Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 JAN, 2024 | 03:02 PM
image

ஜேர்மனியில்  பிர­ஜா­வு­ரி­மை­யைப் பெறு­வ­தற்­கான விதி­களை தளர்த்தும் புதிய சட்­டத்­தி­ருத்­தங்கள் அந்­நாட்டுப் பாரா­ளு­மன்­றத்­தினால் கடந்தவாரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன.

புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தின்­படி, ஜேர்­ம­னியில் சட்­ட­பூர்­வ­மாக 5 வரு­டங்கள் வசிப்போர் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடியும்.  இது­வரை 8 வரு­டங்­களின் பின்­­னரே பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யு­மாக இருந்­தது.

அதே­வேளை, விசேட ஒருங்­கி­ணைப்பு அடை­வு­மட்­டங்­களை பூர்த்தி செய்வோர் இது­வரை 6 வரு­டங்­களில் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க தகுதி பெற்­றி­ருந்­தனர். இக்­கா­ல­வ­ரம்பு தற்­போது 3 வரு­டங்­க­ளாக குறைக்­கப்­பட்­­டுள்­ளது.

இரட்டைப் பிரஜா­வு­ரிமை

அத்­துடன் இரட்டைப் பிர­ஜா­வு­ரி­மையைக் கொண்­டி­ருப்­ப­தற்­கான கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

இது­வரை ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும் சுவிட்­ஸர்­லாந்தை தவிர்ந்த ஏனைய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஜேர்மன் பிர­ஜா­வு­ரிமையை பெறும்­போது தமது முந்­தைய நாட்டின் பிர­ஜா­வு­ரி­மையை கைவிட வேண்­டி­யி­ருந்­தது. சில சந்­தர்ப்­பங்­களில் மாத்­திரம் விதி­வி­லக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது இவ்­விதி தளர்த்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் தம்­ப­தி­களில்  ஒரு­­வர் சட்­ட­பூர்­வ­மாக 5 வரு­டங்­கள் ஜேர்­ம­னியில் வசித்தால் அவர்­க­ளுக்குப் பிறக்கும் குழந்­தைக்கு ஜேர்மன் பிர­ஜா­வு­ரிமை கிடைக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மன் பாரா­ளு­மன்­றத்தில் இச்­சட்­ட­மூலம் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது, 639 எம்.பிகள் ஆத­ர­வா­கவும் 234 பேர் எதி­ரா­கவும்  வாக்­க­ளித்­தனர்.  23 பேர் வாக்­க­ளிப்பில் பங்­கு­பற்­ற­வில்லை.

ஜேர்மனி சான்ஸ்லர் ஒலாவ் சோல்ஸின் சமூக ஜன­நா­யகக் கட்சி, சுதந்­திர ஜன­நா­யகக் கட்சி மற்றும் கிறீன் கட்சி ஆகி­யன இணைந்த ஆளும் கூட்­டணி இப்­பு­திய சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ர­வ­ளித்­தன.

பழை­மை­வாத கிறிஸ்­தவ ஜன­நா­யகக் கட்சி மற்றும் கிறிஸ்­தவ சமூக ஒன்­றியக் கட்சி, ஜேர்­ம­னிக்­கான மாற்றுக் கட்சி ஆகி­யன எதி­ராக வாக்­க­ளித்­தன.

இச்­சட்­ட­மூலம் அமு­லுக்கு வரு­வ­தற்கு ஜனா­தி­பதி பிராங் வோல்ட்டர் ஸ்டேய்ன் மேயர் கையெ­ழுத்­திட வேண்டும்.

தொழி­லாளர் பற்­றாக்­கு­றைக்கு மத்­தியில், திறன்­கொண்ட தொழி­லா­ளர்­களை ஈர்ப்­ப­தற்கு இச்­சட்­டத்­தி­ருத்­தங்கள் உதவும் என ஜேர்­ம­னியின் உள்­துறை அமைச்சர் நான்சி பயீசர் தெரி­வித்­துள்ளார்.

'உல­கெங்கும் உள்ள தகு­தி­யான மக்­க­ளுக்கு அமெ­ரிக்கா, கன­டாவைப் போன்று  நாம் வாய்ப்பு வழங்க வேண்டும்' என அவர் கூறி­யுள்ளார்.

எனினும், இச்­சட்­டத்­தி­ருத்­தங்­க­ளுக்கு எதிர்க்­கட்சிக் எதிர்ப்பு தெரி­வித்­துள்ன. இம்­மாற்­றங்கள் பிர­ஜா­வு­ரி­மையின் பெறு­ம­தியைக் குறைக்க வழி­வ­குக்கும் என எதிர்க்­கட்­சிகள் விமர்­சித்­துள்­ளன.

