன. தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டவுடன் யாவரும் நாடுவது பனங்கற்கண்டையேயாகும். சங்கீதம் பாடுகிறவர்கள் பனங்கற் கண்டை மிகவும் பத்திரமாகவே வைத்திருப்பார்கள். குரலில் கரகரப்பு வந்ததும் வாயில் போட்டு உமிழ்வார்கள், அடைப்பும் போய் குரலும் தெளிவாகிவிடும். இருமலுக்கு மிகவும் உகந்ததாக கல்லாக்கரம் விளங்குகிறது.

கண்ணில் வெப்பம் காரணமாக சிவப்பாக மாறும் நிலை ஏற்படும் பொழுது கல்லாக்கரத்தை நீரில் கரைத்து கண்ணில் விட்டு விட்டால் அந்த நிலை மாறியே விடுகிறதாம் என்றும் கூறுவார்கள். கல்லாக்காரத்தில் மிளகினைக் கலந்து பயன்படுத்தி வந்தால்எமக்கு வருகின்ற இருமல்சலக்கடுப்புதொண்டையில் வரும் கரகரப்பு, உள்நாக்கு வளருதல் ஆகியன சுகமாகும் என்று அறியக்கூடியதாக இருக்கிற து. நோய்களைக் குணமாகும் . உடலைக் குளிர்மையாக வைத்திருப்பதற்கு பனங்கற்கண்டு உதவி நிற்கிறது. இதனால் சின்னமுத்து வந்தால் பனங்கற்கண்டையே கையிலெடுத்தார்கள் என்பதும் நோக்கத் தக்தக்கது. தமிழ்நாட்டிலே குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழாக்களிலும்சுபமுகூர்த்த வேளைகளிலும் வந்திருக்கும் உறவினர்களுக்கும் பனங்கற் கண்டைக் கொடுத்தும் மகிழுகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

பனங்கற்கண்டானது யாழ்ப்பாணத்தில் முன்னர் உற்பத்தியாகி இருந்தபொழுதும்பனம் பொருள்களை நவீன முறையில் உற்பத்தி செய்யும் வகையில் கீரிமலையில் தொடங்கப்பட்ட உற்பத்தி நிலையத்தில் தான் பின்னர் செய்யப்பட்டது என்று அறிகின்றோம். எனினும் பனங்கற்கண்டு உற்பத்தியானது சீராக இருக்கவில்லை என்பதைத்தான் கருத்திருத்த வேண்டி இருக்கிறது. இலங்கைக்கு பனங் கற்கண்டின் தேவை மிகவும் வேண்டியே காணப்பட்டது. குறிப்பாக இலங்கையின் ஆயுள்வேதக் கூட்டுத்தாபனம் விரும்பியே நின்றது. இதனால் அதன் தேவையினைப் பூர்த்தி செய்ய இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பனங்கற்கண்டு போதாதிருந்தததால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் அவசியம் ஏற்படலாயிற்று.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் உடன்குடிகொட்டங்காடு, சிறுநாடார் குடியிருப்புசாத்தான்குளம்அடைக்கலநாதபுரமும் இந்தியாவின் வங்காளமும் பனங்கற்கண்டு உற்பத்தியில் முன்னணி வகித்திருந்தன என்பதும் நோக்கத்தக்கது. யாழ்பாணத்தில் பனைவள மிருந்தும் பனங்கற்கண்டைஇறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் மனமிருத்தல் வேண்டும். பனங்கற்கண்டு மருத்துவப் பயன்பாடு மிக்கதாக அமைந்திருப்பதால் அதன் உற்பத்தியிலும் கவனம் செல்லுத்துவதில் அக்கறை கொள்ளுவது அவசியமேயாகும்.

