Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2024 at 07:13, Elugnajiru said:

சிறீலங்காவின் நாடாளுமன்றில் ஒரு சிங்கள உறுப்பினர் ஒரு மாதத்திற்குள் சாணாக்கியனின் காதலி ஒரு சிங்களப்பெண் அவரைத்தன் சாணாக்கியன் திருமணம் செய்யவுள்ளார் எனக்கூறும் போது சாணாக்கியன் எந்தப்பதிலும் கூறவில்லை.

அப்படி அவர் சுத்தமானவராக இருந்தால், தனது நாடாளுமன்றப் பதவியின் அடிப்படை உரிமையை சம்பந்தப்பட்ட ஊறுப்பினர் மீறுகிறார் எனக்கூறியிருக்கவேண்டும். இந்த ஆதாரம் போதுமா

நான் வாழுவது பின்லாந்து நாட்டில் இப்போது பின்லாந்தின் அடிப்படைவாதிகளும் பணக்காரர்களுக்குமான கட்சியும் சேர்ந்தேதான் அரசை அமைத்திருக்கிறது 

குறிப்பிட்ட அளவு பல்லின மக்கள் இங்கும் வாழுகிறார்கள். அதில் அனேகமானவர்கள் வேலைசெய்தே தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்கிறார்கள்.

பின்லாந்தின் அடிப்படைவாதக்கட்சி என்ன சொல்லுது என்றால் பின்லாந்து பின்லாந்தியர்களுக்கே என, இலங்கைத் தீவிலிருந்து நான் புலம்பெயரக்காரணமானது சிங்கள அடிப்படைவாதமே ஆனால் சிங்கள் அடிப்படைவாதம் எனப்படுவது சிங்களவர்களுக்கு இருந்தே ஆக வேண்டும் அதேவேளை மாற்று இனத்தவர்களுக்கான உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என.

பின்லாந்தின் அரசமைப்பு மற்றும் சட்டதிட்டங்கள் அனைத்தும் பின்லாந்தியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது அது கனடாபோன்ற பல்லினமக்கள் வாழும் நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுடன் ஒத்துப்போகாது. ஏன் பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுடனேயே ஒத்துப்போகாது. 

பின்லாந்து மக்களது எண்ணங்களுடன் நான் ஒத்துப்போகிறேன் அந்தவகையில் சுத்த தமிழ்தேசிய அடிப்படைவாதம் எனக்கு இருந்தால் எவருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை. நான் அப்படியே இருந்துவிட்டுப்போகிறேன்.

நான் எந்தவிதமான ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எனது எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பதுபோல்
நான் எந்தவிதமான சிந்தனை உடையவனாக இருக்கவேண்டும் என்பதையும் எனது எதிரிதான் தீர்மானிக்கிறான்.

சும்மா சகோதரத்துவம் தேசிய ஒருமைப்பாடு எனக்கூறிக்கொண்டிருந்தால் சுரணை கெட்டவனாக இருப்பதுபோன்றதாகும்.

சிங்களப் பெண்ணை அவர் காதலித்தால் அவர் "சுத்தமில்லை" என்கிறீர்கள்😂! மற்ற படி சும்மா அலட்டிக் கொண்டிருக்கும் இன்னொரு பா.உ வின் கருத்துக்கு தன் நேரத்தைச் செலவழித்து சாணக்கியன் பதில் சொல்லாமை உங்களுக்கு ஆதாரமாகத் தெரிகிறது.   எனக்குத் தெரியவில்லை!

கீழே இருக்கும் பந்தி எனக்கில்லையானாலும் இதைச் சொல்ல வேண்டும்: பின்லாந்து பின்லாந்தியருக்கு, பிரிட்டன் பிரிட்டிஷ் காரருக்கு, சிறி லங்கா சிங்களவருக்கு என்று ஏற்றுக் கொண்டு விட்டு பிறகேன் சிங்களவன் அதிகாரத்தைப் பகிரவில்லையென நீங்கள் முறைப்பாடு செய்கிறீர்களென விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பின்லாந்து பின்லாந்தியருக்கே இங்கிலாந்து இங்கிலாந்துக்காரர்களுக்கெ அவை எம்மைப்போன்ற வந்தேறிகுடிகளுக்கானதல்ல.

