Jump to content

புதனும் புதிரும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள்.

Untitled Artwork

எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான்ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அதிகமான வருடங்கள். சரி விடயத்துக்கு வருகிறேன்.

 

Untitled Artwork

னிக்கிழமைகளில் வரும் பத்திரிகையில்தான் அதிகமான விளம்பரங்கள் வருகின்றன. வீடு விற்பனைகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள் என்று ஏகப்பட்டவை அடங்கி சனிக்கிழமைப் பத்திரிகை ஊதிப் பெருத்துப் போய் இருக்கும். 17.12.2022 அன்று வந்த பத்திரிகையிலும், வழமைபோலவே  எல்லா விடயங்களும் இருந்தன. அதில், மரண அறிவித்தல்கள்  பகுதியில் எடித் லாங் (86), 14.12.2022, புதன்கிழமை காலமாகிவிட்டதாகவும் அவரது உடல் 19.12.2022 அன்று தகனம் செய்ய இருப்பதாகவும் தகவல் இருந்ததுஎன்னைப் போலவே, எடித் லாங்கினைத் தெரியாதவர்கள் அந்த அறிவித்தலைக் கடந்து  போயிருப்பார்கள். ஆனால் எடித் லாங்கின் மரணம்  ஒரு கிழமை கழித்து  செய்தி ஒன்றைச் சொல்லக் காத்திருந்தது.

எடித் லாங்கின் வீட்டில் இருந்து 315 மீற்றர் தூரத்தில் வசித்த இன்னும் ஒரு மூதாட்டி, எடித் லாங்கின்  இறப்புக்குப் பின் ஒரு கிழமை கழித்து  21.12.2022,புதன் கிழமை அன்று இறந்து போனார். ஒரு கிழமை இடைவெளியில் அதுவும் சொல்லி வைத்தது போல் புதன்கிழமையில் அருகருகே வசித்த  இரு மூதாட்டிகளுக்கு மரணம் சம்பவித்திருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது

விசாரணைகளின் பின்னர், எடித் லாங்கின் மரணம், அவர் தரையில் தவறி விழுந்ததால் ஏற்பட்டது என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மற்றைய மரணம் ஒரு கொலை என்று அறிவிக்கப்பட்டது. நகரில் சந்தைக்கு வந்தவர்கள், வீதிகளில் சந்தித்துக் கொண்டவர்கள் என எல்லோர் வாய்களும் இந்த மரணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டன. “ஒருவேளை எடித் லாங்கின் மரணமும் கொலையாக இருக்குமோ?” என்ற சந்தேகம் மெதுவாக எழுந்தது. அதில் உண்மையும் இருந்தது

அமைதியாயிருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம் மெது மெதுவாக அதை இழந்து கொண்டிருந்தது.

அடுத்தடுத்து இரண்டு மரணங்கள். அதில் ஒன்று விபத்து, மற்றது கொலை, அதுவும் இரண்டும் சிறிய இடைவெளிகளில் உள்ள வீடுகளில் நடந்ததுள்ளன. இதையிட்டு ஸ்வேபிஸ் ஹால் நகரம் வெலவெலத்துப் போயிருந்த நேரத்தில், 25.01.2023 அன்று, அட அதுவும் கூட ஒரு புதன் கிழமைதான், நகரத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மிஹேல்பாக் என்ற கிராமத்தில் 89 வயதான இன்னுமொரு மூதாட்டி,  இறந்து போனார். 'அவரது இறப்பும் கொலைதான்' என விசாரணைகளை முடித்த பொலிஸ் உயர் அதிகாரி அறிவித்தார்.

யேர்மனியின் ஒரு ஓரமாக அமைதியாக இருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம், அரச, தனியார் வானொலிகளில்,தொலைக்காட்சிகளில். இணையத் தளங்களில், சமூக வலைத்தளங்களில்... என்று எல்லாவற்றிலும் அடிபட்டுக் கொண்டிருந்தது. கொலைச் செய்திகளை வாங்கி, வெளி நாடுகளிலும் தங்கள் தங்கள் மொழிகளில் ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினார்கள்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் புதன் வந்தாலே நடுக்கம் வர ஆரம்பித்திருந்தது. வயோதிபம் வந்தாலே நடுக்கம் தானாக வந்து விடும். புதன் வந்தாலே ஸ்வேபிஸ் ஹாலில் முதியவர்கள் இன்னும் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நேரத்தில் இன்னொரு கொலையும் எல்லோர் கவனத்துக்கும் வந்தது. ஏற்கெனவே திகிலாகப் பேசப்பட்ட அந்தக் கொலை 2020 இல் நடந்தது.  எல்பிரிடே கூகெர்  என்பவர் ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் தனிமையில் வசித்து வந்தவர். அவர் பியர் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரி. பெரும்  செல்வந்தரான அவர் கொலை செய்யப்பட்டிருந்ததும் ஒரு புதன் கிழமைதான்.

 ‘புதன் கிழமைகள் கொலையாளிக்குப் பிடித்த நாள் போலஎன்று பத்திரிகையும் ஒரு குண்டைத் தூக்கிப் போட எழுபதுக்கு மேலே உள்ளவர்கள், அடுத்த புதன்நீயா?, நானா? எதுக்கும் வியாழக்கிழமை இருந்தால் பார்ப்போம்எனப் பேச ஆரம்பித்தார்கள்

 “கொரோனா வந்து கனக்க வயது வந்தவர்களை அள்ளிக் கொண்டு போயிட்டுது. இப்ப கொலையாளி ஒருத்தன் வந்திருக்கிறான். பொலிஸ் என்னதான் செய்து கொண்டிருக்கு?” என மக்களிடம் இருந்து முணு முணுப்பு வர ஆரம்பித்தது.

“தனி ஒரு கொலையாளியா? அல்லது ஒரு குழுவா? கொலைக்கான காரணம் என்ன? இறந்து போன மூவர்களிடம் பெரியளவில் பணம் இருக்கவில்லை. ஒருவேளை பணம் இருக்கிறது என்று போய், எதுவும் கிடைக்காது ஏமாந்து போனதால், கொள்ளையடிக்க வந்தவன்/ வந்தவர்கள் கொலைகளைச் செய்தானா/செய்தார்களா? உறவுகளுக்குள் சொத்துப் பிரச்சினை ஏதாவது இருந்து அதனால் கொலைகள் நடந்திருக்குமா? வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகளை ஒன்றாக ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறோமா?” என்று பலவிதமான சந்தேகங்களும் ஊகங்களும் எழுந்தன. பொலிஸாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. திணறினார்கள்.

 

  • Like 13
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இந்தக் கதையை நாளைன்டைக்கு வியாழக்கிழமை எழுதக்கூடாதா........நாளைக்கு புதன் நான்வேற நடுங்கிக் கொண்டிருக்கிறன்.......சாரி....சரி மிகுதியையும் எழுதுங்கள்......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, suvy said:

ஐயா இந்தக் கதையை நாளைன்டைக்கு வியாழக்கிழமை எழுதக்கூடாதா........நாளைக்கு புதன் நான்வேற நடுங்கிக் கொண்டிருக்கிறன்.......சாரி....சரி மிகுதியையும் எழுதுங்கள்......!  😂

சுவி அண்ணை தொடரும் என்று போடவில்லை  கதை நிறைவு பெற்றுள்ளது என நினைக்கிறேன்  

நாளைக்கு புதன்கிழமை  வீட்டில் நிற்க வேண்டாம் எங்காவது பாதுகாப்பான இடத்தில் நின்று விட்டு வியாழன் திருப்பி வரவும் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

சுவி அண்ணை தொடரும் என்று போடவில்லை  கதை நிறைவு பெற்றுள்ளது என நினைக்கிறேன்  

நாளைக்கு புதன்கிழமை  வீட்டில் நிற்க வேண்டாம் எங்காவது பாதுகாப்பான இடத்தில் நின்று விட்டு வியாழன் திருப்பி வரவும் 🤣

ஒரு குட்டிக்கதை :

கருடன் பறந்து வந்து ஒரு மரத்தில் இருந்தது.....