விரை­வான நாடு கடத்தல்

இதே­வேளை, புக­லிடக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களை விரை­வாக நாடு­க­டத்­து­வ­தற்­கான சட்­டத்­தி­ருத்­தங்­க­ளுக்கும் ஜேர்மனி பாரா­ளு­மன்றம் கடந்த வியாழக்கிழமை அங்கீகாரம் அளித்தது  

ஜேர்மனியில் வசிக்கும் 8.44 கோடி மக்களில் 1.2 கோடிக்கும் (14 சதவீதம்) அதிகமானோருக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை இல்லை எனவும், அவர்களில் 53 இலட்­சம் பேர் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் ஜேர்மனி­யில் வசிக்­கின்ற­னர் எனவும் ஜேர்­மனி அரசாங்கம் தெரி­வித்­துள்­ளது.

https://www.virakesari.lk/article/174514

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலி காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

சனத்தொகைக்கும்/ சனத்தொகைப்  பெருக்கத்திற்கும் பிறநாடுகளை நம்பியிருக்க முடியாது. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கலி காலம்.

இன்னும் 3 வருசம் இருக்கு உக்ரேனியர்களுக்கு பிரஜா உரிமை எடுக்க.🤣(வேலை செய்யாமல் இருக்கிறாங்கள் என்றதற்காக சொல்கிறேன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

சனத்தொகைக்கும்/ சனத்தொகைப்  பெருக்கத்திற்கும் பிறநாடுகளை நம்பியிருக்க முடியாது. 

😁

ஜேர்மனிக்கு இப்ப மக்கள் விகிதாசாரம்  முக்கிய விசயம். பிள்ளை அபிவிருத்தி ஜேர்மனியர்களுக்கு அறவே இல்லையாம்.ஐமீன் கரிசனை.😎

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது தகுதி உள்ளவர்கள் பயன்படுத்தலாம்   உலகம் அனைவருக்கும் சொந்தம்  எவரும் எங்கும் உழைத்து வாழட்டும்  வாழ்க நலமுடன் வளமுடன் ஆரோக்கியத்துடன். மகிழ்ச்சியாக என்றும்    🙏👋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kandiah57 said:

நல்லது தகுதி உள்ளவர்கள் பயன்படுத்தலாம்   உலகம் அனைவருக்கும் சொந்தம்  எவரும் எங்கும் உழைத்து வாழட்டும்  வாழ்க நலமுடன் வளமுடன் ஆரோக்கியத்துடன். மகிழ்ச்சியாக என்றும்    🙏👋

அப்படியாயின் எதற்கு தனி மொழி,தனி நாணயம்,ஒவ்வொரு நாட்டிற்கும் தனி சட்ட திட்டங்கள்,நாட்டுக்கான எல்லைகள்,தனி கலாச்சாரங்கள்?
கும்பல்லா கோவிந்தாவாக எல்லோரும் எங்கும் எப்போதும் எப்படியும் வாழ்ந்து விட்டு போகலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

அப்படியாயின் எதற்கு தனி மொழி,தனி நாணயம்,ஒவ்வொரு நாட்டிற்கும் தனி சட்ட திட்டங்கள்,நாட்டுக்கான எல்லைகள்,தனி கலாச்சாரங்கள்?
கும்பல்லா கோவிந்தாவாக எல்லோரும் எங்கும் எப்போதும் எப்படியும் வாழ்ந்து விட்டு போகலாமே?

அப்படி சொல்ல கூடாது,.

நானும் 

நீங்களும் 

எப்படி வாழ்கிறோம்.     அப்படி வாழ்ந்து விட்டு போகட்டும்   

அதுசரி, கட்டுரையின் இறுதியில் கூறப்பட்ட விடயம் தொடர்பாக முந்தநாள் ஜேர்மனியில் நடைபெற்ற போராட்ட ஊர்வலங்கள் பற்றி ஜேர்மன்காரர் வாய் திறக்கவில்லை. 😀

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்த திரியுடன் சம்பந்தப்படுவதால் இதை இங்கு எழுதுகிறேன்..

அண்மையில் எனது சகோதரம் எனது பல தடைகள் அட்வைஸ்கள் எச்சரிக்கைகளை தாண்டி நிராகரித்துவிட்டு வெளிநாடு வந்துவிட்டான்.. அது சரி அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று சொல்லுவார்கள்.. நான் கடவுளை நம்பாதவனாக இருந்தும் என் மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவராக உள்ளார். அவரையே நம்பவைக்கவோ மாற்றவோ முடியவில்லை.. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு..

