Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சட்டங்கள் என்ன சர்வாதிகாரத்துக்கா...??

Featured Replies

  • தொடங்கியவர்

தயா அண்ணாவின் இறுதி முடிவை யாழ்கள மெம்பர்ஸ் சார்பாக பொன்னாடை போர்த்தி வரவேற்கிறேன். :lol: .........!!இன்றிலிருந்து எங்கள் அமைப்பின் பிரதிநிதியாக தயா அண்ணாவும் தனது சேவையை செய்வார் என எல்லோருக்கும் இத்தால் அறிய தருகிறேன் :lol: !!தயா அண்ணா சத்தியபிரமாணம் எடுக்க ரெடியோ!! :wub:

அப்ப நான் வரட்டே!!

இணையுறதா....??? அது ஏற்கனவே இணைஞ்சாச்சு...! :(

சத்திய பிரமாணம் எடுக்கும் போது கட்டாய்ய சேவை செய்ய வேணும் எண்டு சொல்ல மாடீங்கள் எண்டு நம்பூறன்...

பயமா இருக்குது விலத்த போறன் எண்டு துண்டு குடுத்தா பணிஸ்மற்(தர) இல்லாமல் ஏற்று கொள்ள வேணும்... ஓக்கேயா..?? :lol:

  • தொடங்கியவர்

..............

அதேநேரத்தில் கருத்துக்கள உறவுகளால் சுட்டிக்காட்டப்படுகிற அனைத்து கருத்துக்களையும் கண்ணை மூடிக்கொண்டு மட்டுறுத்தல் செய்யப்படமாட்டாது. அவை உண்மையில் கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணானவையா என்பதை ஆராய்ந்தே மட்டுறுத்தல் செய்யப்படும். அப்படி மட்டுறுத்தல் செய்யவேண்டியதில்லை என்கிறபோது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முறைப்பாடு செய்த கருத்துக்கள உறவுகளுக்கு தனிமடலில் காரணம் சொல்லப்படுவதுண்டு.

இப்படித்தான் பல தலைப்புகளை நாம் உடனுக்குடன் தணிக்கை செய்யமுடிகிறது. கருத்துக்களத்தில் சில உறுப்பினர்கள் தொடர்ந்தும் இந்தவகையில் கருத்துக்கள நிர்வாகத்துக்கு உதவுகிறார்கள். அவர்களுக்கு நாம் இந்த நேரத்தில் கருத்துக்கள நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறோம்..

தவறே எப்போதும் செய்யாத அந்த உறவை(உறவுகளை) வாழ்த்த வேண்டும்... இது நிமிர்த்தம் அவர்களையே மட்டுறுத்துனராக பணிசெய்ய பதவி உயர்வு கொடுக்கலாம்... யாழ்கள வளர்ச்சிக்கு பெரிதும் பயன் படும்...

நானும் சில கருத்துக்கள் வேதனையாக பட்டவையை நிர்வாகத்துக்கு சுட்டி காட்டினேன்... ஆனால் அவர்களின் கருணை பார்வை எனக்கு கிட்டவில்லை... ! ( கருணை..! அது எனக்கு தேவை இல்லாததுதான்)

இந்த பகுதியில்

http://www.yarl.com/forum3/index.php?showt...27298&st=60

ஒருவர் என்னை விளக்கம் குற்றைந்தவர் எண்டுறார்(எண்டு தக்குகிறார்)) ....! அதுக்கு பதில் அளித்தால் வலைஞனுக்கு கோபம் வந்துட்டுதாம்.. எனது கருத்து மட்டுமே வெட்ட பட்டது....

http://www.yarl.com/forum3/index.php?showt...27298&st=80

இந்த பகுதியில் நான் எழுதியதை வலைஞனும் இணையவனும் வெட்ட அதை ஒருவர் தன்னை கேவலமாக நான் திட்டி விட்டேன் எண்று தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதுகிறார்... அங்கே மட்டுறுதலில் இருந்த, அதையும் தாண்டி வேலை செய்ய இருவருக்கும் அது தெரியவே தெரியாது... விளக்கம் அளிக்க வேண்டியவர்கள் செய்ய வில்லை...!

http://www.yarl.com/forum3/index.php?showt...7298&st=100

ஆங்கில மோகம் எனக்கு வேண்டாம் எண்டு கோமணத்தோடா திரிகிறீர்கள் எண்று என்னை கேட்கிறார்...! ( வேட்டியோடா எண்டு கண்ணியமாக கேட்டு இருக்க முடியும்...) ஆனால் அதுக்கு பிறகான கருத்துக்களையும் வெட்டி எறிந்த வலைஞனுக்கு அது தெரியவில்லை...!

இதை எல்லாம் வெட்ட வேணும் என்பது எனது கோரிக்கை கிடையாது... சும்மா எனக்கு நடந்த சம்பவங்களின் கோர்வை... படித்த காலங்களில் பள்ளிக்கூட ஆசிரியரிடம் கூட போட்டு கொடுத்த பழக்கம் எனக்கு இல்லை...

எல்லாதையும் நடுநிலையோடு செய்கிறேன் எனும் உங்களின் நடுநிலையை சுட்டும் கருத்துக்கள் இவை... அவ்வளவுதான்...!

அங்கால நக்கிறதுகள் குடிக்கிறதுகள் எண்டு சொன்னதுகளையும் நீங்கள் வெட்டி எறிஞ்ச கருத்துகளையும் சுட்டிகாட்ட அவசியம் இல்லை எண்டு நினைக்கிற்றேன்...

...........

அதேபோல், சில கருத்துக்கள உறவுகள் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்களாக ஒவ்வொரு காலகட்டத்திலும் காணப்படுவார்கள். அவர்கள் எழுதும் கருத்துக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். காரணம், கருத்துக்கள உறவுகளில் பலர் பல சந்தர்ப்பங்களில், குறிப்பாக சர்ச்சையான தலைப்புகளில் கருத்தை மேலோட்டமாக வாசித்து உணர்ச்சிவசப்பட்டு கருத்து வைப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு தலைப்பில் தொடங்கும் இந்தத் தன்மை பிறகு எல்லாத் தலைப்புக்கும் பரவும் நிலைதான் அதிகம் காணப்படுகிறது. அதனால், அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்களாகிறார்கள். உதாரணத்துக்கு, இந்தத் தலைப்பில் கூட உணர்ச்சிவசப்பட்டே பல கருத்துக்கள வைக்கப்பட்டிருக்கின்றன.

அதிலை என்னையும் சேர்த்து இருப்பது மகிழ்ச்சி... கவனியுங்கோ...! அதனால் எதை சாதிக்க போகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது...!

நீங்கள் கவனிக்கும் பகுதிகளில் தமிழீழ பகுதி உட்பட இனிமேல் எனது நேரத்தை செலவளித்து கருத்துக்களை எழுத வேண்டாம் எண்று நினைக்கிறேன்... அதில் நீங்கள் விரும்புவோரே எழுதி விளையாடட்டும்... உங்களின் சுமையை குறைக்கத்தான் இந்த யோசனை...

கருத்துக்கள நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கக்கூடாது என்று இல்லைத்தானே. அவர்களுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அவை கருத்துக்கள மட்டுறுத்தலின் போது வெளிப்படுவதில்லை. அப்படி அவை வெளிப்பட்டிருந்தால், யாழ் கருத்துக்களத்தில் பல கருத்தாடல்கள் நிகழ்ந்திருக்க முடியாது.

பொய்...

மட்டுறுத்தலின் போது அடிக்கடி வெளிப்படுகிறது.... அதை ஆதாரமாக காட்ட முடியும்...! ஒருவர் வேண்டும் எண்டே சீண்டி இருப்பார்... அவருக்கு பதில்கருத்து மட்டும் வெட்டப்பட்டு இருக்கும்... மூல கருத்துக்கள் அப்படியே தான் இருக்கின்றன... (பல இடங்களில்)...

ஒரு கருத்தை வெட்டி விட்டு மற்றதை விடும்போது நான் அதை கவனிக்கவில்லை எண்று ஒப்புக்கு சப்பு போடுவது சிற்றப்பான தலைமை இல்லை...!

அது சரி கடசியாக வெட்ட பட்ட எனது கருத்தை இங்கே காரணத்தையும் சொல்லி இணைக்க முடியுமா...?? நான் வலிந்து திணித்த கருத்து என்ன என்பதை எல்லோரும் பார்க்க வேணும் எண்டு ஆசை படுகிறேன்...! உங்களின் திறனையும் எல்லாரும் காண வேண்டும்தானே...!

Edited by தயா

தயா,

தனிநபர் தாக்குதல் உங்கள் மீது நடத்தப்படுகிறபோது அவை தணிக்கை செய்யப்படவில்லை என்று ஆதங்கப்படுகிற நீங்கள், ஏனையவர்கள் மீது அப்படியான கருத்துக்களை எழுதுவதை தவிர்த்துக்கொள்வதே நல்லது. நீங்கள் குறிப்பிட்ட தலைப்பில் கருத்துக்கள உறவு நாரதரின் கருத்துக்களை விட்டுவிட்டு உங்களின் கருத்தை மட்டும் தான் நீக்கியதாகக் குறைப்பட்டுக் கொள்கிறீர்கள்.

அந்தத் தலைப்பில் கடுமையான தணிக்கை செய்தால், நீக்க வேண்டிய கருத்துக்கள் நிறையவே இருக்கின்றன. சொல்லப்போனால், தலைப்பையே நிர்வாகம் பகுதிக்கு நகர்த்திவிடலாம். அந்தத் தலைப்பில் நீக்கப்படாமல் இருக்கும், நாரதர் எழுதியதாக நீங்கள் குறிப்பிடும் வசனங்களுக்கு நிகரான உங்களின் வசனங்கள் சில:

ஆனால் வடக்கே போனவர் அங்கு இருந்தவர்களுடன் கலக்காமல் ஆரியர் எண்ட தனி இனமாக இருந்தனரா..??? கேக்க சிரிப்புதான் வருகிறது...