சிலவேளை கனடா வந்தேறு குடிகளுக்கானதாக இருக்கலாம் காரணம் அது பல்லின மக்களது குடியேற்ற நாடாகவே இப்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் இலங்கைத்தீவில் தமிழினம் என்பது நீண்டகாலமாக வாழும் இனக்குழுமம் அவர்களுக்குத் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றில் யோக்கியதை இருக்கு அதை மறந்துவிட்டுப் பேசாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

சிங்களப் பெண்ணை அவர் காதலித்தால் அவர் "சுத்தமில்லை" என்கிறீர்கள்😂! மற்ற

அப்படி சொல்லக்கூடாது அவர்கள் அழகிய பெண்கள்   கவி அருணாச்சலம். உருலா கதைகளில் இணந்து உள்ளார் பாருங்கள்  எனவே அவர் காதலிக்கட்டும். திருமணம் செய்யலாம் 🤣. இனிமேல் தமிழர்கள் சிங்களவர் நாடு முழுவதும் கலந்து தான் வாழ வேணடும் தமிழ் பகுதி சிங்களப்பகுதி   என தனிமைப்படுத்தல் இருக்காது  இதை தான் அரசாங்கம் செய்கிறது   1983 போல் கலவரங்கள் எற்பட்டால் தமிழர்கள் ஒட அல்லது கப்பலில் எற்றி அனுப்பி வைக்க இடமில்லை  எனவே தமிழன் ஒடமுடியாது  அந்த அந்த இடங்களிலும் வைத்து  சிங்களவனுக்கு  திருப்பி அடிக்கலாம் ....🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Elugnajiru said:

பின்லாந்து பின்லாந்தியருக்கே இங்கிலாந்து இங்கிலாந்துக்காரர்களுக்கெ அவை எம்மைப்போன்ற வந்தேறிகுடிகளுக்கானதல்ல.

சிலவேளை கனடா வந்தேறு குடிகளுக்கானதாக இருக்கலாம் காரணம் அது பல்லின மக்களது குடியேற்ற நாடாகவே இப்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் இலங்கைத்தீவில் தமிழினம் என்பது நீண்டகாலமாக வாழும் இனக்குழுமம் அவர்களுக்குத் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றில் யோக்கியதை இருக்கு அதை மறந்துவிட்டுப் பேசாதீர்கள்.

நீண்ட காலமென்றால் எவ்வளவு காலம் என்றும் சொல்லுங்கள். சிங்களவரும் இதே வாதத்தோடு வருவர் என நினைக்கிறேன். தயாராக பதில் இருக்க வேண்டுமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2024 at 13:13, Elugnajiru said:

சிறீலங்காவின் நாடாளுமன்றில் ஒரு சிங்கள உறுப்பினர் ஒரு மாதத்திற்குள் சாணாக்கியனின் காதலி ஒரு சிங்களப்பெண் அவரைத்தன் சாணாக்கியன் திருமணம் செய்யவுள்ளார் எனக்கூறும் போது சாணாக்கியன் எந்தப்பதிலும் கூறவில்லை.

அப்படி அவர் சுத்தமானவராக இருந்தால், தனது நாடாளுமன்றப் பதவியின் அடிப்படை உரிமையை சம்பந்தப்பட்ட ஊறுப்பினர் மீறுகிறார் எனக்கூறியிருக்கவேண்டும். இந்த ஆதாரம் போதுமா

நான் வாழுவது பின்லாந்து நாட்டில் இப்போது பின்லாந்தின் அடிப்படைவாதிகளும் பணக்காரர்களுக்குமான கட்சியும் சேர்ந்தேதான் அரசை அமைத்திருக்கிறது 

குறிப்பிட்ட அளவு பல்லின மக்கள் இங்கும் வாழுகிறார்கள். அதில் அனேகமானவர்கள் வேலைசெய்தே தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்கிறார்கள்.

பின்லாந்தின் அடிப்படைவாதக்கட்சி என்ன சொல்லுது என்றால் பின்லாந்து பின்லாந்தியர்களுக்கே என, இலங்கைத் தீவிலிருந்து நான் புலம்பெயரக்காரணமானது சிங்கள அடிப்படைவாதமே ஆனால் சிங்கள் அடிப்படைவாதம் எனப்படுவது சிங்களவர்களுக்கு இருந்தே ஆக வேண்டும் அதேவேளை மாற்று இனத்தவர்களுக்கான உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என.

பின்லாந்தின் அரசமைப்பு மற்றும் சட்டதிட்டங்கள் அனைத்தும் பின்லாந்தியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது அது கனடாபோன்ற பல்லினமக்கள் வாழும் நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுடன் ஒத்துப்போகாது. ஏன் பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுடனேயே ஒத்துப்போகாது. 