சற்று தூரத்தில் எமன் கயிற்றுடன் யோசித்துக் கொண்டு நிற்பதைக் கண்டது.....

கீழே மரப்பொந்தில் ஒரு குருவி பயத்துடன் அமர்ந்திருந்தது.....

கருடனுக்கு   குருவியின் கதை முடியப்போகுது என்று தெரிந்தது.....

உடனே அதைத் தூக்கிக் கொண்டு பறந்தது.......

அடுத்தமலையில் உள்ள ஒரு பொந்துல விட்டது....

அதில் இருந்த பாம்பு லபக்கென்று குருவியைப் பிடித்து விழுங்கியது.....

கருடன் கவலையுடன்  அங்கிருக்க அங்கு எமன் வந்தார்.....சிரித்தார்.....

என்ன யோசிக்கிறாய் கருடா என்றார் .......

குருவியை உன்னிடமிருந்து காப்பாற்ற நினைத்தேன் முடியவில்லை ......

சரி நீ ஏன் அப்போது யோசித்துக் கொண்டு நின்றாய்......

அதுவா.....இந்தக் குருவியின் மரணம் அடுத்த மலையில் உள்ள பாம்புக்கு இரையாக வேண்டும்.....

அது எப்படி நிகழும் என்று யோசித்தேன்.....

நல்ல காலம் நீ வந்து அதை முடித்து வைத்தாய்......!

 

அங்கு இங்கு ஓடுவதைவிட வீட்டிலேயே அவள் கையாள சாப்பிட்டுட்டு இருக்கிறேன்.....!

உங்கள் அன்புக்கு நான் அடிமை கந்தையர் ......!  🙏

  • Thanks 1
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

“தனி ஒரு கொலையாளியா? அல்லது ஒரு குழுவா? கொலைக்கான காரணம் என்ன? இறந்து போன மூவர்களிடம் பெரியளவில் பணம் இருக்கவில்லை. ஒருவேளை பணம் இருக்கிறது என்று போய், எதுவும் கிடைக்காது ஏமாந்து போனதால், கொள்ளையடிக்க வந்தவன்/ வந்தவர்கள் கொலைகளைச் செய்தானா/செய்தார்களா? உறவுகளுக்குள் சொத்துப் பிரச்சினை ஏதாவது இருந்து அதனால் கொலைகள் நடந்திருக்குமா? வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகளை ஒன்றாக ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறோமா?” என்று பலவிதமான சந்தேகங்களும் ஊகங்களும் எழுந்தன. பொலிஸாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. திணறினார்கள்.

எம்மாலும் ஒரு முடிவுக்கு வர முடியாது திணறுகிறோம்!
தொடருமா? தொடராதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2
எந்த விசாரணைகளூடும் பொலிசாரால் முன்னேற முடியாமல் இருந்தது.. ஆனால் பத்திரிகைகள் விடவில்லை. அதுவும் உள்ளூர் பத்திரிகை ஓடியோடிச் செய்திகளைச் சேகரித்து, முதன்மைச் செய்தியாக  வெளியிட்டுக் கொண்டிருந்த து . அதிலும் ஒரு நிருபர், ஆழமாக உள்ளிறங்கி, எடித் லாங்கியின் உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவரது மரணத்தைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து பத்திரிகையில் வெளியிட ஆரம்பித்தார்.

Untitled Artwork

எடித் லாங்கைப் போலவே ஹைடமேரி(77)யும் தனியாக வாழ்ந்து வந்த விதவைதான். வோக்கர் (Walker) இல்லாமல் அவரால் நடமாட முடியாது. அவரின் நண்பராக இருந்தவர் ஹூர்ட் (89). அவரும் தனிமையில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கதைத்துக் கொள்வார்கள்

ஹைடமேரி இருந்த குடியிருப்பின் வாசல் கதவின் பூட்டு இரண்டு வாரங்களாகப் பழுதாகி இருந்தது. அதைத் திருத்துவதற்கு, அடுத்தநாளான வியாழக்கிழமையே வேலையாள் வருவதற்கு குடியிருப்பின் மேற்பார்வையாளர் ஏற்பாடு செய்திருந்தார். வாசல் கதவு எப்பொழுதும் சாத்தப்பட்டிருப்பதால் வெளியாட்கள் யாருக்கும் கதவின் பூட்டு உடைந்திருப்பது தெரிய வாய்ப்பில்லை. அப்படி யாரேனும் உள்ளே வந்தால் கூட, அவரவர்கள் தங்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டே உள்ளே இருந்தால் ஆபத்துக்கள் இல்லை.

ஹைடமேரியின் மூப்பு மற்றும் தனிமை காரணமாக அவரது வைத்தியரிடம் இருந்து, ஒரு சாதனம் அவருக்கு கிடைத்திருந்தது. அவருக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதில் உள்ள பட்டனை அழுத்தினால், உடனடியாக அவசர மருத்துவர் தொடர்பு கொள்வார். அவரது மகள்மாரும் ஒவ்வொரு நாளும் வந்து அவரைப் பார்த்து அவருக்குத் தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்து விட்டுப் போவார்கள்.

அன்று புதன் கிழமை, ஹைடமேரியை அன்றைய மாலையில் சந்திப்பதாக  ஹூர்ட் சொல்லி இருந்தார். நண்பர் வருவார், அவருடன் மாலையில் கோப்பி அருந்தலாம், நிறையப் பேசலாம் என்று கணக்குப் போட்ட ஹைடமேரி, அவரது வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள Nah&Gut கடைக்கு மதியம் சென்று, இரண்டு துண்டு கேக்குகளும்,ஒரு பத்திரிகையும், கிறிஸ்மஸ் தாத்தா வடிவில் உள்ள சொக்கிலேற் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வந்தார்

ஆனால், ஹைடமேரி வாங்கிய இரண்டு கேக் துண்டுகளை அன்று யாருமே சாப்பிடவில்லைசமையலறை மேஜையில் கேக்குகள் மட்டுமல்ல, கோப்பி போடுவதற்குத் தயாராக கோப்பி பாட் (Coffee pad) போடப்பட்டிருந்த மெசினும் இருந்தது. அவரது நண்பரான ஹூர்ட் உடன் சந்திப்பு அன்று மட்டுமல்ல என்றும் அவருக்கு இல்லாமல் போய்விட்டது.

ஹூர்ட் மாலையில் வீட்டுக்கு வரும் பொழுது, ஹைடமேரியின் வீட்டில் விளக்குகள் எரிவதைப் பார்த்திருக்கிறார். அதுவும் ஹைடமேரியின் குளியலறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததாலும், கிறிஸ்மஸ் காலம் என்பதாலும் யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கலாம் என்ற நினைத்து, அவர் தன் வீட்டுக்குப் போய்விட்டார்.

ஹூர்ட், தனது வயது மூப்புக் காரணமாக அதிகளவு வெளியே போவதில்லை. ஹைடமேரியுடன்தான் அவர் பழக்கங்களை வைத்திருந்தார். வியாழக்கிழமையும் ஹைடமேரியிடம் இருந்து அவருக்கு அழைப்பு வரவில்லை. கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நெருங்குவதால் எல்லோரிடமும் ஒரு பரபரப்பு இருக்கும். அதனால் இந்தக் காலகட்டத்தில் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஹூர்ட்டும் அந்த நினைப்பில் பேசாமல் இருந்து விட்டார்.

வெள்ளிக்கிழமை காலையில் அன்றைய தினசரியைப் பார்த்த ஹூர்ட்டுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரை அதிர்ச்சியாக்கிய செய்தி, புதன்கிழமை மாலை ஹைடமேரி கொலை செய்யப்பட்ட செய்திதான்

Untitled Artwork

பேஸ்போல் துடுப்பு அல்லது அதுபோன்ற ஒரு பொருளால் 20 தடவைகள் வரை தலையில் தாக்கப்பட்டு ஹைடமேரி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் வீட்டில் இருந்து 1500 யூரோக்கள்வரை களவாடப்பட்டிருக்கின்றது’  

  • Like 8
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருதே கதை... தொடருங்கள் ஐயா.
முதியோரைக் கொல்லும் மூடனை ஏன் கைது செய்ய முடியவில்லை?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஏராளன் said:

தொடருதே கதை... தொடருங்கள் ஐயா.
முதியோரைக் கொல்லும் மூடனை ஏன் கைது செய்ய முடியவில்லை?!