அப்படி வந்தார்கள் எண்டால் வந்தவர்கள்ள் இனம் குலையாமல் கலக்காமல் சாதி குறையாமல் அப்படியே இருக்கிறார்கள் என்பது போல இருக்கிறது உங்களின் கூத்து...!

மதம் எந்த விதத்திலும் தலைமை செய்ய வில்லை.... முடிந்தால் சிந்திக்க முயற்ச்சி செய்யுங்கள்... கடினம் எண்டால் விட்டுவிடுங்கள்....

நேரம் இல்லை எண்டால் நீங்கள் குழம்பி மற்றவர்களை குழப்ப நினைக்காது. அந்த அந்த வேலைகளை பார்ப்பதுதான் நல்லது.. அதை விட்டு ஏன் மற்றவன் நுணி புல் மேயுறான் என்பதை விளக்க வேண்டும்... ???? உங்களின் ஆற்றலை நீங்கள் சொன்னவைகளை வைத்து ஆராய முடிகிறது...!

கொஞ்சமும் சிந்திக்காதீர்கள்... ஆனால் தமிழன் வளரவேணும் எண்ட கூச்சலை போட்டுக்கொண்டு ஆங்கிலத்துக்கு அடிமையாக இருங்கள்...

ஆரிய அடிமை எண்று சொல்லி கொண்டே ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்குங்கோ...

மர பண்ணுக்க பற்றி உங்களுக்கு என்ன தெரிகிறது என்பது இப்போ எனக்கு புரிகிறது... மரபணு கலத்தல் என்பதையும் இன மரபணுக்கள் முலகங்கள் பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்...

ஆகவே அதுக்கும் முன்னம் மக்கள் எழுத்தை பிரதி பண்ணி வைக்க வில்லை எண்று அடம் பிடிப்பதை நிப்பாட்டுங்கள்...!

வலைஞன் எனது பதிவில் என்ன எடிட் பண்ணினார் எனபது தெரியாமல் கற்பனையி உங்கள் மீது தான் தாக்குதல் நடந்தது எண்று கருதி, தனி நபர் தாக்குதல் எண்று குழந்தைகள் போல அழுவது உங்களுக்குதான் இழுக்கு...

(இதுக்கான பதிலை வலைஞனிடம் என்ன சொல்லை தணிகை செய்தார் என்பதை கேட்டு கொள்ளுங்கள்... உங்களின் பாட்டுக்கு உங்களைத்தான் தாக்கி விட்டார்கள் எண்று கற்பனையில் மிதக்காதீர்கள்..... )

நாரதர் அண்ணா மிகை படுத்தல் என்பது என்ன என்பதனை உங்களின் எழுத்தூடாக காணக்கூடியதாக இருக்கிறது...

நல்ல கண்ணியம் பேசி இருகிறீர்கள்... அமெரிக்கா காறன் செய்யுறது போல நான் இப்ப பேப்பராலை துடைச்சு போட்டு போறனான்.... எண்டா நினைதீர்கள்..???

ஒரு விடயமட்டும் சரியாக புரிகிறது ஒரு விசயதை தலைக்குள் போட்டு விட்டால் அது பிளையான உதாரணம் எண்டாலும் அதை நியாய படுத்த... நாங்கள்(எங்களை) விளங்கும் அறிவில் இல்லை எனும் தன்மை காலம் காலமாய் உங்களுக்கு இருப்பது இன்னும் போக வில்லை என்பது....

நீங்களும் ஆரியன் ஆரிய மாயை எண்டு புலம்பாமல் நல்ல வேலையாக பாருங்கள்....

நீங்கள் உங்களையாவது நம்புகிறீர்களா இல்லையா எனபது சந்தேகம்...

தமிழில் விஞ்ஞான பாடம் நீங்கள் படிக்காதது எனது தவறு இல்லை... உங்களுக்கு தெரியா விட்டால் யாருக்குமே தெரியாது எண்டு அடம்பிடிக்காதீர்கள்...

உங்களுடைய குருகிய அறிவு முக்கியமாக உங்களுக்கு சாதகம் இல்லாத வரியை தவிர்து இருப்பதோடு அந்த தேவை இல்லாத கட்டுரையை நாந்தான் இனைத்தேன் என்கிறது....

யாராவது கட்டுரைகளை ஆரியர் எனும் மாயையை பற்றி என்ன எழுதினாலும் அதை நம்பி வக்காலத்து வாங்கும் உங்களுக்கு, அதை நியாயபடுத்துவதுக்கு மற்றவனுக்கு விளக்கம் இல்லை என்பது மட்டும்தான் தெரியுமா..??? அது உங்களுக்கு இருப்பது சந்தேகமே....!

கலப்பு இனங்களை வைத்து கொண்டு ஆரியன் அது இது எண்டு ஆடாதீர்கள்......!

இவையும் நீக்கப்படவில்லை. அந்தத் தலைப்பில் நீங்கள் மட்டுமல்ல, கருத்தாடியவர்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டும் விதமாகவும், தனிப்பட தாக்கும் விதமாகவும் தான் கருத்தாடியிருக்கிறார்கள். நிதானமான கருத்தாடல் நடைபெறவில்லை. கடுமையான தணிக்கை செய்திருந்தால், அங்கு எல்லாக் கருத்துகளிலும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது என்று சிவப்பெழுத்தில் மட்டுமே இருந்திருக்கும்.

அந்தத் தலைப்பின் கீழ் கருத்துக்கள நிர்வாகம் சார்பாக பண்பான முறையில் கருத்தாடுமாறு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்திருந்தேன்: http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=337094

அதன்பிறகும் அதைக் கவனத்தில் கொண்டு பெரும்பாலானவர்கள் கருத்தாடவில்லை.

ஆக, கருத்தாடலின் போது கருத்தாடற் பண்பைக் கடைப்பிடிக்காமல் ஆளாளுக்கு வார்த்தைகளை பயன்படுத்திவிட்டு, ஒருவருடையதை நீக்கிவிட்டார்கள், மற்றையவரதை நீக்கவில்லை என்று நிர்வாகத்தோடு குறைப்படுவதில் பயனில்லை. நாம் பண்பாக எமது கருத்தை முன்வைக்கிறோமா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து கருத்துக்களை முன்வைத்தால் தணிக்கைக்கான அவசியம் இல்லை.

இங்கே இதே தலைப்பில் கூட சில விடயங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. சில (நீங்கள் குறிப்பிட்ட தலைப்பில் நீக்கப்படாமல் இருக்கிற கருத்துக்கள் என்று சொன்னவற்றுக்கு நிகரான கருத்துக்கள்) இன்னும் தணிக்கை செய்யப்படாமலேயே இருக்கின்றன. அவை:

அவர் தனக்கு தகுதி இல்லாத தொழிலை செய்கிறார் என்பது எனது கருத்து... இது யாழ் களத்தை வளர்க்க உதவ போவதில்லை...

அதை விளங்கி கொள்ளாத உங்களுக்கு விளங்கப்படுத்துவது எனக்கு தேவை இல்லாத்தது....!

தெரியாத வேலையை செய்யாமல் இருபது நலம்....

எல்லாம் புரிந்தவர் போல இங்கு வியாக்கியானம் செய்யும் நீங்களே பதில் சொல்லுங்களேன் பார்க்கலாம்...

ஆகவே, தணிக்கை செய்யப்பட்ட கருத்துக்கள் இவற்றை விட மோசமாக இருந்திருக்கவேண்டும் என்பதை ஓரளவாவது புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். இங்கே பதிலுக்கு பதிலெழுதி விதண்டாவாதம் செய்யவேண்டும் என்பதற்காக நான் இவற்றைக் குறிப்பிடவில்லை. கருத்துக்கள உறவுகள் மட்டுறுத்தல் தொடர்பாக தவறான பார்வையைக் கொண்டிருக்கக்கூடாது என்பதற்காகவே குறிப்பிட்டேன்.

அது சரி கடசியாக வெட்ட பட்ட எனது கருத்தை இங்கே காரணத்தையும் சொல்லி இணைக்க முடியுமா...?? நான் வலிந்து திணித்த கருத்து என்ன என்பதை எல்லோரும் பார்க்க வேணும் எண்டு ஆசை படுகிறேன்...! உங்களின் திறனையும் எல்லாரும் காண வேண்டும்தானே...!

வலிந்து திணிக்கப்பட்ட கருத்து என்பதால் நீக்கப்பட்டுள்ளது என்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் இங்கு சவால் விடுவதையும், திறன் மதிப்பீட்டையும் செய்துகொண்டிருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

ஏனைய கருத்துக்கள உறவுகளுக்கும் கருத்துக்கள நிர்வாகத்தின் மட்டுறுத்தல் தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின், தெளிவேற்பட வேண்டின் எழுதுங்கள். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE(வலைஞன் @ Oct 1 2007, 07:29 PM)

கருத்துக்கள நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கக்கூடாது என்று இல்லைத்தானே. அவர்களுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அவை கருத்துக்கள மட்டுறுத்தலின் போது வெளிப்படுவதில்லை. அப்படி அவை வெளிப்பட்டிருந்தால், யாழ் கருத்துக்களத்தில் பல கருத்தாடல்கள் நிகழ்ந்திருக்க முடியாது

இந்த எண்ணமே தவறானது. கருத்தாடப்படும் ஒரு விடயத்தில் மட்டுறுத்தினருக்கு உள்ள நிலை என்பது அவரின் சொந்த நிலை சார்ந்து எழுவது. மட்டுறுத்தல் என்பது களத்தின் விதிகள் மற்றும் பொதுப் பயன்பாடு.. இலக்கு நோக்கி இருப்பது.

மட்டுறுத்துதல் என்ற செயலைச் செய்கையில் தனது கருத்து நிலைகளுக்கு அப்பால் நின்று நடுவுநிலைமை வகிக்க வேண்டியது மட்டுறுத்தினரின் கடமை. அதற்கான பக்குவம் இல்லை என்றால் வரவழைத்துக் கொள்ள வேண்டும். மாறாக தங்கள் எண்ணங்களை மட்டுறுத்துதலில் பிரதிபலித்தல் நீதியான செயற்பாடல்ல. அது பக்கச்சார்பு நிலையையே எடுக்கும்.