பதனீரின் நிறைவாகக் கழிவுப் பாகு அமைகிறது. பெயர் என்னவோ கழிவுப் பாகு என்று இருந்தாலும் அதுவும் பயனையே அளித்து நிற்கிறது என்பதுதான் முக்கியமாகும். இந்தக் கழிவுப்பாகில் ஊட்டச் சத்து இருக்கிறதாம். பதனீரில் காணப்படுகின்ற சத்து கழிவுப்பாகில் வந்து சேருகிறதாம். இதனுடை கறுப்பு நிறத்தால் இது மக்களால் ஒதுக்கப்படுகிறது. இப்பாகில் கந்தகம் கலந்து காணப்படுகின்ற காரணத்தால் அதனைப் பயன்படுத்தாமல் மக்கள் ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். இதனை உரிய முறையில் சுத்தீகரித்து எடுத்தால் சுவை மிக்கதான பாகினைப் பெறக்கூடியதாகவே இருக்கும். இப்படியான பாகினை பானங்களுக்கும்இனிப்புப் பதார்த்தங்கள் செய்வதற்கும் பயன்படுத்தலாம் என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். மருத்துவத்துக்கும் கழிவுப்பாகு உதவி நிற்கிறது என்பதும் முக்கியமாகும்.

புகையிலை பதப்படுத்தலிலும் கழிவுப்பாகினைப் பயனாக்குகின்றனர். பால் கறக்கும் மாடுகளுக்குக் கொடுக்கப்படும்புண்ணாக்குபுல்லுதவிட்டுடன் கழிவுப்பாகினைக் கலந்து கொடுத்தால் பால் நன்றாகவே சுரக்குமாம். மற்றைய கால்நடைகளுக்கும் கொடுக்கும் பொழுது அவையும் சிறப்பாக உழைக்குமாம் என்பதும் நோக்கத்தக்கது. இவற்றை விடக் கட்டிடப் பயன்பாடு, எரிபொருள், வினாகிரி உற்பத்தி என்ற வகையிலும் கழிவுப்பாகு பயனாகி நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்

http://www.tamilmurasuaustralia.com/2022/06/blog-post_95.html

On 12/1/2024 at 08:41, தமிழன்பன் said:

பனஞ்சீனியில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க இது பெரிதளவில் உதவுகிறது. 

இதை நான் மிகப் பெரிய பகிடி என்று சொன்னால் இந்தத் திரியும் கிழித்துத் தொங்க விடப்படும். 😂

உள்ளூரில் வெள்ளைச் சீனிக்கு மாற்றீடாக பனஞ்சீனியைப் பாவிக்கலாம். அதற்காகப் புரளிகளைப் பரப்பக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

பலப்பல பயன்களையும் தொட்டுச் செல்கின்றது கட்டுரை........!  👍

நன்றி ஏராளன் .......!  

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

பலப்பல பயன்களையும் தொட்டுச் செல்கின்றது கட்டுரை........!  👍

நன்றி ஏராளன் .......!  

@Justin  வர முதல் சொல்லுறதை சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் காலத்திலே பனஞ்சீனிக் கென்று ஒரு தொழிற்சாலையானது பொலிகண்டிப் பகுதியில் அமைக்கப் பட்டிருந்ததாம்.

இணைப்புக்கு நன்றி,

வெயில் காலத்தில் ஏற்படும் தொண்டைக் கரகரப்பு ஏற்படும்போது பாவித்தால் கரகரப்புக் குறையும். அன்னம் என்ற பெயரில் இந்தியாவிலிருந்து வருகிறது. பனம்பொருள் உற்பத்திச் சபை இதுபோன்ற தொழில் முயற்சிகளை ஊக்குவித்தால் அன்னியச் செலாவணியை ஈட்டலாம். இன்று நவீன கருவிகளை தேவைக்கேற்றவாறு தயாரித்துப் பெறக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. மூலப்பொருளைத் திரட்டுவதற்கான பொறிமுறைகளை இலகுவாக்கி இலாபமீட்டும் தொழிலாக மாற்றலாம். பொலிகண்டியில் 50ஆண்டுகளின் முன் இருந்த தொழிலை மீண்டும் ஏன் கொண்டுவரக்கூடாது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பனஞ்சீனியை கேக்கிற்கு போட்டால் அந்த சுவை வராது என்று நினைக்கிறேன் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பனஞ்சீனியை கேக்கிற்கு போட்டால் அந்த சுவை வராது என்று நினைக்கிறேன் ☹️

சீனியின் சிறப்பியல்புகளில் ஒன்று அது எதனுடன் கூட்டுச் சேர்ந்தாலும் மூலப்பொருளின் சுவையை மாற்றுவதில்லை என நினைக்கிறேன். இந்தச் சிறப்பியல்பு பிற சுவையூட்டிகளுக்கு இல்லை. . 

விற்பன்னர்கள் மேடைக்கு வரவும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.