யூரோவலயம் வந்த பிறகு எல்லைகள் திறந்து விட்டார்கள் கிழக்கு ஐரோப்பியர்கள்  எந்தவொரு தடையுமின்றி வந்து போகலாம்  அதன் பின் இப்படியான குற்றங்களின்  எண்ணிக்கை அதிகம்   அவர்கள் செய்திருந்தால் பிடிப்பது கொஞ்சம் கடினம் இது எனது கருத்துகள்  ஆனால் கவியர் அழகுகாகவும். விபரமாகவும் எழுதுகிறார்   எழுதுவார் வாழ்த்துக்கள் தொடரவும் 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.......வெளியே போனால் போயிடும் சுவாசம் என்று  இன்று வீட்டினுள் வாசம்......!  😁

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகத் தான் இரண்டாம் பாகம் பதிவிடப்பட்டுள்ளதால் மிகுதி எப்போ வரும்... யாழின் 26 ஆண்டு பகுதி காத்திருக்கிறது....🖐️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2024 at 01:03, Kavi arunasalam said:

கொலை

மாடர்ன் தியேட்டேஸ் படம் மாதிரி ஒரே மர்மக் கதையாகவே எழுதுறீங்க.

எமக்கு அலுக்காமல் எழுதுவதில் நீங்க கில்லாடி.

6 hours ago, Kavi arunasalam said:

பேஸ்போல் துடுப்பு அல்லது அதுபோன்ற ஒரு பொருளால் 20 தடவைகள் வரை தலையில் தாக்கப்பட்டு ஹைடமேரி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் வீட்டில் இருந்து 1500 யூரோக்கள்வரை களவாடப்பட்டிருக்கின்றது’  

1500 யூரோவுக்காக கொலையா?

A man was beaten to death as he left a Bronx McDonald’s in a violent robbery attempt caught on camera over $1 — and no one stopped to help.

The 60-year-old man, identified by police as Juan Fresnada, of the Bronx, was leaving the fast food restaurant on Christmas Eve with his partner when a group of men attacked, the NYPD said. 

Family friends said Fresnada was known as Cuba. Neither Cuba nor his partner speak much English, and tried to get away, but were chased.

“The guys just told them ‘Give me the money, give me the money.’ He was like ‘I don’t know what you’re talking about,’” the couple’s friend Tony told NBC New York. He thinks they were targeted for money, even though the robbers only getting away with $1.

Video shows the attack continue, as Cuba is punched and kicked repeatedly and eventually left motionless in the middle of East 165th Street and Third Avenue. 

Tony said that Cuba told his partner to run, and grabbed a trash can to potentially use as a weapon to scare the attackers away. The partner was able to get away, but Cuba ended up in critical condition. He remained hooked up to a ventilator, not responsive, on Friday, Tony said.

https://www.nbcnewyork.com/news/local/man-seen-on-video-beaten-in-bronx-for-1-and-no-one-stops-to-help/2250599/#:~:text=A man was beaten to,no one stopped to help.

இங்கு ஒரு டாலருக்காக கொலையும் நடந்திருக்கு.

உது பரவாயில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக போகிறது . ஒரு வருடமாகி விட்ட து கொலையாளி பற்றிய  முடிவு அறிய ஆவல்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிலாமதி said:

கதை நன்றாக போகிறது . ஒரு வருடமாகி விட்ட து கொலையாளி பற்றிய  முடிவு அறிய ஆவல்  

என்ன அவசரம் பொறுங்கவன்

தொடரட்டும் ஐயா 

Edited by தனிக்காட்டு ராஜா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

3

றக்குறைய 30 சென்டிமீட்டர் நீளத்துக்குக் காய்ந்து போயிருந்த நிலையில் அந்தக் கறை இருந்திருக்கிறது. வீட்டின் வாசலில் இருந்து சமையல் அறைக்குப் போகும் பாதையில் இருந்த இரத்தக்கறை, பார்வைக்கு இலகுவாகத் தெரிந்து விடும் விதமாகவே இருந்திருக்கிறது. ஆனாலும் பொலிஸாரின் கண்களுக்கு ஏனோ அது தெரியாமற் போய் விட்டது. சில வாரங்கள் போய் விட்டதால் அந்தக் கறை இப்பொழுது காய்ந்து கறுப்பு நிறத்துக்கு வந்து விட்டிருந்தது

உலர்ந்த அந்த இரத்தம் எடித் லாங்கின்(86) உடையது  என்பதுவும் இப்பொழுது தெளிவாகிவிட்டது. அந்தக்கறையைப் பார்க்கும் போதே, இங்கே ஒரு குற்றம் நடந்திருக்க வேண்டும் என்பது வெள்ளிடை மலை. ஏனோ அது  பொலிஸாருக்குத் தெரியாமற் போய் விட்டது.

 

Untitled Artwork

14.12.2022 அன்று எடித் லாங் தனது சமையலறையில் இறந்திருந்தார்மாலையில் எடித் லாங்கின் மகள் ஹைக்கே(64), தனது தாயார் சமையலறையில் இறந்திருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் தந்திருக்கிறார். அவரது உடல் சமையல் அறையின் தரையில் இருந்தது. இடது கை பின் நோக்கி நீண்டிருந்தது. யாரோ அவரை அங்கே இழுத்து வந்து விட்டது போலவே அந்தக் காட்சி இருந்தது. அவசர உதவி மருத்துவரும், மருத்துவ உதவியாளர்களும் இதே கருத்தைத்தான் முன் வைத்தார்கள். ஆனால் குற்றப் பிரிவுப் பொலிஸார் அன்று மாலையே விசாரணைகளை நடத்தி, ”இந்த மரணத்துக்கும் வெளியாட்கள் எவருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. தரையில் விழுந்ததால், தலையில் காயம் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு விபத்து மரணம்என்று அறிவித்தார்கள். ‘எடித் லாங் தடுமாறி விழுந்திருக்கிறார், உச்சந் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. எடித்லாங்கின் கைப்பை திறந்திருந்தது. அந்தக் கைப்பை, பணம் இல்லாமல் வெறுமையாக இருந்தது’   எடித் லாங்கின் மரணச் சான்றிதழில்  இப்படித்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் 19.12.2022, திங்கட்கிழமை எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பொலிஸார் சிரத்தை எடுத்து எடித்லாங்கின் மரணத்தில் சரியான முறையில் விசாரணையை மட்டும் மேற்கொண்டிருந்திருந்தால், அடுத்து நடந்த கொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். எடித்லாங்கின் இறப்பு விபத்தால் ஏற்பட்ட மரணம் என அறிவிக்கப் பட்டதால், கொலையாளி தன்னைத் தானே தட்டிக் கொடுத்து , அதே பாணியில் இன்னுமொரு கொலையையும் செய்வதற்கு ஏதுவாக எடித் லாங்கின் மரண விசாரணையின் தீர்ப்பு அமைந்து விட்டிருந்தது.

எடித் லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டதன் பின்னர் ஹைக்கே தனது தாயாரின் வீட்டை த் துப்பரவு செய்து ஒழுங்கு படுத்துவதற்குச் சென்று பார்த்த போது, தனது தாயார் விபத்தில் இறக்கவில்லை மாறாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான சில தடயங்களைக் கண்டறிந்தார்

பாதுகாப்புக்கு என்று போடப்பட்டிருந்த கதவுச் சங்கிலி உடைக்கப் பட்டிருந்தது. தொலைபேசி வயர் துண்டிக்கப் பட்டிருந்தது. கட்டிலின் கீழ் இருந்த மரப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அந்த மரப் பெட்டியின் மீது இரத்தக் கறை இருந்தது. இந்தத் தகவல்களை உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்து தன் தாயின் மரணத்தில் இருந்த சந்தேகத்தையும் ஹைக்கே பதிவு செய்தார். மீண்டும், எடித்லாங்கின் வீட்டை பரிசோதித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக வீட்டைப் பூட்டிசீல்வைத்து விட்டுப் போனார்கள்.