மட்டுறுத்தினருக்கு என்று தனிப்பட்ட கருத்திருந்தால் அதை அவர் தாராளமாக முன் வைக்கலாம். ஆனால் அவர் மட்டுறுத்தும் பணியைச் செய்யும் போது.. தனது கருத்தியல் நிலைக்கு அப்பால் நடுவுநிலைமை என்ற நிலைக்கு தன்னை நகர்த்திக் கொள்ள வேண்டும்.

இந்தத் தன்மையை.. மோகன் சாரிடம் ஓரளவு காணக்கூடியதாக இருக்கிறது. அவரும் சில சந்தர்ப்பங்களில் சில அழுத்தங்களின் காரணமாக சில தவறான நிலைகளை எடுத்திருக்கலாம். ஆனால் ஒப்பீட்டளவில் அவரின் செயற்பாடுகள் கள உறவுகளால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருந்துள்ளன.

வலைஞன் சார் சொல்வது போல்.. ஒரு விவாதம் சீரான பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது மறுதரப்பை மட்டம் தட்டும் விதமாக எழுதுதல்.. வினாக்களைத் தொடுத்துவிட்டு பதிலளிக்காது போதல் என்று பல நிலைகள் இங்குள்ளன. இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்... சில சந்தர்ப்பங்களில் மட்டுறுத்தினர்களுக்கு அறியக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போது.. கருத்தாளர்கள் தாங்களே நிலைமையைச் சமாளிக்க வரும் காரசாரத்துக்கு ஏற்ப பதில் கருத்து வைக்க வேண்டி ஏற்படுகிறது. எனவே ஆரம்பத்தில் உணர்ச்சி வெளிப்பாட்டை வெளியிடுபவரின் கருத்தை தணிக்கை செய்திருப்பின்.. பின்னையவருக்கு தணிக்கைக்குரிய விடயம் குறித்து எழுத வேண்டி வராது. நிர்வாகம் தொடர்ந்து கவனிக்காமல் விடும் போது.. கருத்தாளர்களே வரும் கருத்துக்கு பதிலளிக்க வேண்டி ஏற்படுகிறது.

நிர்வாகத்துக்கு நேரப்பிரச்சனை.. வேலைப்பழு உண்டுதான். ஆனால் களத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு நிர்வாகியாவது வருகிறார் தானே..! அதுமட்டுமன்றி.. எங்கு பொதுவாக காரசாரமான விவாதம் எழும் என்ற கணிப்பீட்டை இக்களத்தில் ஒரு 3 மாதம் அங்கத்தவராக இருந்தாலே அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால் நீண்ட காலம் மட்டுறுத்தும் பணி செய்பவர்களுக்கு.. இது தெரியாமல் போவது ஆச்சரியம் தான்.

சில இடங்களில் தணிக்கை வடிவம் கூட மென்போக்கு.. கடும் போக்கென்று இருக்கின்றன. இதை நான் நிர்வாகத்துக்குச் சுட்டிக்காட்டினேன் தனிப்பட்ட வகையில். அதற்கு விளக்கம் இருந்தால் தரும் படியும் கேட்டிருந்தேன். இன்று வரை தரவில்லை. குறிப்பாக எனது கருத்துக்களை தணிக்கை செய்ததும்.. சிவப்பில் போல்ட் செய்து தணிக்கை என்று போடுவார்கள். ஆனால் இதையே ஈவெ ராமசாமிக்கு ஆதரவு அளித்து சொல்லி இருந்தால்.. சில நட்சத்திரக் குறிகளோடு.. அது தணிக்கைக்கு உட்படும். இது எந்த வகையில்.... ஏன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை.

அதுமட்டுமன்றி.. ஒரே தொனிப்பொருளோடு.. வெவ்வேறு திரிகளில் விடயங்களை திணிக்கின்ற போது.. அதில் திராவிடம்.. ஈ வெ ராமசாமி சார்பு இருந்தால்.. மத எதிர்ப்பு இருந்தால் ஆரிய எதிர்ப்பு.. பார்பர்ண எதிர்ப்பு.. பிராமண எதிர்ப்பு இருந்தால் அவை விவாதிக்கத் தக்கன என்று கருதி அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அதுவே சமயம் சார்பாக இருந்தால் அது பிரச்சாரமாகக் கணிக்கப்படுகின்றது. இந்தக் கணிப்புகள் எந்த வகையில் அமைகின்றன.

களத்தில் தங்களைத் தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று அழைப்பதை கள நிர்வாகம் அனுமதிக்கிறதா..??! அப்படி என்றால் பகுத்தறிவாளர்கள் என்று தம்மைக் குறிக்காதவர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்று நிர்வாகம் கருதுகிறதா...??! இப்படியான சர்ச்சைக்குரிய பதப்பிரயோகங்கள் கருத்தாளர்கள் மத்தியில் விசனத்தை வளர்க்கின்றன. ஒருவர் இன்னொருவரின் நிலைப்பாட்டை பற்றுவதால் எப்படி பகுத்தறிவாளன் ஆக முடியும்..???! அப்படிப் பற்றாமல் சுயமாக சிந்திக்கும் ஒருவர் எப்படி பகுத்தறிவற்றவராக முடியும்..??! ஆக இப்படியான பதங்கள் கொண்டு கருத்தாளர்களைப் பாகுபடுத்துவது சமூகத்தில் பாகுபாட்டு ரீதியான பிரிவினைகளை வளர்க்க வித்திடுகிறது.! களத்திலும் சரி வெளியிலும் சரி.. எல்லோரும் மனிதர்கள். அவரவர் அறிவுமட்டத்துக்கு நம்பிக்கைக்கு ஏற்ப சிந்தனைகள் இருக்கும். எவரும் சிந்திக்க தகுதியற்ற அல்லது சிந்தனையற்ற பகுத்தறியும் ஆற்றல் அற்ற மனிதர்களாக இருக்க முடியாது. அப்படி இருப்பின் அவர்கள் இயற்கையாகவே குறைபாடுகளோடு பிறந்த அப்பாவிகளாக இருக்கக் கூடும். ஆனால் இக்களத்தில் அப்படியானவர்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு பகுதி தன்னை பகுத்தறிவுக் கூட்டமாகவும் இன்னொரு பகுதி தன்னை பகுத்தறிவற்ற கூட்டமாகவும் காட்ட இக்களத்தில் உறுப்பினர்களாவது தேவைதானா...???! ஏன் இந்த நிலை இங்கு வளர்க்கப்படுகிறது. ஒரு பக்கம் சாதிகள் இல்ல. ஆண் - பெண் என்ற வேறுபாடுகள் இல்லை என்று கூறிக் கொள்ளும் பிரிவினரே.. இன்னொரு பகுதியால் நீ பகுத்தறிவற்றவன்.. நான் பகுத்தறிவாளன் என்று தம்மை பிரித்து இனங்காட்டிக் கொள்ள முற்படுவதும் ஏன்...???! இவை சிந்தனை உள்ள மனிதர்கள் மத்தியில் நகைப்புக்கு இடமாக உள்ளது. இதை இக்களம் ஏன் வளர்க்கிறதோ புரியவில்லை.

பிரச்சனைகள், தவறான எண்ணங்கள் எழக்கூடியதான செயற்பாடுகள் குறித்து வெளிப்படையாக பேசிக் கொண்டால் சந்தேகங்களுக்கு அப்பால் கள உறவுகள் கருத்தால் மட்டுமன்றி நட்பாலும் நெருங்கி இருக்க முடியும் என்றே கருதுகின்றேன். அந்த வகையில் இக்கருத்தை இச்சந்தர்ப்பதில் இங்கு வைக்க விரும்புகிறேன். இந்தப் பிரச்சனைகளுக்கு இந்தத் தலைப்பிலேயே ஒரு இறுதி முடிவைக் கண்டுவிட்டால்.. மீள மீள நிர்வாகத்தின் மீது குறை காண்பதும் அருக வாய்ப்புருவாகும். நிர்வாகமும் திறந்த மனதோடு இதை அணுகுவதே சிறப்பானது. பயனுள்ளது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமன்றி.. ஒரே தொனிப்பொருளோடு.. வெவ்வேறு திரிகளில் விடயங்களை திணிக்கின்ற போது.. அதில் திராவிடம்.. ஈ வெ ராமசாமி சார்பு இருந்தால்.. மத எதிர்ப்பு இருந்தால் ஆரிய எதிர்ப்பு.. பார்பர்ண எதிர்ப்பு.. பிராமண எதிர்ப்பு இருந்தால் அவை விவாதிக்கத் தக்கன என்று கருதி அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அதுவே சமயம் சார்பாக இருந்தால் அது பிரச்சாரமாகக் கணிக்கப்படுகின்றது. இந்தக் கணிப்புகள் எந்த வகையில் அமைகின்றன.

இக்கருத்தை வரவேற்கின்றேன்.

மதம் பற்றிய பிரச்சாரம் செய்யக் கூடாது என்று யாழ்களத்தில் விதியிருந்தால், மதத்துக்கு எதிரானவர்களின் பிரச்சாரங்களும் அனுமதிக்க கூடாது தானே? அவ்வாறு அனுமதிப்பது நடுநிலமை தவறும் செயல் தானே?

வேலையில்லாத நேரங்களில் நாங்கள் எழுதுவதை கண்காணிப்பதையே ஒரு வேலையாக வைத்திருக்கும் வலைஞனுக்கும், இதர மட்டறுத்தினர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • தொடங்கியவர்

எனது கேள்வியும் அதுதான் வலைஞன் அவர்களே....

கருத்தை வெட்டுவது எண்று புறப்பட்டு இருக்க கூடாது... அப்படி வெட்டும் முடிவு எடுத்த பிறகு ஓரிரு கருத்துகளை மட்டும் வெட்டுவது சரியும் ஆகாது... அங்கையும் அதுதான்... எனது பல கருத்துக்கள் அந்த பகுதியில் இல்லை... அப்படி கருத்துக்களை வெட்டிய நீங்கள் நீக்க வேண்டிய எல்லாவற்றையும் பாரபட்சம் இல்லாது நீக்கி இருக்க வேண்டும்...

