Jump to content

Recommended Posts

Posted

மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள்

1233008.jpg
திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.
 
சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.

கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.

ADVERTISEMENT
 
முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்:

  1. கள்ளக்குறிச்சி - 75.67%
  2. தருமபுரி - 75.44%
  3. சிதம்பரம் - 74.87%
  4. பெரம்பலூர் - 74.46%
  5. நாமக்கல் - 74.29%
  6. கரூர்- 74.05%
  7. அரக்கோணம் - 73.92%
  8. ஆரணி - 73.77%
  9. சேலம்- 73.55%
  10. விழுப்புரம்- 73.49%
  11. திருவண்ணாமலை - 73.35%
  12. வேலூர் - 73.04%
  13. காஞ்சிபுரம் - 72.99%
  14. கிருஷ்ணகிரி - 72.96%
  15. கடலூர் - 72.40%
  16. விருதுநகர் -72.29%
  17. பொள்ளாச்சி -72.22%
  18. நாகப்பட்டினம் - 72.21%
  19. திருப்பூர் - 72.02%
  20. திருவள்ளூர் - 71.87%
  21. தேனி - 71.74%
  22. மயிலாடுதுறை - 71.45%
  23. ஈரோடு - 71.42%
  24. திண்டுக்கல் - 71.37%
  25. திருச்சி -71.20%
  26. கோவை - 71.17%
  27. நீலகிரி - 71.07%
  28. தென்காசி - 71.06%
  29. சிவகங்கை -71.05%
  30. ராமநாதபுரம் -71.05%
  31. தூத்துக்குடி - 70.93%
  32. திருநெல்வேலி - 70.46%
  33. கன்னியாகுமரி - 70.15%
  34. தஞ்சாவூர்- 69.82%
  35. ஸ்ரீபெரும்புதூர் - 69.79%
  36. வட சென்னை - 69.26%
  37. மதுரை - 68.98%
  38. தென் சென்னை -67.82%
  39. மத்திய சென்னை - 67.35%

ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி

சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை

தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்

சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார்.

மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர்.

17135065202027.jpg

இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது.

அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

17135057032027.jpg

திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

17135057812027.jpg

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

“கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

17135026772027.jpg

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார்.

17135011182027.jpg

இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார்.

17135012392027.jpg

வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது.

17134968812027.jpg
படம்:ஜெ.மனோகரன்

வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை.

ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர்.

7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html

  • Thanks 1
  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, goshan_che said:

இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன்.

தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.

தற்போது இருக்கும் திராவிடம் இன,மத,சாதி ரீதியாக எதையும் சாதிக்கவில்லை என்பதால்....கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுந்துகொண்டே இருக்கும் என்பதை சொல்லிக்கொண்டு சபையில் அமர்கின்றேன்.

தமிழ்நாட்டிற்கு யார் ஆட்சிசெய்தாலும்  ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, வாலி said:

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.

தனிப்பட்ட செல்வாக்கு?

அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான்.

என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பையன்26 said:

புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ

பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே.

 கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பையன்26 said:

இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................

இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.

9 minutes ago, குமாரசாமி said:

தற்போது இருக்கும் திராவிடம் இன,மத,சாதி ரீதியாக எதையும் சாதிக்கவில்லை என்பதால்....கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுந்துகொண்டே இருக்கும் என்பதை சொல்லிக்கொண்டு சபையில் அமர்கின்றேன்.

தமிழ்நாட்டிற்கு யார் ஆட்சிசெய்தாலும்  ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

கை காட்டலும் தொடரும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான்.

நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣.

நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣

நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா

நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று

த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு...................

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது

ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள்

சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து

மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை

அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, goshan_che said:

நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣

அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂

9 minutes ago, goshan_che said:

கை காட்டலும் தொடரும்🤣

திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

தனிப்பட்ட செல்வாக்கு?

அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.

2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பையன்26 said:

2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா

ஓம். ஒவ்வொரு எலக்சனிலும் சீட் பூஜ்ஜியம், டெபாசிட் காலி என் சொன்னேன். அப்படியே நடந்தது.

