Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

sarath-weerasekara_3.jpg?resize=400,266&

யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!

யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

இதுவே யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். அதாவது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை நான் நேரில் பார்வையிட்டேன். அதுதான் உண்மையான நல்லிணக்கம்.

ஆனால் தமிழ் மக்களின் இந்த சுதந்திரமான நிலைமையினை குழப்புவதற்கு ஒரு பிரிவினர் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

வடக்கில் தற்பொழுது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்கின்றேன்” என சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1368400

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, தமிழ் சிறி said:

உண்மை தான்   ஆனால் சுதந்திரம் என்பது கொடி பிடிப்பது இல்லை  அதாவது சிங்கம் உள்ள கொடி  உந்த சிங்கம் உள்ள கொடியை இறக்கும்  நாள் தான்  தமிழனின் சுதந்திர தினம் 

  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kandiah57 said:

உண்மை தான்   ஆனால் சுதந்திரம் என்பது கொடி பிடிப்பது இல்லை  அதாவது சிங்கம் உள்ள கொடி  உந்த சிங்கம் உள்ள கொடியை இறக்கும்  நாள் தான்  தமிழனின் சுதந்திர தினம் 

அந்த மனிதனின் பேச்சுக்கெல்லாம் தாங்கள் ரென்சனாகலாமா Mr. Kandiah ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த லூசு மண்டையன் அருண் 'செத்தார்'த்தன் குழுவோடு சேர்ந்து கொண்டு  நேரடியாக சொல்லுகிறான்... இதையே சிலர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியதைப்போல சொல்கிறார்கள் கபித்தான் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

அந்த மனிதனின் பேச்சுக்கெல்லாம் தாங்கள் ரென்சனாகலாமா Mr. Kandiah ? 

நீங்கள் இருக்கும் போது  நான் ஏன் ரென்ஷானாகனும் ??  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யாழ் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததை நினைவூட்டும் சரத் விஜேசேகர,  இலங்கையின் சுதந்திர தினத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் நிற்பதை மறந்துவிட்டார். 

இதைவிட புலிகளுடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கலாம். 

Edited by Kapithan
  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்களுக்கு சுதந்திரம் கிடைச்சிட்டு ஆனால் உங்களுடைய சுதந்திரம் பரிபோய்விட்டதே  இந்தியாவிடம் சேகரா.... அதை கொஞ்சம் கவனியுங்கோ..... ஜனதிபதியை தெரிவு செய்வதே அயல் நாடும் ,உங்களை அடிமைபடுத்திய ஏனைய நாடுகளும் என்பதை நீங்கள் இன்னுமா புரிந்து கொள்ளவில்லை

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

யாழ் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததை நினைவூட்டும் சரத் விஜேசேகர,  இலங்கையின் சுதந்திர தினத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் நிற்பதை மறந்துவிட்டார். 

இதைவிட புலிகளுடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கலாம். 

நீர்மூழ்கி கப்பல் நிட்பதை காணவில்லையாம். தங்களுக்கு தெரியாமல் கடலுக்குஅடியால் வந்து விடடார்களாம். விரைவில் விரட்டி அடிப்பதாக கூறி உள்ளார்.

எப்படி இருந்தாலும் புலிகளுடனோ , தமிழர்களுடனோ பேச்சுவார்த்தை இல்லை என்று சொல்கிறார். அதாவது தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை என்பதுதான் அவரது கருத்து. விமல், கம்மன்பில , வீரசேகர போன்றோரை இணங்க வைப்பது நாய் வாலை நிமிர்த்துவது போல. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் நிறைவானவர்கள் எனும் சுதந்திர மனப்பான்மையை வைத்திராத இலங்கைத் தமிழர் எவரேனும் இருப்பர் என்று நான் கருதவில்லை .

எழுநூறு ரௌடிகளுடன் இங்கே வந்து,  அடாத்தாக இன்னமும் கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு இதெல்லாம் எங்கே விளங்கப்போகுது..

ஆடும்வரை ஆடுங்க ........  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/2/2024 at 08:31, தமிழ் சிறி said:

யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!

IMG-5779.jpg

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதினம் தெரியுமோ?

(பட்சி) 
 
இரவல் சீலையில கொய்யகம் கட்டுறது தான் இப்ப நல்லா எடுபடுகுது. அப்பிடி இரவல் ஆக்களை யாழ்ப்பாணத்துக்கு வாகனங்களில் அள்ளிக்கட்டிக்கொண்டு வந்து. சுதந்திரதினத்தை 'பெருமெடுப்பில' கொண்டாடினதா ஒரு கஞ்சாக் கும்பல் படம் காட்ட வெளிக்கிட்டது. வாயைத் திறந்தாலே நஞ்சைக் கக்கிற சரத் வீரசேகர மாதிரி அவைக்கு எலும்புத்துண்டு போடுறவையைக் கூட்டிக்கொண்டு வந்து. வீரசிங்கம் ஹோல் முழுக்க சோத்துப்பார்சலுக்கும். ஐயாயிரம் ரூபா காசுக்கும், அரைப்போத்தில் சாராயத்துக்கும் வந்த கும்பலைக் கொண்டு நிறைச்சு 'பாத்தியளே எங்கட பவரை?' எண்டு அந்த எடுபிடிக் கும்பல் தங்களைத் தாங்களே பாராட்டியுமிருக்குது.

