Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sendhil-scaled.jpg?resize=750,375&ssl=1

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில்  அகதிகளாக வாழ்ந்து வரும்  இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்”   வடக்கு கிழக்கை சேர்ந்த இலங்கையர்கள்  கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் பாஸ்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்ற போது, அவரது வழிகாட்டுதலின்கீழ், இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் அமலுக்கு வரும்வகையில் இலங்கை அரசின் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

உலகில் வேறெங்கிலும் இதற்குமுன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

மேலும் இந்திய அகதி முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குமாறு இரண்டுமுறை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சர் அமத்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் அவ்விடயம் தொடர்பான வேலைத் திட்டங்களுக்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இந்த தருணத்தில் 40 வருடங்களாக தாய் நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு அடைக்கலம் வழங்க உதவிய இந்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும்  நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1366575

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!

அடுத்த தேர்தலில் மறக்காமல் வந்து வாக்குப் போட்டுவிட்டு போங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்த வசதி உபயோகமானது. 

ஆனால் பிரச்சனை என்ன என்றால் இந்தியா அகதிமுகாமை விட்டு இந்த கடவுச்சீட்டில் இலங்கைக்கு ஏதும் அலுவலாக சென்றால் திரும்பி வர முடியாதாம். இது உண்மையா பொய்யா என தெரியவில்லை.  அகதி முகாமில் உள்ள ஒருவர் கூறினார்.

இந்திய அகதி முகாமில் மிக நீண்ட காலமாக உள்ளவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் சுதந்திரம் பல வழிகளில் மறைமுகமாக மட்டுப்படுத்தப்பட்டது. 

உண்மையை சொல்லப்போனால் இவர்களுக்கு மீண்டும் இலங்கை வந்து வாழ்வது மிக கடினமானது. இதற்கான அடிப்படை தேவைகள், பொருளாதார கட்டமைப்புக்கள் எதற்கும் உத்தரவாதம் இல்லை. 

இங்கு இன்னோர் சவால் என்ன என்றால் இந்தியாவில் பிறந்த மற்றும் குழந்தை பருவத்தில் பெற்றோரினால் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் திருமண வயதை அடைந்து விட்டார்கள். இப்படியான பிள்ளைகளை கரை சேர்ப்பது பெற்றோருக்கு அவர்கள் சக்தியை மீறிய கடினமான பொறுப்பு.

இங்கே மத நிறுவனங்கள் சிறிதளவு ஆதரவு கொடுக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த தேர்தலில் மறக்காமல் வந்து வாக்குப் போட்டுவிட்டு போங்கோ.

பாஸ்போர்ட் பெறுபவர் பெயர் வாக்களர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் வாக்குகளை இலங்கை அரசே ஆள்வைத்து போட்டுகொள்வார்கள். மக்கள் அங்கு போய்தான் அதை போடவேண்டும் என்பதில்லை.

40 வருடங்கள் என்பது ஒருவரின் வாழ்க்கையில் நீண்ட காலம். இத்தனை ஆண்டுகளுக்கு பின் அகதிகளைஇலங்கைக்கு திருப்பி அழைத்து அவர்களுக்கு அவர்களின் பழைய வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்பி மறுவாழ்வு கொடுப்பதே சிறந்தது.  இன்னிலையில் இலங்கை அரசு அவர்களுக்கு புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவது அந்த மக்களின் இருப்பை இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்கு தள்ளி விடுவது மட்டுமன்றி அவர்களின் இஸ்திரமற்ற அகதி வாழ்க்கையை மேலும் நீடிக்கவே வழிவகுக்கும்.

சொந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கே சுதந்திரமே உறுதிசெயப்படாமல் இருக்கும்போது அடுத்த நாட்டில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்குவேன் என்பது நகைப்புக்குரியது.

 செந்தில் தொண்டைமானுக்கு இதில் என்ன அக்கறை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நீண்ட காலமாக தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளை உள்ளீர்க்கும் பல திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளதாக அண்மையில் செய்திவந்ததும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

12 hours ago, தமிழ் சிறி said:

உலகில் வேறெங்கிலும் இதற்குமுன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

இந்தியாவில் மட்டுமே இது போன்ற முட்டாள் தனமான காரியம் சாத்தியம். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் இதை அனுமதிக்குமா என்பது கேள்விக்குறி.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நியாயம் said:

இந்தியாவில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்த வசதி உபயோகமானது. 

ஆனால் பிரச்சனை என்ன என்றால் இந்தியா அகதிமுகாமை விட்டு இந்த கடவுச்சீட்டில் இலங்கைக்கு ஏதும் அலுவலாக சென்றால் திரும்பி வர முடியாதாம். இது உண்மையா பொய்யா என தெரியவில்லை.  அகதி முகாமில் உள்ள ஒருவர் கூறினார்.

