Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மைச் சம்பவம் வாசிக்க திகிலாக உள்ளது. மொகமது இப்படி செய்ய தூண்டியது அல்லது இதை செய்ய கட்டளையிட்டது மாபியா குழுவோ எனவும் சந்தேகம் வருகின்றது. 

வாகன இலக்க தகட்டை மறைக்கும்/மாற்றும் யோசனையே மொகமதுவுக்கு தோன்றாதது அவன் ஆத்திரத்தில் பின்விளைவை நினைக்காது/ எதேச்சையாக முடிவு எடுத்தானோ என எண்ண தோன்றுகின்றது.

எனக்கும் மொகமது எனும் பெயரில் ஒரு முதலாளி பழக்கம். அவன் சாவகசமாக கதைக்கும்போது தங்களுக்கு வெட்டு, கொத்து எல்லாம் சாதாரண கைவந்த கலை என்று கூறுவான். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, நிழலி said:

கடைசிப் படத்தில் துப்பாக்கியை உறையில் தொங்கப் போட்டபடி கையில் சிகரெட்டுடன் சிந்தனையில் இருப்பவர் யார்? டாடோ வும் முகமதுவும் இப்படி ஒய்யாரமாக இருக்க கூடிய சூழ் நிலையில் இல்லையே...?

நிழலி, டாடோவின் பிறந்ததினத்துக்கு 2021இல் வரைந்த ஒரு படம்

22 hours ago, Kandiah57 said:

பணம் வங்கி ஊடக  கொடுக்கப்பட்டதா. ??

 Kandiah57, தெரியாது. வங்கியூடாக  பணப் பரிமாற்றங்கள் செய்திருக்க மாட்டார்கள் என் நினைக்கிறேன்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, குமாரசாமி said:

நேரம் கிடைக்கும் போது வந்து ஏதாவது கிறுக்குங்கள்.

நன்றி குமாரசாமி. பென்சன் எடுத்த பின்பு பலதைச் செய்ய வேண்டும் என்று கணக்குப் போட்டிருந்தேன். ஆனால் கணக்குப் பிழைத்து விட்டது.  நேரம் இருந்தும் நேரம் ஏனோ கிடைப்பதில்லை. கிறுக்குவது விருப்பமானதுதான். 😋 முயற்சிப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரே மூச்சில் படித்துவிட்டேன்! Page turner வகையான ஆர்வத்தத்தை தூண்டும் எழுத்து. ஜேர்மனியில் சித்திரவதை செய்துவிட்டு தப்பலாம் என்று முட்டாள்தனமாக முகம்மது நினைத்திருக்கின்றார்!

On 17/1/2024 at 20:20, ரதி said:

உங்களை சந்திக்க வேண்டும் ....என்னுடைய படத்தையும் உங்களை  கொண்டு வரைய வேண்டும் என்பது என் ஆசை 
 

உங்களின் படத்தை மூனா ஐயா வரைந்தால் மோனாலிஸா சிரிக்கிறீங்களா சிரிக்கவில்லையா என்று ஆராய்ச்சி செய்வதிலேயே எங்கள் வாழ்க்கை ஓடிவிடும்🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரசிக்கும்படியாக நடந்த சம்பவத்தை கதையாக்கிய கவி ஐயாவிற்கு நன்றி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/1/2024 at 17:31, Kavi arunasalam said:

டாடோ என்கின்ற டாலிபோ “டாடோ” என்றேன்.

என்ன நடந்தது என்பதை அறியத்தூண்டும் வகையில் சிறப்பான எழுத்துநடை.துளையிடுவதும் எண்களைக் கூறுவதும்,...என்ன கொடுமை. சட்டத்தைக் கையிலே எடுக்கும்நிலை. பயமாக இருக்கிறது. முடிவில் உள்ளதுபோன்று அவர்கள் தமது சொந்தநாட்டில் செழிப்பான வாழ்வுக்கான அத்திவாரமோ யாரறிவார்... உண்மைச் சம்பவமானபோதும் அதனை வாசகன் சுவைக்கும் வகையில் அழகுற நகர்த்திச் செல்வதென நன்றாக உள்ளது. பாராட்டுகள்.  
 (அண்மையில் ஒரு செய்தியில் நொயிஸ் நகரில் உள்ள பாடசாலை உயர்வகுப்பு இஸ்லாமிய மாணவரிடைய நடந்த கருத்தாடலில்  "சரியா பொலிஸ்,, தேவையென்று கூறியதாகப் படித்தேன்.)  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/1/2024 at 10:10, கிருபன் said:

ஒரே மூச்சில் படித்துவிட்டேன்!

நீங்கள் பதிவிடும் பெரிய பெரிய கட்டுரைகளைப் பார்த்து, “இந்த மனுசன் பலவற்றை எல்லாம் வாசித்து அதில் நல்லவற்றை எடுத்து வந்து யாழில் பதிவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்”   என்று ஆச்சரியப் பட்டிருக்கிறேன். ஆகவே ஒரே மூச்சில் படித்து விடுவது உங்களுக்குப் பெரிதல்ல.

நன்றி கிருபன்

  • Haha 1
Posted

விறுவிறுப்பான நேர்த்தியான எழுத்து நடை. 

ஓவியம் மட்டுமன்றி எழுத்தாற்றலும் உங்களுக்கு நன்றாக வருகிறது. தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எழுதுங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/1/2024 at 09:10, கிருபன் said:

ஒரே மூச்சில் படித்துவிட்டேன்! Page turner வகையான ஆர்வத்தத்தை தூண்டும் எழுத்து. ஜேர்மனியில் சித்திரவதை செய்துவிட்டு தப்பலாம் என்று முட்டாள்தனமாக முகம்மது நினைத்திருக்கின்றார்!

உங்களின் படத்தை மூனா ஐயா வரைந்தால் மோனாலிஸா சிரிக்கிறீங்களா சிரிக்கவில்லையா என்று ஆராய்ச்சி செய்வதிலேயே எங்கள் வாழ்க்கை ஓடிவிடும்🤪

இவர் எனக்கு படம் வரைந்து தந்தால், நான் இறந்த பிறகு அந்த படத்தை எனது மரண அறிவித்தல் படமாய் போட சொல்லறேன் ...அதை பார்த்து அழுவதோ ,சிரிப்பதோ உங்கள் விருப்பம் 
🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விறுவிறுப்பான நேர்த்தியான எழுத்து நடை. ....ஒரே மூச்சில் படித்துவிட்டேன்!...சுவைக்கும் வகையில் அழகுற நகர்த்திச் செல்வது நன்றாக உள்ளது. பாராட்டுகள்.  

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.