போன தடவை இதையே சொல்லி 10% என்றேன். 7.9% எடுத்தார்கள்.

10 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா

நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று

த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு...................

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது

ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள்

சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து

மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை

அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................

யூன் 4 துரியில் சந்திப்போம்.

இந்தாங்கோ கையோட ஒரு கணிப்பு

சீட்: பூஜ்யம்

டெபாசிட்: ஒவ்வொரு தொகுதியிலும் காலி

9 minutes ago, குமாரசாமி said:

திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 :cool:

இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும். 

3 minutes ago, வாலி said:

2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂

ம்ம்ம்….விஜைக்கு அனுதாப வாக்கும் இருக்கு.

தமிழிசை அக்கா தேறுவாரா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

தமிழிசை அக்கா தேறுவாரா?

இல்லை சுமதி (தமிழச்சி தங்கபாண்டியனிடம்) அக்காவிடம் டெப்பாஸிட்  இழந்து தோற்பார்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, goshan_che said:

இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும். 

thinathee: பானுமதி ஒன்றும் படி தாண்ட பத்தினியும் இல்லை..நான் ஒன்றும்  முற்றும் துறந்த முனிவனும் இல்லை !

இப்படியா தலைவரே?  😍

பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣

Edited by குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, குமாரசாமி said:

தற்போது இருக்கும் திராவிடம் இன,மத,சாதி ரீதியாக எதையும் சாதிக்கவில்லை என்பதால்....கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுந்துகொண்டே இருக்கும் என்பதை சொல்லிக்கொண்டு சபையில் அமர்கின்றேன்.

தமிழ்நாட்டிற்கு யார் ஆட்சிசெய்தாலும்  ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம்

2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள்
பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை.......................

சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து

ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி
கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை

4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும். 

Edited by குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

thinathee: பானுமதி ஒன்றும் படி தாண்ட பத்தினியும் இல்லை..நான் ஒன்றும்  முற்றும் துறந்த முனிவனும் இல்லை !

இப்படியா தலைவரே?  😍

அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣.

Just now, குமாரசாமி said:

பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣

பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣

5 minutes ago, வாலி said:

இல்லை சுமதி (தமிழச்சி தங்கபாண்டியனிடம்) அக்காவிடம் டெப்பாஸிட்  இழந்து தோற்பார்!

ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣.

சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா?
முதலில் கனிமொழியுடம் தொடங்கவா?

7 minutes ago, goshan_che said:

பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣

ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

ஓம். ஒவ்வொரு எலக்சனிலும் சீட் பூஜ்ஜியம், டெபாசிட் காலி என் சொன்னேன். அப்படியே நடந்தது.

போன தடவை இதையே சொல்லி 10% என்றேன். 7.9% எடுத்தார்கள்.

யூன் 4 துரியில் சந்திப்போம்.

இந்தாங்கோ கையோட ஒரு கணிப்பு

சீட்: பூஜ்யம்

டெபாசிட்: ஒவ்வொரு தொகுதியிலும் காலி

இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும். 

ம்ம்ம்….விஜைக்கு அனுதாப வாக்கும் இருக்கு.

தமிழிசை அக்கா தேறுவாரா?

ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ

இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம்

நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து

சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா

65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................

இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம்

திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து

இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார்
சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣.

நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂

தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎

யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி

Edited by கந்தப்பு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, goshan_che said:

அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣.

🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, goshan_che said:

தனிப்பட்ட செல்வாக்கு?

அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.

அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, குமாரசாமி said:

சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா?
முதலில் கனிமொழியுடம் தொடங்கவா?

என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣

நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன்.

அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை.

பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார்.

ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே.

முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில்.

இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே.

சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂

தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎

யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..:cool:

எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣.

நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி…..

சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும்.

உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை.

இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே.

பிகு

நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣

ஆவலோடு காத்திருக்கிறேன்🤣

4 minutes ago, குமாரசாமி said:

சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?

ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.