பின்லாந்து மக்களது எண்ணங்களுடன் நான் ஒத்துப்போகிறேன் அந்தவகையில் சுத்த தமிழ்தேசிய அடிப்படைவாதம் எனக்கு இருந்தால் எவருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை. நான் அப்படியே இருந்துவிட்டுப்போகிறேன்.

நான் எந்தவிதமான ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எனது எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பதுபோல்
நான் எந்தவிதமான சிந்தனை உடையவனாக இருக்கவேண்டும் என்பதையும் எனது எதிரிதான் தீர்மானிக்கிறான்.

சும்மா சகோதரத்துவம் தேசிய ஒருமைப்பாடு எனக்கூறிக்கொண்டிருந்தால் சுரணை கெட்டவனாக இருப்பதுபோன்றதாகும்.

நீங்கள் அடிப்படை வாதத்தை ஆதரீக்கின்றீர்கள்.  சிங்கள அடிப்படைவாதமும் இருந்தே ஆகவேண்டும் என்று கூறுகின்றீர்கள். 

சகோதரத்துவம் சுரணை கெட்டது என்று அதைச் சாடுகின்றீர்கள்.

அடிப்படை வாதம் என்பது ஏன் ஆபத்தானது என்று உலகில் கூறப்படுகின்றது என்றால்,  அது சகிப்புத்தன்மையற்றது . அடிப்படைவாதம் என்பது  பலமடையும் போது அங்கு வாழும் சிறுபான்மை இனங்களை அழித்து விடும்.  

இலங்கையில் சிங்கள அடிப்படைவாதம்  பலமடைந்து அது தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதை நீங்கள் தர்ககரீதியில் ஆதரிக்கின்றீர்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் அடிப்படைவாதம் சிங்களவருக்கும் தேவை என்று நீங்கள் அதை ஆதரித்திருப்பதால். 

பின்லாந்தில் வலதுசாரி  அரசு இன்று இருந்தாலும்,  பின்லாந்து அடிப்படை வாத நாடு அல்ல. வலது சாரிக்கும் அடிப்படைவாதத்திற்கும் வித்தியாசம்  உள்ளது. 

மொத்த சனத்தொகையில் 5 வீதமே உள்ள சுவிடிஷ் மக்களுக்காக அவர்களது மொழியை அரச கரும மொழியாக அரசியலமைப்பில் சேர்ததுள்ள நாடு எப்படி  அடிப்படைவாத நாடாக இருக்க முடியும்.  சகோதரத்துவம் உள்ள நாடுதான். 

நீங்கள் அடிப்படைவாதியாக   இருப்பதில் இருப்பதில்  யாருக்கும் பிரச்சனை இல்லை. அப்படியே இருந்துவிட்டு போங்கள். ஆனால் அடிப்படை வாதக்கருத்தை நீங்கள் பொதுவெளியில் வைக்கும் போது அதை தவறு என்று சொல்லும் உரிமை எமக்கு உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விடையம் என்னவெனில் 

2009 க்குப் பின்பு தமிழர் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகச் எதிர்பாராத விடையமாகச் சிங்களமும் அவர்களது அரசியல்வாதிகளும் அவர்களது சிந்தனையைச் செயல்வடிவம் கொடுக்கும் நாடாளுமன்றமுமே இருக்கு இதை யாராலும் மறுதலிக்க முடியாது 

தமிழர் தலைமைகள் (?) அங்குபோய்தான் தங்கள் கோரிக்கைகளை வெளியிடமுடியும் .

அந்த நாடாளுமன்றில் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு சிங்கள அடிப்படைவாத, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் அடிப்படைவாதத்தை சபையில் கக்குவாராக இருந்தால். 

நான் தமிழ் அடிப்படைவாதம் மட்டுமல்ல அதற்கு மேலாகவும் இருப்பேன். 

இங்கு தமிழ் தலைமைகள் விட்டுக்கொடுப்பு நடந்ததை மறப்போம் சகோதரத்துவம் எனப் பேசி எம்மை இழக்காரமாகப் பார்க்கும் மனநிலைக்கு சிங்களம் வந்துவிட்டது என்பதை ஆணித்தரமாக நான் கூறுகிறேன். 