அங்கு நீக்கிய கருத்துக்கள் நான் மட்டும்தான் குற்றவாளி என்பதைபோல தோற்றத்தை தந்தமை உங்களின் செயற்பாடுகளால் தான்....! அதுக்காக நாரதரின் கருத்துக்களை நீக்குங்கள் எண்டு நான் வேண்டு கோள் வைக்கவில்லை... அதை உதாரணம் மட்டுமே காட்டி இருக்கிறேன்...!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலைபோவானின் கருத்தின் தொகுப்பை நான் பாராட்டுகின்றேன், இங்கே சும்மா விவாததிற்காக கருத்துக்கள் பரிமாறப்படுகின்றனவா அல்லது உண்மையிலேயே வலைஞன் மீது கருத்துக்கள் எறியப்படுகின்றனவா?

எதையும் நாம் பொறுப்பெடுத்து நடத்தும்போது அதன் பிரதிபலிப்புக்களை அனுபவரீதியாக அறியக்கூடியதாக இருக்கும்.

இதிலிருந்து அதாவது இந்த கருத்து பரிமாறல்களிலிருந்து வலைஞனையும் அவரின் பணியை சரிவரச்செய்கின்றாரா என்பதை சிந்திக்கத் தூண்டியிருக்கும் என்று நம்புகின்றேன்

நடக்கப்போவதை நல்லதாகவே நினைப்போம், வைப்போம் ஆக்கபூர்வமான கருத்துக்களை, இணைவோம் தமிழராய்.

Edited by Valvai Mainthan

மதம் பற்றிய பிரச்சாரம் செய்யக் கூடாது என்று யாழ்களத்தில் விதியிருந்தால், மதத்துக்கு எதிரானவர்களின் பிரச்சாரங்களும் அனுமதிக்க கூடாது தானே? அவ்வாறு அனுமதிப்பது நடுநிலமை தவறும் செயல் தானே?

-----------------------------------------------------------------------------------------

இந்த கருத்தின் அடிப்படையிலான நடுநிலையை பிரகடனப்படுத்தினால் சிங்கள பொளத்த பேரினவாத செயற்பாடுகள் பற்றி யாரும் எச்செய்தியும் இணைக்க கூடாதா? மத அடிப்படைவாதத்தை ஈராக் பிரச்சனையில் இருந்து விலத்தி செய்திகளை இணைக்க வேண்டுமா? இந்தியாவின் தீண்டாமை கொடுமைகளில் மதத்தின் சம்மந்தம் குறித்த ஆய்வுகளை இணைக்க கூடாதா? எனக்கு உண்மையில் புரியவில்லை. எல்லாம் மத அடப்படைவாதத்துடன் பிணைந்த பிரச்சனைகளாவே இருக்கின்றது.

  • தொடங்கியவர்

ஆகவே, தணிக்கை செய்யப்பட்ட கருத்துக்கள் இவற்றை விட மோசமாக இருந்திருக்கவேண்டும் என்பதை ஓரளவாவது புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். இங்கே பதிலுக்கு பதிலெழுதி விதண்டாவாதம் செய்யவேண்டும் என்பதற்காக நான் இவற்றைக் குறிப்பிடவில்லை. கருத்துக்கள உறவுகள் மட்டுறுத்தல் தொடர்பாக தவறான பார்வையைக் கொண்டிருக்கக்கூடாது என்பதற்காகவே குறிப்பிட்டேன்.

மேலே அப்படி என்ன கருத்துக்கள் வேண்டாதவையாக இருக்கின்றது... என்ன எழுத வேண்டுமோ அதை சரியாகத்தான் எழுதி இருக்கிறேன்...! இதில் தவறு என்ன இருக்கிறது...?? சந்தேகம் எண்டு வந்துவிட்டால் அதை தெளிவு படுத்துவதுதான் முறை... அத்தைதான் செய்தும் இருக்கிறேன்

quote ல் நான் எழுதியதாக நீங்கள் சொல்பவை...

உங்களை பற்றியது.... உங்களின் நடு நிலை தன்மையின் எனக்கு நம்பிக்கை இல்லை... அதுக்கான தகுதியை நீங்கள் கொண்டு இருக்க இல்லை என்பது... இது யாழ் களத்தை வளர்க்க எந்த விதத்திலும் பயன் அளிக்காது...! நடு நிலை என்பதை நீங்கள் கை கொள்ளல் என்பதில் எனக்கு உங்கள் மீது திருப்தி இன்னும் கூட இல்லை... அதை இதை விட கண்ணியமாக சொல்ல முடியாது... அதை வேறு விதத்தில் சொல்ல விளைந்தால் , உங்களின் கால்களில் விழுந்து கதறுவது போலதான் இருக்குமே தவிர நியாயம் கேட்பது போல இருக்க முடியாது....

அடுத்தது வல்வைமைந்தனுக்கு எழுதியது

அங்கு நிர்வாகத்துக்கு ஆதரவாக எங்களை தாக்கி கருத்து வைத்தார் அதுக்கு சில விளக்கமும் கொடுத்து, கேள்விகளும் கேட்டு அதுக்கு "எல்லாம் புரிந்தவர் போல இங்கு வியாக்கியானம் செய்யும் நீங்களே பதில் சொல்லுங்களேன் பார்க்கலாம்" எண்று கேட்டு இருந்தேன்...

சரியாக புரிந்தவர் போல பிரச்சினைக்குள் வந்தார், தன்பாட்டுக்கு போட்டு தாக்கினார்.... அப்போ அவருக்கு விடயம் சரியாக புரிந்து இருக்கும் என்பதுதானே அர்த்தம்...????

அங்கு வியாக்கியானம் எனும் சொல் உரை ஆற்றுதல் அல்லது விரிவுரை எனும் கருத்தைதான் கொடுத்தது... அப்படி அவரிடம் இருந்து பதில் எதிர் பார்ப்பது பிழையா என்ன..??? இத்தனைகும் அது யாரையும் தாக்கும் சொல் கூட கிடையாது....!

வலிந்து திணிக்கப்பட்ட கருத்து என்பதால் நீக்கப்பட்டுள்ளது என்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் இங்கு சவால் விடுவதையும், திறன் மதிப்பீட்டையும் செய்துகொண்டிருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

ஏனைய கருத்துக்கள உறவுகளுக்கும் கருத்துக்கள நிர்வாகத்தின் மட்டுறுத்தல் தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின், தெளிவேற்பட வேண்டின் எழுதுங்கள். :wub:

வலிந்து நான் திணிக்கவில்லை.... வலிந்து திணித்தல் பிழை எண்று களவிதியும் இல்லை.... அந்த கருத்து தலைப்போடு சம்பந்தம் இல்லாமலும் இருக்க வில்லை......

அது சரியான கருத்து..... அதில் பெரியார் கருத்துக்கள் தமிழீழ சட்டத்தில் இடம்பெற வில்லை என்பதையே சொல்லி இருக்கிறேன்...! பெண்கள் விடயத்தில் பெரியாருக்கு இருந்த அசமந்தம் தமிழீழத்தில்(சட்டத்தில்) இல்லை என்பதுவே....

குறிப்பு

அசமந்தம் எனும் இந்த சொல்ல யாரையும் தாக்குவதுக்கு பயன் படும் சொல் அல்ல... அசட்டையான செயற்பாடுகளை குறிக்கும் சொல் மட்ட்டுமே... நீக்க வேண்டிய பட்டியலில் சேர்க்க பட தேவை இல்லை...!

Edited by தயா

இணையுறதா....??? அது ஏற்கனவே இணைஞ்சாச்சு...! :(

சத்திய பிரமாணம் எடுக்கும் போது கட்டாய்ய சேவை செய்ய வேணும் எண்டு சொல்ல மாடீங்கள் எண்டு நம்பூறன்...

பயமா இருக்குது விலத்த போறன் எண்டு துண்டு குடுத்தா பணிஸ்மற்(தர) இல்லாமல் ஏற்று கொள்ள வேணும்... ஓக்கேயா..?? :wub:

இணந்தாச்சா சும்மா சொல்ல கூடாது எங்க அமைபில சேர்ந்தவுடனே எல்லோரும் உசாரா தான் இருகிறார்கள் :D ........நீங்களும் அந்த வழியில் மக்களிற்கு அது தான் யாழ்கள மெம்பர்சிற்கு சேவை செய்ய எனது வாழ்த்துகள்!! :lol:

சா கட்டாய சேவை என்று எல்லாம் சொல்லமாட்டேன் பயப்பிடவேண்டாம்!!நோ பணிஸ்மன்ட் எப்பவும் விலகி கொள்ளளாம் ஆனா இராணுவ இரகசியங்களை எதிர்தரப்பினருக்கு சொல்ல கூடாது முக்கியமாக டங்கு அண்ணாவிற்கு சொல்ல கூடாது!! :lol:

சரி சத்திரபிரமாணம் செய்யுங்கோ நான் சொல்லுறதை மறுபடி சொன்னா சரி!!

தயா அண்ணா சத்திரபிரமாணம் எடுக்கும் வங்சன்!!

தயா அண்ணாவாகிய நான் இன்று முதல் டைகர் பமிலியின் ஒருவராக இணைந்து யாழிற்கும் மற்றும் யாழ்களமெம்பர்சிற்கும் சேவை செய்வேன் எனவும்!!மட்டுஸ் சொல்லை கேட்கமாட்டேன் எனவும் அவர்களிற்கு எதிராக கருத்துகளை இடுவேன் எனவும்!!தொடர்ந்து வரும் தாக்குதல் எதையும் முகம் கொடுக்க தயார் எனவும் இத்தால் தெரிவித்து கொள்கிறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

உங்கள் எல்லாருக்கும் ஒரு அறிவுரை...