இந்திய அகதி முகாமில் மிக நீண்ட காலமாக உள்ளவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் சுதந்திரம் பல வழிகளில் மறைமுகமாக மட்டுப்படுத்தப்பட்டது. 

உண்மையை சொல்லப்போனால் இவர்களுக்கு மீண்டும் இலங்கை வந்து வாழ்வது மிக கடினமானது. இதற்கான அடிப்படை தேவைகள், பொருளாதார கட்டமைப்புக்கள் எதற்கும் உத்தரவாதம் இல்லை. 

இங்கு இன்னோர் சவால் என்ன என்றால் இந்தியாவில் பிறந்த மற்றும் குழந்தை பருவத்தில் பெற்றோரினால் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் திருமண வயதை அடைந்து விட்டார்கள். இப்படியான பிள்ளைகளை கரை சேர்ப்பது பெற்றோருக்கு அவர்கள் சக்தியை மீறிய கடினமான பொறுப்பு.

இங்கே மத நிறுவனங்கள் சிறிதளவு ஆதரவு கொடுக்கின்றன. 

இலங்கை அரசு இந்த அகதிகளின் காணிகளை விடுவித்து இவ்வளவு காலமும் பிடித்து வைத்திருந்ததுக்கு நஸ்டஈடு கொடுத்து மேலும் அவர்கள் முன்னேறுவதற்கு உதவித் தொகையும் வழங்க வேண்டும்.

அதைவிடுத்து இப்போதும் அந்த அகதிகளிடமிருந்து எரியிற நெருப்பில் பிடிங்கியது லாபம் என்பது போல 

இன்னமும் தங்களுக்கு என்ன லாபம் வரும் என்று தான் பார்க்கிறார்கள்.

உலகத்திலேயே அகதிகளை இவ்வளவு கடும் பிடிக்குள் திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்திருக்கும் நாடு இந்தியா .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19/1/2024 at 18:12, தமிழ் சிறி said:

இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் பாஸ்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்ற போது, அவரது வழிகாட்டுதலின்கீழ், இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் அமலுக்கு வரும்வகையில் இலங்கை அரசின் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

அணில் எப்பவும் ஏதாவது நரிப்புத்தியோட தான் பிளான் பண்ணி செய்யும். எங்கை போய் இறுகுதோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

அணில் எப்பவும் ஏதாவது நரிப்புத்தியோட தான் பிளான் பண்ணி செய்யும். எங்கை போய் இறுகுதோ தெரியாது.

ரணில் என்ன நரிப்புத்தியோட இதைச் செய்தாலும் தமிழ்மக்கள் அதைச தங்களுக்குச் சாதகமாக மாற்றப் பார்க்கணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, புலவர் said:

ரணில் என்ன நரிப்புத்தியோட இதைச் செய்தாலும் தமிழ்மக்கள் அதைச தங்களுக்குச் சாதகமாக மாற்றப் பார்க்கணும்.

எமது அரசியல்வாதிகள் வீராவேச பேச்சுக்களை தங்கள் அரசியல் லாபங்களுக்காக ஒரு புறம் தள்ளிவிட்டு காரியத்தில் இறங்குவார்களேயாயின் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2024 at 18:18, நியாயம் said:

ஆனால் பிரச்சனை என்ன என்றால் இந்தியா அகதிமுகாமை விட்டு இந்த கடவுச்சீட்டில் இலங்கைக்கு ஏதும் அலுவலாக சென்றால் திரும்பி வர முடியாதாம். இது உண்மையா பொய்யா என தெரியவில்லை.  அகதி முகாமில் உள்ள ஒருவர் கூறினார்.

Refugees are people who are forced to leave their home countries because of serious human rights abuses. The right to asylum from persecution is an international human right. It is guaranteed by the 1951 Convention relating to the Status of Refugees (the “Refugee Convention”).

https://ccrweb.ca/en/information-refugees#:~:text=Refugees are people who are,the “Refugee Convention”).

ஏதிலி

Learn more
 
ஏதிலி அல்லது அகதி (ஒலிப்பு) என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951 ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது.

அகதி என்ற கருத்துரு, மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும், ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால், சொந்த நாட்டில் இடப்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர், அகதித் தகுதி கோருபவர் எனப்படுகின்றார்.

https://ta.m.wikipedia.org/wiki/ஏதிலி

சுருக்கம்:  

தனது நாட்டில் பாதுகாப்பு இல்லை என்கிற காரணத்துக்காக வெளியேறுவோர் அகதி எனப்படுகின்றனர். எப்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகிறார்களோ அப்போதே அவர்களுக்கு அங்கே பாதுகாப்பு கிடைக்கிறது என்று அர்த்தம்.

அதன் பின்னர் அவர் எப்படி அகதி என்கிற வட்டத்திற்குள் வருவார்? 

Edited by Kapithan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.