தற்போதைய தமிழர் அரசியல் பேசும் அனைத்துத் தரப்பும் ஒருமித்த குரலாக ஒரே கோரிக்கையை எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாது வைக்குமாகவிருந்தால் நான் தமிழ் அடிப்படைவாதத்தைப்பற்றிப் பேசவேண்டியவனாக இருக்கமாட்டேன் 

காரணம் எமக்கான தமிழ்த்தலைமை அல்லது தலைமைகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டாலும்கூட  சிங்களத்தரப்புக்கும் முள்ளிவாய்க்காலில் கொலைக்களத்துக்கு இட்டுச்சென்ற சர்வதேசத்துக்கும் தமது நிலைப்பாட்டை சரியானபடி சொல்கிறார்கள் என்பதால் ஆகும் 

ஆனால் நிலைமை அப்படி இல்லையே. சாணாக்கியன் சிங்களத்தியைக் கலியாணம் கட்டுவதும் சுமந்திரனது பெடியன் சிங்களத்தியைக்கட்டுவதும் எம்மை சந்தேகமடைய வைக்கிறது.

அது எதுபோல் என்றால் ஐநா செயலர் பஙி மூன்னினது உறவுப்பெண் கேரளத்து நம்பியாரது உறவினரைக் கலியாணம் கட்டியதுபோல.

முள்ளிவாய்க்கால் அவலம் முடிவுற்றபோது கொழும்பில் சிங்களவருடன் பால் சோறு பகிர்ந்தவர்கள் சகொதரத்துவத்தைப்பற்றி யோசிச்சார்களா. சரி புலிகள் படுகொலைப்பாவிகள் ஆனால் அங்கிருக்கும் அப்பாவிகள் நிலை என்ன எனச் சிறிதும் சிந்த்தித்தார்களா இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

திரும்பவும் - நடேசனை, விக்கி ஐயாவை, சிறிமாவினால் "மகே கழு புத்தா" என்று அழைக்க பட்ட பொன்னம்பலத்தின் மகனை விட்டு விட்டு சும், சாணக்கியனை மட்டும் ஏன் அவர்களது தனிப்பட்ட வாழ்விற்காகத் திட்டுகிறீர்கள்? இது தமிழ் தேசிய உணர்வென்பதை விட காழ்ப்புணர்ச்சி என நினைக்கிறேன்.

ஒவ்வொரு தமிழ் தலைவரும், அவர் குடும்பமும் இனத்திற்காக தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டுமென்கிறீர்கள். ஏன் நீங்கள் முன்மாதிரியாக இருக்கக் கூடாது? பின்லாந்தை விட்டுப் போய், ஈழத்தில் ஒரு கட்சி ஆரம்பித்து, அதனை நீங்கள் தமிழ் தலைவர்களிடம் எதிர்பார்க்கும் நிபந்தனைகளோடு  நடாத்தி ஏதையாவது மாற்ற முயலாமலிருப்பது ஏன்? முடியவில்லை அல்லவா?

ஏனெனில் உங்களைப் போலவே, தனிப் பட்ட வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் வெவ்வேறாகப் பேணும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அமரர் நடேசன் முதல் சாணக்கியன் வரை , நான் மேலே சுட்டிய அனைவருக்கும் இருக்கிறது.

எனவே, இந்த தும்பைப் பிடித்துத் தொங்காமல் வேறு ஏதாவது பெரிய விடயங்களைப் பற்றிக் கவலைப் படுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனின் தாயார் பறங்கி இனத்தை சேர்ந்தவர்...சிங்களவர் இல்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்

when the mind believes what it thinks, its names cannot be named, and tries to make it real through a name. it believes that its names are real, that there's a world out there separate from itself. that's an illusion. the whole world projected.

சாதாரணமாக சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திசை திருப்ப மத ரீதியாக இஸ்லாமிய பயங்கரவாதம், இன ரீதியாக தமிழ் தேசியம் என பிரச்சினைகளை மடை மாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நிலையினை எம்மவர்களும் அதன் தாக்கம் புரியாமல் உள்வாங்கப்படும் நிலை உருவாகி வருவது போல் காணப்படுகிறது.
தனிப்பட்ட நிலையில் ஒருவரது புரிதலுக்கு ஒரு பெயர் வழங்கப்பட்டு அதனை தீவிரமாக்கி பின்னர் அதனை ஒரு தீவிரவாதமாக்குவதினூடாக அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதனை தவிர்ப்பதில் அடக்குமுறையாளருக்கு தொடர்ந்து வெற்றிகிடைத்துவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

when the mind believes what it thinks, its names cannot be named, and tries to make it real through a name. it believes that its names are real, that there's a world out there separate from itself. that's an illusion. the whole world projected.

இது நீங்கள் சொன்னது உண்மை.