“கொலை நடந்திருப்பதற்கான சாத்தியம் இருப்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம். மேலதிகத் தடயங்கள் கிடைக்கவில்லை. எடித் லாங்கின் உடலும் எரிக்கப்பட்டு விட்டது. ஆகவே மேற்கொண்டு எதுவும் செய்வதற்கு இல்லை. நீங்கள் அந்த வீட்டை இனி துப்பரவு செய்து கொள்ளலாம்என பொலிஸ் தரப்பில் இருந்து, ஹைக்கேக்கு பதில் வந்தது. தாயின் இழப்பில் ஏற்பட்ட சோகம், பொலிஸாரின் கையாலாகத் தனம் எல்லாம் சேர்ந்து ஹைக்கேயால் நிம்மதியாக உறங்க முடியாதிருந்தது. அப்பொழுதுதான் ஸ்வேபிஸ் ஹால் நகரப் பத்திரிகையில்  இந்த விடயத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்த  நிருபரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. 

Untitled Artwork

பத்திரிகை நிருபர்லுமினோல் எண்ணெய்யை ( Luminol oil)இணையத்தளத்தில் இருந்து வாங்கிக் கொண்டார். சந்தேகப்படும் இடங்களில் லுமினோலை பூசினால், அங்கே இரத்தம் இருந்தாலும், அவை சரியாகத் துடைக்கப்படாமல் இருந்தாலும்  அந்தப் பகுதி ஒளிர ஆரம்பிக்கும். கொலைகள் நடக்கும் இடங்களில், விசாரணைகளில் தடயங்களைக் கண்டறிவதற்காக  லுமினோலை புலானாய்வாளர்கள் பயன்படுத்துவார்கள். இப்பொழுது பத்திரிகை நிருபர் லுமினோலைப் பயன் படுத்தி ஒளிரும் இடங்களைப் படம் பிடித்துக் கொண்டார்.

 

Untitled Artwork

“விசாரணையில் அசட்டையீனம். ஒரு கொலை, விபத்தாக காட்டப் பட்டிருக்கிறதுஎன்று அடுத்தநாள் பத்திரிகைச் செய்தியின் தலைப்பு இருந்ததுகூடவே, தரைக் கம்பளத்தின் கீழே இரத்தம் உறைந்திருந்தது. கொலையாளி அந்த இரத்தக் கறையை மறைப்பதற்காக, அவசரத்தில் பக்கத்தில் இருந்த கம்பளத்தை எடுத்து இரத்தம் இருந்த இடத்தில் போட்டு மூடி விட்டிருக்கிறார். கதவு வாசலில் இருந்து சமையலறை வரை தரையில் இரத்த அடையாளங்கள் இருக்கின்றன. அது எடித் லாங்கை, வாசலில் வைத்து தாக்கிக் கொலை செய்து விட்டு, கொலையாளி அவரை  இழுத்து வந்து சமையலறையில் போட்டதைக் காட்டுகிறது. தரையில் இருந்த இறத்தக் கறையை சமையலறையில் இருந்த துணியினால் துடைத்து, பின் அதை சமையல் அறைத் தண்ணீர் தொட்டியில் கழுவியதற்கான அடையாளங்கள் இருக்கின்றன…” என படங்களுடன் செய்தி வெளியானது. உள்ளூரில் வெளியிடப்பட்ட இந்தச் செய்தியை யேர்மனியின் பல பாகங்களிலும் வெளியாகும் பல பத்திரிகைகள் வாங்கி தங்கள் தங்கள் பத்திரிகைகளிலும் பிரசுரித்தார்கள். இந்தச் செய்தியால், பொலிசார் மீது விமர்சனங்கள் எழுந்தன. பொலிசாரது செயற்பாடுகள்  சரியாக அமையவில்லை  என்பதால்,  மக்கள்  பொலிசார் மீதான தமது அதிருப்தியை வெளிப்படையாகவே கதைத்தார்கள்.

Untitled Artwork

பொலிஸாரின் மேலதிகாரி ஊடகவியலாளர்களை அழைத்து, தங்களது பக்க நியாயங்களைச் சொன்னார்.

எடித் லாங், மருந்துகளை உட் கொள்பவர். மயக்கம் அவருக்கு அடிக்கடி வருவதுண்டு என்று அவரது குடும்ப வைத்தியர் குறிப்பிட்டிருக்கிறார். முதுமை, தள்ளாட்டம் என்பன காரணமாக அவர் விழுந்ததனால்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்ற நோக்கிலேயே நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டோம். எதுவானாலும் தவறு நடந்து விட்டது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். அதற்காக வருந்துகிறோம். எடித் லாங்கின் வீட்டில் இருந்து மேற்கொண்டு தடயங்களை எங்களால் பெற முடியவில்ல. ஹைடமேரியின் கொலையில் இருந்து தடயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம். கொலையாளியைக் கண்டுபிடிக்கும் எங்களது வேலை தொடர்கிறது

பொலிஸாரிடம் இருந்து வந்த இந்தக் கருத்தைப் பற்றி எடித் லாங்கின் மகள் ஹைக்கே இப்படிச் சொல்லி இருந்தார், “ எனது தாயார் தலையில் தாக்கப் பட்டு கொல்லப் பட்டிருக்கிறார். பொலிஸார் அதை விபத்து என்றார்கள். நாங்கள் அதை கொலை என்று நிரூபித்திருக்கிறோம். தவறி விழுந்த ஒருவருக்கு உச்சந் தலையில் காயம் எப்படி ஏற்படும் என்றாவது குறைந்த பட்சம் அவர்கள் ஏன் விளங்கிக் கொள்ளவில்லை. ‘தவறு, வருந்துகிறோம்போன்ற சொற்களுடன் இந்த விடயத்தை பொலிஸ் தரப்பு கடந்து போயிருக்கிறது. எனக்கு அவர்கள் மேல் இருந்த நம்பிக்கையும் மரியாதையும் வெகுவாகக் குறைந்து விட்டன.

மக்கள் மேல் தங்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது என்பது பொலிஸாருக்கும், மரண விசாரணை மேற்கொண்ட அரச சட்டத்தரணிக்கும் தெளிவாகத் தெரிந்து விட்டது. ஆகவே  நடந்த இரண்டு கொலைகளை யார் செய்தது என்பதை கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் அதை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு வந்தது.

கொலையாளியை க் கண்டு பிடிக்கும் வேலையை அவர்கள் செய்யட்டும். அந்த இடைவெளியில் நாங்கள் இல்ஸ்கொபன் கிராமத்துக்குப் போய் வருவோம்.

  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி ஐயாவுக்கு நன்றி.
தொடருங்கோ துயர்க்கதையை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 · 
வயது போனவர்களோடு நேரம் செலவிடுவது என்பது மீண்டும் கிடைக்காத ஒரு சந்தர்ப்பம்..🙏
 
May be an image of one or more people and text that says 'எப்போது நேரம் கிடைத்தாலும் உங்களது பெற்றோர்களுடன் அமருங்கள், இந்த நேரம் கழிந்து விட்டால் திரும்ப கிடைக்காது..!'
 
 
 
 
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4

ஸ்வேபிஸ் ஹால் நகரசபைக்கு உட்பட்டதுதான் இல்ஸ்கொபன் கிராமம். இது ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு அமைதியான கிராமம். 87 சதவீதமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டது,  இங்கு 6000க்கு சற்று அதிகமான மக்களே வசிக்கிறார்கள்பெரிய தொடர்மாடிக் குடியிருப்புகள் அதிகம் இல்லாத இந்தக் கிராமத்தில் தனித்தனி வீடுகளிலேயே பெரும்பாலானோர் வசிக்கிறார்கள்.