நீங்கள் எழுதுவதை தானே நிருவாகம் தணிக்கை செய்ய முடியும்? இனிமேல் நீங்கள் உங்கள் கருத்துக்களை ஒலிவடிவத்தில் இணையுங்கள். அப்படி செய்தால் தணிக்கை செய்யமுடியாது. முழுதாக கருத்தை மட்டுமே தூக்க முடியும். எப்படி நம்ம ஐடியா?

மேலும்,

மட்டறுத்துனர்களை நியமிக்கும்போது அவர்கள் மீண்டும் ஒரு முகமூடியுடன் வராமல் ஏற்கனவே உள்ள பெயருடன் வரலாம்.

மேலும் நான்.. இப்படியான பிரச்சனைகளையுடைய கருத்தாடல்களை மட்டறுத்தல் செய்ய கிருபன் அண்ணையை நிருவாகத்திற்கு சிபாரிசு செய்கின்றேன். கிருபன் அண்ணை மூலம் நல்ல முன்னேற்றம் வர வாய்ப்பு உள்ளது.

இப்போது இணையவனுடன், எழுவான் என்றும் ஒருவர் புதிதாக எழுந்து உள்ளார். இவர்கள் பழையவர்களாக இருந்தபோதும் புதிய பெயரில் மீண்டும் புதிய முகமூடி போடுவது களத்திற்கு ஆரோக்கியமான ஒன்றாக தெரியவில்லை.

இனிமேலாவது, புதிதாக மட்டறுத்துனர்களை நியமிக்கும்போது அவர்கள் பழைய முகத்துடன் வருவதே வரவேற்கத்தக்கது.

இது ஏதோ கோர்ட் கேஸ், கிரிமினல் வழக்குகள் மாதிரி எல்லாரும் ஆ.. ஊ என்று வாயைப் பிளப்பதன் அர்த்தம் விளங்கவில்லை.

ஆனா ஒன்று மட்டும் சொல்லிப்போட்டன்... நான் மட்டும் மட்டறுத்துனராக இருந்து இருந்தால் இந்தளவுக்கும் இந்த கருத்தாடலை பூட்டுப்போட்டு மூடி இருப்பதோடு, இதை ஆரம்பித்த தயாவுக்கு இரண்டு நாட்களுக்கு களத்துக்கு வந்து கருத்து எழுதமுடியாதபடி தடையும் போட்டு, எச்சரிக்கையும் கொடுத்து இருப்பேன்...

ஹாஹா.. என்ன பயந்து போனீங்களோ? நீங்கள் மட்டறுத்துனராக வந்தாலும் இப்படித்தான் செய்வீங்கள். என்றபடியால் இந்த புலம்பல்களை இவ்வளவத்தோட நிப்பாட்டிப் போட்டு, ஆளாளுக்கு உங்கட பாட்டில களத்துக்க இறங்கி வழமையா எழுதிற மாதிரி விளாசித்தள்ளுங்கோ.

உப்பு கரையப்போகிது எண்டு மழை பெய்யாமல் இருக்க முடியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

-----------------------------------------------------------------------------------------

இந்த கருத்தின் அடிப்படையிலான நடுநிலையை பிரகடனப்படுத்தினால் சிங்கள பொளத்த பேரினவாத செயற்பாடுகள் பற்றி யாரும் எச்செய்தியும் இணைக்க கூடாதா? மத அடிப்படைவாதத்தை ஈராக் பிரச்சனையில் இருந்து விலத்தி செய்திகளை இணைக்க வேண்டுமா? இந்தியாவின் தீண்டாமை கொடுமைகளில் மதத்தின் சம்மந்தம் குறித்த ஆய்வுகளை இணைக்க கூடாதா? எனக்கு உண்மையில் புரியவில்லை. எல்லாம் மத அடப்படைவாதத்துடன் பிணைந்த பிரச்சனைகளாவே இருக்கின்றது.

உங்களின் ஓப்பீடு என்னவென்று புரியவில்லை. நடுநிலமை என்றால் இரண்டு பக்க அனுமதிகளையும் வழங்க வேண்டும் என்பது தான் இங்கே கேள்வி. ஒரு பக்க அனுமதிக்கு மட்டும் இடம் கொடுத்துவிட்டு, மற்றவர்களின் கருத்துக்களை முடக்குவது சரியா என்று கேட்டால் நீங்கள் வேறு என்னென்னவோ கதைக்கின்றீர்கள் நண்பரே!

இந்தியாவில் தீண்டாமை தொடர்பாக மதம் தான் காரணம் என்று யாராவது இணைத்தால், அந்தத் தீண்டாமைப் பாகுபாடுகளை தங்களின் வசதிக்காக மன்னர்கள் உருவாக்கினார்கள் என்பது குறித்தோ, அதை வைத்து மேல்தட்டு மக்கள் சுகம் அனுமதிப்பது குறித்தோ சொல்லக் கூடாதோ?

அக்காலத்தில் மதமும் சமூதாயமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திருந்தால் சமுதாயத்தில் நடக்கின்ற அநீதீதிகளும் பிணைந்திருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அக்கால எம் சமூதாயத்தில் நாடகம், நாட்டியம், கூத்து, தொழில் எதுவுமே ஆயுதபூசை, வழிபாடு என்பதில் இருந்து மதப்பற்றோகவே வெளிப்பட்டது. அவ்வகையில் தீண்டாமையும் சேர்ந்து அறியப்படுவதில் அதிசயமே இல்லை.

இதை எல்லாம் பகுத்தறிவால் உணரக் கூடிய சக்தி இல்லாதவர்கள், தாங்களைப் பகுத்தறிவாளர் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பானி மேல் பழி போட்டுத் தப்பித் கொள்ளப் பார்க்கின்றார்கள்.

இந்தியாவில் பிராமணர்களைக் குற்றம் சாட்டுவதன் மூலம் நாயக்கர் சமுதாயம், அல்லது இதர மேல்தட்டு அடக்குமுறையாளர்கள் செய்த அநீதிகளை எப்படி ராமசாமி மறைத்தாரோ, அதே வழியை ஈழத்தில் உள்ள சில வேளாளப் பிரமுகர்கள் பிராமணர்கள் மேலே பழியைப் போடுவதன் மூலம், யாழ்ப்பாண வேளாளர்களின் சாதிவெறியை பிராமணர்களிடம் பழியைப் போட்டு விட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றது.

எனவே தான் எதுக்கெடுத்தாலும் பிராமணர்கள் தான் தான் காரணம், மதம் தான் காரணம் என்று சொல்லிக் கொண்டு தாங்கள் சுத்தமானவர்கள் போலவும் காட்ட முற்படுகின்றனர்.

தலையங்கத்தில் சிறு மாற்றம் தேவை இலங்கையும் என்று வராது சிறீலாங்கவும் என்று வருவது பொருத்தம்.

மற்றது பொதுவாக பொளத்தம் என்றில்லாது சிறீலங்காவில் பின்பற்றப்படும் தேரவாத பொளத்தத்தை குறிப்பிட்டு சொல்லவது நல்லது. இது ஏனைய நாடுகளில் உள்ள பொளத்த மதத்தவரை சீண்டாது இருக்க உதவும்.

மற்றும் படி நல்லதொரு அலசல். இதே கண்ணோட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக பல பிரச்சாரங்களை சர்வதேச மொழியில் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மதஅடிப்படை வாதமும் சிறிலங்காவும் என்ற தலைப்பில் குறுக்காலபோவான் எழுதியகருத்து இது. சிங்கள தரப்பின் ஒரு பிரிவினைச் சாடுகின்றபோது, அது மற்றய பெளத்தர்களைப் பாதிக்கக் கூடாது என கொள்கின்ற அக்கறை இந்துக்கள் பற்றி இங்கே கீழ்தரமாக எழுதுகின்றபோது கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது தான் எம் கவலை.

இந்து பாசியம், இந்து வெறியர்கள், பார்ப்பானிகள், .... என்ற வார்த்தைப் பிரயோகங்களூடகக் கட்டுரை வரைகின்றவர்கள் அங்கே தாங்கள் சொல்லுகின்ற பொருள்களுக்கு அப்பால் இந்த சொற்பிரயோகங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

எதுவுமே இல்லாமல் எதுக்கெடுத்தாலும் மதத்தைச் சாடித் தப்பித்துக் கொள்வதற்குப் பெயர் ஆய்வு அல்ல, அதற்கு பழி போடுதல், புறணி சொல்லுதல், என்ற இன்னோரன்ன சொல்கள் இருக்கின்றது சுகன்.

தூயவன் தமிழர்களாகிய எமக்கு இந்துசமயத்தை விமர்சனம் செய்யும் உரிமை அதிகம் இருப்பதற்கு காரணம் தமிழர்களில் அறுதிப் பெரும்பான்மையானவர்கள் இந்துவாக தம்மை அடையாளம் காண்கிறார்கள். ஏன் நீங்கள் உட்பட பலர் தமிழர்களின் அடையாளங்களின் ஒன்றாக அதை முன்னிறுத்துவதில் பின்னிக்கப் போவதில்லை. அந்தவகையில் இந்து சமய விமர்சனம் எமது சமுதாயத்தைப் பற்றிய சுயவிமர்சனமாகத்தான் இருக்கிறது. (இந்துவிற்கு சைவத்திற்கு வித்தியாசம் தெரியாது பலர் இருக்கிறார்கள் என்பது வேறுவிடையம்).

இங்கு இந்து சமயத்தை விமர்சிப்பவர்கள் பிறப்பினால் இந்து-சைவ மதத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் வழர்ந்த பின்னர் தமது தெரிவில் இந்துமதத்தைப் பின்பற்றாதவர்களாக இருக்கிறார்கள்.

அதே நேரம் இந்துவை அறுதிப்பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர்களாகிய நாம் வேற்று மதத்தை விமர்சிப்பது என்பது சர்ச்சைக்குரியது. அது ஒரு மதத்தவர் இன்னொரு மதத்தவரை தாக்குவதாக இலகுவில் சித்தரிக்கப்படக் கூடியது.