12 hours ago, vasee said:

சாதாரணமாக சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திசை திருப்ப மத ரீதியாக இஸ்லாமிய பயங்கரவாதம்

ஆனால்  மத ரீதியாக இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கின்றது.பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக இல்லை முஸ்லிம் மதம் சிறுபான்மை மதமும் இல்லை. தனது ஷரியா மத சட்டத்தின் கீழ் மற்ற மக்களையும் சுதந்திர சிந்தனை கொண்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களையும் அடக்கிஓடுக்கி ஆட்சி செய்ய முயல்கின்றது. பர்த்தா ஹிஜாப் அணியாத நான் முஸ்லிம்  தான் ஆனால் அந்த முட்டாள் (stupid )கோட்பாடுகளை பின்பற்ற நான் தாயர் இல்லை என்று சொல்லும் முஸ்லிம் பெண்களை எனக்கு தெரியும்.
முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் பாதையில் தமிழ்தேசியம் 😟

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2024 at 20:49, விளங்க நினைப்பவன் said:

இது நீங்கள் சொன்னது உண்மை.

ஆனால்  மத ரீதியாக இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கின்றது.பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக இல்லை முஸ்லிம் மதம் சிறுபான்மை மதமும் இல்லை. தனது ஷரியா மத சட்டத்தின் கீழ் மற்ற மக்களையும் சுதந்திர சிந்தனை கொண்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களையும் அடக்கிஓடுக்கி ஆட்சி செய்ய முயல்கின்றது. பர்த்தா ஹிஜாப் அணியாத நான் முஸ்லிம்  தான் ஆனால் அந்த முட்டாள் (stupid )கோட்பாடுகளை பின்பற்ற நான் தாயர் இல்லை என்று சொல்லும் முஸ்லிம் பெண்களை எனக்கு தெரியும்.
முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் பாதையில் தமிழ்தேசியம் 😟

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வரிகள் கேட்டி பைரன் என்பவரது வரிகள்.

இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் கருதுகோள் இரட்டை கோபுரத்தாக்குதலின் பின்னர் உருவானதாகும், அதில் சம்பந்தப்பட்ட இரண்டு தனிப்பட்ட தரப்புகளும் அவ்வாறான கருதுகோள் உருவாக்கத்திற்கு காரணியானவர்கள், தாக்குதல் நடத்தியவர் தனது தனிப்பட்ட பிணக்கினை (தன்னை பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிட்டமையால்) ஒரு பொதுநலன் நடவடிக்கை என தனது பிணக்கினை தீர்த்து கொண்டார், அதன் மூலம் நிதி என பல விடயங்களில் ஆதாரமும் கிடைத்தது, மறுதரப்பிற்கு அதன் நவீன கால காலனித்துவ நோக்கத்திற்கு அது ஒரு அனுகூலமாக இருந்து.

ஆனால் அதனால் உண்மையாக பாதிக்கப்பட்டது சாதாரண பொதுமக்கள் அவர்கள் மேலும் மேலும் அடக்குமுறைக்குள்ளாக்க இந்த கருதுகோள் உதவியது, மறுதரப்பிலிலும் பாதிக்கப்பட்டது சாதாரண பொதுமக்கள்தான்.

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் இன்னுமொரு உதாரணம்.

Cognitive Distortions என்பது எமது சிந்தனைகள் எவ்வாறு ஒரே வகையாக சிந்திக்க தலைப்படுகிறது என கூறப்படுகிறது.

இதில் குறிப்பாக ஒருவகை மனப்பிறழ்வினை கறுப்பு வெள்ளையாக சிந்தித்தல் என கூறுவார்கள், அதாவது ஒன்றில்லாவிட்டால் மற்றது (இரண்டே இரண்டு தெரிவுகள் கொண்ட சிந்தனை, சிந்தனைகளுக்கு அடையாளம் கொடுப்பது).

இவ்வாறான மனப்பிறழ்வு சிந்தனை படித்த மற்றும் பாமர மக்களிடையே காணப்படுகிறறதாக கூறப்படுகிறது.

இந்த வகை மனப்பிறழ்வினை வியாபாரத்தில் வாடிக்கையாளரது பலவீனத்தினை அவர்களுக்கெதிராகவே பயன்படுத்துவார்கள்.

தனிப்பட்ட சிலரது நடவடிக்கைகளுக்கு தவறான அடையாளம் கொடுத்து, வெறுப்பு சிந்தனைகளை உருவாக்குவது குறுங்கால நலனை கொடுக்கும் ஆனால் நீண்ட காலத்தில் அது அவர்களுக்கு தீமையினை அதிகம் உருவாக்கும், இலங்கையில் பேரினவாதம் போல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.