 

Untitled Artwork

ஜனவரி 16, திங்கட்கிழமை அன்று, வீட்டின் அழைப்புமணிச் சத்தம் கேட்டு, முதியவர் (86) வந்து கதவைத் திறந்து பார்த்தால் அங்கே, கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் தனது கையில் லீடில் (Lidl super market)  சுப்பர் மார்க்கெற்றின் வாராந்த பிரசுரங்களுடன் நின்றார்.

பனி விழும் குளிர்காலம். சூரியன் ஓய்வெடுக்கும் தருணம். கறுப்புக் கண்ணாடியுடன்,  சிரித்துக் கொண்டே, தன் வீட்டுக்கு முன்னால் நின்ற அந்நபரைக் கண்டதும், முதியவருக்கு  ஆச்சரியமாக இருந்தது.  “என்ன வேண்டும்?” என்று கேட்டார்

அவன் கையில் இருந்த லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களைத் தூக்கிக் காண்பித்தான்.  “இதெற்கெல்லாம் பெல் அடிக்கத் தேவையில்லை. இந்தத் தபால் பெட்டிக்குள் போட்டு விட்டுப் போஎன்றார்.

அவன் அவரை நெருங்கி வந்தான். ஏதும் பேசவில்லை அவர் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரத்தைத் திணித்துவிட்டுப் போனான்.

 

Untitled Artwork

யாராயிருக்கும்? நான் சொன்னது  இவனுக்கு விளங்கவில்லையாவின்ரரிலும் கூலிங்கிளாஸ் போட்டிருக்கிறான். தலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ?” மனதில் எழுந்த கேள்விகளுடன் முதியவர் வாசல் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார்.

அடுத்தநாள் மதிய நேரம். முதியவர், உணவை முடித்து விட்டு வரவேற்பறையில் இருந்தார். ஒரு குட்டித் தூக்கத்துக்காக அவரது மனைவி ஷோபாவில் படுத்திருந்தார். வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. வழமையாக இந்த நேரங்களில் யாரும் அழைப்பு மணியை அழுத்துவதில்லையே என்ற கேள்வி எழுந்தாலும், எழுந்து வந்து கதவைத் திறந்தார்

அதே கறுப்புக் கண்ணாடி அணிந்த மனிதன். அதே உடுப்பு. நேற்றையைப் போல் இன்றும் அவன் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள்.

வீட்டின் வாசலில் நின்றபடியே,“நேற்றுத்தானே தந்துவிட்டுப் போனாய். பிறகு எதுக்கு இப்ப? அதுவும் மத்தியான நேரம்என்று எரிச்சல் கலந்த குரலில்  முதியவர் கேட்டார்

முதியவரின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. முதல்நாள் போலவே இன்றும் அவரை நெருங்கி வந்தான். தனது வலது கரத்தால் அவன் விட்ட குத்து, அவர் கண்ணாடிக்குக் கீழ், மூக்கின் மேல் வேகமாக வந்து விழுந்ததுவாசல் படியில் நின்ற முதியவர், நிலைதடுமாறி, வீட்டினுள்ளே விழுந்தார்வீழ்ந்தவர் அதிர்ச்சியில் இருந்து மீள முன்னரே அவரது நெற்றியில் அவனது துப்பாக்கி முனை இருந்தது.

வெளியில் கேட்ட சத்தங்கள்முதியவரின் மனைவியின் சிறு தூக்கத்தைக் கலைத்து விட்டிருந்தது. ஷோபாவில் இருந்து எழுந்தவரை, கணவனின்உதவி, உதவி செய்யுங்கள்என்ற கூப்பாடு விரைவு படுத்தியது.

விழுந்திருந்த முதியவரை அவன் காலால் உதைக்க எத்தனித்தபோது, வாசலோடு ஒட்டியிருந்த அறையின் ஒளி புகாத கண்ணாடிக் கதவினூடாக ஒருவர்( முதியவரின்மனைவி ) ஓடி வருவதை அவதானித்தான். யாரோ வருகிறார்கள் என்ற பதட்டத்தில் அவன் கால் ஒரு அடி பின் வைக்க, அந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, தரையில் விழுந்திருந்த முதியவர் தன் காலால் பலம் கொண்ட மட்டும் கதவைத் தள்ள வாசல் கதவு மூடிக் கொண்டது. அவன் வெளியே. அவர்கள் உள்ளே.

தகவல் கிடைத்து பொலிஸார் வந்திருந்தனர். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான் என்பதை  முதியவர் மறக்காமல் சொன்னார். அவன் என் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்த போதுநீ பணம்என்று சொன்னான், என்பதையும் சொன்னார்.

பொலிஸாருக்குப் புரிந்து விட்டது. வந்தவன் வெளிநாட்டுக்காரன் மட்டுமல்ல, சமிபத்தில்தான் யேர்மனிக்கு வந்திருக்கிறான் என்பதுவும். இல்ஸ்கொபன் கிராமத்தின் வீதிகள், பூங்காவனம், விளையாட்டு மைதானம் என்று  எல்லா இடங்களிலும்  பொலிஸார்  தேடினார்கள். அவன் அகப்படவில்லை. “கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் கறுப்புக் கண்ணாடியுடன் யாராவது நடமாடியதைப் பார்த்தீர்களா? “ என விசாரித்துப் பார்த்தார்கள்

ஒரு பெண் சொன்னாள். “இன்று ஹோம் ஒபீஸ். மதிய இடைவேளைக்கு கொஞ்சம் காற்றாட வெளியே வந்த போது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் ஒருவனைக் கண்டேன். கனிவான முகத்துடன்… “ஹலோசொல்லிச் சிரித்தான். நானும்ஹலோசொல்லிவிட்டுப் போனேன்என்று.

ஹேபாப் கடை வைத்திருந்தவர் சொன்னார், “ இங்கு உணவருந்த வருபவர்களை, அவர்கள் வெளியூரா, உள்ளூரா என என்னால் இனம் கண்டு கொள்ள முடியும். அவன் வெளிநாட்டவன்என்று.

 

Untitled Artwork

வந்தவன் கிராமத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவன் நிச்சயமாக இல்ஸ்கொபனை விட்டு வெளியே போயிருப்பான்என்று பொலிஸருக்குப் புலப்பட்டது. “புதிதாக, சந்தேகப்படும்படியானவெளியாருடைய வாகனங்களை யாராவது கண்டீர்களா?” என்று கேட்டுப் பார்த்தார்கள். கொஞ்சம் பலன் கிடைத்தது.

 

Untitled Artwork

ஒரு கார். அதன் இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ( duct tape)ஒட்டிய தடயங்கள் இருந்தன. அந்தக் கார் VW station wagon, Silver  நிறம் என அடையாளங்களைத் திரட்டிக் கொண்டார்கள். தேடுதலின் போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியின் புதர்களுக்குள் இருந்து ஒரு சோடி கையுறைகளையும் ஒரு விளையாட்டுத் துப்பாக்கியையும், லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களையும் பொலிஸார் கண்டெடுத்தார்கள். அவனுடைய  அங்க அடையாளங்களை முதியவரிடம் பெற்று, ஒரு கற்பனை முகத்தை (Fandom image) வரைய ஏற்பாடு செய்தார்கள்.

  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

5

டானியல்(32), சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன். வேலை வாய்ப்புத் தேடி தனது மனைவி நத்தலி, பத்து, பன்னிரண்டு வயதான இரண்டு பிள்ளைகளுடன், 2022 செப்ரெம்பரில் யேர்மனிக்கு வந்தவன். தெரிந்தவர்கள் மூலமாக ஸ்வேபிஸ்ஹால் நகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவர்களுடன் சேர்ந்தே கட்டிட வேலைகள், தோட்ட வேலைகள் என்று கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தான்

வேலை வாய்ப்புகளுக்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பலர் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இதில் அநேகமானவர்கள் கட்டிடத் தொழிலிலேயே கவனம் செலுத்துகிறார்கள். சிலர் அஸ்பாரகஸ் பிடுங்கி எடுப்பது ஸ்ரோபரி பழங்கள் பறிப்பது  போன்ற வேலைகளை தோட்டங்களிலும் செய்வதுண்டு. கறுப்பு வேலை செய்து துரிதமாக பணம் சம்பாதித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குப் போய் விடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் டானியல் குடும்பமாக யேர்மனிக்கு வந்தது, நிரந்தரமாகத் தங்குவதற்கான எண்ணமாக இருந்திருக்கலாம்.