என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாட்டில்:

கிறீஸ்தவர்களிற்கு கிறீஸ்தவத்தை விமர்சிப்பதற்கு மிகுதி எல்லாரையும் விட அதிக உரிமை உண்டு.

இஸ்லாமியர்களிற்கு இஸ்லாமை விமர்சிப்பதற்கு மிகுதி எல்லாரையும் விட அதிக உரிமை உண்டு.

பொளத்தர்களிற்கு பொளத்தத்தை விமர்சிப்பதற்கு மிகுதி எல்லாரையும் விட அதிக உரிமை உண்டு.

தமிழர்களிற்கு தமிழரை விமர்சிப்பதற்கு மிகுதி எல்லாரையும் விட அதிக உரிமை உண்டு.

சிங்களவர்களிற்கு சிங்களவரை விமர்சிப்பதற்கு மிகுதி எல்லாரையும் விட அதிக உரிமை உண்டு.

எமக்கு வேறு ஒரு தரப்பினால் பாதிப்பு இருக்கும் என்றால் அதை ஆதாரபூர்வமாக அந்த வரையறைக்குள் (உதாரணத்திற்கு சிங்களப் பேரினவாதம், தேரவாத பொளத்தப் மதவாதம், பார்ப்பணிய மேலாண்மைவாதம்) விமர்சிப்பது தான் எமது பாதிப்பைப் பற்றிய நியாயபூர்வமான கவனத்தைப் பெற உதவும். பொதுப்படையாக மேலோட்டமான குற்றச்சாட்சுகள் பாசிசவாதமாக மிதவாதமாக தீவிரவாதமாக பார்க்கப்படும் பண்ணும்.

தயவு செய்து இந்துத்துவ சிந்தனையில் எப்பவும் கட்டுண்டு இருந்தபடி தொடர்ந்து விதண்டவாதம் பண்ணாது தற்காலிகமாகவேனும் அதற்கு ஓய்வு கொடுத்தபடி விடையங்களை பார்க்க விளங்க முயற்சிக்கவும்.

  • தொடங்கியவர்

விமர்சனம் செய்வதுக்கும் எதிர்ப்பதுக்கும் கூட வித்தியாசம் இருக்கிறது... இந்துக்கள் இந்துசமயதை விமர்சிப்பது அதை மெருகூட்ட என்பது ஒரு காரணம்...

நாத்தீகர் என்பவர் தங்களை இந்துக்களாக காண்பதில்லை... தங்களை இந்துவாக நினைக்காதவர் கடவுள் இல்லை என்பவர்கள் எல்லாம் மதத்தை விமர்சிப்பது இல்லை.... எதிர்க்கிறார்கள்....!

சிலரால் எதிர்பது என்பதுக்கும் விமர்சிப்பதுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய முடியும் என்பது சந்தேகமே....!!

Edited by தயா

முன்னொரு காலத்தில :unsure:

இக் கூட்டத்தில் யார் களவிதிகளுக்கு எதிராக்க குற்றம் செய்யாது இருப்பானோ, அவனே கல்லெறியக் கடவான்.

100 வீதம் இல்லை. குறைந்தபட்சம் 50 வீதமாவது செய்திருக்கக் கூடாதா? முதலில் கட்டாயம் இங்கு பதிலளிக்க வேண்டும் என்ற தேவை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவான பிரச்சனைகளுக்கு அப்பால், தனிப்பட்ட பிரச்சனைளைப் பெரிதாக ஊதி இங்கே எழுதுவது எல்லாம் எதற்காக?

இங்கே விளக்கம் கேட்கின்றவர்கள் எப்போதாவது தங்களின் பிரச்சனையைத் தனிப்பட்டரீதியில் நிர்வாகம் கூட அணுகியிருக்கின்றீர்களா? உங்களுக்கு யாழ் குடும்பத்தில் எவ்வளவு தூரம் புரிந்துணர்வோடு நடந்து கொள்ள முடிந்தது?

அதனால் தான் கேட்டேன். எத்தனை பேருக்கு கல்லெறியத் தகுதியுடையவர்கள் என்று. நீங்கள் உங்களின் மனச்சாட்சிப்படி செய்யுங்கள்

நான் இப்படிக் கதைப்பதால் என்னை தஜா போடுகின்றேன் என்று சுண்டல் போல எழுத வேண்டாம். எனக்கு அந்தத் தேவையில்லை.

யமுனா

உங்களுக்கான பதில் என்பதால் இந்தக் கேள்வியைக் கேட்கின்றேன். நீங்கள் புரிந்துணர்வு கொண்டு செயற்பட்டிருந்தால் சிட்னி வானொலி தொடர்பான விடயத்தை முதலில் எப்படி அணுகியிருக்க வேண்டும்? முதலில் அந்தக் கேள்வியை நிர்வாகத்திடம் தனிமடல் போட்டிருக்கலாம். அது செய்தீர்களா?

அங்கே தீர்வு தரப்படாவிடத்து நீங்கள் அந்தப் பிரச்சனை பற்றிக் கிளப்பியிருந்தால் நியாயம்.

இது உங்களைத் தனிப்பட்ட விதத்தில் சொல்ல வேண்டும் என்றல்ல. பொதுவாக எல்லோரும் தனிப்பட்ட கருத்துப் பற்றிக் கேட்கின்றபோது செய்ய வேண்டிய செயற்பாடு இது. ஆனால் தலைப்புத் தொடங்குகின்ற எவருமே தாங்கள் இறங்கி வரவிரும்புவதாகத் தெரியவில்லை. நிர்வாகம் தங்களின் வழியில் வரவேண்டும் என்று மட்டும் சிந்திக்கின்றார்கள்

சிட்னி வனொலிப் பிரச்சனை என்பது பொதுப்பிரச்சனையாக இருக்கலாம். அது பற்றி எவ்வித கருத்தையும் நான் அன்றைக்கும், இன்றைக்கும் சொன்னதில்லை. ஆனால் அதற்காகக் களத்தில் குழம்பி கருத்தெழுதிபோது நீங்கள் நிர்வாகத்திடம் தனிப்பட்ட விதத்தில் கேள்வி கேட்டீர்களா என்பது தான் நான் உங்களிடம் கேட்டது.

மற்றது களத்தில் நிற்கப் போகின்றேறாம், போகப் போகின்றோம் என்பது நான் சொன்னதல்ல. அதற்கு நான் பதிலளிக்கத் தேவையில்லை.

மற்றது மதம் பற்றிய உங்களின் கருத்துக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு உள்ளவனாகின்றேன். மதம் என்பது மூடநம்பிக்கையா இல்லையா என்பதோ, அல்லது அப்படிச் சொல்லிக் கொண்டு கோவிலின் முகப்பில் விழுந்து கிடப்பதோ என்பது எல்லாம் ஒருவருடைய தனிப்பட்ட விடயம்.

ஆனால் இது ஒரு விவாதத் தளம். அது மூடநம்பிக்கைகளா என்பது குறித்து விவாதிப்பதில் கூடத் தவறிருப்பதில்லை. அதை நிர்வாக விதிகள் மறுக்கவில்லை. அவை மறுப்பது அரட்டைகளைத் தான்.

வாக்கெடுப்பிற்கான கேள்வியும் பதிலும் தவறான விதமானவையாகத் தான் தெரிகின்றது. ஏன் என்றால் எச் சந்தர்ப்பதிலும் மட்டறுத்தினர்கள் புரிந்துணர்வாக நடக்க வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை. அது நியாயமானது.

இவ்வாறன கேள்விப்படி பார்த்தால் புரிந்துணர்வோடு மட்டறுத்தினர் செயற்படவேண்டும் என்பதை நானும் ஆதரிக்கின்றேன். அவ்வாறே உறுப்பினர்களும் புரிந்துணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். அதுவும் மிகமிக முக்கியமானது.

அதை மீறிக் கொண்டு மற்றவர்களின் குற்றம் சாட்டுவது பெருத்தமானதல்ல.

இந்த விதி என்பது ஒரு விதி மட்டுமல்ல. விடுதலைப்போராளிகளின் பெயரைப் பயன்படுத்தவும் முடியாது என்று விதியிருக்கின்றது. அப்படிப் பார்த்தால் தூயவன் என்ற பெயரையும் நான் பயன்படுத்த முடியாது. கள ஆரம்பத்தில் இதைப் பற்றிச் சொல்லியிருந்தால் மாற்றம் செய்திருக்கலாம். ஆனால் இப்போது சொன்னால் என்னத்தைச் செய்ய?எனவே, என் அடையாளத்தை எப்படி மாற்றுவது என்பது எனக்குத் தெரியவில்லை. நிர்வாகம் விரும்பியபடி மாற்றத்தைச் செய்யலாம் என்பதே என் வேண்டுகோள்.

சினிமாப்படம் பற்றிய விடயம் தவறு என்று கருதப்படுவதால் இன்றே அதை அகற்றிக் கொள்கின்றேன். வலியுறுத்தலுக்கு நன்றி.

தவிரவும், மட்டறுத்தினர் புரிந்துணர்வு பற்றிய கேள்வியோ, அல்லது பூனைக்குட்டி கேட்ட அப்படிப் புரிந்துணர்வு இருந்தால் ஏன் இப்படிக் கருத்தெழுத வேண்டும் என்ற வினாவிற்கோ எவ்வித பதிலையும் காணமுடியவில்லை.

தவிரவும்

என்றியம்புகையில் இங்கே அரட்டை பற்றிய அவர்கள் மீதான கருத்துக்கள் அவர்களை எவ்வித பாதிப்பையும் கொடுக்கப் போவதில்லை. எனவே இங்கு அதைப் பற்றி எழுதி எவ்வித பிரியோசமும் இருப்பதாகவும் தெரியவில்லை.

தப்பு என்று பலர் தொடர்ந்து வலியுத்தியதால் ஒப்பனையுருவை (அவதரை) நீக்கி விட்டேன். அவ்வாறே என்ன சொன்னாலும் நான் அரட்டையடிப்பேன் என்று இருப்பவர்களும் திருந்துவார்கள் என நம்புவோமா?