உங்கட காசு. உங்கட பார்சல், உங்கட சாராயம். என்னவும் செய்திட்டுப் போங்கோ. ஆனால் இப்பிடி வித்தை காட்டுறனெண்ட பேரில இஞ்சையிருக்கிற சனத்துக்கு இடைஞ்சல் குடுக்கிறதுதான் கடும்பிழை. காய்ஞ்சமாடுகள் கம்பில விழுந்தமாதிரி பஸ்ஸில ஏறிவந்த ஆக்களுக்கு என்ன செய்யிறது எண்டு தெரியேலை. அதுகள் கண்டபடி கத்திக்குளறிக்கொண்டு றோட்டை அடைச்சபடி அலையத் தொடங்கிட்டுதுகள். அதைவிட உந்த வாள்வெட்டு, கஞ்சா கடத்தல் செய்யிற கோஷ்டியும் மோட்டார் சைக்கிள்ள வந்து பெரிசாக் ஹோர்ண் அடிச்சபடியே றோட்டு முழுக்க ஓடுறதும், அதால போய்வாற சனத்துக்கு முன்னால போய் திடீ ரெண்டு மோட்டார் சைக்கிளை வெட்டி எடுக்கிறதுமா பெரும் கூத்துக் காட்டிச்சினம்.

அதைவிட இன்னொரு விசயம் நடந்தது. தமிழ்ச்சனம் தான் இந்தச்சுதந்திரதினத்தை மனப் பூர்வமாக் கொண்டாடுகினமாம் எண்டு காட்டுறதுக்காக ஒரு பத்துப்பதினைஞ்சு சின்னப்பெடியளுக்கு பச்சை நிறத்தில வேட்டியைத் தாறு பாய்ச்சிக் சுட்டி, காவடி ஆட விட்டவை. அந்தப் பெடியளுக்கு பதினைஞ்சு வயதுக்குள்ளதான் இருக்கும். அதுகளுக்கு காவடி எண்ட பேரில பெரிய கம்பியில செய்த அலகு குத்திப்போட்டு உந்த வெயிலுக்க நார்றோட்டுல ஆடப்பண்ணிக் கொண்டுதான் வந்தவை. சிலர் தங்களுக்கு பவர் இருக்கெண்டு மேலிடத்துக்கு காட்டி, காசு வாங்கிறதுக்காக இப்பிடிச் சின்னப்பிள்ளையளை கம்பியால வாயில குத்துறதும், கொளுத்திறவெயிலுக்க செருப்புமில்லாம நடத்திக்கூட்டிக் கொண்டு வாறதும் கடும் சிறுவர் துஷ்பிரயோகம். ஆனால் இதுகளையும் பிடிக்கவேண்டிய பொலிஸ் காரரே இந்தப் பேரணிக்கு பாதுகாப்புக் குடுக் கேக்க,அவைக்கு எதிரா ஆர்தான் முறைப்பாடு குடுக்க முன்னுக்கு வருவினம்? இப்பிடி பிள்ளை யளை வதைச்சு. இரவல் ஆக்களை இறக்கி சுதந்திரதினம் கொண்டாடுறதுக்குப் பதிலா நாலுசனத்துக்கு ஏதும் உதவிப்பொருள் குடுத்தி ருந்தாலும் புண்ணியமாப் போயிருக்கும். இப் பிடிச் சொந்தக்காசிலையே சூனியம் வைச்சு சுதந்திரத்தினத்தை கெடுத்துட்டினமே.

(06.02.2024 உதயன் பத்திரிகை)
#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கொழும்பில் கூட சாதாரண சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இதனை கொண்டாட வேண்டும் என்று செயற்படவில்லை. விடுமுறை நாளில் சுதந்திர தினம் வந்த போதும் மக்கள் தங்கள் அன்றாடக் கடமைகளை செய்யதனரே தவிர... இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபாடு காட்டவில்லை. வழமையை விட சிங்கள தேசியக் கொடி குறைவாகவே பறக்கவிடப்பட்டிருந்தது.

ஆனால் அரசாங்கம் மட்டும் காலிமுகத்திடலில்.. அநாவசிய செலவு செய்து கொண்டாட்டம் செய்வதாக சிங்கள மக்களே ஆதங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. அதிலும்.. பரசூட் வேடிக்கை காட்டப் போய் வினையானது தான் மிச்சம்.

உவர் வீரசேகரவுக்கு மூன்று வேளையும் சாப்பாடு ஒழுங்கா விழுகுது போல. ஆனால்..மக்கள் காலை உணவை தவிர்த்து 100 ரூபா பார்சலுக்கு மதியம் காத்துக்குக் கிடப்பதை காண முடிகிறது. இரவுச் சாப்பாட்டுக்கும் மக்கள்.. மலிவு விலை இடியப்பம்.. கொத்து வாங்க ஆட்டோக்களில் உணவு கொண்டு வந்து விற்கும் ஆட்களிடம் வரிசை கட்டுகின்றனர்.  இது கொழும்பில் சாதாரண குறைந்த நடுத்தர வருமானமுள்ள மக்களின் நிலை. 

மற்றும்படி.. வெளிநாட்டுப் பயணிகளை தவிர.. உள்நாட்டு மக்களை கே எப் சி.. மக்டொலாட்... பேர்கர் கிங்.. பிசா கட் இவற்றில் பார்ப்பது கொழும்பில்... குறைந்திருக்கிறது. வெகு சிலர் தான் வந்து போகின்றனர். 

Edited by nedukkalapoovan

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.