டானியலின் மனைவி நத்தலி, அவுஸ்திரியாவில் சில காலம் வசித்ததால் அவளுக்கு யேர்மனிய மொழி தெரிந்திருந்தது. வேலைகள் ஓரளவுக்குக் கிடைக்க, வாழ்வதற்கு ஓரளவு பணம் அவர்களுக்கு வர ஆரம்பித்தது. தெரிந்தவர்களுடன் தங்கியிருந்தாலும் தங்கள் குடும்பத்துக்கு என்று தனி வீடு தேவை என்பதை உணர்ந்து, அவர்கள் வீடு தேட ஆரம்பித்தார்கள்.

அப்பொழுதுதான் டானியல் குடும்பத்துக்கு ரன்ஜா (34)  அறிமுகமானார். ரன்ஜாவும் அவளது கணவரும் ஸ்வேபிஸ் ஹாலுக்கு அடுத்த நகரத்தில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியிருந்தார்கள். அங்கு சென்று வாழ்வதற்காக, தற்போது அவர்கள் வாழும் வீட்டை வாடகைக்கு, அதுவும் தற்காலி கமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று விளம்பரம் செய்ய, முதலாவதாக அவர்கள் முன் வந்து நின்றது டானியலும், அவனது மனைவி, பிள்ளைகளுமே. 1300 யூரோக்கள் மாத வாடகைக்கு அந்த வீடு டானியலுக்குக் கிடைத்தது.

நத்தலிக்கு மொழி தெரிந்ததால் டானியலுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வேலைக்குப் போவது. மாலையில் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது என்று  அவன் எப்பொழுதும் வெளியிலேதான் இருந்தான். நத்தலி மட்டும் வீட்டில் இருந்தாள்.

ஹைடமேரியின் கொலையாளியைக் கண்டு பிடிக்க முடியாமல் பொலிஸார் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். சில தடயங்களை அவர்கள் சேகரித்து வைத்திருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். நாட்கள் ஒவ்வொன்றாகக் கடக்க, 2020இல் நடந்த கொலையையே துப்புத் துலக்கி கண்டு பிடிக்காதவர்கள், இதைக் கண்டு பிடித்து விடுவார்களா? என்ற ஏளனப் பேச்சு வரத் தொடங்கியது. அதாவது பொலிஸ் துறையின் கையாலகத் தன்மையைக் குறித்து விமர்சனம் பெரிதாக வர ஆரம்பித்தது.

மீண்டும் ஒரு புதன்கிழமை. 25.01.2023 ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பத்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மிஹேல் பாக் என்ற கிராமம் அல்லோலகலப்பட்டது.” ஹேரயுற்றே (83) என்ற மூதாட்டி கொல்லப்பட்டார் " என்ற செய்தி வந்தது. இருந்த தலையிடி காணாதென்று  பொலிஸாருக்கு மேலும் தலையிடி கூடியது?

 

Untitled Artwork

ஹேரயுற்றே சாவியால், தனது வீட்டுக் கதவைத் திறந்து உள் நுளையும் போது, பல தடவைகள் மறந்து போய் சாவியை கதவிலே விட்டு விடுவதுண்டுஅதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு மூதாட்டி இதை அவதானித்து ஹேரயுற்றேயிடம் பல தடவைகள் எச்சரித்தும் இருக்கிறார்.

“இங்கை யார் வரப்போயினம்?” என்று ஹேரயுற்றே அவருக்குப் பதில் சொல்லியிருக்கிறார்

ஆனால் கொலையாளி வந்திருந்தான். கதிரையில் சாய்ந்தபடி அவர் உடல் இருந்தது. அவரைச் சுற்றி இரத்தங்கள் தெறித்திருந்தன. தலை சிதைக்கப்பட்டிருந்தது. கை,தோள்பட்டை, தலை ஆகிய பகுதிகளில் குறைந்தது 26 தடவைகள்தாக்கப்பட்டு  அவர் கொலை செய்யப்பபட்டிருப்பதாக அறிக்கை வந்தது.

ஹேரயுற்றே வீட்டுக்கு வெளியே வெறும் 100 மீற்றர் தூரத்தில் ஒரு புதருக்குள் இரண்டு கையுறைகளையும், ஒரு சுத்தியலையைம் பொலிஸார் கண்டெடுத்தார்கள். ஹைடமேரியின் கொலைக்கான ஆயுதம் கிடைக்காது திணறிக் கொண்டிருந்த பொலிஸார் , ஹேரயுற்றேயின் கொலைக்கான ஆயுதம் கிடைத்த  போது மிகுந்த உசாரானார்கள். அதைத் துப்புத்துலக்குதலுக்கான பெரும் உந்துதலாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

 

Untitled Artwork

புதிதாக வாங்கிய சுத்தியல்.அதன்மேல் ஒட்டப்பட்டிருந்த விலை கூட இன்னமும் அகற்றப்படவில்லை. பழுப்பு நிறமான கைப்பிடியின் பிற்பகுதி சிவப்பு நிறத்தில் இருந்தது. அந்த சுத்தியலைத் தயாரித்த நிறுவனம்  கோனெக்ஸ் என்றிருந்தது. அதை ஸ்வேபிஸ்ஹாலில் விற்பனை செய்பவர்கள்ஹேசெலேகட்டிட பொருட்கள் விற்பனை நிலையம் என்பதும் தெரிந்தது.

இரண்டு  பொலிஸார்  ஹேசெலே கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்துக்குச் சென்றார்கள்

சமீபத்தில் இந்தவகையான சுத்தியலை யாராவது வாங்கியிருக்கிறார்களா? என்று பார்த்துச் சொல்லுங்கள்என உரியவர்களிடம் கேட்டார்கள்.

கணினியில் நன்றாக அலசிப் பார்த்த  அவர்கள் சொன்னார்கள், “யாரும் சமீபத்தில் இந்தச் சுத்தியலை வாங்கவில்லைஎன்று

“வேறு எங்கே வாங்கலாம்பொலிசார் கேட்டார்கள்.

“ஒன் லைனில் கிடைக்கிறதுஎன்றார்கள்.

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் வருகிறோம் கூடவே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4ஆம் பகுதி இப்பதான் கண்ணில பட்டது.
கிட்ட கிட்ட வந்திட்டுதோ பொலீஸ்?!
தொடருங்கோ ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

4ஆம் பகுதி இப்பதான் கண்ணில பட்டது.
கிட்ட கிட்ட வந்திட்டுதோ பொலீஸ்?!
தொடருங்கோ ஐயா.

அப்ப.    5 ஆம் பகுதி வாசிக்கவில்லையா??  இனி 6 ஆம்  பகுதி   இன்று வரலாம்   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

அப்ப.    5 ஆம் பகுதி வாசிக்கவில்லையா??  இனி 6 ஆம்  பகுதி   இன்று வரலாம்   🤣

5ஆம் பகுதியும் வாசித்துவிட்டேன் அண்ணை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2024 at 02:19, Kavi arunasalam said:

கொலையாளியை க் கண்டு பிடிக்கும் வேலையை அவர்கள் செய்யட்டும்.

ஜேர்மன் பொலிஸ் இவ்வளவு கவலையீனமானவர்களா?

நம்பவே முடியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பகுதியை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மன் பொலிஸ் இவ்வளவு கவலையீனமானவர்களா?

நம்பவே முடியவில்லை.

கவியார். ஜேர்மன்காரரின். மரியாதை காற்றில் பறக்கிறது  தயவுசெய்து எழுதுவதை ஒரு மாதம் ஒத்தி வையுங்கள்  🤣🤣🤣

 

12 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த பகுதியை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன்.