அது தான் இங்கே பிரச்சனையே. மட்டறுத்தினர் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றவர்கள் தாங்கள் தங்களின் நிலையில் இருந்து இறங்கிவருவதில்லை போலவே இதுவும்.

அதுசரி புத்தன்

தாங்கள் போட்டிருக்கின்ற படம் கூட ஆங்கிலப்படம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட நடிகர் ஒருவருடையது தானே?

இங்கே நிர்வாகம் புரிந்துணர்வு தேவையா, இல்லை,.... உறுப்பினர்கள் புரிந்துணர்வு தேவையா என்று கேட்கப்பட்ட கேள்வி ஏதோ எல்லாம் சம்பந்தமில்லாமலும், மற்றவர்களை வசை பாடுவதிலும், பழி வாங்குவதிலும் போய்க் கொண்டிருப்பதால் இதில் கருத்தெழுதிப் பிரியோசனமில்லை.

நல்லது வானவில்.

ஒரு காலத்தில் மூத்தவர்களின் கையில் யாழ்களம் இருந்தபோது, ஒழுங்காக இருந்தது, பிரியோசமற்ற கருத்துக்கள் தவிர்க்கப்பட்டன, ஆனால் இன்று இளையோரின் கையில் சிக்கி சின்னாபின்னமாகின்றது என்று யாரும் சொல்லாத வகையில் நடந்து கொள்வது தான் உண்மையில் எமக்கு பெருமையைத் தரும். அதற்கு வானவில், யமுனாவும் இணைந்து கைகோர்க்க வரவேற்கின்றோம்.

யாருக்கும் சவால் விடவேண்டிய தேவை நமக்குள் எதற்கு?? :lol: :lol:

ஏற்கனவே இங்கு மட்டறுத்தினரின் நேரமின்மையால், களத்தில் பல கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமலே கிடக்கின்றது என்று குறைகள் உண்டு. அதுக்குள்ளே மட்டறுத்தினரை விலகட்டாம். மேலும் மட்டறுத்தினர் தெரிந்து என்பது வாறவன் போறன் எல்லோரையும் தெரிவு செய்ய முடியாது. நடுநிலமை, கோபப்படாத தன்மை என்று நிறைய இருக்க வேணும். அப்படித் தெரிவு செய்தாலே இங்கே அது குறித்தும் பிரச்சனைகள்.

வெற்றிகரமாக யாழை 9 வருடமாக இயக்கத் தெரிந்தவர்களுக்கு ஒவ்வொருவனும் அறிவுரை கூற வெளிக்கிட்டால், வாறவன் போறவன் எல்லாம் எனி புத்தி சொல்ல வெளிக்கிடுவான். எங்கே சான்ஸ் கிடைக்கும் என்று திரிகின்றார்கள்.

அப்பாடா!

எனி வரும் காலங்களில் எல்லோரும் திருந்திக் கொள்ள இது வழி சமைக்கும் என்று நம்புவோம்.; புரிந்துணர்வு கொண்டு எழுதினாலே மட்டறுத்தினர் தேவைப்படாது என்ற நிலையை உருவாக்கலாம்.

நமக்கு வந்தால்தால் காய்ச்சல். மற்றவருக்கு வந்தா அது சும்மா :lol:

http://www.yarl.com/forum3/index.php?showt...=25491&st=0

Edited by வாசகன்

மற்றவர்களை நோக்கித் தாக்கி எழுதும் போது அது தாக்குதலாகத் தெரியாது, தலைப்பைக் குழப்ப வேண்டும் என்று நோக்கில் எழுதும் போது அது தலைபிற்குச் சம்பந்தம் அற்றது என்பது தெரியாது, எழுதப்பட்ட கருதுக்களை முழுவதுமாக வாசிகாமால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விதண்டாவாதமாக எழுதும் போதும் பேசப்படும் விடயம் பற்றிய போதிய விளக்கம் இல்லாமல் எழுதும் போதும் அது தெரியாது.

எனது கருதுக்களும் பலமுறை வெட்டப்படுள்ளன, சீரியசான விடயங்களைக் கருத்தாடும் போதும் வேண்டுமென்றே கருதாடலைத் திசை திருப்பும் நோக்கோடு எழுதும் போது அல்லது கருத்தை முழுவதுமாக வாசிக்காமல் எழுதும் போதும் சிண்டாலுக்கென்றே எழுதும் போதும் பதில் எழுதும் போது பொறுமை இழந்து நானும் பதிலுக்கு தாக்கி சில நேரம் எழுதி இருக்கிறேன்,அது வலஞனால் வெட்டப்பட்டும் இருக்கிறது.

இதற்காக நான் வலஞ்சன் பாரபட்ச்சமாக நடக்கிறார் என்று எழுதப்போவதில்லை அவர் அவரின் வேலைச் செய்கிறார்.யாழ்க் களத்தில் அவரின் வேலை சுலபமானது இல்லை.வலைஞ்சன் இல்லாமால் மோகனால் இந்தக் களத்தை இப்படி நிச்சயமாக கொண்டு செல்ல முடியாது.மட்டுறுத்தல் இல்லாத பல களங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.

வலைஞ்சன் எனது கருத்தை வெட்டி விட்டார் யாழ்க்களம் பாரபட்ச்சமாக இந்து சமயத்துக்கு எதிராகச் செயற்படுகிறது என்று சொல்பவர்கள் யாழ்க் களத்தில் கருத்துச் சுதந்திரத்தை ஒழித்து, இந்து மதம் மீதான விமர்சனத்தையும் இந்து மத வெறி கொண்டு ஆடுவோர் மீதான விமர்சனத்தையும் கருதியல் ரீதியாக எதிர்கொள்ளமுடியாமால் மத உணர்வுகளைத் தூண்டி விட்டு தமது விருப்பங்களை யாழ்க் களம் செவி சாய்த்து கருதியல் மறுப்பை மட்டுறுத்தல் மூலம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இது கருத்தியல் இயலாமையின் வெளிப்பாடே அன்றி வேறோன்றும் அல்ல.தலைப்புக்களைத் திசை திருப்பவது சீண்டல் பாணியில் எழுதுவது தனிப்படத் தாக்கும் வண்ணம் எழுதுவது சம்பந்தா சம்பந்தம் அற்று கருதுக்களைத் திணிப்பது செருகுவது கருத்தாடுபவரை சீண்டி கருத்தாடலின் திசையை மாற்றுவது எல்லாமுமே கருத்தியல் பலவீனக்கள் தான்.

  • தொடங்கியவர்

நாரதர் சொல்வது போல அவரை எதிர்த்து யாரும் கருத்து எழுத வேண்டாம் எண்று தாள்மையாக கேட்டு கொள்கிறேன்....

அப்போத்தான் ஒரு கையை விசிறி பார்த்து சத்தம் வராமல் அடங்க முடியும்.. களம் வலுவான கருத்துக்களை எல்லாம் சுரக்காமல் இருக்க வேண்டும்....!

முக்கியாமாக இங்கே கருத்தாடப்படும் விடயம் பற்றி நாரதர் விளங்கி கொள்ளாமல் கருத்து எழுதி இருக்கிறார்...! தலைப்போடு சம்பந்தம் இல்லாமல் எழுதுகிறார்கள் எண்று சொல்லி கொள்ளும் நாரதர் அதைத்தான் அவரே இங்கும் செய்து இருக்கிறார்... கருத்தை திசை திருப்பல்...

இங்கே இந்து சமய விடயங்கள் ஒரு உதாரணம் மட்டுமே... இல்லாமல் இந்து சமயதை எதிர்ப்பது சரி எண்டால் அதுக்கு நாங்கள் விளக்கம் அளிப்பது பிரச்சாரமாக பார்க்க படுகிறது வெட்ட படுகிறது, எனும் குறைதான் இங்கு சொல்ல படுகிறது...! அதை நாரதர் முதலில் இருந்து ( அவர் மற்றவர்களுக்கு சொல்லும் அறிவுரை போல) படிப்பது நல்லது...

இப்போ இங்கு இடப்பட்ட தலைப்பை குழப்பாமல் நாரதர் திசை திருப்பல் கருத்துகளை எழுதாமல் இருந்தால் மகிழ்ச்சி...!

  • கருத்துக்கள உறவுகள்

நானும் என்னமோ எதோ என்று அலட்டி கொள்ள.வலைஞனின் கட்டுப்பாடு, இறுக்கமான செயற்பாடு, போன்றவற்றில் நன்மதிப்பு இருக்கின்றது. ஆனால் நடுநிலமையில் தான் நம்பிக்கையில்லை.

நடு நிலமை என்பது களத்தாரின் விதிகளுக்கு அமைய உங்களின் கருத்து உள்ளதா என்பதை பொறுத்துள்ளது.மோகன் என்பவர் கல்லடி வாங்குவதற்கு பதிலாக வலைஞன் என்பவரை கல்லடி வாங்க வைத்திருக்கலாம்.இல்லை மோகன் என்பவர் வலைஞனாக மாறி இருக்க கூடும்.

மற்றது மத சார்பாக வாதிடுவது என்பது நிச்சயமாக எங்கும் கொண்டு போகாது.ஆக மணிக்கணக்காக உபயோகமில்லாமல் வாதிட்டு வீணாக சக்தியை வீணடிக்க வேண்டியது தான்.இப்படியான யனரஞ்சகமான களத்தில் பொடுவான நிகழ்வுகளை வாதிடுதல் யதார்த்தபூர்வமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு வந்தால்தால் காய்ச்சல். மற்றவருக்கு வந்தா அது சும்மா

வணக்கம் வாசகன்

பழைய கறளைத் தொடர்வீர்கள் என உண்மையில் எதிர்பார்க்கவில்லைத் தான். இருந்தாலும் உங்களுக்காக.

1.இந்தத் தலைப்பைத் தொடங்கியது நான் அல்ல. இடையில் தான் இணைந்து கொண்டிருந்தேன்.