சரி இப்போ விடயத்துக்கு வருவோம்.. தம்பி வெளிநாடு போக தேர்ந்தெடுத்த நாடு ஜேர்மன். ஜேர்மனை தேர்ந்தெடுக்க அவன் சொன்ன காரணம்தான் என்னை தூக்கி வாரிப்போட்டது.. இவ்வளவு காலம் ஜரோப்பாவில் இருந்தும் எனக்கு இந்த விடயம் தெரியாதது வெக்ககேடாக இருந்தது.. அதைவிட பல்கலைக்கழகத்துக்கு வருடம் 7-8 ஆயிரம் பவுன்ஸ் பிளஸ் தங்குமிடம் உணவு போன்ற வாழ்க்கை செலவுகளுக்கு அதே அளவு பணம் என்று கொட்டி ஒரு காலத்தில் நானும் படித்தேன் இன்றும் பலர் கனடா அவுஸ்த்திரேலியா என்று பல மில்லியன் களில் படிக்க போகிறவர்களுக்கு இடையில் இங்கிலீஸ் மீடியத்தில் ஒரு சதம் செலவுகூட இல்லாமல்( பதிவு செய்தல் போன்றவற்றிற்கு ஒரு சில நூறு யூரோக்கள் மட்டும்) தம்பி ஜேர்மன் படிக்கபோய் இருக்கிறான் என்பதை இப்போ வரை என்னால் நம்ப முடியவில்லை.. இத்தனைக்கும் அவன் ஒரு அவரேஜ் ஸ்டுரன்ற். பிறைவேட்டாகதான் தன் முதல் பட்டத்தை இலங்கையில் முடித்தான். எந்த ஸ்கொலர்சிப்பிலும் போகவில்லை.. 

ஸ்கொலர்சிப்பும் இல்லை அப்ப ஈயூ சிற்றிசனும் இல்லை வெளிநாட்டுக்காரன் ஆன உன்னை எப்பிடியேடா ஜேர்மனில பிறியா படிக்கவிட்டவங்கள் என்டு கேட்டால் எட அண்ணா லூசுப்பயலே யூறோப்பிய சிட்டிசனா  இருந்தும் இது தெரியாம இருக்கிறியே ஜேர்மனில கல்வி ஜெர்மன் சிற்றிசன் மற்றும் ஈயூ சிட்டிசன் மட்டுமன்றி அனைவருக்குமே பிறி என்டு ஒரு குண்டைபோட்டான்.. என்னடா நம்ம குசா தாத்தா தமிழ்சிறி அண்னை கந்தையா அண்னை சாந்தி அக்கா கவி அருணாசலம் என்டு எக்கச்சக்கமான ஜேர்மன் காரர் இருந்தும் யாரும் இதைப்பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லையே.. எத்தனையோ குடி பெயர்வு சம்பந்தம்மான திரிகளில் யாழில் உரையாடி இருப்பம் யாரும் இதைப்பற்றி மூச்சுக்கூட விடவில்லையே என்று நினைத்து விட்டு கண்டிப்பாக நான் இதைப்பற்றி யாழில் எழுதவேணும் என்டு நினைத்து உடனும் போனை எடுத்து இதை ரைப்பண்ணுறன்.. இதனால் ஒரு ஏழை மாணவனாவது பயன்பெற்றால் அதைவிட சந்தோசம் எனக்கு வேறு இல்லை..

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமே”

அடுத்த அடுத்த பதிவுகளில் எப்படி அனுமதி பெற்றான் என்ன செய்யவேணும் போன்ற அனைத்து தகவல்களையும் தொடர்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இங்கே படிக்கலாம் இலவசம் தான்  உதாரணமாக எனது மகள் கட்டடக்கலை பொறியியலாளர் படித்தாள். படிக்க கொடுத்த காசில்.  வேலைக்கு போக தொடங்கியதும்  பத்தாயிரம்  யூரோ தான்  திருப்பி கட்டும் படி கடிதம் வந்தது அதுவும் மாத மாதம்    ஆனால்  வரி மட்டுமே மாதம் 500 யூரோ   இதனுடன் பென்சன் மருத்துவம்,.. .  காப்பீடுகள். கழிப்பார்கள். 

உதாரணமாக 5000 யூரோ மொத்த சம்பளம் என்றால் 3000 யூரோ தான் கையில் கிடைக்கும்  

வாருங்கள் படியுங்கள் வேலையை செய்யுங்கள்     🙏வணக்கம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது இந்த திரியுடன் சம்பந்தப்படுவதால் இதை இங்கு எழுதுகிறேன்..

இப்ப தும்மினால்த்தான் சரியாய் இருக்கும்  🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.