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய் Minnambalam Login1Nov 08, 2024 11:58AM நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தலைவர் விஜய் இன்று (நவம்பர் 😎 பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டிற்கு முன்பு வரை விஜய்யை ஆதரித்து சீமான் பேசி வந்தார். மாநாட்டின் போது திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரண்டு கண்கள் என்று விஜய் பேசியதற்கு சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து “சீமான் அவரது இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் அதை தங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை” என தவெக நிர்வாகி சம்பத் குமார் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் தவெக தலைவர் விஜய் “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக சீமான் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் இணையத்தில் காரசாரமான கருத்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், சீமானுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.   https://minnambalam.com/political-news/tvk-vijay-wishes-seeman-on-his-birthday/
    • அஞ்சு வயசுப் பொடியள் மாதிரி மைக்கைப் பிடிச்சுக்கொண்டு சுத்துறவையை வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும் கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் எனக்கு எரிச்சல்வரும்😆
    • சுமந்திரன் கண்ட பகல் கனவு! November 7, 2024   — அழகு குணசீலன் — பொதுத்தேர்தல் களநிலவரங்களின்படி ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் எதிரணியின் ஆதரவு தேவைப்படும் என்பது வெளிச்சமாகிறது. இதற்கு சிங்கள, சோனக தரப்பில் இருந்து ஆதரவைப்பெறுவதற்கு அவர்  முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக தமிழ்தரப்பின் தமிழ்த்தேசிய, இணக்க அரசியல் பலவீனத்தை பயன்படுத்தி ஆதரவைப் பெறுவது இலகுவானது என்று கருதி இருக்கக்கூடும். அதேவேளை ஒரு தரப்பில் மட்டும் தங்கியிருக்காமல் இரண்டு தரப்புக்களுக்கும் நம்பிக்கையை கொடுத்து வீடு இல்லையென்றால் வீணை என்ற நிலையில் தான் அநுரவின் நகர்வுகள் அமைந்திருக்கின்றன.     தன்னை வந்து சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரனுடனும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் ஜனாதிபதி என்ன பேசினார் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் தெற்கில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தான் வடக்கு தமிழ்தலைவர்களுடன் பேசுகிறேன், தொடர்பில் இருக்கிறேன் என்று ஜனாதிபதி அநுரகுமார பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சை அல்லது ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து படம் எடுத்துக்கொண்ட போது இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றத்தை தமிழ் அரசியல் வாதிகள் அரைகுறையாக விளங்கிக்கொண்டு அல்லது தங்கள் விருப்பத்திற்கு அதற்கு அர்த்தம் கற்பித்து பூனையை ஆனையாக்கி  தங்களை அமைச்சராக கனவு கண்டிருக்கிறார்கள் என்றே கொள்ளவேண்டி உள்ளது.  அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறோம் என்று இவர்கள் சொன்னதன் அர்த்தம் அநுரவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது.  இதுவும் ஆதரவுக்கு சாராயத்தவறணை கேட்டதுபோல் அமைச்சர் பதவி கேட்டல்.  இது ஊழலா? இல்லையா? என்.பி.பி.யிடம் தான் கேட்கவேண்டும். சுமந்திரன், டக்ளஸை அநுர நம்புவதற்கு வெறுமனே பாராளுமன்ற இடைவேளை இலைக்கஞ்சி  மற்றும் தனிப்பட்ட சந்திப்பும் -உரையாடலும் மட்டும் காரணமல்ல. அதற்கும் மேலாக காரணங்கள் உண்டு. என்.பி.பி.யின் அல்லது ஜே.வி.பி.யின் ஈழப்போர் குறித்த நிலைப்பாட்டிற்கும்,  இவர்கள் இருவரின் நிலைப்பாட்டிற்கும், அநுரகுமார திசாநாயக்கவின் நிலைப்பாட்டிற்கும் முக்கிய அம்சங்களில் வேறுபாடு இல்லை. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை சுமந்திரனும், டக்ளசும் பயங்கரவாதப்போராட்டம் என்பவர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்பவர்கள். இறுதியுத்தத்தில் நடந்தது இனவழிப்பு அல்ல என்பவர்கள். சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவையற்றது அல்லது அதை சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பவர்கள். இதன் மூலம் மறைமுகமாக இராணுவம் தண்டிக்கப்படாத உள்ளக பொறிமுறைக்கு ஆதரவு வழங்குபவர்கள். ஒட்டு மொத்தத்தில் அநுரகுமாரவின் கடந்த காலத்தை  மறைக்க அவர் இனவாதியல்ல என்றும் வெள்ளையடிப்பவர்கள்.  மறு பக்கத்தில் அமைச்சரவையில் ஒரு தமிழரையாவது வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலில் ஜனாதிபதிக்கு உள்ளது. அண்மைக்காலமாக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சுமந்திரன் அமைச்சர் பதவி பற்றி வெளிப்படையாக பிரஸ்தாபிக்கிறார். அமைச்சர் பதவியையிட்டு பரிசீலிக்க தயாராக இருப்பதாக பல தடவைகள் அறிவித்துள்ளார். அது பற்றி ஊடகவியலாளர்கள் கேட்கும் போது புளகாங்கிதம் அடைகிறார். ஜே.வி.பி. யாழ்.மாவட்ட அமைப்பாளர் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை அழைத்து வந்து யாழில் ஊடகச்சந்திப்பு நடாத்தி  இவர்களின் பிரச்சார யுக்தியை மறுத்திருந்தபோதும் சுமந்திரன் அமைச்சர் பதவி குறித்து தொடர்ந்தும் பேசி வந்தார். சிலவேளை அது தனக்கல்ல டக்ளஸ்க்கு என்று நினைத்தார் போலும். இதனால் தான் அமைச்சராவதை நியாயப்படுத்தும் வகையில் சில நகர்வுகளை  தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தார். தேர்தலின் பின்னர் இது குறித்து மக்கள் அறிந்திருந்தார்கள் என்றும் தமிழரசுக்குக்கிடைத்த தேர்தல் வெற்றி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான தமிழ்மக்களின் அங்கீகாரம் என்றும் சுமந்திரன் அறிவிக்கக்காத்திருந்தார். இதே பாணியில் தான் சுமந்திரன் சம்பந்தரை பதவி விலக கோரியபோதும்  திருகோணமலை மக்கள் எனது முதுமையை அறிந்துதான் தனக்கு வாக்களித்ததாகவும் அது மக்களின் அங்கீகாரம் என்றும் கூறி சம்பந்தர் பதவிவிலக மறுத்திருந்தார்.  அண்மையில்  ஒரு கூட்டத்தில் செல்லையா குமாரசூரியர், கதிர்காமர் ஆகியோருடன் மு.திருச்செல்வத்தை ஒப்பிட்டு சுமந்திரன் பேசியிருந்ததும் மற்றொரு காய்நகர்வு. இதன் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படாத, நியமிக்கப்பட்ட கடந்தகால தமிழ் அமைச்சர்கள் போன்று தான் செயற்பட மாட்டேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட திருச்செல்வம் போல் செயற்படுவேன் என்பதாகும். தேவை ஏற்பட்டால் அமைச்சர் பதவியை திருச்செல்வம் போன்று இராஜினாமாச் செய்வேன் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார். நல்லையா, கே.டபிள்யு.தேவநாயகம், செ.இராசதுரை ஆகியோரை சுமந்திரன் பெயர் குறிப்பிடாதற்கும், ஏன்? டக்ளஸ் தேவானந்தாவை பெயர் குறிப்பிடாததற்கும் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று தனது நிலைப்பாட்டிற்கு நியாயம் கற்பிக்க முயற்சித்ததே காரணம். 1965 இல் இருந்த அரசியல் சூழ்நிலை வேறு இன்றைய அரசியல் சூழ்நிலை வேறு. அன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்திலே தமிழரசுக்கட்சி தொடர்ச்சியாக கொழும்பு அரசியலில் தோல்வியடைந்து வந்துள்ளது. அந்த  தோல்வியின் இடத்திற்கு தமிழரசை கொண்டு வந்து சேர்த்திருப்பவர் சுமந்திரன். இன்றைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமானது. திருகோணமலையை புனிதநகராக பிரகடனம் செய்வதிலும், திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதிலும்  திருச்செல்வம் தோற்றுப் போனார்.  திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அல்ல இந்து பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்ற ஜீ.ஜீ. பொன்னம்பலத்திடம் தமிழரசு தோற்றுப்போனது.  கிழக்கு மாகாணத்தில் முதல் பல்கலைக்கழகம் அமைந்துவிடும் என்பதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட வைக்கோற்பட்டறை நாய் அரசியல் இது.  