Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   14 JAN, 2024 | 10:10 AM

image

யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா 15 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் பங்கேற்பதற்காகவே நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

https://www.virakesari.lk/article/173902

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். காரைநகரில் நீதியமைச்சரின் பங்குபற்றுதலுடன் தேசிய நல்லிணக்க பொங்கல்

Published By: VISHNU   15 JAN, 2024 | 03:09 PM

image
 

யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றது.

 நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவில், வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற்றது.

 

03.jpg

01.jpg

16.jpg

13.jpg

14.jpg

10.jpg

11.jpg

08.jpg

09.jpg

05.jpg

https://www.virakesari.lk/article/173992

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தேசிய நல்லிணக்க தைப்பொங்கல்

அது என்ன தேசிய நல்லிணக்க தைப்பொங்கல்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அது என்ன தேசிய நல்லிணக்க தைப்பொங்கல்?

ஆனந்த சங்கரி ஐயாவும் விஜேதாச ராஜபக்ஷேயும் சேர்ந்தால் அது நல்லிணக்கம். அதை பொங்கலாக கொண்டாடுகிறார்கள்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது - யாழில் விஜயதாச

16 JAN, 2024 | 01:36 PM
image
 

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ  தெரிவித்தார்.

இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை (15)  யாழ் ஆரியகுளம் நாக விகாரையில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது.  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் இக்கட்டான காலத்தில் நாட்டினை பொறுப்பெடுத்து நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்குரிய வேலைத்திட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார் 

அதன் காரணமாக தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது எனினும் நாட்டில் மேலும் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிண்ணப்பம் ஏற்படுமிடத்து நாட்டினை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார்.

யாழ்ப்பாண நாகவிகாரையில் தேசிய நல்லிணக்க சபையின் அங்கத்தவர்ககளுக்கான நியமனசான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இதன்போது நீதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றதுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மும்மத தலைவர்களுக்கும் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

IMG-20240115-WA0054.jpg

IMG-20240115-WA0051.jpg

IMG-20240115-WA0055.jpg

https://www.virakesari.lk/article/174037

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஒரு பேச்சு தேடகில்  ஒரு பேச்சு. குடிகாரன் பேச்சு  விடிந்தால் போச்சு. இன்னுமாடா இவர்களை அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

வடக்கில் ஒரு பேச்சு தேடகில்  ஒரு பேச்சு. குடிகாரன் பேச்சு  விடிந்தால் போச்சு. இன்னுமாடா இவர்களை அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்? 

நம்புவது போல நடிக்கின்றனர் போல....அல்லது நடியுங்கள் என வற்புறுத்தப்படுகின்றனரா?

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2024 at 11:32, ஈழப்பிரியன் said:

அது என்ன தேசிய நல்லிணக்க தைப்பொங்கல்?

அரிசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேசியமயமாகி வரும் 
பால் சக்கரை ஐம்ப் லோனில் இறக்குமதி ஆகி வரும் 

அவற்றை ஒன்றாக போட்டு பொங்கி சிங்கள பேரினவாதி ஒருவரையும் அழைத்துவந்து மாலை போட்டு தொடக்கி வைத்தால் 
அதுதான் தேசிய நல்லிணக்க பொங்கல்

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு மத குருக்களும் ஒன்றாக நிற்பது தேசிய நல்லிணக்க தைப்பொங்கல்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தபிக்குமாரை  எழுந்து  நிற்க  செய்ய முடியாதவர்கள்  எப்படி தேசிய நல்லிணக்கம் எற்ப்படுத்த முடியும்??  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அரிசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேசியமயமாகி வரும் 
பால் சக்கரை ஐம்ப் லோனில் இறக்குமதி ஆகி வரும் 

அவற்றை ஒன்றாக போட்டு பொங்கி சிங்கள பேரினவாதி ஒருவரையும் அழைத்துவந்து மாலை போட்டு தொடக்கி வைத்தால் 
அதுதான் தேசிய நல்லிணக்க பொங்கல்

இந்தியாவில் இருந்து எதுவும் இல்லையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/1/2024 at 18:32, ஈழப்பிரியன் said:

அது என்ன தேசிய நல்லிணக்க தைப்பொங்கல்?

அன்று தொடக்கம் தமிழர் பிரதேசங்களில் நடக்கும் நல்லிணக்க விடயங்களில்  சிதம்பர ரகசியம் ஒன்றுமில்லை. தமது வீட்டிற்கு இராணுவ/கடற்படை அதிகாரிகளை கடவுளுக்கு நிகராக வரவழைத்து  பார்ட்டி கேளிக்கைகள் செய்து சுய இன்பம் காணும் சம்பவங்களை கண்டு தான் வந்துள்ளோம்

தம் இனம் ,தம் மக்கள்,தம் நிலம் என சிந்திப்பவர்கள் தமிழர் சார்ந்த கட்சிகளை ஆதரிப்பார்கள். சிங்களை கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்கள் சுய நலம் மிக்கவர்களாகவே இருந்துள்ளார்கள். இது நான் கண்ட அனுபவங்கள்.

தங்கள் சுய நலன்களுக்காக எதையும் செய்யும் தமிழர்கள் நிறையவே உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

புத்தபிக்குமாரை  எழுந்து  நிற்க  செய்ய முடியாதவர்கள்  எப்படி தேசிய நல்லிணக்கம் எற்ப்படுத்த முடியும்??  

நமது மத தலைவர்கள் எழுந்து நிட்கும் வரைக்கும் அவர்களை அவர்களை எழுந்து நிற்க வைக்க முடியாது. எப்போது எமது மத தலைவர்கள் உடகார்க்கிறார்களோ அப்பபோதுதான் அவர்கள் எழுந்து நிட்ப்பார்கள். 
நல்லஇணக்கம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனவாதி விருந்தினரா?? நல்லா வருவீங்கள்.

(கஜேந்திரன் பொன்னம்பலதுடனான விவாதத்தை பார்க்கவும்.)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.