2. தனிமடல்கள் பிரசுரிக்கலாம் என நிர்வாகம் அனுமதித்தால் பச்சோந்திக் கதையில் இருந்து வலைஞனுக்கும் எனக்கும் நடைபெற்ற தனிமடல்களைப் பிரசுரிக்கத் தயாராகவே உள்ளேன். எனவே நான் பாய்ந்தடித்து வந்து பிரச்சனையைக் கிளப்பவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

3. எனக்கு நிர்வாகம் மேலே ஏற்பட்ட மனக்கசப்பின் பின்னர், இந்து,ராமசாமி பற்றிய கருத்துக்களை எழுதியது மிகக் குறைவு. எழுதப்பட்ட ஒரு சில கருத்துக்களும் ஒரு சில வரிகளாகத் தான் இருந்திருக்கும்.

சிட்னி வானொலித் தலைப்பில் விமர்சிக்கப்பட்ட விதத்தால் இன்று யாழ்களத்து உறவு ஒன்று இக்களத்திற்கே வருவதில்லை. அந்த வகையில் அப்படிக் கடுமையான அத்தலைப்பை நீக்கியது சரியானது என்பதே தற்போதைய என் கருத்து.

வணக்கம் வாசகன்

பழைய கறளைத் தொடர்வீர்கள் என உண்மையில் எதிர்பார்க்கவில்லைத் தான். இருந்தாலும் உங்களுக்காக.

தூயவன்

உண்மையில் பழைய "கறளில்" இதை எழுதவில்லை என்றே நான் என்னை நம்புகிறேன். நான் முன்ன மாதிரி பெரிசா யாழ்களம் வாறல. காரணம் நேரமின்மை. வந்தாலும் புதினம் பதிவு அல்லது தற்ஸ்தமிழ் இல்லாத செய்தி இருக்கோண்டு பார்ப்பன்.

நாளைக்கு வேலையில்லை. இன்டைக்கு சுத்திப் பார்க்கையில் இது அகப்பட்டுது.டக்கென்டு பழைய ஞாபகம் வந்தது. எழுதினான்.

யாழ்களத்தில் ஒருவர் மீது எனக்கு "கறல்" உள்ளது. அது நிச்சயமாக நீங்களோ அல்லது நாரதரோ கிடையாது. இருவருடனும்தான் நான் அதிகம் பிரச்சனை பட்டுள்ளேன்.

ஒருநாளைக்கு சரியான ஆதாரம் கிடைக்கும் போது ஆளை சொல்லுறன்.

சிட்னி வானொலித் தலைப்பில் விமர்சிக்கப்பட்ட விதத்தால் இன்று யாழ்களத்து உறவு ஒன்று இக்களத்திற்கே வருவதில்லை. அந்த வகையில் அப்படிக் கடுமையான அத்தலைப்பை நீக்கியது சரியானது என்பதே தற்போதைய என் கருத்து.

நீங்கள் இந்த கருத்தை அதாவது வாசகன் அண்ணாவால் நீங்கள் எழுதியதாக பதியபட்ட கருத்து சிட்னி வானொலி விவாதத்தின் போது அல்ல :rolleyes: .......மட்டுஸ் சக கள உறவுகளுன் கதைக்க வேண்டும் என்ற தலைப்பில் நீங்கள் இந்த கருத்தை எழுதி இருந்தீர்கள்!! :)

தூயவன் அண்ணாவால் சொல்ல பட்ட பொன்மொழிகள்!!

இக் கூட்டத்தில் யார் களவிதிகளுக்கு எதிராக்க குற்றம் செய்யாது இருப்பானோ, அவனே கல்லெறியக் கடவான்.

இது உங்களைத் தனிப்பட்ட விதத்தில் சொல்ல வேண்டும் என்றல்ல. பொதுவாக எல்லோரும் தனிப்பட்ட கருத்துப் பற்றிக் கேட்கின்றபோது செய்ய வேண்டிய செயற்பாடு இது. ஆனால் தலைப்புத் தொடங்குகின்ற எவருமே தாங்கள் இறங்கி வரவிரும்புவதாகத் தெரியவில்லை. நிர்வாகம் தங்களின் வழியில் வரவேண்டும் என்று மட்டும் சிந்திக்கின்றார்கள்

மற்றது களத்தில் நிற்கப் போகின்றேறாம், போகப் போகின்றோம் என்பது நான் சொன்னதல்ல. அதற்கு நான் பதிலளிக்கத் தேவையில்லை.

ஆமாம் நான் சரியான குற்றம் செய்து இருந்தேன் ஆனா கேள்வியையும் கேட்டேன் நிர்வாகத்திடம் நீங்க தான் கூறி இருந்தீர்கள் "கள விதிகளிற்கு எதிராக எவன் குற்றம் செய்யாது இருப்பானோ அவன் கல்லெறிய கடவாய் என" :rolleyes: அதற்கு நான் சொன்ன பதில் உங்களிற்கு தெரியும் என நினைகிறேன்!!ஆகவே குற்றமற்றவர்கள் தான் எதையும் கேட்க வேண்டும் என்றா யாரும் கேட்கமுடியாது!!ஓ இது நீங்க தொடங்கின தலைப்பு இல்லை இடையில வந்து எழுதிய கருத்து தானே அப்ப சரி!! <_<

இதற்குள் நீங்க சிட்னி வானொலியை பற்றி கொண்டு வந்து இருக்கிறீர்கள் எந்த தலைப்பை எடுத்தாலும் நீங்கள் சிட்னி வானொலியை கொண்டு வருவதன் உள் நோக்கம் புரியவில்லை இதில் இருந்து தங்களின் நடுநிலைமை எப்படிபட்டது என்பது புலனாகிறது!! <_<

நீங்கள் சொன்ன உறவு சிட்னி வானிலி எழுத முன்னனே களதிற்கு வாறதில்லை என்பதை தங்களிற்கு முதலில் சொல்லி கொள்ள விரும்புகிறேன் :rolleyes: !!சிட்னி வானொலியை விமர்சிக்கும் உரிமை அவுஸ்ரெலிய பிரஜைகளிற்கு அவுஸ்ரெலிய அரசாங்கம் தந்துள்ளது அது சிட்னி வானொலியாக இருந்தால் என்ன சனல் 9 அவுஸ்ரெலியாவாக இருந்தா என்ன நாங்கள் விமர்சிப்போம்!!சமூகத்தில் நடக்கும் குறைகளை சுட்டி காட்ட எங்களுக்கு உரிமை உண்டு ...............யாழ்கள உறவுகளிற்காக சமுகத்தில் நடக்கும் பிழையை அவர்களின் சார்பில் கதைக்க வேண்டுமா நல்ல நடுநிலைமை ஜயா!! :lol:

கருத்துகள உறவுகள் வரலாம் கருத்துகளதிற்கு போகலாம் அது அவர்களின் தனிபட்ட சுகந்திரம் தேவையில்லாம இதனால் தான் அவர்கள் வரவில்லை என்று கூறுவதை தவிர்க்கவும் வாசகன் அண்ணா கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க இயலாமையால் இந்த தோற்றம் என்பது நன்கு புலபடுகிறது சந்தோசம்!! :)

ஒரு கள உறவிற்காக அந்த தலையங்கம் நீக்கபட்டது சரியாம் அப்ப எழுதிய கள உறவு அவர் தேவையில்லை நீங்க என்ன சொன்னாலும் அது தான் உங்க வெளிபாடு நீங்க இதற்கு என்ன விளக்கம் கொடுத்தாலும் அது தான் தங்களின் வெளிபாடு என்பது நன்றாக தெரியும்!!ஆகவே இதுவும் ஒரு பக்கசார்பு தான் அன்று நான் இதை கேட்டபோது "குற்றமற்றவர் தான் கேட்கமுடியுமாம்" இன்றும் நான் அதை போல் குற்றமானவன் தான் ஆனா அன்று சொன்னவர்களிள் எத்தனை பேர் குற்றமற்றவர்கள் தற்போது இதை அந்த நிர்வாகியிடமே கேட்கிறார்கள்!! குறிப்பாக இதை உங்களிடம் தான் கேட்கிறேன்?? :wub:

அன்று வந்த பதில் வலைஞன் அண்ணாவிற்கும் எனக்கும் தனிபட்ட மோதல் அது தான் அவ்வாறு பகையை தீர்கிறேன் என்று அன்றும் நான் அவருடன் பகையில்லை இன்றும் அவருடன் பகையில்லை ஆனாஅவர் பிழைவிடும் போது நேரடியாக கேட்பேன் அதற்கு அவரும் பதிலை தந்துள்ளார் ஏற்கமுடியாவிடிலும் தற்பொதைய சூழ்நிலை கருதி அதையும் ஏற்றுகொண்டிருகிறேன்!!

ஆனா இன்று 100% புனிதமான நீங்கள் அவருடன் கேள்விகளை கேளுங்கோ எதுவும் செய்யுங்கோ ஆனா தேவையில்லாம சிட்னி வானொலி எழுதியதால் அவர் வரவில்லை இவர் வரவில்லை என்று உங்களுக்கு நீங்களே ஒரு நடுநிலமையை வைத்து கொண்டு கருத்துகளை வீசவேண்டாம்!!

இதற்கு பின் வந்து கேட்கவேண்டாம் அரட்டை அடிக்கும் நான் எல்லாம் கருத்து சொல்ல வந்திட்டேன் என்று எனக்கு தெரிந்ததை நான் செய்கிறேன்!!

நன்றி

நிர்வாகம் அறிவது!!

இந்த கருத்து அவரால் திணிக்கபட்ட ஒரு கருதிற்கு பதில் கருத்து ஊகத்தின் அடிப்படையில் சொல்லும் கருத்துகள் ஏற்று கொள்ளபடமாட்டாது என்பது யாழின்வரையறை ஆனா இந்த கருத்து மட்டும் எனக்கு விளங்கவில்லை!!ஆகவே இது தொடர்ந்தால் நான் மேலும் பல கருத்துகளை வைக்க நேரிடும்!!யாரோ போனதிற்கு எல்லாம் நாம் காரணம் ஆகிவிடமுடியாது! <_< !

ஜம்மு பேபி பஞ்-

"குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தா அதற்கு பேபி பொறுப்பாகது"

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.