அது மட்டுமா ? மன்னம்பிட்டி பாலம்வரை இருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லையை தீர்க்கதரிசனமற்ற அரசியலால் பொலனறுவை மாவட்டத்திற்கு பிரித்துக் கொடுத்தவர்  அன்றைய  உள்ளூராட்சி அமைச்சராக இருந்த  சுமந்திரன் முன் உதாரணம் காட்டும் இந்த திருச்செல்வம். இந்த நிலையில் சுமந்திரனின் அமைச்சர்பதவி “ஆதரவு” கருத்துக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் தீவிர தமிழ்த்தேசிய பிரிவினரிடம் இருந்து எதிர்ப்பு குரல் எழும்பியது. சுமந்திரனின் சகா சாணக்கியனும் அமைச்சர் பதவி பற்றி மட்டக்களப்பு சந்திப்புக்களில் பேசி வந்தார். இந்த நிலையில் சிறிதரன் தரப்பும், மட்டக்களப்பில் சிறிநேசன், அரியநேத்திரன் ஆகியோரும் அமைச்சர் பதவி “பரிசீலிப்புக்கு” எதிராக கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.  “அமைச்சர் பதவிக்காக தமிழரசுக்கட்சியை தந்தை செல்வா உருவாக்கவில்லை. அமைச்சு பதவிக்காக எனில் தமிழரசுக்கு எவரும் வாக்களிக்கத் தேவையில்லை” என்று சுமந்திரன், சாணக்கியன் தலையில் ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியம்.   மறுபக்கத்தில் முல்லைத்தீவு பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அபயசேகரவும் அரசாங்கத்தின் திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.”  வேறு எந்த கட்சியில் இருந்தும் அமைச்சர்களை நியமிக்க மாட்டோம். இருபத்தைந்து அமைச்சர்களும் என்.பி.பி. உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று  அறிவித்தார். அப்போது தான் சுமந்திரன்”ஞானம்” பெற்றவராக பரிசீலிப்பது என்றுதான் கூறினேன் என்றும், அது அமைச்சர் பதவியை ஏற்பதாகாது, அதைக்கட்சியே தீர்மானிக்கும் என்றும்   வழமையான சுத்துமாத்து அப்புக்காத்துதன வாதத்தை முன் வைத்து மறுதலித்துள்ளார். கட்சியே தானாக இருக்கையில் கட்சி எப்படி தீர்மானிப்பது. சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பாக யாழ், கொழும்பு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டு இருந்தன. வாரத்திற்கு இருமுறை முன்னாள் அமைச்சர் உதய கம்பவெல  சுமந்திரனுக்கு வெளிநாட்டு அல்லது நிதி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், சமஷ்டி தீர்வு வழங்கப்படபோகிறது என்றெல்லாம் இனவாத தொனியில் கருத்துக்களை வெளியிட்டுவந்தார். அவற்றை எல்லாம் கேட்டும், படித்தும் வந்த சுமந்திரன் கடந்த ஒரு மாதகாலமாக எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. அல்லது “பரிசீலனை” க்கு வியாக்கியானமும் கொடுக்கவில்லை. அவர் கனவுலகில் அமைச்சராகவே பவனிவந்தார்.  பிரதமர் ஹரிணி அபயசேகர வடக்கு தமிழ்மக்களை ஏமாற்று பேர்வழிகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். அதற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு எம்.பி.யை என்.பி.பி.க்கு வழங்கி நன்றி செலுத்தினாலும் தகும். இல்லாவிட்டாலும் என்.பி.பி.யின் தேசிய பட்டியல் ஊடாக இராமலிங்கம் சந்திரசேகர் புதிய அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமைச்சர் கனவு என்றால் …..,  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை  குறித்த இரகசியம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. உண்மையில் அநுரகுமார திசாநாயக்க ஆட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்பவில்லை என்று புகலிட ஜே.வி.பி.வட்டாரங்களில் கசிகிறது.  அதற்காகத்தான் பிரச்சாரங்களின்போது 113 அல்லது 120  பற்றி அவர்கள் பேசுகிகிறார்களாம். இந்த இலக்கில் தமிழரசு,ஈ.பி.டி.பி. போன்ற பலவீனமான கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கொண்டு நடாத்த முடியும் என்று நம்புவதாக தெரிகிறது.  மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகார பகிர்வு, புதிய அரசியலமைப்பு போன்றவற்றை தட்டிக்கழிப்பது கஷ்டம் என்று உள்ளுக்குள் கதையடிபடுகிறது.  இன்னொரு புறத்தில் வாக்குறுதியளித்தபடி  நிறைவேற்று அதிகார முறையை. ஒழிக்கவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இவற்றை தவிர்ப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் இருப்பதே மேல் என்றும், இதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பிராந்திய, சர்வதேச அழுத்தத்தை எதிர்க்கட்சிகளின் தலையில் கட்டிவிடலாம் என்ற வியூகம் வகுக்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைக்கிறது. இந்த அரசியல் வியுகத்திலேயே தென்னிலங்கையில் பலமான எதிர்த்தரப்பை தவிர்த்து பலவீனமான, நிபந்தனைகளை விதிக்க முடியாத அல்லது  அழுத்தம் தரும் சக்தியற்ற சிறுபான்மை கட்சிகளின் குறைந்த அளவான உறுப்பினர்களின் ஆதரவுடன் சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சியை நகர்த்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த அரசியலுக்கு  ஆதரவளிக்க வடக்கில் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி நடக்கிறது. சந்தர்ப்பத்திற்கு  ஏற்ப தந்திரோபாயங்களை வகுத்து பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கொள்வதும்  ஒரு மாற்றம் தானே….? இதுதான் சுமந்திரனின்  தேர்தல் விளம்பரம் சொல்லும் அடையாளம்மாறாத மாற்றம்……! ஆனால் போகிறபோக்கில்  தமிழின அடையாளமே  அழியப்போகிறது….!   https://arangamnews.com/?p=11415
    • ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார். அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏவை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார். சபாநாயகரும் குர்ஷித்தை அவரது இருக்கையில் சென்று அமர அறிவுறுத்தினார். என்றாலும் தொடர்ந்து அவர் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா, குர்ஷித்தை காப்பாற்ற முயன்றார். இதனிடையே, மக்கள் மாநாடு கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏகள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அந்தத் தீர்மானத்தில், "மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ஐ இயற்றியதையும், அரசியலமைப்புக்கு விரோதமாக ஒருதலைபட்சமாக சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்யப்பட்டதையும் இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தினையும் பறித்தது. இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கிய அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த பேரவை, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை அதன் அசல் தன்மையுடன் எந்த விதமான மாற்றமுமின்றி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் படி ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களை திரும்பப்பெறவும் கோருகிறது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம், அரசியல் சுயாட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனைத்து சிறப்பு வசதிகள் மற்றும் உத்தரவாதங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக புனிதத்தை மதிக்குமாறு மத்திய அரசினை நாங்கள் வலியுறுத்துகிறோம்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198117
    • பதிவு செய்யப்படாத ஆடம்பர காரினை 2020 முதல் லொகான் ரத்வத்தை பயன்படுத்தியுள்ளார் - விசாரணைகளின் மூலம் உண்மை வெளியானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான்ரத்வத்தை சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பரகாரினை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. லொகான் ரத்வத்தையின் மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொகான் ரத்வத்தை விசாரணையை குழப்ப முயன்றார் என பொலிஸ் சட்டப்பிரிவின் தலைவர் பிரதிபொலிஸ்மாஅதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல வீடியோக்கள் ஆவணங்கள் ரத்வத்தை அந்த காரை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அந்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத  வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்ட்டார். https://www.virakesari.lk/article/198166
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.